ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருக்கோஷ்ட்டியூர்

View previous topic View next topic Go down

திருக்கோஷ்ட்டியூர்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Mon Jan 14, 2013 1:29 pm12/01/2013 ல் திருக்கோஷ்ட்டியூர் தலம் சென்று வந்தேன் !

இங்கு சென்று பிரார்திக்க வேண்டும் என நீண்ட நாளாக ஒரு எண்ணம் !

இதன் தல வரலாறை நீங்கள் அறிந்து கொண்டீர்களானால் நான் ஏன் இங்கு சென்றிருப்பேன் என்பதை ஊகித்துக்கொள்வீர்கள் !


நான் பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது தற்செயலாக இந்த நாள் வீரத்துறவி விவேகானந்தரின் பிறந்த நாள் என்பதை அறிந்துகொண்டேன் ! நான் அங்கு செல்வதன் நோக்கம் இரட்டிப்பாய் ஆக்கிகொடுத்ததற்காய் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன் !!

இந்த கோவிலின் உடையவர் என சொல்லப்படுபவர் நம்பியாண்டார் நம்பி என்னும் ஆழ்வாராவார் ! வைணவம் பிரபலமடைந்து அதன் உச்சத்தை அடைந்து கொண்டிருந்த காலகட்டம் அது ! அவர் 1025 வருடங்களுக்கு முன்பு இங்கு பிறந்து இக்கோவிலை நிர்வகித்தவர் !!

வைணவத்தின் முத்தாக அத்வைத நெறியை உலகிற்கு முதல்முதலில் எடுத்தியம்பியவரும் மாபெரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீராமணுஜர் - வைணவத்தை பட்டிதொட்டியெல்லாம் பரவ கடவுளால் பயன்படுத்தப்பட்ட பாத்திரம் -- ஸ்ரீரெங்க கோவில் உடையவர் !

அவர் 996 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரிலே பிறந்தவர் ! ஆன்மீக நாட்டமுள்ளவராகி ஸ்ரீரெங்கம் கோவில் வந்து தங்கி தொண்டு செய்து வந்தார் ! ஆனால் அவருக்கு தீட்சை மற்றும் மந்திர உபதேசம் கிடைக்கவில்லை !!

வைணவ நெறி ஓரளவு ஸ்தாபிக்க பட்டு ஆழ்வார்களால் பல கோவில்கள் பிரபலமடைந்திருதாலும் அதில் பிறப்பால் பிராமணர்கள் மட்டுமே பட்டர்களாகவும் ரகசியமாக மந்திரம் உபதேசிக்கபட்டவர்களாகவும் இருந்தனர் ! சாதாரன பொதுமக்கள் கோவிலில் வந்து வழிபடலாம் ; பிரசாதம் வாங்கலாம் அவ்வளவுதான் ஆன்மீக உபதேசம் எள்ளளவும் அவர்களுக்கு கிடையாது !

உனக்கு உபதேசிக்கும் மந்திரத்தை நீ வெளியில் சொன்னால் கேட்டவரெல்லாம் பரலோகம் - சொர்க்கம் போவார்கள் ஆனால் நீ நரகம் போய்விடுவாய் என சத்தியம் வாங்கிக்கொண்டு அவரவர் பரம்பரைக்கு மட்டும் மந்திரம் சொல்லித்தருவார்கள் !

இப்படிப்பட்ட காலகட்டத்தில் மந்திர உபதேசம் மற்றும் தீட்சையை அவ்வளவு எளிதில் பிராமணகுலத்தில் பிறந்தவர்களுக்கும் கூட சொல்லித்தரமாட்டார்கள் ! வெளியூரிலிருந்து வந்து தங்கி சேவை செய்யும் ராமாணுஜருக்கு யாரும் உபதேசிக்கவில்லை ! அப்படிப்பட்ட நிலையில் அவருக்கு கனவில் திருக்கோஷ்ட்டியூர் சென்று நம்பிகளிடம் தீட்சை பெறுமாறு உணர்த்தப்பட்டது !

அதனால் ராமாணுஜர் ஸ்ரீரெங்கத்திலிருந்து திருக்கோஷ்ட்டியூர் நடந்து சென்று நம்பியின் வீட்டு கதவை தட்டுவாராம் ! நம்பி அவர்கள் யாரது எனக்கேட்டால் `` நான் ராமாணுஜன் வந்திருக்கிறேன் `` என்பாராம் ! நம்பி `` நான் செத்து நீ வா `` என்பாராம் ! திரும்பி விடுவாராம் ! இப்படி 18 முறை தீட்சை பெற அவர் வரவேண்டியிருந்தது ! இந்த 18 தடவைகளில் நான் யார் ; நான் எப்படி சாகும் என்ற விசாரம் ராமாணுஜரின் மனக்கண்ணை திறந்திருக்கிறது !

``நான் அதுவாக இருக்கிறேன் `` என்ற அத்வைத தத்துவத்தின் உட்பொருளை அவர் சிந்தித்து உணர்ந்து தாழ்மையடைந்த போது அகம்பாவம் மறைந்து `` அடியேன் ராமாணுஜன் வந்திருக்கிறேன் `` என சொன்னாராம் !

அப்போது நம்பி அவர்கள் அவரை ஏற்றுக்கொண்டாராம் !

அவருக்கு மந்திர உபதேசம் செய்ய சம்மதித்து இக்கோவிலின் தரைதளத்தில் வைத்து இம்மந்திரத்தை யாருக்கும் சொல்லமாட்டேன் என சத்தியம் வாங்கிக்கொண்டு `` ஓம் நமோ நாராயணா `` என்ற அஸ்ட்டாங்க மந்திரத்தை உபதேசித்தாராம் !!


இன்று சர்வசாதாரணமாக வைணவ கோவில்களில் எழுதிப்போட்டிருக்கும் `` ஓம் நமோ நாராயணா ` என்ற மந்திரம் கூட அன்றைக்கு யாருக்கும் சொல்லாமால் சிலர் மட்டுமே ஜெபிக்கிற அட்சரமாக இருந்திருக்கிறது !

இப்படித்தான் உண்மைகள் பல மாயைகளால் எப்போதுமே மூடப்பட்டு மறைக்க படுகின்றன ! யாரோ அடுத்தவர் மறைப்பது என்று மட்டும் அதை புரிந்து கொள்ளாதீர்கள் ! நாமே நமக்கு தெரிந்த பல விசயங்களை ஆழத்தை - அதன் மேன்மையை புரிந்து கொள்ளாமல் இருப்போம் ! அதற்கு வேறொரு அர்த்தம் சொல்லி அப்பியாசிப்போம் ! சரியான புரிதலை யாராவது சொன்னாலும் அவருடன் சண்டைக்கு போவோமே தவிர அதனை உள்வாங்கி விசாரம் செய்யாமலே இருப்போம் ! ரெம்ப நாள் கழித்து பட்டறிவால் - கடவுள் பட்டைதீட்டி கொடுக்கும்போது நமக்கு புரியும் ! இப்படி புரியாமலும் இருந்துகொண்டு புரிந்து சொன்னவரையும் இகழ்ந்துகொண்டும் இருந்திருக்கிறோம் என்பது எவ்வளவு விசயங்கள் நம் வாழ்வில் நடந்திருக்கிறது ! ஆனாலும் எங்கிருந்து ஒரு விசயம் வந்தாலும் அதனை கேட்டு வாங்கி வைத்துக்கொள்கிற - அதை கடைபிடிக்க வேண்டிய அவசியமே இல்லை - ஆனால் கேட்பது - இப்படியும் இருக்கிறதா என்ற அறிதல் `` கேள்விஞானம்`` நமக்கு வருவதே இல்லை ! ஞானத்திற்கு முன்னோடியே கேட்பதுவே ! அதனால்தான் கேள்விஞானம் என்றார்கள் !

கேள் என்பதிலும் ஒரு மாயை இருக்கிறது ! இப்போது எதை நாம் பெரும்பாலும் கேட்டுக்கொண்டிருக்கிறோம் ? எது ஏற்கனவே நமக்கு தெரியுமோ அதை அடுத்தவர் சொன்னால் கேட்டுக்கொள்கிறோம் ! தெரிந்ததையே மீண்டும் மீண்டும் கேட்டு புழகாங்கிதம் அடைவது ஒரு மனித இயல்பு ! தெரியாத ஒன்று வருமானால் உடனே அதனுடன் கத்தியை எடுத்து வீசுவீசென வீசிக்கொண்டிருப்போமே தவிற - நமக்கு எது தெரியுமோ அதை துருத்திக்கொண்டே இருப்பது - நம்மை துருத்திக்கொண்டே இருப்பது - அடுத்தவரை தெரிந்து கொள்வதே இல்லை ! கிணற்று தவளை மனப்பாண்மை ! கூட்டமாக கூடி கத்திக்கொண்டிருப்பது ! அடுத்த சத்தம் காதில் ஏறாது !

தெரிந்ததையே திரும்ப திரும்ப ஓராயிரம் முறை கேட்டாலும் அறிவு விருத்தி ஆகப்போகிறதா ? ஒரு தம்படி கூட நகராது ! எது நமக்கு தெரியாததோ அது நமக்கு தெரிந்தால் அது அறிவு விருத்தி ! ஞானவிருத்தி என்பது நமக்கு புரியாத ஒன்று புதிதாய் புரியும்போது மட்டுமே உண்டாகிறது ! அப்படியானால் தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ளும்போது மட்டுமே நமது பட்டறிவு மற்றும் காலத்தின் போதனையால் அது உண்மை என நம்மால் ஏற்றுக்கொள்ளப்படும் சூழ்னிலையில் நமக்குள் புதிய புரிதல் - ஞானவிருத்தி உண்டாகிறது !

ஞானவிருத்திக்கு அடிப்படையே தெரியாததை கேட்டு வைத்துக்கொள்ளுவதுதான் ! இந்த உண்மை புரியாமல் -- நிதானமில்லாமல் தெரியாத விசயங்களை காதே கொடுக்காமல் கத்தியை வீசிக்கொண்டிருப்பது மனித இயல்பு - மாயையின் பிடி !!

மாயைகள் மனிதனை கட்டிகட்டி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் தடை செய்கின்றன ! சுயம் அழிந்து எதையும் உள்வாங்கி உள்ளே ஏற்கனவே விளைந்த ஞானத்தின் துனையோடு நல்லதற்கும் கெட்டதற்கும் இடையில் போராடி கடவுளின் கிருபையால் மட்டுமே பூரணஞானம் பெற முடியும் ! நிறை ஞானம் ; இன்னும் இன்னும் என்று போய்க்கொண்டே இருக்கும் ! இன்னும் இன்னும் கற்பதால் தாழ்மையடைந்து கடவுளை சார்ந்து கொள்ளும் ! முழு சரணாகதி - நிறைஞானம் - மெய்பக்தி ஒரு புள்ளியில் சந்திக்கும் ! ஓயாத மாயையை சகஜமாக நிதானிக்கும் தன்மை உண்டாகும் !!

எந்த விசயத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் ஆழத்தில் ஒரு உண்மை இருக்கும் ! ஆனால் அதன் மீது அளவிடமுடியாத பொய்யை மனிதனும் அசுர ஆவிகளும் மாடமாளிகையாக கட்டிவைத்துவிடும் ! காலப்போக்கில் எல்லா உண்மைகளின் மீதும் பொய்கள் ஏறிக்கொள்ளும் ! வைணவம் வளர்ந்தபோது ஆழ்வார்கள் தங்கள் பக்தியின் திறத்தால் ஞானத்தால் சாதித்தவற்றை அவர்களின் பிறப்பு வாரீசுகள் பலனை அறுக்கிற கூட்டமாக வளர்ந்தார்கள் ! எந்த ஒரு கொள்கையும் அதன் சீடர்களால் சீரழிக்கபாடும் !

`` ஓம் நமோ நாராயணா `` என்ற மந்திரத்தைக்கூட வெளியே யாருக்கும் சொல்லக்கூடாது என சத்தியம் வாங்கிக்கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு மட்டும் உபநயணம் செய்வதாக அது மாறிவிட்டது ! மெல்ல வளர்ந்த விசத்தை யாராலும் அவ்வளவு எளிதாக கண்டு பிடிக்கமுடியாது ! ராமாணுஜருக்கு மந்திரம் அறிவிக்க தகுதியுடையவரான நம்பியவர்களாலும் கூட - நான் செத்து நீ வா என்று ஞானமொழி பேசியவரால்கூட பராம்பரியத்தால் வந்த இந்த மாயையை கண்டறியமுடியவில்லை ! சத்தியம் வாங்கிக்கொண்டுதான் ராமாணுஜருக்கு அறிவித்தார் !

மந்திரத்தை தெரிந்துகொள்ளவே இவ்வளவு தடை உண்டாக்கிய மாயை - அசுர சக்திகள் அந்த மந்திரத்தின் உட்பொருளை அவ்வளவு எளிதாகவா புரிந்துகொள்ள விடும் ? இதுதான் இன்றைய நிலைமை !!ராமாணுஜர் அடுத்து செய்தது என்ன என அறிந்து கொள்ளும் முன் கோவிலைப்பற்றி சிலவற்றை அறிந்துகொள்ள வேண்டும் !

இந்த கோவில் கதம்பமுணிவர் என்பவரின் ஆசிரமம் இருந்த இடம் ! இரண்யகசிபு பூமியில் நானே கடவுள் ( நான் அதுவாக இருக்கிறேன் என்பதற்கும் அது நானாக இருக்கிறேன் என்பதற்கும் அழுத்தம் வித்தியாசம் வருகிறது ; முன்னது சுயத்தை விடுவது பின்னது சுயத்தை துருத்துவது ) என அத்வைத நெறியை தவறாக வியாக்கியாணம் செய்து அரக்கணாக - அசுரர்களின் கைப்பாவையாக மாறி விட்ட பிறகு அவனை அழிப்பது எப்படி என தேவர்கள் ஆலோசனை செய்த இடம் ! அதனால் திருக்கோஷ்ட்டியூர் என பெயர் வந்த இடம் !

இக்கோவிலின் உள் நுழைபவர் முதலாவது பார்ப்பது சிவன் அதாவது மனிதன் ! அடுத்து கிருஷ்ணன் அதாவது இறைதூதன் - மனிதனாய் வந்த சற்குரு ! மேலே செளமிய நாராயணன் அதாவது சகலமுமாய் ஜட இயற்கையாய் - அசையும் அசையாதபொருட்களாய் வெளிப்படுகிறவர் ! எல்லா ஜட இயற்கையும் இவருக்குள்ளிருந்து இவரால் வெளிப்படுத்தப்பட்டு செயலற்றவராக அனந்தசயன கோலத்தில் உள்ளார் !

கீதை 9:7 குந்தியின் மகனே ! யுக முடிவில் எல்லா ஜட வெளிப்பாடுகளும் எனது அரூபத்தில் மறைகின்றன ! அதே போல அடுத்த யுகத்தில் நானே என்னிலிருந்து அவற்றை வெளிப்படுத்துகிறேன் !!

கீதை 9:8 இந்த முழு பிரபஞ்ச இயக்கமும் எனது ஆளுகையிலேயே உள்ளது ! எனது சித்தத்தால் அவைகள் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்படுகின்றன ! அதே போல முடிவில் அவைகள் மீண்டும் மீண்டும் அழிக்கவும் படுகின்றன !!

கீதை 9:9 தனஞ்ஜயா ! இருப்பினும் இவ்விவகாரங்கள் எதுவும் என்னை பாதிப்பதேயில்லை ! ஜட இயற்கை செயல்பாடுகளில் பந்தப்படாமல் தனித்தும் சலணமற்றும் ஓய்ந்தும் இருக்கிறேன் !!

கீதை 9:10 ஜட இயற்கையானது எனது சக்திகளில் ஒரு பகுதி மட்டுமே ! எனது வழிகாட்டுதலின் படி அது உயிரற்ற உயிருள்ள அனைத்தையும் உருவாக்குகின்றது ! அந்த இயற்கை விதிகளின் படி திரும்பதிரும்ப பிரபஞ்சமானது உருவாக்க பட்டும் அழிக்க பட்டும் வருகிறது !!இன்னும் மேலே சென்றால் உஜ்ஜயபெருமாள் ! இவர் நின்ற நிலையில் அதாவது செயல்படுகிறவராக - அதாவது முன்னேற உத்வேகம் அளிக்கிறவராக - உந்து சக்தியாக - தெய்வீக சக்தியாக உள்ளார் ! அதாவது அரூபத்தண்மையாக பரலோகத்தில் இருக்கிற விஷ்ணு !!

அதாவது விஷ்ணுவுக்குள் இரண்டு பகுதி இருக்கிறது ! ஒன்று அரூபமான தெய்வீக சக்தி மற்றது ஜட இயற்கையாக ரூபமான வெளிப்பாடு ! நாராயணன் என்றாலேயே நரணாய் வெளிப்பட்டவன் !

இந்த பூமி மற்றும் நட்சத்திர மண்டலம் ; பொருட்கள் மற்றும் உயிரிணங்கள் அனைத்தும் இவருக்குள்ளாக இருந்து வெளிப்படுத்தப்பட்டு ; இவரிலேயே தங்கி முடிவில் இவருக்குள்ளாகவே மறைந்தும் போகின்றன !சகலமும் இவரே !

பரிபாடல் 3:63-68 - சகலமும் அவரே என்பதை சொல்லுகிறது !


தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ

எனப் போற்றுகின்றார் புலவர் கடுவன் இளவெயினனார்.

(தெறல் = வெம்மை, நாற்றம் = மணம், மணி = நீலமணி, மறம் = வீரம், வாய்மை = உண்மை, மைந்து = வலிமை, பூதம் = நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகிய ஐம்பூதங்கள், வெஞ்சுடர் = சூரியன், திங்கள் = நிலவு, அளி - குளிர்ச்சி)

நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;
நின், தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின், சுரத்தலும் வண்மையும் மாரி உள
நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின், நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின், தோற்றமும் அகலமும் நீரின் உள;
நின், உருவமும் ஒளியும் ஆகாயத்து உள;
நின், வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள:

(பரி. 4:25-32)

(வெம்மை = பகைவரை அழிக்கும் ஆற்றல், தண்மை = அளித்தல், அருளல், சுரத்தல் = விருப்பம் நிகழ்தல், வண்மை = கொடை, புரத்தல் = தாங்குதல், நாற்றம் = மணம், வண்மை = ஒளி, பூவை = காயாமலர், ஒலி = சொல், வருதல் = அவதரித்தல், ஒடுக்கம் = மறைதல், மருத்து = காற்று)

இப்படி உருவப் பொருளிலும் அருவப் பொருளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் புருஷனாகத் திருமாலைக் காட்டுகின்றது பரிபாடல்.

காக்கை சிறகினிலே நந்தலாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா என்னும் பாடலில் பாரதியும் இக்கருத்தையே துதிக்கிறார் !

கீதை 7:4 நீர் , நிலம் , நெருப்பு , காற்று , ஆகாயம் . மனம் , மதிநுட்பம் , மற்றும் கேடான அஹம்பாவம் ஆகிய எட்டு அடிப்படைகளும் யுகபுருஷனிளிருந்தே தோன்றிய ஜட சக்திகளாகும் !!

கீதை 7:5 இந்த ஜட சக்திகளையும் ; இவற்றை சுரண்டியே வாழும் தாழ்ந்த தன்மையுள்ள உயிரிணங்கள் அனைத்தையும் தன்னகத்தே உறையவைத்தும் தாங்கியும் வருகிற இவற்றையும் விட மேலான சக்தியும் ஒன்று உள்ளது அர்ச்சுனா ! அதுவே யுகபுருஷனின் தெய்வீக சக்தி என்பதை அறிவாய் !!

கீதை 7:6 படைப்பினங்கள் அனைத்தும் இந்த இரண்டு சக்திகளிளிருந்தே தங்களின் ஆற்றலை பெறுகின்றன ! லவ்கீகமானவைகள் ஜட சக்திகளிலிருதும் ஆன்மீகத்தில் விளைந்தவைகள் தெய்வீக சக்தியிலிருந்தும் ஆற்றலை பெறுகின்றன ! இரண்டு வகை உயிரினங்களுக்கும் ஆதியும் அந்தமும் யுகபுருஷனே என்பதை அறிவாய் !!

யுகபுருஷன் இரண்டு நிலைகளில் உள்ளார் ! பரலோகத்தில் அவர் பெருமாள் அல்லது விஷ்ணு ! பூமியிலோ அவர் அசையும் அசையா பொருட்களான நாராயணன் !

இன்னும் மேல் தளத்திற்கு சென்றால் அங்கு பரமபத நாதர் ! இந்த பரமபத நாதர் என்பவர் விஷ்ணுவுக்கும் மேற்பட்டவர் என்பது வைணவ மரபு ! இவரே அரூபமான கடவுள் - ஏக இறைவன் ! அல்லது ஆதிமூலம் !!

கீதை 8:3 உண்ணதமான கடவுளின் தூதர் கூறினார் : எது அழிவற்றதோ ' எல்லாவற்றிர்க்குள்ளூம் உயிரோட்டமாய் இயங்கிக்கொண்டிருப்பது எதுவோ அதுவே பிரம்மம் -- கடவுள் ! அவரின் உள்ளார்ந்த இயல்பே ஆதிமூலம் அல்லது அகம் ! அதுவே புறத்தில் பொருட்களாகவும் ; இயங்கும் படைப்பினங்களாகவும் வெளிப்பட்டு அவைகளின் இடைபடுதலால் உருவாகும் செயல்கள் `` கர்மம் `` அல்லது லோகாயாத செயல்பாடுகளாக அறியப்படுகின்றன !

கீதை 8:4 உடலுள்ளவைகளில் சிறந்தவனே ! பவ்தீகப்பொருட்கள் ஒன்று மற்றொன்றாய் வளர்சிதை மாற்றம் அடைந்துகொண்டே உள்ளன ! இது ஆற்றல் சுளர்ச்சி அல்லது ``ஆதிபுத்தா`` எனப்படும் ! இந்த வளர்சிதை மாற்றமே பொருட்களின் உருவாக்கமாக வெளிப்படுகின்றன ! சூரியசந்திர நட்சத்திரங்கள் உள்ளிட்ட வானமண்டலசேனைகள் மற்றும் பூமியிலுறையும் படைப்பினங்கள் அனைத்தும் எதிலிருந்து உருவாக்கபட்டதோ அந்த பரமாத்வான நானே ``ஆதியஜ்னா `` அல்லது வேள்விகளின் புருஷனாவேன் ! கடவுளின் சர்வவியாபகமோ சகலத்தையும் உள்ளடக்கியது ! வானவர்களான தேவர்கள் அசுரர்கள் அதிதேவதைகள் அல்லது தேவதூதர்கள் என அறியப்படுகின்றனர் ! அவர்களையும் உள்ளடக்கியது !!

ஆதிபுத்தா -- நாரயணன்

ஆதியஜ்னா - பெருமாள்

இரண்டையும் உள்ளடக்கியவர் யுகபுருஷன் அல்லது திருமால் ; விஷ்ணு !

இவர் அல்லாத வானவர்கள் தேவதூதர்கள் , அசுரர்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கியவர் ஏக இறைவன் - கடவுள் !

கீதை 9:4 எனது யுகபுருஷன் என்ற அரூபத்தண்மையில் இந்த முழு பிரபஞ்சமும் பொதிந்திருக்கிறது ! எல்லாம் எனக்குள் இருக்கிறது ; ஆனால் நானோ அவைகளை கடந்தும் இருக்கிறேன் என்பது எனது இயல்பாகும் !! :

கீதை 9:5 நானே படைக்கபட்ட எல்லாவற்றையும் நிர்வகித்தாலும் ; நானே எங்கும் விரவி இருந்தாலும் அசுரர்களின் மாயையால் படைப்பினங்கள் என்னில் நிலைபெறாமால் சுயம் - தன்முணைப்படைகின்றன !! அனைத்தும் என் மூலமாக கடவுளால் படைக்கப்படவையே ஆயினும் என்னில் ஒன்றாமல் கலக்கமடைகின்றன !!

கீதை 9:6 பலத்த காற்று எங்கும் சுற்றிசுழன்று வீசினாலும் அது வானத்தில் நிலைபெற்றிருப்பதைப்போல எல்லா உயிரினங்களும் சுயமாய் வினையாற்றினாலும் என்னிலேயே நிலைத்திருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்வாயாக !!

வைணவத்தின் முழுமை இந்த இறங்குவரிசையை உணர்ந்து கொள்வதில் உள்ளது !

1) ஏக இறைவன் - ஆதிமூலம் !

2) யுகபுருஷன் - விஷ்ணு . பெருமாள் - திருமால் !

3) நாராயணன் - படைக்கப்ட்டவைகளின் ஆதாரம் !

4) அவதாரம் - இறைதூதனாய் பூமிக்கு வந்து தர்மத்தை நிலை நாட்டுகிறவர் !

5) சிவன் -- மனித இறைதூதர்கள் - மகான்கள் !


இந்த வரிசையே திருக்கோஷ்ட்டியூர் கோவிலில் விளங்கப்பட்டுள்ளது ! அந்த பட்டர் திரும்பதிரும்ப சொல்லிக்கொண்டிருந்தார் ! உலகின் முதல் வைணவ கோவில் இதுதான் என்று ! இரண்யகசிபுக்கு முன்பே இந்த கோவில் இருந்துள்ளது ! இந்திய கோவில்கள் என்பவை ஒரு தத்துவத்தை எடுத்தியம்ப உருவாக்கபட்டவையாகத்தான் இருக்கும் ! காலப்போக்கில் தத்துவம் மறைந்து சும்மா கும்பிடுவதாய் மாறிவிட்டிருக்கும் !

அடுத்து பிரச்சினை வேண்டுதல் உள்ளோர் இங்கிருந்து விளக்கு (கார்த்திகை சிட்டி )ஒன்றை வாங்கிக்கொண்டு சென்று வீட்டிலே விளக்கு ஏற்றி வழிபட்டால் பிரச்சினை தீரும் ! அப்போது விளக்கையும் கொடையையும் கோவிலுக்கு கொண்டுவர வேண்டும் என்று !

இந்த கோவிலின் தத்துவம் மனிதன் கிருஷ்ணனாகிய இறைதூதன் வழிகாட்டிய வேத நெறியை கடைபிடித்து சர்வமும் நாரயணன் என்பதை உணரவேண்டும் ! அவரின் அருபத்தண்மையாகிய யுகபுருஷன் என்பதை உணர்ந்து அவர் நாமத்தாலே அவர் மூலமாக கடவுளை - ஏக இறைவனை வழிபடவேண்டும் என்பதுதான் !

இந்த கோவிலிலிருந்து இந்த விளக்கத்தை ஒவ்வொரு மனிதனும் வீட்டிற்கு எடுத்து சென்று கடைபிடித்தால் மோட்சம் அடையலாம் என்பதுவே விளக்கை எடுத்து செல்வதாக மறுவியுள்ளது !


கீதை 9:22 ஆனால் யார் எனது யுகபுருஷன் என்ற அரூபத்தை உணர்ந்து தியானித்து உள்ளர்ந்த பக்திதொண்டுடன் என்னை பின்பற்றி கடவுளை வழிபடுகிறார்களோ அவர்களின் குறைவை நான் சுமந்து நிறைவை காத்து பெருக்குகிறேன் !!

கீதை 9:23 யார் பலரை கடவுளுக்கு இணைவைத்து உள்ளார்ந்த பக்தி செலுத்துகிறார்களோ அவர்களின் பக்திதொண்டை நான் மதிக்கிறேன் ! ஆனாலும் அவர்கள் தவறான வழியில் பக்திதொண்டு செய்கிறார்கள் !!

கீதை 9:27 நீ எதை செய்தாலும் ; எதை உண்டாலும் ; எதை கொடுத்தாலும் ; எதை சமர்பித்தாலும் எந்த புண்ணிய சடங்குகளை செய்தாலும் அதை கடவுளுக்கு பக்திதொண்டாகவே என் மூலமாக அர்ப்பணிப்பாயாக !!

``ஓம் நமோ நாராயணா `` என்ற அஷ்ட்டாங்க மந்திரத்தின் உட்பொருளும் இதுவே !

``ஓரிறைவனையே துதிக்கிறோம் நாராயணனின் நாமத்தினாலே `` என்பதுவே அதன் உட்பொருள் ! நாரயணன் நாமத்தினாலே - அவர் மூலமாக கடவுளை துதிக்கவேண்டும் !!


நாரயணன் அவதாரமாக பூமிக்கு வந்த இறைதூதர்கள் நாமத்தாலும் கடவுளை துதிக்கலாம் !

அது திரேதா யுக ராமன் , துவாபர யுக கிருஷ்ணன் & கலியுக இயேசு மட்டுமே ! இவர்களுக்கு மட்டுமே நாமம் தரிக்கபட்டுள்ளது !

மனிதர்களில் இறைதுதராக உயர்த்தப்பட்டோர் , மாகான்கள் , ஞானிகள் ஆகியோர் மூலமாக பிரார்திக்கலாகாது !

வைணவத்தில் ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் என்று ஆழ்வார்களையும் வழிபடும் தவறான பழக்கம் வந்துவிட்டது ! ஆழ்வார்களை முன்னோடிகளாக எடுத்துக்கொண்டு வாழவேண்டுமே தவிற அவர்களை வழிபடுவது தவறு ! அது இணைவைப்பு என கடைசியாக வந்த வேதமான திருக்குரான் மூலமாக வந்த அறிவுரையாகும் !

ஆனால் ராமர் ,கிருஷ்ணர் , இயேசு நாமத்தினால் கடவுளிடம் பிரார்திக்கலாம் !சரி ! மேற்கொண்டு ராமாணுஜரிடம் வருவோம் ! மந்திர உபதேசம் பெற்றுக்கொண்ட அவர் என்ன செய்தார் ?

இந்த மந்திரத்தை அறிய அவர் 18 முறை ஸ்ரீரெங்கத்திற்கும் திருக்கோஷ்ட்டியூருக்கும் நடந்தார் ! ஆனால் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு சத்தியம் வாங்கிக்கொண்டு சொல்லித்தந்தார்கள் ! ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து ஸ்ரீரெங்கம் வந்து கோவில் பணி செய்தாலும் பிறப்பால் பிராமணர் என்றாலும்கூட அவருக்கு மந்திரம் சொல்லித்தரவில்லை !

இந்த மகத்துவமான மந்திரத்தை ஜபித்து சகலமேன்மையையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றால் இதை உலகத்தாருக்கு மறைத்து பல ஆத்துமாக்கள் முன்னேற கதியை மறைப்பது எவ்வளவு மாயையானது !

கடவுளை மெய்யாகவே ஓரளவெனும் உணர்ந்த ஆத்மாக்கள் மாயைகளை உடைத்தெறிவர் ! கடவுளை உணர்ந்தால் சகல மனிதர்களும் கடவுளின் சொரூபம் என்பதால் கடவுளின் மீதுள்ள பக்தி - அன்பு மனிதர்களின் மீதும் அன்பாக மலறும் ! மனிதாபிமானம் பக்தியிலிருந்து விளையும் ஒன்று ! அவர்களையே கடவுள் எப்போதும் பயன்படுத்துவார் ! அது பல பிறவி ஞானமுதிர்ச்சியால் வருவது !

அவர்கள் காலாவதியான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உடைத்தெறிவர் ! ராமாணுஜரால் மட்டுமே பிறப்பு ஜாதியை கடந்து சகல மனுக்குலத்திற்கும் வைணவத்தை பரப்ப முடிந்தது ! இந்தியாவில் பட்டிதொட்டி எங்கும் அநேக ஆத்மாக்கள் அந்த உண்ணத நெறியால் மேன்மை அடைந்தார்கள் !

அந்த பக்தி - அன்புப்பெருக்கால் அவர் நான்காவது தளத்திலுள்ள பரமபத நாதர் விமாணத்தில் ; நான் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து சகலரையும் கூவி அழைத்தார் ! மனிதர்கள் உய்வடைய உச்சரிக்க வேண்டிய மந்திரத்தை இதோ கேளுங்கள் :

``ஓம் நமோ நாராயணா ! ஓம் நமோ நாராயணா ! `` மந்திரம் ரகசியம் என்பது உடைக்கபட்டது !

அந்த துவக்கம் இந்தியாவில் ஒரு பெரும் மாற்றத்தை உண்டாக்கியது ! ராமானுஜர் சாதித்தவை ஏராளம் ! அவர் பின்னாளில் ஸ்ரீபெரும்புதூரிலும் சகல ஜாதியாரையும் வைணவராக - வைணவ பாகவதம் செய்ய தகுதியுள்ளவர்களாக முத்திரி தரிப்பித்து பூசைக்கு தகுதியுள்ளவராக்கினார் !

பூசை குலத்தொழில் என்பதை மாற்றி பக்குவம் அடைந்த பக்தர்கள் அனைவரும் பூசை செய்யலாம் என்ற புரட்சியை உருவாக்கி சாதித்தும் காட்டினார் ! பட்டிதொட்டியெல்லாம் பெருமாள் கோவில்கள் உருவாக்கி அதில் அவரவர்களே திருப்பாவை திருவெம்பாவை நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாடினார்கள் !

நான் பிறந்த குக்கிராமத்தில்கூட என் சிறு வயதில் முத்திரி வாங்கிய பெரியவர்கள் நிறைய இருந்தார்கள் ! எனது தாய்மாமன் ஊரிலும் நிறைய இருந்தார்கள் ! எனது தாயார் ; கவிஞர் காமாராசன் அவர்களது தாயார் இருவரும் ஒரே ஊரிலே பிறந்து ஒரே ஊரிலே வாழ்க்கைபட்டவர்கள் ! இருவரும் முத்திரி வாங்கியவர்களே !

எனது தாயார் ராமயணத்தை தாலாட்டாக பாடியே எங்களை தூங்க வைப்பார்கள் ! வயது முதிர்ந்த காலத்திலும் கூட புத்தகங்களை வாசித்துக்கொண்டே இருப்பார்கள் ! அவர்களுக்காகவே நான் பெரிய எழுத்து புத்தகங்களை மதுரையில் பழைய புத்தக கடைகளில் தேடிதேடி வாங்குவேன் ! அப்படித்தான் ஆன்மீகப்புத்தகங்கள் பல நானும் வாசித்தேன் ! அவர்கள் இறந்தபோது கண் வழியாகத்தான் ஆவி பிரிந்துவிட்டிருக்கும் என நம்புகிறேன் ! குளிப்பாட்டும்போது கண் திறந்து அவ்வளவு உயிர்ப்பாக - ஒளியோடு இருந்தது ! நல்ல ஆத்துமா ! பிறவாப்பெரு நிலைக்கு பக்குவப்பட்டவரே !

இப்படி அனேகர் உய்வடைய வைணவமார்க்கத்தை பரப்ப ராமாணுஜர் முன்னோடியாக இருந்தவர் ! எனக்கும் அவரது அனுக்கிரகம் உண்டெனவே கருதுகிறேன் ! தியானம் ; அத்வைதம் என அறிந்துகொள்ள தொடங்கிய காலகட்டத்தில் 24 வது வயதில் நானாக ஸ்ரீரெங்கம் சென்றேன் ! அங்கு ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே உடையவர் ராமாணுஜர் சன்னதிக்கு வந்தேன் ! அவர் பூமியின்மீதே ஜீவசமாதியில் இருப்பவர் என்பது எனக்கு தெரியும் ! உண்மையில் அவரை பார்க்கவே ஸ்ரீரெங்கம் சென்றது ! அப்போது அங்கு யாரும் இல்லை மதிய உணவுக்காக கோவில் நடைசாத்திக்கொண்டிருந்தார்கள் ! உடையவர் மூலஸ்தானத்தை சுற்றி குறுகலான நடை ஒன்று இருந்தது ! யாரும் இல்லாததால் அதில் நுழைந்து அவருக்கு பின்னால் அமர்ந்து தியானித்தேன் ! ஒரு பெரிய வெப்பம் என்னை அழுத்தி ஆழ்ந்த தியானத்திற்கு சென்று விட்டேன் ! கொஞ்ச நேரம் போனது போல தெரிந்தது ஆனால் மூன்று மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது திரும்ப ஆட்கள் வரவும் மெதுவாக எழுந்து வந்துவிட்டேன் ! ஆனால் என் உடலில் ஏறிய வெப்பம் நான்கு ஆண்டுகள் வரை என்னால் தாங்கமுடியாமல் இருந்தது ! வெயிலில் நிற்கவே முடியாது ! மார்கழி மாதத்தில் கூட அணலாய் என் உடல் தகிக்கும் ! ஆழமான தியானம் சித்திக்கும் ! லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்து ஒரு வழியாக சமாளித்தேன் !!

அவரது அனுக்கிரகம் ; கடவுளின் அருள் நமக்கு வேண்டும் ! ஞானம் நிறைவு பெற வேண்டும் !

இன்றைய காலகட்டம் உலகம் முழுவதிலும் மார்க்க பேதங்கள் வளர்ந்து உண்மைகள் பல பொய்களால் மூடப்பட்டு விட்டன ! கலியின் மாயை உச்சத்தை அடைந்து விட்டது !

கல்கி வருவதற்கு காலம் கணிந்து விட்டது ! ஆனால் அவர் வருமுன் உலகில் சகல மதங்களையும் ஒருங்கினைத்து மக்கள் பலரை நல் வழிப்படுத்தும் வழிகட்டி - இமாம் - மனித இறைதூதர் ஒருவர் வருவார் என்பது அனைத்து மத வெளிப்பாடு ! அப்படிப்பட்ட நபராக மாற காந்தியடிகளுக்கு தகுதி இருந்தது ! அனால் காலம் கணியாததால் அவருக்கு அந்த வாய்ப்பு இல்லை !

அவரவர்கள் எங்கள் மதத்தில்தான் அவர் வருவார் என சொல்லிக்கொண்டுள்ளனர் ! ஆனால் அவர் இந்தியாவிலிருந்து மட்டுமே வரமுடியும் என்ற விவேகானந்தரின் முன்னறிவிப்பு நிறைவேறட்டும் என்ற வேண்டுதல் எனக்கு உண்டு ! இன்னும் மறைக்கபட்ட அநேக ஞான ரகசியங்களை கடவுள் வெளிப்படுத்த வேண்டும் ! அப்படிப்பட்ட பலர் உருவாக வேண்டும் என்ற வேண்டுதலுக்கே நான் திருக்கோஷ்ட்டியூர் விமாணத்திற்கு சென்றது !!

கீதை 9:34 மனதை எப்போதும் என்னில் நிலைபெற செய்து ; எனது சீடனாகி ; எனது வழிகாட்டுதல்களை கைக்கொண்டு கடவுளை வழிபடுவாயாக ! அப்போது முற்றிலுமாக என்னுள் நீ உள்வாங்கப்பட்டு எனது உண்ணத நிலையை நிச்சயம் அடைவாய் !!

ஏக இறைவனின் அன்பும் அருளும் சாந்தியும் நம் அனைவரையும் நிரப்புவதாக ! இந்தியாவில் ஆன்ம உள்ளொளி பெருகுவதாக !!Last edited by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Mon Jan 14, 2013 2:37 pm; edited 1 time in total
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: திருக்கோஷ்ட்டியூர்

Post by ராஜா on Mon Jan 14, 2013 1:49 pm

நன்றி பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திருக்கோஷ்ட்டியூர்

Post by krishnaamma on Wed Aug 05, 2015 1:19 am

ரொம்ப அருமையான திரி, லிங்க் க்கு நன்றி......நாளை படித்துவிட்டு மீண்டும் பின்னூட்டம் போடுகிறேன், இப்போதைக்கு இதை மேலே கொண்டு வருகிறேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: திருக்கோஷ்ட்டியூர்

Post by M.Jagadeesan on Wed Aug 05, 2015 8:44 am

திருக்கோட்டியூர் என்ற பெயர்தான் திருக்கோஷ்டியூர் என்று மருவிற்று .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: திருக்கோஷ்ட்டியூர்

Post by சிவா on Wed Aug 05, 2015 11:17 pm

பதிவுக்கு நன்றி, இனிமேல் தான் படிக்க வேண்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருக்கோஷ்ட்டியூர்

Post by krishnaamma on Fri Aug 07, 2015 2:12 am

ரொம்ப அருமையான பகிர்வு ............... .மிக்க நன்றி ! ............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: திருக்கோஷ்ட்டியூர்

Post by tnkesaven on Thu Aug 13, 2015 1:41 pm

உண்மையிலேயே தேவரீர் ஸ்ரீமத் ராமானுஜருடைய அனுக்ரஹம் பெற்றவர் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
தேவரீரின் ஆன்மிக ஈடுபாட்டை அறிந்து வியப்புற்றேன் .
அடியேன்
திருமலை நம்பாக்கம் கேசவ ராமானுச தாசன்
ஆழ்வார் எம்பெருமானார் ஆண்டாள் ஜீயர் திருவடிகளே சரணம்
காரேய் !!!கருணா !! இராமானுசா
avatar
tnkesaven
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: திருக்கோஷ்ட்டியூர்

Post by ayyasamy ram on Thu Aug 13, 2015 1:46 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37077
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திருக்கோஷ்ட்டியூர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum