ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மரபுத் தொடர்கள்

View previous topic View next topic Go down

மரபுத் தொடர்கள்

Post by சாமி on Mon Feb 11, 2013 10:37 pm

மரபுத் தொடர்கள் தொடர் பதிவு
நன்றி - தினமணி

பண்டையத் தமிழ்ச் சான்றோர்களும், முன்னோர்களும் வழிவழியாக பொருள் பொதிந்த சொற்றொடர்கள் பலவற்றைப் பேச்சிலும் எழுத்திலும் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். அச்சொற்களை வழிவழியாக வழங்கி வந்த முறையை "மரபுச் சொற்கள்' என்று கூறுவர். தமிழில் கணக்கற்ற மரபுச் சொற்கள் வழங்கி வந்திருக்கின்றன. "அவன் அடாவடியாகப் பேசுகிறான்', "வம்பு தும்புக்குப் போகாதே', "அந்த இடத்தில் ஒரே அமளி துமளி', "அவன் ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொள்கிறான்', "ஆர அமர உட்கார்ந்து பேசுவோம்' - இவ்வாறு நம் முன்னோர் பேசும் மரபுச் சொற்கள் ஏராளம். அம்மரபு வழிவந்த சொற்களை மரபு தவறி பேசுவதோ, எழுதுவதோ வழு (குற்றம்-பிழை) எனவும் கூறப்படுகிறது. அம்மரபுச் சொற்களுள் சிலவற்றை அகர வரிசைப்படி காண்போம்; கற்போம்; அன்றாட வாழ்வில் தொடர்ந்து பேசிப்பழகி, பயன்படுத்தி, தமிழ் மரபுச் சொற்கள் (தொடர்கள்) அழியாமல் காப்போம்!

அகட விகடம் - தந்திரம், தட்டுமாற்று
அடரடி படரடி - பெருங்குழப்பம்

அடாதுடி - தீங்கு, தீச்செயல்
அடாபிடி - கொடுஞ்செயல்

அடிதடி - சண்டை
அடியடியாக - தலைமுறை தலைமுறையாக

அண்டப் புரட்டன் - பெருந்தீயன்
அமளி பண்ணுதல் - சச்சரவு உண்டாக்குதல்

அரட்டல் புரட்டல் - நோய் முற்றுதலால் ஏற்படும் வலி
அரிப்பரித்தல் - கொழித்தெடுத்தல்

அலக்கலக்காய் - தனித்தனியாய்
அல்லோல கல்லோலம் - ஆரவாரம்

அலைகுலையாக்குதல் - நிலைகுலையச் செய்தல்
அல்லும் பகலும் - இரவும் பகலும்

அவசரக் குடுக்கை - பதற்றக்காரன்
அழிவழக்கு - வீண் வழக்கு

அளப்பளத்தல் - அலப்புதல், முறுமுறுத்தல்
அளவளாவுதல் - கலந்து பேசுதல்

அளவு படுத்தல் - வரையறை செய்தல்
அறக்கப்பறக்க - விரைவாக, விழுந்து விழுந்து

அறைகூவுதல் - போருக்கு அழைத்தல்
அறைமுறையிடுதல் - குறை தெரிவித்தல்

அறிதுயில் - யோக நித்திரை
அறிவறியாக - விளக்கமாக, தீர

ஆலாப்பறத்தல் - திண்டாடுதல்
ஆறல் பீறல் - பயனற்றது

ஆறவமர - அமைதியாய்
இசைகேடு - சீர்கெட்ட நிலை

இடக்கு முடக்கு - சங்கடம்
இடுக்குப்பிள்ளை - கைக்குழந்தை

இடுமருந்து - வசிய மருந்து
இடைச்சுவர் - இடையூறு

இருவல் நொருவல் - இடிந்தும் இடியாதும் உள்ள அரிசி முதலியன, நன்றாக மெல்லப்படாத உணவு.
இல்லாததும் பொல்லாததும் - பொய்யும் தீங்கு விளைவிப்பதும்

இலம்படுதல் - வறுமையடைதல்
இலைமறைகாய் - மறைபொருள்

இன்னார் இனியார் - பகைவரும் நண்பரும்

(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மரபுத் தொடர்கள்

Post by சாமி on Thu Feb 21, 2013 11:43 am

ஈட்டுக்கீடு - சரிக்குச்சரி

ஈடேறுதல் - உய்வடைதல்

ஈரொட்டு - உறுதியின்மை

ஈவிரக்கம் - மனக்கசிவு

ஈவுசோர்வு - சமயா சமயம்

உடைப்பில் போடுதல் - அகலத் தள்ளுதல்

உடைப்பெடுத்தல் - வெள்ளத்தால் கரை அழிதல்

உதப்பிவாயன் - எச்சில் தெறிக்கப் பேசுவோன்

உதறுகாலி - காலை இழுத்து இழுத்து நடப்பவன்

எடுப்பெடுத்தல் - அரியதை முயலுதல்

எக்கச்சக்கம், எசகுபிசகு - தாறுமாறு

ஏடாகூடம் - தாறுமாறு

ஏக்கன் போக்கன், ஏக்கி போக்கி - ஒன்றுக்கும் உதவாதவன்

ஏட்டுச் சுரைக்காய் - அனுபவத்தோடு கூடாத கல்வி அறிவு

ஏட்டிக்குப் போட்டி - விதண்டாவாதம்

ஏணல் கோணல் - ஒழுங்கின்மை

ஏணுக்குக் கோண் - எதிரிடையான பேச்சு

ஏதங்கெட்டவன் - பயனற்றவன்

ஓட்டைசாட்டை - பயனற்றது

கக்கல் கரிசல் - கலங்கல் நீர்

கசகசத்தல் - வியர்த்தல்

கசகரணம் போடுதல் - பெருமுயற்சி செய்தல்

கச்சங்கட்டுதல் - ஒரு செயலை முடிக்க வரிந்துகட்டிக்கொண்டு நிற்றல்

கடுக்காய் கொடுத்தல் - ஏமாற்றி விடுதல்

கடைகெடுதல் - மிக இழிவடைதல்

கட்டாகட்டி - விடாப்பிடி, விடாத்தன்மை

கட்டுக்கிடை - நாட்பட்ட சரக்கு

கட்டுக்கோப்பு - புனைந்துரை,

மேற்கூரை

கண்டதும் கடியதும் - நல்லதும் தீயதும்

கண்ட துண்டம் - பல துண்டம்

கண்டானும் முண்டானும் - வீட்டுத் தட்டுமுட்டுச் சாமான்கள்

கண்மூடித்தனம் - கவனமின்மை

கந்தல்கூளம் - தாறுமாறு

கரடுமுரடு - ஒழுங்கின்மை

கற்போடுதல் - காரியத்தைக் கெடுத்தல்

கôதறை கூதறை - ஒழுக்கம் கெட்டவன்

காறுபாறு - கவனிப்பு

கிள்ளிக்காட்டுதல் - குறிப்புக் காட்டுதல்

கிட்டதட்ட - ஏறக்குறைய

கிள்ளுக்கீரை - மிகவும் எளியது

குடுகுடுப்பு - பரபரப்பு

குண்டக்க மண்டக்கம் - சுருண்டு கிடக்கும் நிலை

குழையடித்தல் - ஆளை வசப்படுத்துதல்

குள்ளம் பாய்தல் - தந்திரமாக இருந்தல்

குறுக்கும் மறுக்கும், குறுக்கு நெடுக்கும் - இங்கும் அங்கும்

குறிகெட்டவன் - நெறியற்றவன்

கூட்டநாட்டம் - பொதுமக்கள் கூடும் நிலைமை

கூட்டுமூட்டு - பலரும் கூடுகை,

பழிப்புரை, கூழைக் கும்பிடு - போலி வணக்கம்

(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மரபுத் தொடர்கள்

Post by சாமி on Thu Mar 07, 2013 11:41 am

கேளல் கேளிர் - பகையும் நட்புமில்லாத அயலார்
கைம்மிகுதல் - அளவுகடத்தல்
கையடித்தல் - உறுதி தருதல்
கைப்பாடுபடுதல் - அரும்பாடுபடுதல்
கையைக்கடித்தல் - பொருள் நஷ்டமாதல்
கையோடு கையாய் - காரியத்தோடு காரியமாய், செயலோடு செயலால்
கொஞ்ச நஞ்சம் - சிறிதளவு
கொடி விடுதல் - மிகுதியாதல்
கொழு கொம்பு - பற்றுக்கோடு
கோலாகலம் - கூக்குரல், ஆடம்பரம்

சடைவாறுதல் - இளைப்பாறுதல்
சாலமாலம் - வஞ்சகம்
சித்திரைச் சுழியன் - குறும்பன்
சேர் கொடுத்தல் - காட்டிக்கொடுத்தல்
சொட்டைச் சொல் - பழிச்சொல்

தக்கடி வித்தை - ஏமாற்று
தடங்கோலுதல் - வழிசெய்தல்
தட்டுண்டு போதல் - தடைப்படுதல்
தட்டுமாறி - ஏமாற்றுபவன்
தட்டுமானம் - தந்திரவழி
தாட்டுப் பண்ணுதல் - காலம் கடத்துதல், மறுத்தல்
தந்திதந்தியாய் - வரிசை வரிசையாய்
தலைப்பாமாறி - பெரும் மோசக்காரன்
தலையெடுத்தல் - மேல்நிலைக்கு வருதல்
தான்தோன்றி - செருக்குடையவன்
திசைப்புரட்டன் - பெரும் பொய்யன்
திமிலகுமிலம் - மகிழ்ச்சி மிகுதி
திறுதிறுத்தல் - அஞ்சி விழித்தல்
தீரக்கழிய - மிக அதிகமாய்
துப்பு கெட்டவன் - அறிவற்றவன், அறிவுகெட்டவன்
துறைபோதல் - நிரம்புதல், கற்றுத் தீர்தல்
தெம்மாடி - அறிவீனன், ஒன்றுக்கும் உதவாதவன்
தொடுபிடியாக - இடைவிடாமல்

நட்டாமுட்டி - வஞ்சகம்
நழுநழுத்தல் - பிடிகொடாது பேசுதல்
நீக்குபோக்கு - இணக்கமாயிருத்தல், மரியாதை
நெளிவு சுளிவு - ஏற்றத்தாழ்வு
நேர்ந்து போதல் - சம்பவித்தல்

பக்கஞ் செய்தல் - ஒளி விடுதல்
பக்கடுத்தல் - நொறுங்குதல்
படிப்படியாய் - சிறுகச்சிறுக
பணி கொள்ளுதல் - ஏற்றுக்கொள்ளுதல்
பண்விடுதல் - நிலைகுலைதல்
பாக்கி சாக்கி - மிச்சம் மீதி
பாடு பறப்பு - கவலை
பாரதூரம் - பெருந்தூரம், முதன்மை
புரிதிரித்தல் - கெடுக்க வழிதேடுதல்
புரிமுறுக்குதல் - கோள் சொல்லுதல்
புப்புத் தட்டுதல் - பற்று விட்டுப் போதல்
பூட்டழித்தல் - கட்டுக்குலைத்தல்
பையப்பைய - மெல்ல மெல்ல
பொட்டுப்பாடி - சிறுபண்டம்
போக்கிரி சாக்கிரி - கதியற்றவன்

வகைதொகை - விவரம்
வம்பு தும்பு - வீண் பழிச்சொல்
வரையறை - எல்லை, அளவு
வாரம் பாடுதல் - பின்பாட்டுப் பாடுதல்
வீற்றுவீற்றாக - வெவ்வேறாக
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மரபுத் தொடர்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum