உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by சக்தி18 Today at 2:41 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

Admins Online

தொடத் தொடத் தொல்காப்பியம்(468)

தொடத் தொடத் தொல்காப்பியம்(468) - Page 47 Empty தொடத் தொடத் தொல்காப்பியம்(468)

Post by Dr.S.Soundarapandian on Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம்(468) - Page 47 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(468)

Post by M.Jagadeesan on Sat Aug 26, 2017 6:24 am

ஐயா !

மேலே கூறப்பட்டுள்ள 28 வகைப் பொருளின் பாகுபாடுகளுக்குக் கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டுக்கள் கல்லாடனார் கொடுத்ததா அல்லது தாங்கள் கொடுத்ததா ?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(468) - Page 47 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(468)

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 26, 2017 9:23 am

நன்றி ஜெகதீசன் அவர்களே!
‘கல்லாடனார் உரையின் அடிப்படையில்’ என்று கவனமாக நான் எழுதியுள்ளேன். அடிப்படைதான் கல்லாடனாரது; எடுத்துக்காட்டுகள் யாவும் என்னுடையதே! கல்லாடனார் போட்ட தண்டவாளத்தில் எனது வண்டி!
ஊன்றிப்படிக்கும் ஆய்வாளர் நீங்கள்! மிக்க மகிழ்ச்சி!
:நல்வரவு: :நல்வரவு: மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(468) - Page 47 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (456)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 27, 2017 8:43 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (456)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது , ஆறாம் வேற்றுமை உருபு!

இதற்குத் தொல்காப்பியம் :-
“ஆறாகுவதே
அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
தன்னினும் பிறிதினும் இதனது இதுவெனும்
அன்ன கிளவிக் கிழமைத் ததுவே” (வேற். 18)

‘ஆறு ஆகுவதே’ – ஆறம் வேற்றுமை உருபு ஆகுவதாவது,
‘அது எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி’ -  ‘அது’ என்று பெயர்கொண்ட வேற்றுமைச் சொல்!
‘தன்னினும் பிறிதினும்’ – ஒன்றனொடு சேர்ந்து பொருள்பட்டும்(தற்கிழமையாகவும்) , சேராது நின்று பொருள்பட்டும்(பிறிதின் கிழமையாகவும்),
‘இதனது இதுவெனும்’ – இந்தப் பொருளோடு தொடர்புபெற்று இது வரும் என்ற நிலையில்,
‘அன்ன கிளவிக் கிழமைத் ததுவே’ -  கிழமை பெற்றதாய் வருவதாகும்.

1. ’யானையது கொம்பு’ – ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க! கொம்பானது யானையோடேயே தொடர்புபட்டு ஒட்டிக்கொண்டிருக்கும் பொருளாதலால், இந்த எடுத்துக்காட்டின் பொருளைத்,  ‘தற்கிழமைப் பொருள்’ என்பர்!  (தன் + கிழமை = தற்கிழமை; பேசப்படும் பொருளுக்கே உரிமை உடையது; கிழமை – உரிமை; ‘கிழமை’ உடையவர் , ‘கிழார்’!)

2. ‘யானையது காடு’ - ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு இங்கும் வந்துள்ளதைக் காண்க! கொம்பானது யானையோடேயே தொடர்புபட்டு ஒட்டிக்கொண்டிருப்பதைப் போலல்லாது , காடானது தனித்துக் கிடப்பதால் , இந்த எடுத்துக்காட்டின் பொருளைப்,  ‘பிறிதின் கிழமைப் பொருள்’ என்பர்!

இனி, ஆறாம் வேற்றுமை உருபானது எந்தெந்தப் பொருள்களில் வரும் என வெகு நுணுக்கமாகக் கூறுகிறார் தொல்காப்பியர் !:-

“இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின்
செயற்கையின் முதுமையின் வினையி னென்றா
கருவியின் துணையின் கலத்தின் முதலின்
ஒருவழி யுறுப்பின் குழுவி  னென்றா
தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின்
திரிந்துவேறு படூஉம் பிறவும் அன்ன
கூறிய மருங்கில் தோன்றுங் கிளவி
ஆறன் பால என்மனார் புலவர்”        (வேற். 19)

இவற்றுக்கான எடுத்துக்காட்டுகளைக் கண்டால் பொருள் விளங்கும் !
கீழ்வரும் எடுத்துக்காட்டுகள் சேனவரையர் , இளம்பூரணர் , தெய்வச்சிலையார் உரைகளிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டவையாம் ! ஒவ்வொருவர் உரையிலும் ஒவ்வொன்று தெளிவாக இருக்கும் என்பதால் இப்படி எடுக்கவேண்டுயுள்ளது!:-

1 . இயற்கை :  ‘நிலத்தது அகலம்’- நிலத்தின் அகலம் இயற்கையாக அமைந்ததாகும்; எனவேதான் இயற்கைக் குணத்தின் அடிப்படையில் இதுபோல வருவனவற்றை எல்லாம்  ‘இயற்கக் கிழமை’ப் பொருள்கொண்டவை என்பர்; இப்படித் தொடர்கள் வந்தால் அதில் ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு வரும்! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)

2 . உடைமை:  ‘சாத்தனது தோட்டம்’ – இத் தொடரில் ‘அது’ வந்துள்ளதை நோக்குக! தோட்டம் சாத்தனுக்குச் சொந்தமானது என்பதால் , ‘உடைமை’ப் பொருளில் வந்த தொடர் இது ! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)

3 . முறைமை :  ‘ஆவினது கன்று’ – பசுவுக்கும் கன்றுக்கும் தொப்புள் உறவு உள்ளதால் இந்த எடுத்துக்காட்டுத் தொடர் ‘முறைமை’ என்ற பொருளுக்கு ஏற்றதாகும் ! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)

4  .கிழமை : ‘அரசனது உரிமை’ -  அரசனது உரிமை வரிவாங்குதல் என்றால் , இத் தொடரில் வந்துள்ள பொருள், ’கிழமை’ப் பொருள்! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)

5 . செயற்கை : ‘சாத்தனது கற்றறிவு’ என்ற தொடர், சாத்தனுடைய செயற்கையான – இயற்கையாக இல்லாமல் அவன் படித்துச் செயற்கையாப் பெற்ற- அறிவு என்பதால் , இந்த எடுத்துக்காட்டுச், ‘செயற்கை’ என்ற பொருளின்கீழ் வரும்! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)

6 . முதுமை: ‘அரசனது முதிர்வு’- அரசனுக்குற்ற முதுமையை இத் தொடர் தெரிவிப்பதால், இது ‘முதுமை’ என்ற பொருள் பாகுபாட்டில் வைத்துக் கருதப்படும் ! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)

7 . வினை: ‘சாத்தனது செலவு’ – சாத்தனது பயணம் என்று இன்றைய நடையிற் கூறலாம் !  செல்லும் வினை (காரியம்) பேசும் தொடராதலால், ‘வினை’ப் பொருள் கொண்ட தொடருக்கு இஃது எடுத்துக்காட்டாம் . (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)

8 . கருவி : ‘சாத்தனது வாள்’ – வாள் (கத்தி) , இன்னாரது என்று சொல்லக்கூடிய தொடர் இது;  ஆகவே , ‘அது’ வேற்றுமை பயிலும்  ‘கருவி’ப் பொருள் தொடர் இது! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)

9 . துணை:  ‘அவனது இணங்கு’- இங்கே ‘இணங்கு’ என்பது ‘துணைவன்’ அல்லது ‘துணைவி’யைக் குறிப்பதாகும் !  ‘Spouse’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல் ‘இணங்கு’!  எனவே ‘துணைக் கிழமை’க்கு இந்த எடுத்துக்காட்டுத் தொடர் பொருந்துவதைக் காண்க! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)

10 . கலம்:  ‘சாத்தனது கலம்’ – இங்கே ‘கலம்’ என்பது ‘ஓலைப் பத்திரம்’ (Palmleaf document) என்ற பொருளில் நிற்கிறது !  ‘இன்னாரது கலம்’ என்ற தொடர் தொல்காப்பியர் காலத்தில் பயிற்சி இருந்ததால், ‘கலக் கிழமை’த் தொடர்களில் ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு  பயின்றது ! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)

11 . முதல் : ’கலத்தது முதல்’- ‘கலம்’ எனும் பத்திரம் எந்தப் பொருளின் உரிமைக்காக  எழுதப்பட்டது? இதற்கு விடை கூறும்போது , அந்நாளில்  ‘கலத்தது முதல் இன்னது’ என்பர்!  இதுவே ‘முதல் கிழமை’ என்பதன் பொருள்!

12 . ஒருவழி உறுப்பு: ‘புலியது உகிர்’ -  ‘உகிர்’ என்றால் நகம் என்பது பொருள். இத் தொடரிலும் ‘அது’ வேற்றுமை உருபு வந்துள்ளமை காண்க! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)

13 . குழூஉ: ‘படையது குழூஉ’-  ‘குழு’ என்பதே நூற்பாவுக்காக அளபெடை பெற்றது. குழுவைப் பற்றிய இத்தகைய தொடர்களில் ‘அது’ உருபு பயிலும். படையது குழு - படையது கூட்டம். (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)

14 . தெரிந்துமொழிச் செய்தி: ‘கபிலரது பாட்டு’ -  கபிலர் எழுதினார் என்று வெளிப்படையாகத் தெரிந்தது பற்றிய தொடராதலால் , ‘தெரிந்துமொழிச் செய்தி’! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)

15 . நிலை:  ‘சாத்தனது இல்லாமை’-  சாத்தன் என்பானின் வறிய நிலையைக் கூறும் தொடர் இது; இதில் ‘அது’ வந்துள்ளதை நோக்குவீர்! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)

16 . வாழ்ச்சி : ‘காட்டது யானை’ – இங்கே ’வாழ்ச்சி’ என்பது வாழ்க்கையைக் குறிக்கும்! காட்டில் யானை வாழ்வதைச் சுட்டும் தொடர் இது.  காட்டது யானை- காட்டிலே வாழும் யானை ! இங்கே ‘அது’ வந்துள்ளதை நோக்குவீர்! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)

17 . திரிந்து வேறுபட்டது:  ‘கோட்டது நூறு’ ; கோடு – சுண்ணாம்புக் கட்டி ; நூறு – தூள்; கோட்டது நூறு – சுண்ணாம்புத் தூள். சுண்ணக்கட்டி தூளாக மாறிவிட்டதால், ‘திரிந்து வேறுபட்டது’ என்ற கிழமைப் பொருள் வந்தது. (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)

’இயற்கை’ முதலாகத் ‘திரிந்து வேறுபட்டது’ ஈறாக வந்த மேல் 17 கிழமைப்பொருள்கள், தொல்காப்பியர் வகுத்தவை! இப் பதினேழும் , தற்கிழமை, பிறிதின் கிழமை என்ற இரண்டனுள் அடங்குவதை அடைப்புக் குறிக்குள் தந்துள்ள குறிப்புகளால் உணரலாம் !

தற்கிழமை பற்றி மேலே கண்டோமல்லவா? இந்தத் தற்கிழமை ஐந்து வகைப்படும் என்கிறார் சேனாவரையர்! :-

1 . ஒன்றியற் கிழமை- இயற்கை, நிலை பற்றி வந்தவை; எடுத்துக்காட்டுகளை மேலே (எண் 1, 15)பார்த்தோம் !
2 . ஒன்றுபல குழீஇயது – எள்ளதுகுப்பை
3 . வேறுபல குழீஇயது- படையது குழாம் (பலதரப்பட்ட வீரர்கள் படையில் இருப்பதால் ‘பல குழீஇயது’ ! பலகுழீஇயது – பல குழுமியது.
4 . உறுப்பின் கிழமை- புலியது உகிர்
5 . மெய்திரிந்தாய தற்கிழமை- சாத்தனது செலவு (சாத்தனின் பயணம் என்பது அவன் உடல் உறுப்போடு ஒட்டியது அல்ல; ஆகவே , ‘மெய்திரிந்தாய’ ! )

பிறிதின் கிழமைக்கு உட் பிரிவுகள் இல்லை என்பது இளம்பூரணர் கருத்தாக உள்ளது! ஆனால், சேனாவரையர், பிறிதின் கிழமை மூன்று வகைப்படும் என்று கூறுகிறார் !பொருள் , நிலம், காலம் ஆகிய கிழமைகளில் இவை வரும் என்கிறார் அவர்:-

1 .பொருள்- ‘கபிலரது பாட்டு’ (சேனாவரையரின் எடுத்துக்காட்டு)
2 . நிலம் – ‘யானையது காடு’(சேனாவரையரின் எடுத்துக்காட்டு)
3 . காலம் – ‘வெள்ளியது ஆட்சி’ (ஆ.சிவலிங்கனாரின் எடுத்துக்காட்டு)
(வெள்ளிக்கோள் பற்றிய தொடர்களில் இப்படிப்பட்ட தொடர்கள் பயின்றன.)

‘அது’ எனும் ஒரு வேற்றுமை உருபைத் தொல்காப்பியம் எவ்வளவு ஆழமாக ஆய்ந்துள்ளது பார்த்தீர்களா? வியப்பு! வியப்பு!
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(468) - Page 47 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(468)

Post by M.Jagadeesan on Sun Aug 27, 2017 2:34 pm

என் மாடு , எனது மாடு - இவற்றில் எது சரி ?

திருமணப் பத்திரிகைகளில் " எனது மகனுக்கும் ...." என்று அச்ச்சிடுகிறார்கள் . அது சரியா ?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(468) - Page 47 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(468)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 27, 2017 3:21 pm

மிக்க நன்றி எம்.ஜெகதீசன் அவர்களே!
என் மாடு , எனது மாடு – இரண்டுமே சரிதான் !
எனது மகன் – இதுவும் சரிதான்! தொல்காப்பியத்து ‘முறைமைக் கிழமை’ இதில் பயிலுவதைக் காண்பீர்!
மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(468) - Page 47 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(468)

Post by M.Jagadeesan on Sun Aug 27, 2017 5:08 pm

நான் கேள்விப்பட்ட வரையில் " என் " என்பது உயர்திணைக்கும், " எனது " என்பது அஃறிணைக்கும் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் .

" எனது மகன் " எனது மாடு " இவை இரண்டும் சரியென்று சொன்னால் , மகனும் மாடும் சமநிலை பெறுகின்றனர் . இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா ?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(468) - Page 47 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(468)

Post by Dr.S.Soundarapandian on Mon Aug 28, 2017 9:07 pm

நன்றி ஜெகதீசன் அவர்களே! நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான் ! நானும் அதைப் படித்துள்ளேன்! ‘அது’ பற்றிய தொல்காப்பியர் நூற்பாவில் ‘முறைமைக் கிழமை’ என வந்துள்ளதால், ’எனது மகன்’ தொல்காப்பிய விதிக்கு உட்பட்டதுதான் என நாம் மதிப்பிடலாம்!

மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(468) - Page 47 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (457)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 03, 2017 7:54 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (457)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது ஏழாம் வேற்றுமை உருபு!:-

 “ஏழாகுவதே
 கண்ணெனப்  பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்
அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே” (வேற். 20)

‘ஏழு ஆகுவதே’ – ஏழாம் வேற்றுமை எனப்படுவது,
‘கண் எனப் பெயரிய’ – ‘கண்’ என்ற பெயர்கொண்ட’
‘வேற்றுமைக் கிளவி’ – வேற்றுமைச் சொல்;
‘வினைசெய் இடத்தின்’ – தொழில் நடைபெறும் இடத்தில்,
‘நிலத்தின்’ – இடத்தைக் குறிப்பிடும்போது,
‘காலத்தின்’ – காலத்தில் நடைபெறுவதைக் குறித்தலின்போது,
‘அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே’ – என்ற மூன்று நிலைகளில் தோன்றும் !

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள் !-
1 . ’தட்டுப்புடைக்கண் வந்தான்’  (இந்த எடுத்துக்காட்டு  ‘வினைசெய் இடத்தில்’ என்பதற்கானது) ( தட்டுப்புடை என்ற தொழில், முறத்தால் பயிர்களைப் புடைத்தல் என்பதாகலாம் எனச் சிவலிங்கனார் குறிப்பு எழுதியுள்ளார். )
2 . ’மாடத்தின்கண் இருந்தான்’ (இந்த எடுத்துக்காட்டு  ‘நிலத்தில்’ என்பதற்கானது)
3 . ‘கூதிர்க்கண் வந்தான்’ (இந்த எடுத்துக்காட்டு  ‘காலத்தின்’ என்பதற்கானது)s


அடுத்த நூற்பாவில் , ’கண்’ உருபினையும் அதனை  ஒத்த , பிற சொல் உருபுகளை யும் அடுக்குகிறார் தொல்காப்பியர்!:-

”கண்கால் புறமகம் உள்ளுழை கீழ்மேல்
பின்சார் அயல்புடை தேவகை யெனாஅ
முன்னிடை கடைதலை  வலமிட மெனாஅ
அன்ன பிறவும் அதன்பால என்மனார் ”  (வேற்.21)

இந் நூற்பா தரும் உருபுகள்!:-
1 . கண்
2 . கால்
3 . புறம்
4 . அகம்
5 . உள்
6 . உழை
7 . கீழ்
8 . மேல்
9 . பின்
10 .சார்
11 . அயல்
12 . புடை
13 . தேவகை
14 . முன்
15 . இடை
16 . கடை
17 . தலை
18 .வலம்
19 . இடம்

சேனாவரையர் உரைப்படி ‘கண்’ என்ற ஒன்றே ஏழாம் வேற்றுமை உருபு ! ஏனைய பதினெட்டும் , ஏழாம் வேற்றுமை ’உருபின் திறத்தன’!

‘கண்’ என்பதே 7ஆம் வேற்றுமையின் சூத்திரச் சொல்! அஃதாவது  , வாய்பாடு(Formula).
எடுத்துக்காட்டாக , ‘தோப்பயல் இருந்தான்’ என்று தொடர் உள்ளது என வைத்துக்கொள்ளுங்கள்! இங்கே ‘அயல்’ எந்த வேற்றுமைப் பொருளில் வந்துள்ளது என்பதை அறியக் ‘கண்’ணை வைத்துப் பாருங்கள்! ‘தோப்புக்கண் இருந்தான் ’ என்று வருகிறது! இதனால் பொருளில் மாற்றம் இல்லை! எனவே, ‘அயல்’ என்பது ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்துள்ளது எனத் தீர்மானிக்கலாம்! இவ்வாறு நாம் தீர்மானிக்க வசதியாகவே தொல்காப்பியர் பல ’வேறு உருபுக’ளைத் தந்துள்ளார் என நாம் விளங்கிக்கொள்ளவேண்டும் !

இப்போது , கல்லாடனார் மேல் 19 உருபுகளுக்கும் (கல்லாடனார் பத்தொன்பதையும் ‘உருபுகள்’ என்றே எழுதுகிறார்!) தந்துள்ள எடுத்துக்காட்டுகளைக் காணலாம்! :-
1 . கண் -  ‘ஊர்க்கண் இருந்தான்’(= ஊரில்  இருந்தான்)
2 . கால் – ‘ஊர்க்கால் இருந்தான்’ (= ஊரை அடுத்து  இருந்தான்)
3 . புறம் – ’ஊர்ப்புறத் திருந்தான்’ (= ஊரின் புறத்தே  இருந்தான்)
4 . அகம் – ’மாடத்தகத் திருந்தான்’ (=மாடத்தில் இருந்தான்)
5 . உள் – ’ஊருள் இருந்தான்’ (=ஊருக்குள் இருந்தான்)
6 . உழை – ’சான்றோருழைச் சென்றான்’ (=சான்றோரிடம் சென்றான்)
7 . கீழ் – ’மாடத்துக்கீழ் இருந்தான்’ (= மாடத்திற்கு அடிப்புறத்தே இருந்தான்)
8 . மேல் – ‘மாடத்து மேல் இருந்தான்’(= மாடத்திற்கு மேலே இருந்தான்)
9 . பின் – ‘ஏர்ப்பின் சென்றான்’  (= ஏரின் பின்னே சென்றான்)
10 . சார் -  ‘காட்டுச்சார் ஓடுங் களிறு’  (= காட்டுப்பக்கம் ஓடுகிற களிறு)
11 . அயல் – ‘ஊரயல் இருந்தான்’ (= ஊரை ஒட்டி இருந்தான்)
12.  புடை – ‘ஊர்ப்புடை இருந்தான்’  (= ஊரின் பக்கத்தே இருந்தான்)
13 . தேவகை – ‘வடக்கண் வேங்கடம்’ (= வடக்குத் திசையில் வேங்கடம்)
14 . முன் -  ‘தேர்முன் சென்றான்’ (=தேருக்கு முன்னே சென்றான்)
15 . இடை – ‘சான்றோரிடை யிருந்தான்’ (=சான்றோர் நடுவே இருந்தான்)
16 . கடை – ‘கோயிற்கடைச் சென்றான்’ (= கோயிலுக்குச் சென்றான்)
17. தலை – ‘தந்தைதலைச் சென்றான்’ (= தந்தையிடம் சென்றான்)
18. வலம் – ‘கைவலத்துள்ளது கொடுக்கும்’ (= கையிலே உள்ளதைக் கொடுப்பார்)
19 . இடம் – ‘கையிடத்துப் பொருள்’ (= கையிலே உள்ள பொருள்)

கல்லாடனார் , ‘தேவகை’ என்பதைத் ’திசைக் கூறு’ எனக் கொண்டு , மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டைத் தந்துள்ளார். தொல்காப்பியரின் ‘அன்ன பிறவும்’ என்பதில் , ‘தேஎம்’ என்ற உருபைக் காட்டினார் கல்லாடனார்; இதே ‘தேஎம்’ என்ற சொல்லையே ,  ‘தேம்’ என்றார் தெய்வச்சிலையார். ’தேஎத்து’ என்ற சொல்லின் பகுதியாகத் ‘தேம்’ என்பதையே இன்றைய மொழியிலார் காட்டுகின்றனர்.

இறையனார் களவியலிலும் , சங்க இலக்கியத்திலும் ‘தேஎத்து’ , ‘தேயத்து’ என்ற வடிவங்கள் ‘கண்’ வேற்றுமை உருபுப் பொருளிலேயே வருகின்றன; ‘திசை’ என்ற பொருளில் வரவில்லை!

இலக்கணக் கொத்து என்ற நூலில் சுவாமிநாத தேசிகர் (கி.பி.17ஆம் நூ.ஆ.) உருபை மூன்று வகைகளாகக் காட்டுகிறார் :-
1 . உருபு
2 . வேறு உருபு
3 . சொல்லுருபு

ஆனால் இவற்றை அவர் விளக்கவில்லை!

 இலக்கொத்தின்படி,தொல்காப்பியர் கூறிய ‘கண்’ என்பதை நாம் ’உருபு’ எனக் குறிக்கலாம்; ’கால்’ முதல் ‘இடம்’ வரையானவற்றை ‘வேறு உருபுகள்’ என்ற வகையில் அடக்கலாம்.
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (TVU), ‘வீடு வரை போனான்’ என்ற தொடரில் ‘வரை’ என்பது சொல்லுருபாகும் என்கிறது;  பெயர்சொல்லின் ஈற்றில் இணைந்து நிற்காமல் தனித்து நிற்பதால் ‘வரை’ யைச் சொல்லுருபு என அது  விளக்குகிறது.இதன்படி -

‘அதன் நிமித்தம்’ – இங்கே ’நிமித்தம்’, சொல்லுருபு.
‘அதன் பொருட்டு’ – இங்கே ’பொருட்டு’, சொல்லுருபு.
எனச் சில எடுத்துக்காட்டுகளை நாம் தரலாம்.

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(468) - Page 47 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (458)

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 09, 2017 8:38 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (458)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது , வேற்றுமையியலின் அடுத்த நூற்பா!:-

 “வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை
  ஈற்றுநின் றியலுந் தொகைவயின் பிரிந்து
  பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும்    
  எல்லாச் சொல்லும் உரிய வென்ப”             (வேற்.22)

‘வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை’ -  வேற்றுமைப் பயன் இன்னது என்று ஒரு தொகையை விரித்துப்  பேசும்போது,
‘ஈற்றுநின் றியலுந் தொகைவயின் பிரிந்து’ – முதற்சொல்லின் ஈற்றிலே அந்த வேர்றுமையானது நிற்கும் !
‘பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும்’ -  வேற்றுமையை உருபோடு சொல்லினும், உருபானது மறையச் சொல்லினும்  , பொருளானது ஒன்றாகவே வரும் !

‘மரங் குறைத்தான்’ – இது வேற்றுமைத் தொகை. (வேற்றுமை உருபு மறைந்து வருவதைக் காண்க)

‘மரத்தைக் குறைத்தான்’ – இது வேற்றுமை விரி. (ஐ- வேற்றுமை உருபு வெளிப்பட நிற்பதைக் காண்க)
-
ஆனால் இரண்டு இடத்தும் பொருள் ஒன்றே!இரண்டும் வேற்றுமைப் பொருள் கொண்ட தொடர்களே!
மேலை எடுத்துக்காட்டில் ‘மரம்’ என்ற சொல்லின் ஈற்றிலேதான் வேற்றுமை உருபு(ஐ) நின்றதையும் நோக்கலாம் !

‘ஈற்றுநின்று இயலும்’ என்பதை மேலும் விளக்கவேண்டும் !

‘தாழ்குழல் வந்தாள்’ – இதில், வேற்றுமை உருபு எங்கே மறைந்து நிற்கிறது? ‘தாழ்குழல்’ என்பதன் ஈற்றிலே மறைந்து நிற்கிறது !

‘தாழ்குழல் வந்தாள்’ – இதனை விரித்தால், ‘தாழ்குழலை உடையவள் வந்தாள்’ என விரியும் !   ‘தாழ்குழல்’ என்பது , தாழ்குழலை உடையவளைச் சுட்டுவதால் , இதனை  ‘அன்மொழித்தொகை’ என்கிறோம் !  ‘தாழ்குழல்’ என்பது தொகை; ஆனால் , இதற்குப் புறத்தே சென்று ‘ தாழ்குழலை உடையவள்’ என்ற பொருளை நாம் எடுப்பதால், ‘அன்மொழித்தொகை’ ஆகிறது.
     
அன்மொழித் தொகை = அல்+ மொழி+ தொகை

அல் – அல்லாத ; அஃதாவது சொல்லில் அல்லாத;  ‘புறத்தே’ என வந்த  மேலை விளக்கத்தைக் காண்க!

இத்துடன் வேற்றுமை இயல் முடிந்தது.
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(468) - Page 47 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (459)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 17, 2017 9:44 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (459)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது-
வேற்றுமை மயங்கியல் !

ஒரு வேற்றுமை உருபுக்குப் பதிலாக இன்னொரு வேற்றுமை வரும்போது ஏற்படும் பொருள் மாற்றங்களைக் கூறும் இயல் இது !

வேற்றுமை இயலின் முதலாம் நூற்பா! –
“கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்கு
உரிமையு முடைத்தே கண்ணென் வேற்றுமை”  (வேற். மயங். 1)

‘கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்கு ’ -  உடம்பால்  செயற்பாடு இல்லாத  ‘சார்பு’ எனும் சொல்லுக்கு,
‘உரிமையும் உடைத்தே கண் என் வேற்றுமை’ -  ‘கண்’ எனும் வேற்றுமை உருபு வருவதும் உண்டு !

சுவற்றைச் சார்ந்தான் – இதில் உடம்பின் செயல் உள்ளது!
தூணைச் சார்ந்தான் -   இதில் உடம்பின் செயல் உள்ளது!

ஆனால்,
‘அரசனைச் சார்ந்தான்’ – இதில் உடம்பின் செயற்பாடு இல்லை ! அஃதாவது , அரசன் மீது உடம்பைச் சார்த்துதல் இல்லை !  தூணின் மீது சாய்வது போல அரசன் மீது சாய்வது இல்லையல்லவா? இதுவே கருமம் அல்லாச் சார்பு!

தூணைச் சார்ந்தான் – இது கருமச் சார்பு
சுவற்றைச் சார்ந்தான் – இது கருமச் சார்பு

1 . அரசரைச் சார்ந்தான் -  கருமம் அல்லாச் சார்பு ; இங்கே இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ)வந்தது !  
2 .  அரசர்கட்  சார்ந்தான் -  கருமம் அல்லாச் சார்பு ; இங்கே எட்டாம் வேற்றுமை உருபு ( ‘கண்’)வந்தது !  
-
இந்த இரண்டு தொடர்களுக்கும் பொருள் ஒன்றே!

இவற்றில் , ‘ஐ’யும் வரலாம்  ‘கண்’ணும் வரலாம் என்ற நிலை உள்ளதல்லவா? இதுதான் வேற்றுமை மயக்கம் என்பது!

இனி , வேறுமை இயலின் இரண்டாம் நூற்பா!-
“சினைநிலைக் கிளவிக்கு ஐயுங் கண்ணும்
 வினைநிலை  யொக்கும் என்மனார் புலவர்” (வேற். 2)

இந்தச் சூத்திரமும் இரண்டாம் வேற்றுமை வரத்தக்க  எந்த இடத்தில் ஏழாம் வேற்றுமை வரலாம் என்பதைத்தான் சொல்கிறது !

சினைநிலைக் கிளவிக்கு ‘ -சினை பற்றிய சொல்லுக்கு,
‘ஐயும் கண்ணும்’ – ’ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபும், ‘கண்’ எனும் ஏழாம் வேற்றுமை உருபும்,
‘வினைநிலை  ஒக்கும் என்மனார் புலவர்’ -  தம்முள் ஏதாவது ஒன்று வந்தாலும், பொருள் மாறாது  என்பார்கள் புலவர்கள் !

‘கோட்டைக் குறைத்தான்’ =  கொம்பைக் குறைத்தான் (கொம்பை வெட்டினான் ; இங்கே ‘ஐ’வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க!)
‘கோட்டின்கட்  குறைத்தான்’ =  கொம்பைக் குறைத்தான் (கொம்பை வெட்டினான் ; இங்கே ‘கண்’வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க!)

‘ஐ’ உருபு வந்தாலும் , ‘கண்’ உருபு வந்தாலும் பொருள் ஒன்றுதான் என்பதைக் கவனிக்க!
                                   ***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(468) - Page 47 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (460)

Post by Dr.S.Soundarapandian on Wed Sep 20, 2017 7:08 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (460)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இரண்டாம் வேற்றுமை உருபும் ஏழாம் வேற்றுமை உருபும் , ஒன்று வரவேண்டிய இடத்தில் மற்றது வரலாம் என்பதற்கான மேலும் இரு எடுத்துக்காட்டுகளைத் தொல்காப்பியர் தருகிறார் :-
“கன்றலுஞ் செலவும் ஒன்றுமார் வினையே” (வேற். 3)

கன்றல் – ஆட்படுதல் ; அடிமைப் படல்
செலவு – செல்லுதல்

சூதினைக் கன்றினான் = சூதினுக்கு ஆட்பட்டான்
சூதினைக் கன்றினான் – இங்கே ‘ஐ’ உருபு வந்துள்ளதைக் காண்க.
சூதின்கட் கன்றினான்  = சூதினுக்கு ஆட்பட்டான்
சூதின்கட்  கன்றினான் – இங்கே ‘கண்’ உருபு வந்துள்ளதைக் காண்க.

ஆக, மேல் எடுத்துக்காட்டுகளைப் பொறுத்தவரை, ‘ஐ’ உருபு வந்தாலும், ‘கண்’ உருபு வந்தாலும் பொருள் ஒன்றுதான் என்று அறிகிறோம்!

இதே முறையில் ,
நெறியைச் சென்றான் = நெறிப்படி போனான்
நெறியைச் சென்றான் – இங்கே ‘ஐ’உருபு வந்துள்ளதைக் காண்க.
நெறிக்கண் சென்றான் = நெறிப்படி போனான்
நெறிக்கண் சென்றான்- இங்கே ‘கண்’ உருபு வந்துள்ளதைக் காண்க

சேனாவரையர்,
’சூதினை இவறினான்’ , என்பதும்  ‘சூதின்கண் இவறினான்’ என்பதும் ஒரே பொருள் தருவனவே என்கிறார் !

இவறினான் – மிக விரும்பினான்

மேலும் சேனாவரையர்,
‘நெறியை நடந்தான்’ , என்பதும் ‘நெறிக்கண் நடந்தான்’ என்பதும் ஒரே பொருளன என்கிறார் !
தொல்காப்பியர் , ’கன்றல்’ , ‘செலவு’ ஆகிய இரு சொற்களைத் தரச், சேனாவரையர் வேறு எந்தப் புதுச் சொல்லையும் தராமல், அந்த இரு சொற்களின் பொருளைத்தரும் வேறு இரு சொற்களை மட்டும் தந்துள்ளதை நோக்குவீர் !

இதுவே சேனாவரையரின் உரைநெறி!
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(468) - Page 47 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (461)

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 23, 2017 1:40 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (461)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்


‘மரத்தைக் கிளையை வெட்டினான்’ – இந்தத் தொடர் சரியா?

சரியில்லை !

அப்படியானால் , இதுபோன்ற தொடர்களுக்குத் தொல்காப்பியத்தில் விதி உள்ளதா? – அடுத்த கேள்வி !

விதி உள்ளது! :-

 “முதற்சினைக் கிளவிக்கு அதுவென் வேற்றுமை
 முதற்கண் வரினே சினைக்கை வருமே ”  (வேற்.மயங். 4)

‘முதற்சினைக் கிளவிக்கு’ – முதலும் அதன் உறுப்பும் சேர்ந்துநிற்கும் ஒரு தொடரில்,
‘அது என் வேற்றுமை’ -  ‘அது’ எனும் வேற்றுமை உருபானது ,
‘முதற்கண் வரினே’ – முதல் உறுப்போடு சேர்ந்து வந்தால்,
’சினைக்கு ஐ வருமே’ – சினை உறுப்பிற்கு ‘ஐ’ உருபு வரும்!

யானையைக் கோட்டைக் குறைத்தான் ×
யானையைக் கோட்டது குறைத்தான் ×
யானையது  கோட்டது  குறைத்தான் ×
யானையது கோட்டின்கண் குறைத்தான் ×
யானையது  கோட்டைக் குறைத்தான் √   ( = யானையின் கொம்பை வெட்டினான்)

யானை – முதல்
கோடு – சினை (உறுப்பு )  (கோடு - கொம்பு)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(468) - Page 47 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (462)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 24, 2017 1:14 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (462)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மேற்கண்டவாறு பாடம் நடத்திய தொல்காப்பியரிடம் ஒரு மாணவன், ‘யானையைக் கோட்டின்கண் குறைத்தான்’ எனச் சொல்லலாமா? எனக் கேட்டான் போலும் !
அவனுக்கு விடை கூறியது போன்று  எழுதுகிறார் அடுத்த நூற்பாவை –

“முதல்முன் ஐவரின் கண்ணென் வேற்றுமை
சினைமுன் வருதல் தெள்ளி தென்ப”  (வேற். மயங். 5)

‘முதல்’ என்பது ‘யானை’யைக் குறிக்கும் எனச் சென்ற ஆய்வில் பார்த்தோம்; ‘சினை’ என்பது கோட்டைக் (கொம்பு) குறைக்கும் என்வும் கண்டோம்.

இந்த நூற்பாவில் (வேற்.மயங். 5) , முதலுக்கு ‘ஐ’ உருபு வந்தால்,  சினைக்கு ‘கண்’ உருபு வரும் என்கிறார் !:-
யானையைக் கோட்டின்கண் குறைத்தான் √

யானையை இத்தோடு விடவில்லை தொல்காப்பியர்!

’முதல் , சினை  என்பதில் குழப்பம் கூடாது !  யானை முதல் என்றால் கோடு சினை; கோடு முதல் என்றால் அதன் நுனி சினை  !’  - என்றொரு விளக்கத்தை அளிக்கிறார்! :-

“முதலுஞ் சினையும் பொருள்  வேறுபடாஅ
நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே”   (வேற். மயங்.6)

’முதலும் சினையும் பொருள்  வேறுபடாஅ’ -  முதல் என்றும் சினை என்றும் தனிப் பொருள் வேறுபாடு உள்ளவை என்று எதையும் பிரிக்கமுடியாது !
‘நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே’ – சொல்லப்போனால் , சொல்லுபவனது மனக் குறிப்பைப் பொறுத்தே ‘முதல்’ , ‘சினை’ என்பதெல்லாம் ஏற்படுகிறது !  

‘கோடு’ முதலானால் –
கோட்டது நுனியைக் குறைத்தான் √  (விதி - வேற்.மயங்.4)
கோட்டை நுனிக்கண் குறைத்தான் √ (விதி - வேற்.மயங்.5)

மேல் நூற்பாவைக் (வேற்.மயங்.6) கொண்டு , சொல்லுபவனின் கருத்தைக் குறிப்பால் நாமே உணர்ந்துகொண்டு ,  ‘யானையைக் கோட்டைக் குறைத்தான்’ என்றால் , ‘யானையது கோட்டைக் குறைத்தான் என அறிந்துகொள்ளவேண்டும்’ என்பதே உரையாசிரியர்தம் உரையாக உள்ளது !

இதனால் , தொடரானது , அப்படியே நேராகத்தான் பொருளைத் தெரிவிக்கவேண்டும் என்பதில்லை ; அதில் சொல்லுவான் குறிப்பும் உள்ளது என்பதை அறிகிறோம் !
தமிழ்த் தொடரியல் (Syntax of Tamil Language) இது சுட்டத்தக்கது
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(468) - Page 47 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (463) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

Post by Dr.S.Soundarapandian on Sat Dec 02, 2017 9:26 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (463)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வேற்றுமை மயங்கியலில் நிற்கிறோம் !
இதில் ‘பிண்டப் பொருள்’ வந்தால் வேற்றுமை உருபுகள் எவ்வாறு இணையும் என்பது பற்றி விளக்குகிறார் தொல்காப்பியர்!
பிண்டப் பொருள் என்றால் என்ன?
குவியலாக எது இருக்கிறதோ அது பிண்டம் !
சோற்றைக் கையில் பிடித்து வைப்பார்கள்; அதைப் ’பிண்டம்’ என்பர். ஏனெனில் அது சிறு குவியலாக இருபதால் !
குப்பையானது குவியலாக இருந்தால் அதுதான் ‘பிண்டம்’!
இப்போது நூற்பா-
“பிண்டப் பெயரும் ஆஇயல் திரியா
பண்டியல் மருங்கின் மரீஇய மரபே”  (வேற்.மயங்.7)

 ‘பிண்டப் பெயரும்’ – பிண்டத்தை உணர்த்தும் பெயர்ச்சொல்லும்,
‘ஆ இயல் திரியா’ -  அந்த முறையிலிருந்து மாறுபடாது வருவது,
‘பண்டு இயல் மருங்கின்’ – பண்டுதொட்டு வழங்கிவரும் முறையின்,
‘மரீஇய மரபே’ – மருவிய முறையே !

 ‘அந்த முறையிலிருந்து’  என்று சொன்னார் அல்லவா?
எந்த முறையிலிருந்து?

முன் நூற்பாக்கள் வேற்.மயங்.4, 5 ஆகியவற்றில் கூறிய முறையிலிருந்து!

அம் முறைப்படி, சேனாவரையர் தந்த எடுத்துக்காட்டுகள் !:-

1. ‘குப்பையது  தலையைச் சிதறினான்’  -   (இதற்கு விதி, வேற்.மயங்.4)
- இதில் ‘முதல்’ = குப்பை
            ’சினை’= தலை

‘அது’ எனும் வேற்றுமை உருபு ‘முதல்’மீது வந்துள்ளதைக் காண்க!
‘ஐ’ எனும் வேர்றுமை உருபு ‘சினை’ மீது வந்துள்ளதைக் காண்க!’

2. ‘குப்பையைத்  தலைக்கட்  சிதறினான்’  -   (இதற்கு விதி, வேற்.மயங்.5)
- இதிலும் ‘முதல்’ = குப்பை
            ’சினை’= தலை

‘ஐ’ எனும் வேற்றுமை உருபு ‘முதல்’மீது வந்துள்ளதைக் காண்க!
‘கண்’ எனும் வேர்றுமை உருபு ‘சினை’ மீது வந்துள்ளதைக் காண்க!’

மேலே ‘குப்பை’ என வந்ததுதான் ‘பிண்டம்’!

இவற்றைச் சொல்லிவிட்டுச் சேனாவரையர் , “சிறுபான்மை இரண்டாவது வருதலுமாம்!” என்கிறார்!

என்ன பொருள்?
அஃதாவது, முதலுக்கு ’ஐ’ வரும்போது சினைக்குக் ‘கண்’ வரும் என்று பார்த்தோமல்லவா?  சில இடங்களில் , முதலுக்கு ‘ஐ’ வந்து சினைக்கும் ‘ஐ’ வரும் என்பதே சேனாவரையர் சொல்ல வந்தது !

சேனாவரையரின் எடுத்துக்காட்டு –
  ‘குப்பையைத் தலையைச் சிதறினான்’

இந்த எடுத்துக்காட்டில் .  ‘முதல்’ மீதும் , ’சினை’ மீதும் ‘ஐ’ வந்ததைக் காண்க!

நமக்காகச் சேனாவரையர் , ‘பிண்டம்’ பற்றி விளக்குகையில் , தனது உரை இறுதியில், “படை காடு, காவு மன்ன” என்கிறார் !

என்ன பொருள்?

‘படை’ என்பது பலர் சேர்ந்தது     ; அதனால் , ‘படை’ என்ற சொல்லும் ‘பிண்டம்’தான்.
‘காடு’ என்பது பல  தாவரங்கள்  சேர்ந்தது     ; அதனால் , ‘காடு’ என்ற சொல்லும் ‘பிண்டம்’தான்.
‘கா’ என்பது பல  மரங்கள் சேர்ந்தது     ; அதனால் , ‘கா’ என்ற சொல்லும் ‘பிண்டம்’தான்.

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(468) - Page 47 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (463) -

Post by Dr.S.Soundarapandian on Sat Dec 02, 2017 9:29 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (463)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வேற்றுமை மயங்கியலில் நிற்கிறோம் !
இதில் ‘பிண்டப் பொருள்’ வந்தால் வேற்றுமை உருபுகள் எவ்வாறு இணையும் என்பது பற்றி விளக்குகிறார் தொல்காப்பியர்!
பிண்டப் பொருள் என்றால் என்ன?
குவியலாக எது இருக்கிறதோ அது பிண்டம் !
சோற்றைக் கையில் பிடித்து வைப்பார்கள்; அதைப் ’பிண்டம்’ என்பர். ஏனெனில் அது சிறு குவியலாக இருபதால் !
குப்பையானது குவியலாக இருந்தால் அதுதான் ‘பிண்டம்’!
இப்போது நூற்பா-
“பிண்டப் பெயரும் ஆஇயல் திரியா
பண்டியல் மருங்கின் மரீஇய மரபே”  (வேற்.மயங்.7)

 ‘பிண்டப் பெயரும்’ – பிண்டத்தை உணர்த்தும் பெயர்ச்சொல்லும்,
‘ஆ இயல் திரியா’ -  அந்த முறையிலிருந்து மாறுபடாது வருவது,
‘பண்டு இயல் மருங்கின்’ – பண்டுதொட்டு வழங்கிவரும் முறையின்,
‘மரீஇய மரபே’ – மருவிய முறையே !

 ‘அந்த முறையிலிருந்து’  என்று சொன்னார் அல்லவா?
எந்த முறையிலிருந்து?

முன் நூற்பாக்கள் வேற்.மயங்.4, 5 ஆகியவற்றில் கூறிய முறையிலிருந்து!

அம் முறைப்படி, சேனாவரையர் தந்த எடுத்துக்காட்டுகள் !:-

1. ‘குப்பையது  தலையைச் சிதறினான்’  -   (இதற்கு விதி, வேற்.மயங்.4)
- இதில் ‘முதல்’ = குப்பை
            ’சினை’= தலை

‘அது’ எனும் வேற்றுமை உருபு ‘முதல்’மீது வந்துள்ளதைக் காண்க!
‘ஐ’ எனும் வேர்றுமை உருபு ‘சினை’ மீது வந்துள்ளதைக் காண்க!’

2. ‘குப்பையைத்  தலைக்கட்  சிதறினான்’  -   (இதற்கு விதி, வேற்.மயங்.5)
- இதிலும் ‘முதல்’ = குப்பை
            ’சினை’= தலை

‘ஐ’ எனும் வேற்றுமை உருபு ‘முதல்’மீது வந்துள்ளதைக் காண்க!
‘கண்’ எனும் வேர்றுமை உருபு ‘சினை’ மீது வந்துள்ளதைக் காண்க!’

மேலே ‘குப்பை’ என வந்ததுதான் ‘பிண்டம்’!

இவற்றைச் சொல்லிவிட்டுச் சேனாவரையர் , “சிறுபான்மை இரண்டாவது வருதலுமாம்!” என்கிறார்!

என்ன பொருள்?
அஃதாவது, முதலுக்கு ’ஐ’ வரும்போது சினைக்குக் ‘கண்’ வரும் என்று பார்த்தோமல்லவா?  சில இடங்களில் , முதலுக்கு ‘ஐ’ வந்து சினைக்கும் ‘ஐ’ வரும் என்பதே சேனாவரையர் சொல்ல வந்தது !

சேனாவரையரின் எடுத்துக்காட்டு –
  ‘குப்பையைத் தலையைச் சிதறினான்’

இந்த எடுத்துக்காட்டில் .  ‘முதல்’ மீதும் , ’சினை’ மீதும் ‘ஐ’ வந்ததைக் காண்க!

நமக்காகச் சேனாவரையர் , ‘பிண்டம்’ பற்றி விளக்குகையில் , தனது உரை இறுதியில், “படை காடு, காவு மன்ன” என்கிறார் !

என்ன பொருள்?

‘படை’ என்பது பலர் சேர்ந்தது     ; அதனால் , ‘படை’ என்ற சொல்லும் ‘பிண்டம்’தான்.
‘காடு’ என்பது பல  தாவரங்கள்  சேர்ந்தது     ; அதனால் , ‘காடு’ என்ற சொல்லும் ‘பிண்டம்’தான்.
‘கா’ என்பது பல  மரங்கள் சேர்ந்தது     ; அதனால் , ‘கா’ என்ற சொல்லும் ‘பிண்டம்’தான்.

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்(468) - Page 47 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம்(468)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை