ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முருகா! முருகா! முருகா!” என்று ஓது!

View previous topic View next topic Go down

முருகா! முருகா! முருகா!” என்று ஓது!

Post by சாமி on Wed Feb 27, 2013 11:36 pm

அறநெறி வழுவாத ஓரரசன் வேட்டையாடினான். விலங்கின் மீது விட்டகணை குறிதவறி ஒரு புறம் தவம் செய்து கொண்டிருந்த ஓரு முனிவரைக் கொன்று விட்டது. அந்தப் பிரமகத்தி தோசம் அரசனை தொடர்ந்து அல்லற்படுத்தியது. நின்றாலும் சென்றாலும் அரசனை விடாது நிழல் போல் நெருங்கி நிலை கலங்க வைத்தது. மன்னன் வாடினான். அந்த அல்லல் அகலும் சாதனத்தை நாடினான். ஒரு தவ முனிவருடைய ஆசிரமத்தை அடைந்தான்.

அரசன் அடைந்த அந்தச் சமயத்தில் அருந்தவ முனிவர் இல்லை. வெளியே சென்றிருந்தார். வெளியே சென்றிருந்தார்.
ஆசிரமத்தின் வாசலில் மாதவ முனிவருடைய மைந்தன் இருந்து அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்மறைகளை ஓதிக் கொண்டிருந்தான். சிறுவன் அரசனை வரவேற்று இன்சொல் இயம்பினான்.

“குழந்தாய்! நான் இந்த நாட்டையாளும் மன்னன்”

“அரசே உன்னைக் கண்டவுடன் அரசன் என்று உணர்ந்தேன்”

“குழந்தாய், மிகுந்த வேதனையுடன் இங்கு வந்தேன்”

“வேந்தே, நீ வேதனையுடன் வந்தாய் என்பதை உன் வாடிய முகமே உணர்த்துகின்றது”

“மகனே, தவமுனிவர் எங்கே? அவரிடம் குறையைக் கூறிப் பரிகாரம் தேட வேண்டும்”

“அரசே, அப்பா வெளியே சென்றனர். என்னை சிறுகுழந்தையென்று எண்ணாதே. உனக்கு என்ன துன்பம் சொல். அதற்குப் பரிகாரம் நான் கூறுவேன்.”

‘மகனே, நான் அபுத்திபூர்வமாக ஒரு முனிவரைக் கொன்றுவிட்டேன். பிரம்மகத்தி என்னைத் தொடர்ந்து துயரந்தருகின்றது. அப்பாவத்தைப் போக்கும் சாதனையைக் கேட்க வந்தேன்”

“அரசர் பெருமானே, வருந்தாதே. இவ்வளவுதானே? இதற்கென்ன பெரிய ஆராய்ச்சி? சிறுபிள்ளையென்று என்னைக் கருதாதே. நான் சொல்கின்றபடி செய்; பிரம்மகத்தி நீங்கும். இதோ இந்த நதியில் நீராடி, நீறாடி, முருக வேளை உள்ளக்கண்ணால் நோக்கி, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, முருகா! முருகா! முருகா!” என்று ஓது. பிரம்மகத்தி நீங்கும்.”

அரசன் அவ்வாறு அன்புடன் அகமகிழ்ந்து ஓதி பிரம்மகத்தி நீங்கப்பெற்றான். முனிமைந்தனைத் தலையால் வணங்கி விடைபெற்றிச் சென்றான்.

பின்னர், முனிவர் பெருமான் ஆசிரமத்தை வந்தடைந்தார். தேர்ச்சக்கரங்களின் சுவட்டினைக் கண்டார்.
“மகனே, இங்கு வந்தவர் யார்?”

“அப்பா, இந்த நாட்டினை ஆளும் மன்னவர் வந்தார்.”

“கண்ணே, மன்னர் எதன்பொருட்டு வந்தார்?”

“தந்தையே, அவரைத் தொடரும் பிரம்மகத்தி தீர வழி கேட்டார். அதற்குப் பரிகாரத்தை நான் பகர்ந்தேன். துயரந்தீர்ந்து மகிழ்ந்து சென்றார்.”

முனிவர் பெருமகிழ்ச்சியடைந்தார். “கண்ணே, மன்னவரை நீ வரவேற்று இன்னுரை கூறிக் கவலை தீர்த்து அனுப்பியதுபற்றி நான் பெரிதும் மகிழ்கின்றேன். நல்லது நீ என்ன பரிகாரத்தைக் கூறினாய்?”

“தந்தையே! பிரம்மகத்தி நீங்க முருக மந்திரத்தை மும்முறை கூறுமாறு உபதேசித்தேன்”

முனிவரின் விழிகள் சிவந்தன.புருவங்கள் துடித்தன; உடல் கொதித்தது.
“மூடனே! நீ என் மைந்தனா? உனக்கு ஏன் இந்தப் புத்தி உண்டாயிற்று?
(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2398
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: முருகா! முருகா! முருகா!” என்று ஓது!

Post by சாமி on Thu Feb 28, 2013 10:22 am

“மூடனே! நீ என் மைந்தனா? உனக்கு ஏன் இந்தப் புத்தி உண்டாயிற்று? உனக்கு சிறிதும் முருக பக்தியில்லையே, பெருந்தவறு செய்துவிட்டாயே, பேதையே! என்பால் தமிழ்வேதம் ஓதிய உனக்கு உறுதியில்லையே?”

மைந்தன் நடுநடுங்கினான், தந்தையின் தாள் மீது விழுந்தான். பலகாலும் பணிந்தான். பதைபதைத்தான்.

“அப்பா! நான் என்ன பிழை செய்தேன்? நம் குலதெய்வம் முருகக் கடவுள். அந்தக் கதாநாயகன் திருமந்திரத்தைத்தானே ஓதச் சொன்னேன்! இது பிழையாகுமா?”

“மகனே! ஒரு மாத்திரை தந்தால் தீரக்கூடிய நோய்க்கு மூன்று மாத்திரைகள் தரலாமா? ஒருமுறை முருகா என்றால் கோடி பிரம்மகத்திகள் தீருமே! நீ மூன்றுமுறை சொல்லச்சொன்னாயே, நீ முருகமந்திரத்தின் அருமை பெருமைகளை அறிந்தாயில்லை.!” என்றார்.

அம்மைந்தன் அருந்தவ முனிவரின் அடிமலர் மீது வீழ்ந்து பிழை பொருத்தருளுமாறு பலகாலும் வேண்டினான். முனிவர் தண்ணருள் புரிந்தார்.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2398
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: முருகா! முருகா! முருகா!” என்று ஓது!

Post by chinnavan on Thu Feb 28, 2013 10:47 am

பிரமகத்தி தோசம்
விளக்குங்களேன்
avatar
chinnavan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1812
மதிப்பீடுகள் : 290

View user profile

Back to top Go down

Re: முருகா! முருகா! முருகா!” என்று ஓது!

Post by சாமி on Fri Mar 01, 2013 12:42 pm

@chinnavan wrote:
பிரமகத்தி தோசம்
விளக்குங்களேன்

பரம்பொருள் சிவபெருமான் உயிர்கள் பொருட்டு செய்யும் தொழில்கள் ஐந்து.
அவை
படைத்தல்,
காத்தல்,
அழித்தல்(ஒடுக்குதல்),
மறைத்தல்,
அருளல்

என்பனவாகும். இந்த 5 தொழில்களைச் செய்ய நியமிக்கப்பட்ட பணியாளர்கள் 5 பேர். அவர்கள் செய்யும் தொழில்கள்
நான்முகன்(பிரம்மா) – படைத்தல்
திருமால் (விஷ்ணு) – காத்தல்
உருத்திரன் – ஒடுக்குதல்
மகேசுவரன் – மறைத்தல்
சதாசிவன் – அருளல்


உலகில் உள்ள உயிர்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு இந்த ‘பிரம்மகத்தி’ தோசம் சூழும் என்பார்கள். மாற்றான் மனைவியை கவர்தலுக்கும் அறம் அல்லாதன செய்தவர்களுக்கு இந்த பாவம் ஏற்படும் என்பார்கள். இந்த பாவத்தைப் போக்குதற்கு பரம்பொருளை விட்டால் வேறு ஆள் கிடையாது. பரம்பொருள் ஒருவரே. அவர் சிவபெருமான். சிவபெருமானே தனக்கு மகனாக முருகனாக வந்தார் என கந்தபுராணம் கூறுகிறது.

ஆக பாவம் நீங்க பரம்பொருளை விட்டால் வேறு ஆள் கிடையாது. பிறந்து பிறந்து இறக்கும் மேம்பட்ட உயிர்களான திருமாலும், நான்முகனும் மற்ற சிறு தெய்வங்களும் இதைச் செய்யமுடியாது. இவர்களை வணங்கி வேண்டும்போது இந்த சிறு தெய்வங்கள் தங்களை நம்பும் பக்தர்களுக்காக பரம்பொருளை அணுகி இந்த காரியத்தைச் செய்துதருமாறு வேண்டும். பரம்பொருள் இந்தச் சிறு தெய்வங்களுக்காக இதனை அருளுவார்.

இந்த ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்னும் கொள்கை தமிழருடையது.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2398
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: முருகா! முருகா! முருகா!” என்று ஓது!

Post by chinnavan on Fri Mar 01, 2013 12:48 pm

ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்னும் கொள்கை தமிழருடையது. சூப்பருங்க
விளக்கம் அருமை தொடருங்கள்
avatar
chinnavan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1812
மதிப்பீடுகள் : 290

View user profile

Back to top Go down

Re: முருகா! முருகா! முருகா!” என்று ஓது!

Post by DERAR BABU on Fri Mar 01, 2013 12:54 pm

தங்களுக்கு நன்றி சாமி . தொடரட்டும் தங்கள் பதிவுகள் .
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: முருகா! முருகா! முருகா!” என்று ஓது!

Post by செம்மொழியான் பாண்டியன் on Fri Mar 01, 2013 2:06 pm

@சாமி wrote:
@chinnavan wrote:
பிரமகத்தி தோசம்
விளக்குங்களேன்

பரம்பொருள் சிவபெருமான் உயிர்கள் பொருட்டு செய்யும் தொழில்கள் ஐந்து.
அவை
படைத்தல்,
காத்தல்,
அழித்தல்(ஒடுக்குதல்),
மறைத்தல்,
அருளல்

என்பனவாகும். இந்த 5 தொழில்களைச் செய்ய நியமிக்கப்பட்ட பணியாளர்கள் 5 பேர். அவர்கள் செய்யும் தொழில்கள்
நான்முகன்(பிரம்மா) – படைத்தல்
திருமால் (விஷ்ணு) – காத்தல்
உருத்திரன் – ஒடுக்குதல்
மகேசுவரன் – மறைத்தல்
சதாசிவன் – அருளல்


உலகில் உள்ள உயிர்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு இந்த ‘பிரம்மகத்தி’ தோசம் சூழும் என்பார்கள். மாற்றான் மனைவியை கவர்தலுக்கும் அறம் அல்லாதன செய்தவர்களுக்கு இந்த பாவம் ஏற்படும் என்பார்கள். இந்த பாவத்தைப் போக்குதற்கு பரம்பொருளை விட்டால் வேறு ஆள் கிடையாது. பரம்பொருள் ஒருவரே. அவர் சிவபெருமான். சிவபெருமானே தனக்கு மகனாக முருகனாக வந்தார் என கந்தபுராணம் கூறுகிறது.

ஆக பாவம் நீங்க பரம்பொருளை விட்டால் வேறு ஆள் கிடையாது. பிறந்து பிறந்து இறக்கும் மேம்பட்ட உயிர்களான திருமாலும், நான்முகனும் மற்ற சிறு தெய்வங்களும் இதைச் செய்யமுடியாது. இவர்களை வணங்கி வேண்டும்போது இந்த சிறு தெய்வங்கள் தங்களை நம்பும் பக்தர்களுக்காக பரம்பொருளை அணுகி இந்த காரியத்தைச் செய்துதருமாறு வேண்டும். பரம்பொருள் இந்தச் சிறு தெய்வங்களுக்காக இதனை அருளுவார்.

இந்த ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்னும் கொள்கை தமிழருடையது.
உண்மைதான் பிரம்மன் படைத்த ஒரு உயிரை காலக் கெடு முடிவதற்குள் துன்புறுத்தவோ கொல்வதற்கோ எவருக்கும் உரிமை இல்லை அவ்வாறு துன்புறுத்தினால் அவருக்கு பிரம்மனால் கேடு விளையும்
ஆனால் அவர் முருக பக்தராக இருந்தால் அதில் விதிவிலக்கு உண்டு ஏனென்றால்,.............
'பிரணவ மந்திரத்தை பிரம்மன் மறந்த கதை' நாம் அனைவருக்கும் தெரியும் தானே
avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1276
மதிப்பீடுகள் : 369

View user profile

Back to top Go down

Re: முருகா! முருகா! முருகா!” என்று ஓது!

Post by ஆரூரன் on Sun Mar 03, 2013 1:28 pm

முருகா! முருகா! முருகா!
முருகா! முருகா! முருகா!
முருகா! முருகா! முருகா!
முருகா! முருகா! முருகா!
முருகா! முருகா! முருகா!
முருகா! முருகா! முருகா!
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: முருகா! முருகா! முருகா!” என்று ஓது!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum