ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம்

Post by Powenraj on Sat Dec 15, 2012 12:45 pm

கௌதம் மேனனின் காதல் கதைகள் வரிசையில் இன்னொரு படம் நீ.எ.பொ.வ. 2வது படிக்கிறப்ப ஃப்ரண்டாகின்றனர் ஜீவாவும், சமந்தாவும். சண்டைபோடுகின்றனர். பிரிகின்றனர். 10வது படிக்கும் போது மீண்டும் ஒரே ஸ்கூல். பழைய 'பகை'யை மறந்து மீண்டும் நட்பாகின்றனர். 11வது வரைக்கும் தொடர்கிறது. மறுபடி சண்டை பிரிகின்றனர்.
:-
பல கல்லூரிகள் கலந்து கொள்ளும் விழாவில் மீண்டும் சந்திப்பு. நெருக்கம். காதலர்களாகின்றனர். கல்லூரி முடிந்தும் தொடர்கிறது. நெருக்கமான காதலர்கள். மீண்டும் சண்டை.பிரவு. பல வருடங்கள் கழித்து ஜீவா சமந்தாவைத்தேடி வருகிறார்.ஒரு கடலோர சுனாமி கிராமத்திற்கு. பத்து நாள் காத்திருக்கிறார். சமந்தா பேசட்டும் என.
:-
பேசும்போது மீண்டும் சண்டை. பிரிவு. சில மாதங்கள் கழித்து சென்னையில் சந்திக்கின்றனர். ஜீவா தனக்கு அடுத்த மாதம் கல்யாணம் என்கிறார். கல்யாணம் ஆச்சா இல்லையானா முடிஞ்சா யூகிச்சுக்கோங்க.
:-
முதலில் ப்ளஸ் பாயிண்டுகள். சமந்தா. ஆமாம். அழகின் மொத்த உருவமாய் இருக்கிறார். அதுதெரிந்ததுதான். தெரியாதது அவரின் நடிப்புத்திறமை. பத்தாவது படிக்கும் பொண்ணாய் அவர் வரும் எபிசோட் இருக்கே. அடடா. அப்படியே உருவத்தில் பொருந்துவதுமட்டுமில்லை. அந்த வயது பெண்ணிற்கான எல்லையற்ற உற்சாகம். துறுதுறுவென அலைபாயும் கண்கள், அதில் ஒளிந்திருக்கும் குதுகலாமான சந்தோசச் சிரிப்பு; அந்த வயதில் தனக்கு பிடித்தவன் ஒரு வார்த்தை பேசிவிட்டாலே வரும் எல்லையற்ற சந்தோசத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கும் அழகு இருக்கே. அது ஒரு தனிக் கவிதை.
:-
ஆயிரம் உணர்வுகளை நொடிக்கு நொடி மாறும் முகபாவங்களில், கண்ணசைவில், குரல் கெஞ்சலில், கொஞ்சலில் என அவர் காட்டியிருக்கும் ரேஞ்ச் தமிழ் நடிகைகளுக்கு ரொம்ப புதுசு. பின்னர் 24 வயதாய் அவர் காட்டியிருக்கும் மெச்சூரிட்டியும் அசத்தல்.சத்தியமாய் சமந்தாவிடம் இதை எதிர்பார்க்கவேயில்லை.
:-
இரண்டாவது ப்ளஸ் பாயிண்ட்.கௌதம் மேனன் காதலர்களுக்கிடையே வரும் நுணுக்கமான சின்னச்சிறு சண்டைகளை அப்படியே கண்முன் நிறுத்துவது. பல இடங்களில் அட நம்ம லைஃல நாமளும் இதெல்லாம் பேசிருக்கோமே..கேட்டுருக்கோமே என்ற உணர்வை கொண்டுவந்துவிடுகிறார்
.:-
உதாரணங்கள் இவனே தன் உலகம்என சுத்திச்சுத்தி வரும் சமந்தா ஜீவா தன்னை அவாய்ட்பண்ணுகிறான் என உணரும் போது வெளிப்படும் கோபமும்,அந்த வசனங்களும். 'நானும் நம்பர் ஒண்ணாத்தான் இருந்தேன் உன்னைப் பார்க்கிற வரை. படிப்புல. விளையாட்டுல. காம்படிசன்ல எல்லாத்துலயும். இப்பல்லாம் எனக்கு ப்ரென்ட்ஸ் கூட இல்லை. யாரும் என்னைக் கூப்பிடிறது கூட இல்லை. வரமாட்டேன்னு. நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.நீதான் முக்கியம்னு' என அவர் கோபத்தில் வெடிப்பது நுணுக்கமான கவனிப்பு.
:-
அதே போல கிராமததில் தன்னை தேடி வந்த ஜீவாவிடம் சமந்தா பேசும் வசனங்களிலும் கூர்மை. இது கௌதம் மேனனின் பலம். ஆனால் இது மட்டுமே படத்தில் இருப்பதுதான் பலவீனம். இந்த கூர்மையான வசனங்களுக்கேற்ற ஆழமான காட்சிகள் இல்லை. மாறாய் எல்லாவற்றையுமே வசனங்களிலேயே வழவழ கொழகொழ என, இதற்கு முன்பும் பின்பும், பக்கம் பக்கமாய்பேசுகிறார்கள்.
காட்சிகள் மிகவும் செயற்கையாய், நாடகத்தனமாய் இருக்கின்றன.கதையில் வரும் ஒவ்வொரு சாப்டரின் முடிவிலும் வரும் திருப்பமான இருவருக்குமான சண்டைகள் மிகச் சாதாரண காட்சிகளாய் இருக்கின்றன.
:-
ஜீவாவின் குடும்பத்து உறுப்பினர்கள் அணைவருமே ஒரு செயற்கைத்தனமான நடிப்பு, வசனம், பாவணை என வெளிப்படுத்துகின்றனர். அதிலும் அவரது அப்பா பாத்திரத்திற்கு ஒருவர் டப்பிங் குடுத்திருக்காரா, தெலுங்குப்பட வில்லன் மாதிரி. முடியல சார்.
பல மொக்கை காட்சிகளை சந்தானமே கலாய்த்து கொஞ்சம் ஆடியன்ஸ் கமெண்டுகளை குறைக்கிறார். ஆனால் அவரை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா காதல் ட்ராக்கெல்லாம்.. என்னத்துக்கு??
:-
இளையராஜா ஏதோ புதிதாய் வாய்ப்பு தேடும் இசையமைப்பாளரைப் போல ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு பாடல் என போட்டிருப்பது அவரைக் கௌரவப்படுத்துவதாய் இல்லை.படத்தில ஆக்சுவல எத்தனை பாடல்கள் சார்? 20? 25? ஏன் இப்படி?
:-
ஜீவாகூட படம் முழுவதும் 14வயதிலிருந்து 26 வயது வரை ஒரே மாதிரி இருக்கிறார். எப்போதுமே ஒரு வித டல்லாகவே பேசுகிறார். இன்னமும் நண்பனில் வரும் ஏழை மாணவனிலிருந்து வெளியில் வரவில்லையா? சமந்தா காட்டிய வேரியஷனில் ஒரு பத்து சதவீசம் கூட இவர் காட்டவில்லை.
:-
இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
பொன்னும் இல்லை. வசந்தமும்இல்லை. மீண்டும் ஒரு முறை கௌதம் மேனனின் தீவிர ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.
:-
நன்றி Soundcameraction
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம்

Post by பாலாஜி on Sat Dec 15, 2012 12:47 pm

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
பொன்னும் இல்லை. வசந்தமும்இல்லை. மீண்டும் ஒரு முறை கௌதம் மேனனின் தீவிர ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.

சோகம் சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம்

Post by அருண் on Sat Dec 15, 2012 1:06 pm

மிகுந்த எதிர் பார்ப்புடன் போனோம் .அதுவும் செகண்ட் ஷோ விற்கு மொக்கையிலும் மொக்கை யான படம் இதுவரை பர்த்துதில்லை. காசு கொடுத்து சன் மியூசிக் பார்த்தது போல் இருந்தது.!
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

நீதானே என் பொன் வசந்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi on Sat Dec 15, 2012 1:26 pm

நீதானே என் பொன் வசந்தம் !

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

இயக்கம் : கெளதம் வாசுதேவ் மேனன் ,
நடிப்பு : ஜீவா ,சமந்தா.

.வருண் ,நித்யா காதல் ஜோடியின் ஊடல் காதல் கதை .சின்ன சின்ன சண்டையை பேசி பெரிது படுத்தாமல் பேசாமல் முத்தம் கொடுத்து சரி செய்து விடலாம் .என்ற ஒரு வரி கதையை ஒரு படமாக வழங்கி உள்ளார் .ஊடலை கூடலால் சரி செய்யலாம் என்பதே கதை.பள்ளிப் பருவத்தில் காதல் பிறகு சண்டை பிரிவு .சில வருடங்கள் கழித்து அனைத்து கல்லூரி விழாவில் சந்திப்பு மீண்டும் காதல் . மீண்டும் சண்டை பிரிவு .சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திப்பு மீண்டும் காதல் இதுதான் கதை .படத்தின் இறுதிக் காட்சிகளை குறைத்து விடுவது நல்லது .நேற்று மதுரையில் திரையரங்கில் ஒரு ரசிகர் பொறுக்க முடியாமல் படத்தை முடிங்கடா என்று கத்தி விட்டார் .

படம் பார்ப்பவர்களுக்கு காதலித்த அவரவர் துணை நினைவிற்கு வருவது உண்மை .அதில் இயக்குனர் வெற்றி பெற்று உள்ளார் .பாராட்டுக்கள் காதல் மலரும் நினைவுகளை மலர்விக்கின்றது .சிறு சண்டையின் காரணமாக காதலை இழந்தவர்களுக்கு மன ஆறுதல் தரும் படம்.
ஜீவாவும் சமந்தாவும் மிக நன்றாக நடித்து உள்ளனர் .பாராட்டுக்கள் .சமந்தா அழகு தேவதையாய் வலம் வந்தாலும் .பள்ளி மாணவியாய், கல்லூரி மாணவியாய், பள்ளி ஆசிரியராய் பல நிலைகளில் மிக இயல்பாக நன்றாக நடித்து உள்ளார் .சமந்தா மற்றொரு ரேவதியாக வலம் வருவார் .

காதல் காட்சிகள் மிக இயல்பாக உள்ளது .காதல் காட்சிகள் இயக்குவதில் வல்லவர் என்பதை மீண்டும் நிருபித்து உள்ளார் இயக்குனர் .
பள்ளிப் பருவத்தில் வந்த பக்குமில்லாத காதல் காரணமாக வருண் காதலி நித்யா பள்ளியின் மாணவிகள் தலைவியாக இருப்பதால் அரங்கம் தொடர்பாக வேலை உள்ளது .நான் வர நேரம் ஆகும் என்கிறார் .பள்ளி தலைவனுடன் சிரித்துப் பேசியதை தவறாக புரிந்துக் கொண்ட வருண் உடனே என்னுடன் வர முடியுமா ? முடியாதா ? என்று மிரட்டுகிறான் .முடியாது என்று சொல்ல ,சண்டை, பிரிவு .பல வருடங்கள் கழித்து அனைத்து கல்லூரி விழாவில் "நினைவெல்லாம் நித்யா "படத்தில் வரும் பாடலான "நீதானே என் பொன் வசந்தம்"என்ற பாடலை மிக நன்றாகப் பாடி கை தட்டல் பெறுகின்றான் வருண் .நித்யாவும் பாராடுகின்றாள் .நித்யா பேச்சுப்போட்டியில் சிறப்பாகப் பேசி முதல் பரிசு பெறுகிறாள் .வருண் கை தட்டி பாராட்டுகிறான் .திரும்பவும் காதல் .இருவரும் காரில் சுற்றுகின்றனர் .திகட்ட திகட்ட காதலிக்கின்றனர் .

வருண் அண்ணனுக்கு பெண் கேட்டு போன இடத்தில அப்பாவிற்கு நேர்ந்த அவமானம் கண்டு ,சமுதாயத்தில் நல்ல நிலை அடைய வேண்டும் என்று குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு,பொறுப்பு வந்து படிக்கின்றான் .நுழைவுத் தேர்விற்கு பயிற்சி எடுத்து வெற்றிப் பெற்று எம் .பி .எ படிக்க கேரளா கோழிக்கோடு செல்வதாக காதலி நித்யாவிடம் சொல்கிறான் .அவளோ நானும் வருகிறேன் .உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது .என்கிறாள் .அவன் நீ வேண்டாம் நீ அங்கு வந்து இருக்க முடியாது .நான் கல்லூரியில் தங்குவேன் என்கிறான் .மீண்டும் சண்டை .பல வருடங்கள் பிரிவு .

வருணுக்கு படிப்பு முடித்து நல்ல வேலை கிடைத்து விடுகின்றது .திரும்பவும் நித்யாவை தோழி மூலம் நித்யா இருக்கும் இடம் தேடி செல்கிறான். நித்யா மணப்பாடு என்ற ஊரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆசிரியராகப் பணி புரிகிறாள் .வருண் நித்தியாவை தன்னுடன் வரச் சொல்கிறான் .அன்று இருந்த நித்யா நான் இல்லை தற்போது வேறு நித்யா என்கிறாள் .நித்யா வர மறுத்து விடுகிறாள் .உதடு மறுத்த போதும் உள்ளம் மறுக்காமல் தவிக்கிறாள் .வருணும் தவிக்கிறான் .வருணுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கின்றது .நித்யா நேரில் வந்து வாழ்த்தி விட்டு சென்றாலும் மனம் வருந்தி வாடுகின்றாள் .செல்லிடப் பேசியில் அழைத்து சந்தித்து திரும்பவும் பேசி சண்டை நடக்கின்றது .இந்த காட்சியில்தான் படம் பார்பவர்களுக்கு எரிச்சல் வந்து விடுகின்றது .கடைசியில் வருண் தந்தை இவர்கள் காதலை அறிந்து வருண் திருமணத்தை நிறுத்து விட்டு நித்யாவிடம் வாழச் சொல்கிறார் .இறுதியில் இருவரும் இணைகின்றனர்.

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் அதிகம் எதிர் பார்த்து சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம் .ஓகோ என்று இல்லாமல் ஒரு முறை பார்க்கலாம் என்ற ரகத்தில் உள்ளது .சந்தானம் படத்தில் நகைச்சுவைக்கு வந்து போகின்றார் .சிரிக்க வைக்கின்றார் .நீண்ட நாட்களுக்குப் பின் மேஸ்ட்ரோ, சிம்பொனி இளைராஜாவின் பாடல்களும் ,பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்து உள்ளது . சண்டை போடாமல் காதலிக்க வேண்டும் என்று காதலர்களுக்கு உணர்த்தும் படம் .

avatar
eraeravi
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1684
மதிப்பீடுகள் : 177

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம்

Post by பாலாஜி on Sat Dec 15, 2012 1:39 pm

விமர்சனத்திற்கு நன்றி சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம்

Post by eraeravi on Sat Dec 15, 2012 1:53 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


avatar
eraeravi
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1684
மதிப்பீடுகள் : 177

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம்

Post by றினா on Sat Dec 15, 2012 7:24 pm

இன்னும் படத்தைப் பார்க்கவில்லை.

அதற்கப்புறம்தான் இதைப் பற்றிக் கூறவேண்டும்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம்

Post by றினா on Sat Dec 15, 2012 7:36 pm

பகிர்விற்கு நன்றிகள். நான் இன்னும் பார்க்கவில்லை.

இத்திரைப்படத்திற்கு இருவர் விமர்சனம் எழுதியுள்ளார்கள் நமது தளத்தில்.

ஒன்றாக இணைக்கலாமே..? நடத்துனர்கள்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம்

Post by யினியவன் on Sat Dec 15, 2012 8:19 pm

இணைத்துவிட்டேன் றினா இரண்டு பொன் வசந்தங்களையும்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம்

Post by ரா.ரா3275 on Sat Dec 15, 2012 9:03 pm

விமர்சனத்திற்கு நன்றி ...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம்

Post by றினா on Sat Dec 15, 2012 9:50 pm

@யினியவன் wrote:இணைத்துவிட்டேன் றினா இரண்டு பொன் வசந்தங்களையும்

நன்றி யினியவன்
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: நீ தானே என் பொன்வசந்தம்-திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum