உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்..
by ayyasamy ram Today at 22:10

» புலம் பெயர்தல்- கவிதை
by ayyasamy ram Today at 22:08

» மழை- கவிதை
by ayyasamy ram Today at 22:08

» டெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா? இதோ உங்களுக்காக புதிய திட்டம்
by krishnaamma Today at 21:42

» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by i6appar Today at 21:42

» நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது.?
by krishnaamma Today at 21:37

» வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அரசு எச்சரிக்கை !
by krishnaamma Today at 21:29

» சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்தில் தமிழக பெண் நீதிபதி பானுமதி நியமனம்
by ayyasamy ram Today at 21:12

» இன்றைய கோபுர தரிசனம்
by krishnaamma Today at 19:43

» கொலு போட்டோக்கள் :) 2019 கொலு வீடு போட்டோ !
by krishnaamma Today at 19:42

» திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.
by ayyasamy ram Today at 19:03

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 15:54

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Today at 11:45

» ரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்
by ayyasamy ram Today at 9:16

» கடல் குதிரை படத்தின் கதாநாயகியை போலீசார் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
by ayyasamy ram Today at 9:15

» இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி - இன்று பதவி ஏற்கிறார்
by ayyasamy ram Today at 8:43

» முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
by ayyasamy ram Today at 8:38

» விஜய் படத்தில் நடிக்கும் பாடகி
by ayyasamy ram Today at 8:35

» பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
by ayyasamy ram Today at 8:33

» புத்தகம் வேண்டும் !
by vijaya kumar Today at 7:33

» நாளை முடவன் முழுக்கு ! - 17 - 11- 2019
by krishnaamma Yesterday at 22:43

» குழந்தையும் யானையும் – கவிதை
by ayyasamy ram Yesterday at 22:24

» நதி பருகும் பறவை- கவிதை
by ayyasamy ram Yesterday at 22:23

» வேலன்:- மானிட்டர் மேனேஜர்-Free Monitor Manager
by T.N.Balasubramanian Yesterday at 19:03

» நலன், நிலன் - இராம கைங்கர்யத்திற்கு உதவிய வானரபடை வீரர்கள்-
by T.N.Balasubramanian Yesterday at 19:01

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 14:51

» திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!
by ayyasamy ram Yesterday at 14:29

» மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 13:51

» உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.
by ayyasamy ram Yesterday at 13:46

» புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்
by ayyasamy ram Yesterday at 13:46

» மருத்துவம்- குறிப்புகள் ...
by ayyasamy ram Yesterday at 13:44

» ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முயலவேண்டும்
by ayyasamy ram Yesterday at 13:40

» என் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..!
by ayyasamy ram Yesterday at 13:40

» அம்மாவின் அருமை
by ayyasamy ram Yesterday at 13:36

» பிரம்ம புத்திராவின் கம்பீரம்!
by ayyasamy ram Yesterday at 13:33

» நம்மிடமே இருக்கு மருந்து – இஞ்சி!
by ayyasamy ram Yesterday at 13:31

» மாப்பு…வச்சுட்டான்யா ஆப்பு! வடிவேலுவால் கமல், அஜித்துக்கு சிக்கல்?
by ayyasamy ram Yesterday at 13:29

» பிரதமராக இருந்த, ஜவஹர்லால் நேருவின் மனிதாபிமானம்
by ayyasamy ram Yesterday at 13:22

» தலைவர்களை அளவுக்கு மீறி புகழக்கூடாது…!
by ayyasamy ram Yesterday at 13:20

» -இரு ஸ்வரங்கள்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 13:19

» `காந்த கண்ணழகி..!'- ட்யூனுக்கு ஏற்ப கியர் மாற்றிய கல்லூரி மாணவிகள்; டிரைவருக்கு நேர்ந்த சோகம்
by ayyasamy ram Yesterday at 13:14

» கேரளாவில் ருசிகரம்:ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்
by ayyasamy ram Yesterday at 13:01

» ‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டம் - மத்திய அரசு கொண்டு வருகிறது
by ayyasamy ram Yesterday at 12:57

» வெவ்வேறு அடைமொழியோடு நரசிம்மர் திருப்பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 12:48

» முடவன் முழுக்கு பெயர் காரணம்
by ayyasamy ram Yesterday at 12:47

» இலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை
by ayyasamy ram Yesterday at 12:37

» வாள் எடுத்து சுழற்றி நடனம் ஆடிய மத்திய பெண் மந்திரி
by ayyasamy ram Yesterday at 12:35

» மோசமான வானிலையால் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அதிகாரி
by ayyasamy ram Yesterday at 12:33

» ஒடிசா - 2 ஆயிரம் கி.மீ. இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 2 ஏவுகணை பரிசோதனை வெற்றி
by ayyasamy ram Yesterday at 12:32

» ‘சிகரம் தொட்டவர்கள்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 8:49

Admins Online

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Empty காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by Admin on Fri 13 Feb 2009 - 8:13

First topic message reminder :

1.புத்திலிபாய்போர்பந்தர் சமஸ்தானத்தில் திவான் பதவி வகித்தவர் உத்திமசந்திர காந்தி. அவருடைய ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் பிறந்தவர் கரம்சந்திர காந்தி என்று அவரை அழைப்பது வழக்கம். காபா காந்தி ராஜ்காட்டில் திவானாக இருந்தார். புத்திலிபாயை மணந்துகொண்டார்.

புத்திலிபாய்க்கு ஒரு பெண்ணும் மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம நாளன்று காபா காந்தி–புத்திலிபாயின் கடைசி மகனாகத் தோன்றியவர் மோகன்தாஸ் கரம்சந்திர காந்தி. காபா காந்தி நாணயமும் நேர்மையும் மிகுந்த திவானாக இருந்தார். புத்திலிபாய் தவஒழுக்கத்தில் சிறந்த பெண்மணியாக விளங்கினார்.

தினசரி பிரார்த்தனை செய்தபிறகே உணவு உட்கொள்வதை புத்லிபாய் வழக்கமாகக் கொண்டிருந்தார். தனந்தோறும் விஷ்ணு கோவிலுக்குச் சென்று வருவார். ஆண்டுதோறும் சாதுர்மாஸ்ய விரதத்தை தவறாமல் கைக்கொள்வார். மிகக் கடுமையான விரதங்களை மேற்கொண்டு, அதை நிறைவேற்றி வருவார். உடவாசம் இருப்பார். சாதுர்மாஸத்தில் புத்லிபாய் ஒருநாளைக்கு ஒரு வருடங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் பூரண உபவாசம் இருப்பார்.

ஒரு வருடத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தின்போது, புத்திலிபாய் தினம் சூரிய தரிசனம் செய்தபிறகே சாப்பிடுவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார். அவ்விதமே செய்து வந்தார். தினமும், மோகனதாஸூம் அவருடைய உடன்பிறப்புகளும் காலை வேளையில் சூரியன் எப்போது மேகக் கூட்டங்களிலிருந்து வெளிவரப் போகிறான் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். மழைக்காலமானதால், சூரியனின் தரிசனம் கிடைத்தும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் கிடைத்ததும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் தெரிவிப்பார்கள். புத்லிபாய் வெளியில் வந்து பார்ப்பதற்குள் சூரியன் மறைந்திருப்பான். ‘அதனாலென்ன மோசம்! இன்று நான் சாப்பிடுவது பகவானுக்கு விருப்பமில்லை’ என்று கூறியபடி, மலந்த முகத்தடன் மீண்டும் வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிடுவார்.

புத்லிபாய் கல்விஞானம் பெற்றிராவிடினும், அனுபவ ஞானம் அதிகம் பெற்றிருந்தார். ராஜ்காட் சமஸ்தானத்தில் இருந்த ராஜ குடும்பத்துப் பெண்மணிகள் எல்லோரும் புத்லிபாயின் அனுபவஞானம் மிகுந்த பேச்சைக் கேட்பதில் மிகவும் விருப்பம் உடையவர்கள். புத்திலிபாய் அடிக்கடி சமஸ்தானத்துக்குச் சென்று அங்குள்ள பெண்களோடு உற்சாகமாகப் பேசுவார்.


Last edited by இளங்கோ on Fri 13 Feb 2009 - 8:33; edited 1 time in total
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 24/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down


காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by Admin on Fri 13 Feb 2009 - 8:21

16. கடவுளிடம் விட்டுவிடுங்கள்!ஜெர்மானிய நண்பர் காலன்பார்க் என்பவர் தென்னாப்ரிக்காவில் காந்திஜியை இருந்தார். சில எதிரிகள், காந்திஜியை தாக்குவார்களோ என்ற எண்ணத்தில், காந்திஜி எங்கே சென்றாலும் அவரைத் தொடர்ந்து செல்வார்.

ஒருநாள், காந்திஜி வெளியே போகும்பொழுது அணிந்து கொள்வதற்காக கோட்டை எடுத்தார். கோட்வழக்கத்தைவிட கவனமாக இருந்தது. பையைப் பார்த்தார். அதிலே துப்பாக்கி இருந்தது.

உடனே காந்திஜி காலன்பாகை அழைத்தார்.

”என் பையிலே இந்தக் கைத்துப்பாக்கியை ஏன் வைத்தீர்கள்” என்றார்.

”ரஸ்கின்,டால்ஸ்டாமய் இவர்களுடைய புத்தகங்களில் எங்காவது காரணமில்லாமல் ரிவால்வர் வைத்திருப்பதைப் பற்றி எழுதியிருக்கிறார்களா?”

”ஆனால் சில குண்டர்கள் உங்களைத் தாக்க வருவார்களோ என்றுதான் இவ்வாறு செய்தேன்” என்று காலன்பாக் சமாதானம் தெரிவித்தார்.

”என்னை அவர்களிடமிருந்து காக்க விரும்புகிறீர்கள் அப்படித்தானே”.

”ஆமாம் அதனால்தான் உங்கள் பின்னாலேயே வருகிறேன்”.

”ஓகோ இப்போது எனக்கு ஒன்று புரிகிறது. என்னைக் காக்கவேண்டிய கடவுளின் அதிகாரத்தையும் நீங்களே எடுத்துக்கொண்டு விட்டீர்களா? நீங்கள் இருக்கும்வரை நான் என்னுடைய வாழ்வைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. கடவுளின் செயலை நீங்களை நீங்களே செய்து விடுவீர்கள்”.

காலன்பாக் என்ன பதில் சொல்வது என்றறியாமல் திகைத்தார்.

”என்ன யோசிக்கிறீர்கள். பகவானிடம் நான் கொண்ட பக்தியையே இது அவமதிப்பதாகும். என்னைக் காப்பாற்றுகிற கவலையை விடுங்கள். என்னைப் பற்றி அக்கறை கொள்பவர் அந்த பகவான் ஒருவரே! அவரிடம் என்னைக் காப்பாற்றும் பொறுப்பை விட்டுவிடுங்கள். இந்த கைத்துப்பாக்கி ஒருபோதும் விட்டுவிடுங்கள். இந்த கைத்துப்பாக்கி ஒருபோதும் என்னைக் காப்பாற்றாது”.

காலன்பாக் மிகவும் பணிவாக, ”மன்னியுங்கள். நான் தவறு செய்துவிட்டேன். இனி நான் உங்களைப்பற்றிக் கவலை கொள்ளமாட்டேன்”.

கைத் துப்பாக்கியை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 24/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by Admin on Fri 13 Feb 2009 - 8:21

17. ரஸ்தம்ஜி காட்டிய அன்பு1894-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நேட்டாலில் காந்திஜியின் தலைமையில் ‘நேட்டால் இந்தியக் காங்கிரஸ்’ உருவாயிற்று. தென்னாப்ரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தருவது என்பது இந்தக் காங்கிரஸின் நோக்கம்.

காந்திஜி தென்னாப்ரிக்காவில் வாழ்ந்த பல இந்தியர்களை இச்சங்கத்தில் உறுப்பினராக்கினர். எல்லோரும் ஒற்றுமையாக உரிமைக்குரல் கொடுத்ததும் அரசாங்கம் அதை எதிர்த்தது. அத்துடன் நில்லாமல் காந்திஜியை பலவிதங்களிலும் துன்புறுத்தத் தொடங்கியது.

ஒருநாள் காந்திஜி ரிக் ஷாவில் ஏறி ரஸ்டம்ஜி என்ற நண்பரின் வீட்டிற்குச் சென்றார். அவரைக் கண்ட மக்கள் அந்த ரிக் ஷாவில் ஏறி ரஸ்தம்ஜி என்ற நண்பரின் வீட்டிற்குச் சென்றார். அவரைக் கண்ட மக்கள் அந்த ரிக் ஷாவை நிறுத்தினார்கள். காந்திஜயைச் சூழ்ந்துகொண்டு அடித்தார்கள். ரத்தம் ஒழுக தளராமல் நின்றார். மேலும் மேலும் அடிகள் விழுந்தன.

அந்நிலையில் போலீஸ் சூப்ரெண்ரெண் டின் மனைவி அவ்வழியாகச் சென்றாள். காந்திஜியின் நிலையைக் கண்டு கலங்கி அவரைச் சூழ்ந்துகொண்டிருந்த மக்களை விலக்கினார்.

தன்னுடைய குடையை விரித்து காந்திஜிக்கு நேராகப் பிடித்துக் கொண்டாள். மக்கள் காந்திஜயை நெருங்க முடியவில்லை. அவரை அடிபடாமல் காப்பாற்றி ரஸ்டம்ஜியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

போலீஸ் சூப்ரெட்டெண்டு அலெக்ஸாந்தல் மிகவும் பரிவிள்ளம் கொண்டவர். அவர் காந்திஜியின் நிலைமையைக் கண்டு, தாங்கள் என்னுடைய பொறுப்பில் போலீஸ் ஸ்டேஷனிலேயே இருங்கள்” என்றார்.

ஆனால் காந்திஜி அவ்விதம் ஒளிந்து இருக்க விரும்பவில்லை.

காந்திஜியின் மீது கோபம் கொண்ட தென்னாப்ரிக்க வெள்ளையர் அவரைத் தேடி ரஸ்டம்ஜியின் வீட்டு வாசலுக்கே வந்துவிட்டார்கள்.

கூச்சலை போட்டு, கதவைத் தட்டினார்கள். இச்செய்தியைக் கேள்வியுற்று, அலெக்ஸாந்தர் அங்கே வந்தார். கோபம் பொதுமக்களை திசைதிருப்ப அவர்களோடு பேசிக்கொண்டிருந்தார்.

ரகசியமாக ஒரு காவலாளியை வீட்டினுள்ளே அனுப்பி, காந்திஜியைப் பின்புற வழியாகத் தப்பிச் செல்லுமாறு யோசனை கூறினார்.

தன்னால் ரஸ்டம்ஜக்கும் அவரது குடும்பத்தாருக்கும் துன்பம் நேரக்கூடாது என்ற எண்ணத்தினால் காந்திஜி மாறுவேடம் பூண்டு, ரஸ்டம்ஜியின் வீட்டின் பின்புற வழியாகச் சென்றார்.

அவர் சென்று பல நிமிடங்கள் ஆனபிறகு, அலெக்சாந்தர் மக்களிடம், ”வீட்டினுள்ளே காந்திஜி இருக்கிறாரா என்று யாரேனும் இருவர் சென்று பாருங்கள்” என்றார். அவர்களும் காந்தியைத் தேடிச் சென்றார்கள். வீட்டினுற் காந்திஜி இல்லை என்று தெரிந்ததும் கலைந்து சென்றார்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 24/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by Admin on Fri 13 Feb 2009 - 8:21

18. கஸ்தூரிபாயின் கண்ட ஹாரம்1901-ஆண்டின் காந்திஜி, தென்னாப்பிக்காவிலிருந்து கிளம்பி தாயகம் திரும்ப எண்ணினார். தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்திஜியின் நண்பர்கள், அவர் தாயகம் திரும்புவதற்கு எளிதில் அனுமதி கொடுக்கவில்லை.

காந்திஜி, அவர்களின் அன்பிலே உள்ளம் கசிந்தார். எனுனும் இந்தியாவுக்குக் திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடவில்லை.

காந்நிஜிக்கு, தென்னாப்பிரிக்காவிலிருந்த நண்பர்கள் ஒரு பிரிவு ஒபசார விழாவை ஏற்பாடு செய்தார்கள். திரளாக மக்கள் அதிலே கலந்து கொண்டார்கள். தங்களுடைய அன்பை வெளிப்படுத்த, பல பரிசுப் பொருங்களை காந்திஜிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் அளித்தார்கள். தங்க நகைகள், வெள்ளிப்பாத்திரங்கள், வைர நகைகள் என்று எல்லாம் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களாக இருந்தன.

இந்தப் பரிசுப் பொருட்களை மறுப்பதால், அவர்களிடைய மனம் வருத்தமடையும். க்ஷற்பதும் காந்திஜக்கு சர் என்று தோன்றவில்லை. பொதுத்தொட்னு செய்த தனக்கு, கூளி கொடுத்ததுபோள இந்தப் பரிசுப் பொருட்களை அளிக்கப்பட்டன என்றே அவர் எண்ணுனார். பொது சேவைக்குக் கூலி பெறுவது என்பது கேவலம் என்பதை உணர்த்தார். ஆயினும் இது விஷயமாக குடும்பத்தாரையும், ஆலோசிக்க வேண்டும் என்று எண்ணி, வீடு வந்து சேர்ந்தார்கள்.

அதுநாள் வரை, காந்திஜியின் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பாத்திரம் என்று விலையுயர்ந்த பொருட்கள் வீட்டில் இருந்தன. அவற்றை அவர சுமை என்றே எண்ணினார். தங்களுக்கு உரியது என்ற எண்ணமும் அவருக்கு இல்லை.

காந்திஜி, தம்முடைய மகன்களை அழைத்து, இதைப் பள்ளிக் கேட்டார். இந்த விலையியர்ந்த பொருட்களை பொதுப்பணிக்கு கொடுத்துவிடுவது தான் தமது நோக்கம் என்றும் அதுபற்றிஅவர்களது எண்ணம் என்ன என்றார்.

காந்திஜியின் அடிச்சுவட்டில் வளர்ந்த பிள்ளைகள் அல்லவா. அவர்கள் ஒருமனதாக, எல்லாவற்றையும் பொதுப்பணிக்குக் கொடுத்துவிடுவதே நல்லது என்றார்கள்.

ஆனால் கஸ்தூரிபா காந்திக்கு அளிக்கப்பட்ட ஐம்பத்திரண்டு பவுன் கண்டஹாரம் பற்றி அவரைக் கேட்டார்.

கஸ்தூரிபா கண்டஹாரத்தைக் கொடுக்க சம்மதிக்கவில்லை.

”இந்த கண்டக்ஹாரம், நான் செய்த பொது சேவைக்காகக் கொடுக்கப்பட்டதா, இல்லை நீ செய்ததற்காகக் கொடுகக்ப்பட்டதா?”

காந்திஜி இவ்வாறு கேட்டதும், கஸ்தூரிபாவும் வாதிட்டார்.

”உங்களுடைய சேவைக்காக்க கொடுக்கபட்டதுதான். ஆனால் நீங்கள் செய்த சேவையில் எனக்கு பங்கில்லையா? நீங்கள் சொன்னதையெல்லாம் நான் செய்யவில்லையா? வீட்டுக்கு அழ்த்து வந்தவர்களுக்கெல்லாம் அடிமை போல் நான் உழைக்கவில்லையா?” என்றார்.

காந்திஜி, கஸ்தூரிகாவிடம், பொது சேவையில் ஈடுபட்டவர்கள், பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தை அவளுக்கு எடுத்துச் சொன்னார்.

கஸ்தூரிபாவும் கண்டஹாரத்தைக் கொடுத்தார்.

தென்னாப்ரிக்க இந்திய மக்களின் பொது நலனுக்காக, காந்திஜி பரிசுப் பொருட்களைக் கொடுத்து உதவினார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 24/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by Admin on Fri 13 Feb 2009 - 8:22

19. எந்த வேலையானால் என்ன?காந்திஜி தாயகம் வந்து சேர்ந்த 1901-ம் ஆண்டில், இந்திய காங்கிரஸ் மகாசபை, கல்கத்தாவில் நடைபெற்றது. அதற்கு காந்திஜியும் சென்றிருந்தார்.

மகாசபை கூடுவதற்கு இரு தினங்களுக்கு முன்பாகவே, நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் தொண்டர்களும் பிரதிநிதிகளும் கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்தார்கள். மகாநாடு நடக்கும் இடத்தில் குப்பையும் கூளமுமாக இருப்பதை காந்திஜி பார்த்தார்.

”இந்தக் குப்பைகளைப் பெருக்கி அள்ள வேண்டும்” என்று அங்கிருந்த தொண்டர் ஒருவரிடம் சொன்னார்.

அந்தத் தொண்டர் காந்திஜியை ஏற இறங்கப் பார்த்து விட்டு, ”இந்த வேலையைச் செய்ய நாம் என்ன தோட்டிகளா” என்றார்.

காந்திஜி, அந்தத் தொண்டரின் எண்ணத்தை மாற்ற விரும்பினார். நான் இருக்கும் இடத்தை, நாமே சுத்தம் செய்வதில் என்ன தவறு? ஒரு துடைப்பத்தை எடுத்து வந்து காந்திஜி, அந்தக் குப்பையைப் பெருக்கினார். இதைப் பார்த்த அந்தத் தொண்டரும், தாமும் அவ்வாறே செய்யத் தொடங்கினார்.

காந்திஜி, இந்தத் துப்புரவுப் பணியுடன், காங்கிரஸ் அலுவலகப் பணி ஏதேனும் இருந்தாலும் செய்யலாமே என்று நினைத்தார். சிறிது நேரத்தைக்கூட வீணாக்க காந்திஜி விரும்பியதில்லை.

காங்கிரஸ் மகாசபை செயலாளரைப் போய்ப் பார்த்தார். கோஷால் என்பவர் அப்போது செயலாளரைப் போய்ப் பார்த்தார். கோஷால் என்பவர் அப்போது செயலாளராக இருந்தார்.

அவர் காந்திஜியைப் பார்த்து, ”இங்கே, உங்களுக்கு என்ன வேலை கொடுக்க முடியும், குமாஸ்தா வேலை செய்வீர்களா?” என்றார்.

”அதற்கென்ன, செய்வேன்” என்று காந்திஜி பணிவாக பதில் கூறினார். கோஷாலுக்கு காந்திஜியின் பதில் வியப்பைத் தந்தது.

”இவர் கூறியதைக் கேட்டீர்களா? சமூகத் தொண்டு செய்ய வருபவர்கள் எந்த வேலை செய்யவும் தயாராக இருக்க வேண்டும்” என்று அங்கே இருந்த தொண்டர்களிடம் கூறினார்.

பிறகு காந்திஜியிடம் அவர் செய்ய வேண்டிய வேலையைக் குறிப்பிட்டார். ”அங்கே உள்ள கடிதங்களைப் பிரித்து, படித்து, முக்கிநமான விஷயம் என்றால், அக்கடிதங்களி மட்டுமே என்னிடம் கொடுங்கள்” என்றார்.

காந்திஜியும் அவருக்கு அளிக்கப்பட்ட வேலையை கவனத்துடன் செய்தார்.

அவர் அவ்வாறு குமாஸ்தா வேலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்த சில காங்கிரஸ் தலைவர்கள், கோஷாலைக் கடிந்துகொண்டார்கள்.

காந்திஜியைப் பற்றி அறிந்துகொண்ட கோஷால், ”அட்டா உங்களுக்கு இந்த வேலைய்க் கொடுத்தேனே!” என்று வருந்தினார்.

”இதற்கு ஏன் வருத்துகிறீர்கள். இதுவும் ஒரு காங்கிரஸ் தொண்டுதானே! எந்த வேலையானால் என்ன? இதில் உயர்வு தாழ்வு பார்ப்பது சரியல்ல”—-என்றார்.

ஒரு தொண்டரைப்போல உழைக்கவும் காந்திஜி அஞ்சியதில்லை.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 24/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by Admin on Fri 13 Feb 2009 - 8:22

20. கைதேர்ந்த தையல்காரர்குளிர் காலங்களில், காந்திஜி, கம்பளித் துணியை தலையில் சுற்றிக்கொள்வார். நாளடைவில் அது நைந்து கிழிந்த கம்பளித் துணியை, இனி அவர் உபயோகிக்க முடியாது என்று எண்ணி, புதிய கம்பளித் துணியை எடுத்து வைத்திருந்தார்.

மறுநாள் இரவு, காந்திஜியிடம் அந்தப் புதிய கம்பளித் துணியை, தலையில் சுற்றிக்கொள்ளுமாறு அளித்தார்கள்.

அவர், ”பழைய துணி கொடுக்கிறீர்கள்” என்றார் ஆசரம உதவியாளர்.

”இது எனக்கு வேண்டாம். பழைய துணிதான் வேண்டும் அதைக் கொண்டு வாருங்கள்” என்றார். பழைய துணியைக் கொண்டுவந்து தந்தார்கள்.

”நீயோ, நானோ ஏதாவது வேலை செய்து சம்பாதிக்கிறோமா? இல்லையே. உனக்கு உன் தந்தை செலவு செய்கிறார். என்க்காக யார் செலவு செய்வார்கள்? அப்படி இருக்கம்பொழுது, பொருள்களை வீணாக்கலாமா? இன்னும் சிறிதுகாலம் அதை தைத்து பயன்படுத்தலாம் அல்லவா? இதைக் கொண்டுபோய் பத்திரமாக வை” என்று புதிய கம்பளித் துணியைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

”பாபுஜி நீங்கள் படுக்கப் போகுமுன்பு, நானே கிழிசலைத் தைத்துத் தருகிறேன்” என்று ஆசரமத்தில் இருந்தவர் கூறினார்.

ஆனால் அவர் சொன்னபடி, அவரால் செய்ய முடியவில்லை. வேறு வேலைகளில் மூழ்கி, இதைப்பற்றி மறந்து போய்விட்டார்.

இரவு நள்ளிரவு ஆகும்போது, அவருக்கு அதைப் பற்றிய நினைவு வந்தார். ஆனால் அதற்கு காந்திஜியே, கிழிசலைத் தைத்துவிட்டு, கம்பளியை அணிந்துகொண்டு விட்டார் என்பதை அறிந்து வெட்கமடைந்தார்.

காந்திஜி, விரும்பியிருந்தால் எத்தனையோ உயர் ரக கம்பளிகளும் சால்வைகளும் வந்து குவிந்திருக்கும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

மறுநாள், காந்திஜி, ஆச்ரமவாசியிடம், ”என்னுடைய தையல் எப்படி இருக்கிறது?” என்று கம்பளியைக் காட்டிக் கேட்டார்.

”கைதேர்ந்த தையல்கார்ரின் திறமை இதில் தெரிகிறது” என்றார் அந்த ஆச்ரமவாதி. பிளவுபட்டு நின்ற பாரதத்தின் கிழிசல்களையெல்லாம் தைத்து, ஒன்றுபட்ட பாரதமாக ஆக்கிய கைதேர்ந்த தையல்காரர் காந்திஜி.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 24/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by Admin on Fri 13 Feb 2009 - 8:22

21. கோச்வண்டியும் டிராம் வண்டியும்அக்காலத்தில் இந்தியாவின் தலைநகரமாக கல்கத்த இருந்தது. அங்கு இந்திய சட்டசபை ஒன்றும் இருந்தது. அதில் திரு. கோபாலகிருஷ்ண கோகலேயும் ஒரு அங்கத்தினர் சட்டசபை நடக்கும் காலங்களில் கோகலே கல்கத்தாவில் இருப்பார்.

கல்கத்தா, காங்கிரஸ் மகாசபை நடந்து மடிந்த பிறகும் காந்திஜி கல்கத்தாவில் தங்கியிருந்தார். கோகலே, காந்திஜியைத் தம்முடன் வந்து தங்குமாறு கூறினார்.

அவர் சொன்னபிறகு, ஒரிரு நாட்களிக்குப் பிறகே, காந்திஜி, கோகலேயுடன் தங்கச் சென்றார் கோகலேயின் அருகில் இருந்து, அவருடைய வாழ்க்கை முறையை கவனிக்கும் வாய்ப்பு காந்திஜிக்குக் கிடைத்தது. யாருடன் பேசினாலும் அதில் பொதுநல நோக்கமே இருந்ததை காந்திஜி கவனித்து வியந்தார்.

எளிய வாழ்வும் உயர்ந்த லட்சியங்களும் கொண்டிருந்தவர் கோகலே. அவர் சட்டசபைக்குப், மற்ற இடங்களுக்கும் செல்வதற்காக ஒரு கோச்வண்டி வைத்திருந்தார்.

காந்திஜி ஒருநாள் இதைப்பற்றி நேரிடையாக கோகலேயிடம் கேட்டுவிட்டார்.

”நீங்கள் எதள்காக, கோச்வண்டி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எளிமையான வாழ்வு வாழ விரும்பும் பயணம் செய்யக் கூடாது? அது உங்களுடைய கெளரவத்திற்குக் குறைவு என்று எண்ணுகிறீர்களா?”

”காந்தி, நீங்கள் உங்கள் விருப்பம்போல் டிராம்வண்டியில் செல்கிறீர்கள். இதைப் பார்த்து எனக்கும் பொறாமையாகத்தான் இருக்கிறது. என்னால் அவ்விதம் போக முடியாது. என்னை இந்த நகரத்து ஜனங்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். நான் டிராம் வண்டியில் போனாலும், போகும் பணிக்கு அதுவே இடையூறாகிவிடும். பொதுமக்களால், நீங்களும் ஒருநாள் அறியப்படும் மனிதராவீர்கள். அப்போது உங்களாலும் டிராம் வண்டியில் பயணம் செய்வது என்பது இயலாத காரியமாகிவிடும்”.

இந்த பதில் காந்திஜியின் சந்தேகத்தைப் போக்கியது.

கோகலேயுடன், ஒரு சில மாதங்கள் தங்கியபின்பு, காந்திஜி ரயிலில் மூன்றாம் வகுப்பிப் பெட்டியில் சுற்றுப்பயணம் செய்யக் கிளம்பினார். அவர் ஊருக்குக் கிளம்பும்போது, கோகலே தவறாமல், ரயில் நிலையத்துக்கு வந்து, காந்திஜியை வழி அனுப்பி வைத்தார்.

கோகலேயின் பண்பாட்டை, காந்திஜி வியந்தார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 24/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by Admin on Fri 13 Feb 2009 - 8:22

22. காந்திஜி செய்த ஜலசிக்ச்சைகாந்திஜி, பம்பாய் நகரத்திற்கு வந்து வக்கீல் தொழிலை மேற்கொண்டார். கஸ்தூரிபாய், குழந்தைகள் வன்று, காந்திஜி குடும்பத்தோடு வாழ்த்திருத்தார். அச்சமயத்தில், காந்திஜியின் இரண்டாவது மகன் மணிலாலுக்கு ஜூரம் வந்தது. ஜூரம் அதிகரித்துக் கொண்டே போனாலும், காந்திஜி மருத்துவரிடம் காட்டினார்.

மணிலாலுக்கு ட்பாய்டும் அத்துடன் நிமோனியவும் கண்டிருப்பதாகவும், இதற்கு மருந்து கொடுப்பதோடு, முட்டையும், சிக்கன் சூப்பும் கொடுக்க வேண்டும் என்றார் மருந்துவர்.

காந்திஜி சைவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதில் உறுதி கொண்டவராயிற்றே! மருத்துவர் கூறியதைக் கேட்டு, அதன்படி நடக்க அவர் முன்வரவில்லை.

”இதைத் தவிர வேறு ஏதாவது யோசனை சொல்லுங்களேன்” என்று காந்திஜி மருத்துவரைக் கேட்டார்.

”குழந்தையின் உயிர் முக்கியம். அதைக் காப்பாற்ற வேண்டுமே தவிர, வீண் பிடிவாதம் பிடிக்க வேண்டாம். முட்டையும் சூப்பும் கொடுப்பது தவிர வேறு வழியில்லை” என்றார்.

காந்திஜி இதற்கு ஒப்பவில்லை. ”சரியோ, தவறோ, உயிர் போவதாக இருந்தாலும், இதற்கு சம்மதிக்க மாட்டேன்” என்றார் காந்திஜி.

பிறகு தனக்குத் தெரித் ஜலசிகிச்சை முறையை கையாளப் போவதாக காந்திஜி கூறிவிட்டு, அடிக்கடி மருத்துவரை வந்து கவனிக்குமாறு வேண்டுக் கொண்டார்.

பத்து வயதான மணிலாவிடம் நடந்ததை காந்திஜி கூறினார்.

”எனக்கு, அசைவம் வேண்தாம். நீங்கள் செய்யும் மருத்துவமே போதும்” என்று அவன் கூறியதும், காந்திஜி தமது சிகிச்சையைத் தொடங்கினார்.

தொட்டியில் ஜலம் நிரப்பி அதில் மணிலாவை உட்கார வைப்பதும் எடுப்பதுமாக இருந்தார். மூன்று நாட்கள் இதைத் தொடர்ந்து செய்தும் ஜூரம் குறையவில்லை.

பிறகு ஈரத்துணியை உடம்பிலும் தலையிலும் சுற்றி, கனத்த கம்பளியால் உடம்பைப் போர்த்திவிட்டு, காந்திஜி உலாவச் சென்றுவிட்டார்.

மணிலால், ”அப்பா” என்று கூவியதைக் கேட்டு பரபரப்புடன் வந்தார்.

மணிலால் வியர்வை வெள்ளத்தில் மூழ்கியிருந்தான். ஜூரம் நன்றாகக் குறைந்திருந்தது.

பாலும் பழரசமும் அருந்தினனு. பல நாட்கள் படுக்கையில் கிடந்தாலும், நல்ல தேக ஆரோக்கியம் பெற்றான்.

மணிலால் பிழைத்தி எழுந்தது, சிகிசைச்சையினால் மட்டுமல்ல ஆண்டவனுடைய கருணையினால் தான் என்று காந்திஜி மனப்பூர்வமாக நம்பினார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 24/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by Admin on Fri 13 Feb 2009 - 8:23

23. சதாக்கிரகம்-சத்யாக்ரகம்தென்னாப்ரிக்காவில் டிரான்ஸ்வால் என்னுமிடத்தில் இந்தியர்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு அதிக உரிமை வழங்கினால், அங்கே வெள்ளையரின் கை வலுவிழந்து போய்விடக் கூடும் என்று அரசாங்கம் எண்ணியது. அதனால் இந்தயர்கள் புதிதாக அந்த மாகாணத்திற்குள் உரிமைகளைப் பறிக்கவும் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது

இச்சட்டத்தை காந்திஜி ‘கறுப்புச் சட்டம்’ என்று கூறினார். இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் என்னென்ன துன்பங்கள் ஏற்படும் என்பதை இந்தியர்களுக்கு எடுத்துரைத்தார்.

இச்சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்பதில் டிரான்ஸ்வாலில் வாழ்ந்த இந்தியர்கள் ஒரு முனைப்பான எண்ணம் கொண்டிருந்தார்கள்.

அந்த மாகாணத்தில் வாழ்ந்த இந்தியர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூட வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

1906-ம் வருடம் செம்டம்பர் 11-ம் நாளன்று ‘எம்பயர் என்ற நாடக மன்றத்தில் சுமார் மூவாயிரம் இந்தியர்கள் கூடினார்கள். ஜனாப் அப்துல்கனி என்பவர் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார்.

”கறுப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தினால் அதற்கு ஆதரவு தருவதில்லை என்றும் சட்டத்தை மீறுவதால் ஏற்படும் கஷ்டங்களை பொறுமையுடன் ஏற்கவும் வேண்டும்” என்று அவர் எல்லோரையும் கேட்டுக் கொண்டார்.

காந்திஜி இதற்குப் பிறகு பேசினார்.

”இப்போது நாம் இங்கே நிறைவேற்றிய தீர்மானம் மிகவும் முக்கியமான ஒன்று. நம்முடைய எதிர்கால வாழ்வு எப்படியிருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். நாம் எல்லோரும் கடவுள் சாட்சியாக இந்தச் சட்டத்துக்கு உட்படுவதில்லை; அதனால் ஏற்படும் துன்பங்களையும் பொறுத்துக் கொள்வேன்” என்று எல்லோரும் சபதம் செய்ய வேண்டும். கடவுள் சாட்சியாகச் செய்யப்படுகிற இந்த சபதத்தை, உறுதிமொழியை உயிர் உள்ளவரை காக்க வேண்டும்” என்றார்.

அங்கே கூடியிருந்த மூவாயிரம் இந்தியர்களும் காந்திஜியின் பேச்சைக் கேட்ட பிறகு எழுந்து நின்றார்கள்.

ஒரே குரலில், ”கறுப்புச் சட்டத்துக்கு நாங்கள் உடன் படமாட்டோம். கடவுள் சாட்சியாக, இது எங்கள் உறுதிமொழி”–என்று கூறினார்கள்.

உலக சரித்திரத்தில் முகவும் முக்கியமான நாளாக அந்த நாள் அமைந்தது. இந்த நிகழ்ச்சியை உலகம் ‘பாஸிவ்ரெஸிஸ்டென்ஸ்’ சாத்வீக சட்டமறுப்பு” என்று அழைத்தது.

உலகம் இதுவரை காணாத புதிய எழுச்சியாக, தென்னாப்ரிக்கா வாழ் இந்தியர்கள் தங்கள் எதிர்ப்பை அகிம்ஸை முறையில் தெரிவித்தார்கள்.

இந்த இயக்கத்திற்கு இந்திய மொழியில் ஒரு பெயரைத் தரவேண்டும் என்று காந்திஜி விரும்பினார்.

‘சதாக்ரகம்’ என்று மகன்லால் காந்தி என்பவர் புதிய பெயர் கூறினார். அதில் சிறிய திருத்தம் செய்து அதையே ”சத்யாக்ரகம்” என்று காந்திஜி மாற்றினார்.

புதிய போர்முறை அகிம்சா முறையிலான போர்முறை–சத்யாக்ரகம் உதயமாயிற்று.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 24/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by Admin on Fri 13 Feb 2009 - 8:23

24. மீர்ஆலத்துக்கு மன்னிப்புபுதிய போர் முறை தென்னாப்ரிக்கா வாழ் இந்தியர்களுக்கு உற்சாகம் ஊட்டியது. கறுப்புச் சட்டத்தின் நிபந்தனைகளுக்கு அவர்கள் உட்பட மறுத்தார்கள். ஆயிரக்காணக்கான இந்தியர்கள் இவ்வாறு சட்டத்தைப் புறக்கணித்தடைக் கண்ட அரசாங்கம், மக்கள் தலைவர்கள் சிலரை கைது செய்தது.

காந்திஜியும் கைது செய்யப்பட்டு இரண்டு வாரகாலம் சிறையில் இருந்தார். அரசாங்கம் சமாதானப் பேச்சு நடத்த விரும்பியது.

காந்திஜி உட்பட பல தலைவர்களை விடுவித்தார்கள். கறுப்புச் சட்டத்தின் நிபந்தனைப்படி அரசாங்கத்தின் கட்டாயம் இல்லாமல், மக்கள் தாங்களே தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால், நாளடைவில் சட்டத்தை அரசு எடுத்துவிடும்” என்று அரசாங்கம் தலைவர்களிடம் உறுதி கூறியது.

இதனை காந்திஜி ஆதரித்தார். மக்களைக் கட்டாயப்படுத்தாமல் இருக்கும்படியான சட்டம், குற்றமல்ல என்பதே அவரது வாதம்.

ஆனால், ஒரு சிலர் இதற்கு உடன்பட மறுத்தார்கள். நிபந்தனைகள் மாறாதபோது, எப்படி அதனை ஏற்பது என்பது அவர்கள் தொடுக்கும் வாதம்.

இதில் முன்னணியில் இருந்தவன் ஒரு பட்டாணியன். அவன் பெயர் மீர் ஆலம். அவன் காந்திஜியிடம், ”இப்போதுள்ள ஒப்பந்தப்படி, பத்து விரல் அடையாளத்தைப் பதிவு செய்ய வேண்டுமா?” என்று கோபமாகக் கேட்டான்.

”கொடுக்க வேண்டும் என்படே என் எண்ணம். இதை தன்மானத்துக்கு அழுக்கு என்று எண்ணினால் கொடுக்க வேண்டாம்.

”நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?”

”கட்டாயம் பதிவு செய்யப் போகிறேன்”.

”முதலில் யார், இப்படி பதிவு செய்யப்போகிறார்களோ அவர்களை அடித்துக் கொன்று போடப் போகிறேன். அல்லாமீது ஆணை”–என்று மீர்ஆலம் உறுதியாகச் சொல்லிச் சென்றான்.

ஆனால் காந்திஜி கலங்கொஇல்லை. மறுநாள் காந்திஜி பின்தொடர, பலர் பதிவு செய்யும் அலுவல்த்திற்குச் சென்றார்கள். மீர்ஆலம் அலுவலக வாசலில் நின்றிருந்தான். காந்திஜியைக் கண்டதும் ”எங்கேபோகுறீர்கள்” என்றான்.

”என் பெயரைப் பதிவு செய்யப் போகிறேன்”.

இதைக் கேட்டதும் மீர்ஆலம், தான் சொன்னது போலவே, பதிவு செய்ய வந்த முதல் நபரான காந்திஜியைத் தடியினால் இடித்தான்.

காந்திஜி ‘ஹே ராம்’ என்று கூறிவிட்டு மயங்கிக் கீழே விழுந்தார்.

அரசாங்கம் மீர்ஆலத்தைக் கைது செய்தது. மயக்கம் தெளிந்த காந்திஜி முதலில் மீர்ஆலம் பற்றிக் கேட்டார். பின்பு அவனை விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொண்டார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 24/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by Admin on Fri 13 Feb 2009 - 8:23

25. பாமர வைத்தியன்தென்னாப்ரிக்காவில் இருந்தபோது, கஸ்தூரிபாய்க்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இரத்தப் போக்கு குறைந்தது. ஆனால் சில நாட்களுக்குப் பீறகு மறுபடி இரத்தப்போக்கு அதிகரித்தது. கஸ்தூரிபாயின் உடல் நலமும் பாதிப்படைத்து.

காந்திஜி, கஸ்தூரிபாயை, உப்பையும் மசாலாக்களையும் தவிர்த்து சாப்பிட சொன்னார். மருந்து சாப்பிட்டும் குணமாகாத நோய், பத்தியத்தால் குணமாகும் என்று நம்பினார்.

கஸ்தூரிபாய்க்கு இந்த யோசனை சிறிதும் பிடிக்கவில்லை.

”உப்பையிம் மசாலா சாமான்களையும் விட்டு விடுங்கள் என்று உங்களிடம் சொன்னால் உங்களால் விட முடியுமா?” என்று கஸ்தூரிபாய் கோபத்துடன் காந்திஜியைக் கேட்டார்.

இதைக் கேட்டு காந்திஜி வருந்தவில்லை. மன மகிழ்ச்சியே அடைந்தார். கஸ்தூரிபாயிடம் தனக்குள்ள அன்பை வெளிப்படுத்த இதுவே சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தார்.

”நீ சொல்வது தவறு. எனக்கு உடம்பு சரியில்லாமல் போய், மருத்துவர், உப்பு, மசாலா, இன்னும் வேறு எதுவானாலும் விட்டுவிட வேண்டும் என்று சொன்னால், மறுவார்த்தை பேசாமல் விட்டுவிடுவேன் கஸ்தூரிபா. உனக்கு சந்தேகமே வேண்டாம். இப்போது மருத்துவர் யாரும், என்னை எதையும் விடச் சொல்லவில்லை. ஆனாலும் உனக்காக இனி ஒரு வருட காலம் உப்பும் மசாலாவும் சேர்க்க மாட்டேன். இது உறுதி” என்றார்.

காந்திஜி இவ்வாறு கூறியதும், கஸ்தூரிபாய் திடுக்கிட்டார்.

”என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் குணம் தெரிந்தும், நான் இப்படிப் பேசிவிட்டேனே! தயவுசெய்து, உங்கள் உறுதியைக் கைவிட்டு விடுங்கள்” என்று கெஞ்சினார்.

சத்தியவாக்கை மீறும் குணம் காந்திஜிக்கு இருந்ததே இல்லை.

”இதற்காக நீ கண்ணீர் விட வேண்டிய அவசியம் இல்லை. இந்த உப்பும் மசாலாவும் உடம்பிற்கு தேவையானதல்ல; இவற்றைத் தவிர்ப்பது எனக்கும் நல்லதுதான். ஆகையால் நான் எடுத்துக்கொண்ட உறுதியிலிருந்து தவறவே மாட்டேன்” என்றார் காந்திஜி.

கணவர் உப்பு, மசாலா இல்லாமல் சாப்பிடத் துவங்கியதும், கஸ்தூரிபாயிம் அவ்விதமே சாப்பிடலானார். உணவுக் கட்டுப்பாட்டினால் கஸ்தூரிபாயின் உடல் நலம் பெற்றது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 24/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by Admin on Fri 13 Feb 2009 - 8:26

26. கஸ்தூரிபாயின் மனத்துணிவுதென்னாப்ரிக்காவில் காந்திஜி சத்யாகிரக இயக்கத்தைத் தொடங்கியதும் அந்த இயக்கத்தில் பங்கேற்க சில பெண்களும் முன்வந்தார்கள். காந்திஜி அவர்களைத் தமது வீட்டிற்கு அழைத்து அறப்போரைப் பற்றிக் கூறலானார்.

அவற்றையெல்லாம் வீட்டிற்குள் இருந்த கஸ்தூரிபாய் ஊன்றி கவனித்துக் கொண்டிருந்தார்.

அப்பெண்கள் எல்லோரும் போனபிறகு, கஸ்தூரிபாய், காந்திஜியிடம் வந்தார்.

”சட்டமறுப்பு செய்ய எனக்கு தகுதி இல்லையா? இந்த விஷயங்களை நீங்கள் என்னிடம் ஏன் கூறவில்லை” என்றார்.

கஸ்தூரிபாயின் படபடப்பான பேச்சைக் கேட்டு, காந்திஜி அவளை அமைதிப்படுத்தினார்.

”சொல்லக்கூடாது என்பதில்லை. ஆனால் உன்னை துன்புறுத்த எனக்கு விருப்பம் இல்லை. நீயும் சத்யாக்ரகத்திலே சேர்ந்துகொண்டு போராடி சிறைக்குச் சென்றால் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும்………நான் உன்னை இதுபற்றிக் கேட்க தயக்கமாகவே இருக்கிறது?”

”என்ன தயக்கம், சொல்லுங்கள்”.

”அந்தப் பெண்களைக் கேட்டது போல உன்னையும், நீ சிறை செல்லத் தயாராக இருக்கிறாயா என்று கேட்டிருந்தால், நீ என் சொல்லை மறுத்துப் பேசியிருக்கமாட்டாய். போராடி சிறை சென்ற பிறகு, அங்குள்ள கஷ்டங்களைக் கண்டு உனக்கு அச்சம் ஏற்பட்டால், அதற்குப் பொறுப்பாளி நான்தான் என்று உலகம் பழிக்கும். நீயாகக் கேட்டு வந்தாயே, இதுவே நான் வேண்டியது. இனி எனக்கு, உன் விஷயத்தில் கவலை எதுவும் இல்லை” என்று காந்திஜி, அவளுக்கு விளக்கம் கூறினார்.

”ஜெயிலில் கஷ்டங்கள் இருந்தால் அதைத் தாங்க முடியாமல் நான் மன்னிப்புக் கேட்டால், அதன்பிறகு நீங்கள் என் முகத்தில் விழிக்கவே வேண்டாம். நீங்கள், ஜெயில் கஷ்டங்களைத் தாங்கவில்லையா? அதுபோல என் பிள்ளைகளும் தாங்குவார்கள். நானும் தாங்கிக் கொள்வேன்”.

அழுத்தமாகக் கூறிய அன்னை கஸ்தூரிபாய், சத்யாக்ரக போராட்டங்களில் கலந்துகொண்டார். ஆறு ஆண்டு காலம் நடந்த போராட்டாங்களில் கஸ்தூரிபாய் பலமுறை சிறைவாசத்தை அனுபவித்தார்.

அண்ணளுக்கேற்ற அன்னை என்று அகில உலகமும் போற்ற வாழ்ந்தார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 24/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by Admin on Fri 13 Feb 2009 - 8:26

27. அதிசய விருந்துதென்னாப்ரிக்காவிலிருந்து தாயகம் வந்த பின்பு, காந்திஜி சென்னைக்கு ஒருமுறை விஜயம் செய்தார். தென்னாப்ரிக்காவில் காந்திஜியின் சத்யாக்ரக போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தவர்கள் தென்னாப்ரிக்கா வாழ் தமிழர்கள். எனவே காந்திஜி, தமிழர்களின் மீது தனி அன்பு வைத்திருந்தார்.

சென்னையில் பிரபலமான எஸ். ஸ்ரீனிவாச அய்யங்கார், காந்திஜியைப் பாராட்டி ஒரு விருந்தளித்தார். அந்த விருந்துக்கு, அவர் பல முக்கியமானவர்களையும் அழைத்திருந்தார்.

காந்திஜியும் கஸ்தூரிபாயும் வந்தார்கள். குஜராத்தி பாணியில் வெள்ளை குர்த்தாவும் வேஷ்டியும் தலைப்பாகையிம் அணிந்து ஒரு படித்த வடநாட்டு குடியானவனைப் போல தோற்றமளித்தார்.

தூய்மையன வெள்ளைப் பாவாடை, தாவணி அணிந்து, மெலிந்த உடம்பினரான கஸ்தூரிபாய் உடன் வந்தார். அன்பு கனிந்த பார்வை. உலக அனுபவத்தை உள்ளடக்கிய கனிவான களையான முகம். கைகளில் ஒரு ஜதை இரும்புக் காப்புகள் மட்டுமே அணிந்திருந்தார்.

விருந்து நடக்கும் இடத்திற்கு அனைவரும் சென்றார்கள். மேஜைகளின்மீது உண்ணவேண்டிய பொருட்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. விருந்துக்கு வந்திருந்தவர்கள், ஜிலேபி, பேடா, ஐஸ்கிரீம், பூந்தி போன்ற இனிப்பு வகைகளை எதிர்பார்த்து காந்திருந்தார்கள். ஆனால் அன்றைய விருந்தில் இருந்தவை என்ன தெரியுமா?

தேங்காயின் இளம் வழுக்கல் ஒரு அடுக்கில் வைக்கப்பட்டிருந்தது.

வேக வைத்த வேர்க்கடலையை மிதமான உப்பு போட்டு ஒரு பாத்திரத்தில் வைத்திருந்தார்கள்.

இன்னொரு தட்டில் உரித்த ஆரஞ்சுச் சுளைகள்; மற்றொன்றில் நறுக்கிய ஆப்பிள் துண்டங்கள். திராட்சைப் பழம்; அராபிய நாட்டு பேரீச்சம் பழத்தில் கொட்டை நீக்கப்பட்டு குவிக்கப்பட்டிருந்தது. இவை தவிர குளிர்ந்த நீர் மோர்; பருக இளநீர், இனிப்பான பானகம்.

காந்திஜியின் இயற்கை உணவே அன்றைக்கு எல்லோருக்கும் விருந்தில் அளிக்கப்பட்டது. 1915-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி நடந்த இந்த அதிசய விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு புதுமையான அனுபவமாக இருந்தது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 24/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by Admin on Fri 13 Feb 2009 - 8:26

28. தீபாவளிப் பார்சல்வார்தா காந்தி ஆச்ரமத்தில், காந்திஜியுடன் சிறிது காலம் தங்க வேண்டும் என்ற விருப்பத்துடன், அம்புஜம்மாள் வந்தாள். சிறிய வயது, சுகபோகமாக வாழ்ந்த பெண். ஆசிரம வாழ்வு அவளுக்கு ஒத்து வருமோ என்று அவளுடைய தந்தை கவலைப்பட்டார். ஆனால் காந்திஜியோ, ”கவலைப்பட வேண்டாம். அம்புஜத்தை என் பெண்போல கவனித்துக் கொள்வேன்” என்றார்.

ஆச்ரம நியமங்களைக் கடைப்பிடிப்பது, அம்புஜத்திற்கு முதலில் சற்று கடினமாக இருந்தாலும், பிறகு பழகிவிட்டது. முரட்டு ரொட்டி, உப்பு சிறிதளவே சேர்த்த வேகவைத்தா காய்கறிகள், பருப்பு, கீரை, கஞ்சி, பழங்கள் என்று ஆசரம உணவு முறை இருந்தது.

அறுசுவை உணவு உண்ட நாக்குக்கு இவை சப்பென்று இருந்தாலும் உடலுக்கு நன்மையே செய்தன என்பதால் அம்புஜம்மாள் அவற்றை விரும்பி உண்டாள்.

அவள் வார்தா ஆச்ரமத்தில் இருக்கும் சமயத்தில் தீபாவளி வந்தது. சென்னையில் இருந்து அம்புஜம்மாளுக்காக, அவளுடைய தாய், பக்ஷணங்கள் செய்து ஆச்ரமத்திற்கு அனுப்பியிருந்தார்.

அம்புஜம்மாறை காந்திஜி அழைத்தார். அவள், அவர் முன்னால் போய் நின்றாள். காந்திஜியின் அருகே ஒரு பெரிய பார்சல் இருந்தது.

”அம்புஜம் இதை உன் அம்மா அனுப்பியிருக்கிறாள். என்னதென்று பிரித்துப் பார்” என்றார் காந்திஜி.

அம்புஜம் மிகவும் ஆவலுடன் பார்சலை மளமளவென்று பிரித்துப் பார்த்தாள். பிரிக்கும்பொழுதே இனிய வாசனை மூக்கைத் துளைத்தது. பார்சலின் உள்ளே இனிப்புகளும் முறுக்கு சீடை வகைகளும் இருந்தன.

”அம்புஜம் இதையெல்லாம் பார்த்தும் உனக்கு உடனே எடுத்துத் தின்ன வேண்டும் என்று ஆசை ஏற்படுகிறது இல்லையா? உன் அம்மா ஆசையுடன் செய்து உனக்கு அனுப்பியதாயிற்றே” என்றார்.

அம்புஜம்மாள் காந்திஜியின் பேச்சில் உட்பொருளை கவனித்தாள். பிறகு, ”நான் இவற்றை தின்னவிரும்பவில்லை” என்றாள்.

”உண்மையாகவா சொல்கிறாய் அம்புஜம்”.

உண்மைதான்”.

”அப்படியானால் இவற்றை எடுத்துக்கொண்டு போய் மகிலாச்ரமக் குழந்தைகளுக்கு உன் கையாலேயே கொடு பார்க்கலாம்.”

அம்புஜம்மாள், காந்திஜி கூறியபடியே செய்துவிட்டு வந்தாள்.

”அம்புஜம் நீ ஒன்றைக்கூட தின்று பார்க்கவில்லையே! உன் நாவடக்கம் எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று அவளைப் பாராட்டினார்.

காந்திஜியிடம் பெற்ற பாராட்டு, அம்புஜம்மாளுக்கு இனிப்பு வகையெல்லாம் சாப்பிட்டதுபோல நிறைவாக இருந்து.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 24/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by Admin on Fri 13 Feb 2009 - 8:27

29. டால்ஸ்டாய் பண்ணையில்காந்திஜியின் கருத்தைக் கவர்ந்தவர்களிலே ருஷ்ய நாட்டின் டால்ஸ்டாய் ஒருவராவார். அவர் எழுதிய ‘ஆண்டவன் ராஜ்யம் உனக்குள்ளே என்ற புத்தகம் காந்திஜிக்கு மிகவும் விருப்பமானதாகும். தென்னாப்ரிக்காவில் காந்திஜி ஏற்படுத்திய ஆச்ரமத்திற்கு ”டால்ஸ்டாய் பண்ணை” என்று பெயர் வைத்தார்.

தால்ஸ்டாய் பண்ணையில் பல மத்த்தவர்களும் பல வயதுடையவர்களும் வசித்து வந்தார்கள். இளம் வாலிபர்களும் பெண்களும் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதில் காந்திஜி மிகவும் கண்டிப்பானவராக இருந்தார்.

ஆச்ரமத்தில் வசித்த இளம்பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பு தம்மைச் சார்ந்தது என்பதால் காந்திஜி அவர்களை மிகவும் கருத்துடன் கவனித்தார்.

சில வாலிபர்கள், ஆச்ரமத்தில் உள்ள பெண்களோடு பேசிச் சிரித்துக் கொண்டுருந்தார்கள். கேளியும் கிண்டலும் நிறைந்திருந்த வாலிபர்களை அழைத்து, அறிவுரை கூறி அனுப்பினார்.

காந்திஜியின் மனம் சிந்திக்கத் துவங்கியது. எப்போதும் இதுபோல் கவனித்துக்கொள்ள முடியாது என்பதால், இதற்கு வேறு வழி தேட வேண்டும் என்பதில் சிந்தையைச் செலுத்தினார். பெண்கள் தவ்வாழ்வு வாழ்ந்தால், ஆண்கள் அணிகமாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்தார்.

மறுநாள் காந்திஜி, அந்த இளம் பெண்களை அயைத்தார்.

”குழந்தைகளே, நேற்று உங்களைக் கிண்டல் செய்த இளைஞர்களைப் பற்றியே நான் இரவு முழுவதும் யோசித்தேன். அவர்கள் இனி இவ்வாறு செய்யாமல் இருக்க்வும், வேறு எவரும் உங்களிடம் இதுபோல நடக்காமலிருக்கவும் எனக்கு ஒரு யோசனை தோன்றியது”.

”சொல்லுங்கள்” என்றார்கள் அந்தப் பெண்கள்.

”இளமையும் அழகும்தானே, இளைஞர்களைத் தவறான திசைக்குத் திருப்புகிறது. குழந்தைகளே, உங்களுக்கு அழகு தரக்கூடிய ஒன்றை நீங்கள் தியாகம் செய்ய வேண்டும். செய்வீர்களா?” என்றார்.

அந்த பெண்களுக்கு, காந்திஜி என்ன கேட்கப் போகிறார் என்பதை எண்ணி, கலக்கமாக இருந்தது.

”இதில் வருத்தப்பட எதுவுமில்லை. உங்களிடைய நன்மைக்குத்தான் சொல்கிறேன். பெண்களிக்கு அழகைத் தருவது தலைமுடிதானே, உங்களுடைய நீண்ட கூந்தலை நாங்கள் தியாகம் செய்வீர்களா?

இதை எதிர்பார்க்காத அவ்விரு பெண்களிம் திடுக்கிட்டார்கள். தான் எதள்காக் இவ்விதம் கூளுகிலேன் என்பதை காந்திஜி பலமுறை அவர்களிக்கு விளக்கினார். பிறகு, அவர்களிள் அவருடைய விளக்கத்தை ஏற்றார்கள்.

உடனே கத்தரிக்கோலைக் கொண்டுவந்து, அப்பெண்களின் நீண்ட தலைமுடியை, காந்திஜி வெட்டி எறிந்தார்.

டால்ஸ்டாய் பண்ணையில் உள்ளோர், இதற்குப் பிறகு பெண்களிடம் கிண்டலோ கேலியோ பேசியதே இல்லை.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 24/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by Admin on Fri 13 Feb 2009 - 8:27

30. கோடீஸ்வரர் ஜெகாங்கீர் பெடிட்1914-ம் வருடம் ஜூலை மாதம் காந்திஜி, கஸ்தூரிபாயிடம் தாயகம் திரும்ப, கப்பலேறினார். இங்கிலாந்து சென்று கோபாலகிருஷ்ண கோகலேயை சந்தித்தபிறகே, காந்திஜி இந்தியா வந்தார்.

காந்திஜி பம்பாய் துறைமுகத்தில் வந்து இறங்கிய போது, அவரை தாயக மக்கள் வாழ்த்தி வரவேற்றார்கள். தென்னாப்ரிக்காவில் காந்திஜி நடத்திய சத்தியாக்ரகப் போராட்டம் பற்றியும் அவருக்குக் கிடைத்த வெற்றியைப் பற்றியும் செய்திகள் மக்களிடையே பரவி இருந்தன. எனவே அவரைக் காணும் ஆவலில் மக்கள் பெருங்கூட்டமாக வந்தார்கள்.

நகரங்களில் பல வரவேற்பு விழாக்களும் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அக்காலத்தில் பம்பாயில் வசித்து வந்த ஜெகாங்கீர் பெடிட் என்பவர் கோடீஸ்வரர். பார்ஸி வகுப்பைச் சேர்ந்த அந்த செல்வந்தர், தமது மாளிகையில் காந்திஜிக்கு விருந்தளித்தார். ஒளிமயமாக விளங்கிய இந்த மாளிகையின் பிரம்மான்டமாத்தையும் செல்வச் செழிப்பையும் கண்டு காந்திஜி வியந்தார்.

விருந்தில் கலந்துகொள்ள பம்பாய் நகரத்தின் பிரமுகர்கள் பலர் வந்தார்கள். ஆனால் காந்தியோ, பழைமையான கத்தியவார் பாணியில் வேட்டியணிந்து, நீண்ட அங்கியும் தலைப்பாகையும் தரித்திருந்தார். நாகரீக மனிதர்களுக்கு நடுவே பேணப் பழக மிகவும் தயக்கமாக இருந்தது காந்திஜக்கு. அந்த விருந்துக்கு வந்திருந்த ஸர் பிரோசிஷா மேதாவுடன் இருந்து. அவர் அன்பைப் பெற்றார்.

பின்பு குஜராத்திகளின் சங்கம் காந்திஜிக்கு ஒரு விருந்து அளித்து கெளரவித்தது. குஜராத் மாகாணத்தைச் சேர்ந்த பலர் இதில் கலந்துகொண்டார்கள்.

காந்திஜியைப் பேண அழைத்தார்கள்.

”இது குஜராத்தியர் சங்கம். வந்திருப்பவர்களில் பெரும்பாலோர் குஜராத்தியர். ஆகையால் நான் குஜாரத்தியில் பேணவே விரும்புகிறேன். தாய்மொழியை நாமே புறக்கணிக்கலாமா?” என்று கேட்டுவிட்டு தாய்மொழியான குஜராத்தியிலேயே பேசினார்.

ஆங்கிலத்தில் பேசுவதே கெளரவமானது என்று எண்ணியிருந்த பலருடைய எண்ணத்தை மாற்றி, தாய்மொழிப் பற்றை விதைத்தார்.

கோடீஸ்வரர் ஜெகாங்கீர் பெடிட் காந்தியின் தாய்மொழிப் பற்றைப் கண்டு மகிழ்ந்தார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 24/09/2008
மதிப்பீடுகள் : 194

http://www.eegarai.net

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை