புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரைக் கதிர்... Poll_c10திரைக் கதிர்... Poll_m10திரைக் கதிர்... Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
திரைக் கதிர்... Poll_c10திரைக் கதிர்... Poll_m10திரைக் கதிர்... Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
திரைக் கதிர்... Poll_c10திரைக் கதிர்... Poll_m10திரைக் கதிர்... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திரைக் கதிர்... Poll_c10திரைக் கதிர்... Poll_m10திரைக் கதிர்... Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
திரைக் கதிர்... Poll_c10திரைக் கதிர்... Poll_m10திரைக் கதிர்... Poll_c10 
1 Post - 1%
Kavithas
திரைக் கதிர்... Poll_c10திரைக் கதிர்... Poll_m10திரைக் கதிர்... Poll_c10 
1 Post - 1%
bala_t
திரைக் கதிர்... Poll_c10திரைக் கதிர்... Poll_m10திரைக் கதிர்... Poll_c10 
1 Post - 1%
prajai
திரைக் கதிர்... Poll_c10திரைக் கதிர்... Poll_m10திரைக் கதிர்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைக் கதிர்... Poll_c10திரைக் கதிர்... Poll_m10திரைக் கதிர்... Poll_c10 
280 Posts - 42%
heezulia
திரைக் கதிர்... Poll_c10திரைக் கதிர்... Poll_m10திரைக் கதிர்... Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
திரைக் கதிர்... Poll_c10திரைக் கதிர்... Poll_m10திரைக் கதிர்... Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
திரைக் கதிர்... Poll_c10திரைக் கதிர்... Poll_m10திரைக் கதிர்... Poll_c10 
25 Posts - 4%
sugumaran
திரைக் கதிர்... Poll_c10திரைக் கதிர்... Poll_m10திரைக் கதிர்... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திரைக் கதிர்... Poll_c10திரைக் கதிர்... Poll_m10திரைக் கதிர்... Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
திரைக் கதிர்... Poll_c10திரைக் கதிர்... Poll_m10திரைக் கதிர்... Poll_c10 
5 Posts - 1%
prajai
திரைக் கதிர்... Poll_c10திரைக் கதிர்... Poll_m10திரைக் கதிர்... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திரைக் கதிர்... Poll_c10திரைக் கதிர்... Poll_m10திரைக் கதிர்... Poll_c10 
4 Posts - 1%
manikavi
திரைக் கதிர்... Poll_c10திரைக் கதிர்... Poll_m10திரைக் கதிர்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைக் கதிர்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 31, 2013 11:47 am

http://media.dinamani.com/article1524309.ece/ALTERNATES/w460/k7.jpg
'வீரன் முத்துராக்கு'-லியாஸ்ரீ
-
மலையாளத்திலிருந்து தமிழில் ரீமேக் ஆகும் படங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை மற்றொருவருக்கு பொருத்த நடக்கும் சாகசப் பயணத்தை மையமாகக் கொண்டு, மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற "டிராபிக்',"சென்னையில் ஒரு நாள்' என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. மூன்று தேசிய விருதுகளை பெற்ற "உஸ்தாக் ஓட்டல்' விரைவில் ரீமேக்காகஇருக்கிறது. இதையடுத்து மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற "சாப்பா குரிச்சி', "புலிவால்' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. விமல், பிரசன்னா, அனன்யா, ப்ரணிதா நடிக்கின்றனர்."கண்ணோடு கண்ணாக' படத்தை இயக்கிய மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். என்.ஆர்.ரஹ்நந்தன் இசையமைக்கிறார். செல்போனை சுற்றி நடக்கும் கதையாக இதுஉருவாகிறது. ராதிகா சரத்குமாரின் ஐ ப்ரேம்ஸþடன் இணைந்து இப்படத்தை மலையாள தயாரிப்பாளர் லிஸ்பன் ஸ்டீபன் தமிழில் தயாரிக்கிறார்.
-
தன்னைக் காதலிக்கும் கோபிசந்திடம் மூன்று பேரை கொல்லச் சொல்கிறார் தீக்ஷா சேத். காதலியின் வார்த்தையைகேட்டு, அந்த மூவரையும் கொல்கிறார் கோபிசந்த். அந்தமூவரும் யார்? எதற்காக அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதை திரில்லர் ப்ளஸ் ஆக்ஷன் கலந்து, தெலுங்கில் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் "வான்டட்'. இப்படம் தமிழில் "வேங்கை புலி' என்ற பெயரில் டப் ஆகிறது. லஷ்மி லோட்டஸ் மூவி மேக்கர்ஸ் எஸ்.ஜி.ஆர்.பிரசாத், வேல் ஃபிலிம்ஸ் கோவை வேல்முருகன் தயாரிக்கின்றனர். கோபிசந்த், தீக்ஷா சேத், பிரகாஷ்ராஜ், நாசர், பிரம்மானந்தம் நடிக்கின்றனர். ஏப்ரலில் படம் வெளியாகிறது.
-
வாரிசுகள் வரிசையில் சேருகிறார் இயக்குநர் வசந்தின் இரண்டாவது மகன் ரித்விக் வருண். வசந்த் தற்போது இயக்கும் "மூன்று பேர் மூன்று காதல்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ள இவர், விரைவில் ஹீரோவாகவும் அவதாரம் எடுக்க இருக்கிறார். இது தொடர்பாக வசந்த் கூறும் போது, ""ஆதித்யா, ரித்விக் வருண் என எனக்கு இரண்டு மகன்கள். சினிமா ஆசையில் சுற்றி வந்த ரித்விக் அருண், முறைப்படி சண்டை கற்றான். நடனம் கற்றான். சினிமாவுக்குத் தேவையான அனைத்து வகையான பயிற்சிகளையும் முறையாகப் பெற்றான். அவனது ஆசையை அறிந்து என் இயக்கத்திலேயே அறிமுகப்படுத்தி இருக்கிறேன். கடுமையாக உழைத்து நல்ல பெயரை எடுப்பது வருண் கையில்தான் இருக்கிறது'' என்றார் இயக்குநர் வசந்த்.
-
தமிழ் படங்களில் நடித்துக்கொண்டிருந்த அசின், "கஜினி' மூலம் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார். இதுவரை அவர் நடித்த 6 ஹிந்தி படங்களில் 5 படங்கள்ஒவ்வொன்றும் ரூ. 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. பாலிவுட் பத்திரிகைகள் அசினை ""100 கோடிகளின் ராணி'' என குறிப்பிடுகின்றன. ஆனால் அசின் சமீபத்தில் கொடுத்திருக்கும் ஸ்டேட்மெண்ட் வேறு மாதிரியானது. ""இனி மேல் நடிப்பது பற்றி தெளிவான முடிவு எடுத்திருக்கிறேன். இந்த ஆண்டில் குறைவான படங்களையே ஒப்புக் கொள்வேன். பாக்ஸ் ஆபிஸ் ஹிட், 100 கோடி வசூல் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டேன். இனி அடுத்தக் கட்டமாக நடிப்பில் முன்னேற்றமான மாற்றங்களை எதிர்பார்க்கிறேன். அதற்கானமாற்றங்களையும் செய்திருக்கிறேன். இனி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களை மட்டுமே எதிர்பார்க்கிறேன். இப்படியொரு முடிவை எடுப்பதற்கு இதுதான் சரியான தருணம். ஏனென்றால் சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் சுதந்திரம் என்னிடம் உள்ளது.''
-
"மலையூர் மம்பட்டியான்',"சீவலப்பேரி பாண்டி' உள்ளிட்ட படங்களின் வரிசையில் தனி மனித வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் படம் "வீரன் முத்து ராக்கு'. 40-களில் தென் மாவட்டங்களில் வாழ்ந்த தனி மனிதனின் சாகச வாழ்வை இன்றைய காலக் கட்டத்துக்கு ஏற்ப கற்பனை கலந்து இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். முத்துராஜூ என்ற சிலம்பாட்ட வீரனுக்கும், ராக்கு என்ற பெண்ணுக்கும் ஏற்படும் காதல், இரண்டு கிராமங்களுக்கிடையான ஆண்டாண்டு கால பகையை எப்படிதீர்க்கிறது என்பதுதான் திரைக்கதை."வெளுத்துக்கட்டு' படத்தில்நடித்த கதிர், லியாஸ்ரீ, சண்முகராஜன், "ஆடுகளம்' நரேன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்க, படத்தை எழுதி இயக்குகிறார் ராஜசேகர்.
-
மீண்டும் ஓய்வுக்கு செல்கிறார் அஜித்.
ஃபார்முலா ரேஸ், ஷூட்டிங் காயம் என இதுவரை 14 ஆபரேஷன்களை முடித்துள்ள அஜித்துக்கு, மீண்டும் காயம். விஷ்ணுவர்தன் இயக்கும் "வலை' படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்தது. அப்போது காரின் முன்பகுதியில் தொங்கியபடி அஜித் சண்டை போடும் காட்சி படமாக்கப்பட்டது. நிலை தடுமாறிய அவர் ஓடும் காரின்முன் பகுதியில் இடறி விழ இருந்தார். கால் மட்டும் சக்கரத்தில் சிக்கி ரத்தம் கொட்டியது. இதில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்கள். பரிசோதித்த டாக்டர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறினார்கள். இதனால் ஆபரேஷன் செய்து கொள்வதாக கூறியுள்ளார் அஜித். "வலை' படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து "சிறுத்தை' சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். அக்டோபர் மாதம் 21-ம் தேதி ஆபரேஷன் நடக்க இருக்கிறது. இதன் பிறகு நான்கு மாதம் ஓய்வில்இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Apr 08, 2013 8:55 am

http://media.dinamani.com/article1533596.ece/ALTERNATES/w460/6kd7.jpg
நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு பாலிவுட்டில் உருவான படம்"டர்ட்டி பிக்சர்ஸ்'. பெரும்வெற்றி பெற்ற இப்படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பல மொழிகளிலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைப் படமாக்கி வருகின்றனர். சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய ஈஸ்ட்மென் ஆண்டனி, சில்க்கின் வாழ்க்கையை"கிளைமாக்ஸ்' என்ற பெயரில் படமாக்கி உள்ளார். இந்தப் படம் தமிழில் "நடிகையின் டைரி' என்ற பெயரில் டப் ஆகிறது. டிஜிட்டல் என்டர்டெயினர்ஸ் நிறுவனம் சார்பில் எச்.கே.ஏ. தயாரிக்கிறார். சில்க் ஸ்மிதாவாக சனாகான் நடிக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா, சுபின் நடிக்கின்றனர். இறுதி கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் ஏப்ரல் மாத இறுதியில் இப்படம் வெளியாகிறது.
-
தமிழ் சினிமாவின் நடிப்பு ஒத்திகை வேறொரு கட்டத்துக்குப் போகிறது. ரவி கே.சந்திரன் இயக்கும்"யான்' படத்துக்காக கைக்கோர்த்த ஜீவாவும், நாசரும் இந்த புதிய அத்தியாயத்துக்கு உயிர் கொடுக்கிறார்கள். ஒரு நடிப்புப் பட்டறை முகாமை அவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். நாசர் தலைமைஏற்க உள்ள இந்த நடிப்பு பட்டறையில் தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோக்கள் ஈகோ பார்க்கமால் பங்கேற்க உள்ளதுதான் இதன் சர்ப்ரைஸ். காஞ்சிபுரம், நெய்வேலி, பண்ருட்டி பகுதி கிராமங்களில் உள்ள நாடக, தெருக்கூத்து கலைஞர்களை அழைத்து வந்து, அவர்களிடம் நடிப்பு டிப்ஸ் கேட்பதுதான் சிறப்பம்சம். மாதம் ஒரு முறை நடக்கும் இந்த ஒத்திகையில், யாரெல்லாம் பங்கேற்பார்கள்என்று கேட்டால், ""பல ஹீரோக்களிடம் பேசி இருக்கிறேன். நிச்சயம் நம் சினிமாவுக்கான மாற்றுப் பாதையாக இது இருக்கும்'' என்றார் நடிகர் ஜீவா.
-
ஒரே இடத்தில் ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகும் படம் "கவிதை'. "ஊமை விழிகள்',"உழவன் மகன்', "கருப்பு நிலா'படங்களை இயக்கிய அரவிந்த்ராஜ் இப்படத்தை இயக்குகிறார். ""காதலர் தினத்தன்று காதலை சொல்ல வரும் ஒரு பெண் இயற்கை சீற்றத்தால் தனி இடத்தில் சிக்கி கொள்கிறாள். ஒரு நாள் முழுவதும் அங்கிருந்து தப்பிக்க அப்பெண் செய்யும் முயற்சிகள், அவள் சந்திக்கும் போராட்டங்கள் என மாறுபட்ட அனுபவத்தை தரும் படமாக இது உருவாகிறது. புதுமுகம் மகா கீர்த்தி இதில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுவதும் 28 அடி அறைக்குள் நடத்தப்பட்டுள்ளது'' என்றார் இயக்குநர்.
-
கிரீன் ஆப்பிள் ஸ்டுடியோஸ் சார்பில் விஜய் ஸ்ரீதர் எழுதி தயாரிக்கும் படம்"அலிபாபாவும் அற்புத காரும்'. சந்தோஷ், ஈடன் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் 1970-ம் ஆண்டின் மாடல் பென்ஸ் கார் நடிக்கிறது. ஒளிப்பதிவு, செல்வா. இசை, ஸ்ரீகாந்த் தேவா. நீண்ட இடைவெளிக்குப் இப்படத்தில் வசனம் எழுதுகிறார் இயக்குநர் அகத்தியன். திரைக்கதை எழுதிஇப்படத்தை இயக்குகிறார் மனிஷ்பாபு. மற்றவர்களின் கஷ்டங்களை புரிந்துக் கொள்ளாத ஐவரை மையமாக வைத்துதிரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. தங்களின் சுயநலத்துக்காக வாழும் இவர்களை, எந்த சுழ்நிலையிலும் யார் மனதையும் துன்புறுத்தக் கூடாது என்ற கொள்கையுடைய பெண் சந்திக்கிறாள். அந்த ஐவரும் அவள் மீது அன்பு செலுத்துவது போல் நடித்து ஏமாற்றுகின்றனர். முடிவு என்ன என்பதும், கார் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது என்பதும் கிளைமாக்ஸ்.
-
ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மூவரில் இருவர், இரு பெண்களைக் காதலிக்கின்றனர்.ஹாஸ்டலில் வலம் வரும் ஓர் அனுமாஷ்ய சக்தி, அவர்கள் காதலைத் தடுக்கிறது. அதன் பின் நடந்தது என்ன? அந்த ஜோடி காதலில் ஜெயித்ததா? அனுமாஷ்ய சக்தி ஏன் அவர்களுக்கு தொல்லை கொடுக்கிறது என்பதுதான்"அஞ்சல் துறை' படத்தின் கதை. லதா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் இப்படத்தில் மோகன், சவுபர்கனிகா, நாராயணன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்குகிறார் புதுமுகம் ஏ.ஆர்.ரபி. ""புகழ் பெற்ற ஒருநாவலின் பாதிப்பில் இக்கதையை உருவாக்கியிருக்கிறேன். எல்லோர் மனதிலும் அனுமாஷ்ய சக்திகள் பற்றி ஒரு பயம் இருக்கும். அப்படிப்பட்ட பயத்தின் ஆழ்நிலைதான் இந்த கதை. நிச்சயம் சுவராஸ்யப்படுத்தும்'' என்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.ரபி.
-
""மரணம் என்ற ஒன்று இல்லாதவன் மரணத்தைப் பரிசாகத் தருவான்'' என்ற கருவை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் "மான் வேட்டை'. கடவுள் அருளால் மாபெரும் சக்திகளை தனதாக்கிக் கொண்டவன், தன் காதலியை அழைத்துக் கொண்டு மனித நடமாட்டம் இல்லாத மலைப் பிரதேசங்களுக்கு நிம்மதி தேடி செல்கிறான். அப்போது அவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். சில கால இடைவெளியில் மறு ஜென்மம் எடுத்த அவர்கள் எப்படி கொலைக்காரர்களைப் பழி வாங்குகின்றனர் என்பதுதான் இப்படத்தின் கதை. சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தின் திருமலை எழுதி இயக்குகிறார். இதில் ஷரண் - ஷிவாணி, பிரதீப் - மாயா, தேஜஸ் - பிரியா, சுமன்ஷெட்டி - வனிதா என நான்கு ஜோடிகள் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் விவேகா பாடல்களை எழுதுகிறார்.
-
தினமணி-கதிர்




நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Apr 14, 2013 9:27 am

http://media.dinamani.com/2013/04/13/kdrcini.jpg/article1543372.ece/alternates/w460/kdrcini.jpg
"பொல்லாதவன்' படத்துக்கு முன்பு வெற்றிமாறன் இயக்கவிருந்த கதை, அவரது உதவியாளர் மணிமாறன் இயக்கத்தில் தற்போது படமாகிறது. "ஆடுகளம்' பட வெற்றிக்குப் பின் வெற்றிமாறனை வைத்து படம் எடுக்க அணுகினார் துரை தயாநிதி. கதையை கேட்டதும் தயாரிப்பு தரப்பிலிருந்து சம்மதம் தெரிவிக்கப்பட்டது.""இல்லை... இந்தப் படம் புதுமுக இயக்குநருக்கானது, அதனால் என் உதவியாளரே இயக்குவார்'' என வெற்றிமாறன்சொன்னதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சென்னையில் இருந்து பெங்களூர் சென்று படிக்கும் மாணவனுக்கு, பெங்களூர் பெண்ணுடன் காதல் மலர்கிறது. அந்தக் காதல் நிறைவேறியதா என்பதை ஆக்ஷன்,த்ரில்லர் பின்னணியில் சொல்லுவதுதான் "உதயம் என் எச் 4' படத்தின் கதை. படத்தின் பெருபான்மையான காட்சிகள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் படமாக்கப்பட்டுள்ளன. சித்தார்த் ஹீரோ. புதுமுகம்அஷ்ரிதா ஷெட்டி ஹீரோயின். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ஒளிப்பதிவு செய்கிறார் வேல்ராஜ்.
-
"இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தில் அரசனாகவும்,"இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்தில் எமதர்மனாகவும் நடித்து கவர்ந்த வடிவேலு அடுத்து தெனாலிராமன் அவதாரம் எடுக்கிறார். கைப்புள்ள, தீப்பொறி ஆறுமுகம், நாய் சேகர் என பல்வேறு கதாபாத்திரங்களில் ரசிகர்களை வசப்படுத்திய வடிவேலு, சொந்த பிரச்னை மற்றும் அரசியல் பிரவேசத்தால் சினிமாவைத் தவிர்த்தார். கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தினருடன் நாள்களைசெலவிட்ட வடிவேலு, ரீ எண்ட்ரிக்காக காத்திருந்தார். அவரைத் தேடி தெனாலிராமன் கதாபாத்திரம் வந்தது. அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்."கஜபுஜ புஜகஜ தெனாலிராமனும்கிருஷ்ணதேவராயரும்' படத்தில் நடிக்கிறார். பரவலான பாராட்டுக்களைப் பெற்ற "போட்டா போட்டி' படத்தை இயக்கிய யுவராஜ் இப்படத்தை இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கிறார். தெனாலிராமன் கேரக்டரைப் போல் கிருஷ்ணதேவராயர் கேரக்டரையும் வடிவேலுவே ஏற்கிறார்.
-
தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கிய "3' படத்துக்குப் பின் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கும் படம்"எதிர்நீச்சல்'. சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த், நந்திதா நடிக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவில் அனிரூத் இசையமைக்கிறார். ஒரு பாடலுக்கு தனுஷூடன் ஆடியிருக்கிறார் நயன்தாரா.""வாழ்க்கையில் எந்த விஷயத்தையும் பாஸிட்டிவாக அணுக வேண்டும். அப்போதுதான்கையில் எடுத்த எந்தகாரியத்திலும் வெற்றி கிடைக்கும் என்பதுதான் கதை.மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பார்க்கும் இளைஞனாக சிவகார்த்திகேயன், ஆசிரியையாக ப்ரியா ஆனந்த் நடிக்கின்றனர். தடகள பயிற்சியாளராக நந்திதா நடிக்கிறார். இந்த மூவரையும் சுற்றி நடக்கும் கதையாக இது உருவாகிறது. தனுஷ், நயன்தாரா ஆடிய பாடல் நாகர்கோவிலில் படமாக்கப்பட்டுள்ளது'' என்றார் இயக்குநர் துரை செந்தில்.
-
தெலுங்கில் வெளியாகி பரவலான பாராட்டுக்களை பெற்ற "பிள்ள ஜமீன்தார்', தமிழில் "ஜமீன்' என்ற பெயரில் டப் ஆகிறது. பல கோடிசொத்துகளுக்கு சொந்தக்காரரான தாத்தா, தன் பேரனின் பொறுப்பில்லாத்தனத்தை பார்த்து அவனைத் திருத்த ஒரு திட்டம் போடுகிறார். எந்தவிதத் துணையும் இல்லாமல் ஹாஸ்டலில் தங்கிப் படித்துப் பட்டதாரியாகி விட வேண்டும்.அப்போதுதான் என் சொத்துகளுக்கு வாரிசாக முடியும் என உயில் எழுதுகிறார். இதையடுத்து கிராமப்புற பகுதியில் உள்ள கல்லூரியில் தங்கி படிக்கிறார் பேரன். அப்படி தங்கி படித்த அவன் தாத்தாவின் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை அடைந்தானா? என்பதே கதை. நானி, ராவ் ரமேஷ், ஹரிப்பிரியா, பிந்துமாதவி நடித்துள்ள இப்படத்தை அசோக் இயக்குகிறார்.
-
கலகலப்பான ஒர் இளைஞனின் வாழ்க்கையில் காதலும், பிரச்னையும் வந்து சேரும் போது அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை மையமாக கொண்டு உருவாகும் படம் "யான்'. ஜீவா, துளசி நடிக்கும் இப்படத்தை ரவி கே.சந்திரன் இயக்குகிறார். அவசியம் ஹிட் தேவைப்படுகிற நிலையில், இந்தப் படம் பற்றி நம்பிக்கையாக பேசுகிறார் ஜீவா.
""நான் எல்லா இயக்குநர்களிடமும் கதை கேட்ட பின்னர்தான் நடிக்க ஒப்புக் கொள்கிறேன். படத்தின் வெற்றியும், தோல்வியும் என் கையில் இல்லை. இந்தியாவின் டாப் கேமிராமேன் ரவி.கே. சந்திரன்இயக்கும் இந்தப் படம் நம்பகமானது. ஹாலிவுட் பாணியில் திட்டமிட்டு படத்தை உருவாக்குகிறார். ஹிந்தியில் 6 மாதங்களில் படத்தை வெளியிட்டு லாபம் பார்க்கிறார்கள். அந்த நிலைஇங்கேயும் வர வேண்டும். ஆண்டுக் கணக்கில் படம் எடுப்பதால் படத்தின் கதை புதுப் பொலிவை இழந்து விடுகிறது'' என்றார் ஜீவா.
-
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதையடுத்து உடனடியாக "சிறுத்தை' சிவா இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார் அஜித். கடந்த வாரம் அஜித் நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டன. நீண்ட இடைவெளிக்குப் பின் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். விதார்த், பாலா, முனீஸ், சந்தானம், ரமேஷ்கண்ணா,"நாடோடிகள்' அபிநயா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில், நடிக்க ஸ்ரீதேவி பிரசாத் இசையமைக்கிறார். வரும் 20-ம் தேதி வரை படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. அக்டோபர் மாதம் நடக்கும் அறுவை சிகிச்சைக்குப் பின் அஜித் ஓய்வுக்கு செல்வதால், இடைப்பட்ட காலத்தில் படத்தின் பெருபான்மையான காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தைப் போலவே இப்படத்துக்கும் அதிகாரப்பூர்வமான தலைப்பு வெளியிடப்படவில்லை.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக