ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 Dr.S.Soundarapandian

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 Dr.S.Soundarapandian

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

நரை கூறிய அறிவுரை
 Dr.S.Soundarapandian

பூக்கும் நீரூற்று! - கவிதை
 Dr.S.Soundarapandian

துயரங்களும் தூண்களாகுமே !
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
 Dr.S.Soundarapandian

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 Dr.S.Soundarapandian

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்
 ayyasamy ram

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
 ayyasamy ram

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து

View previous topic View next topic Go down

நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து

Post by balakarthik on Sun Jan 13, 2013 4:07 pmநாகேஷ் எப்போதும் யாரையாவது கேலி செய்து கொண்டே இருப்பார். சிலருககு அதை ஜீரணித்துக் கொள்ளுவது பல நேரங்களில் கஷ்டமானதாகக் கூட இருக்கும். அதைப் பற்றியெல்லாம் இவர் கவலைப்படுவதில்லை. தன்னைப் பிறர் அதே போல் கேலியோ, கிண்டலோ செய்தால்... ஆஹா! அதை அவரே ரசிப்பதை இன்றைக்கெல்லாம் பார்த்து நாம் வாய்விட்டுச் சிரித்து மகிழலாம். ஒவ்வொருவராக அழைத்து, ‘‘இதோ பார்த்தீங்களா! இவர் என்னைப் பற்றி இப்படிப் பேசினார். எப்படி ஜோக்? புத்திசாலித்தனமாக மடக்கி விட்டார் பார்த்தீர்களா?’’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி ஆனந்தப்படுவார். அப்படிப்பட்ட பெருமனம் அவருக்கு.

ஒருவரோடு ஒருவர் நெருக்கமாகி விட்டார்கள் என்பதை வெளிக்காட்ட நமது பெரியவர்கள் எத்தனையோ சிறப்பான வழிகளைச் சொல்லித் தந்திருக்கின்றார்கள். ஆனால் இந்தத் தமிழ் சினிமா உலகத்தில் ஒரு சிலர் அவர்களுக்கென்றே ஒரு தனி வழியைக் கடைப்பிடிப்பதைக் காணுகின்றேன்.

அதாவது, நெருங்கிப் பழகியதும் தங்கள் இருவருக்குமிடையில் உள்ள வயது வித்தியாசத்தைக் கூட கவனியாது, ‘‘ஏண்டா... எப்படா வந்தே?’’ ‘‘ஏ கழுதே... என்னெப் பாக்காம எங்க போறே?’’ என்று இப்படி ஏக வசனத்தில் பேசுவதையும், வேறு யாரிடமாவது தனது நெருங்கிய நண்பரைப் பற்றி்ப் பேசும்போது கூட, ‘‘அவன் ஒரு ஃபூல்! (Fool).’’ ‘‘அவன் எப்பவும் இப்படித்தான்’’ என்றெல்லாம் குறிப்பிடுவதையும் தங்களுக்கிடையில் இருக்கும் நட்பை வெளிக்காட்டிக் கொள்வதாக எண்ணிக் கொள்கிறார்கள்.

எனது நெருங்கிய நண்பன் ஒருவன் ஒரு நாள் என்னைக் காண என் வீட்டுக்கு வந்தான். அப்போது நான் குளித்து விட்டு உடைகளை மாற்றிக் கொண்டிருந்தேன். வந்த நண்பன் என் தாயாரிடம், ‘‘ஏம்மா, ராமச்சந்திரன் இருக்கானா?’’ என்ற கேட்டான்.

தாயார்: ‘‘ஏம்ப்பா... உன்னெ வரச் ‌சொன்னானா?’’

நண்பன்: ‘‘சுத்த மடப்பய! என்னெக் காலங்காத்தாலெ வாடான்னு சொல்லிட்டு இவன் பாட்டுக்கு எங்கேயோ போயிட்டானே... சேச்சே..!’’

தாயார்: ‘‘நீங்க ரெண்டு பேரும் சிநேகிதர்களா?’’

நண்பன்: ‘‘ஆமாம்மா. இவனெப் போய் சிநேகிதம் பண்ணிக்கிட்டேனே, என்னெ அடிக்கணும்!’’

என் தாயார் அவனை அதற்கு மேல் பேச விடாது தடுத்து, ‘‘ஏம்பா..! நான் சொல்றதைக் கவனி! உன்னுடைய சிநேகிதனைப் பத்தி நீயே தரக்குறைவாப் பேசினா, அவனை யார் மதிப்பா? நீ அவனெ மதிக்காதபோது அவனுடைய சிநேகிதனா உனக்கு எப்படி மத்தவங்க மரியாதை காண்பிப்பாங்க? உன் நண்பனுக்கு நீ பெருமை தேடித் தரணுமே தவி‌ர, அவனுககு இருக்கிற நல்ல பேரையும் கெடுத்துடக் கூடாது. உங்க சிநேகிதம் எப்படியோ இருக்கட்டும். அது நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும்போது வெச்சுக்குங்க... ஆனா, பலர் முன்னிலையிலே இதெல்லாம் வேண்டாம்...’’ என்றார்கள்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்ததுதான்... அன்று முதல் பிறர் முன்னிலையில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் யாரைப் பற்றியும் ஏக வசனத்தில் பேசுவதே கிடையாது. பிறர் முன்னிலையில் தரக்குறைவாக நடந்து கொள்வதும் கிடையாது. ஆனால் சில இளைஞர்கள் இந்தச் சினிமா உலகத்தில் இப்படித் தரக்குறைவாகப் பிறர் முன்னிலையில் நடந்து கொள்வதைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை என்று தோன்றுகிறது.


இதுவும் எனக்கு நினைவுககு வருகிறது. இதெல்லாம் தவறான வழியில் தன் மனத்தை வளர்த்துக் கொண்ட, நாகரீகம் என்று சொல்லிக் கொண்டு, மேலே மேலே செல்லும் துணிவில் ஏற்படுகின்ற விபரீதத்தினால்தான் என்பதை நாம் உணருகிறோம். நெருங்கிய நண்பர்களாகட்டும் அல்லது உரிமையோடு பழகும் தன்மை பெற்றவர்களாகட்டும், அவர்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் தனிமையில் பேசிக் கொள்வதைப் ‌போல் பொது இடத்திலும் பேசுவது சரியாயிராது என்றுதான் நான் நினைக்கிறேன்.

இங்கே இதுபற்றி நான் நினைவுபடுத்திக் கொண்டதற்குக் காரணம் உண்டு. இந்தப் பயணத்தின்‌போது தம்பி நாகேஷ் எல்லோரிடத்திலும் பழகும் போது காட்டும் நல்ல பண்புகளைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதே நேரத்தில் அவர் ஒரு சிலரிடம் மட்டும் உரிமையோடு பேசுாவதையும் கவனித்தேன். தம்பி அசோகன், ஸ்டில் போட்டோகிராபர் சங்கர்ராவ் இந்த இருவரை மட்டும்தான் ‘டே’ போட்டுப் பேசினார்.

அந்தப் பேச்சு கீழ்த்தரமாகவோ, கேவலமாகவோ இல்லை. அவர் அப்படிப் பேசவும் மாட்டார். ஆனால் உரிமையுடன் அவர் அப்படிப் பேசும்போது புரியாதவர்களுக்கு அது வேறுவிதமாகத் தோ்ன்றிவிடக் கூடுமோ என்று நான் எண்ணினேன். தன்னால் அடக்கிக் கொள்ள முடியாத மகிழ்ச்சி ஏற்பட்ட போதுதான் அப்படி அவர் அந்த இருவரிடமும் நடந்து கொண்டாரே தவிர, வேறு எப்போதும் யாரிடமும் எத்தகைய மரியாதைக் குறைவான பேச்சையோ, கருத்தையோ வெளிப்படுத்தியதே கிடையாது என்பதையும் நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அது மட்டுமல்ல... அவரால்தான் எங்களது பயணம் பெரும்பாலும் மகிழ்ச்சியோடும், வேடிக்கை, விளையாட்டு என்ற வகையிலும் கலகலப்பு கலந்ததாகவும் இருந்தது என்று சொல்லுவதுதான் மிகமிகச் சரியாக இருக்கும்.

ஹாங்காங்கிலிருந்து புறப்பட்ட விமானம் ஜப்பான் கடலைக் கடந்து ஒசாகா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ‘‘ஏன் மிஸ்டர் நாகேஷ், நாம் இப்ப எவ்வளவு தூரம் வந்திருப்போம்?’’ -இது கேள்வி. ‘‘கொஞ்சம் இரு. வெளியே எட்டிப் பார்த்தச் சொல்றேன். மைல்கல் வெளியேதானே நட்டிருப்‌பான்! பார்த்துட்டாப் போறது!’’ என்ற பதிலைச் சொன்னார் நாகேஷ். அவ்வளவுதான்... சொர்ணமும் மற்றவர்களும் சேர்ந்து வாய்விட்டுச் சிரித்தனர்.

ஒசாகாவை நெருங்க நெருங்க விமானம் மேலும் கீழும் ஆடியது. அதுவரையில் வெளிப்படையாக உரத்துப் பேசாதிருந்த திரு.அசோகன் கேட்டார். ‘‘என்ன நாகேஷ்! கீழே கீழே அப்படி இப்படி இறங்கி பயமுறுத்தறான்?’’ திரு.நாகேஷின் பதில்: ‘‘ஒண்ணுமில்லே... இருட்டிடுச்சுல்ல... ஒசாகா எங்க இருக்குதுன்னு குனிஞ்சு குனிஞ்சு தேடுறான்!’’

-இப்படிப்பட்ட பதில்களைக் கேட்டு யாரால்தான் சிரிக்காமல் இருக்க முடியும்?

எம்.ஜி.ஆர். எழுதிய ‘உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை’ நூலிலிருந்து.


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து

Post by ஹர்ஷித் on Sun Jan 13, 2013 4:26 pm

பகிர்விற்கு நன்றி அண்ணா. சூப்பருங்க
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து

Post by balakarthik on Sun Jan 13, 2013 4:42 pm

:வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து

Post by யினியவன் on Sun Jan 13, 2013 4:49 pm

பணிவு, பண்பு, அன்பு கலந்த நகைச்சுவை நடிகரின் பகிர்வு - சூப்பருங்கavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து

Post by Ahanya on Sun Jan 13, 2013 5:02 pm

பதிவுக்கு நன்றி அண்ணா....... நன்றி
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து

Post by balakarthik on Sun Jan 13, 2013 5:15 pm

:வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து

Post by அருண் on Sun Jan 13, 2013 6:16 pm

அனைத்து தகவல்களும் ரசிக்கும்படியாக இருந்தது..! சூப்பருங்க
தகவலுக்கு நன்றி பாஸ்..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து

Post by balakarthik on Sun Jan 13, 2013 6:24 pm

@அருண் wrote:அனைத்து தகவல்களும் ரசிக்கும்படியாக இருந்தது..! சூப்பருங்க
தகவலுக்கு நன்றி பாஸ்..!

ரசித்ததற்கு நன்றி மாஸ் சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து

Post by பது on Sun Jan 13, 2013 8:35 pm

நன்றி அன்பு மலர்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து

Post by பாலாஜி on Mon Jan 14, 2013 11:50 am

நல்ல பதிவு ,மிக சிறந்த நடிகர் .

ஆனால் இவ்வளவு சிறப்பு மிக்க நடிகருக்கு விருது எதுவும் வழங்கவில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது.
http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து

Post by balakarthik on Mon Jan 14, 2013 12:49 pm

கோவிலில் அன்னதானம் செய்யுறது சாமிக்கு பெருமை இல்லை அன்னதானம் செய்றவங்களுக்கு தான் பெருமை அது போல விருதுகள் நாகேஷுக்கு பெருமை இல்லை விருதுகளுக்குதான் நாகேஷ் ஒரு சகாப்த்தம் இன்றைய காமெடி நடிகர்கள் பலருக்கு அவரத்தான் முன்னோடி அவர் பாணியை கடைபிடித்து வெற்றி அடைந்தவர்கள் இங்கே பலர் அதுவே மிக பெரிய விருதுத்தான் அன்றைய மிகப்பெரிய துருவங்களான MGR சிவாஜிகணேசன் போன்றோர் நாகேஷுக்காக காத்திருந்ததும் நாகேஷின் பெருமைத்தான் சரிடிரத்திர்க்கு எதுக்கு விருது சரித்திரமே நமக்கு கிடைச்ச மிகப்பெரிய விருதுத்தான் அதுபோல் நாகேஷும் சினிமாவிற்கு கிடைத்த மிக பெரிய விருது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து

Post by பாலாஜி on Mon Jan 14, 2013 12:52 pm

@balakarthik wrote:கோவிலில் அன்னதானம் செய்யுறது சாமிக்கு பெருமை இல்லை அன்னதானம் செய்றவங்களுக்கு தான் பெருமை அது போல விருதுகள் நாகேஷுக்கு பெருமை இல்லை விருதுகளுக்குதான் நாகேஷ் ஒரு சகாப்த்தம் இன்றைய காமெடி நடிகர்கள் பலருக்கு அவரத்தான் முன்னோடி அவர் பாணியை கடைபிடித்து வெற்றி அடைந்தவர்கள் இங்கே பலர் அதுவே மிக பெரிய விருதுத்தான் அன்றைய மிகப்பெரிய துருவங்களான MGR சிவாஜிகணேசன் போன்றோர் நாகேஷுக்காக காத்திருந்ததும் நாகேஷின் பெருமைத்தான் சரிடிரத்திர்க்கு எதுக்கு விருது சரித்திரமே நமக்கு கிடைச்ச மிகப்பெரிய விருதுத்தான் அதுபோல் நாகேஷும் சினிமாவிற்கு கிடைத்த மிக பெரிய விருது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நடனம் , காமெடி , குணசித்திரம் என்று பல வகையிலும் கலக்கியவர்.

நாகேஷும் சினிமாவிற்கு கிடைத்த மிக பெரிய விருது சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து

Post by கரூர் கவியன்பன் on Mon Jan 14, 2013 4:02 pm

சிறப்பான தகவல்களுடன் பதிவு.நன்றி
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து

Post by Pakee on Mon Jan 14, 2013 8:42 pm

பகிர்விற்கு நன்றி அண்ணா
avatar
Pakee
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 635
மதிப்பீடுகள் : 74

View user profile http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

Re: நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து

Post by balakarthik on Tue Jan 15, 2013 11:13 am

:வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து

Post by DERAR BABU on Tue Jan 15, 2013 11:16 am

பதிவுக்கு நன்றி
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து

Post by balakarthik on Tue Jan 15, 2013 11:19 am

நன்றிங்கன்னே :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum