ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆதி சங்கரரின் பிரமாணம்

View previous topic View next topic Go down

ஆதி சங்கரரின் பிரமாணம்

Post by அன்பு தளபதி on Sun Mar 03, 2013 9:13 pm

உறைந்த கணத்தில் இருந்து சலனமுற்று நகர்ந்து கொண்டிருந்தது காசியினூடே கங்கை, இன்னும் புலரா இக்காலையில் நிறைந்து நகர்வது தெய்வ அருளா, எங்கும் நிறைந்த பிரம்மமா, உறைந்து இறுகிய குளிரை உடைத்து கால் நனைத்தார் ஆதி சங்கரர், அந்த குளிரில் உடலில் ஒரு குளிர்ச்சி பரவியது மூச்சு ஆழ்ந்தது நெஞ்சு நிறைந்தது, நினைவு ஒன்றில் நின்றது, இந்த கணம் தவிர அவருக்கு எதுவும் தோன்றவில்லை,

நல்லது குளித்தாயிற்று கூடவே பொழுதும் புலர துவங்கியாயிற்று, இனி அன்றாட பணிகளை கவனிக்கலாம், அத்வைத காலடியை காசியில் அழுத்தமாய் பதித்து வீதிகள் வழியே கடந்து கொண்டிருந்த சங்கரரரும் சீடர்களும், கையில் கள் பானை கொண்டு கூடவே நாய் ஒன்றல்ல நான்கு , பக்கத்தில் ஒருத்தி மனையாள், பார்வையும் கூட அழுக்காகும் என்ற உருவம், நகர்ந்தது மலையென கூறலாம் அத்தனை சாவகாசமாய் அந்த மலை போன்ற உருவம் எதிரே வந்து கொண்டிருந்தது, அவன் நகர்வதாய் தெரியவில்லை, கல்லால் அவன் எரிந்தது போதையின் ஜோதி,

அவன் நகரவில்லை, தன் சாந்த இயல்பிலிருந்து நகர்ந்தது சங்கரரின் மனம், சிந்திப்பதை காட்டிலும் அத்தனை வேகமாக வீசினார் வார்த்தைகளை, "அட சண்டாளனே வருவதை அறியவில்லையா, என் பாதையில் இருந்து விலகு அப்பால் செல்", அவன் கண்கள் கள்ளினால் சிவந்து இருந்தது, சங்கரர் கண்கல் கோபத்தால் சிவக்க துவங்கியிருந்தது,

அந்த பெரும் மனிதன் புன்னகைக்க துவங்கினான் முதல் சூரிய கிரணம் இருளை கிழிப்பதை போல அவன் கருத்த மேனியில் ஒளிர்ந்தன பற்கள், "பிரம்மத்தை உணர்ந்த பிராமணரே , சூத்திரானாய் பிறந்து தன செயல்களால் எவன் உயர் நிலையை அடைகிறானோ அவனே அந்தணன் இருபிறப்பாளன் அந்த அந்தணர்களுள் உயர்ந்தவே, நீங்கள் யாரை நகர சொன்னீர்கள் என சற்று விளக்காமாக சொல்லுங்கள், அவன் சங்கரரை நோக்கி பேசியவைகள் அவருக்கே சற்று வியப்பை அளித்தது, இவனை சண்டாளன் என்றேன் இவனோ என்னை பிரம்மத்தை உணர்ந்த பிராமணனே என்கிறேன் இருபிறப்பில் உயர்ந்தவரே என்கிறான், என்ன விந்தை இது என சிந்திக்கும் பொழுதே அந்த கருங்குன்று மேலும் வார்த்தைகளை பொழிய துவங்கியது, "நீங்கள் எதை உங்கள் பாதையில் இருந்து நகர கூறினீர்கள் இந்த உடலையா அல்லது உள்ளே உறையும் சுத்த அறிவாகிய ஆன்மாவையயா, உணவால் உண்டாக்கப்பட்ட இந்த உடல் என்றால் உங்களுடையதும் என்னுடையதும் உணவாலே உண்டாக்கப்பட்டது தானே மேலும் உங்கள் வாதப்படியே அத்தனையும் பிரம்மம்தானே அப்படியெனில் ஒரு பிரம்மம் இன்னொரு பிரமத்தை ஏன் நகர சொல்ல வேண்டும் அய்யா, நல்லது இந்த ஆன்மாவை எனில் தங்கள் கூறியதை போல அனைவர் உள்ளும் உறைவது ஒரே ஆன்மா தானே இதில் புலையன் பிரமாணன் என எப்படி வேற்றுமை கண்டீர்கள், இன்னுமொன்று எவராலும் அசுத்த படுத்த முடியாதது ஆன்மா எனில் நான் ஏன் நகர வேண்டும் , இதோ நகர்கிறதே கங்கை இதில் பிரகாசிக்கும் சூரியன் சேரிநீரில் கருத்தா தெரிவான்,இல்லை எங்கும் பரந்த ஆகாயம் பொற்குடத்தில் நிறைவது போல என் கல்லுபானையில் நிறையாதா ? எல்லாம் பிரம்மம் எனில் பிராமணன், புலையன் என எப்படி வேற்றுமை கொண்டீர்கள்" சங்கரரின் கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிற்கும் சக்தியை இழப்பதாக தோன்றியது , பாரதகண்டத்தின் அத்தனை போரையும் வென்ற தர்க்க வாதியின் கணங்கள் உறைந்தது போல தோன்றியது,அந்த மகானின் கரங்களும் மனதும் செய்ய தூண்டியது ஒன்றே என்பதை போல எவனை கண்டாளான் எட்ராரோ அவன் கால்களில் விழுந்தார், கண்களில் கண்ணீர் மனதுக்குள் மெல்ல கூற துவங்கினார்


" விழித்திருக்கும்போதும் கனவிலும் உறக்கத்திலும் ஒளிர்வது ஒரே ஆன்மாவே என்பதையும், படைப்பின் பிரமாண்டம் முதல் நுண்ணிய உயிர்கள் வரை அனைத்திலும் உறைவது ஒரே ஆன்மா என்பதையும் அதுவே பிரபஞ்சத்தின் செயல்களின் சாட்சியாகவும் விளங்குகிறது என்பதையும் காண முடியாவிடினும், நானே அந்த பிரம்மம் என்பதை எவர் உணர்கிறாரோ அவரே என் குரூ,

நான் மேலும் இந்த பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்துமே பிரம்மமே, மனிதனின் மூன்று குணங்களாலே இந்த பிரம்மம் பல்வேறு பொருளாக உயிராக வடிவெடுக்கிறது, இந்த வேற்றுமையை கடந்து அனைத்தும் பிரம்மமே என எவர் உணர்கிரரே அவரே என் குரு,

குருவின் மொழியறிந்து அழியக்கூடியது மாயை என உணர்ந்து, சலனமற்ற மனதுடன் எங்கும் நிரந்த பிரம்மத்தை தியானித்து செய்த வினையும் செய்கின்ற வினையும் தூய உணர்வினால் எரித்து, இந்த பிறவி என்பதே பிரம்மத்தை அடையவே என்பதை எவர் உணர்ந்தவ்ரோ அவரே என் குரு,

பிரகாசமான சூரியனை மேகங்கள் மறைப்பதை போல அறியாமையால் மறைக்கப்படும் அனைத்துள்ளும் ஒளிர்வது ஒரே ஆன்மாவே அந்த பரிபூரண பிரம்மமே என்பதைஉணர்ந்தவரே உண்மையான யோகி அவரே என் குரு ,

எந்த பேரானந்த கடலின் சிறு துளியினால் இந்திராதி தேவர்கள் திருப்தி அடைவார்களோ முனிவர்கள் அமைதியான உள்ளத்தை பெற்றவர்கள் ஆவார்களோ, அந்த பிரம்மத்தை தன்னுள் உணர்ந்து ஒன்றி கலந்தவரே அந்த பிரம்மம் ஆனவரே என் குரு,

இறையே இந்த உடலால் நான் உன் அடிமை, மூன்று விழிகளை உடைய இறைவா என் ஆன்மா உன் பெரும் ஜோதியின் சிறு பொறி, நீயே என்னுள்ளும் காணும் அனைத்து உயிரிலும் நிறைந்தவன் வேதங்களின் மூலம் என் அறிவின் மூலம் என் உறுதியான நிலைப்பாடு இதுவே"

சண்டாளன் என கூறப்பட்ட அந்த மலை சங்கரருக்கு இப்போது சங்கரனாக மெல்ல பார்வையில் இருந்து மறைந்து கொண்டிருந்தது.

www.maniajith.blogspot.com
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஆதி சங்கரரின் பிரமாணம்

Post by rameshnaga on Mon Mar 04, 2013 11:23 am

ரொம்ப...ரொம்ப...ரொம்ப....அருமையான பகிர்வு...maniajith . வாழ்த்துக்கள்.
avatar
rameshnaga
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3311
மதிப்பீடுகள் : 527

View user profile http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

Re: ஆதி சங்கரரின் பிரமாணம்

Post by அன்பு தளபதி on Wed Mar 13, 2013 8:52 pm

@rameshnaga wrote:ரொம்ப...ரொம்ப...ரொம்ப....அருமையான பகிர்வு...maniajith . வாழ்த்துக்கள்.

நன்றி ரமேஷ் நாகா நலமா தாங்கள்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஆதி சங்கரரின் பிரமாணம்

Post by mbalasaravanan on Thu Mar 14, 2013 10:49 am

அருமையான பகிர்வு இன்னும் எதிர்ப்பார்கிறேன்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: ஆதி சங்கரரின் பிரமாணம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum