ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நீர் நிலைகள் மொத்தம் 47

View previous topic View next topic Go down

நீர் நிலைகள் மொத்தம் 47

Post by சாமி on Thu Dec 27, 2012 11:11 pm

நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47.

(1) அகழி (Moat) – கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
(2) அருவி (Water Falls) – மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) – கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
(4) ஆறு (River) – பெருகி ஓடும் நதி.
(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) – பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

(6) உறை கிணறு (Ring Well) – மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
(7) ஊருணி (Drinking water tank) – மக்கள் பருகும் நீர் நிலை.
(8) ஊற்று (Spring) – பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
(9) ஏரி (Irrigation Tank) – வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
(10) ஓடை (Brook) – அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழு தும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
(12) கடல் (Sea) – சமுத்திரம்.
(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) – பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
(14) கலிங்கு (Sluice with many Venturis) – ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக் கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
(15) கால் (Channel) – நீரோடும் வழி.

(16) கால்வாய் (Suppy channel to a tank) – ஏரி, குளம் ஊருணி இவ ற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
(17) குட்டம் (Large Pond) – பெருங் குட்டை.
(18) குட்டை (Small Pond) – சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப் பாட்டும் நீர் நிலை.
(19) குண்டம்(Small Pool) – சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
(20) குண்டு (Pool) – குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

(21) குமிழி (Rock cut Well) – நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்ட த்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
(23) குளம் (Bathing tank) – ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன் படும் நீர் நிலை.
(24) கூவம் (Abnormal well) – ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
(25) கூவல் (Hollow) – ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

(26) வாளி (stream) – ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால் வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப் பட்ட நீர்நிலை.
(27) கேணி (Large Well) – அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
(28) சிறை (Reservoir) – தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
(29) சுனை (Mountain Pool) – மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
(30) சேங்கை (Tank with Duck Weed) – பாசிக்கொடி மண்டிய குளம்.

(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) – அழகாக் நாற் புறமும் கட்டப்பட்ட குளம்.
(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) – கோயிலின் நாற்பு றமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
(33) தாங்கல் (Irrigation tank) – இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
(34) திருக்குளம் (Temple tank) – கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) – ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

(36) தொடு கிணறு (Dig well) – ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
(37) நடை கேணி (Large well with steps on one side) – இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
(38) நீராவி (Bigger tank with center Mantapam) – மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) – குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) – ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.

(41) பொய்கை(Lake) – தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
(42) மடு (Deep place in a river) – ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
(43) மடை (Small sluice with single venturi) – ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
(44) மதகு (Sluice with many venturis) – பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
(45) மறு கால் (Surplus water channel) – அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

(46) வலயம் (Round tank) – வட்டமாய் அமைந்த குளம்.
(47) வாய்க்கால் (Small water course) – ஏரி முதலிய நீர் நிலைகள்.

நன்றி: தமிழர் வரலாறு ( முகநூல் பதிவு )
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: நீர் நிலைகள் மொத்தம் 47

Post by ரா.ரா3275 on Thu Dec 27, 2012 11:18 pm

அட...நல்ல வித்தியாசமான உபயோகமானப் பதிவு...
பகிர்வுக்கு நன்றி சாமி... நன்றி

பிள்ளைக்கிணறு பற்றி இப்போதுதான் அறிகிறேன்...அதேபோல் இன்னும் நிறைய... சூப்பருங்க
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நீர் நிலைகள் மொத்தம் 47

Post by Muthumohamed on Fri Dec 28, 2012 1:11 am

நல்ல தகவல் நன்றி சாமி அவர்களே
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: நீர் நிலைகள் மொத்தம் 47

Post by Ahanya on Fri Dec 28, 2012 8:40 am

மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி அண்ணா.
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: நீர் நிலைகள் மொத்தம் 47

Post by அசுரன் on Fri Dec 28, 2012 8:58 am

இதை முன்னரே நான் பதிந்துள்ளேன். சுட்டி கிடைத்தவுடன் இரண்டையும் ஒன்றாக இனைத்துவிடுகிறேன்... மிகவும் பழமையான அறிவான தமிழ் பதிவு.. பாராட்டுக்கள்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: நீர் நிலைகள் மொத்தம் 47

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Fri Dec 28, 2012 8:59 am

சிறப்பான பகிர்வு. வாழ்த்துக்கள்.
avatar
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3794
மதிப்பீடுகள் : 578

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Re: நீர் நிலைகள் மொத்தம் 47

Post by ஆரூரன் on Fri Dec 28, 2012 2:25 pm

இவ்வளவு நீர்நிலைகளா ? ஆச்சரியம்!!!
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: நீர் நிலைகள் மொத்தம் 47

Post by அச்சலா on Fri Dec 28, 2012 5:48 pm

மிகவும் பயனுள்ள பதிவு........ பாடகன்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: நீர் நிலைகள் மொத்தம் 47

Post by பாலாஜி on Fri Dec 28, 2012 6:08 pm

பகிர்வுக்கு நன்றி சாமி. சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நீர் நிலைகள் மொத்தம் 47

Post by gurunathasundaram on Mon Jan 14, 2013 12:45 pm

முக்கியமான பதிவு.என் மாணவர்க்கு உதவும்.நன்றி அய்யா. சூப்பருங்க
avatar
gurunathasundaram
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 46
மதிப்பீடுகள் : 22

View user profile http://gurunathans.blogspot.in

Back to top Go down

Re: நீர் நிலைகள் மொத்தம் 47

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Jan 14, 2013 1:01 pm

சூப்பருங்க அறியாத பல பெயர்கள் அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி... நன்றி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4242
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: நீர் நிலைகள் மொத்தம் 47

Post by கரூர் கவியன்பன் on Mon Jan 14, 2013 4:06 pm

எம்மொழியில் இல்லாத சிறப்பான என் தமிழ் மொழி இலக்கணங்கள்.பகிர்வுக்கு நன்றி
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: நீர் நிலைகள் மொத்தம் 47

Post by balakarthik on Mon Jan 14, 2013 4:10 pm

நல்லதொரு பகிர்வு நன்றி சாமி ஐயா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீர் நிலைகள் மொத்தம் 47

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum