புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Rutu
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pradepa
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
18 Posts - 2%
prajai
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
5 Posts - 0%
Rutu
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_m10பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன் மொழி ‍ பழமொழிகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 10:09 am

First topic message reminder :

01. ஒருவன் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவனுடைய மரணத்தின்போதுதான் தீர்மானமாகிறது.

02. இயற்கை என்னும் தாய் மார்பில் பால் குடிக்கும் தன் குழந்தையை ஒரு மார்பில் இருந்து இன்னொரு மார்பிற்கு மாற்றும் போது ஏற்படும் இடைவெளியே மரணம்.


03. வாழ்வைத் தள்ளினாலும் சாவைத் தள்ளக் கூடாது.


04. மனிதர்கள் இறந்த பின்னர்தான் அவர்களைப் பற்றி மதிப்பீடு செய்கிறோம்.


05. பிறப்போடு பிறந்தது மரணம்.


06. மரணம் என்பதும் வாழ்வு என்பதும் இரண்டு வேறு வேறான சங்கதிகள் அல்ல வாழ்க்கையை அனுபவிப்பதென்பது மரணத்தை அனுபவிப்பதுதான்.


07. செத்தவன் வாயில் மண் இருந்தவன் வாயில் சோறு.


08. கெட்ட செய்திகள் போல வேறு எதுவுமே வேகமாகப் பரவுவதில்லை.


09. காத்துக் கொண்டிருக்காதே நீ ஒருபோதும் செயற்படமாட்டாய்.


10. குனியாதே சுமப்பாய் நிமிர்ந்தால் உயர்வாய்.


11. நன்றி மறவாத வாழ்வு நம்மை அறியாமலே உயரும்.


12. வார்த்தைகள் அசிங்கமானால் வாழ்வும் அசிங்கமாகும்.


13. ஆழமான அறிவே அழகான வாழ்வை அமைக்கும்.


14. புத்தகம் இல்லாத வீடு சன்னல் இல்லாத இருட்டறை போன்றது.


15. துன்பத்தை மறந்தாலும் அது புகட்டிய பாடத்தை மறக்காதே.


16. ஓர்மம் ஒப்பற்ற சாதனைகளை உருவாக்கும்.


17. உருப்படியான வேலைக்கே உலகம் உன்னை அழைத்திருக்கிறது மறந்துவிடாதே.


18. அரிய சந்தர்ப்பங்கள் தேடி வரும்போது அதைப் பயன்படுத்தத் தவறாதே


19. உங்கள் நேரம் உங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்படுவதை உணருங்கள்.


20. ஆழமான அர்த்தங்களும் அதிகமான தத்துவங்களும் அடங்கியதே வாழ்க்கை.



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Oct 18, 2009 6:32 am

கண்ட கேட்ட தத்துவங்கள் சில...

1.ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்; ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை.
--லியோ டால்ஸ்டாய்

2.மாற்றம் என்பது மானிடத் தத்துவம்,மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன்.
-- கண்ணதாசன்

3.தேனீக்கள் கொட்டும் என்று அஞ்சி கொண்டேயிருந்தால் என்றைக்கும் உங்கள் நாக்கால் தேனின் சுவையை உணரவே முடியாது.

4.எதற்கும் பிறரை சார்ந்திருக்க ஊனமுற்றவர்கள் கூட விரும்புவதில்லை.
--சுகி செல்வம்

5.நேற்று,இன்று,நாளை ;

இன்றிருக்கும் நான் நேற்றிருந்த நான் - ஐ விட அறிவு,எண்ணம்,படிப்பு,செயல்,திறமை,பழக்கம்.... ஆகிய ஏதோ ஒன்றிலாவது சிறிதளவாவது முன்னேறி இருக்க வேண்டும்.நான் யாரோடும் போட்டியிடத் தேவையில்லை,நேற்றைய நானுடன் இன்றைய நான் போட்டியிட்டு முன்னேற வேண்டும்,நாளைய நான் இன்றைய நான்
-- ஐ விட ஒரு படியாவது முன்னேற வேண்டும்.

6.முயற்சி திருவினையாக்கும், முயன்றால் முடியும்,முயன்றால் மட்டுமே முடியும்.

--லேனா தமிழ்வாணன்.

வாருங்கள் முயற்சி செய்வோம்.


படித்தது பிடித்தது ....

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.
கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு.
அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Oct 18, 2009 6:34 am

மன அமைதி பெற இதை செய்யுங்க...

1.உங்களுக்கு பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதி கிட்டும்.

2.நீங்கள் உடலளவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாலும் மனதை வெறுமையாக வைத்திருக்காதீர்கள்.

3.நீங்கள் எதைஎல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ அந்த எல்லாக்காரியங்களையும் செய்யாமல் நிறுத்துங்கள். அதைப்போல் நீங்கள் செய்யவேண்டும் என்று நினைக்கும் காரியங்களை உடனே தொடங்குவதும் அதுபோல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்

4.ஒவ்வொரு நிலையிலும் நமது பார்வையை தெளிவுபடுத்தி சரியான பாதையை கண்டுபிடிக்க ஆத்மசோதனை தேவைப்படுகிறது.

5.எல்லாவிதத் தூண்டுதல்களிலிருந்தும் விலகி இருங்கள்.தூண்டுதல்கள் உண்டாக்கும் இடத்திற்கு செல்லாதீர்கள்.தூண்டுதல்களை தவிர்க்க போராடவேண்டியதிருக்கும்.

6.பிறரது மன அமைதியைக்குலைக்கும் ஒருவனுக்கு,மன அமைதியை பெற விழைவதற்கும்தகுதி கிடையாது.

7.எவருடனும் அதிகமாக நெருங்கிப்பழக வேண்டாம்.அதிக நெருக்கம் அலட்சியத்தை உருவாக்கி உணர்ச்சிகளை உருக்குலைத்து மன அமைதியைகெடுக்கிறது.

8.எதிலும் எவருக்கும் புத்திமதி சொல்ல போகாதீர்கள்,நீங்கள் கேட்கப்பட்டாலன்றி,உங்கள் வேலையைப்பாருங்கள்.

9.எப்பொழுதும் அடக்கமாக இருங்கள், மற்றும் தற்காலிகமாக கவலையை மறைக்கும் மகிழ்ச்சியைவிட அடக்கம் மேலானது.

10.இறைவனின் நட்பை பெறுங்கள்,அதுவே சிறந்த செல்வம். நீங்கள் முற்றிலும் மனம் தளர்ந்து இருக்கும்பொழுது,மறைநூல்கள் பால் கவனம் செலுத்துங்கள்,மகான்களின் சிறந்த நூல்களை படியுங்கள்.

11.ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இறைவனின் அருளிருக்கிறது என்பதை உணர்ந்து அமைதியாக வாழ்வது தான் அறிவுடைமையாகும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Oct 18, 2009 6:42 am

நற்சிந்தனை சில....

1.சுதந்திரம் என்பது எல்லோரும் விரும்பும் ஒன்று..எனவே தன் காலில் நிற்க முயலுங்கள்.மனப்பூர்வமாக முயன்றால் பல்வேறு துறைகளில் தன் காலில் நிற்க முடியும் என்பதை கண்டு கொள்வீர்கள்.

2.எப்பொழுதும் ஏதாவது நன்மை பயக்கும் வேலையைச் செய்யுங்க்ள்.இதைச் செய்யலாமா? அதைச் செய்யலாமா? என்று அலைந்து திரிவதில் நேரத்தை வீணாக்காதீர்கள்,இதனால் பயனற்ற மனப்போராட்டத்தில் நீங்கள் நாட்கள்,வாரங்கள்,மாதங்கள்,வருடங்கள் கூட வீணாக்கி கடைசியில் ஒன்றும் செய்யாமல் போய் விடுவீர்கள்.அதிகமாக திட்டங்களை தீட்ட வேண்டாம்.

3.சோதனைகளையும்,இடுக்கண்களையும் எதிர்நோக்காமல் எந்தத்துறையிலும் எதையும் சாதிக்க முடியாது.ஏதோ காலம் தான் கழியும்,

4.உங்களுடைய கடந்த கால அனுபவங்களில் இருந்து நீங்கள் கற்று கொள்ளுங்கள்,அந்தப்பாடங்களை கற்றுக்கொண்டு அதுவே எதிர்காலச் செயல்களுக்கு வழி காட்டியாக அமையட்டும்.நான் அப்படிசெய்திருந்தால் இப்படி ஆயிருப்பேனே,இப்படிச்செய்திருந்தால் ..... என்று எண்ணுவதெல்லாம் வீணான சிந்தனையாகும்.

5.உங்கள் தேவைகளை பெருக்கிக்கொள்ளாதீர்கள்,பிறகு பிச்சைக்காரனைப்போல் திரியாதீர்கள், உங்கள் தேவைகளை குறைத்துக்கொண்டு ராஜாவைப்போல் வாழுங்கள்.

6.வீட்டில் உங்களுக்குத் தேவையான உடைகள் இருக்கும் பொழுது எதற்காக ஒரு துணிக்கடைக்கும் நுழைந்து பல்வேறு ரகங்களைக் காண வேண்டும் ?இல்லையெனில் தேவையற்றதை வாங்குவீர்கள்,ஓ என்னிடம் இது இல்லையே ! இதை நான் வாங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?என்று மனம் வருந்த வேண்டியிருக்கும்.

7.எல்லாவிதமான தேவையற்ற பேச்சையும் தவிருங்கள்.அளந்தே பேசுங்கள்.களங்கமற்ற நல்நோக்கம் கொண்ட வார்த்தைகளே சில வேளைகளில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு ,பிரிவை உண்டாக்குகிறது.

8.விவாதம் செய்யாதீர்கள்.நண்பர்களுக்கிடையே பிளவை உண்டாக்கும்.

9.எனக்கு என்ன நேரிடுகிறது என்பதைப் பற்றி எனக்கு கவலைஇல்லை ஆனால் பிறரைப்பற்றிதான் கவலை,என்று சிலர் சொல்லுவர்.இது அறியமையாகும்.இவ்வாறு சொல்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

10.இறுதியாக இந்த உலகம் முழுவதும் பொய்யானது என்பதை அனைவரும் உணரவேண்டும்.

11.பிறரை சந்தோஷப்படுத்துங்கள். அவர்களது மகிழ்ச்சியில் நீங்கள் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்.

ZARU



வெற்றி, இந்த ரகசிய பெட்டிக்குள் இருக்குது

வாழ்க்கையை நாம் எண்ணுகிறபடி, நாம் அமைக்க முடியும்‍ அதற்கு வேண்டிய மன உறுதி இருந்தால், திட்டங்கள் இருந்தால் உயரலாம். இல்லாவிட்டால், நாம் அது போகிற படி போக வேண்டியதாகவே இருக்கும்.

குறிக்கோள் என்பது வெறும் ஆசையல்ல, ஆசைக்கு மேல் அதிகம் நமக்கு ஈடுபாடு இருக்க வேண்டும். நம் குறிக்கோளை நாம் வடிவரூபத்தில் காண வேண்டும். உடலால் உணர வேண்டும்; ருசிக்க வேண்டும்; நுகர வேண்டும்; நாம் அத்துடன் வாழவேண்டும்.

விவேகானந்தர் கூறினார், "நீருக்குள் அமுங்கியிருப்பவன் வெளியே வர எப்படித் துடிக்கிறானோ அத்தகைய வேகம் நமக்கு வேண்டும்" என்று. அத்தகைய துடிப்பை குறிக்கோள் அடையும்போது, எண்ணங்கள் 'சித்தி' யாக, சாதனைகளாக மலர்கின்றன.




வீர சிவாஜி

தாய் தன் மகனோடு உட்கார்ந்து தாயம், சொக்கட்டான் போன்ற விளையாட்டுக்கள் விளையாடுவது வழக்கம். எல்லா விளையாட்டுக்களிலும் தாய் தோற்றுக் கொண்டே இருப்பாராம்.

ஒரு நாள் மகன் தாயிடம் கேட்டான், “அம்மா நீங்கள் ஒரு முறை கூட ஜெயிப்பதில்லையே ஏன்?”.”மகனே! ஒரு முறை கூட விளையாட்டாக இருந்தாலும் நீ தோற்கக்கூடாது என்பதற்காகத்தான்” என வீரமாகக் கூறினாராம். அந்த வீர உரைகளே பிற்காலத்தில் மராட்டிய வீர சிவாஜியைய் உருவாக்கின.

அன்புடன்
அ.இராமநாதன்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 9:58 am

பொன்மொழிகள் அருமையாக இருக்கிறது தாமு, பதிவிற்கு நன்றி!
ஒரே பதிவாக இடாமல் சிறிது சிறிதாக தொகுத்து இட்டால் நன்றாக இருக்கும் வாசிப்பதற்கு.



பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 5:34 am

விரும்பியது கிடைக்கவில்லை என்பதற்காக, கிடைக்கும் எல்லாவற்றையும் விரும்பாதே.

உள்ளம் என்பதை கண்ணாடிக்கு ஒப்பிடலாம், அதில் கீறல்கள் ஏற்படின் திரும்ப இணைக்கவே முடியாது.

நித்திரை கொள்பவனை எழுப்பலாம் - ஆனால் நித்திரைபோல் பாசாங்கு செய்பவனை எழுப்பவே முடியாது.

குறையப் பேசு, நிறையக் கேள்.

மனதில் பகைமையை அடக்கி வைத்தல் நேரடிப் போரைவிடக் கொடியது.

எதிர்கொள்ளாமல் எதுவும் வெற்றி பெறுவதில்லை.

தோல்வி என்பது மீண்டும் முயற்சிக்க நல்ல வாய்ப்பு.

பொருளை தவிர வேறு செல்வங்கள் கிடைக்கப் பெறாதவனும் ஏழைதான்.

இதயக் கண்ணாடி உடையும் போதும் அதன் சில்லுகள் பிறர் காலை கீறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வாதாட பலருக்கு தெரியும்; உரையாட சிலருக்குத்தான் தெரியும்.

அமைதி மட்டுமல்ல புயலும் சேர்ந்ததுதான் வாழ்க்கை.


தோல்வியை - கழியுங்கள்
முயற்சியை - கூட்டுங்கள்
வெற்றியை - பெருக்குங்கள்
பலனை - வகுத்துவிடுங்கள்
புரிந்ததை- விரிவுபடுத்துங்கள்
புரியாததை- சுருக்குங்கள்
சரித்திரங்களை- சூத்திரங்களாக்குங்கள்
உங்களை நீங்களே- மதிப்பிடுங்கள்



பழைய பொன்மொழிகள்


கையிலே சுத்தியல் தான் இருந்தால் பார்ப்பதெல்லாம் ஆணிபோலத்தான் இருக்கும்.

***

யாருடைய சொல்லும் செயலும் பிறரை துன்புறுத்தவில்லையோ அவனே மனிதன்.

***

மதுக்கடையில் - மறப்பதற்காக குடிப்பவர்கள், குடிப்பதற்கு முன்பே பணம் கொடுத்துவிடும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

***

ஒவ்வொரு மாபெரும் மனிதனுக்குப் பின்னாலும், ஒரு பெண் ஆச்சரியத்துடன்.

***

மனைவி என்பவள் உனக்கு வரும் கஷ்டங்களைத் தாங்க உன்னுடன் துணையாக இருப்பவள்.

***

குடிப்பதில் உள்ள தீமைகளைப் பற்றிப் படித்ததும், நான் விட்டுவிட்டேன்.. படிப்பதை.

***

சிரித்தால் உலகம் கூட சிரிக்கும். குரட்டைவிட்டால் தனியாகத்தான் தூங்க வேண்டும்.

***

தேவையான வயது வரும்முன்னர் உங்கள் குழந்தைகளை வண்டியோட்ட அனுமதிக்காதீர்கள். இல்லையென்றால் அவர்களால் எப்போதுமே வண்டி ஓட்ட முடியாது.

***

பியூட்டி பார்லர் முன்பு இருந்த வாசகம். 'இங்கிருந்து வெளியே செல்லும் அழகிகளைப் பார்த்து விசிலடிக்க வேண்டாம். அவள் ஒருவேளை உன் பாட்டியாக இருக்கலாம் '




காலண்டரில் கண்ட முத்துக்கள்


திங்கள்: நம்பிக்கையை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு

செவ்வாய்: உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர இயலாது.

புதன்: நல்லுரைகளும், நல்ல தோழர்களும் அறத்திற்கு உறுதுணை.

வியாழன்: கட்டாயப் படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.

வெள்ளி: விலை கொடுக்காமல் பெற இயலாத ஒரு பொருள் அனுபவம்.

சனி: அன்பளிப்பு தரும் பொருளை விட அதனை அளிக்கும் முறைதான் மதிப்பு மிக்கது.

ஞாயிறு: பணக்காரன் ஆவதற்கு மிக அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டு சேமித்தாலே போதும்.



நன்றி கதிர்வேல்

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 26, 2009 11:01 am

நன்றி தாமு.......

நன்றி



பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Eegaraitkmkhan
பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 Logo12
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 11:06 am

நன்றி கிருபை , கான்.... பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 678642
உங்கள் ஊக்கதுக்கு நன்றி... பொன் மொழி ‍ பழமொழிகள் - Page 3 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 27, 2009 5:43 am

வெற்றியை நோக்கிப் பற!
பறக்க முடியாவிட்டால் ஓடு!
ஓட முடியாவிட்டால் நட!
நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.
ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு.

தெய்வம் காட்டுமே தவிர
ஊட்டாது.

ஒரு மனிதனின் வாழ்க்கையில்
நன்மை செய்தலே
உண்மையான இன்பம் அளிக்கும் செயல்.
- சர் பிலிப்சிட்னி

ஒரு நல்ல நூல்
ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.
- வில்லியம் ஹாஸ்விட்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 27, 2009 5:58 am

முத்துக்கள் சில!!..


மண்ணுக்குள் மறைந்தால்தான் செடியாக முளைக்க முடியும்.
-மு.வ

மௌனமாக இருப்பது கோழைத்தனம் என்று நினைத்துவிடக் கூடாது.
-மொரார்ஜி தேசாய்

ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் இல்லாவிட்டால் அந்த ஆற்றல் மதிப்பற்று போய்விடுகிறது.
- நெப்போலியன்

இனிமையாக பேசுபவனுக்கு பகைவர்கள் இருக்கமாட்டார்கள்.
-கிருபானந்த வாரியார்.

துன்பமும் ஏழ்மையும் போதிப்பதுபோல் வேறொன்றும் போதிக்கமுடியாது.
-விவேகானந்தர்.

உங்களுக்கு அவசியமில்லாததை நீங்கள் வாங்கினால் சீக்கிரமே உங்களுக்கு அவசியமானவற்றை விற்க நேரிடும்.
-ரிச்சர்ட் சாண்டர்ஸ்.

ஒருமுறை அறிவாளியுடன் பேசுவது,ஒரு மாதம் நூல்களைப் படிப்பதைவிட அதிக நன்மை தரும்.
- யாரோ.

ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் கௌரவிக்கப்படும்.
-யாரோ.

மனம் ஒரு நல்ல வேலைக்காரன்,ஆனால் மோசமான எஜமான்.
-சாக்ரட்டீஸ்.

உங்கள் எதிரிகளை கவனியுங்கள்,அவர்களே உங்கள் குற்றங்களை முதலில் கண்டுபிடிப்பவர்கள்.
-பெனிலின்.

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ்விப்பதில்தான் உள்ளது.
-மெஹர்பாபா.

ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்கள்.
-ராபர்ட் கோலியர்.

நமக்கு தெரிந்தது எது? தெரியாதது எது? -என்பதை அறிந்துகொள்வதே உண்மையான அறிவு.
-கன்பூசியஸ்

படிப்பில் பிரியமில்லா அரசனாக இருப்பதைவிட ஏராள நூல்களைக் கற்ற ஏழையாக இருப்பது நல்லது.
-மெக்காலே.

எதை வேண்டுமானாலும் புள்ளி விவரங்களால் அளந்திடமுடியும், உண்மையைத்தவிர.
-குஷ்வந்த் சிங்.

அதிருப்தி என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம்.ஆடம்பரம் நாமே தேடிக்கொள்ளும் வறுமை.
-சாக்ரடீஸ்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக