ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குட்டிக்கோளின் மிரட்டல்!

View previous topic View next topic Go down

குட்டிக்கோளின் மிரட்டல்!

Post by DERAR BABU on Mon Apr 15, 2013 4:58 pm

2012, டிசம்பர் 22-ஆம் நாளோடு உலகத்தின் கதை முடியப் போகிறது' என்று பயமுறுத்திக் கொண்டிருந்த வாய்கள் அடைபட்டுவிட்டன. ஆனாலும் உலகம் இன்றோ நாளையோ அழிந்துவிடப் போகிறது என்ற பயத்தைப் பரப்ப ஏதாவது ஒரு காரணம், மனித இனம் தோன்றிய நாளிலிருந்தே கிடைத்து வருகிறது!

கடந்த பிப்ரவரியில், ஒரு பெரிய விண்கல் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகத் தெரிய வந்தபோது மக்கள் பயந்தனர்; இருந்தாலும் விஞ்ஞானிகள் அதன் ஓடுபாதையைச் சரியாகக் கணித்து, ""அது பூமிக்கும் நிலவுக்கும் இடையில் புகுந்து நேராகப் போய்விடும்'' என்று சொல்லித் தைரியமூட்டினார்கள். அந்த விண்கல்லும் அதேபோலத் தன் போக்கில் போய்விட்டது. ஆனால், பிப்ரவரி 16-ஆம் நாள் யாரும் எதிர்பார்த்திராத வகையில் ஒரு பெரிய விண்கல் ரஷியாவின் யூரல் பகுதிக்கு மேலாக வெடித்துச் சிதறியது. அது பிறப்பித்த அதிர்ச்சி அலைகள் ஏராளமான கட்டடங்களின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தன. சிதறிய கண்ணாடித் துண்டுகள் பாய்ந்து ஆயிரம் பேருக்கு மேல் காயம் ஏற்பட்டது.

அடுத்ததாக விஞ்ஞானிகளின் கவனம், "அப்போஃபிஸ்' என்ற குட்டிக் கோளின் (அஸ்டராய்டு) பால் திரும்பியிருக்கிறது. "நாசா' விஞ்ஞானிகள் அதை 2004-ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்கள். சூரிய மண்டலத்தில் செவ்வாயின் ஓடுபாதைக்கும் வியாழனின் ஓடுபாதைக்குமிடையில் உள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான பாறைகள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை ஒன்று முதல் 500 மைல் வரை அகல நீளமுள்ளவை. அவை உருவான விதம் பற்றிப் பல்வேறு ஊகங்கள் உலா வருகின்றன. ஒரு பெரிய கோள், ஏதோ ஒரு காரணத்தால் உடைந்து பல அளவுகளிலான துண்டுகளாகி அது ஓடிய பாதையிலேயே தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன என்று சிலர் ஊகிக்கிறார்கள்.

சூரிய மண்டலம் உருவானபோது அந்தப் பகுதியில் உருவான பாறைகள் ஏதோ காரணமாக ஒன்று கூடி ஒரு கோளாக உருவாக முடியாமல் போனதால் அவை ஒரு பாறைக்கூட்டமாகவே நீடித்துவிட்டன எனச் சிலர் கருதுகிறார்கள். அவை சுற்றிவரும் பாதை "குட்டிக்கோள் பட்டை' என்று குறிப்பிடப்படுகிறது. அந்தப் பாறைகளில் ஒன்றுதான் இந்த அப்போஃபிஸ்.

அது ஏதோ காரணத்தால் தன் ஓடுபாதையிலிருந்து மெல்ல மெல்ல விலகி வந்தபோது "நாசா' விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்தது. 2004 முதல் அதன் ஓடுபாதையை ஒளியியல் மற்றும் ராடார் சாதனங்களின் மூலம் அவர்கள் கண்காணித்து வருகிறார்கள். அது 2029-ஆம் ஆண்டிலும் 2036-ஆம் ஆண்டிலும் பூமியை நெருங்கி வந்து கடந்து செல்லப்போகிறது என்று அவர்கள் கணித்தனர். அது 2029-ஆம் ஆண்டில் பூமியிலிருந்து 31,900 கிலோமீட்டர் உயரத்தில் கடந்து சென்றுவிடும் என்று உறுதி செய்தனர். ஆனாலும் அந்தச் சமயத்தில் அதன் மேல் பூமி செலுத்தப்போகிற நிறையீர்ப்பு விசை காரணமாக அதன் ஒடுபாதை வளைந்து 2068-ஆம் ஆண்டில் அது திரும்பி வரும்போது பூமியை வந்து மோதக்கூடிய வாய்ப்புகள் கணிசமாக உள்ளன என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வானியல் வல்லுநர்கள் கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பலவிதமான தற்காப்பு உத்திகள் திட்டமிடப்படுகின்றன. அவற்றில் சில அறிவியல் புனைகதைகளில் விவரிக்கப்படுகிற கற்பனைகளைப்போல விசித்திரமாகத் தோன்றுகின்றன. ஆனால், கற்பனைகள் பல சமயங்களில் நிஜமாகியிருக்கின்றன. அறிவியல் புனைகதைகளை எழுதுகிறவர்கள் கற்பனைத் திறனும் சிந்தனைத் திறனும் கொண்ட விஞ்ஞானிகள்தான்.

ஆர்தர் கிளார்க் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. 1945-ஆம் ஆண்டிலேயே அவர், பூமியிலிருந்து தக்க உயரத்திலும் தக்க இடத்திலும் மூன்று செயற்கை நிலவுகளை நிறுத்தி அவற்றை ரேடியோ மற்றும் தொலைக்காட்சி அஞ்சல் நிலையங்களாகப் பணியாற்றச் செய்யலாம் என்று எழுதினார். அவை பூமியின் வளைவினாலும் மேடு பள்ளங்களினாலும் மின்காந்த அலைகள் தடை செய்யப்படுவதைத் தவிர்த்து உலகின் எல்லாப் பகுதிகளுடனும் மின்னலை செய்தித் தொடர்புகளை ஏற்படுத்த உதவும் என்று அவர் விவரித்தார். இன்று அவருடைய கற்பனை செயல்வடிவம் பெற்று வானில் பல நூறு செய்தித்தொடர்பு நிலவுகள் பூமியிலிருந்து பார்க்கிறபோது அசையாமல் ஒரேயிடத்தில் நின்று கொண்டிருப்பதைப்போல பொருத்தப்பட்டிருக்கின்றன. அவற்றின் உதவியால் உலகின் பல இடங்களில் நிகழும் சம்பவங்களை நம் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்தவாறே தொலைக்காட்சிப் பெட்டிகளில் காண முடிகிறது.

குட்டிக்கோள்களின் பயணப் பாதைகளை இடைவிடாமல் கண்காணிக்கிற வகையில் பல நாடுகள் செயற்கை நிலவுகளையும் ஒளியியல் மற்றும் ரேடார் தொலை நோக்கிகளையும் இயக்கி வருகின்றன. சர்வதேச வானவியல் கூட்டமைப்பின் வருடாந்திரக் கூட்டங்களில் விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளையும் தரவுகளையும் கருத்துகளையும் பரிமாறிக் கொள்கிறார்கள். கருங்கடல் முதல் பசிபிக் கடல் வரை நீண்டுள்ள ரஷியக் கூட்டமைப்பு நாடுகள் விண்கற்களும் குட்டிக்கோள்களும் தமது புவியியல் பரப்பில் வந்து விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாயிருப்பதாகக் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் அஞ்சுகின்றன. ரஷியா மற்றும் அதன் தோழமை நாடுகளைச் சேர்ந்த வானவியல் வல்லுநர்கள் கூடுதலான அக்கறையுடன் வானத்தைக் கண்காணித்து வருகிறார்கள்.

சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிற தெருவில் நாம் நடந்து போகும்போது ஒரு பந்து நம்மை நோக்கி வருவதாகத் தெரிந்தால் சட்டென்று நகர்ந்து கொள்கிற மாதிரி, ஒரு குட்டிக் கோள் பூமியை நோக்கி விரைந்து வந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தால் அதன் பாதையிலிருந்து பூமியைக் கொஞ்சம் விலக்கி நகர்த்திவிட முயற்சி செய்ய வேண்டும் என்று ஒரு கருத்தரங்கில் ஓர் ஆய்வர் சொன்னபோது யாரும் கேலியாகச் சிரிக்காமல் அவருடைய பேச்சைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆர்க்கிமிடீஸ் கூடத்தான், ""கால் பதித்து நிற்க ஓரிடம் கிடைக்குமானால் அங்கு நின்றவாறு ஒரு நெம்புகோலின் உதவியால் பூமியையே அசைத்துத் தள்ளிவிடத் தன்னால் முடியுமென்று'' மார்தட்டியிருக்கிறார். பூமி ஒரு குறிப்பிட்ட ஓடுபாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது.

பூமிப்பரப்பிலிருந்து சரியான திசையில் பெரும் நிறையுள்ள பொருளைப் பெரும் வேகத்துடன் விண்வெளியில் செலுத்தினால் நியூட்டனின் மூன்றாவது விதியின் பிரகாரம் பூமி அதற்கு எதிர்த்திசையில் நகரும் என்று ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு செய்ய நிலத்துக்கு அடியில் ஏராளமான அணுகுண்டுகளைப் புதைத்து அவற்றை ஒரே சமயத்தில் வெடிக்க வைக்க வேண்டும். ஆனால், அணுகுண்டுகளை நம்ப முடியாது.

தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாகக் குட்டிக்கோள் மோதுவதால் ஏற்படக்கூடிய சேதங்களைவிட அதிகமான சேதங்களை அணுகுண்டுகள் ஏற்படுத்திவிடக் கூடும். அத்துடன் சுற்றுச்சூழலும் பயங்கரமாகப் பாதிக்கப்படும். இக்காரணங்களால் அந்த யோசனை கைவிடப்பட்டது.

சந்திரனை நகர்த்தினால் பூமியும் நகரும் என்று ஒரு யோசனை வெளியிடப்பட்டிருக்கிறது. பூமியும் சந்திரனும் ஒன்றன் மேலொன்று நிறையீர்ப்பு விசையைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. கயிற்றின் முனையில் கட்டப்பட்ட கல்லைப் போலச் சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது. எனவே சந்திரனை நகர்த்தினால் பூமியும் கூடவே நகரும். சந்திரனின் தரைப்பரப்பில் அணுகுண்டுகளைப் புதைத்து அதன் நிறையில் 0.5 சதவீத அளவுள்ள பொருள் விநாடிக்கு இரண்டு கிலோமீட்டர் வேகத்தில் விண்வெளியில் பீறிட்டுப் பாயும் வகையில் வெடிக்கச் செய்தால் சந்திரன் அதற்கு எதிரான திசையில் நகரும். அதன் சுற்றுப்பாதை மாறிப் பூமியைச் சுண்டியிழுத்துப் பூமி தன் பாதையிலிருந்து பத்தாயிரம் கிலோ மீட்டர் வரை விலகிப் போகும் என்று ரஷிய விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆனால், அதன் காரணமாகப் பூமியில் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றித் தெளிவான சித்திரம் வரையப்படவில்லை.

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிற குட்டிக்கோள் தொலைவிலிருக்கும்போதே அணுகுண்டு அல்லது ஹைட்ரஜன் குண்டுகளை ஏவுகணைகளில் ஏற்றியனுப்பி அதைத் தாக்கியழித்து விடலாம் என்று ஒரு யோசனை வெளியிடப்பட்டிருக்கிறது. சிறிய குட்டிக்கோள்களுக்கு அது ஒத்துவரலாம். பல கிலோமீட்டர் நீள அகலமுள்ள பெரிய குட்டிக்கோள்களை அவ்வாறு அழிக்க முயல்வது வெற்றியடையும் என்பது நிச்சயமில்லை. ஒருவேளை அது பல துண்டுகளாக உடைந்து அவை பூமியில் வந்து விழுந்தால் பேராபத்து விளையும். ஒரு பெரிய விண்வெளிக் கலத்தில் நிபுணர்களை வைத்து அனுப்பி பெரிய குட்டிக்கோள் ஒன்றில் இறக்கிச் சரியான முறையில் துளைகளிட்டு வெடிகுண்டுகளைப் பொருத்தி வெடிக்கச்செய்து அதைத் தூள் தூளாக்கி விடுவதாக விவரிக்கும் ஓர் அமெரிக்கத் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியாயிற்று. அது ஒர் அறிவியல் புனைகதை என்றாலும் அதுபோன்ற ஓர் உத்தியும் பரிசீலனையில் உள்ளது.

அண்மையில் ஓர் ஆய்வர் குழு குட்டிக்கோள்கள் மற்றும் விண்கற்களின் பரப்பில் ஒளியைப் பிரதிபலிக்கும் ரசாயனங்கள் அல்லது சாயங்களைப் பூசிவிட்டால் சூரியக்கதிர்களின் அழுத்தம் காரணமாக அவற்றின் பயண திசை மாறும் என்று கருத்து வெளியிட்டிருக்கிறது. அதற்கான தொழில்நுட்ப உத்திகளை வடிவமைக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

தினமணி
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: குட்டிக்கோளின் மிரட்டல்!

Post by balakarthik on Mon Apr 15, 2013 5:07 pm

இன்றைய சூழலுக்கு இந்த உலகம் இருப்பதைவிட இறப்பதே மேல்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குட்டிக்கோளின் மிரட்டல்!

Post by யினியவன் on Mon Apr 15, 2013 5:15 pm

@balakarthik wrote:இன்றைய சூழலுக்கு இந்த உலகம் இருப்பதைவிட இறப்பதே மேல்
அரசன் கொல்றது மாதிரி!!!avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குட்டிக்கோளின் மிரட்டல்!

Post by SajeevJino on Tue Apr 16, 2013 7:25 am

அந்த கிம் பையன் கூட அமெரிக்க மேல தாக்குதல் நடத்த போறேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டான்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: குட்டிக்கோளின் மிரட்டல்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum