ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வணக்கம் அன்பு நண்பர்களே
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்!

View previous topic View next topic Go down

சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்!

Post by சாமி on Tue Dec 25, 2012 11:20 pm

ஜி.யூ.போப் என்பார் பிறந்த நாட்டால் இங்கிலாந்தைச் சார்ந்தவர். பேசும் மொழியால் ஆங்கிலேயர். பின்பற்றிய மதத்தால் கிறிஸ்தவர். இந்தியாவில், தமிழகத்தில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப எண்ணினார். தமிழக மக்களிடம் கிறீஸ்தவ மதத்தைப் பரப்ப என்ன வழி என எண்ணினார். அவர் தம் கூர்த்த மதி நம் செந்தமிழைக் கற்க தூண்டியது. போப் தமிழ் கற்றார். தமிழ் இலக்கியம் பயின்றார். பக்தி நூல்களை ஓதினார். அப்போது அவர் கையில் கிடைத்தது ஒரு ஞானப்பனுவல் அதைப் பயின்றார். படித்தார். அதில் சிந்தையைப் பறி கொடுத்தார். சொந்த மதத்தைப் பரப்பும் பணியை விட்டார். வந்த வேலையை துறந்தார். சிந்தையில் கற்ற ஞானநூலுக்கே இடம் கொடுத்தார். அதனைத் தம் தாய் மொழியில் மொழி பெயர்த்தார்.

அந்த நூல்தான் நம் மாணிக்கவாசகரின் திருவாசகம்!

போப் திருவாசகத்தின் பக்தர் ஆனார். ஏன்! வெறியர் ஆனார் என்றே சொல்லலாம். அவர் திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்றார். கல்லானதன் மனம் கனியும் காட்சியை உணர்ந்தார். கண்களிலே பெருகி வரும் நீரைக் கண்டார். கவிதையின் மாட்சியைக் கண்டார். இனி அவரின் கண்ணீர்க் கதையைக் காண்போம்.

ஜி.யூ போப் அவர்கள் தம்முடைய சென்னை உயர்நீதிமன்ற நடுவரான நண்பருக்குக் கடிதம் எழுதினார். அஞ்சல் பெட்டியில் அதனைச் சேர்த்தார். மறுநாள் நண்பரின் கைக்குக் கடிதம் கிடைத்தது. பிரித்துப்பார்த்தார். எழுதியது போப் என்று அறிந்தார். என்ன எழுதினார் என்று தெரியவில்லை. காரணம் அந்தக் கடிதம் கலங்கி இருந்தது. பேசாமல் வைத்து விட்டார். தொடர்ந்து இரண்டு மூன்று கடிதங்கள் போப் இடம் இருந்து வந்தது. எல்லாக் கடிதமும் கலங்கி இருப்பதைக் கண்டு நண்பர் வியப்புற்றார். நண்பர் என்ன விளையாடுகிறாரா? என எண்ணினார்.

நேரே அவரிடமே சென்று கடிதங்களைக் காண்பித்து “நண்பரே, இஃது என்ன விளையாட்டு? கடிதம் எழுதித் தண்ணீரைத் தெளித்து அனுப்பியுள்ளீர்” என்று கேட்டார். அதற்கு ஜி.யூ.போப், நண்பரே நான் விளையாடும் பருவத்தைக்கடந்தவன். நான் எப்போதும் கடிதம் எழுதும் போது “வெள்ளம் தாழ் சடையாய்” எனத் தொடங்கும் திருவாசகப் பாடலை எழுதிய பின்பே கடிதம் எழுதுவது வழக்கம். அந்தப் பாடலை எழுதிவிட்டு உங்களுக்கு எழுதிய கடிதத்தை முடிக்கும் முன்பே என் கண்களில் கண்ணீர் வழிகிறது. முற்றுப் பெறாத கடிதத்தில் கலங்கலுக்குத் தண்ணீர் காரணம் அல்ல. காரணம் என் கண்ணீரே!” என்றார். ஆம்! திருவாசகம் போப்பின் சிந்தையைக் கரைத்து சிவமாக்கியது. கண்ணீரை வரவழைத்தது.

(ஈரோடு தங்க.விசுவநாதன் எழுதிய “திருமுறை ஆசிரியர்கள் 27 பேர் அருள் வரலாறு” புத்தகத்தில் இருந்து)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்!

Post by அசுரன் on Tue Dec 25, 2012 11:28 pm

உலகிற்கு உதாரணம் நாமும் நம் தமிழர் பண்பாடும். குறிப்பிட்ட ஆண்டுகளாக நமது இலக்கியங்கள் வேறு கில காரணிகளால் மூடிமறைக்கப்பட்டு ஆசாரம் இறைவழிபாடு இவற்றையெல்லாம் வேறு ஒரு மாயை கொள்ளை கொண்டதே இதற்கெல்லாம் காரணம்.

அருமையான பதிவு சாமி சூப்பருங்க
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்!

Post by கேசவன் on Wed Dec 26, 2012 9:23 am

தமிழர்கழாய் பிறந்தும் தமிழ் தெரிந்தும் இதுபோன்ற நுல்களை இன்னும் படிக்காமல் இருகிறோமே அழுகை அழுகை அழுகை

அவர் கடிததில் எழுதிய திருவாசக பாடல்

வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்!
விண்ணோர் பெருமானே!' எனக் கேட்டு வேட்ட நெஞ்சாய்,
பள்ளம் தாழ் உறு புனலில், கீழ் மேலாக,
பதைத்து உருகும் அவர் நிற்க, என்னைஆண்டாய்க்கு,
உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால்; உடம்பு எல்லாம் கண்ணாய், அண்ணா!
வெள்ளம் தான் பாயாதால்; நெஞ்சம் கல் ஆம்;
கண் இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே.
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்!

Post by சாமி on Wed Dec 26, 2012 10:25 am

பாடலும் விளக்கமும் :-
வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மே லாகப்
பதைத்துருகும் அவர்நிற்க என்னை யாண்டாய்க்
குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
கண்ணிணையு மரமாம் தீ வினையி னேற்கே.

எட்டாம் திருமுறை : திருவாசகம் > 5. திருச்சதகம் > பாடல் எண்: 21

பொழிப்புரை :-
கங்கை நீர்ப் பெருக்குத் தங்கிய, விரிந்த சடையினை யுடையாய்! எருதினை ஊர்தியாக உடையாய்! தேவர் தலைவனே! என்று அன்பர் சொல்லக் கேட்டவுடன், ஆர்வம் மிகுந்த மனத்தினராய், பள்ளத்தில் விழுகின்ற மிகுந்த நீர் போல, மேல் கீழாக விழுந்து, வணங்கி நெஞ்சம் துடிக்கும் அடியார் பலர் நிற்க, என்னைப் பெருங்கருணையால் ஆண்டு கொண்ட உன் பொருட்டு என் உள்ளங்கால் முதல் உச்சி வரையுள்ள உடம்பின் பகுதிமுற்றும், மனத்தின் இயல்புடையதாய் உருகாது, உடம்பு எல்லாம், கண்ணின் இயல்புடையதாய் நீர்ப்பெருக்குப் பாயவில்லை; ஆகையால் கொடிய வினையை உடையேனுக்கு நெஞ்சானது கல்லினால் அமைந்ததே யாம். இருகண்களும் மரத்தினால் ஆனவையாம்.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்!

Post by சாமி on Wed Dec 26, 2012 10:54 pm

@அசுரன் wrote:உலகிற்கு உதாரணம் நாமும் நம் தமிழர் பண்பாடும். குறிப்பிட்ட ஆண்டுகளாக நமது இலக்கியங்கள் வேறு கில காரணிகளால் மூடிமறைக்கப்பட்டு ஆசாரம் இறைவழிபாடு இவற்றையெல்லாம் வேறு ஒரு மாயை கொள்ளை கொண்டதே இதற்கெல்லாம் காரணம்.

கொள்ளை கொண்டால் என்ன...?
விவரம் தெரிந்த நாம் அதை மீட்டெடுக்க முடியுமே!
நம் வீட்டில் திருவாசகமும், தேவாரமும், திருமந்திரமும் (இதைப்போல பலப்பல தமிழ் வேதங்களை ) ஒலிக்கச் செய்யலாமே அசுரன்!
நம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கலாம்!
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்!

Post by ச. சந்திரசேகரன் on Thu Dec 27, 2012 3:25 am

எனக்கு இளையராஜா அவர்களின் "திருவாசகம்" ஒலிச்சுட்டு கிடைக்க யாராவது உதவுவீரா?
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Thu Dec 27, 2012 12:00 pm

அருமையான ஆன்மீக பதிவு. சாமி அவர்களுக்கு நன்றி.
avatar
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3794
மதிப்பீடுகள் : 578

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Re: சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்!

Post by ஆரூரன் on Fri Dec 28, 2012 2:57 pm

அருமை !
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: சிந்தையைக் கரைத்து சிவமாக்கிய திருவாசகம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum