ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பக்தி கதைகள்

View previous topic View next topic Go down

பக்தி கதைகள்

Post by balakarthik on Sat Apr 13, 2013 6:16 pm

இலக்கணப் புலிகள்பேசுவதை உச்சரிப்பு பிறழாமல் கேட்க வேண்டும். தவறாகக் கேட்டு விட்டு ஒழுங்கான பதிலை எதிர்பார்த்தால் அதெப்படி கிடைக்கும்? பதஞ்சலி முனிவரை உங்களுக்கு தெரிந்திருக்கும். இவர் ஆதிசேஷனின் அம்சம். பாற்கடலில் பெருமாளைச் சுமந்த இவர், ஒருமுறை பெருமாளின் பாரம் தாங்காமல் கஷ்டப்பட்டார். பெருமாளே! திடீரென ஏன் பாரம் கூடியது? சிவனின் நடனம் கண்டேன், என்னமாய் ஆடுகிறார், உடலே பூரித்து விட்டது. அதனால் எடை கூடிவிட்டது,. அப்படியா! அப்படி ஒரு ஒப்பற்ற நடனத்தை நானும் பார்க்க வேண்டுமே! சரி, தில்லைக்கு போ, பார்க்கலாம்,. இப்படியாக பூலோகம் வந்தவர் பதஞ்சலி. மனித முகம், பாம்பு உடல். இவர் இலக்கணத்தில் வல்லவர். இவரைப் போலவே, பாணினி என்பவரும் இலக்கண வித்தகர். ஒருமுறை, பாணினி குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். பதஞ்சலி முகத்தை தண்ணீரின் மேல் வைத்தபடி பாம்பு உடலுடன் மிதந்து வந்தார்.

அந்த விசித்திரப்பிறவியைப் பார்த்துகோர்பவா? என்றார். அந்தச் சொல்லில் இலக்கணப் பிழை இருந்தது. அதனால், பதஞ்சலி சற்று கோபத்துடன், ஸபோஹம் என்றார். பதிலிலும் இலக்கணப்பிழை இருந்ததால், பாணினி முகத்தை சற்று கடுமையாக்கிக் கொண்டு, ரேதா: குத்ர கதா: என்றார். இதன் பொருளைப் பார்க்கலாம். கோர் பவா என்றால் நீங்கள் யார்? என்று பொருள். அதற்கு கோ பவா என்பது தான் சரியான உச்சரிப்பு. ஸபோஹம் என்றால் பாம்பு. அதற்கு ஸர்ப்போஹம் என்று தான் சொல்லியிருக்க வேண்டும். ரேதா குத்ர கதா என்றால், ஒரு எழுத்தை விட்டு விட்டு ஏன் பதில் சொன்னீர் என்பதாகும். பாணினி ர் என்ற எழுத்தை விட்டுக் கேட்டதால், பதஞ்சலியும் எரிச்சலில் ர் என்பதை எடுத்துவிட்டு பதில் சொன்னார். இருவருமே இலக்கணப் புலிகள் தான். ஆனாலும், உச்சரிப்பால் பிரச்னை வந்தது. உச்சரிப்பு சரியாக இருந்தால் தான் பேச்சு எடுபடும்.. புரிகிறதா!

நன்றி :- தினமலர்


Last edited by balakarthik on Sat Apr 13, 2013 6:28 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பக்தி கதைகள்

Post by balakarthik on Sat Apr 13, 2013 6:21 pm

இரண்டு ராமரா! வாய்ப்பில்லையே!அசோகவனத்தில் மரத்தடியில் சாய்ந்திருந்தாள் சீதை. அவள் மனம்ராமனையே வட்டமடித்துக் கொண்டிருந்தது. அந்தநேரம் குளவி ஒன்றுஅவளருகே ரீங்காரமிட்டபடி பறந்து வந்தது. தான் கட்டிய மண் கூட்டுக்குள் ஒரு புழுவை வைத்து விட்டு சுற்றி சுற்றி வந்தது. மண்ணில் சிக்கிய புழு நகர முடியாமல் தவித்தது. சீதையால் இதை சகிக்க முடியவில்லை. அருகில்இருந்த விபீஷணனின் மகள் திரிசடையிடம்,ஏன் இந்த குளவி இப்படி செய்கிறது?, என்றாள். அவளோ அலட்டிக் கொள்ளாமல்குளவின்னா அப்படித் தானம்மா செய்யும்.புழுவைக் கொட்டி கொட்டி வேதனைப்படுத்தும். இதை சிந்தித்தபடியே, புழு குளவியாக மாறிவிடும். இதில் ஒன்றும்புதுமையில்லை, என்று விளக்கம் தந்தாள்.

சீதை அழத்தொடங்கினாள். இதென்ன வம்பாப் போச்சு!, என்று திரிசடை பதறினாள். கண்ணைத் துடைத்தபடி சீதை, நானும் இரவும்பகலும் என் கணவர்ராமனையே சிந்திக்கிறேன். புழு குளவியாக மாறுவது போல நானும் ராமனாக மாறிவிட்டால், இரண்டு ராமர் அல்லவா இருப்போம்!என்று வருந்தினாள். ஒன்றும் கவலையே படாதீர்கள். ராமனாகமாறுவதும் நன்மைக்குத் தான். ராமரும் உங்களையே சதா மனதில் அசை போட்டபடியே உங்களுக்காக சீதையாகிவிடுவார். அப்போதும்ராமருக்காக ஒரு சீதைதானிருப்பாள். அப்போதும் மணமொத்த தம்பதியாகத் தான் இருப்பீர்கள், என்று அவள் போக்கிலேயே சென்று ஆறுதல் அளித்தாள் திரிசடை.


நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பக்தி கதைகள்

Post by யினியவன் on Sat Apr 13, 2013 6:21 pm

சூப்பருங்க

ஆக டாஸ்மாக் போயிட்டு வந்தால் கம்முனு இருக்கணும் வீட்ல - சும்மா இல்லாம உளறினா - வீட்டு இலக்கணம், இலக்கியம் எல்லாம் கெட்டு போகும்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பக்தி கதைகள்

Post by balakarthik on Sat Apr 13, 2013 6:25 pm

@யினியவன் wrote: சூப்பருங்க

ஆக டாஸ்மாக் போயிட்டு வந்தால் கம்முனு இருக்கணும் வீட்ல - சும்மா இல்லாம உளறினா - வீட்டு இலக்கணம், இலக்கியம் எல்லாம் கெட்டு போகும்.
இலக்கணம் கெட்டா பரவா இல்லே இல்லத்தரசி கோபப்பட்டு அப்ப்லாகுழவியை வைத்து முகத்தை பெத்தா ரொம்ப கஷ்டம்த்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பக்தி கதைகள்

Post by balakarthik on Sat Apr 13, 2013 6:26 pm

குத்திக்காட்டி பேசாதீர்!சிலருக்கு வறுமை, சிலருக்கு ஊனம், இன்னும் பலருக்கு எத்தனையோ விதத்தில் குறைகள்... இவை அவரவர் விதிப்படி விளைபவை. இவர்கள் ஏற்கனவே, தங்கள் குறைபாட்டுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் அந்த குறைபாடுகளை குத்திக்காட்டுவது என்பது பெரும் விபரீதத்திற்கு வழிவகுத்து விடும். பாஞ்சால தேச மன்னன் துருபதன் திட்டத்துய்மன். இவனது மகள் திரவுபதி. இவளைத் திருமணம் செய்து கொடுக்க சுயம்வரம் அறிவித்தான். விதிவசத்தால், அவள் பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியாக வேண்டியதாயிற்று. பாண்டவர்களின் தந்தை பாண்டு இறந்ததும், பெரியப்பா திருதராஷ்டிரன் தம்பி பிள்ளை களுக்குரிய ராஜ்யத்தைப் பிரித்துக் கொடுத்தார். அவர் பார்வையற்றவர். ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்ட பாண்டவர்கள், அங்கே அழகிய மாளிகை எழுப்ப முடிவெடுத்தனர். கண்ணனின் ஆசியுடனும், இந்திரனின் ஆலோசனையுடனும், தேவலோக சிற்பி விஸ்வகர்மா அரண்மனையை அமைத்துக் கொடுத்தார்.


அதற்கு தேவையான பொருட்களை பல இடங்களில் இருந்தும் வரவழைத்துக் கொடுத்தார் பாண்டவர்களில் மூத்தவரான தர்மர். அந்தக்கட்டடம் பொன்னாலும் மணியாலும் இழைக்கப்பட்டது. பளிங்குத்தரை அமைக்கப்பட்டது. அது தரையா அல்லது தண்ணீரா என்று தெரியாத அளவுக்கு பளபளப்பு இருந்தது. அந்த அரண்மனை அமைந்த இடத்திற்கு இந்திரபிரஸ்தம் (இன்றைய டில்லி) என்று பெயரிட்டார் தர்மர். அரண்மனை கிரகப் பிரவேசத்திற்கு, தன் தம்பிமார்களான கவுரவர்களையும் அழைத்திருந்தார் தர்மர். அவர்களில் மூத்தவனான துரியோதனன், பளிங்குத்தரையில் கால் வைக்க முயன்றபோது, அதன் பளபளப்பு தண்ணீர் போல் தெரிந்ததால், தண்ணீர் தான் கிடக்கிறதோ என்று தன் ஆடையை உயர்த்தி நடந்தான். கால் வைத்த பின் தான் அது தரை என்று தெரிந்தது.அதைப் பார்த்த திரவுபதி சிரித்து விட்டாள். ஏதோமைத்துனர் என்ற உரிமையில், விளையாட்டாகக் கருத்து சொல்லியிருந்தால் கூட, மைத்துனி கேலி செய்கிறாள் என்று துரியோதனின் மனம் சங்கடப்பட்டிருக்காது. ஆனால் அவள், உன் தந்தை தான் குருடு என நினைத்திருந்தேன். நீயும் அப்படித்தானோ! என மனம் புண்படும்படியாக பேசிவிட்டாள்.

இதன் மூலம் மைத்துனனை மட்டுமல்ல, பெரிய மாமனாரின் ஊனத்தையும் குறைத்துப் பேசி விட்டாள். பொம்பளை சிரித்தால் போச்சு என்பது எக்காலத்துக்கும் பொருந்தும் பழமொழி. துரியோதனன் இதை மனதில் வைத்துக் கொண்டான். அவனும் இந்திரபிரஸ்தத்துக்கு இணையான அரண்மனை கட்டினான். அப்பகுதி அஸ்தினாபுரம் எனப்பட்டது. கிரகப்பிரவேசத்திற்கு பாண்டவர்களை அழைத்தான். கவுரவர்களின் தாய்மாமன் சகுனி, நேரப் போக்கிற்காக சொக்கட்டான் ஆடுவோமே என்று பாண்டவர்களை அழைத்தான். அவனது வலையில் தர்மர் விழுந்தார். நாடு, நகரம் மட்டுமல்ல, திரவுபதியையும் இழந்தார். எல்லாரும் கவுரவர்களுக்கு அடிமை யாயினர். துர்க்குணம் வாய்ந்த துரியோதனன், அடிமைப் பெண்ணான உனக்கு ஆடை எதற்கடி? என்று கேட்டுதிரவுபதியின் துயிலுரிய ஆணையிட்டான். அவன் அவ்வாறு செய்ததும் தவறே. கோபத்தில் கவுரவர்களின் நாட்டையும், திரவுபதியையும் பறித்த அவன், சகோதரர்களின் மனைவி என்றும் பாராமல் இவ்வாறான தீய செயல் செய்தது பாண்டவர்கள் மனதில் கோபக் கனலை எழுப்பியது. ஆக, இரு தரப்பு கோபமும் குரு÷க்ஷத்திரத்தில் யுத்தமாய் வெடித்தது. கவுரவர்கள் அழிந்தனர். இதுபோன்ற தேவையற்ற சண்டைக்கு காரணமாய் இருந்தது என்ன? பிறரது குறையைப் பெரிதுபடுத்தி மனம் புண்படும்படி பேசியது தான்! இனியும், பிறர் குறையைக் குத்திக் காட்ட வேண்டாமே!


நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பக்தி கதைகள்

Post by balakarthik on Sat Apr 13, 2013 6:32 pm

அவனை மட்டும் நம்புவோம்!ஒரு சாமியாரிடம் மனநிம்மதிக்கு வழிகேட்டு ஏராளமான மக்கள் ஆலோசனை கேட்டு வந்தனர். அவர்களின் வரிசை மிக நீண்டு இருந்தது. தன்னை தேடி வருபவர்கள் வெயிலிலும், மழையிலும் கஷ்டப்படுகிறார்ளே! இவர்கள் நிற்க வசதியாக கூடாரம் அமைக்கலாமே என்று சாமியார் நினைத்தார். ஆனால், அதற்கான பணவசதி இல்லை. அந்நாட்டு மன்னரிடம், அவர் உதவி கேட்பதற்காக சென்றார். அப்போது மன்னர் கடவுளை வணங்கிக் கொண்டிருந்தார். பூஜையறைக்கு வெளியே காத்திருந்த சாமியாரின் காதில், மன்னரின் பிரார்த்தனை கேட்டது. இறைவா! நீ எனக்கு இன்னும் ராஜ்யங்களைக் கொடு, மேலும் செல்வத்தை வாரி வழங்கு. நவமணிகளும், தங்கமும் மேலும் குவிய வேண்டும், என்று அவர் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.

சாமியார் கிளம்பவும், மன்னர் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது. ஐயா! ஏன் கிளம்பி விட்டீர்கள்! என்னைக் காண வந்துவிட்டு, ஏதும் பேசாமல் திரும்பக் காரணம் என்ன? என்றார் மன்னர். மாமன்னரே! நான் என்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்க யாசகம் கேட்டு வந்தேன். நீங்களோ என்னை விட பெரிய பிச்சைக்காரர் போலும்! கடவுளிடம் என்னென்னவோ யாசகம் கேட்டுக் கொண்டிருந்தது காதில் விழுந்த. ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனிடம் யாசகம் கேட்பது தவறல்லவா! நானும், உங்களைப் போல கடவுளிடமே கேட்டுக் கொள்கிறேன், என சொல்லிவிட்டு நிற்காமல் போய்விட்டார். அதிர்ந்துவிட்டார் மன்னர். இந்த போக்கிரி உலகத்தில் மனிதர்களை நம்ப முடியவில்லை. கடவுளை நம்பி இறங்கினால் எதிலும் வெற்றி பெறலாம். இதுவே, இந்த தமிழ் புத்தாண்டின் சிந்தனையாக அமையட்டும்.


நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பக்தி கதைகள்

Post by balakarthik on Sat Apr 13, 2013 6:38 pm

ஒரே ஒரு பூ போதும்!பழநி முருகன் கோயிலுக்கு வந்த பணக்கட்டு படத்தை பேப்பரில் பார்த்தாயா? என்று நண்பரிடம் கேட்டார் ஒருவர்.ஆமாம், பார்த்தேன்! ஆனால், ஏனோ தெரியலை! அந்த முருகன் எனக்கு இப்படியெல் லாம் காணிக்கை போடுமளவு வசதியைத் தரலே! ஏன்...அந்த பழநியையே இன்னும் பார்த்தது இல்லே! என்று விரக்தியாகச் சொன்னார் நண்பர்.கவலை வேண்டாம் நண்பரே! ஒரு கதையைக் கேளுங்க! என்றவர் ஆரம்பித்தார்.சிவனுக்கு பசுபதி என்ற பெயர் இருப்பதைப் புத்தகத்தில் படித்தான் ஒருவன். ஐயோ! என்னிடம் மட்டும் பணமிருந்தால், உள்ளூர் சிவன் கோயிலுக்கு ஒரு பசு வாங்கி காணிக்கையளிப்பேனே! என்று நினைத்துக் கொண்டான்.அன்றிரவு கனவில் சிவன் வந்தார்.பக்தா! பசு காணிக்கை தர உன்னிடம் பணமில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால், உன்னிடம் பக்தி என்ற பசு இருக்கிறது.

அந்த பசுவை எனக்குத் தந்தால் அளவற்ற ஆனந்தம் உனக்கு உண்டாகும். அது மீண்டும் மீண்டும் பாலைச் சுரந்து கொண்டே இருக்கும். அதை எனது திருவடிகளாகிய கொட்டிலில் கட்டிப் போட்டு விடு. அவ்வாறு செய்தால் நல்லொழுக்கம் என்ற கன்றுக்குட்டியை அது உனக்குத் தரும், எனறார்.பக்தன் திடுக்கிட்டு விழித்தான்.சிவனே! தங்கள் பொன்மொழியில் இருந்து ஒன்றைக் கற்றுக்கொண்டேன். பணத்தை கோடி கோடியாக உண்டியலில் கொட்ட வேண்டாம். மிருகங்களையோ, பாத்திரங்களையோ, ஆடம்பரமான பூஜை பொருட்களையோ உங்களுக்குத் தர வேண்டாம். ஒரு பக்தன் மனத்தூய்மையுடன், எனக்கு ஒரு இலையையோ, ஒரு பூவையோ, ஒரு பழத்தையோ...அதுவும் முடியாவிட்டால் சிறிது நீரையோ தந்தால் கூட போதும். நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன் என்று கிருஷ்ணர் கீதையில் சொன்னது போல, பசுபதியாகிய உங்களுக்கு பக்தி என்னும் பசுவைக் காணிக்கையாக அளிக்கிறேன், என்று பிரார்த்தித்தான்.மனநிம்மதியுடன் உறங்க ஆரம்பித்தான்

நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பக்தி கதைகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum