ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Tue Apr 02, 2013 5:25 pm


"காவி" - பிச்சைக்காரர்களின் உடை!

1891 பிப்ரவரியில் ஆல்வார் ரயில் நிலையத்தில் இறங்கினார் சுவாமிஜி. அங்கிருந்து கால்போன திசையில் மெதுவாக நடக்கலானார். இரு பக்கங்களிலும் பூத்துக் குலுங்கிய மலர்ச் சோலைகள், பரந்து விரிந்த வயல்வெளிகள், வரிசை வரிசையாக வீடுகள் என்று மாறிமாறி வந்த அழகிய காட்சிகளில் உள்ளத்தைப் பறிகொடுத்தவாறு நடந்து அரசு மருத்துவமனையை அடைந்தார். அங்குள்ள டாக்டரான குரு சரண்லஸ்கர் வெளியே நின்றிருந்தார். சுவாமிஜியின் தோற்றம் அவரை மிகவும் கவர்ந்தது. சுவாமிஜி நேராக அவரிடம் சென்று, 'துறவிகள் தங்குவதற்கு இங்கு ஏதாவது இடம் இருக்கிறதா?' என்று கேட்டார். குரு சரண் அங்குள்ள கடைத்தெரு ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். ஒரு கடையின் மாடியில் துறவிகள் தங்குவதற்கென்று ஓர் அறை இருந்தது. அதனை சுவாமிஜிக்குக் காட்டி, அங்கே அவரைத் தங்கச் செய்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்.

சுவாமிஜியிடம் அறிமுகக் கடிதங்கள் எதுவும் இல்லை. எனவே உணவிற்கோ தங்கவோ வேறு ஏற்பாடுகள் இல்லை. அப்போது அந்தக் கடைக்கு அருகில் வாழ்ந்த முதிய பெண்மணி ஒருத்தி சுவாமிஜியிடம் ஈடுபாடு கொண்டாள். அவள் அவரை 'லாலா' (குழந்தாய்!)என்று அன்புடன் அழைப்பாள். தன் கையாலேயே சப்பாத்தி செய்து தினமும் கொண்டுவந்து சுவாமிஜிக்கு ஊட்டுவாள். சிலவேளைகளில் ராமஸ்னேஹி என்ற வைணவத் துறவியும் சுவாமிஜியுமாகப் பிச்சைக்குச் செல்வார்கள். கோதுமை மாவு பெற்று வருவார்கள். ராமஸ்னேஹி சப்பாத்தி செய்வார். இருவருமாகச் சாப்பிடுவார்கள். இவ்வாறு சுவாமிஜியின் நாட்கள் கழிந்தன.

சுவாமிஜியை ஆரம்பத்தில் அங்கே பெரிதாக மக்கள் அறியவில்லை. பின்னர் படிப்படியாகக் கூட்டம் வரத் தொடங்கியது. காலை மாலை வேளைகளில் சுவாமிஜி பாடுவார். அதைக் கேட்கவே கூட்டம் திரளும். ஒருநாள் அவர்களில் ஒருவர் 'சுவாமிஜி, நீங்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்?' என்று கேட்டார். 'காயஸ்தர்' என்றார் சுவாமிஜி. மற்றொருவர், 'நீங்கள் ஏன் காவி அணிந்துள்ளீர்கள்?' என்று கேட்டார். 'ஏனெனில் அது பிச்சைக்காரர்களின் உடை' என்றார் சுவாமிஜி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Tue Apr 02, 2013 5:27 pm


கல்வி முறையே சீர்கோட்டிற்கு காரணம்!

ஒரு நாள் சீடர் ஒருவர் சுவாமிஜியைத் தமது வீட்டில் விருந்திற்காக அழைத்தார். சுவாமிஜி சென்றபோது அவர் குளிப்பதற்காக உடம்பில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார். சுவாமிஜி சென்றதும் அவரை வரவேற்று, 'சுவாமிஜி, குளிப்பதற்கு முன் எண்ணெய் தேய்த்துக் கொள்வதால் ஏதாவது நன்மை உண்டா?' என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, 'ஆம். 50 கிராம் எண்ணெயை உடம்பில் தேய்த்தால் அது 250 கிராம் நெய்யை உண்பதற்குச் சமம்' என்று பதிலளித்தார்.

ஒருமுறை சுவாமிஜி தமது சீடர் ஒருவர் அழைத்ததன் பேரில் அவரது வீட்டிற்குச் சென்றார். உணவிற்குப் பிறகு ஓய்வாக அமர்ந்திருந்தபோது அந்தச் சீடர் சுவாமிஜியிடம், 'சுவாமி

உண்மை, தூய்மை, தன்னலமற்ற தொண்டு, நேர்மை, நாணயம் என்றெல்லாம் நீங்கள் போதிக்கிறீர்கள். வேலை செய்து பிழைக்கின்ற ஒருவன் இவற்றைப் பின்பற்ற முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதிலும் சுய தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் உண்மையாகவும் நேர்மையாகவும் நடப்பது என்பது அந்த நாட்களில் சாத்தியமே இல்லை. உண்மையாக, நேர்மையாக தொழில் செய்து இந்த உலகில் வாழ முடியுமா?'

சுவாமிஜி கூறினார்: 'இதைப்பற்றி நான் மிகவும் ஆழ்ந்து சிந்தித்துள்ளேன். எனக்குக் கிடைத்த பதில் என்னவென்றால் நேர்மையாகச் சம்பாதிக்க ஒருவனும் விரும்பவில்லை என்பதுதான். அதுதான் உண்மை. இதையெல்லாம் யார் சிந்திக்கிறார்கள்? இப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே யாரும் உணரவில்லை. இப்போதைய கல்வி முறையே இந்தச்சீர்கேட்டிற்குக் காரணம்.

'விவசாயத்தைத் தொழிலாகத் தேர்ந்தெடுப்பது நல்லது என்று நான் கருதுகிறேன். ஆனால் யாரிடமாவது இதைச் சொன்னலாம். 'நான் படித்தவன், நான் விவசாயம் செய்வதா? நாட்டிலுள்ள ஒவ்வொருவனும் விவசாயி ஆவதா? ஏற்கனவே நாடு முழுவதும் விவசாயிகள் நிறைந்துள்ளனர். அதனால்தான் நாடே இவ்வளவு தூரம் சீர்கெட்டுள்ளது' என்கிறான். ஆனால் இது ஒருபோதும் உண்மையல்ல. மகாபாரதத்தைப் படியுங்கள். ஜனகர் ஒரு கையால் ஏர் உழுதுகொண்டு மறு கையால் வேதங்களைப் படிப்பதுபற்றி அதில் வருகிறது. பண்டைய நமது முனிவர்கள் விவசாயிகளாகவே இருந்தார்கள் என்றார் சுவாமிஜி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Tue Apr 02, 2013 5:28 pm

சடங்குகளில் ஆர்வம்!

ஆல்வாரில் சுவாமிஜியை வந்து சந்தித்தவர்களில் ஒரு பிராமணச் சிறுவனும் இருந்தான். சுவாமிஜியிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தான் அவன். உபநயனத்திற்கான வயது வந்தும் வசதியின்மை காரணமாக அவனுக்கு உபநயனச் சடங்குகள் நடைபெறவில்லை. இதை அறிந்த சுவாமிஜி அங்கு வருகின்ற அன்பர்களுள் சற்று வசதி படைத்த ஒருவரிடம் இது பற்றி பேசினார். 'இந்தச் சிறுவனுக்கு உரிய வயது வந்தும் உபநயனச் சடங்குகள் நடைபெறவில்லை. அதற்குரிய வசதி இல்லை. அவனுக்கு உதவ வேண்டியது இல்லறத்தார்களாகிய உங்கள் கடமை. அவன் ஒரு பிராமணச் சிறுவன். ஜாதிக்குரிய சடங்குகளைச் செய்யாமலிருப்பது சரியல்ல. அவனது உபநயனச் சடங்கைச் செய்வதுடன் அவனது கல்விக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் நீங்கள் செய்தால் நான் மிகவும் மகிழ்வேன்.' ஆல்வாரிலிருந்து சென்ற பின்னரும் இதனை மறக்காமல் கடிதம் எழுதி, அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யப்பட்டதை உறுதி செய்து கொண்டார்.

'இங்கே மகான்கள் யாராவது இருக்கிறார்களா?' என்று ஒருநாள் சுவாமிஜி பக்தர்களிடம் கேட்டார். முதியவரான வைணவ பிரம்மச்சாரி ஒருவர் வாழ்ந்து வருவதாக அவர்கள் கூறினர். ஓரிரு பக்தர்களுடன் ஒருநாள் அவரைக் காணச் சென்றார் சுவாமிஜி. அந்த வைணவர் வேதாந்தத் துறவிகளை வெறுப்பவர். எனவே சுவாமிஜி அங்கே சென்றதும் அவர் துறவிகளை நிந்தித்து கடுமையாக ஏசத் தொடங்கினார். சுவாமிஜி அவர் கூறிய அனைத்தையும் பணிவுடன் பொறுத்துக்கொண்டார். அது மட்டுமின்றி, 'சுவாமி உங்களிடமிருந்து கடவுள் பற்றியும் ஆன்மீக வாழ்க்கை பற்றியும் அறிய வந்திருக்கிறேன். ஏதாவது உபதேசம் செய்யுங்கள்' என்று கேட்டுக் கொள்ளவும் செய்தார். சுவாமிஜியின் பணிவையும் பக்தியையும் கண்ட அந்தப் பிரம்மச்சாரி, 'போகட்டும். எனக்கு உங்கள்மீது வெறுப்போ கோபமோ இல்லை. நீங்கள் சாப்பிட ஏதாவது கொண்டு வருகிறேன். இருங்கள்' என்றார்.

தமது வேண்டுகோளை சுவாமிஜி நிராகரித்ததும் முதியவர் மீண்டும் பழைய நிலைமைக்குப் போய்விட்டார். சொல்ல முடியாத ஆத்திரத்துடன், 'இங்கிருந்து போய்விடு' தொலைந்து போங்கள்' என்று கத்தினார். சுவாமிஜி பணிவுடன் அவரை வணங்கிவிட்டு வெளியே வந்தார். வெளியே வந்ததுதான் தாமதம், அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்ததையெல்லாம் திறந்து விட்டதுபோல் குபீரென்று சிரிக்கலானார். 'ஓ, என்னவோர் அற்புதமான மகானிடம் என்னைக் கூட்டி வந்தீர்கள்!' என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தார். பக்தர்களும் சுவாமிஜியின் சிரிப்பில் கலந்து கொண்டனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Tue Apr 02, 2013 5:29 pm

இந்திய வரலாற்றை இந்தியர்களே எழுத வேண்டும்

ஆல்வாரில் சுவாமிஜி சிலருக்கு மந்திர தீட்சை அளித்தார். ஜபம் மற்றும் பிராணாயாமம் செய்ய கற்றுத் தந்தார். சிவ பூஜை செய்யக் கற்றுக் கொடுத்தார். பலசாலியாக, ஆண்மை மிக்கவர்களாக அவர்கள் திகழ வேண்டும் என்று போதித்தார். மேலும், அவரது அறிவுரையால் பலர் மேலைக் கல்விகளை விடாமலே சமஸ்கிருதக் கல்வியையும் ஏற்றுக் கொண்டனர். சமஸ்கிருதக் கல்வியை சுவாமிஜி மிகவும் வற்புறுத்தினார். அவரது அறிவுரையின் படி ஆல்வார் இளைஞர்கள் பலர் சமஸ்கிருதம் கற்கத் தொடங்கினர். சமஸ்கிருதத்தை ஏன் கற்க வேண்டும்? சுவாமிஜி கூறினார்.

'சமஸ்கிருதம் படியுங்கள். ஆனால் கூடவே மேலைநாட்டு விஞ்ஞானத்தையும் படியுங்கள். எதையும் துல்லியமாக அறிவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். எதற்குத் தெரியுமா? காலம் வரும்போது நமது வரலாற்றை ஒரு விஞ்ஞான அடிப்படையில் உங்களால் எழுத முடியும். இப்போதுள்ள இந்திய வராலாறு சரியானதாக இல்லை. காலக்கிரமப்படி எதுவும் தரப்படவில்லை. நமது வரலாற்றை எழுதியவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்கள் எழுதியதைப் படிப்பதால் வருவது பலவீனம் மட்டுமே. ஏனெனில் அவர்கள் நமது வீழ்ச்சியைப்பற்றி மட்டுமே எழுதியுள்ளார்கள். நமது பழக்க வழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம், பராம்பரியம், மதம், தத்துவம் என்று நம்மைப்பற்றி எதுவுமே அறியாத அவர்கள் எப்படி நமது வரலாற்றைச் சரியாக எழுத முடியும்? ஆனால் ஒன்று. கடந்த கால வரலாற்றை எப்படி ஆராய்வது என்பதை அவர்கள் காட்டியுள்ளார்கள். அந்த வழியைப் பின்பற்றி சுதந்திரமாக நமது வரலாற்றை ஆராய வேண்டும்

வேதங்களையும் புராணங்களையும் பழைய சாஸ்திரங்களையும் படிக்க வேண்டும். அவற்றை ஆதாரமாகக் கொண்டு துல்லியமாக, உத்வேகம் தருகின்ற வரலாற்றை எழுத வேண்டும். இந்தியர்களே இந்திய வரலாற்றை எழுத வேண்டும். மறைந்து போன மறைக்கப்பட்ட நமது பண்டைய பொக்கிஷங்களை வெளியே கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள், குழந்தை ஓய்ந்திருக்க மாட்டானோ, இதுபோல், பெருமை மிக்க நமது கடந்த காலத்தை இந்தியர்கள் ஒவ்வொருவரின் மனத்திலும் பதிக்கும் வரை ஓயாதீர்கள். உண்மையான தேசியக் கல்வி இதுவே. இந்த தேசியக் கல்வி பரவும் அளவுக்கு உண்மையான தேசிய உணர்வு விழித்தெழும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Tue Apr 02, 2013 5:31 pm


உருவ வழிபாட்டுக்கு சுவாமிஜி கொடுத்த விளக்கம்!

ஆல்வார் நாட்டு திவானான மேஜர் ராம்சந்திரர் சுவாமிஜியைப் பற்றி கேள்விப்பட்டு, தமது வீட்டிற்கு அழைத்தார். அந்நாட்டு மன்னரான மங்கள் சிங் ஆங்கில மோகம் கொண்டவராக இருந்தார். சிந்தனை, செயல் அனைத்திலும் ஆங்கிலேய பாணியைப் பின்பற்றுவதில் நாட்டம் கொண்டிருந்தார். திவானுக்கு அது பிடிக்கவில்லை. மன்னர் சுவாமிஜியைச் சந்தித்தால் நல்லது என்று எண்ணினார் திவான். எனவே அவருக்கு, 'ஆங்கிலத்தில் அபார அறிவு கொண்ட ஒரு பெரிய சாது இங்கே உள்ளார் என்று எழுதினார். மன்னர் மறுநாளே திவானின் வீட்டிற்கு வந்து சுவாமிஜியைச் சந்தித்தார்.

மன்னளர் வந்து சுவாமிஜியை வணங்கி அமர்ந்து பேச்சைத் தொடங்கினார்.

மன்னர்: 'சுவாமிஜி, நீங்கள் மிகவும் படித்தவர் என்று கேள்விப்பட்டேன். உங்கள் படிப்பிற்கு நீங்கள் கை நிறைய சம்பாதிக்கலாமே! ஏன் இப்படி பிச்சையெடுத்துத் திரிகிறீர்கள்?'

சுவாமிஜி: 'மகாராஜா, நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகள்உங்களுக்கு எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை விட்டுவிட்டு நீங்கள் ஏன் வேட்டை அது இதுதென்று ஆங்கிலேயர்களுடன் நேரத்தைச் செலவிடுகிறீர்கள்?'

சிறிதும் தயக்கமின்றி வந்த சுவாமிஜியின் கேள்வி அங்கிருந்தோர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மன்னர் அதைச் சாதாரணமாக எடுத்து கொண்டார்.

மன்னர்: 'ஏன் என்பதற்கு குறிப்பாக எந்தக் காரணத்தையும் சொல்ல முடியாது. எனக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது.'

சுவாமிஜி: 'அது போல்தான் எனக்கு இது பிடித்திருக்கிறது. நான் பிச்சையெடுத்துச் சாப்பிடுகிறேன்.'

சிறிது நேரத்திற்குப் பிறகு மன்னர், 'சுவாமிஜி எனக்கு உருவ வழிபாட்டில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என் கதி என்னவாகும்?' என்று கேட்டார். இதைக் கேட்கும்போது அவர் சற்று சிரித்த முகத்துடன் கேலி செய்வது போன்ற தொனியில் கேட்டார். அவர் கேட்டவிதம் சுவாமிஜிக்கு எரிச்சலை மூட்டியது.

சுவாமிஜி: 'நீங்கள் கேலி செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.'

மன்னர்: 'இல்லை சுவாமிஜி. எல்லோரையும் போல், ஏனோ என்னால் இந்த மண்ணையும் மரத்தையும் கல்லையும் கட்டையையும் வழிபட முடியவில்லை. மறு உலகத்தில் துன்பப்படுவதுதான் என் தலை விதியா?'

சுவாமிஜி: ' நல்லது, ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப வாழ வேண்டும். அதுதான் நல்லது.'

இந்தப் பதிலை அங்கிருந்த யாரும் எதில்பார்க்கவில்லை. சுவாமிஜி உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்பவர். அவர் மன்னருக்குத் தகுந்த விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். ஆனால் சுவாமிஜி தமது பதிலைக் கூறிவிட்டு அந்த அறையைச் சுற்றிப் பார்த்தார். அங்கே தொங்கிக் கொண்டிருந்த ஒரு படம் அவரது கருத்தைக் கவர்ந்தது. உடனே அதனைக் கொண்டுவருமாறு கூறினார்.

சுவாமிஜி: 'இந்தப் படத்தில் இருப்பது யார்?'

திவான்: 'அது மன்னரின் படம்.'

சுவாமிஜி திவானிடம் அடுத்ததாகக் கூறியது அனைவரையும் அதிர்ச்சியால் உறைய வைத்தது........
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Tue Apr 02, 2013 5:31 pm


சுவாமிஜி: 'திவான்ஜி, இந்தப் படத்தின்மீது துப்புங்கள்.' அனைவரும் அதிர்ச்சியில் அசைவற்று நின்றனர். சுவாமிஜி அதைக் கண்டுகொள்ளாமல் 'துப்புங்கள் திவான்!' என்று மீண்டும் திவானிடம் கூறினார். திவான் அசையவில்லை. உடனே சுவாமிஜி அங்கிருந்த மற்றவர்களைப் பார்த்து. 'திவான் இல்லாவிட்டால் இங்கே இருக்கின்ற வேறு யாராவது ஒருவர் முன்வாருங்கள். இந்தப் படத்தில் அப்படி என்னதான் உள்ளது? வெறும் காகிதம் தானே! இதன்மீது துப்புவதற்கு ஏன் தயங்குகிறீர்கள் ?' என்று கேட்டார்.

அங்கிருந்த மற்றவர்களும் சுவாமிஜி கூறியதைச் செய்ய முன்வரவில்லை. அனைவரும் சுவாமிஜியையும் மன்னரையும் மாறி மாறி பார்த்தபடி திகைத்து நின்றனர். அப்போது சுவாமிஜி மீண்டும் திவானிடம், 'என்ன, அப்படியே நிற்கிறீர்களே! இந்தப் படத்தின்மீது துப்புங்கள்' என்று அழுத்தமாகக் கூறினார். அதன் பிறகும் திவானால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை; பதைபதைத்தவாறே நடுங்கிய குரலில், 'சுவாமிஜி, என்ன சொல்கிறீர்கள்? சொல்வதைப் புரிந்து கொண்டுதானா சொல்கிறீர்கள்? இது மன்னரின் படம். இதன் மீது என்னால் எப்படி துப்ப முடியும்?' என்று கேட்டார்.

சுவாமிஜி: 'இருக்கட்டுமே! மன்னரின் படம்தானே, மன்னர் அல்லவே! இந்த படத்தில் மன்னர் உயிருணர்வுடன் இல்லையே! இது வெறும் ஒரு காகிதத் துண்டு. மன்னரின் எலும்போ சதையோ ரத்தமோ இதில் இல்லை. இது பேசுவதில்லை, நடப்பதில்லை, மன்னர் செய்வது போல் எதையும் செய்வதில்லை, இருந்தாலும் இதன்மீது துப்ப நீங்கள் யாரும் முன்வர மறுக்கிறீர்கள். ஏன்? ஏனெனில் இந்தப் படத்தில் மன்னரின் பிரதிபிம்பத்தை நீங்கள் காண்கிறீர்கள். இதன்மீது துப்பினால் மன்னரையே அவமதிப்பதாக உணர்கிறீர்கள்.'

இதனைக் கூறிவிட்டு சுவாமிஜி மன்னரைப் பார்த்து தமது பேச்சைத் தொடர்ந்தார். பாருங்கள் மகாராஜா இந்தப் படம் நீங்கள் அல்ல. ஆனால் ஒரு விதத்தில் இது நீங்களே. அதனால் தான் இதன்மீது துப்புமாறு சொன்னபோது உங்களிடம் பக்தி கொண்ட உங்கள் சேவகர்கள் மறுத்துவிட்டார்கள். இது உங்கள் பிரதிபிம்பம். இந்தப் படத்தைப் பார்க்கும்போது நீங்களே அவர்களின் நினைவிற்கு வருகிறீர்கள். அதனால்தான் உங்களுக்குக் கொடுக்கின்ற மரியாததையை அவர்கள் இந்தப் படத்திற்குக் கொடுக்கிறார்கள். கல்லிலும் மண்ணிலும் மரத்திலும் செய்யப்பட்ட தெய்வ வழிபடுகின்ற பக்தர்களின் விஷயமும் இதுதான். அவர்கள் வழிபடுகின்ற உருவம் அவர்களுக்கு அந்தப் பரம்பொருளை நினைவுபடுத்துகிறது. எத்தனையோ இடங்களில் நான் யாத்திரை செய்துள்ளேன். எந்த இந்துவும், "ஏ கல்லே, உன்னை வணங்குகிறேன். ஓ மண்ணே, எனக்கு அருள் செய்" என்று வழிபடுவதை நான் காணவில்லை. மகாராஜா! எங்கும் நிறைந்த, பேரானந்த வடிவான முழு முதற் கடவுளையே ஒவ்வொருவரும் வழிபடுகின்றனர். கடவுளும் அவர்களின் பக்குவத்திற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் அருள் புரிகிறார்.'

உருவ வழியாடு பற்றிய இந்த அற்புதமான செயல்முறை விளக்கம் மன்னரின் அகக் கண்களைத் திறந்தது. கூப்பிய கைகளுடன் அவர் சுவாமிஜியிடம், 'நீங்கள் என் கண்களைத் திறந்துவிட்டீர்கள். சுவாமிஜி, இதற்கு முன்பு இத்தகைய விளக்கத்தை நான் கேட்டதில்லை. அறியாமையில் மூழ்கியவனாக இருந்துவிட்டேன். என் கதி என்னவாகும்? என்மீது கருணை காட்டுங்கள்' என்று பணிவுடன் கேட்டார். அதற்கு சுவாமிஜி, 'மகாராஜா! கடவுளைத் தவிர யாரும் யாரிடமும் கருணை காட்ட வல்லவர்கள் அல்ல. அவர் கருணையே வடிவானவர். அவரிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் உங்கள் மீது கருணை காட்டுவார்' என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Tue Apr 02, 2013 5:32 pm


பக்தி ஒன்றே போதுமே!

குருசரண் மூலமாக சுவாமிஜியைப்பற்றி கேள்விப்பட்ட மெளல்வி (இஸ்லாமிய அறிஞர்) ஒருவர் சுவாமிஜியிடம் மிகவும் கவரப்பட்டார். அவர் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் உருதும் பாரசீகமும் கற்பிக்கின்ற ஆசிரியர். அடிக்கடி இருவரும் சுவாமிஜியைச் சென்று கண்டு அவருடன் பேசினர். குரானில் சுவாமிஜிக்கு இருந்த ஆழ்ந்த புலமை அப்போது வெளிப்பட்டது.

சுவாமிஜியைப் பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டனர். ஜாதி மத வேற்றுமையின்றி இந்துக்களில் பல பிரிவினரும் முஸ்லிம்களில் பல பிரிவினரும் வந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே ஆல்வார் அரசின் ஓய்வுபெற்ற எஞ்ஜினியரான பண்டிட் சம்புநாத் என்பவரின் வீட்டில் சுவாமிஜி தங்குவதற்கு ஏற்பாடு ஆகியது.

ஒருநாளாவது சுவாமிஜியை அழைத்துச் சென்று தமது வீட்டில் விருந்தளிக்க வேண்டும் என்ற ஆசை மௌல்வியின் மனத்தில் எழுந்தது. சம்புநாத் ஆசாரமிக்க பிராமணர். அவரது வீட்டில் சுவாமிஜி தங்கியிருப்பதால் அவரது அனுமதி தேவை என்று எண்ணிய மௌல்வி சம்புநாத்தை அணுகி, 'நீங்கள் இதற்கு அனுமதிக்க வேண்டும். ஆசாரமிக்க பிராமணர்களைக் கொண்டு சமையல் செய்கிறேன். நாற்காலி போன்றவற்றை பிராமணர்களைக் கொண்டே சுத்தம் செய்கிறேன். பிராமணர்களின் வீடுகளிலிருந்து பாத்திரங்களைக் கொண்டுவரச் செய்து பரிமாறுகிறேன். எந்த ஆசாரத்திற்கும் இடையூறு நேராதபடி பார்த்துக் கொள்கிறேன்' என்றெல்லாம் உணர்ச்சியுடன் கூறினார். மௌல்வியின் பக்தியைக் கண்டு நெகிழ்ந்துபோன சம்புநாத், 'நீங்கள் அத்தகைய ஏற்பாடுகள் எதுவும் செய்ய வேண்டாம். உங்கள் பக்தி ஒன்றே போதும். உங்கள் வீட்டில் உணவருந்த நானே தயாராக இருக்கிறேன். சுவாமிஜி ஒரு முக்த புருஷர். அவரைப்பற்றி என்ன சொல்ல இருக்கிறது! அவர் எங்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம்' என்று கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Tue Apr 02, 2013 5:33 pm


ராஜபுதனத்தில் சுவாமிஜி!

மீரட்டிலிருந்து டில்லி சென்றார் சுவாமிஜி. அங்கு சேட்சியாமள் தாஸ் என்பவரின் வீட்டில் தங்கினார். பல காலமாக மன்னர் பரம்பரைகளுக்குத் தலைநகராக விளங்கியது டில்லி. டில்லியின் ஒவ்வொரு பகுதியும் வரலாற்றுடன் இணைந்து, கலாச்சார சிறப்பு மிக்கது. சுவாமிஜி வரலாற்றில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். இந்திய மற்றும் உலக வரலாற்றை ஆழ்ந்து கற்றவர். எனவே டில்லியை அவரால் ரசித்து மகிழ முடிந்தது. அரண்மனைகள், மசூதிகள், கல்லறை மாளிகைகள் என்று பல இடங்களையும் பார்த்தார். வரலாற்றுக்கும் முற்பட்ட மகாபராத காலத்திலிருந்து டில்லியை அரசாண்ட பல பரம்பரைகளின் வரலாற்றுச் சின்னங்களைக் கண்டார். சுமார் பத்து நாட்கள் இவ்வாறு சுவாமிஜி டில்லியைச் சுற்றிப் பார்த்தார்.

மீரட்டில் சகோதரத் துறவியரைப் பிரியுமுன், யாரும் தம்மைப் பின்தொடரக் கூடாது என்று மிகவும் கண்டிப்பாக சுவாமிஜி கூறியிருந்தார். சுவாமிஜியின் விருப்பப்படியே அவரைத் தனியாக விட்டுவிட்டனர் சகோதரத்துறவியர். அதன்பிறகும் சில நாட்கள் சுவாமிஜி டில்லியிலேயே தங்கினார். தனித்தனியாகத் தங்கினாலும் உணவு வேளையில் அனைவரும் சேட்டின் வீட்டில் சந்தித்தனர். சில நாட்களுக்குப் பின்னர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். சுவாமிஜி ராஜபுதனத்தை நோக்கிச் சென்றார்.

ராஜபுதனம் என்றாலே நினைவிற்கு வருவது வீரமும் சாகமும் தியாகமும் செறிந்த வரலாறுகள். ராஜபுதனம் என்ற பெயரே இந்திய மனங்களை வீறு கொண்டு எழச் செய்யும். இந்திய வரலாற்றின் ஒரு சுருக்கத்தை அங்கே காண முடியும். அந்த வரலாற்றுப் பின்னணியுடன், ராஜபுதனத்தைச் சூழ்ந்து நின்ற மலைத் தொடர்களும், தொலைதூரத்தில் தெரிந்த மலைச் சிகரங்களும், பளிங்குக்கல் அரண்மனைகளும் சேர்ந்து ஓர் அற்புதக் காட்சியை சுவாமிஜியின் கண்களில் விரித்தன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Tue Apr 02, 2013 5:34 pm


ரிஷிகேசத்தில் இருந்து ஹரித்வாருக்கு

தீவிர சாதனைகளில் ஈடுபடுவதற்காக சுவாமிஜி ரிஷிகேசத்திலிருந்து தனியாக ஹரித்வார் சென்றார். ஹரித்வாரின் அருகிலுள்ள கங்கல் என்ற இடத்தில் பிரம்மானந்தர் ஏற்கனவே சாதனை வாழ்வில் ஈடுபட்டிருந்தார். சுவாமிஜி வந்திருப்பது பற்றி கேள்விப்பட்டதும் அவர் ஹரித்வார் சென்று சுவாமிஜியைச் சந்தித்தார். பின்னர் மற்ற துறவியரும் சேர்ந்து கொண்டனர். எல்லோருமாக சஹரன்பூர் சென்றனர். அங்கே தங்கியிருந்த அகண்மானந்தர் ஏற்கனவே மீரட் சென்று விட்டிருந்தார். அங்கே போக புறப்பட்டனர். மீரட்டில் யஜ்ஞேசுவர் பாபு என்பவரின் வீ ட்டில் அனைவரும் தங்கினர். சுவாமிஜி ரிஷிகேசத்தில் நோயுற்றதிலிருந்து இன்றும் பழைய நிலைமைக்கு மீளவில்லை. அவருக்குத் தொடர்ந்த மருத்துவமும் நல்ல உணவும் தேவைப்பட்டன. எனவே பதினைந்து சாட்கள் அங்கே தங்கிவிட்டு, யஜ்ஞேசுவர் பாபுவின் நண்பரான சேட்ஜி என்பவரின் வீட்டில் தங்கினர்.

ஏற்கனவே அங்கே தீர்த்த யாத்திரையாக வந்திருந்த அத்வைதானந்தர் அங்கே அவர்களுடன் சேர்ந்து கொண்டார். ஸ்ரீராமகிருஷ்ணரின் பல துறவிச்சீடர்கள் சேட்ஜியின் வீட்டில் தங்கி ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டபோது அந்த இடம் மற்றொரு வராக நகர மடமாயிற்று. தியானம், ஜபம், பிரார்த்தனை, பஜனை, படிப்பு என்று அவர்களின் நாட்கள் கழிந்தன. அவர்கள் தங்கள் உணவைத் தாங்களே சமைத்துக் கொண்டனர். மாலை வேளையில் சிறிது தூரம் நடக்கவோ அல்லது பக்கத்திலுள்ள மைதானத்தில் போர் வீரர்களின் பயிற்சியையும் விளையாட்டையும் காணவோ செய்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Tue Apr 02, 2013 5:34 pm


சுவாமிஜி சந்தித்த விநோதமான மகான்கள்

இமய மலைப் பகுதிகளில் சுவாமிஜி தரிசித்த மகான்கள் பலர். உடம்பு என்ற ஒன்று தங்களுக்கு இருப்பதையே நினைக்காமல், உடம்பின் சுக துக்கங்களைப் பற்றி கவலைப்படாமல் வாழ்ந்த எத்தனையோ பேரை சுவாமிஜி அங்கே கண்டார். ஒருவர் பார்க்க பைத்தியம் போலவே இருந்தார். ஆடை எதுவுமின்றி சுற்றித் திரிகின்ற அவர் சிறுவர்களுக்கு ஒரு வேடிக்கைப் பொருள். அவரைக் கண்டாலே அவர்மீது கல்லெறிவது அவர்களுக்கு ஒரு விளையாட்டு. ஆச்சரியம் என்னவென்றால் அவருக்கும் இது விளையாட்டாகவே இருந்தது. அவர்கள் கல்லெறிந்து அவரது முகம், கழுத்து என்று உடம்பு முழுவதிலுமிருந்து ரத்தம் வடியும். ஆனால் அது அவருக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. கல்வெறிந்துவிட்டு சிறுவர்கள் எப்படி கைகொட்டிச் சிரித்துக் களித்தார்களோ அதுபோலவே அவரும் களித்தார். சுவாமிஜி ஒருநாள் அவரை அழைத்துச் சென்று அவரது புண்னை எல்லாம் கழுவி மருந்திட்டார். ரத்தம் வடிந்தபோது அவர் எப்படிச் சிரித்தாரோ அப்படியே சுவாமிஜி அவருக்குச் சேவைகள் செய்த போதும் மகிழ்ச்சியில் திறைத்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது, 'எல்லாம் என் அப்பனின் விளையாட்டு' என்று கூறிவிட்டு மீண்டும் சிரிப்பார்.

சில மகான்கள் தங்கள் அருகில் யாரையும் வர விடுவதில்லை. அதற்கு அவர்கள் பினபற்றும் வழிகள் வினோதமாக இருக்கும். சிலர் ஆட்களைக் கண்டதுமே கல்லால் அடிப்பார்கள். ஒருவர் தாம் வாழ்ந்த குகையைச் சுற்றி மனித எலும்புகளைப் பரப்பி வைத்துவிடுவார்! பார்ப்பவர்களுக்கு அவர் பிணங்களைத் தின்பவர்போல் தோன்றும், எனவே பயந்து யாரும் அருகில் செல்ல மாட்டார்கள். அவரும் எந்தத் தொந்தரவுமின்றி சாதனைகளில் ஆழ்ந்திருப்பார். இத்தகைய துறவியர் பலரை சுவாமிஜி சந்தித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Tue Apr 02, 2013 5:35 pm


தடியை ஓங்கினால் தானம்..

அல்மோராவிலிருந்து கர்ண பிரயானை, ருத்u பிரயாகை வழியாக சுவாமிஜி, சாரதானந்தர், அகண்டானந்தர், கிருபானந்தர் ஆகியோர் ஸ்ரீநகரை அடைந்தனர். அளகானந்தா நதிக்கரையில் துரியானந்தர் ஒரு சமயம் வாழ்ந்த குடிசையில் அனைவரும் தங்கினர். இங்கே சுமார் ஒன்றரை மாதங்கள் தங்கி, பிச்சையுணவு ஏற்று வாழ்ந்தனர். முழு நேரமும் பிரார்த்தனை, தியானம், சாஸ்திரப் படிப்பு என்று நாட்கள் கழிந்தன.

ஸ்ரீநகரில் தமது பள்ளி ஆசிரியர் ஒருவரைச் சந்தித்தார் சுவாமிஜி. இவர் சமீபத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர். சுவாமிஜி அவரிடம் இந்து மதத்தின் பெருமைகளை எடுத்துக் கூறினார். சுவாமிஜியின் வார்த்தைகளைக் கேட்ட ஆசிரியர், தாம் மதத்திற்கு வர ஏங்கினார். பின்னாளில் துறவியரிடம் மிகுந்த மதிப்புக் கொண்டவராக வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் அவர்களைத் தம் வீட்டில் அழைத்து உபசரித்தார்.

அங்கிருந்து அனைவரும் ஸ்ரீநகர் வழியாக டெஹ்ரியை அடைந்தனர். ஒரு கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது இரவு கவியத் தொடங்கியது. பசியால் அவர்கள் மிகவும் களைப்புற்றிருந்தனர். பாழடைந்த ஒரு சத்திரத்தில் சாமான்களை வைத்துவிட்டு பிச்சைக்காக வெளியில் சென்றனர். வீடுகளில் கேட்டும் எதுவும் கிடைக்கவில்லை. யாரும் இவர்களைப் பொருட்படுத்தவே இல்லை. 'இமயப் பகுதி இல்லை. ஆனால் அவர்கள் தானம் தர வேண்டுமானால் நாம் தடியை ஓங்க வேண்டும்' என்ற பழமொழி ஒன்று உள்டு. அதனை நினைவுகூர்ந்தார் அகண்டானந்தர். எனவே எல்லோரும் கைத்தடிகளை ஓங்கி, 'உணவு தராவிட்டால் கிராமத்தையே சூறையாடி விடுவோம்' என்று உரத்த குரலில் ஆவேசமாகக் கூறி அனைவரையும் பயமுறுத்தினர். அவ்வளவுதான், உணவும் தேவையான அனைத்தும் அவர்கள் இருந்த இடத்திற்குத் தானாக வந்து சேர்ந்தன. வேண்டியவற்றைக் கொடுத்துவிட்டு பயபக்தியுடன் கைகட்டி நின்றனர் அந்தக் கிராம மக்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Tue Apr 02, 2013 5:36 pm


சுவாமிஜியை மாற்றிய சகோதரியின் மரணம்!

1890 ஆகஸ்ட் இறுதியில் சுவாமிஜியும், அகண்டானந்தரும் அல்மோராவை அடைந்தனர். அங்கே அம்பா தத் என்வரின் தோட்ட வீட்டில் தங்கினர்.

சில நாட்கள் அங்கே தங்கிய சுவாமிஜி தனிமை வாழ்வை நாடி ஏங்கலானார். எனவே ஒருநாள் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு சில மைல் தொலைவில் இருந்த குகை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்கி தீவிரமான சாதனைகளில் ஈடுபடலானார். அந்தக் குகை காஸார் தேவி கோயிலுக்கு அருகில் இருந்தது. அடர்ந்த காட்டுப்பகுதி அது. சில காலம் அங்கே தங்கிய சுவாமிஜி ஏதோ ஒரு சக்தியால் உந்தப்பட்டவர்போல் மீண்டும் திரும்பி லாலாவின் வீட்டிற்கே வந்தார்.

தீவிர தவ வாழ்வின் விளைவாக சில நாட்கள் லாலாவின் வீட்டில் தங்கிய சுவாமிஜியை அதிர்ச்சியில் உறைய வைத்த செய்தி ஒன்று வந்தது. அவரது சகோதரிகளுள் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியில் மட்டுமல்ல, சுவாமிஜியைத் தீவிர சிந்தனையிலும் ஆழ்த்தியது இந்தச் சோக சம்பவம். சுவாமிஜியுடன் ஓடியாடிக் களித்தவர் அவர். சிம்லாவில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டிருந்த அவரது திருமணம் வாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை. சிறுவயதிலேயே அவரது திருமணம் நடைபெற்றது. ஆசாரமிக்க புகுந்த வீட்டினருடன் அவரால் அனுசரித்துப் போக இயலவில்லை. திருமண நாள் முதலே கவலையையும் கண்ணீரையுமே அவர் கண்டிருந்தார். எல்லைமீறிய சோகம் ஆட்கொண்ட போது தமது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

'பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இமயமலைக்குச் சென்றேன். இனி திரும்பி வரக்கூடாது என்ற முடிவுடன்தான் சென்றேன், ஆனால் என் சகோதரி தற்கொலை செய்து கொண்டு இறந்தாள். அந்தச் செய்தி அங்கே என்னை வந்தடைந்தது. என் பலவீன இதயம், நான் அமைதியை எதிர்நோக்கிய நிலையிலிருந்து என்னைத் தூர விட்டெறிந்து விட்டது என்று எழுதினார் சுவாமிஜி. 'பெண்களுக்குக் கல்வி அளிக்க வேண்டும், அவர்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்குமாறு செய்ய வேண்டும்' என்று சுவாமிஜி பெண்கள் முன்னேற்றத்திற்காகத் கதறியதன் அடிப்படையை இந்தச் சோக சம்பவத்தில் நாம் காண முடியும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Tue Apr 02, 2013 5:36 pm


சுவாமிஜியும் அகண்டானந்தரும்...

வைத்தியநாதத்திலிருந்து காஜிபூர் வழியாக இருவரும் காசியை அமைந்தனர். காசியில் பிரமத தாஸின் வீட்டில் தங்கினர். காசியில் வாழ்ந்தாலும் இமயத்தின் பனிமலைச் சிகரங்களைக் காண்பதற்கான ஆர்வமே சுவாமிஜியின் சிந்தை முழுவதும் நிறைந்திருந்தது. ஒருநாள் சுவாமிஜியைச் சந்திக்கப் பலர் வந்திருந்தனர். அப்போது சுவாமிஜி ஏதோ ஆவேசம் வந்தவர்போல் பிரமத தாஸிடம், 'இப்போது நான் காசியிலிருந்து புறப்படுகிறேன். சமுதாயத்தின்மீது ஒருநாள் வெடிகுண்டுபோல் வெடிப்பேன். இந்தச் சமுதாயம் ஒரு நாய்போல் என்னைப் பின்தொடரும். அதுவரை இந்த நகரத்திற்கு வர மாட்டேன்' என்று கூறினார். பின்னர் அங்கிருந்து சுவாமிகள் இருவரும் கிளம்பினர்.

பத்ரி நாத் செல்வது அவர்களின் திட்டம். காசியிலிருந்து புறப்பட்ட அவர்கள் அயோத்தி, நைனிடால் வழியாக அல்மோரா சென்றனர். வழியில் காக்ரிகாட் என்ற இடத்தை அடைந்தனர். கோசி, சூயல் என்ற இரண்டு சிற்றாறுகள் சங்கமிக்கின்ற அழகிய மலைப் பகுதி அது. சங்கமத் தலத்திற்கு அருகில் பெரியதோர் அரச மரம். சுற்றிலும் உயர்ந்த மலைச் சிகரங்கள். 'இந்த இடம் மிகவும் அற்புதமாக உள்ளது. தியானத்திற்கு ஏற்ற இடம் இது' என்றார் சுவாமிஜி. சொன்னது மட்டுமல்ல, ஆற்றில் குளித்துவிட்டு கரையில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் மூழ்கவும் செய்தார்.

சுவாமிஜியின் வாழ்க்கையில் அது முக்கியமானதொரு நாளாக இருந்தது. அவரது பின்னாள் வாழ்க்கையிலும் சொற்பொழிவுகளிலும் திட்டங்களிலும் காணப்படுகின்ற ஓர் அற்புதமான கருத்தை அன்றைய தியானத்தில் ஓர் அனுபூதியாகப் பெற்றார் அவர். தியானம் கலைந்து எழுந்ததும் அவர் அகண்டானந்தரிடம், 'என் வாழ்க்கையில் மகோன்னதமான கணங்களுள் ஒன்றை இப்போது நான் கடந்து வந்தேன். வாழ்க்கைப் புதிர்களுள் மிகவும் முக்கிமான ஒன்றிற்குரிய தீர்வு இந்த அரச மரத்தின் அடியில் எனக்குக் கிடைத்தது. ஒற்றுமை நிலவுவதை நான் கண்டேன். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இந்த மனித உடம்பிலும் உள்ளது. பிரபஞ்சம் முழுவதையும் நான் ஓர் அணுவில் கட்டேன்' என்று கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Tue Apr 02, 2013 5:37 pm


சன்னியாசத்துக்கு இலக்கணம்!

ஒரு நாள் சுவாமிஜியை அந்த ஊர் செல்வந்தர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவதாக மன்மதநாத் தெரிவித்தார். 'எனது வண்டியிலேயே போய்விடலாம் உங்களுக்குச் சிரமம் இருக்காது' என்றும் தெரிவித்தார். ஆனால் சுவாமிஜி அதனை மறுத்து, 'அது சன்னியாச தர்மம் அல்ல. செல்வந்தவர்களை நாடுவது துறவு நெறிக்குப் புறம்பானது' என்று கூறிவிட்டார். சுவாமிஜியின் துறவு மன்மதநாத்தின்மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

சுவாமிஜி பாகல்பூரிலிருந்து புறப்பட பல முறை முயற்சித்த போதும் மன்மாநாத் அவரை விடவில்லை. எனவே ஒருநாள் சுவாமிஜியும் அகண்டானந்தரும் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்து விடைபெற்றுக்கொண்டு இமயத்தை நோக்கிப் புறப்பட்டுவிட்டனர். மன்மத நாத் வீட்டிற்குத் திரும்பி வந்து விவரம் அறிந்து மிகுந்த வேதனையில் ஆழ்ந்தார். பத்ரிநாத்திற்குப் போக வேண்டும் என்று சுவாமிஜி ஒருமுறை சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்த அவர் அல்மோராவரை சென்று சுவாமிஜியைத் தேடினார். ஆனால் அதற்குள் சுவாமிஜி அங்கிருந்து சென்று விட்டிருந்தார்.

அடுத்து இருவரும் வைத்தியநாதத்தில் தங்கினர். அங்கே பாபு ராஜ் நாராயண் போஸ் என்பவரைச் சந்தித்தனர். அவர் பிரம்ம சமாஜத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். இளமை நாட்களில் ஆங்கிலேய மோகத்தால் இந்தியாவையும் இந்தியா சம்பந்தப்பட்ட அனைத்தையும் வெறுத்த வேர் பெற்றோரின் மறைவிற்குப் பின்னர், மேலைநாட்டு மோகத்தை விட்டு இந்தியாவையும் அதன் பெருமையையும் போற்றத் தொடங்கினார். மேலைநாட்டு மோகத்தில் இருந்த அதே தீவிரத்தை இப்போது மேலை நாடு சம்பந்தப்பட்ட அனைத்தையும் எதிர்ப்பதில் காட்டினார். ஆங்கிலேய நடை, உடை, கலாச்சாரம் ஆங்கில வார்த்தையைப் பயன்படத்தினால் கூட ஒரு வார்த்தைக்கு ஒரு காசு அபராதம் விதிப்பாராம்.

வயது முதிர்ந்தவரான ராஜ் நாராயன் போஸின் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பதற்காக சுவாமிஜியும் தமக்கு ஆங்கில வாசனையே இல்லாததுபோல் காட்டிக்கொண்டார். அகண்டானந்தரிடமும் அவ்வாறே பழகுமாறு கூறினார். தூய வங்க மொழியிலேயே உரையாடல் நடைபெறும். சுவாமிஜிக்கு ஆங்கிலம் சிறிதும் தெரியாது என்றே ராஜ் நாராயண் நம்பியிருந்தார். ஒருநாள் பேசிக் கொண்டிருந்த போது அவசரத்தில் ராஜ் நாராயண் 'ப்ளஸ்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விட்டார். அது சுவாமிஜிக்குப் புரிந்திருக்குமோ இல்லையோ என்ற சந்தேகத்தில் விரல்களைக் கூட்டல் குறிபோல் வைத்துக் காட்டினாராம். பின்னாளில் சுவாமிஜியின் பெயர் நாடெல்லாம் பரவியபோது அவர் அடைந்த பிரமிப்புக்கு எல்லையே இல்லை. 'சுவாமிஜி ஒரு விசித்திரமான மனிதர் என்றாராம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Tue Apr 02, 2013 5:37 pm


அன்னையின் ஆசிகள்...

மடம் வளர வேண்டும், கோயில் எழ வேண்டும் இவையெல்லாம் சுவாமிஜியை அலைக்கழித்த எண்ணங்கள் தான். ஆனால் இவை அனைத்தையும் மீறி அவரது மனம் தனிமை வாழ்க்கைக்காக ஏங்கியது. இமயப் பகுதிகளில் சில காலம் செலவழித்திருந்த அகண்டானந்தர் அப்போதுதான் திரும்பியிருந்தார். அவர் கூறிய வர்ணனைகளும் யாத்திரைக் கதைகளும் சுவாமிஜியின் ஆர்வத்திற்குத் தூபமிட்டன.

அகண்டானந்தரை உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்து, அவருடன் சென்று அன்னை ஸ்ரீ சாரதா தேவியைத் தரிசித்தார். அம்மா மிக மேலான அனுபூதியை அடையாமல் நான் திரும்ப மாட்டேன்' என்று அன்னையிடம் கூறினார் சுவாமிஜி. ஸ்ரீராமகிருஷ்ணரின் திருப்பெயரால் அன்னை அவரை ஆசிர்வதித்தார். பிறகு அகண்டானந்தரிம், 'மகனே, என் செல்வத்தையே (சுவாமிஜி) உன்னிடம் ஒப்பமடைக்கிறேன். உனக்கு இமய மலைப் பகுதியைப்பற்றி நன்றாகத் தெரியும். நரேன் உணவிற்குத்திண்டாடாமல் பார்த்துக்கொள்' என்று கூறினார். இவ்வாறு அன்னையின் ஆசிகள் பெற்று 1890 ஜூலை இறுதியில் புறப்பட்டார் சுவாமிஜி. 'நான் ஒருமுறை தொட்டால் ஒருவனது வாழ்க்கை மாற்றம் காண வேண்டும். அத்தகைய ஆற்றலைப் பெறாமல் திரும்ப மாட்டேன்' என்று தமது சகோதரத் துறவிகளிடம் தெரிவித்துவிட்டு, நீண்ட பயணத்திற்காகப் புறப்பட்டார் சுவாமிஜி.

கங்கைக் கரை வழியா நடந்தே செல்ல எண்ணினார் சுவாமிஜி. ஆகஸ்ட் மாதம் சுவாமிஜியும் அகண்டானந்தரும் பாகல்பூரை அடைந்தனர். அந்த ஊரில் பிரபலமான குமார் நித்தியானந்த சிங் தனது நண்பரான மன்மதநாத் சௌதுரி என்பவரின் வீட்டில் சுவாமிஜியும் அகண்டானந்தரும் தங்க ஏற்பாடு செய்தார்.

இந்த இரண்டு துறவிகளையும் பற்றி ஆரம்பத்தில் மன்மத நாத் பெரிதாக எண்ணவில்லை. எத்தனையோ துறவிகள் வந்து போகின்றனர், அவர்களைப்போல் இருவர் என்று தான் நினைத்தார் அவர். ஒருநாள் மதிய உணவிற்குப் பிறகு அனைவரும் ஓய்வாக அமர்ந்திருந்தனர். மன்மத நாத் அவர்களிடம் பேசவே விரும்பாததுபோல் சற்று தள்ளி அமர்ந்து புத்த மதம் பற்றிய ஆங்கில நூல் ஒன்றை வாசிக்கலானார். சிறிதுநேரம் கழிந்தது. சுவாமிஜி அவரிடம், 'அது என்ன புத்தகம்?' என்று கேட்டார். அதற்கு மன்மத நாத் புத்தகத்தின் பெயரைக் கூறிவிட்டு, 'உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?' என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி,'ஏதோ கொஞ்சம் தெரியும்' என்றார். உரையாடல் தொடர்ந்தது. ஆங்கில இலக்கியங்கள் பலவற்றிலிருந்து மேற்கொள் காட்டி தடையின்றிப் பேசலானார் சுவாமிஜி. பிரமித்துப் போனார் மன்மத நாத். ஒரு துறவி ஆங்கிலத்தில், அதுவும் இவ்வளவு சரளமாகப் பேசுவது என்பது அந்த நாளில் அபூர்வம்! சிறிது நேரத்திற்குள் சுவாமிஜியின் புலமையையும் அறிவின் ஆழத்தையும் புரிந்து கொண்டார் மன்மத நாத் யோகம், உபநிஷதம் போன்ற பல விஷயங்களில் சுவாமிஜியின் ஆழ்ந்த அறிவும் தொடர்ந்த நாட்களில் அவருக்குப் புலப்பட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by Muthumohamed on Tue Apr 02, 2013 6:30 pm

ஒவ்வொரு நிகழ்வுகளும் ஓராயிரம் கருத்துள்ள விஷயங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது

பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Wed Apr 10, 2013 12:30 am

என்னால் எந்த உயிரும் பயம் கொள்ளக் கூடாது

சுவாமிஜி வாழ்ந்தபோது ராஜபுதனத்தின் மிகப்பெரிய சம்ஸ்கிருதப் பண்டிதரான நாராயன் தாசைச் சந்தித்தார். இதனை ஒரு வாய்ப்பாகக் கொண்டு சம்ஸ்கிருத இலக்கணப் படிப்பைத் தொடர்ந்தார் சுவாமிஜி. பாணினியின் இலக்கண சூத்திரங்களுக்கு பதஞ்ஜலி எழுதிய மகாபாஷ்யத்தைக் கற்கத் தொடங்கினார் சுவாமிஜி. சில நாட்கள் கற்பித்த உடனேயே பண்டிதருக்கு சுவாமிஜியின் அறிவாற்றல் புரிந்தது. எனவே அவர் சுவாமிஜியிடம், அறிவாற்றல் புரிந்தது. எனவே அவர் சுவாமிஜியிடம், 'சுவாமிஜி, உங்ளைப் போன்ற ஒரு மாணவன் கிடைப்பது அரிது. நான் சொல்லித் தந்து நீங்கள் கற்பதற்கு இனி எதுவும் இல்லை. எனக்குத் தெரிந்தவை அனைத்தையும் உங்களுக்குக் கற்றுத் தந்துவிட்டேன். நீங்களும் அவற்றைப் புரிந்துகொண்டீர்கள்' என்றார். சுவாமிஜி அவருக்குப் பல முறை வணக்கமும் நன்றியும் தெரிவித்து விடைபெற்றார்.

மன்னரும் சுவாமிஜியும் பல நேரங்களில் குதிரை சவாரி செய்து அருகிலுள்ள காடுகளுக்குச் செல்வதுண்டு. ஒரு நாள் காட்டில் ஒரு குறுகலான பாதை வழியாக இருவரும் சென்று கொண்டிருந்தனர். இரு பக்கங்களிலும் வளர்ந்து நின்ற முட்செடிகள் சுவாமிஜியின்மீது குத்திவிடக் கூடாது என்பற்காக மன்னர் தமது கைகளால் அவற்றை ஒதுக்கிப் பிடித்தார். அப்போது முட்கள் குத்தி மன்னரின் கைகளிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. நெகிழ்ந்து போனார் சுவாமிஜி. சுவாமிஜியின் உணர்ச்சியைப் புரிந்து கொண்ட மன்னர் சிரித்தபடியே, 'விடுங்கள் சுவாமிஜி, நாங்கள் க்ஷத்திரியர்கள் அல்லவா?தர்மத்தைக் காப்பது எங்கள் கடமை அல்லவா?' என்று கேட்டார்.

மற்றொரு நாள் மன்னரும் சுவாமிஜியும் பரிவாரங்களுமாக வேட்டைக்குச் சென்றனர்.எல்லோருடைய கையிலும் துப்பாக்கி இருந்தது. சுவாமிஜியுடம் கைத்தடி மட்டுமே இருந்தது. வழியில் ஓரிடத்தில் அனைவரும் அமர்ந்தனர். சுவாமிஜி சற்று தொலைவில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். திடீரென்று ஒரு புலி அந்த மரத்தின் பக்கமாகப் பாய்ந்து சென்றது. சுதாரித்துக் கொண்ட மன்னரும் மற்றவர்களும் சுவாமிஜியின் அருகில் விரைந்தனர். அதற்குள் புலி மறைந்து விட்டிருந்தது. ஒரு துப்பாக்கியை வைத்துக் கொள்ளுமாறு அப்போது மன்னர் சுவாமிஜியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு சுவாமிஜி, 'பாதுகாப்பிற்காக ஒரு துறவிக்குத் துப்பாக்கி தேவையில்லை. எந்தப் புலியும் அவர்களை எதுவும் செய்யாது. என்னால் எந்த உயிரும் பயம் கொள்ளக் கூடாது என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Sat May 04, 2013 2:31 pm

நீ அடிமையாக இருக்க நீயே காரணம்

கணிசமான சம்பளம் கிடைக்கின்ற வேலையில் இருந்தார் ஹரிபாதர். அவரது மேலதிகாரிகள் ஆங்கிலேயர்கள். அவர்கள் தம்மைக் கடிந்து கொள்வது ஹரிபாதருக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. தமது அதிருப்தியை அவர் வெளிப்படையாகவே காட்டுவார். இதைப்பற்றி அறிந்த சுவாமிஜி கூறினார்.

'இதோ பார், பணத்திற்காக நீதான் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தாய். உனக்குரிய சம்பளத்தை அவர்கள் தவறாமல் கொடுத்துவிடுகிறார்கள். "ஓ! இவர்கள் என்னை அடிமைபோல் நடத்துகின்றனர்" என்று ஏன் புலம்புகிறாய்? சிறிய விஷயங்களையெல்லாம் ஏன் பெரிதுபடுத்துகிறாய்? யாரும் உன்னை அடிமைப்படுத்தவில்லை. நீ அடிமையாக இருப்பதற்கு நீயே காரணம். இப்போது நினைத்தாலும் நீ வேலையை ராஜினாமா செய்யலாமே! அதிகாரிகளை ஏன் குறைகூற வேண்டும்? இப்போதைய உனது சூழ்நிலை சாதகமாக இல்லையென்றால் அதற்கு வேறு யாரையும் குறைகூறாதே; உன்னையே குறை கூறு. நீ அவர்களின் கீழ் வேலை செய்வதும் செய்யாததும் அவர்களுக்கு ஒரு பொருட்டு என்றா நினைக்கிறாய்? நீ விலகினால் அந்த இடத்தில் வேலை செய்ய நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். உன்னைப்பற்றி கவலைப்படு உனது கடமைகளையும் பொறுப்புகளையும் நினைத்துப் பார். அத்துடன் நிறுத்திக்கொள். முதலில் உனக்கு நீ நல்லவனாக இரு. அப்போது உலகமே நல்லதாக உனக்குத் தெரியும். மற்றவர்களிடம் உள்ள நல்லதை மட்டுமே அப்போது நீ காண்பாய். நாம் காணும் புறவுலகம் நமது பிரதிபிம்பமே. பிறரிடம் குற்றம் காணும் பழக்கத்தை விட்டுவிடு. நீ வெறுப்பவர்கள் எல்லாம் படிப்படியாக உன்னை ஏற்றுக்கொள்வதை நீ காண்பாய். ஆச்சரியத்திற்குரிய விஷயம் இது, ஆனால் உண்மை. நமது மனநிலைக்கு ஏற்பவே பிறர் நம்மிடம் பழகுவார்கள். பிறர் நம்மிடம் நடந்து கொள்வதை வைத்து நமது மனநிலையை, நமது மனப்பக்குவத்தை அறிந்து கொள்ளாம்.'

சுவாமிஜியின் இந்த அறிவுரை ஹரிபாதரின் வாழ்க்கையில் ஒரு தெளிவை ஏற்படுத்தியது. சுவாமிஜியின் வழிகாட்டுதலில் பகவத் கீதையைப் படித்தார் ஹிரிபாதர். இதுவரை புரியாத பல உண்மைகள் அவருக்குப் புரிந்தன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by ceci1998 on Sat May 04, 2013 6:36 pm

நன்றி நல்ல கட்டுரை
avatar
ceci1998
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 47
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Mon May 20, 2013 2:41 am


"தேவாமிர்தத்தை விட சுவையான சப்பாத்தி!"

கேத்ரியில் நடந்த ஒரு சம்பவம். ஓர் ஊரில் மக்கள் சுவாமிஜியிடம் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். சுவாமிஜி அவர்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். சுவாமிஜியின் வார்த்தைகளிலேயே அந்த நிகழ்ச்சியைப்பற்றி கேட்போம். 'நம்புவதற்கே கடினமாகத்தான் இருக்கும். ஆனால் மூன்று நாட்கள் இரவும் பகலும் எனக்கு ஒரு கணம்கூட ஓய்வே கிடைக்கவில்லை. தூக்கம், உணவு எதுவும் கிடையாது. யாரும் அதைப்பற்றி கவலைப்படவும் இல்லை. அவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள், நானும் பேசிக் கொண்டே இருந்தேன். மூன்றாம் நாள் இரவு வந்தது. அனேகமாக எல்லோரும் போய்விட்டார்கள்.

அப்போது தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவன் என்னிடம் வந்தான். 'சுவாமிகளே மூன்று நாட்களாக உணவோ உறக்கமோ இல்லாமல் நீங்கள் பேசுவதை நான் பார்க்கிறேன். என் மனம் வேதனையில் துடிக்கிறது. பசியும் களைப்பும் உங்களுக்கும் இருக்கத்தானே செய்யும்!" என்று பரிவுடன் கூறினான். அவனது அன்பு என்னை நெகிழச் செய்தது. "சாப்பிட ஏதாவது நீ தருவாயா?" என்று அவனிடமே கேட்டேன். "தர வேண்டும் என்று தான் என் இதயம் ஏங்குகிறது. ஆனால் என்ன செய்வேன்? நான் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன். நான் சப்பாத்தி செய்து உங்களுக்குத் தர முடியாது. மாவும் மற்ற பொருட்களும் கொண்டு தருகிறேன். நீங்களே செய்து சாப்பிடுங்கள்" என்றான் அவன். அதற்கு நான், 'வரவாயில்லை. நீயே செய்து கொண்டு வா. நான் சாப்பிடுகிறேன்" என்றேன். அவன் நடுங்கிப் போனான். செருப்பு தைப்பவனான அவன் ஒரு துறவிக்கு உணவளித்தது தெரிந்தால் தண்டிக்கப்படுவான் ஏன், நாடுகடத்தவே செய்வார்கள். ஆனால் நான் அவனை ஆசுவாசப்படுத்தினேன். "தண்டனை கிடைக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதியளித்தேன். அவன் எனது உறுதியை அவ்வளவாகச் நம்பவில்லை, இருந்தாலும் என்மீதுள்ள அன்பு காரணமாகச் சப்பாத்தி கொண்டு வந்தான். நானும் சாப்பிட்டேன். தேவர் தலைவனான இந்திரன் ஒரு தங்கக் குவளையில் தேவாமிர்தத்தைத் தந்திருந்தால், அதுகூட இவ்வளவு ருசித்திருக்காது என்றே எனக்குத் தோன்றியது. என் நெஞ்சம் அன்பாலும் நன்றியாலும் நிறைந்தது. கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.

'கேத்ரி மன்னருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்ட பிறகு நான் அவரிடம் இதனைத் தெரிவித்தேன். அவர் உடனடியாக அவனை வரவழைத்தார். தனது தவறுக்குத் தண்டனை கிடைக்கப் போகிறது என்று அவன் நடுங்கியபடியே வந்தான். மன்னர் அவனைப் புகழ்ந்ததுடன் அவனுக்குப் பொன்னும் பொருளும் ஏராளமாகக் கொடுத்து அனுப்பினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Mon May 20, 2013 2:42 am

"முட்டாள்களை சந்திப்பது முதல் தடவையல்ல!"

ராஜபுதனத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் சுவாமிஜி. அந்தப் பெட்டியில் அவரைத் தவிர இரண்டு வெள்ளையர்கள் இருந்தனர். சுவாமிஜியி ஆங்கிலம் அறியாதவர் என்றெண்ணி அவரைக் கேவி செய்தும் ஏசியும் சிரித்தபடி வந்தனர். சுவாமிஜி அமைதியாக இருந்தார். தமக்கு ஆங்கிலம் தெரிந்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை.

ரயில் ஒரு நிலையத்தில் நின்றதும் அங்கிருந்த ஒருவரிடம், 'தண்ணீர் வேண்டும்' என்று ஆங்கிலத்தில் கேட்டார். சுவாமிஜி ஆங்கிலம் பேசுவதைக் கேட்ட அந்த வெள்ளையர்கள் இரு வரும் துணுக்குற்றனர். சுவாமிஜியிடம் வந்து, 'நாங்கள் இவ்வளவு உங்களைக் கேலி செய்தும் நீங்கள் எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்தீர்களே, 'அது ஏனா? ஏனெனில், நண்பர்களே, நான் முட்டாள்களைச் சந்திப்பது இது முதல் தடவை அல்ல' என்றார். ஆங்கிலேயர்களுக்கு ஆத்திரம் வந்தது. அவரை அடிப்பதற்குத் தயாராயினர். சுவாமிஜி அதற்கும் தயாராக எழுந்தார். அவரது உடம்பையும் வலுவான கைகளையும் கண்ட வெள்ளையர்கள் அவரிடம் பணிந்து போவதே மேல் என்று அமைதியாகி விட்டார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Mon May 20, 2013 2:43 am


விலகிய புலி!

ஒரு முறை சுவாமிஜிக்கு தோன்றியது.. என் உடம்பும், கை கால்களும் நன்றாகத்தானே இருக்கின்றன. நான் வீடு வீடாகச் சென்று பிச்சை வாங்கி உண்பது சரிதானா? என்று.

அவர் சிந்திக்கலானார். இந்த எண்ணம் எழுந்ததும் அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

எனக்கு உணவு தரும் ஏழைகளுக்கு என்னால் என்ன பயன்? அவர்கள் ஒரு பிடி அரிசி மீதம் பிடிக்க முடியுமானால் சொந்தக் குழந்தைகளுக்கே அது ஒரு நாள் உணவாகுமே. அதெல்லாம்தான் போகட்டும், இந்த உடலைக் காப்பாற்றி என்ன ஆக வேண்டும்? இனி நான் பிச்சையெடுக்க மாட்டேன் என்று தீர்மானம் செய்து கொண்டார் சுவாமிஜி. அந்த எண்ணம் தீவிரமாயிற்று. ஏதாவது காட்டிற்குச் சென்று தவம் புரிந்து, உடல் வற்றி உலர்ந்து, காய்ந்து சருகுபோல தானாக விழும்வரை உண்ணா நோன்பிருப்பது என்று உறுதி செய்து கொண்டார்.

இந்த எண்ணத்துடன் ஒரு காட்டிற்குள் நுழைந்து அன்ன ஆகாரம் இல்லாமல் ஒரு நாள் முழுவதும் நடந்தார். மாலை வேளை வந்த போது மயக்க நிலையில் மரம் ஒன்றின் கீழே சாய்ந்து பகவானைத் தியானிக்கலானார்.

சிறிது தியானம் கலைந்த போது...

ஆகா.. அதோ தெரியும் இரண்டு கனல் துண்டுகள்..

அவை.. சந்தேகமேயில்லை! புலியின் கண்கள் தாம்!

அதோ, அந்தக் கண்கள் நெருங்கி நெருங்கி வந்தன. இதோ வந்துவிட்டன!

சுவாமிஜியின் உடலும் சரி, உள்ளமும் சரி இம்மிகூட அசையவில்லை. அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்த அந்த புலியும் ஏனோ அவருக்குச் சற்று தூரத்தில் படுத்துக் கொண்டது.

புலியை அன்புடன் நோக்கினார் சுவாமிஜி.

ஒரு வறட்டுச் சிரிப்பு அவரது முகத்தில் படர்ந்தது. சரிதான். என்னைப் போல் இந்தப் புலியும் பட்டினி கிடந்ததாகத் தெரிகிறது. இருவரும் பட்டினி. இந்த என் உடலால் உலகுக்கு எந்த நன்மையும் விளையுமென்று தோன்றவில்லை. இந்தப் புலிக்காவது பயன்படும் என்றால் அது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று எண்ணிக் கொண்டார். அமைதியாக, அசைவின்றி தம்மை மரத்தில் நன்றாகச் சாய்த்துக் கொண்டார். கண்களை மூடி, இதோ இப்போது புலி என் மீது பாயப் போகிறது என்று நினைத்தபடி அமர்ந்திருந்தார். ஒரு கணம், இரண்டு கணம், ஒரு நிமிடம் என்று நேரம் கடந்தது. புலி பாயக் காணோம். சற்றே சந்தேகம் எழுந்தது. கண்களைத் திறந்து பார்த்தார். அங்கே புலி இல்லை, அது சென்றுவிட்டிருந்தது. ஆகா! பரம்பொருள் தம்மை எப்படியெல்லாம் காத்து வருகிறார் என்பதை அகம் உருகி நினைத்துப் பார்த்தார். அன்றைய இரவை அங்கேயே ஆத்ம சிந்தனையில் கழித்தார். பொழுது விடிந்தது. முந்தின நாளின் களைப்பு, சிரமம் எதுவும் உடம்பில் இல்லை. உடம்பும் மனமும் ஒரு புது ஆற்றலைப் பொற்றது போல் இருந்தது. தமது யாத்திரையைத் தொடர்ந்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Mon May 20, 2013 2:44 am

ஸ்ரீராமர் அனுப்பிய உணவு!

கோடைக்காலத்தில் ஒரு முறை சுவாமிஜி உத்தரப் பிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் பயணம் செய்தான் வியாபாரி ஒருவன். சுவாமிஜியிடம் பணமோ வேறு எந்த வசதியுயோ இல்லை என்பதைக் கண்ட அவன் அவரை ஏளனத்துடன் பார்ப்பதும் கேலி செய்வதுமாக இருந்தான். ஒவ்வொரு நிலையத்தில் ரயில் நிற்கும் போதும் நன்றாகச் சாப்பிட்டான். தவறாமல் சுவாமிஜியைக் கேலி செய்தான். கடைசியாக தாரிகாட் என்ற இடம் வந்தது. அது மதிய வேளை. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. நல்ல பசியும் தாகமும் சுவாமிஜியை வாட்டின. சுவாமிஜியிடம் ஒரு கமண்டலம் கூட இல்லை. ரயில் நிலையத்திலுள்ள கூரையின் கீழ் அமரச் சென்றார். சுமை தூக்கும் தொழிலாளி ஒருவன் அங்கே அவருக்கு இடம் தர மறுத்து விட்டான். எனவே அவர் வெயிலில் தரையில் அமர்ந்தார்.

அங்கும் அந்த வியாபாரி வந்து அவர் காணும்படி நல்ல இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டான். உணவு வரவழைத்து அவருக்கு முன்னாலேயே சாப்பிட்டான். இத்துடன் நில்லாமல் சுவாமிஜியிடம், 'ஏய் சன்னியாசி! பணத்தைத் துறந்ததால் வந்த கஷ்டத்தைப் பார்த்தாயா? சாப்பிடவோ தாகத்தைத் தீர்த்துக் கொள்ளவோ உனக்கு வழியில்லை. என்னைப்போல் நீயும் ஏன் சம்பாதிக்கக் கூடாது? நன்றாகச் சம்பாதித்தால் வேண்டுமட்டும் அனுபவிக்கலாமே!' என்று வம்பு பேசினான்.

திடீரென்று காட்சி மாறியது! அங்கே வந்தான் ஒருவன். அவனது கையில் ஒரு பொட்டலம். தண்ணீர், டம்பளர், இருக்கை போன்றவை இருந்தன. இருக்கையை ஒரு நிழலில் விரித்துவிட்டு நேராக அவன் சுவாமிஜியிடம் வந்தான். 'சுவாமிஜி, நான் உங்களுக்காக உணவு கொண்டு வந்திருக்கிறேன். வாருங்கள்' என்று அழைத்தான். சுவாமிஜி இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

வந்தவன் மீண்டும் சுவாமிஜியிடம், 'சுவாமிஜி, வாருங்கள் சீக்கிரம் வந்து சாப்பிடுங்க' என்றான்.

சுவாமிஜி: 'இதோ பாரப்பா, என்னை நீ வேறு யார் என்றோ தவறுதலாக நினைத்து அழைக்கிறாய். நான் உன்னைப் பார்த்ததுகூட இல்லை.'

வந்தவன்: 'இல்லை சுவாமிஜி, நான் கண்ட துறவி நீங்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லையே!'

சுவாமிஜி (வியப்புடன்): 'நீ என்னைக் கண்டாயா? எங்கு கண்டாய்?'

வந்தவன்: ' நான் இனிப்புக் கடை வைத்திருக்கிறேன். மதிய உணவிற்குப் பிறகு வழக்கம் போல் சற்று கண்ணயர்ந்தேன். அப்போது ஸ்ரீராமர் என் கனவில் தோன்றினார். உங்களைக் காண்பித்து, "இதோ என் மகன் இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருக்கிறான். உடனே எழுந்து பூரி, இனிப்பு எல்லாம் எடுத்துக் கொண்டு ரயில்நிலையத்திற்குப் போ" என்றார். நான் விருட்டென்று எழுந்தேன். அப்போது தான் அது கனவு என்பது புரிந்தது. எனவே அதனை ஒதுக்கித் தள்ளிவிட்டு மீண்டும் படுத்துத் தூங்கினேன். ஸ்ரீராமர் மீண்டும் வந்து என்னை உலுக்கி எழுப்பினார். அதன்பிறகு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அவர் கூறியதுபோல் அனைத்தையும் தயாரித்து எடுத்துக் கொண்டு வந்தேன். நான் கனவில் கண்ட அதே நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். தொலைவிலிருந்தே உங்களை நான் கண்டு கொண்டேன். வாருங்கள், மிகவும் பசியாக இருப்பீர்கள். எல்லாம் ஆறிப்போகுமுன் சாப்பிடுங்கள்.'

இவை அனைத்தையும் கண்டு கொண்டிருந்தான் வியாபாரி. சாட்சாத் ஸ்ரீராமரே வந்து உணவு அனுப்பியிருக்கிறார் என்றால் அவர் எத்தகைய உயர்ந்த மகானாக இருப்பார் என்பதை எண்ணிப் பார்த்த அவனார் அதன்பிறகு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. உடனே எழுந்து ஓமோடி வந்து சுவாமிஜியின் திருப்பாதங்களில் கூழ்ந்து மன்னிப்பு கேட்டான். சுவாமிஜி மௌனமாக அவனை ஆசீர்வதித்துவிட்டு சாப்பிடச் சென்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Mon May 20, 2013 2:45 am

சுவாமிஜி காட்டிய ஆன்மிகம்: பகுத்தறிவைப் பயன்படுத்துவாய்!

சுவாமிஜியுடன் சக பயணியாக ஒருசமயம் வந்து கொண்டிருந்தார் ஒருவர். அவர் நன்கு படித்திருந்தார். உலக விஷயங்கள் தெரிந்தவராகவும் புத்திக் கூர்மை உடையவராகவும் காணப்பட்டார். ஆனால் அற்புதங்களைப் பெரிதும் நம்புபவராக இருந்தார். சுவாமிஜி தாம் இமயமலையில் வாழ்ந்திருப்பது பற்றி கூறியதும் அவர், சுவாமிஜி அங்கே சித்தர் கணங்களைச் சந்தித்தீர்களா? என்று கேட்டார். அந்த மனிதர் எதுவரை போகிறார் என்பதைப் பார்க்க விரும்பிய சுவாமிஜி நிகழாத பல அற்புதங்களைத் தாராளமாக அவிழ்த்து விட்டார். மகாத்மாக்களான சித்தரக்ள் தம்மிடம் வந்ததாகவும், உலகின் முடிவைப் பற்றி தம்மிடம் தெரிவித்ததாகவும் கூறினார். இந்த யுகம் எப்போது முடியப் போகிறது, எப்போது பிரளயம் நிகழும் அடுத்த யுகம் பிறக்கும்போது எந்தெந்த சித்தர்கள் யார் யாராகப் பிறந்து எப்படி எப்படி மனித குலத்தை வழிநடத்தப் போகிறார்கள் என்றெல்லாம் சுவாமிஜி அளந்தார். அந்த சக பயணி பூரண நம்பிக்கையுடன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு இவ்வளவு தூரம் தனக்கு உண்மைகளை உணர்த்திய சுவாமிஜியை நன்றியுடன் உணவருந்த அழைத்தார்.

அப்போதெல்லாம் சுவாமிஜி கையில் பணம் வைத்துக் கொள்வதில்லை. யாரேனும் டிக்கட் வாங்கிக் கொடுத்தால் அதை மட்டும் ஏற்றுக் கொண்டு பயணம் செய்வார். மற்றபடி, உணவு, உடை, இருக்கை இவை ஆண்டவன் விட்ட வழியாகட்டும் என்று இருந்து வந்தார். அன்று அந்த மனிதர் அளித்த உணவை ஏற்றுக் கொண்டார். பிறகு ஒரு கணம் அவரை அமைதியாகப் பார்த்தார். அந்த மனிதர் அறிவுக் கூர்மை, இதயம் இரண்டையும் பெற்றிருந்தார். ஆனால், இரண்டையும் கெடுத்தது அவருடைய மூட நம்பிக்கை. அவருக்கு உண்மையை விளக்க விரும்பிய சுவாமிஜி அன்புடன் அவரிடம் கூறினார்....

இவ்வளவு படிப்பும் அறிவும் உள்ள நீர், நான் கூறிய இந்தக் கற்பனைக் கதைகளை எல்லாம் நம்புகிறீரே! நண்பரே, நீர் புத்திசாலி. உம்மைப் போன்றவர்கள் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டாமா? ஆன்மீகம் என்பது அற்புதமும், சித்து விளையாட்டுகளும் அல்ல நண்பரே. இவற்றில் நாட்டம் இருக்கும் வரை ஒருவன் ஆசைகளுக்கு அடிமையாகவும் சுயநலவாதியாகவும்தான் இருப்பான். நற்பண்பு நன்னடத்தை ஆகியவற்றில்தான் உண்மையான சக்தி இருக்கிறது. அந்த சக்தியைப் பெறுவதே ஆன்மீகம். வேகங்களையும் ஆசைகளையும் வெல்வதுதான் ஆன்மிகம். வாழ்க்கைப் பிரச்னைகளைத் தீர்க்க உதவாத சித்து விளையாட்டுக்களைத் துரத்திச் செல்வது நமது ஆற்றலை விரயம் செய்வதே தவிர வேறில்லை. அது மனத்தைக் கெடுக்கும். இந்த அபத்தம்தான் இன்று நாட்டின் நெறியைக் குலைத்து வருகிறது. நம்மை மனிதனாகச் செய்வதற்கான வலு வாய்ந்த பகுத்தறிவையும் பொது நல உணர்ச்சியையும் தருகின்ற தத்துவமும் சமயமுமே இன்றைய தேவை... என்றார் சுவாமிஜி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா on Mon May 20, 2013 2:46 am

உண்மையான தேசபக்தி எது?

ராமசுவாமி ஐயரின் மகனான ராமசுவாமி சாஸ்திரியிடம் சுவாமிஜி கூறிய கருத்துக்கள் அவர் பின்னாளில் எத்தகைய பணியைச் செய்ய விரும்பினார் என்பதை எடுத்துக்காட்டின. தேச பக்கி, தேச பக்தி என்கிறார்கள். உண்மையில் அது என்ன? கண்மூடித்தனமாக ஒரு நம்பிக்கையா? இல்லை. உணர்ச்சியின் எழுச்சியா? இல்லை. நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள பேரார்வம் தான் உண்மையில் தேச பக்தி. இந்தியா முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும் துன்பமும் ஒழுக்கச் சீர்குலைவுகளும் தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது.

இந்தத் தீமைகளை வேரோடு களைய வேண்டும் என்று துடிக்கிறேன். "அவர்களின் தீவினை அது, அதனால் கஷ்டப்படுகிறார்கள்' என்று கர்மம் பற்றி பேசுகிறார்கள். தயவு செய்து அப்படிப் பேசாதீர்கள், கஷ்டப்படுவது அவர்களின் கர்மம் என்றால், அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது கர்மம். கடவுளைக் காண வேண்டுமானால் மனிதனுக்குத் தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டுமானால் பட்டினியில் வாடுகின்ற லட்சோபலட்சம் ஏழை நாராயணர்களுக்குச் சேவை செய்யுங்கள். அது தான் உண்மையான தேச பக்தி'.

இத்தகைய கருத்துக்களை சுவாமிஜி அங்கே பலரிடம் பேசினார். இந்தியா முழுவதையும் மாற்றியமைக்கும் வகையில் எத்தகைய சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதையெல்லாம் எடுத்துக் கூறினார். சுவாமிஜியின் விஜயமும் அவர் சட்டம்பி சுவாமிகள் போன்றோரைச் சந்தித்துப் பேசியதும் கேரளம் பின்னாளில் கண்ட சமுதாயப் புரட்சிகளுக்கு ஒரு விதையாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை. ஒன்பது நாட்கள் திருவனந்தபுரத்தில் பழித்துவிட்டு, 1892 டிசம்பர் இறுதியில் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்குப் புறப்பட்டார் சுவாமிஜி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum