ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Thu Feb 05, 2009 11:50 pmஇயற் பெயர்: விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்

பிறப்பு: அக்டோபர் 1 1927 தமிழ்நாடு, சீர்காழி, இந்தியா

இறப்பு: ஜூலை 21 2001 (வயது 74) சென்னை

தாய்: ராஜாமணி அம்மாள்

தந்தை: சின்னையா மன்றாயர்

துணைவியார்: கமலா அம்மாள்

குழந்தைகள்: சாந்தி, தேன்மொழி, ராம்குமார், பிரபு.

அண்ணன்: வி.சி.தங்கவேலு

தம்பி: வி.சி.சண்முகம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Thu Feb 05, 2009 11:57 pm

விழுப்புரத்தில் ரெயில்வே ஒர்க்ஷாப்பில் பாய்லர் செய்யும் பிரிவில் பொ.சின்னையா (சிவாஜியின் தந்தை) பணிபுரிந்து வந்தார்.

தாயின் மணிவயிற்றில் தமி ழகத்தின் ஒப்பற்ற நடிகர் கணேசன் எட்டுமாதமாக இருக்கும் போது அவரது தந்தை சின்னையா காங்கிரசில் சேர்ந்து, இந்திய விடுதலைப்போரில் குதித்தார். நெல்லிக்குப்பத்தில் அவர் மறியலில் ஈடுபட்டார். அந்நிய அரசு அவரை கைது செய்தது.

தந்தைக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட அன்றுதான்... அன்னை தமிழுக்குப் பெருமை சேர்க்க கணேசன் பிறந்தார்.

அவருடன் பிறந்தவர்கள் எட்டுபேர். கணேசன் நான்காவது மகனாக பிறந்தார்.

நடிப்பே படிப்பானது

பள்ளிக்கு கல்வி கற்க அனுப்ப பெற்றோர் எவ்வளவோ முயன்றனர். படிப்பில் அவருக்கு நாட்டம் இல்லை. படிப்பிற்கு பதிலாக நாடகம், பஜனை கோஷ்டியைக் கண்டு ரசிப்பதென்றால் அதிக ஆசை அவருக்கு. பஜனைகளில் கலந்து கொண்டு இனிமையாக பாடுவது மட்டுமல்ல, கட்டபொம் மன் நாடகம் எங்கே நடந்தாலும் சென்று பார்த்தார். நடிப்பையே படிப்பாகக்கொண்டு மனம் மகிழ்ந்தார்.

நாடக வாழ்க்கை

1935 ஏழாவது வயதில் நாடக அரங்கில் நடிக்கத் தொடங்கினார். 17 ஆண்டுகள் நாடகத் தாய் சிவாஜிகணே சனை சீராட்டினாள். பட்டை தீட்டி கோகினு}ர் வைரமாக கொடுத்தாள். முதன் முதலில் ராமாயணம் நாடகத்தில் சீதாவாக நடித்தார். யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடககம்பெனி, எம்.ஆர்.ராதா கம்பெனி, என்.எஸ்.கே. சபா, கே.ஆர்.ராம சாமி நாடககம்பெனி, சக்தி நாடக சபா ஆகியவைகளில் தனது நடிப்புத் திறமையால் பிரகாசித்தார்.

1945 தந்தை பெரியார் முன் னிலையில் பேரறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ;யம் நாடகத்தில் சிவாஜி வேடத்தில் நடித்தார். அவருடைய சிறப்பான நடிப்பைக்கண்டு பாராட்டி, வி.சி. கணேசன் இன்றுமுதல் சிவாஜி கணேசன் ஆகிறார் என்று தந்தை பெரியார் கூறினார்.

1951 ஏவி.எம். படப்பிடிப்பு நிலையத்தில் காலடி எடுத்து வைத்தார்.

தயாரிப்பாளர் பெருமாள், இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு, ஒளிப்பதிவாளர் மாருதி ராவ், ஒலிப்பதிவாளர் ஜிவா, புகைப்பட நிபுணர் நாகராஜ ராவ் ஆகிய குறிப்பிட்ட சிலர் மட்டுமே இருந்தனர். (டெஸ்ட்) சோதனை ஒப்பனை போடப் பட்டது. என் தங்கை நாடகத்தில் குடிகாரனாக நடித்த காட்சியை மாருதிராவ் பட மாக்கினார். படத்தை போட்டுப் பார்த்தனர். அனைவருக்கும் நிறைவாக இருந்தது. முதன் முதலாக சிவாஜிகணேசன் பராசக்தி படத்தில் நடித்த காட்சி... பைத்தியக்காரனைப் போல் சுமைதாங்கி அருகில் சக்சஸ் என்று செல்வது தான். திரையுலகில் அந்த வெற்றி பின்னாளில் அவருக்கு நிலைத்து விட்டது. அவரால் திரையுலகம் ஒளி வீசுகிறது.

1952„ கமலா அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்.

1952-1997„ கடந்த 45 ஆண்டுகளில் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் 301.

காவல் துறையினருக்காக உங்கள் நண்பன், தேசிய பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட செய்திப்படமான தாய்நாடு, சிங்க நாதம் கேட்குது ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ளவை விவரம்:

தமிழில் - 270
தெலுங்கில் -8
மலையாளத்தில் -1
இந்தி-2


கவுரவ வேடத்தில் 19 படங்களில் ஐந்து மொழிகளில் நடித்திருக்கிறார். அவர் நடித்துள்ள படங்களில் பெரும்பாலானவை தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி, வங்காள மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

* தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது பெரிய நாடக அரங்கம் ஒன்றினை சங்கரதாஸ் சுவாமி பெயரில் கட்டினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:00 am

சிலை வடித்து நிலையான புகழ் கொண்டார்

* வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு கயத்தாறு எனும் அவன் மாண்ட இடத்தில் சிலை அமைத்தார்.

* பம்பாயில் வீர சிவாஜிக்கு சிலை அமைப்பதற்கான தொகையை வழங்கினார்.

* உலகத் தமிழ்மாநாட்டின் போது வள்ளுவருக்கு சிலையமைத்து வழங்கினார்.


நிதியாய் வாரி வழங்கியவை (அறிந்தவை)

* தேசப் பாதுகாப்பு நிதிக்காக தமிகத்தின் சார்பில் ரூ.5 லட்சம் வசூலித்து வழங்கினார்.

* பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் கமலா அம்மையார் போட்டிருந்த தங்கநகைகள், தனது தங்க பேனாவையும் கொடுத்தார். ரூ.17 லட்சம் மீண்டும் வசூலித்துக்கொடுத்தார்.

* மத்திய உணவு திட்டத்திற்காக நேருவிடம் ரூ.1 லட்சம் வழங்கினார்.

* நேரு நினைவு நிதிக்காக நாடகத்தின் மூலம் ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கினார்.

* சீனப் படையெடுப் பின்போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ரூ.25 ஆயிரம் வழங்கினார். தனது இந்திய தயாரிப்பான ராக்கி படத்தின் ஒருநாள் வசூலை கொடுத்தார்.

* ரூ.32 லட்சத்தை வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகத்தின் மூலம் வசூல் செய்து, பல கல்விக்கூடங்களுக்கு உதவினார்.

* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின்போது குடியரசுத்தலைவர் ஜாகிர்உசேனிடம் ரூ.50 ஆயிரம் அளித்தார்.

* பெங்களூரில் நாடக அரங்கம் கட்ட, கட்டபொம்மன் நாடகத்தின்
மூலம் ரூ.2 லட்சம் நன்கொடை.

* பெங்களூர் மக்கள் நலனுக்காக ரூ.15 லட்சம் நிதி.

* கோவையில் உலகத் தமிழ் மாநாட்டிற்காக நாடகம் நடத்தி ரூ.5 லட்சம் நிதி.

* தென்னிந்திய திரைப் பட தொழிலாளர்கள் சங்க கட்டிட நிதிக்காக வியட்நாம் வீடு நாடகம் மூலம் ரூ.30 ஆயிரம் நிதி.

* சென்னை தீ விபத்து நிதிக்காக ரூ.11 ஆயிரம்.

* அமெரிக்க குழந்தைகளுக்கு யானையும், லட்சம் ரூபாய் நிதியும் வழங்கினார்.

* வேலூர் பென்லன்ட் மருத்துவமனை கட்டிட நிதிக்காக வியட்நாம்
வீடு நாடகத்தின் மூலம் ரூ.2 லட்சம் நிதி.

* ஆந்திர மக்கள் வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரம்.

* நேசமணி சிலை அமைப்பு நிதியாக ரூ. 5 ஆயி ரம்

* கட்டபொம்மன் சிலை பாதுகாப்புப் பணிக்கு ரூ.10 ஆயிரம்.

* எகிப்து அதிபர் நாசருக்கு சென்னையில் வரவேற்பு வழங்கி
சிறப்பு செய்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

குடும்பத்துடன் நடிகர் திலகம்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:15 am


அன்புத் தாய் ராஜாமணி அம்மாளுடன் சிவாஜி


தந்தை சின்னனையாவுடன் சிவாஜி, அருகில் கலைஞர்.


சகோதரர் வி.சி.சண்முகம், தங்கவேலுவுடன் சிவாஜி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:17 am


மனைவி கமலாவுடன் சிவாஜி


அருமை மகள் சாந்தியுடன் சிவாஜி


மகன்கள் ராம்குமார்- பிரபுவுடன் சிவாஜி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:19 am


படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்


மனைவி கமலாவுடன் நடிப்புலக சகாப்தம்


மனைவி கமலா, மகள்கள் சாந்தி, தேன்மொழி, மகன்கள் ராம்குமார், பிரபு,
மருமகன்கள், பேரன்-பேத்திகளுடன் நடிப்பு இமயம் சிவாஜி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

கலையுலக இமயம்-சரித்திர சுவடுகள்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:27 am

பராசக்தி என்ற தனது முதல் படத்திலேயே கதாநாயகனாக தோன்றிய நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் சாதனைகள்.
மனோகரா, ராஜாராணி, இல்லறஜோதி, திரும்பிப்பார், அன்னையின் ஆணை படங்களில் மெய்சிலிர்க்க வைக்கும் வசன நடிப்பு.

உத்தமபுத்திரன் படத்தில் யாருமே செய்து காட்ட இயலாத ஸ்டைல் நடிப்பு.

பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பழனி படங்களில் அப்பாவி நடிப்பு.

பார் மகளே பார், உயர்ந்த மனிதன் படங்களில் செல்வந்தராக மிடுக்கான நடிப்பு.

தெய்வப்பிறவி, மங்கையர்திலகம், பெண்ணின் பெருமை, நான் பெற்ற செல்வம் என்று மறக்க முடியாத பல குடும்பக் கதைகளில் காவியமான நடிப்பு.


அம்பிகாபதி தொடங்கி திருவிளையாடல், தவப்புதல்வன் என்று பல படங்களில் இடம்பெறும் கர்நாடக இசைப் பாடல்களுக்கேற்ப அசத்த வைக்கும் வாயசைப்பு.
நவராத்திரி, தெய்வமகன், உத்தமபுத்திரன், கட்டபொம்மன் படங்களில் இமாலயச்சாதனை.

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, மணமகன் தேவை, சபாஷ்மீனா, பலேபாண்டியா கலாட்டா கல்யாணம், ஊட்டி வரை உறவு, ராமன் எத்தனை ராமனடி, சுமதி என் சுந்தரி, பாரத விலாஸ், மனிதரில் மாணிக்கம், அன்பே ஆருயிரே படங்களில் நகைச்சுவை நடிப்பு.

கப்பலோட்டிய தமிழன், இரத்தத்திலகம், தாயே உனக்காக, நாம் பிறந்த மண் படங்களில் தேசபக்தியூட்டும் நடிப்பு. கர்ணன், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமால் பெருமை படங்களில் பக்தி சிரத்தையான நடிப்பு.

உத்தமபுத்திரன், பெண்ணின் பெருமை, கூண்டுக்கிளி, திரும்பிபார் படங்களில் வில்லன் நடிப்பு.


சிவந்த மண்ணில் தீவிரவாதியாகவும்,

மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் பெரியார் தொண்டனாகவும்

வளர்பிறையில் ஊமையாகவும்,

பாகப்பிரிவினையில் உடல் ஊனமுற்றவராகவும்,

பாலும் பழமும் படத்தில் இடைவேளைக்கு பின் கண் தெரியாத நிலையிலும்

அதே போல் ஆலயமணியில் கால் செயல் இழந்தவராகவும்

படிக்காதமேதை, படித்தால் மட்டும் போதுமா படங்களில் படிப்பறிவு இல்லாவிடினும் பண்பாளராகவும்,

அன்னையின் ஆணையில் பழிக்குப்பழி வாங்கும் இளைஞனாகவும்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:28 am

பராசக்தி, விடி வெள்ளி, பாசமலர், பச்சை விளக்கு, அன்புக்கரங்கள், தங்கை, தங்கைக்காக, என் தம்பி, அண்ணன் ஒரு கோவில் படங்களில் பாசம் மிக்க அண்ணனாகவும்

பார்த்தால் பசி தீரும் படத்தில் படை வீரனாகவும்,


அதே படத்திலும் கை கொடுத்த தெய்வம் படத்திலும் ஆலயமணியிலும் உற்ற நண்பனாகவும்

முரடன் முத்து, ஞானஒளி படங்களில் முரட்டுக்குண முள்ளவராகவும்

பாலும் பழமும் படத்தில் சிறந்த டாக்டராகவும்

அருமை மனைவியை எண்ணி வாடும் அன்புக் கணவராகவும்

கவுரவம் படத்தில் சிறந்த கிரிமினல் வழக்கறிஞராகவும்

ராஜபார்ட் ரங்கதுரையில் சிறந்த நாடக நடிகராகவும்

சம்பூர்ண இராமாயணம் படத்தில் அன்புத் தம்பி பரதனாகவும்

திருவிளையாடல் படத்தில் சிவபெருமானின் அத்தனை கோலங்களிலும்

அமரதீபம், இரும்புத்திரை படங்களில் தொழிலாளர் தலைவனாகவும்

பதிபக்தி, நான் சொல்லும் ரகசியம், பாபு படங்களில் ரிக்ஷா தொழிலாளியாகவும்,

காவல்தெய்வம் படத்தில் பனை மரம் ஏறும் தொழிலாளியாகவும்

தில்லானா மோகனாம்பாள், மிருதங்க சக்ரவர்த்தி படங்களில் வித்வானாகவும்

தங்கப்பதக்கம் படத்தில் கடமை தவறாத காவல்துறை உயர் அதிகாரியாகவும் அதே படத்திலும் கல்தூண் படத்திலும் மகனை திருத்தும் தந்தையாகவும்

எங்க மாமாவில் அனாதை குழந்தைகளை பராமரிக்கும் அன்பு மாமாவாகவும்

எங்கிருந்தோ வந்தாள் படத்தில் மனநோயாளியாகவும்

இருவர் உள்ளம், வசந்த மாளிகை, தீபம் படங்களில் பெண்களுடன் தொடர்பு கொண்டவராக இருந்து திருந்தியவராகவும்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:29 am

பாவமன்னிப்பு, அறிவாளி, எல்லாம் உனக்காக, சவாலே சமாளி போன்ற படங்களில் பொதுநலத்தொண்டராகவும்

திருடன், புதிய பார்வை, நீதி, ஞானஒளி, ராஜா போன்ற படங்களில் குற்றவாளியாகவும்

பாவமன்னிப்பு, நான் வணங்கும் தெய்வம், நவராத்திரி, தெய்வமகன் படங்களில் அறுவெறுப்பான முகத்தோற்றத்திலும்

புனர்ஜென்மம் படத்தில் குடிகாரனாகவும்

நவராத்திரி, குங்குமம், எங்கமாமா, ராஜபார்ட் ரங்கதுரை, திருவிளையாடல், திருவெருட்செல்வர், திருமால்பெருமை போன்ற படங்களில், ஒரே படத்திலே பல வேடங்களிலும்

பாசமலர், ஆண்டவன் கட்டளை, என் தம்பி, ராமன் எத்தனை ராமனடி, ஞானஒளி, எங்கள் தங்கராஜா, மகாகவி காளிதாஸ், சரஸ்வதிசபதம் போன்ற படங்களில் ஒரே வேடத்தையே இருவேறு மாறுபட்ட பாத்திரங்களாக மாற்றியும்,


இரட்டை வேடங்கள்
வியட்நாம் வீடு, மோட்டார் சுந்தரம் பிள்ளையில் முறையே பிராமணத் தந்தையாகவும்

இரண்டு குடும்பத்திற்கு தலைவராகவும் அவன் ஒரு சரித்திரம் படத்தில் கொடுத்து அழிந்த சீமானாகவும்

இரு நாயகிகளுக்கிடையே தவிப்பவராக இரு மலர்கள், பாவைவிளக்கு, பாலாடை, செல்வம், தேனும்பாலும், குல மகள்ராதை, புதியபறவை படங்களில் அசத்தியவரும் அவரே.

பேராசிரியராக ஆண்டவன் கட்ளையில்,

உத்தமபுத்திரன், அன்;னையின் ஆணை, எங்க ஊர் ராஜா, என்மகன், என்னைப்போல் ஒருவன், கௌரவம், மனிதனும் தெய்வமாகலாம் படங்களில் இரட்டை வேடங்களிலும்

பலேபாண்டியா, தெய்வமகன், திரிசூலம் படங்களில் மூன்று வேடங்களிலும்,

நவராத்திரி படத்தில் நவரசம் கலந்த ஒன்பது மாறுபட்ட வேடங்களில் மிகச்சிறப்பாக நடித்து உலக சாதனை படைத்தவர் நடிகர் திலகம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:30 am

ஒப்பனை இன்றி நடிப்பு

காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும் தி.மு.க.வை சேர்ந்த கலைஞர், அரங்கண்ணல், கோவைசெழியன், எஸ்.எம். கருப்பசாமி போன்றவர்கள் தயாரித்த படங்களில் நடித்துள்ளார்.

படம் முழுக்க ஒப்பனையே செய்யாமல் நெஞ்சிருக்கும் வரை (கறுப்பு வெள்ளை), மூன்று தெய்வங்கள் (கலர்) படங்களில் நடித்துள்ளார். கிருஷ்ணன்-பஞ்சு தொடங்கி பீம்சிங் , பந்தூலு, ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், திருலோக்சந்தர், மாதவன், முக்தா சீனிவாசன் போன்ற பழம்பெரும் இயக்குநர்களோடு பாலசந்தர் (எதிரொலி), பாரதி ராஜா (முதல்மரியாதை), பாக்கியராஜ; (தாவணிக்கனவுகள்), துரை(துணை), பரதன் (தேவர் மகன்), கே.எஸ்.ரவிக்குமார் (படையப்பா) என்று புகழ் பெற்ற இயக்குநர்கள் அனைவரின் இயக்கத்திலும் நடித்த பெருமையும் சிவாஜிக்கு மட்டுமே.

நாடகங்கள் நடத்தியவர்

பழைய நடிகர்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி கணேசன், மேஜர்சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ள சிவாஜி, அதற்கும் முன்னர் எம்.கே.ராதா, கே.ஆர்.ராமசாமி, எம்.ஜி.ஆர்.(கூண்டுக்கிளி) ஆகியோருடனும் பின்னர் ஜெய்சங்கர், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரன், சிவக்குமார், விஜயகுமார், ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ் போன்ற நடிகர்களுடனும் பின்னர் கமல், ரஜினி, பிரபு, விஜயகாந்த், சத்யராஜ;, பாண்டியராஜன், பாண்டியன், ரகுமான், கார்த்திக், முரளி, விஜய், அர்ஜுன், அஜய் ஆகிய இன்றைய நாயகர்களுடனும் நடித்து வரலாறு படைத்துள்ளார். காட்டிலே வேட்டைக்கு சென்றுள்ள சிவாஜி காடுமலை கடந்து அய்யப்பன் கோவிலுக்கும் சென்றுள்ளார். பல படங்களை சொந்தமாக தயாரித்ததுடன் பிசியாக இருந்த காலத்திலும் தனது நாடக மன்றத்தை தொடர்ந்து நடத்தினார் சிவாஜி.

விருதுகள் பெற்றவர்

புராணகால நாடகத்தி லிருந்து தங்கப்பதக்கம் வரை நாடக நடிகராகவும் திகழ்ந்த நடிகர்திலகம் சொந்தமாக சாந்தி திரையரங்கையும் நடத்து கிறார். (திரையரங்கத்திற்கான பரிசையும்பெற்றுள்ளார்). சொந்த வாரிசான பிரபுவை கலையுலகத்திற்கு அளித்துள்ளார்.

செவாலியர் விருதையும், பத்மபூசண் விருதினையும், டாக்டர் பட்டத்தையும் பெற்ற சிவாஜி கலைஞரின் வசனத்தில் அதிகப்படங்களில் நடித்ததுடன் அவரது வசன காவியங்களுக்கு உயிரூட்டிய பெருமையும் சிவாஜிக்கே.

நடிகர் சங்கத்தலைவராக இருந்த நடிகர் திலகம் ஒரு மாநில கட்சியின் தலைவராகவும், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராகவும் பதவி வகித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார்.

நாவலாசிரியர்களின் கல்கியின் கதைகளான கள்வனின் காதலன் படத்திலும், அகிலனின் பாவைவிளக்கு, வாழ்வு எங்கே, குலமகள்ராதை படங்களிலும் அண்ணாவின் ரங்கோன்ராதாவிலும், கலைஞரின் புதையல் படத்திலும், லட்சுமி (திரிபுரசுந்தரி)யின் பெண்மனம், (இருவர் உள்ளம்) படத்திலும் சிவாஜி நடித்துள்ளார்.

பதிபக்தி தொடங்கி பாதுகாப்பு வரை பீம்சிங்் இயக்கிய எல்லா படங்களிலும் சிவாஜிதான் படநாயகன். இது தவிர ஒரே நடிகையுடன் அதாவது பத்மினியோடு மட்டும் ஜோடியாக 25 படங்களுக்கு மேல் நடித்த நாயகன் என்ற தனிப்பெருமையும் சிவாஜிக்குத்தான்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:32 am

சிவாஜியின் அதிக படங்களை இயக்கியவர்

சிவாஜியை வைத்து அதிக படங்களை இயக்கியவர் ஏ.பீம்சிங் (18படங்கள்) ஏ.சி. திருலோக சுந்தர் (18) பி.மாதவன் (15) ஏ.பி.நாகராஜன் (12) சி.வி. ராஜேந்திரன் (13).

சிவாஜி 100 இயக்குனர்களின் படங்களில் நடித்து உள்ளார்.


சிவாஜியுடன் அதிக படங்களில் நடித்த கதாநாயகி

சிவாஜியுடன் அதிக படங்களில் நடித்தவர் பத்மினி(29படங்கள்) கே.ஆர்.விஜயா ( 20 படம்) ஜெயலலிதா(17படம்) சரோஜா தேவி(14) சாவித்திரி (12)மஞ்சுளா (7படம்) லதா(1)


சிவாஜி முதலில் பேசிய வசனம் சக்சஸ்

நடிகர் திலகம் சிவாஜியின் பூர்வீகம் தஞ்சாவூர் ஆகும். இருந்த போதிலும் அவர் படித்தது, வளர்ந்தது, நாடகத்தில் சேர்ந்தது எல்லாம் விழுப்புரத்தில்தான். அவருக்கு படிப்பில் நாட்டம் இல்லை. நாடகம், பஜனை கோஷ்டியை கண்டு ரசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டார். 1935-வது ஆண்டு தனது 7-வது வயதில் நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார். 17 ஆண்டுகள் நாடகத்தில் நடித்து, நடிப்பில் பட்டை தீட்டிய வைரம் ஆனார். 1951-ம் ஆண்டு கருணாநிதி கதைவசனம் எழுதிய பராசக்தி படத்தில் சிவாஜி கதாநாயகனாக நடித்தார். முதல் படத்திலேயே அவர் கதாநாயகன் நிலைக்கு எட்டினார். அந்த படத்தில் பைத்தியக்காரனைபோல் சுமை தாங்கி அருகில் நின்றுகொண்டு சக்சஸ் என்ற வசனத்தையே முதன்முதலாக பேசினார். அந்த வார்த்தைக்கேற்ப அவர் திரையுலகில் பல்வேறு வெற்றிகளை குவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:36 am

தேடி வந்த விருதுகள்

1960:- கெய்ரோவில் நடை பெற்ற ஆசிய-ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் வீர பாண்டிய கட்டபொம்மன் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நடிகராக சிவாஜிகணேசன் தேர்வு பெற்று, வெள்ளிப்பருந்து சிலையைப் பரிசாக பெற்றார்.

1972: பிலிமாலயா சிறந்த நடிகருக்கான விருது.

1972: பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருது - ஞான ஒளி படத்திற்காக.

1973: கவுரவம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது.

1985: முதல் மரியாதை படத்திற்காக சிறந்த நடிகர் விருது.

1954 முதல் 1992 வரை: சிறந்த நடிகராக 19 முறை (பிலிம் பேன்ஸ் அசோசியேஷன்) சினிமா ரசிகர் சங்கம் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கி பாராட்டியுள்ளது.

1981-1983: கீழ்வானம் சிவக்கும், மிருதங்க சக்ரவர்த்தி, வெள்ளை ரோஜா ஆகிய படங்களுக்காக இருமுறை சினிமா எக்ஸ்பிரஸ் விருது பெற்றுள்ளார்.

1963: திரைப்படம் காண் போர் சங்கம் சார்பில் ரத்த திலகம் படத்திற்காக சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டு துப்பாக்கி பரிசு.

1974: நந்தம்பாக்கம் அரிமா சங்கம் சார்பில் தங்கப்பதக்கம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது.

1987: பம்பாய் அரிமா சங்கம் சார்பில் சிறந்த நடிகருக்கான விருது.

1993: ஆதித்தனார் தங்கப் பதக்கத்தை ஆதித்தனார் முத்தமிழ் பேரவை வழங்கியது.

1994: பூனா திரைப்படக் கல்லூரியின் விருது.

தமிழ்நாடு தெலுங்கு அமைப்பின் வீரபாண்டிய கட்டபொம்மன் விருது.

1995: பிரான்சு நாட்டின் செவாலியர் பட்டம் பெற்றார்.

1996: இந்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது. (இந்த விருது பெற்ற ஒரே தமிழர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது)பட்டங்கள் -வழங்கியவர்கள்

சிவாஜி-தந்தை பெரியார் நடிகர் திகலம் - பேசும் படம் நவரசத்
திலகம் - கே.பி.சுந்த ராம்பாள், கலைகுரிசில் - இலங்கை தினகரன் இதழ் நவரச ரத்னா - இலங்கை ரசிகர்கள்.

1962-63 தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது.

1966- இந்திய பேரரசு பத்ம பட்டம் வழங்கப்பட்டது.

1983- நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (எம்.பி.) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1984- பத்மபூஷண் பட்டத்தை மத்திய அரசு வழங்கியது.

1986- சிதம்பரம் அண்ணா மலைபல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.

1989- தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். விருது.

1994 - நடிகர் சங்கம் கலைச் செல்வம் விருது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

நடித்த திரைப்படங்கள்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:37 am

* படையப்பா (1999) .... படையப்பாவின் தந்தை வேடம்
* மன்னவரு சின்னவரு (1999)
* பூப்பறிக்க வருகிறோம் (1999)
* என் ஆசை ராசாவே (1998)
* ஒரு யாத்ர மொழி (மலையாளம்) (1997)
* கோபுர தீபம் (1997)
* ஒன்ஸ் மோர் (1997)
* பசும்பொன் (1995)
* எங்கிருந்தோ வந்தான் (1995)
* பாரம்பரியம் (1993)
* சின்ன மருமகள் (1992)
* நாங்கள் (1992)
* முதல் குரல் (1992)
* க்னோக் அவுட் (1992)
* தேவர் மகன் (1992) .... பெரிய தேவராக
* ஞானப் பறவை (1991)
* காவலுக்குக் கெட்டிக்காரன் (1990)
* புதிய வானம் (1988)
* என் தமிழ் என் மக்கள் (1988)
* அன்புள்ள அப்பா (1987)
* வீரபாண்டியன் (1987)
* தாம்பத்தியம் (1987)
* கிருஷ்ணன் வந்தான் (1987)
* குடும்பம் ஒரு கோயில் (1987)
* முத்துக்கள் மூன்று (1987)
* ராஜ மரியாதை (1987)
* ஜல்லிக்கட்டு (1987)
* விஷ்வனாத நாயக்குடு (தெலுங்கு) (1987)
* தாய்க்கு ஒரு தாலாட்டு (1986)
* சாதனை (1986)
* மண்ணுக்குள் வைரம் (1986)
* லக்ஸ்மி வந்தாச்சு (1986)
* ஆனந்தக் கண்ணீர் (1986)
* விடுதலை (1986)
* மருமகள் (1986)
* முதல் மரியாதை(1985) .... மலைச்சாமி வேடம்
* படிக்காதவன் (1985)
* ராஜ ரிஷி (1985)
* பந்தம் (1985)
* நீதியின் நிழல் (1985)
* படிக்காத பண்ணையார் (1985)
* நாம் இருவர் (1985)
* நேர்மை (1985)
* இரு மேதைகள் (1984)
* வாழ்க்கை (1984)
* வம்ச விளக்கு (1984)
* சரித்திர நாயகன் (1984)
* சிரஞ்சீவி (1984)
* எழுதாத சட்டங்கள் (1984)
* தராசு (1984)
* திருப்பம் (1984)
* சிம்ம சொப்பனம் (1984)
* தாவனிக் கனவுகள் (1983)
* உருவங்கள் மாறலாம் (1983)
* சுமங்கலி (1983)
* சந்திப்பு (1983)
* உண்மைகள் (1983)
* மிருதங்கச் சக்கரவர்த்தி (1983)
* நீதிபதி (1983)
* வெள்ளை ரோஜா (1983)
* காஷ்மிர் காதலி (1983)
* வசந்தத்தில் ஒரு நாள் (1982)
* வா கண்ணா வா (1982)
* தியாகி (1982)
* துணை (1982)
* தீர்ப்பு (1982)
* சங்கிலி (1982)
* பரீட்சைக்கு நேரமாச்சு (1982)
* ஊரும் உறவும் (1982)
* ஊருக்கு ஒரு பிள்ளை (1982)
* நெஞ்சங்கள் (1982)
* ஹிட்லர் உமாநாத் (1982)
* கருடா சௌக்கியமா (1982)
* லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (1981)
* கீழ்வானம் சிவக்கும் (1981)
* கல்தூன் (1981)
* அமரகாவியம் (1981)
* சத்ய சுந்தரம் (1981)
* ரிஷி மூலம் (1980)
* இரத்த பாசம் (1980)
* விஷ்வரூபம் (1980)
* எமனுக்கு எமன் (1980)
* தர்ம ராஜா (1980)
* மோகனப் புன்னகை (1980)
* மாடி வீட்டு ஏழை (1980)
* நான் வாழ வைப்பேன் (1979) .... ரவி வேடம்
* வெற்றிக்கு ஒருவன் (1979)
* திரிசூலம் (1979)
* பட்டாகத்தி பைரவன் (1979)
* நல்லதொரு குடும்பம் (1979)
* நான் வாழவைப்பேன் (1979)
* கவரி மான் (1979)
* இமயம் (1979)
* வாழ்க்கை அலைகள் (1978)
* என்னைப் போல் ஒருவன் (1978)
* ஜெனெரல் சக்கரவர்த்தி (1978)
* ஜஸ்டிஸ் கோபினாத் (1978)
* பைலட் பிரேம்நாத் (1978)
* தியாகம் (1978)
* புண்ணிய பூமி (1978)
* அந்தமான் காதலி (1977)
* சானக்ய சந்திரகுப்தா (தெலுங்கு) (1977)
* அண்ணன் ஒரு கோயில் (1977)
* தீபம் (1977)
* இளைய தலைமுறை (1977)
* நாம் பிறந்த மண் (1977)
* அவன் ஒரு சரித்திரம் (1976)
* உத்தமன் (1976)
* உனக்காக நான் (1976)
* சத்தியம் (1976)
* ரோஜாவின் ராஜா (1976)
* கிரகப் பிரவேசம் (1976)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:38 am

* டாக்டர் சிவா (1975) .... டாக்டர் சிவா வேடம்
* அன்பே ஆருயிரே (1975)
* அவன் தான் மனிதன் (1975)
* தங்கப்பதக்கம் (1974)
* அன்பைத்தேடி (1974)
* என் மகன் (1974)
* தீர்க்க சுமங்கலி (1974)
* பக்த துகாரம் (தெலுங்கு) (1973) .... சிவாஜி
* கௌரவம் (1973)
* ராஜபாட் ரங்கதுரை
* இராஜராஜசோழன் 1973)
* பாரத விலாஸ் 1973)
* பங்காரு பாபு (தெலுங்கு)(1972)
* ஞான ஒளி (1972) .... அந்தொனி வேடம்
* வசந்த மாளிகை (1972)
* நீதி (1972)
* சவாலே சமாளி (1971)
* மூன்று தெய்வங்கள் (1971)
* சுமதி என் சுந்தரி (1971)
* பாபு (1971)
* குலமா குணமா (1971)
* தங்கைக்காக (1971)
* இரு துருவம் (1971)
* வியட்னாம் வீடு (1970) .... பத்மநாப ஐயர் வேடம்
* விளையாட்டுப் பிள்ளை (1970)
* எங்கள் தங்கம் (1970)
* எங்க மாமா (1970)
* பாதுகாப்பு (1970)
* காவல் தெய்வம் (1969)
* தெய்வ மகன் (1969)
* சிவந்த மண் (1969)
* தங்கச் சுரங்கம் (1969)
* குருதட்சனை (1969)
* தில்லானா மோகனாம்பாள் (1968) .... சிக்கில் சண்முகசுந்தரம் வேடம்
* உயர்ந்த மனிதன் (1968)
* கௌரி (1968)
* எங்க ஊரு ராஜா (1968)
* திருமால் பெருமை (1968)
* கலாட்டா கல்யாணம் (1968)
* என் தம்பி (1968)
* இரு மலர்கள் (1967)
* கந்தன் கருணை (1967) .... வீரபாகு வேடம்
* தங்கை (1967) .... மதன் வேடம்
* திருவருட்செல்வர்(1967)
* மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966) .... சுந்தரம் பிள்ளை
* மகாகவி காளிதாஸ் (1966)
* செல்வம் (1966)
* திருவிளையாடல் (1965) .... சிவனின் அவதாரங்களாக
* சாந்தி (1965)
* பழனி (1965)
* அன்புக்கரங்கள் (1965)
* புதிய பறவை (1964)
* கை கொடுத்த தெய்வம் (1964)
* நவராத்திரி (1964)
* ராமதாசு (தெலுங்கு) (1964)
* பச்சை விளக்கு (1964)
* இருவர் உள்ளம் (1963) .... செல்வம் வேடம்
* கர்ணன் (1963) .... கர்ணன் வேடம்
* பார் மகளே பார் (1963)
* ரத்த திலகம் (1963) .... குமார் வேடம்
* அறிவாளி (1963)
* குலமகள் ராதை (1963)
* குங்குமம் (1963)
* அன்னை இல்லம் (1963)
* பலே பாண்டியா (1962)
* பார்த்தால் பசி தீரும் (1962)
* பவித்ர பிரேமா (தெலுங்கு) (1962)
* ஆலயமணி (1962)
* நிச்சய தாம்பூலம் (1962)
* படித்தால் மட்டும் போதுமா (1962)
* வடிவுக்கு வளைகாப்பு (1962)
* கப்பலோட்டிய தமிழன் (1961) .... வ.உ சிதம்பரம்பிள்ளை வேடம்
* பாலும் பழமும் (1961)
* பாப்பா பரிகாரம் (1961)
* பாசமலர் (1961) .... ராஜசேகரன் வேடம்
* பாவமன்னிப்பு (1961) .... ரஹிம் வேடம்]
* புனர் ஜென்மம் - (1961)
* படிக்காத மேதை (1960)
* பாவை விளக்கு (1960)
* இரும்புத்திரை (1960)
* தெய்வப் பிறவி (1960)
* பில்லலு தெச்சின சாலனி ராஜ்ஜியம் (தெலுங்கு) (1960)
* மரகதம் (1959) .... வரேந்திரன்
* வீரபாண்டியக் கட்டப்பொம்மன் (1959) .... கட்டப்பொம்மன் வேடம்
* பாகப்பிரிவினை (1959)
* தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை (1959)
* தங்கப்பதக்கம் (1959)
* சபாஷ் மீனா (1958)
* ஸ்கூல் மாஸ்டர் (1958)
* சாரங்கதார (1958)
* உத்தமபுத்திரன் (1958)
* காத்தவராயன் (1958)
* அம்பிகாபதி (1957) .... அம்பிகாபதி வேடம்
* மக்களை பெற்ற மகராசி (1957) .... செங்கோடையன்
* தங்கமலை இரகசியம் (1957)
* வணங்காமுடி (1957)
* தால வன்சானி வீருடு (தெலுங்கு) (1957)
* புதையல் (1957)
* பாக்யவதி (1957)
* அமரதீபம் (1956) .... அசோல்
* பெண்ணின் பெருமை(1956)
* ரங்கூன் ராதா (1956) .... தர்மலிங்க முதலியார் வேடம்
* தெனாலி இராமன் (1956) .... தெனாலி இராமக்கிருஷ்ணா
* கள்வனின் காதலி (1955) .... முத்தையன்
* மங்கையர் திலகம் (1955) .... வாசு வேடம்
* முதல் தேதி (1955) .... சிவஞானம்
* கூண்டுக்கிளி (1954)
* அந்த நாள் (1954) (சிவாஜி கணேசன் வேடம்)
* எதிர்பாராதது (1954) .... சுந்தர் வேடம்
* மனோகரா (1954) .... மனோகரா வேடம்
* அன்பு (1954)
* பூங்கோதை (1954)
* பர்தேசி (1953) .... ஆனந்த் வேடம்
* பெம்புடு கொடுக்கு (தெலுங்கு) (1953) .... மோகன் வேடம்
* பராசக்தி (1952) .... குணசேகரன் வேடம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:42 am

கவுரவ வேடங்களில் சிவாஜி

தமிழ்

1)மர்மவீரன்

2)தாயப்போல் பிள்ளை மூலைப்போல சேலை

3)குழந்தைகள் கண்ட குடியரசு

4)தாயே உனக்காக

5)சினிமா பைத்தியம்

6)உருவங்கள் மாறலாம்

7)நட்சத்திரம்

8)தேவர் மகன்

9)ராஜ குமாரன்

தெலுங்கு

10)பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ;யம்

11)ராமதாசு

12)பங்காரு பாபு

13)பக்த துகாராம்

14)ஜிவன்தீரலு

15)சாணக்ய சந்திர குப்தா

கன்னடம்

16)ஸ்கூல் மாஸ்டர்

17)மக்கள் ராஜ;யா

மலையாளம்
18)ஸ்கூல் மாஸ்டர்

இந்தி

1)ஸ்கூல் மாஸ்டர்


சிவாஜி நாடகமன்றம் 1952-ல் தொடங்கப்பட்டது.

என் தங்கை, கவியின் கனவு, பராசக்தி, நாடோடி, தோழன், விதி, வீரபாண்டிய கட்டபொம்மன், நாகநந்தி, பகல் நிலா, ஜஹாங்கீர், தேன்கூடு, நீதியின் நிழல், களம் கண்ட கவிஞன், வேங்கையின் மைந்தன், வியட்நாம் வீடு ஆகிய நாடகங்களிலும்....

சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன், சிலம்பு, மகாகவி பாரதியார் ஆகிய ஓரங்க நாடகங்களிலும் நடித்து நாடகத்தாயைப் போற்றினார்.

பராசக்தி முதல் ஒன்ஸ் மோர் வரை அவர் படைத்த சாதனைகள் எத்தனையோ, நடிகர் திலகம் பத்மஸ்ரீ, டாக்டர் சிவாஜி கணேசன், சாதனையாளர். அவரே ஒரு சரித்திரம். ஆம். அவர் ஒரு வாழும் வரலாறு. அவர் தாதா சாகேப் பால்கே விருது பெற்றது இந்தியாவுக்கு பெருமை. தமிழகத்துக்கு சிறப்பு. தமிழ்க்கலைக்கு கவுரவம்.

கோவையில் சிவாஜி படங்கள் சாதனை

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் கோவையில் ஏற்படுத்திய சாதனைகள்.(சில படங்கள்)

பராசக்தி(128நாள்)சம்பூர்ண ராமாயணம்(100நாள்) பாகப்பிரிவிi(120) வீரபாண்டிய கட்டபொம்மன்(124)இரும்புத் திரை(156) படிக்காத மேடை(115) புதையல்(107) பாசமலர்(122) பாவமன்னிப்பு(117) பதிபக்தி (117) தெய்வபிறவி(100)பாலும் பழமும்(100) படித்தால் மட்டும் போதுமா(100) ஆலயமணி(100) கர்ணன்(100) பச்சைவிளக்கு(100) நவராத்திரி(100) திருவிளை யாடல்(117) சரஸ்வதி சபதம்(100) தூக்கு தூக்கி(120) தங்கை (100)ஊட்டிவரை உறவு(103) சிவந்த மண்(103) தில்லானா மோகனம்பாள்(103) வியட்நாம் வீடு(104)எங்கிருந்தோ வந்தாள்(100) சவாலே சமாளி (100) பட்டிகாடா பட்டணமா(100) வசந்த மாளிகை(110) எங்கள் தங்க ராஜா(100) கவுரவம்(100) தங்க பதக்கம்(140)அவன்தான் மனிதன்(100) மன்னவன் வந்தானடி(100) அண்ணன் ஒரு கோவில்(100) அந்தமான் காதலி(100) தியாகம்(105) திருசூலம்(175) கல்தூண்(105) தீர்ப்பு(105) நீதிபதி(105) வெள்ளை ரோஜா(105) முதல் மரியாதை(175) படிக்காதவன்(100) தேவர் மகன்(105). படையப்பா(210)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:46 am

புராண-சரித்திர படங்களும், கதாபாத்திரங்களும்

சிவாஜியை போல் இன்னொரு நடிகர் வந்ததும் இல்லை.வரப்போவதும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு தத்ரூபமான நடிப்பால் சரித்திரம் படைத்தவர் சிவாஜி. வாழ்ந்து மறைந்த வராலாற்று நாயகர்களை தன் நடிப்பாற்றலால் மக்களுக்கு உயிரோவியமாக்கி காட்டியவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அவர் நடித்தபுராண, சரித்திர படங்களும், கதாபாத்திரங்களும் வருமாறு„-

வீரபாண்டிய கட்டபொம்மன்-வீரபாண்டியகட்டபொம்மன், கர்ணன்-கர்ணன்,

சேரன் செங்குட்டுவன்-ராஜாராணி,

ஐந்தாம் ஜார்ஜ் மன்னன்-கவுரவம்,

சலீம்-இல்லறஜோதி,

உத்தமன்-மஜ்னு,

உத்தமன்-ஷேக்ஸ் பியரின் நாடக நாயகன்,

ஒத்தெல்லோ-அன்பு, ரத்த திலகம்,

ஷாஜகான்-பாவை விளக்கு,

அசோகன்-அன்னையின் ஆணை, ரோஜாவின் ராஜா,

பாரதியார்-கைகொடுத்த தெய்வம்,

திருநாவுக்கரசர்-திருவருட்செல்வர்,

சேக்கிழார்- திருவருட் செல்வர்,

பரதன்-சம்பூர்ண ராமாயணம்,

துஷ்யந்தன்-மகாகவி காளிதாஸ்,

காத்தவராயன்-காத்தவராயன்,

தெனாலி ராமன்-தெனாலி ராமன்,

மனோகரன்-மனோகரா,

ஜுலியஸ்சீசர்-சொர்க்கம்,

அம்பிகாபதி-அம்பிகாபதி,

புத்தர்-அன்பைத்தேடி,

ராஜராஜசோழன்- ராஜராஜசோழன்,

ஹாம்லெட், பஞ்சாப் சிங்கம் பகவத்சிங், அர்ஜுன்-ராஜபார்ட் ரங்கதுரை,

வீரபாகு-கந்தன் கருணை,

திருமங்கை ஆழ்வார்-திருமால் பெருமை,

நக்கீரன்-நான் பெற்ற செல்வம்,

பொற்கைப் பாண்டியன்-தாயைப்போல் பிள்ளை நூலைப்போல சேலை,

அலெக்சாண்டர்-சந்திரகுப்த சாணக்யா(தெலுங்கு)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:46 am

மராட்டிய மன்னன் சிவாஜி-பக்த துக்காரம்(தெலுங்கு)
ராமன் எத்தனை ராமனடி,

புலவர் வித்யாபதி-சரஸ்வதி சபதம்,

சிவபெருமான்-நான் பெற்ற செல்வம், திருவிளையாடல்,கண்ணன்- படிக்காத மேதை, மூன்று தெய்வங்கள்,

ஸ்ரீமுருகன்-ஸ்ரீவள்ளி, ராஜமார்ட் ரங்கதுரை,

ராவணன்-கிரஹப்பிரவேசம்,

கவிஞன் தான்சேன்-தவப்புதல்வன்,

வாஞ்சிநாதன்-சினிமா பைத்தியம்,

வ.உ.சிதம்பரம் பிள்ளை-கப்பலோட்டிய தமிழன்,

அரிச்சந்திரன்-ஹரிச்சந்திரா,

ஈ.வே.ரா.பெரியார் போல்--பெற்ற பெற்ற மனம்,

பீமன்-பாபு,

விஸ்வாமித்திரர்-ராஜரிஷி,

யாகவா முனிவரைப்போல்-ஞானபறவை.


அதிக வேடங்களில் நடித்து சாதனை புரிந்த சிவாஜி

தமிழ்திரைஉலகில் அதிக வேடங்களில் நடித்து சாதனை புரிந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆவார். இவரது 100வது படமான நவராத்திரியில் சிவாஜி 9 வெவ்வேறு மாறுபட்ட வேடங்களில் ஒரே காட்சியில் தோன்றுவது குறிப்பிடத்தக்கது.

நவராத்திரி (ஒன்பது வேடங்கள்), திருவிளையாடல் (ஐந்து வேடங்கள்)

என் மகன், திரிசூலம்,தெய்வமகன், பலே பாண்டியா (மூன்று வேடங்கள்), சரஸ்வதி சபதம், எங்க ஊர் ராஜா, கவுரவம், சிவகாமியின் செல்வன், மனிதனும் தெய்வமாகலாம், பாட்டும் பரதமும், என்னைப்போல் ஒருவன், புண்ணிய பூமி, ரத்தபாசம், எமனுக்கு எமன், விஸ்வரூபம், மாடி வீட்டு ஏழை, சங்கிலி, சந்திப்பு, வெள்ளை ரோஜா.(இரண்டு வேடங்கள்).
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:50 am

கடல் கடந்த சிவாஜியின் சாதனைநடிகர் திலகத்தின் கலைத்திறனை பாராட்டும் வகையில் அமெரிக்க நாட்டில் உள்ள நயகரா நகரின் ஒரு நாள் கவுரவ மேயராக பதவி வழங்கி பாராட்டப்பட்டார். மேயர் பதவி வழங்குவதை குறிக்கும் வகையில் அதற்கான அடையாள சாவியை நடிகர் திலகத்திடம் நகரின் மேயர் கால்வின் எல்.கெல்லர் வழங்கிய போது எடுத்த படம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:51 am

கடல் கடந்த நாடான தென் ஆப்பிரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் மன்றம் உள்ள ஒரே நடிகர் சிவாஜி.

அமெரிக்க அரசு விருந்தினராக அழைக்கப்பட்டு நயாகரா பால்ஸ் நகர மேயராக தங்கச்சாவி பெற்ற ஒரே இந்திய நடிகர் சிவாஜி. நேருவுக்கு இதே மாதிரி வரவேற்பு அளிக்கப்பட்டது.

கட்டபொம்மன் சாதனை

1960-ல் தென்ஆப்பிரிக்கா திரைப்பட விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிறந்த படமாகவும் ஆசியா, ஆப்பிரிக்கா கண்டத்திலேயே சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டு வெள்ளிப்பருந்தை பரிசாக பெற்ற ஒரே தமிழ் நடிகர் சிவாஜி கணேசன்.

இலங்கையில் சாதனை

சிவாஜி நடித்த பைலட் பிரேம்நாத் இலங்கையில் 1,100 (3 வருடம்) நாள் ஓடி சாதனை படைத்தது. வசந்த மாளிகை 782நாள்.

உலகச் சிறந்த நடிகர்

முன்பு உலக சிறந்த நடிகர் என அழைக்கப்பட்ட மார்லன் பிராலன் பிராண்டோவை நடிப்பு போட்டியில் வென்று ஏர்கண்டிசன் அறையில் குழுமியிருந்த அமெரிக்க மக்களை தன்நடிப்பினால் அழ வைத்து வியர்வையில் நனைய வைத்து மார்லன் பிராண்டோ வாயாலேயே உலக சிறந்த நடிகர் என புகழாரம் சூட்டப்பட்டார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

ஆஸ்கர் உலகப்பட விழாவில் கலந்து கொண்ட முதல் இந்தியப் படம் தெய்வமகன்.

வெளிநாட்டில் முதல் வெள்ளிவிழா கொண்டாடிய தமிழ் படம் பராசக்தி (கொழும்பு-மைலன் தியேட்டர்)அமெரிக்க நகருக்கு ஒருநாள் மேயராக பணிபுரிந்த சிவாஜிஅடுக்கு மொழி வசனம், அனல் தெறிக்கும் வசனங்கள், நவ ரசங்களையும் வெளிப்படுத்தும் முக பாவம் என்று எந்த வேடம்
கொடுத்தாலும் அந்த பாத்திரமாகவே மாறிவிடுபவர் சிவாஜி. இவரது நடிப்பை இந்தியா மட்டுமல் அல்ல உலகமே பாராட்டியது. இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. சிவாஜியின் நடிப்பாற்றலை ஹாலிவுட்டின் பிரபல நடிகர் மார்லென்பிராண்டோ பாராட்டி உள்ளார். இவரது கலைத்திறனை பாராட்டும் வகையில் அமெரிக்க நாட்டில் உள்ள நயகரா நகரின் ஒரு நாள் கவுரவ மேயராகவும் பதவி வகித்து இந்தியாவின் பெருமையை உலக அளவில் தலைநிமிர செய்து உள்ளார்.

அயல் நாடுகளில் கலை உலா

* அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அந்தமான், மொரிசியஸ்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:54 am

நன்றி மறவா உத்தமன்நடிகர் சிவாஜியை வேலூர் நேஷனல் தியேட்டர் முன்னாள் அதிபர் பி.ஏ.பெருமாள் முதலியார் தான் தயாரித்த பராசக்தி படத்தின் மூலம் திரைஉலகுக்கு அறிமுகப் படுத்தினார். அந்தப்படத்தில் சிவாஜி கதாநாயனாக நடித்தார். அந்தப்படம் வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து சிவாஜி தமிழ்த்திரைப்பட உலகில் சிறப்பான இடம்பெற்று கொடிகட்டி பறந்தார். தனது முன்னேற்றத்துக்கு உதவியாக இருந்த பெருமாள் முதலியாரை சிவாஜி மறக்க வில்லை. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தன்று வேலூரில் உள்ள பெருமாள் முதலியார் வீட்டுக்கு நடிகர் சிவாஜியும் அவரது மனைவி கமலா அம்மாளும் வந்து புத்தாடை வழங்கி ஆசிபெற்று செல்வது வழக்கம். பெருமாள் முதலியார் மறைவுக்கு பிறகும் சிவாஜி நன்றி மறக்காமல் அவரது வீட்டுக்கு வழக்கம் போல் வந்து பெருமாள் முதலியாரின் மனைவி மீனா அம்மாளிடம் ஆசி பெற்று வந்தார். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் அன்றும் அவர் வாழ்த்து பெற்று சென்றார். சிவாஜி மறைவு பற்றி அறிந்ததும் மீனா அம்மாளும், அவரது தம்பியும், பெருமாள் முதலியாரின் மைத்துனருமான ரங்கநாதனும் ஆழ்ந்த துயரத்தை தெரிவித்து உள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:58 am

சிம்மக்குரலோனின் இறுதி கணங்கள்

சிவாஜி தனது கடைசி நாளில் தனித்து விடப்பட்டது போன்று உணர்ந்து இருக்கிறார். எத்தனை நாட்களுக்கு உன் முகத்தையும், அம்மாவின் (கமலா) முகத்தையும் பார்த்துக்கொண்டு இருப்பது என்று நர்சை பார்த்து கேட்டு உள்ளார்.

சிங்கப்பூரில் சிவாஜிக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை டாக்டர்களும், அமெரிக்காவில் இருக்கும் டாக்டர் ஜவஹர் பழனியப்பனும் தொடர்ந்து தொலை பேசி மூலமாக அவ்வப்போது மருத்துவ ஆலோசனைகளை சிவாஜிக்கு வழங்கிய வண்ணம் இருந்தனர். அத்துடன் அப்பல்லோ விலும் தேவைப்படும் போதெல்லாம் செக்- அப் செய்து கொண்டு வந்தார் சிவாஜி.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அதிகம் பேசக் கூடாது என சிவாஜிக்கு டாக்டர்கள் ஆலோசனை சொன்னார்கள். இதனால் மனம் விட்டுப் பேச முடியாத சிவாஜி, தனித்துவிடப்பட்ட மாதிரி ரொம்பவே நினைத் திருக்கிறார்.

மிடில்கிளாஸ் மாதவன் படத்திற்காக பிரபுவிடம் கதை சொல்லப் போனவர்கள் சிவாஜியை பார்த்து ரொம்பவே வேதனை அடைந்திருக் கிறார்கள். ஒரு குழந்தையைப் போல் குறுகிச் சுருண்டு படுத்திருக்கிறாரே. என வேதனை பட்டிருக்கிறார்கள்.

சிவாஜிக்கு பணிவிடை செய்வதற்காக சிவாஜியின் வீட்டுக்கே நர்ஸ் ஒருவரை நியமித்திருந்தது அப்பல்லோ நிர்வாகம். ஒருநாள் அந்த நர்சிடம், உன் முகத்தையும் அம்மா முகத்தையும் (கமலா அம்மாள்) மட்டுமே பார்த்துப் பார்த்து போரடிச்சுப் போச்சி என சிவாஜி விரக்தியாய் சொன்னார். இந்த தகவல் கமலா அம்மாவுக்கு
எட்டியதும் கலங்கிப் போய்விட்டார்.

இதையடுத்து சிவாஜியின் ஆத்மார்த்த நண்பர்கள் சிலரிடம் தொலைபேசியில் பேசிய கமலாஅம்மாள், நீங்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நாள் வந்து அவரோட பேசிவிட்டு போனீங்கன்னா நல்லா இருக்கும் என கேட்டுக் கொண்டார். அப்பல்லோ நிர்வாகமும் மூன்று ஷிப்டுகளாகப் பிரித்து மூன்று நர்சுகளை சிவாஜிக்கு பணி விடை செய்ய அனுப்பி வைத்தது. கமலா அம்மாள் கேட்டுக் கொண்டதை அடுத்து சிவாஜியின் நண்பர்கள் ஒரு நாளைக்கு ஒருவராக வந்தார்கள்.

சென்னை கமலா தியேட்டர் உரிமையாளர் வி.என்.சிதம்பரம் வந்து சிவாஜியோடு பேசிக்கொண்டிருந்த போது சாப்பாடு விஷயத்தை பற்றி சொல்லியிருக்கிறார். சிவாஜி ஒரு அசைவப்பிரியர். காடை, கவுதாரி, புறாக் கறிகளை விரும்பி சாப்பிடுவார். ஆனால் உடல்நலத்தைக் கருதி டாக்டர்கள் வெறும் கஞ்சியை மட்டுமே சாப்பிடச் சொல்லியதால்... அன்னிக்கு நல்லா பசிச்சது, ஆனா என்னால சாப்பிட முடியலை. ஏன்னா வறுமை. நல்லா சம்பாதிச்சப்போ என்னால திருப்தியா சாப்பிட முடியலை. ஏன்னா நான் நடிகனாச்சே... கண்டபடி சாப்பிட்டா உடம்பு போட்டுடும்னு இமேஜ் பார்த்து சாப்பிட முடியலை. இன்னிக்கு தேவையான பணமும் இருக்கு. தேவைக்கு அதிகமா ஓய்வும் இருக்கு. ஆனாலும் சாப்பிட முடியலை. டாக்டர் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டார் என வி.என்.சிதம்பரத்திடம் சொல்லி இருக்கிறார்.

சாப்பாடு மட்டுமல்ல, தாகத்துக்கு தண்ணீர் குடிக்கக்கூட அவரால் முடியவில்லை. சமீபகாலமாகவே சாப்பிடும் கஞ்சி நெஞ்சிலேயே நிற்பது மாதிரி ஒரு உணர்வு சிவாஜிக்கு. இதனால் அடிக்கடி தண்ணீர் கேட்பார். ஆனால் நாளொன்றுக்கு 350 மில்லிக்கு மேல் தண்ணீர் குடிக்கக்கூடாது என டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.

தனது நெருங்கிய நண்பரான நடிகர் பாலாஜி தன்னை சந்திக்க வந்தபோது அவரின் உடல்நலம் குறித்து விசாரித்த சிவாஜி, கூட
யாரும் வரலையா? என்று கேட்டார்.

இல்லையே, நானாதான் கார் ஓட்டிட்டு வந்தேன்

அடப்பாவி, டயாலிசிஸ் பண்ணிட்டிருக்கிற நீ கார் ஓட்டிட்டா வந்த? என கடிந்துகொண்டார்.

உடனே பாலாஜி சிரித்த படி, இதுல என்ன இருக்கு பயப்பட? டயாலிசிஸ் பண்ணிக்கிறது இப்பெல்லாம் சர்வசாதாரணம். நீங்களும் டயாலிசிஸ் பண்ணிக்கங்க. பயப்பட ஒண்ணுமே இல்லை. தைரியமா இருங்க என சொல்லியிருக்கிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 12:59 am

ஸ்பெஷல் பாசம்

இந்த உடல் வருத்தம் ஒருபுறமிருக்க, தன் பாசமுள்ள பேத்திக்கு ஏற்பட்ட கஷ்டம் சிவாஜியை ரொம்பவே துயரப்படுத்தியிருக்கிறது.
ஒரு வீட்டில் எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் முதன் முதலாக புதிய ஜிவனாய் பிறக்கும் மூத்த குழந்தை மீது பெற்றோர்களுக்கு ரொம்பவே பாசம் இருக்கும். அப்படித்தான் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி மீது ரொம்ப பிரியமாக இருந்தார். அந்த மகளின் மகளான சத்தியலட்சுமி மீது சிவாஜிக்கு ரொம்பவே அன்பு. ஏகப்பட்ட பேரன் பேத்திகள் இருந்தாலும் எல்லோரிடமும் ஒரு குழந்தையைபோல் குதூகலமாகப் பழகினாலும் சத்திய லட்சுமி மீது ஸ்பெஷல் பாசம் சிவாஜிக்கு.

வி.என்.சுதாகரனுக்கு சத்திய லட்சுமியை திருமணம் செய்து வைக்கிற பேச்சு அடிபட்டபோது, அரசியல் சம்பந்தப்பட்ட சம்பந்தம் வேண்டாம் என சிவாஜி மறுத்த போது சத்தியலட்சுமியின் தந்தை நாராயணசாமி, உங்களுக்கு மட்டும்தான் ஸ்டேட்டஸ் இருக்கணுமா? எங்களுக்கு இருக்கக்கூடாதா? என சண்டையிட்ட பிறகே கல்யாணம் நடந்தது.

சிவாஜி பிசியாக இருந்த காலங்களில் அவருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதற்காகவே முக்கியமான விஷயங்களை தவிர மற்ற விஷயங்களை சிவாஜியின் கவனத்திற்கு கொண்டுசெல்ல மாட்டார்கள்.

மனவேதனை

ஒருமுறை சத்தியலட்சுமி உடல்நலமில்லாமல் இருப்பதை கேள்விப்பட்டு படப் பிடிப்பை ரத்து செய்துவிட்டு மருத்துவமனைக்கு வந்த சிவாஜி அருகில் இருந்து கவனித்துக்கொண்டார். அப்படிப்பட்ட பேத்தியின் கணவரான சுதாகரன் மீது ஹெராயின் வழக்கு, பாளையங்கோட்டை சிறை என்றிருப்பதால் பேத்திக்காக பரிதாபப்பட்டு மிகுந்த மன வேதனை அடைந்திருக்கிறார்.

ஜெ.யிடம் பேச மறுப்பு

ஜெயலலிதாகிட்ட நீங்க பேசினா, சுதாகரன் மேல் எந்த கெடுபிடியும் இருக்காது. போய் பேசிவிட்டு வாங்க என்று குடும்பத்தினர் சொன்னபோது மறுத்து விட்டார் சிவாஜி. தொலைபேசி மூல மாகவாவது பேசுங்கள் என்று சொல்லியும் நிராகரித்து விட்டார். பேத்தியின் நலனுக்காக ஜெ.விடம் பேசவும் தயக்கம். அதே சமயம் பேத்தியின் எதிர்காலத்தை நினைத்து வருத்தம் என சிரமப்பட்டு விட்டார் சிவாஜி.

நாளாக நாளாக உடல் பலகீனப்பட்டுக் கொண்டே வந்தது. புதுக்கோட்டையை அடுத்த குமாரவயல் பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மனும், ஊமத்துரையும் ஒளிந்திருந்தார்களாம். அதன் அடையாளமாக இங்கே ஊமத்துரைக்கு ஒரு கோவில் உள்ளது. அவ்வப்போது இங்கே வந்து செல்வது சிவாஜியின் வழக்கம். சிவாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை கேள்விப்பட்ட குமார வயல் மக்கள் ஊமத்துரை கோவில் வாசலில் மண்ணை எடுத்து பிரசாதமாக அனுப்பியிருக்கிறார்கள். இந்த மண்ணை சிவாஜியின் நெற்றியில் பூசச் சொல்லியிருக்கிறார்கள்.

சிறுநீர் பிரியவில்லை

இந்நிலையில் சிறுநீர் பிரியாமல் சிவாஜி ரொம்பவே அவஸ்தைப்பட கடந்த 12-ந்தேதி அப்பல்லோ மருத் துவமனையில் சேர்த்தனர். உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள், டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்த, சிவாஜியோ மறுத்துவிட்டார். ஏற்கனவே டயாலிசிஸ் சிகிச்சை பற்றி பாலாஜி தைரியப் படுத்தியும், டாக்டர்கள் சொல்லியும்கூட சிவாஜி சிகிச்சைக்கு மறுத்தாரென்றால், வலிக்குப் பயந்து மறுத்தாரா? அவருக்கா பயம்? மன வேதனையி லிருந்த சிவாஜி இனிமே இருந்து என்னாகப் போகுது? என்கிற சலிப்பில்தான் மறுத்திருக்கிறார்.

மாத்திரை, மருந்து மூலமாக ஏதாவது பண்ணுங்கள் என சிவாஜி சொல்லிவிட்டார். அவரின் விருப்பப்படியே சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.

வாழைப்பழத்துக்கு ஆசை

20-ந்தேதியன்று, நர்சிடம் எனக்கு வாழைப்பழம் வேணும் என கேட்டிருக்கிறார் சிவாஜி. வாழைப்பழம் சாப்பிடக்கூடாதே என நர்ஸ் மறுத்துவிடவே நர்சிடம் கோபித்து சண்டை போட்டிருக்கிறார். அவரை சமாதானப் படுத்துவதற்காக இரண்டு பிஸ்கட்டுகளை கொடுத்திருக்கிறார் நர்ஸ். ஆனால் வாழைப்பழம்தான் வேணும் என குழந்தை மாதிரி முரண்டு பண்ணி விட்டு பிஸ்கெட்டை சாப்பிடவேயில்லை.

மூச்சு நின்றது

21-ந்தேதி உடல்நிலை ரொம்பவே மோசமாக... சுவிட்சர்லாந்தில் ஆயிரம் பொய்சொல்லி படப்பிடிப்பில் இருந்த பிரபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், கமலா அம்மாள், மகள் சாந்தி ஆகியோர் மருத்துவமனையில் ரொம்பவே பதட்டத்தோடு இருந்தனர். தன் மகள் சாந்தியிடம் உடம்பு ரொம்ப வலிக்குதும்மா எனச் சொல்லிவிட்டு தூக்கத்தில் ஆழ்ந்தார். அதோடு உயிர் பிரிந்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 1:06 am

நினைவலைகள் (இமயம் பற்றி பிரபலங்கள்)

நேரு„- பாரதத்தின் புகழுக்காக பாடுபட்டவர்.

இந்திராகாந்தி„-கலையுலக கல்தூண்.

காமராஜர்„- கப்பலோட்டிய தமிழனையும் கட்டபொம்மனையும் நம் கண் முன் மீண்டும் காண வைத்தவர் தம்பி கணேசன்.

ராஜாஜி = ராமாயணத்தில் பரதனைபற்றி படித்திருக்கிறேன். ஆனால் சிவாஜி சம்பூர்ண ராமாயணத்தில் பரதனாகவே மாறி விட்டார்.

பெரியார்„-சிவாஜி தம்பி, வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் பேசி பாத்திரத்துடன் இணைந்து விடும் நடிகர் திலகம் கணேசன் சிவாஜி கணேசன் என்ற பெயரோடு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.

அண்ணா„- கணேசன் அரும்பாக இருக்கும்போதே அது நல்ல மலராகும் என்று சொன்னவன் நான். திறமையால் புகழ் உச்சியில் இருப்பவர் தம்பி கணேசன்.

கலைஞர்„- சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன் 20 பக்க வசனத்தையும் (ராஜாராணி) படத்தில் ஒரே மூச்சில் ஒரே டேக்கில் நடிக்கும் சிம்மகுரல் கொண்ட ஒரே நடிகர் தம்பி கணேசன்

கிருபானந்த வாரியார்„ = வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் அள்ளித்தருவதில் உண்மை கொடை வள்ளல் சிவாஜி.

வி.கே.ராமசாமி„ தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களின் நடிப்பை பாராட்டுவதில் சிவாஜிக்கு ஈடு இணையே கிடையாது. அதுதான் சிவாஜியிடம் காணப்பட்ட சிறப்பு அம்சம்.

ஜெமினி கணேசன்„ = சிவாஜி நடித்த பராசக்தி படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்தேன். அவருடன் இணைந்து பெண்ணின் பெருமை என்ற படத்தில் முதன் முதலாக நடித்தேன். மொத்தம் பத்து பன்னிரெண்டு படங்களில் அவருடன் இணைந்து நடித்து இருக்கிறேன். அவரது நடிப்பை நானும், என்னுடைய நடிப்பை அவரும் பாராட்டி இருக்கிறோம்.

பாலசந்தர்„= சிவாஜியுடன் ஒரு படம் பண்ணும் வாய்ப்புதான் எனக்கு கிடைத்தது. அவர் டைரக்டர்களுக்கு மரியாதை கொடுப்பவர். காட்சி என்ன என்பதை சொல்- நடிக்கிறேன் என்பார். அப்படி பெரிய மரியாதை கொடுப்பார். பசும்பொன் பொன்முத்துராமலிங்க தேவரும் தேசியமும்- தெய்வீகமும் இரு கண் என்பார். அதை சிவாஜி கடைபிடித்து வந்தார்.

பாரதிராஜா„ முதல் மரியாதை படத்தில் நடித்தவருக்கு இறுதி மரியாதை செய்யும் துர்ப்பாக்கிய நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறேன். மண்ணின் மக்களோடு, கலாச்சாரத்தோடு 50 ஆண்டுகளுக்கு மேல் சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்த நிகரில்லா இமயம். அவர் கலை உலக மாமேதை. இந்தியாவுக்கு 2 இமயம் என்றால் ஒன்று தமிழ்நாட்டில் இருந்தது. இன்று நாங்கள் உண்ணுகின்ற உணவு, சுவாசிக்கின்ற காற்று சிவாஜி தந்தது. அவரது இழப்பு தமிழுக்கு ஏற்பட்ட இழப்பு. உலக கலைஞர்களுக்கு ஏற்பட்ட இழப்பு. அவர் விழுதுவிட்டு பரந்த ஒரே ஆலமரம். அது சாய்ந்துவிட்டது.

வைரமுத்து„- சூரியனின் கதிர்வீச்சு உலகில் விழுவதுபோல, சிவாஜியின் கதிர்வீச்சு திரையுலகில் விழுந்து உள்ளது. அவர் நடித்த முதல்மரியாதை படத்துக்கு நான் பாட்டு எழுதினேன். அதற்கு எனக்கு முதன்முதலாக தேசிய விருது கிடைத்தது. அதை அவருக்கே சமர்ப்பணம் செய்வதாக அப்போதே கூறினேன். சிங்கத்தின் பாலை தங்க கிண்ணத்தில்தான் வைப்பார்கள். சிவாஜியே ஒரு சிங்கம். அந்த சிங்கத்துக்கு என்ன செய்யப் போகிறோம்? அவருக்கு தனி இடம் ஒதுக்கி இறுதி சடங்கு செய்ய வேண்டும்.

ரஜினி„-1952-ல் பராசக்தியில் தூங்கி எழுவது போல் (முதல் காட்சி) ஒரு சிங்கம் எழுந்தது. அதன் கர்ஜனை இன்னும் கேட்கிறது. என்றும் கேட்கும்.

கமல்„- சரித்திரத்துக்கு கி.மு. கி.பி. என்பது போல் சினிமா உலக சரித்திரத்திற்கு சிவாஜிக்கு முன் பின் என்று சொல்லும் அளவிற்கு ஒப்பற்ற நடிகர்.

விஜயகாந்த்„- சிவாஜி சார் நடிப்பின் இமயம். அவரைப்போல் ஒரு நடிகர் இனிமேல் பிறக்கப் போவதில்லை. நாடே போற்றும் ஒரு நல்ல கலைஞன் என்பதற்கு இன்றைக்கு திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய கூட்டமே சான்று.

சரத்குமார்„- நவரசங்களையும் நடிப்பில் கொண்டு வந்த ஒரே நடிகர் சிவாஜி. அவர்களின் புகழ் இந்த பூவுலகம் இருக்கும் மட்டும் வாழும். அவரது புகழை ஒப்பிட்டுக்கூற வார்த்தைகளே இல்லை.

கன்னட நடிகர் ராஜ;குமார்„- இப்போது நடப்பது கலியுகம். இனி நடக்கப்போவது சிவாஜி யுகம். நடிகர் திலகமான அவர் நம் நெஞ்சில் எல்லாம் திலகம் வைத்திருக்கிறார். அந்த திலகம் என்றும் அழியாது.

சத்யராஜ;„ சினிமாவில் நான் நடிக்க வந்ததற்கு காரணமே சிவாஜிதான். நான் இன்று நடிக்கிறேன் என்றால் அதெல்லாம் சிவாஜியை பார்த்து கற்றுக்கொண்டதுதான். சிவாஜியுடன் சேர்ந்து சில படங்களில் வில்லனாகவும், சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறேன். அவர் ஒரு உலக மகா நடிகர். அவரது நடிப்புக்கு ஈடு இணையே கிடையாது

சிவகுமார்„ நான் 1957-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். ஒரு ஓவியனாக வந்த நான் நடிகராக ஆனேன். சிவாஜியை நான் கடைசியாக மலேசியா வாசுதேவன் இல்ல திருமணத் தில் சந்தித்தேன். அவரை பார்த்ததும் இருந்த இருக்கையைவிட்டு எழுந்து அடுத்த இருக் கையில் அமர்ந்தேன். அதை கவனித்த சிவாஜி டேய் எங்கே போறே, சும்மா உட்காருடா என்று கூறினார். நடிப்பில் அவர் இமயம்.

பாக்யராஜ;„ சிவாஜி காலத்தில் நாம் வாழ்ந்ததே பெரிய விஷயம். அவர் தொழில் பக்தி, அக்கறை கொண்டவர். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். தாவணி கனவுகள் படப்பிடிப்புக்கு காலை 7.30 மணிக்கு வரச் சொல்லி இருந்தேன். அவர் வருவதற்கு முன் காமிராவை ஸ்டார்ட் செய்து வேறு சில காட்சி எடுத்தேன். 7.30 மணிக்கு வந்த சிவாஜி அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 7.30 மணிக்குத்தானே வரச்சொன்னீர்கள். அதற்கு முன் படப்பிடிப்பு தொடங்கிவிட்டால் நான் தாமதமாக வந்ததாகிவிடாதா? என்றார். மறுநாள் எத்தனை மணிக்கு வரவேண்டும் என்று கேட்டார். காலை 7.30 மணிக்கு வாருங்கள் என்றேன். அவர் 7.15 மணிக்கே வந்துவிட்டார். எனக்கு முன்னால் வந்திருந்த அவரை பார்த்தேன். அவர் என்னிடம் இன்று நீ தாமதமாகி வந்தாய் என்றாகிவிடும் என்றார்.

பார்த்திபன்„ சினிமாவை நேசிப்பதன் மூலமாகவே அவரது ஆத்மா சாந்தி அடையும். அந்த ஆத்மா சாந்தி அடையட்டும்.

ஸ்ரீகாந்த்„ மற்றவர்கள் நடிக்கும்போது சிவாஜி எதிரே இருந்து கவனிப்பார். அவர் களை ஊக்கப்படுத்துவார். உடன் நடிப்பவர்கள் தவறு செய்து விடக்கூடாது என்பதில் சிவாஜி கவனமாக இருப்பார். அவரிடம் கற்க வேண்டியது நிறைய உள்ளது. சிவாஜியுடன் நான் அவரது மகன்போல பழகி இருக்கிறேன். சினிமாவை சீர்திருத்த
இதே சிவாஜி மீண்டும் சிவாஜியாக பிறக்க வேண்டும்.

சோ„-சிவாஜிக்கு எம்.பி. பதவி கொடுத்தற்காக இந்திராகாந்தியை பாராட்டினார்கள். அது அவசியம் இல்லை. பரீட்சையில் 100 மார்க் பெற்றால் மாணவனை பாராட்டுகிறோம். ஆசிரியை பாராட்ட வேண்டியது தேவையில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 1:07 am

திருச்சியும் சிவாஜியும்

சிவாஜி சிறுவயதில் நாடக நடிகராக இருந்தபோது திருச்சியில் தங்கி இருந்து தான் தனது கலையுலக பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவில் பெருந்தலைவர் காமராஜர் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை சிவாஜியால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி நகராட்சியாக இருந்த போது மா.பாலகிருஷ்ணன் நகராட்சி தலைவராக 1986 முதல் 90 வரை இருந்தார். இந்த கால கட்டத்தில் தான் மேல்சபை எம்.பியாக இருந்த சிவாஜிக்கு திருச்சி நகராட்சி சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அப்போது தான் சிவாஜி திருச்சிக்கு வந்து மன்றம் அளித்த வரவேற்பில் கலந்து கொண்டு காமராஜர் சிலையை திறந்து வைத்தார். சிவாஜி திறந்த இந்த சிலை தான் திருச்சியின் முதல் காமராஜர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.
மலரும் நினைவுகள்

தினகரன் நிறுவனர் முன்னாள் அமைச்சர் அமரர் கே.பி.கந்தசாமி அவர்களை நடிகர் திலகம் சிவாஜி மாப்பிள்ளை என்றுதான் அன்புடன் அழைப்பார். மாப்பிள்ளை தங்ககம்பி என்று சிவாஜி மகிழ்ச்சியுடன் கூறி பெருமைப்பட்டுக் கொள்வார்.

தனது மன்ற ரசிகர்களை சிவாஜி பிள்ளைகளே என்று தான் அழைப்பார். மன்ற ரசிகர்கள் கை கொடுங்கள் என்ற கையை நீட்டினால் சிவாஜி சிரித்து கொண்டே என் கையை எப்படியப்பா தரமுடியும்
என்று கேட்பார்.

பெருந்தலைவர் காமராஜர் மீது அபார பக்தி கொண்டிருந்த சிவாஜி தனது பேச்சை தொடங்கும் முன் வாழ்க நாடு, வாழ்க மக்கள் வாழ்க என் அருமை தலைவர் காமராஜர் நாமம் என்றுதான் ஆரம்பிப்பார்.

சிவாஜி திருச்சியில் அதிகம் தங்கிய ஓட்டல் ஆஷ்பி ஓட்டல் ஆகும் (இங்குதான் காமராஜர், தங்குவார்)

வீரபாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன், வ.உ.சிதம்பரம் பிள்ளை என்றால் இன்றைய இளைஞர்களுக்கு சிவாஜி முகம்தான் பளிச்சென தெரியும். அந்த அளவு கதாபாத்திரத்துடன் ஒன்றிபோய் விடுவார் சிவாஜி.

தனக்கு ஆங்கிலத்தில் அதிக புலமை இல்லையே, (அதிகம் படிக்க முடியாமற் போய்விட்டதே) என்று அடிக்கடி நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டுக் கொள்வார்.

போளூரில் சிவாஜி

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி, கடந்த 1948-ம் ஆண்டில் போளூரில் தங்கியிருந்து நாடகங்களில் நடித்து உள்ளார். சக்தி நாடகசபா மூலம் நடைபெற்ற நாடகங்களில் நடித்த அவர்தினமும் இங்குள்ள சம்பத்கிரி மலையில் உள்ள நரசிம்ம சாமி கோவி லுக்கு சென்று சாமி கும்பிட்டு வருவார். 1978-ல் சம்பத்கிரி மலையில் கோவில் திருப்பணிக்காக வியாட்நாம் வீடு நாடகம் மூலம் வசூலான தொகை ரூ.10ஆயிரத்தை கொடுத்தார். சிவாஜிக்கு முதலில் மாரடைப்பு ஏற்பட்டு மலேசியாவில் சிகிச்சை பெற்றபோது இக்கோவில் பிரசாதம் அவருக்கு அனுப்பப்பட்டதாக அவருடைய போளூர் நண்பர்கள் தெரிவித்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 1:25 am

பிரபலங்களுடன் நடிப்பு சக்கரவர்த்தி


ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேருவுடன் சிவாஜி


பாபு ராஜேந்திரபிரசாத் - சிவாஜி


தத்துவ ஞானி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுடன் சிவாஜி


லால்பகதூர் சாஸ்திரியுடன் சிவாஜி


Last edited by சிவா on Fri Feb 06, 2009 1:32 am; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum