ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சுட சுட செய்திகள்...அச்சலா

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

View previous topic View next topic Go down

best சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down


best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 10, 2012 8:02 am

மருத்துமனையில் மண்டேலா அனுமதி

ஜோஹன்ஸ்பர்க்: தென்ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் அவதியுற்ற நெல்சன்மண்டேலா (94). நேற்று ‌ஜோஹன்ஸ்பெர்க் நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்றில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனினும் தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நெல்சன் மண்டேலா உடல்நிலை குறித்து அதிபர் ஜேக்கப் ஜூமா மருத்துவமனை நிர்வாகத்தினை தொடர்ந்து கேட்டு அறிந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்தார்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 10, 2012 8:04 am

சீனாவில் படகுகள் மூழ்கியதில் 17 பேர் மாயம்

பீஜிங்: சீனாவில் இரண்டு படகுகள் மூழ்கியதில் 17 பேர் மாயமானார்கள். சீனாவின் ஷாண்டாக் மாகாணத்தில் மீன்பிடி படகு ஒன்று மூழ்கியது. இதில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டார். 9 பேரை காணவில்லை. இதனையடுத்து 11 கப்பல்கள் மூலம் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஹூனான் மாகாணத்தில் பெரிய படகு மூழ்கியதில் 8 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by றினா on Mon Dec 10, 2012 1:54 pm

அன்றாடச் செய்திகள், நன்றாக இருக்கிறது.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ஜாஹீதாபானு on Mon Dec 10, 2012 2:03 pm

பகிர்வுக்கு நன்றி அருமையிருக்குavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Muthumohamed on Mon Dec 10, 2012 2:43 pm

சூடாக உள்ளது செய்திகள்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 10, 2012 6:42 pm

@றினா wrote:அன்றாடச் செய்திகள், நன்றாக இருக்கிறது.
:வணக்கம்: மகிழ்ச்சி
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 10, 2012 6:42 pm

@Muthumohamed wrote:சூடாக உள்ளது செய்திகள்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 10, 2012 6:43 pm

@ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Ahanya on Mon Dec 10, 2012 6:47 pm

நல்ல பகிர்வு அச்சலா அம்மா.
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 10, 2012 6:49 pm

@Ahanya wrote:நல்ல பகிர்வு அச்சலா அம்மா.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Tue Dec 11, 2012 12:58 am

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: 7.2 ரிக்டர் ஆக பதிவு


புவியியல் அமைப்பின் படி எரிமலை வெடிப்பும், நிலநடுக்கமும் அடிக்கடி ஏற்படும் 'நெருப்பு வளையம்' பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று இந்தோனேஷியா. இந்தோனேஷியாவின் சவும்லாகி நகரை மையமாக கொண்டு, பூமியின் அடியில் 155 கி.மீட்டர் ஆழத்தில் இன்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தையொட்டி சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்பு ஏற்படவில்லை. சேதம் குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை.

-மாலை மலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Tue Dec 11, 2012 12:59 am

சுற்றுச்சூழலை பாதிக்கும் மலைப்பாம்புகளை பிடிக்கும் போட்டி: அமெரிக்க புளோரிடா நிர்வாகம் அறிவிப்பு


அமெரிக்காவில் புளோரிடா மகாண காடுகளில் பர்மீய வகை மலைப்பாம்புகள் அதிகளவில் இருக்கின்றன. இவை அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை வேட்டையாடி சுற்றுச்சூழலை பெரிதளவில் பாதித்து வருகின்றன. இதன் எண்ணிக்கை குறைக்க புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதற்காக பர்மீயவகை மலைப்பாம்புகளை (பைத்தான்) பிடிக்க ஜனவரி மாதத்தில் ஒரு போட்டி ஒன்றை அது அறிவித்துள்ளது. இதில் அதிகம் பாம்புகளை கொல்லுபவர்களுக்கு 1500 டாலர் பரிசும், நீளமான பாம்பை பிடிப்பவருக்கு 1000 டாலர் பரிசும் அளிக்கப்படும் என்று அந்த நிர்வாகம் அறிவித்துள்ளது. மலைப்பாம்புகளை ரோட்டில் கொல்வது அனுமதிக்கப்படமாட்டாது என்று அது அறிவித்துள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்பவர்கள் 25 டாலர் பதிவு கட்டணமாக செலுத்தவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
-மாலை மலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Tue Dec 11, 2012 1:00 am

2014 பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காங்கிரசின் தலைமையை ஏற்பார்: காங்கிரஸ் கட்சி சூசக அறிவிப்புவரும் 2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நிறுத்தப்படுவார் என்று காங்கிரஸ் கட்சி சூசகமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பி.சி.சாக்கோ கூறியதாவது:-

2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி அக்கட்சியின் எம்பிக்கள் முடிவு செய்வார்கள். 2014-ம் ஆண்டு தேர்தல் வரை பிரதமர் மன்மோகன் சிங் தலைமை பொறுப்பில் இருப்பார். இந்த ஆட்சி 2014-ம் ஆண்டு தொடர்ந்து நீடிக்கும். அதுவரை மன்மோகன் சிங் பிரதமராக இருப்பார்.

சோனியா காந்தியே கட்சியின் தலைவராக இருப்பார். கட்சியின் மூத்த தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று கட்சியின் முக்கிய பொறுப்புகளை ஏற்க ராகுல் ஒத்துக்கொண்டுள்ளார். அவர் கட்சியின் தலைமையை ஏற்க வேண்டுகோள்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், அவர் அதை விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தகுதியும் பொருத்தமும் உள்ளவர் என்றும், அதையே கட்சியின் மூத்த மற்றும் இளைய தலைவர்கள் வரவேற்கின்றனர் என்று உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-மாலை மலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Tue Dec 11, 2012 1:01 am

மோடி ஆட்சியில் ரூ. 1 லட்சம் கோடி ஊழல்: சோனியா குற்றச்சாட்டுகுஜராத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று குஜராத் மாநிலம் சித்தாபூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மோடி அரசு குறித்து பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை பார்க்கிறபோது, அவரது அரசு மக்களை தவறான கொள்கைகளை பின்பற்ற செய்வது தெரிகிறது. குஜராத்தில் 1 லட்சம் கோடிக்குமேல் ஊழல் நடந்துள்ளது என்று, மத்திய கணக்கு தணிக்கை துறையின் அறிக்கையை நாங்கள் பெற்று இருக்கிறோம்.

குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கையில், இங்கு 4.1/2 லட்சம் விவசாயிகள் மின்சார இணைப்பு இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். பழங்குடியின மக்கள் கல்வியில் பிந்தங்கியே உள்ளனர். மக்கள் இங்கு கடுமையான சட்டதிட்டத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.

சரியான முன்னேற்றத்தை குஜராத்தில் திரும்பவும் கொண்டுவரவேண்டும். இதற்கு நாம் கடுமையாக உழைக்கவேண்டும். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் மோடி அரசுக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலை மலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Tue Dec 11, 2012 1:05 am

இந்திய ராணுவத்தில் 66,000 பேர் பற்றாக்குறை: ஏ.கே. அந்தோணி தகவல்இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிக்கு எழுத்து மூலமாக பாதுகாப்பு மந்திரி ஏ.கே. அந்தோணி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

தரைப்படையில், 10 ஆயிரத்து 100 அலுவலர்களுக்கான பணியிடங்களும், அலுவலர் பதவிக்கு கீழான நிலையில் 32 ஆயிரத்து 431 பணியிடங்களும் காலியாக உள்ளன. கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி கப்பல் படையில் ஆயிரத்து 996 அலுவர்களுக்கான பணியிடங்களும், அலுவலர்களக்கு கீழான நிலையில் 14 ஆயிரத்து 310 பணியிடங்களும் காலியாக உள்ளன.

விமானப்படையில் 962 அலுவலர்களுக்கான பணியிடங்களும், அலுவலர்களுக்கு கீழான நிலையில் 7 ஆயிரம் பணியிடங்களும் காலியாக உள்ளன. இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதை ஊக்குவிப்பதற்காக, ஊடக பிரசாரங்களும், பேரணிகளும் நடத்தப்படுகின்றன.

ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் தேர்வு முறைகளில் உள்ள கண்டிப்பு, பணிச் சூழலில் உள்ள கிரமம், மற்ற பணிகளில் கிடைக்கும் வசதிகள் ஆகியவை இந்த ஆள் பற்றாக்குறைக்கான முக்கிய காரணிகளாக உள்ளன. தரைப்படையில் 10 ஆயிரத்து 81, கப்பல் படையில் 170, விமானப் படையில் 571 பேர் என இந்த ஆண்டில் மட்டும் 10 ஆயிரத்து 800 பேர், ஓய்வுகாலத்திற்கு முன்னரே ராணுவப் பணியில் இருந்து விலகியுள்ளனர்.

நாட்டில் உள்ள பல்வேறு ராணுவ பயிற்சி கழகங்களில் இருந்து 2010-ம் ஆண்டில் 9 ஆயிரம் வீரர்கள் பயிற்சிகளை முடித்து பணியில் சேர்த்துள்ளனர். இவ்வாறு பாதுகாப்பு மந்திரியின் பதிலில் கூறப்பட்டுள்ளது.

-மாலைமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Tue Dec 11, 2012 1:06 am

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை


கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எல்லை கடந்து மீன் பிடித்ததாகக் கூறி கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டடு வருகிறனர்.

கடந்த 3-ந்தேதி நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 40 பேர் 5 படகுகளில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 40 பேரையும் கைது செய்து இலங்கையில் உள்ள திரிகோண மலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அந்த கோர்ட்டு உத்தரவுப்படி அனைவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் 40 மீனவர்களும் இன்று பகல் 12 மணி அளவில் மீண்டும் திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்கள் தரப்பில் வாதாடிய வக்கீல், தமிழக மீனவர்கள் தவறுதலாக எல்லையை தாண்டிவிட்டதாகவும், அவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் வாதாடினார்.

இதையடுத்து 40 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்படட அனைவரும் நாளை அல்லது நாளை மறுநாள் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-மாலைமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Tue Dec 11, 2012 1:08 am

மதுரையில் நம்மை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது: மு.க.அழகிரி ஆவேச பேச்சு
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியனின் மகன் மருது பாண்டியன்-ஆர்த்தி திருமணம் இன்று மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள தயா மகாலில் நடந்தது. மத்திய மந்திரியும், தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். விழாவில் அவர் பேசியதாவது:-

இன்று மணவிழா காணும் மருதுபாண்டியனின் தந்தை மிசா பாண்டியன் என்மீதும் கழகத்தின் மீதும் மிகுந்த பற்றும், பாசமும் கொண்டவர். அவரது இல்ல விழாவை நடத்தி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மணமகன் மருதுபாண்டியனும், எனது மகன் துரை தயாநிதியும் நெருங்கிய நண்பர்கள்.

துரைதயாநிதிக்கு ஒரு வழக்கில் இன்று முன் ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை மணமகனுக்கு தெரிவித்தேன். அப்போது அவர் சந்தோசத்துடன் ஆனந்த கண்ணீர் வடித்தார். 1980-ல் முரசொலி பத்திரிகை பொறுப்பை ஏற்று நான் மதுரைக்கு வந்தேன். அப்போது இருந்தே மிசா பாண்டியன் என்னிடம் நம்பிக்கையுடனும், விசுவாசமாகவும் இருந்து வருகிறார்.

தி.மு.க. ஆட்சியில் இருந்த போது அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகளும் என்னிடம் பதவிகளை கேட்டு பெற்றார்கள். ஆட்சி மாறியவுடன் கட்சி நிர்வாகிகள் என்னை விட்டு விலகி சென்று விட்டனர். அந்த துரோகத்தை பற்றி கவலைப் படவில்லை. தி.மு.க.வில் இருந்து நடிகர் திலகம் சிவாஜிகணேசன் விலகியபோது எங்கிருந்தாலும் வாழ்க என்று அறிஞர் அண்ணா கூறினார். அதனையே நானும் கூறுகிறேன்.

என்னை விட்டு விலகி சென்றவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். பணமும், பதவியும் முக்கியமில்லை. பணத்தை கொண்டு நிம்மதியாக வாழ முடியாது. துரோகிகள் எங்கு சென்றாலும் புகழ் கிடைக்காது. நாம் தேர்தலில் கடுமையாக உழைத்து வீடு, வீடாக சென்று ஓட்டுகளை பெற்று இப்படிப்பட்டவர்களை வெற்றி பெறச் செய்திருக்கிறோம். பதவியில் உட்கார வைத்தவுடன் அவர்கள் மாமனார், மச்சான் மூலம் கிடைத்தது என்று சொல்லி திரிகிறார்கள்.

நமக்கு துரோகம் செய்தவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர்கள் எங்கும் போகட்டும். நம்மை விட்டு சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நம்மால் பதவியும், பொருளாளதார நிலையில் உயர்ந்தவர்களும் நம்மை விட்டு சென்ற துரோகத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை.

மதுரையில் என்றைக்கும் நாம் தான். நம்மை மீறி யாரும் நடை போட முடியாது. நாம் பெற்று கொடுக்காத பதவியா? பட்டமா? நாம் தேர்தலில் உழைத்து வெற்றி பெற்றவர்கள். இது அனைவருக்கும் தெரியும். அவர்களை இயற்கையே பார்த்து கொள்ளும். நம்மிடம் இருந்த போது ஜெயிக்க முடியாதவர்கள் நம்மை விட்டு சென்று ஜெயிக்க போகிறார்களா? அதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ் பாட்சா, முன்னாள் மேயர் தேன்மொழி, முன்னாள் துணைமேயர் மன்னன், நிர்வாகிகள் உதயகுமார், எம்.எல்ராஜ், தர்மலிங்கம், சின்னம்மாள், கவுன்சிலர்கள் கண்ணன், குடைவீடு அருண் குமார், நன்னா, பகுதி செயலாளர்கள் முபாராக் மந்திரி, கோபிநாதன், ரஜினி மன்ற பொறுப்பாளர் பால தம்புராஜ், வேளாண் வாரிய விற்பனைக்குழு முன்னாள் துணைத்தலைவர் பூக்கடை ராமச்சந்திரன், நிர்வாகிகள் பக்ருதின், செல்லூர் குரும்பன், ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை முடித்து கொண்டு மதுரை செல்லூரில் உள்ள முன்னாள் எம். எல்.ஏ. சவுந்திரபாண்டியன் வீட்டிற்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு சவுந்திர பாண்டியனின் தாயார் நாகம்மாளின் மறைவுக்கு குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தார். பின்னர் அவர் வெளியே வந்தபோது நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு திருமண விழாவில் பரபரப்பாக பேசி இருக்கிறீர்களே என்று கேட்டனர். அதற்கு இப்போது தான் விதை விதைத்துள்ளேன். பொறுத்து இருந்து பாருங்கள் என்று மு.க.அழகிரி கூறினார்.

மாலைமலர்..
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Muthumohamed on Tue Dec 11, 2012 1:14 am

அனைத்து செய்திகளும் சூப்பருங்க
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Tue Dec 11, 2012 12:37 pm

மக்களின் எண்ணங்களை கேட்க மோடிக்கு விருப்பமில்லை: ராகுல்

ஆமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் காங்., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல், அரசியலில் மகாத்மா காந்தி தான் எனது குரு. ஒரு சில நேரங்களில் அரசியலில் கடுமையான முடிவுகள் தேவைப்படுகின்றன. உங்களின் எண்ணங்களை கேட்க மோடிக்கு விருப்பமில்லை. குஜராத்தில் ஒரே ஒரு குரல் தான் கேட்கிறது. ஆனால் அது மக்களின் குரல் அல்ல என கூறினார்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Tue Dec 11, 2012 12:38 pm

அமளி; பார்லி., இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடில்லி: கேள்வி நேரத்தை ரத்து செய்யக்கூறி லோக்சபாவில் பா.ஜ., அமளி ஏற்பட்டதை தொடர்ந்து அவையை சபாநாயகர் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். இதேபோல், வால்மார்ட் விவகாரம், இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக எழுந்த அமளி காரணமாக ராஜ்யசபாவும் சுமார் அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவை மீண்டும் கூடிய போது, அமளி தொடர்ந்ததால் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Tue Dec 11, 2012 12:39 pm

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. கோர்ட் நிபந்தனையின்படியே ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Tue Dec 11, 2012 12:40 pm

ஸ்டாக்ஹோமில் நடந்த நோபல் பரிசு விழா

ஸ்‌டாக்ஹோம்:சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் இன்று நடந்த விழாவில் 2012ல் நோபல் விருது வென்றவர்களுக்கான பரிசு வழங்கும் விழா நடந்தது.இதில் 2012 ல் மருத்துவம், இலக்கியம் பொருளாதாரம் இயற்பியல் மற்றும் ரசாயனம் ஆகிய துறைகளில் சிறப்பு வாய்ந்தவர்களுக்கு நோபல் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.அவர்களுக்கு இன்று நடந்த விழாவில் சுவீடன் மன்னர் 16ஆம் கார்ல் குஸ்டப் பரிசுகளை வழங்கினார்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Tue Dec 11, 2012 12:41 pm

எனது முன்னேற்றத்துக்கு காரணம்...: முதல்வர் பேச்சு

சென்னை: எனது முன்னேற்றத்திற்கு கிறிஸ்தவ பள்ளிகளில் நான் பெற்ற கல்வியும் நற்பண்புகளும் தான் எனது முன்னேற்றத்துக்கு காரணம் என முதல்வர் ஜெயலலிதா பேசினார். அ.தி.மு.க., சார்பில் சென்னயில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார். பின்னர் அவர் பேசுகையில்,கிறிஸ்துமஸ் என்றவுடன் என் பள்ளிப்பருவம் தான் ஞாபகத்துக்கு வருகிறது. எனது முன்னேற்றத்திற்கு கிறிஸ்தவ பள்ளிகளில் நான் பெற்ற கல்வியும் நற்பண்புகளும் தான் எனது முன்னேற்றத்துக்கு காரணம். அப்போது நான் கற்று கொண்டவை தான் எனக்கு இன்றும் துணையாக இருக்கிறது. எந்தப் பொறுப்பையும் எளிதாக நிறைவேற்ற முடிகிறது. அந்தக்காலம் முதல் கிறிஸ்தவர்கள் மீதும், கிறிஸ்தவ மதத்தின் மீதும் எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது என்பதை தெரிவித்து கொள்வதில் பெருமைப்படுகிறேன் என கூறினார்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Tue Dec 11, 2012 12:50 pm

ஈராக் குழந்தை வயிற்றில் புற்றுநோய் கட்டி : சென்னை மருத்துவமனையில் அகற்றம்


சென்னை: ஈராக்கை சேர்ந்த, இரண்டு வயது பெண் குழந்தையின் வயிற்றில் இருந்த புற்றுநோய் கட்டியை, சென்னை, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி உள்ளனர்.

மத்திய ஈராக் பகுதியைச் சேர்ந்தவர் பிலால். இவரது இரண்டு வயது மகள் உம்னீர். இக்குழந்தைக்கு, நான்கு மாதங்களுக்கு முன், அடி வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. வயிறும், பலூன் போல் வீக்கம் அடைந்தது. மருத்துவ பரிசோதனையில், குழந்தையின் சிறுகுடலை சுற்றி, புற்றுநோய் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.
மேல்சிகிச்சைக்காக, குழந்தை, நவ., 16ம் தேதி, சென்னை, ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. பல்வேறு பரிசோதனைகளுக்கு பின், குழந்தையின் வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பதை மீண்டும் உறுதி செய்த மருத்துவர்கள், இம்மாதம் 25ம் தேதி, அறுவை சிகிச்சை மூலம், கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.

இதுகுறித்து, இம்மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகன் கூறியதாவது: குழந்தையின், புற்றுநோய் கட்டியை அகற்றும்போது, சிறுகுடலுக்கு எந்த சேதமும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். ஐந்து மணி நேர அறுவை சிகிச்சையில், இரண்டு கிலோ அளவு இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. தற்போது குழந்தை நலமாக உள்ளது. "மையோ பைப்ரோ மடோசிஸ்' எனப்படும் அரிய வகை புற்றுநோய், மீண்டும் வராமல் இருக்க, குழந்தைக்கு, ஆறு மாதங்கள் வரை, தொடர் பரிசோதனையுடன், மருந்து, மாத்திரைகள் தர பரிந்துரைந்துள்ளோம். இவ்வாறு பாலமுருகன் கூறினார்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Tue Dec 11, 2012 12:51 pm

ஆசிரியர்களை அழைத்து வர ரூ.500 வசூல்; சி.இ.ஓ.,க்கள் மும்முரம்


நாளை மறுநாள், சென்னையில் நடக்கும் பணி நியமன உத்தரவு வழங்கல் விழாவில் பங்கேற்க உள்ள ஆசிரியர்களிடம், வாகன செலவிற்காக, தலா, 500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பொறுப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 18 ஆயிரத்து, 382 ஆசிரியர்களுக்கு, சென்னையில், இம்மாதம், 13ம் தேதி நடக்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன உத்தரவுகளை வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள், மும்முரமாக நடந்து வருகின்றன.தேர்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும், சென்னைக்கு வர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும், 13ம் தேதி காலையில், சென்னையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர்களை அழைத்து வரும் பொறுப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், ஆசிரியர்களை, பஸ்கள் மூலம், சென்னைக்கு அழைத்து வர, சி.இ.ஓ.,க்கள் திட்டமிட்டுள்ளனர்.இந்த செலவிற்காக, ஒவ்வொரு ஆசிரியரிடமும், தலா, 500 ரூபாய் வசூலித்து வருகின்றனர். ஆசிரியருடன், துணைக்கு யாரும் வரக்கூடாது எனவும், விழா நடக்கும் நாளன்று காலை சிற்றுண்டி, சாப்பாட்டு செலவை, சம்பந்தபட்ட ஆசிரியர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத, சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஆசிரியர்கள், தேவையில்லாமல், சென்னைக்கு வந்து அலைய வேண்டாம் என்பதற்காகத் தான், "ஆன்-லைன்' கலந்தாய்வு நடத்துகின்றனர். இது, வரவேற்கதக்கது.ஆனால், 18 ஆயிரம் பேரும், இப்போது, சென்னைக்கு வர வேண்டும் என, கூறுகின்றனர். 18 ஆயிரம் பேருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவுகளை வழங்குவதற்கு வாய்ப்பே இல்லை. 10 பேருக்கோ, 15 பேருக்கோ, உத்தரவுகளை வழங்குவார்.அதன்பின், அதிகாரிகள் தான் வழங்கப் போகின்றனர். அதற்கு, எதற்கு இப்படி தேவையில்லாமல், இவ்வளவு பெரிய பிரம்மாண்டம் என, தெரியவில்லை.ஒரு ஆசிரியரிடம், 500 ரூபாய் என்றால், சென்னை நகரில் உள்ள ஆசிரியர்களை தவிர்த்து, கணக்கு பார்த்தாலும், 90 லட்சம் ரூபாய்க்கு வசூல் குறையாது. இவ்வளவு தொகையையும், மாவட்ட அதிகாரிகள், முறையாக செலவு செய்வார்களா என்பதும் கேள்விக்குறிதான்.இவ்வாறு, அந்த நிர்வாகி தெரிவித்தார்.

-நமது நிருபர்-

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum