ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 M.Jagadeesan

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அந்த பறவைகளிடம் சொல்லுங்கள் - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
 sree priya

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 T.N.Balasubramanian

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சுட சுட செய்திகள்...அச்சலா

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

View previous topic View next topic Go down

best சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down


best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 12:29 am

டில்லியில் இதுவரை 635 கற்பழிப்பு; 1க்கு மட்டும் தண்டனை

புதுடில்லி: இந்திய தலைநகர் டில்லியில் இதுவரை இந்த ஆண்டில் மட்டும் 635 கற்பழிப்பு வழக்குகள் பதியப்பட்டதாகவும், இதில் ஒரு வழக்கில் மட்டும் குற்றவாளி என தண்டனை கிடைத்ததாகவும் தற்போது உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

2012 ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான வழக்கு தொடர்பான இந்த அறிக்கையின்படி 635 கற்பழிப்பு வழக்குகள் தொடர்பாக 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 403 பேர் கோர்ட் இறுதி விசாரணையின கீழ் இருந்து வருகின்றனர். 348 பேர் மீது ஆரம்ப கட்ட விசாரணையில் உள்ளனர். 2 பேர் விலக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் மொத்தம் பெண்களிடம் சில்மிஷம் செய்தது தொடர்பாக 624 வழக்கு, ஈவ்டீசிங் தொடர்பாக 193 வழக்குகள் , 111 வரதட்சணை கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 128 பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டு புள்ளி விவரங்களை பார்க்கும் போது சராசரியாக 10 சதம் குற்றம் அதிகரித்து வந்துள்ளதை காட்டுகிறது. வழக்கு, விசாரணை, தண்டனை என்ற போதிலும் குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை என்பது வேதனையான விஷயம்.

ஆண்டு வாரியாக விவரம் :


கடந்த ஆண்டில் பதிவான கற்பழிப்பு வழக்குகள் விவரம் வருமாறு: ஆண்டு அடைகுறிக்குள் வழங்கப்பட்டுள்ளது . 572 வழக்குகள் ( 2011 ), 507 ( 2010 ) , 469 ( 2009 ) , 466 ( 2008) .


கடந்த 2011 ல் மட்டும் 745 பேர் கற்பழிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 18 பேர் குற்றவாளிகளாக கோர்ட் தீர்ப்பளித்தது. 34 பேர் குற்றமற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். 597 பேர் விசாரணை கட்டத்தில் உள்ளனர். 86 பேர் மீது ஆரம்ப கட்ட விசாரணை, 10 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2010 ல் 685 பேர் கைது செய்யப்பட்டு 37 பேர் குற்றவாளிகள் என முடிவு செய்யப்பட்டது. 107 பேர் போதிய ஆதாரம் இல்லாமல் தப்பித்து விட்டனர் . 518 பேர் வழக்கு விசாரணைக்குள் இருக்கின்றனர். 13 பேர் மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. 2009 ல் 675 பேரும் , 2008 ல் 604 பேரும் கைது செய்யப்பட்டு , மொத்தம் இரு ஆண்டும் சேர்த்து 134 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 12:42 am

அரசியலுக்கு இழுக்கிறோம்: கருணாநிதி - என் வழி தனி வழி: ரஜினி
சென்னை:""அரசியலில் நான் நுழைந்தால், என் வழி தனி வழி,'' என, ரஜினியும், ""ரஜினியை மறைமுகமாக அரசியலுக்கு இழுப்பதில் தவறு இல்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதியும் கூறினர்.

மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின், 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரைப் பற்றி பலர் எழுதிய கட்டுரைகள், தொகுக்கப்பட்டு நூலாக தயார் செய்யப்பட்டது. இந்நூலை, கருணாநிதி வெளியிட, சிதம்பரத்தின் தாய், லட்சுமி அம்மாள் பெற்றுக் கொண்டார். இதற்கான விழா சென்னையில், நேற்று மாலை நடந்தது.இதில், கருணாநிதி பேசியதாவது:

தமிழகத்தில், 1996, 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களின் போது கூட்டணிகள் மாறின. ஆனால், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளில் சிதம்பரம் இருந்தாலும், அவர், தி.மு.க.,வை ஆதரித்தார். 1996ம் ஆண்டு தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் உருவாகவும், வெற்றிபெறவும் பெரும் துணையாக இருந்து சாதித்துக் காட்டியவர் சிதம்பரம்.அந்தத் தேர்தலில், ரஜினி மறைமுக ஆதரவு தெரிவித்தார். அதேபோல், அவரை அரசியலுக்கு மறைமுகமாக இப்போது இழுக்கிறோம். நேரடியாக இழுத்தால் தான் தவறு; மறைமுகமாக இழுத்தால் தவறில்லை.

சேது கால்வாய்:தமிழகத்தின் வணிகம், பொருளாதாரம், வாழ்வாதாரம் ஆகியவற்றை வளமாக்கும், சேது கால்வாய் திட்டம், பல போராட்டங்களுக்குப் பின் உருவாகி, பல ஆண்டுகள் கழித்து, அமல் செய்யப்பட்டது. இருந்தும், அத்திட்டம் நிறைவு பெறாமல், கிடைப்பில் போடப்பட்டுள்ளது.

சேது கால்வாய் திட்டம், ஒரு கட்சிக்கு எதிரான போராட்டம்அல்ல. அத்திட்டத்தை, நிறைவேற்றுவதும் ஒரு சாராருக்கு எதிரானது அல்ல. தமிழகத்தின் பொருளாதார, வணிக வளர்ச்சிக்காக நிறைவேற்றுகிறோம். கிடப்பில் உள்ள திட்டத்தை, மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு உள்ளது. அவர், இப்பொறுப்பை நிறைவேற்றினால், தமிழகத்தின் வரலாற்றில் அழியாத இடம் பிடிப்பார்.

மத்திய அரசின் இணை அமைச்சர், கேபினேட் அமைச்சர் என, உயர்ந்த அவர், அடுத்ததாக, பிரதமராக உயர வேண்டும். சேலை கட்டிய தமிழன் பிரதமர் ஆவதை விட, வேட்டி கட்டிய தமிழன், பிரதமராக வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.

என் வழி தனி வழி:முன்னதாக ரஜினி பேசுகையில், ""1996ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், நானும் சிறிய பங்காற்றியுள்ளேன். அப்போது, சிதம்பரத்துடன் ஏற்பட்ட நட்பு, இப்போதும் தொடருகிறது. அவர் கூட, எப்போது அரசியலுக்கு வருகிறீர்கள் என, ஒரு ரசிகர் போல் கேட்கிறார். நான் அரசியலுக்கு வந்தால், என் வழி தனி வழி,'' என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கவிஞர் வைரமுத்து, நடிகர் கமல், தமிழறிஞர் அவ்வை நடராசன், பேராசிரியர் அப்துல்காதர், கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன் உள்ளிட்ட பலர், விழாவில் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிதம்பரம், பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார். விழா துவங்குவதற்கு முன், அவரது தலைமையில், டில்லியில் பாலியல் கொடுமைக்கு பலியான மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 12:43 am

லோக்சபா தொகுதிகளை குறிவைக்கும் மாஜி'க்கள்: தி.மு.க.,வில் பரபரப்பு
எப்போது வேண்டுமானாலும் வரும் என, எதிர்பார்க்கப்படும், லோக்சபா தேர்தலில், சீட் வாங்கிவிட வேண்டும் என, முன்னாள் அமைச்சர்கள், களத்தில் குதித்துள்ளது, தி.மு.க.,வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய, மூன்று லோக்சபா தொகுதிகளை குறிவைத்து, முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள் களமிறங்கியுள்ளனர். திருச்சி லோக்சபா தொகுதியில் நிற்க, முன்னாள் அமைச்சர் நேரு விருப்பப்படுகிறார். கட்சி பலமாக உள்ளபோதே, எம்.பி.,யாகி விட்டால், தன்னுடைய எதிர்காலத்துக்கு நல்லது என்ற நினைப்பில், அவர் திருச்சி, எம்.பி., தொகுதியை கைப்பற்ற துடிக்கிறார்.

அதேபோல், புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரகுபதியும், திருச்சி லோக்சபா தொகுதியில், "சீட்' வாங்கிட பகீரத முயற்சிகளில் இறங்கிஉள்ளார்.கரூர் லோக்சபா தொகுதியை குறிவைத்து, முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி காய்நகர்த்தி வருகிறார். இதனால் தற்போது, அவர் தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளார். அதேபோல் கரூர் தொகுதியை கைப்பற்ற, முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனும் முயற்சிப்பார் என்று தெரிகிறது.

பெரம்பலூர் தொகுதியை, முன்னாள் அமைச்சர் செல்வராஜ் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். இவருக்கும், பெரம்பலூரைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கும் நல்ல, "நட்பு பாராட்டல்' இருப்பதால், செல்வராஜுக்கு அங்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது என்று, தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.

அதேநேரம் ராஜாவுக்கும், பொதுத் தொகுதியாக இருக்கும், பெரம்பலூர் தொகுதியில் நிற்கும் எண்ணம் உள்ளதாம். திருச்சி லோக்சபா தொகுதியை குறிவைக்கும் அமைச்சர் நேருவுக்கு கூட, பெரம்பலூர் தொகுதி மீதும் ஒரு கண் உள்ளது. ஏனென்றால், அவருடைய சொந்த ஊர் பெரம்பலூர் தொகுதியில் தான் உள்ளது."சீட்' வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தான், திருச்சி, பெரம்பலூர் தொகுதிக்கான, ஆலோசனைக் கூட்டங்களை பிரமாண்டமான முறையில், நேரு நடத்தினார் என்றும், தி.மு.க.,வினர் பேசி வருகின்றனர்.

- நமது நிருபர் -
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 12:49 am

கிறிஸ்துமஸ் விழாவால் தே.மு.தி.க.,வில் வெடித்த மோதல்
கிறிஸ்துமஸ் விழாவால், கூட்டணி உருவானது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மறுபுறம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் மோதல் வெடித்துள்ளது, தே.மு.தி.க., தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தே.மு.தி.க., சார்பில், முக்கியமான மத பண்டிகைகள் கொண்டாடப்பட்டு, அந்நாளில் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு, ஆட்டிறைச்சி, குர்பானியாக வழங்கப்பட்டது.சமீபத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, கேக் மற்றும் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விரைவில், பொங்கல் பண்டிகை கொண்டாடவும், கரும்பு, பொங்கல் பொருட்கள் உள்ளிட்டவற்றை, மக்களுக்கு இலவசமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கட்சி தலைமை, இது போன்ற விழாக்களை ஏதாவது ஒரு இடத்தில் பிரமாண்டமாக நடத்துவதுடன், அனைத்து மாவட்டங்களிலும், இவ்விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என, கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துகிறது.மாநில நிர்வாகிகள் பிறப்பிக்கும் உத்தரவை செயல்படுத்த வேண்டிய கடமை, மாவட்ட செயலர்களை சென்று சேர்க்கிறது. அவர்கள், தனக்கு கீழ் மட்டத்தில் உள்ள வட்டம், நகரம், பேரூர், ஒன்றிய செயலர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கின்றனர்.

இவர்கள் தான் பணத்தை செலவிட்டு, இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்கின்றனர். இவர்களோடு மாவட்ட செயலர்களும் இணைந்து விழாவை நடத்தி வந்தனர். சட்டசபை தேர்தலுக்கு முன் வரை, இந்த விழாக்களை நடத்துவதில், தே.மு.தி.க., நிர்வாகிகளிடையே எவ்வித பிரச்னையும் எழவில்லை.ஆனால், சட்டசபை தேர்தலுக்கு பின், வருவாய் ஏதும் இல்லாததால், தொடர்ந்து பணத்தை செலவிட முடியாமல், மாவட்ட செயலர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு கீழ் உள்ள நிர்வாகிகளும் திணறி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மக்களுக்காக மக்கள் பணி என்ற பெயரில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், 20 லட்சம் ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.விழாவிற்கு மேடை, அமைப்பதில் துவங்கி நலத்திட்ட உதவிகள் வழங்குவது வரை, அனைத்திற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட செயலர்களிடம் கட்சி தலைமை ஒப்படைத்தது.

அவர்களும், வழக்கம்போல், தனக்கு கீழ் உள்ள நிர்வாகிகளுக்கு செலவுகளை பிரித்து கொடுத்தனர். ஆனால், செலவு செய்ய பணம் இல்லாததால், நிர்வாகிகள் திணறினர். கன்னியாகுமரி மாவட்ட செயலராக இருந்தவர், இதற்கான செலவை ஏற்க முடியாது என்று கூறிவிட்டு, கடைசி நேரத்தில் பொறுப்பில் இருந்து விலகி, கட்சி தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும், பிரச்னைக்கு மத்தியில் ஒரு வழியாக இவ்விழா அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி நடந்தது.

சமீபத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, கேக் மற்றும் பிரியாணி வழங்கும் விழாவை, அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட வேண்டும் என, கட்சி தலைமை அறிவுறுத்தியது.
கிறிஸ்தவ மத போதகர்கள் முன்னிலையில், இவ்விழா, கட்சியின் தலைமை அலுவலகத்தில் தடபுடலாக நடந்தது. இவ்விழாவின், முக்கிய அம்சமாக லோக்சபா தேர்தலில், தி.மு.க., - தே.மு.தி.க., இடையே கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருப்பது, விஜயகாந்தின் பேச்சில் இருந்து தெளிவானது.

ஆனால், அதே நேரத்தில், இவ்விழாவால், பல மாவட்டங்களில், கட்சி நிர்வாகிகளிடையே, உட்கட்சி மோதல் அதிகரித்து உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, மாவட்ட செயலர்கள் உத்தரவிட்டிருந்த நிலையில், பலர் அதை செய்யாமல், தங்களது மொபைல் போன்களை, "ஸ்விட்ச் ஆப்' செய்துவிட்டனர்.இதனால், மாவட்ட செயலர்களே, வேறு வழியின்றி, தங்களது சொந்த செலவில், விழா ஏற்பாடுகளை கவனித்தனர்.

இதனால், மாவட்டங்களில், எவ்வித ஆடம்பரமும் இன்றி, பெயரளவிற்கு இவ்விழா நடந்தது.கடுப்பான மாவட்ட செயலர்கள், சில நிர்வாகிகளை விடாப்பிடியாக, நேரில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளனர். இதுநாள் வரை அடக்கி வைத்திருந்த கோபத்தை காட்டிவிட்டு, அந்த நிர்வாகிகள் சென்றுவிட்டனர்.மாவட்ட செயலர்கள் மூலம், இத்தகவல் கட்சி தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டது. கட்சி நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ள மோதல், கட்சி தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அடுத்து வரப்போகும் பொங்கல் பண்டிகையை, எவ்வாறு கொண்டாடுவது என, தே.மு.தி.க., தலைமை யோசிக்க துவங்கி உள்ளது.

- நமது நிருபர் -

avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 12:51 am

தமிழகத்தில் ஆடுகளுக்கு தட்டுப்பாடு: பொங்கலுக்கு மட்டன் கிடைக்குமா?

தமிழகத்தில், பருவமழை பொய்த்து விட்ட நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலின் பெருக்கம் காரணமாக, மேய்ச்சல் நிலங்களும் குறைந்து விட்டதால், ஆடுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆடுகளை வாங்க வியாபாரிகள் ஆந்திராவுக்கு படையெடுக்க துவங்கி உள்ளனர். பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, தேவையான அளவு ஆடுகள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஆடு வளர்ப்பில், ஈரோடு முதலிடத்தையும், சேலம் இரண்டாம் இடத்தையும், திருநெல்வேலி மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அதைத் தொடர்ந்து, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளன.நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால், நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன. அது மட்டுமின்றி, குறைந்த அளவில் உள்ள மேய்ச்சல் நிலங்களிலும், புற்கள், தழைகள் இன்றி வறட்சியாக காணப்படுகிறது.

மேலும், பெருகி வரும் ரியல் எஸ்டேட் தொழில் காரணமாக மேய்ச்சல் நிலப்பரப்பு குறைந்ததால், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், மாற்றுத் தொழிலுக்கு செல்லத் துவங்கி விட்டனர். தற்போது, பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஆடுகளுக்கு நீல நாக்கு உள்ளிட்ட கொடிய நோய் தாக்கமும் அதிகரித்து வருவது, ஆடு வளர்ப்போர் மத்தியில், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் பெரிய ஆட்டுச் சந்தைகளாக கருதப்படும், ஈரோடு, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம், திருச்செங்கோடு, மேச்சேரி, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஆகிய சந்தைகளுக்கு, விற்பனைக்கு வரும் ஆடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

குறைந்த எண்ணிக்கையில், விற்பனைக்கு வரும் ஆடுகளின் விலையும், கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் அசைவ பிரியர்களை திருப்தி படுத்தும் வகையில், ஆட்டு வியாபாரிகள், தற்போது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு, ஆடுகளை கொள்முதல் செய்ய படையெடுத்து உள்ளனர்.

தமிழகத்தில், கடந்த மாதம் வரை, 10 கிலோ எடை கொண்ட ஆடு, உயிருடன் 4,500 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை, விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 5,500 ரூபாய் முதல், 6,000 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.ஆடு விலையில் ஏற்பட்ட உயர்வை அடுத்து, சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில், ஆட்டுக் கறியின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை, ஆட்டுக்கறி கிலோ, 400 ரூபாய்க்கு விற்றது, தற்போது, 425 முதல், 475 ரூபாய் வரை, விற்பனையாகிறது.

சேலத்தில் கடந்த வாரம் வரை, கிலோ, 380 ரூபாய்க்கு விற்றது, 400 ரூபாயாக அதிகரித்துள் ளது. தமிழகத்தில் ஆடுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், பொங்கல் பண்டிகையின் போது ஆட்டுக்கறியின் விலை,500 ரூபாய் வரை உயர்வு ஏற்படும். அதே சமயம், வெள்ளாடு களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், பொங்கல் பண்டிகையின் போது, தேவையான அளவு ஆட்டுக்கறி கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 12:52 am

திருச்சி அருகே ரூ.50 கோடி கோவில் நிலம் "ஸ்வாகா

திருச்சி: இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள, கோவில் மானிய நிலம், "ப்ளாட்' போட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதை, அறநிலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது, பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் குருநாத கோவிலுக்கு சொந்தமான கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, இக்கோவில் பூசாரிகளாக சாமிநாதன், அர்ச்சுனன் ஆகியோர் உள்ளனர்.கோவிலுக்கு சொந்தமாக, துவரங்குறிச்சியில், 18 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் இன்றைய மதிப்பு, 50 கோடி ரூபாய்.

கோவில் பூசாரிகளாக இருக்கும் சாமிநாதன், அர்ச்சுனன் ஆகியோர் அனுபவத்தில் கோவில் நிலம் இருந்து வருவதால், அவற்றை, 1990ம் ஆண்டு முதல், "ப்ளாட்' போட்டு விற்பனை செய்து வருகின்றனர். இது கோவிலை நிர்வகிக்கும் அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும், கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

துவரங்குறிச்சி குருநாத கோவிலுக்கு சொந்தமான, 3.5 ஏக்கர் நிலமும் ப்ளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டு, அந்த பகுதி முழுவதும் வீடுகள் கட்டப்பட்டு விட்டன. அந்த வீடுகளுக்கு பொன்னம்பட்டி டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் அனுமதி அளித்து, வீட்டு உரிமையாளர்களிடம் சொத்து வரியும் வசூலித்து வருகிறது.இதேபோல், கோவிலுக்கு சொந்தமான மற்ற நிலங்களும் ப்ளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள், ப்ளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டது குறித்து, அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கோவில் நிலங்களை விற்பனை செய்ய, சில அரசியல்வாதிகளும், இந்து சமய அறநிலைத்துறையில் உள்ள முக்கிய அதிகாரிகள் சிலரும் உடந்தை என்பதால், இது தொடர்பாக எத்தனை புகார் சென்றாலும், கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

தமிழகம் முழுவதும், அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிக் கப்பட்டிருந்தால், அவற்றை கைப்பற்றி, ஆக்கிரமிப்புகளை அகற்ற, முதல்வர் ஜெயலலிதா கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் கோவில் நிலம் ப்ளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டிருப்பது, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் நிலத்தை விதிமுறைகளை மீறி விற்பனை செய்தவர்கள் மீதும், அதற்கு உடந்தை யாக இருந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும், விற்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றன. அப்போது, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என, தெரிகிறது..

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 12:54 am

தமிழகத்துக்கு அவமானமா? நஷ்டமா?

தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கிளப்பிய புயல் இன்னும் ஓயவில்லை. "தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கவும், அரசியல் லாபத்திற்காகவும் முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார்' என்றும், தி.மு.க., - காங்., கூட்டணி கருத்து தெரிவித்து உள்ளது.

ஆனால், "இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்' என்று முதல்வர் ஜெயலலிதாவின் கருத்திற்கு ஆதரவாக, பிரதமர் கொடும்பாவி எரிப்பு சம்பவங்களில், அ.தி.மு.க.,வினர் இறங்கிவிட்டனர். இந்த இரு தரப்புக்குமிடையே, "ஐந்து ஆண்டு திட்டங்களை, பத்து நிமிடத் தில் விளக்கிட முடியுமா' என்ற சாதாரண மக்களின் குரல்களும் ஒலிக்கின்றன. முதல்வரின் அதிரடி குறித்து, டில்லி அரசியலில் குறிப்பிடத்தக்கவர்களாக வலம் வரும், மூன்று கட்சிகளின் பிரமுகர்கள் தெரிவித்த கருத்துக்கள்...

பழனிமாணிக்கம், நிதித்துறை இணை அமைச்சர்:


பிரதமர் தலைமையில் நடந்த தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில், சண்டையிட்டுக் கொண்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்ததால், தமிழகத்துக்கு தான் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தை நடத்துபவர்களும், கூட்டத்தில் பங்கேற்பவர்களும், ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போனால் தான், கூட்டம் நடத்துவதற்கான நோக்கத்தை எட்ட முடியும்.தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, அகர வரிசைப்படி அமர வைத்தால், கடைசியில் தான் அமர வேண்டும். அகர வரிசைப்படி தான், பேசவும் முடியும். ஆனால், அவர் முதலில் பேச வேண்டும் என, கேட்டுக் கொண்டதால், பேச அனுமதிக்கப்பட்டார்.மேலும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அமருவதற்கு, ஒரே மாதிரியான "ஸ்டீல்' நாற்காலிகள் தான் போடப்பட்டன. ஆனால், ஜெயலலிதா அமருவதற்கு வசதியாக, வேறு நாற்காலி போட்டுக் கொள்கிறோம் என, தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.அதற்கு அனுமதி அளித்து, டில்லி தமிழ்நாடு ஹவுசிலிருந்து, அவருக்காக பிரத்யேகமாக நாற்காலி கொண்டு வந்து பயன்படுத்தப்பட்டது. இதனால், யாரையும் அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம், யாருக்கும் இல்லை என்பது தெளிவாகிறது.நாட்டின் மிக முக்கியமான ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முதல்வர் ஜெயலலிதா, சண்டையிட்டு, தனது உரிமையை நிலைநாட்டி இருக்க வேண்டும். மாறாக, வெளிநடப்பு செய்ததால், அவருக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை; தமிழகத்துக்கு தான் நஷ்டம்.ஜெயலலிதா பண்பட்டவராக நடந்திருந்தால், தமிழகத்துக்கு கூடுதல் நன்மைகள் கிடைத்திருக்கும்.

தம்பிதுரை, பார்லிமென்ட் அ.தி.மு.க., தலைவர்:


தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளிக்காமல், நிதி வழங்காமல், ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. திட்டங்களை வகுக்கும் அதிகாரம் தான், மத்திய அரசிடம் உள்ளது. அத்திட்டங்களை அமல்படுத்துபவர்கள் மாநில முதல்வர்கள் தான்.இந்நிலையில், மாநில முதல்வர்களின் கருத்துக்களை கேட்டு, அதன்படி திட்டங்களை உருவாக்குதல், மாறுதல் செய்தல் போன்றவற்றை மத்திய அரசு செய்ய வேண்டும். இதற்கு நேர் எதிராக, தான் சொன்னதைத் தான், மற்றவர்கள் செய்யவேண்டும் என்ற, அதிகார மமதையில் மத்திய அரசு செயல்படுகிறது. பார்லிமென்டில் கூட, உறுப்பினர்கள் பேச நேரம் நிர்ணயிக்கப்படும். ஆனால், அதை கடுமையாக பின்பற்றுவதில்லை.இதற்கு, அனைவரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்ற ஜனநாயக முறை தான் காரணம். இந்த ஜனநாயக நடைமுறை, நாட்டின் மிக முக்கியமான, 12வது ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசு பின்பற்றவில்லை என்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது.அரசியல் அமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுகிறது. தமிழக முதல்வர், கூட்டத்தின் முதல் நபராக பேசுகிறார். அவரை பேச விடாமல். மணி அடித்து அமர செய்கின்றனர்.கூட்ட அரங்கில் வேண்டுமானால், காங்கிரசார் மணி அடிக்கலாம். ஆனால், அவர்களின் ஆட்சிக்கு, சாவு மணி அடிக்க மக்கள் காத்திருக்கின்றனர்.

டி.ராஜா, தேசிய செயலர், இந்திய கம்யூ.,:


கூட்டாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட நாடு இந்தியா. இங்கு, அனைத்துத் தரப்பினருக்கும், சரிநிகர் சமமான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். இல்லையேல், கூட்டாட்சி தத்துவத்துக்கே கேடு விளைவிப்பதாகும்.இந்த அடிப்படையில் தான், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வெளிநடப்பை பார்க்க வேண்டியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த, 12வது ஐந்தாண்டு திட்டக் கூட்டம், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, ஒரு மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியது. இக்கூட்டத்தில் பேச, மாநில முதல்வர்களுக்கு, போதிய கால அவகாசம் அளிக்கவேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி நடந்தபோது, ஒரு மாநில முதல்வருக்கு, 10 நிமிடங்கள் ஒதுக்கி பேச அனுமதித்துஇருக்கலாம். இன்று நிலைமை மாறியுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் வேறு,வேறு கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், உரிய நேரம் ஒதுக்கி, மாநில முதல்வர்களுக்கு, பேச வாய்ப்பு அளிக்க வேண்டும்.நேரம் போதாது என, கூறுவதை ஏற்க முடியாது. ஒரு நாள் நடக்கும் கூட்டத்தை, மூன்று நாள்கள் நடத்தலாம். முதல் நாள் முதல்வர்கள் பேசலாம்; அடுத்த நாள், மத்திய அமைச்சர்களும், அதிகாரிகளும் பதில் சொல்லலாம்; இறுதி நாளன்று பிரதமர் நிறைவுரையாற்றலாம்.தமிழக முதல்வர் ஜெயலலிதா, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தது சரியானதே. இதை, மத்திய அரசு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். வரும் காலங்களில், இதுபோன்ற சம்பவங்கள், தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டங்களில், நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது, மத்திய அரசின் கடமை.
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 12:55 am

உரத்த சிந்தனை: தமிழின் தலையெழுத்து: ஜி.கிருஷ்ணசாமி

உலகத் தமிழரின் ஒரே தலைவர் அவர்களுக்கு...கவிதை நூல் ஒன்றை எழுதுவதற்கு முன், அந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துக் கவிதை எழுதுவது, தமிழ்ப் புலவர்களின் வழக்கம். திருக்குறளுக்கு, வள்ளுவர் பெருமகன் கடவுள் வாழ்த்துப் பாடியது போல. தாங்கள் கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவர் ஆகையால், இக்கட்டுரைக்கு தங்களையே கடவுளாக்கி மகிழ்ந்துள்ளேன்.

நான் வீரபாண்டிய கட்டபொம்மன் இல்லை. இருப்பினும், தங்களிடம் நான் சில கேள்விகளை கேட்க ஆசைப்படுகிறேன். அவை நியாயமான கேள்விகளாக எனக்கு தோன்றுகின்றன. தங்களைக் கேள்விகள் கேட்க எனக்குத் தைரியம் இருக்கிறதோ, இல்லையோ தார்மீகக் கடமை என்ற ஒன்று இருக்கிறது.

காரணம், நான் சாமானியனாக இருந்து, கோடீஸ்வரன் ஆன பின்பும், என்னை ஒரு சாமானியன் என்று சொல்லிக் கொண்டிருப்பவன் அல்ல. சாமானியர்களோõடு, சாமானியனாக வாழ்பவன்; உங்களை கேள்விகள் கேட்கப் பயப்படுவதற்கு, நான் உங்கள் எதிரியோ அல்லது நான் உங்கள் புகழ்பாடும் சீடனோ அல்ல; உங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரும் அல்ல.

ஏதோ, நானும், மற்ற தமிழர்களும் பெயரே இல்லாத ஓர் ஊரில் பிறந்தவர்கள் போலவும், எங்களுக்குத் தமிழன் எனும் முகவரி இல்லாதது போலவும், தாங்கள் நினைத்துக் கொண்டுள்ளீர்கள். ஒன்றை தயவு செய்து மறந்து விடாதீர்கள். நாங்களும், நீங்கள் பிறந்த அதே தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தான்; நீங்கள் கற்ற அதே தமிழ் தான் நாங்களும் கற்றிருக்கிறோம்.

நீங்கள் சுத்த தமிழன் என்றும், உலகத் தமிழர்களின் ஒரே நிகரற்ற தலைவர் என்றும், உங்களை பாராட்டும் போது, மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறீர்களே, உங்கள் மீது அபரிமித நம்பிக்கையும், தெரிந்தோ, தெரியாமலோ அளவற்ற பற்றும், பாசமும் கொண்டுள்ள தமிழர்களுக்குத் தாங்கள் ஆற்றிய, ஆற்றிவரும் அரும்பணிதான் என்னவென்று தெரிந்து கொள்ள, கோடிக்கணக்கான தமிழ் மக்கள் ஆசைப்படுகின்றனர்.

மூச்சுக்கு மூச்சு முன்னூறு முறை தமிழா, தமிழா என்றும் தமிழே, தமிழே என்றும் வெறும் முழக்கமிட்டு விட்டால் மட்டும் போதுமா? தமிழனுக்கும், தமிழ் மொழிக்கும் நிரந்தர நன்மை பயக்கும் வகையில் உருப்படியாக ஏதேனும் செய்துள்ளீர்களா?

தமிழ் மக்களுக்கு செய்துள்ள மகத்தான பணிகளில் முன்னிலை வகிப்பது, ஒவ்வொரு தமிழனையும் குடிகாரனாக ஆக்கியதும், அவன் குடும்பத்தை தெருவில் நிறுத்தியதும் தானே...?
தொலைக்காட்சி பெட்டிகளை, மக்கள் வரிப்பணத்தில் வாங்கி, அதற்கு உங்கள் பெயரிட்டு, வீடுதோறும் வினியோகித்து பாமரத் தமிழர்கள் தங்களை மறந்து, தங்கள் நிலையை மறந்து; தங்கள் எதிர்கால முன்னேற்றத்தை மறந்து; சோம்பேறிகளாக இருக்கச் செய்ததோடு, அரை குறை ஆடை அணிந்து, ஆட்டம் போடும் பெண்களை பார்த்து ரசிக்கவும், தமிழச்சிகள், வக்கிர புத்தியுள்ள மெகா சீரியல்களில் வரும் பெண்களை பார்த்து தங்களையும், அவர்களை போல் நினைக்கவும், செயல்படவும் வைத்துள்ளீர்களே, அது எந்த வகையில் நியாயம்? இதுதான் சுத்த தமிழனுக்குரிய பண்பாடா? இது என் கேள்வி.

ஆனால், விவரம் தெரிந்த தமிழர்கள் சொல்கின்றனர், ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்த திறமை தங்களையே சேரும் என்று. ஒன்று உங்கள் சொந்தப் பணத்தில் தொலைக்காட்சி பெட்டிகளை வாங்காமல், உடன்பிறப்புகளின் பணத்திலேயே அதை வாங்கி, அவனுக்கே அதை இலவசமாக வழங்குவது போல் வழங்கி, அவனது தலையில் மிளகாய் அரைத்து, உங்கள் சேனல்களை பார்த்து அவனை ரசிக்கும்படி செய்த கில்லாடித்தனம் உங்களை தவிர்த்து வேறு யாருக்கு வரும்?உங்களை கொள்கைப் பித்தன் என்று அடிக்கடி சொல்லி மகிழ்கிறீர்கள்!

"அடைந்தால் திராவிட நாடு; இல்லாவிட்டால் சுடுகாடு' என்று, ஒரு காலத்தில் பட்டி தொட்டிகள், மூலை முடுக்குகளில் எல்லாம் மார்தட்டியவர் தானே நீங்கள்? இப்படி வீர வசனம் பேசிவிட்டீர்களே தவிர, உங்கள் கட்சியை, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்காரன், இல்லாமல் செய்துவிடுவோம் என்று மிரட்டியதும், அதற்கு பயந்துபோன நீங்களும், உங்கள் தலைமையும், சீனப் படையெடுப்பைக் காரணம் காட்டி, "எங்களுக்கு தேச ஒருமைப்பாடுதான் முக்கியம், தனித் திராவிட நாடு இரண்டாம் பட்சம் தான், அது வெறும் திண்ணைப் பேச்சுதான்' என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டு தனித் திராவிட நாடு கொள்கையை குழிதோண்டி நீங்கள் புதைத்து விட்டதை நீங்கள் மறந்தாலும், இல்லை மறந்தவர் போல் நடித்தாலும், எங்களைப் போல் உங்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டவர்களும், புரிந்து கொண்டவர்களும் மறக்கவில்லையே.

தமிழ், ஆங்கிலத்தோடு விருப்ப பாடமாக என்னைப் போன்றவர்கள், மூன்றாம் மொழியாக இந்தி மொழியை பள்ளியில் பயின்றதுபோல், எங்களுக்கு பின்னால் கல்வி கற்றவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்காமல், இந்திய மொழியான இந்தியை கற்கவிடாமல், தமிழையும், ஆங்கிலத்தையும் மட்டுமே கற்க வைத்தீர்களே, அதனால், தமிழை உங்களால் வளர்க்க முடிந்ததா அல்லது இந்தி மொழி இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோய்விட்டதா? ஆங்கிலம் என்ன நமது முப்பாட்டான் பேசிய மொழியா?

இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் ஏற்றுக் கொண்டுள்ள நீங்கள், இந்தியாவின் பொது மொழியான இந்தியை, நம் சந்ததியினரைப் படிக்க விடாமல் செய்துவிட்டீர்களே... அது எந்த வகையில் நியாயம்?
உங்களால் வேலை கொடுக்கப்படாமல் போன பல்லாயிரம் தமிழ் இளைஞர்கள், இந்திய ராணுவத்தில் சேர்ந்து, தங்கள் இன்னுயுரைத் தந்து வருகிறார்களே, அவர்கள் ராணுவத்தில் கற்பதும், பேசுவதும் இந்தி மொழிதானே?மற்ற தமிழ் குழந்தைகளை, இந்தி படிக்காதே என்று சொல்லிவிட்டு, உங்கள் பேரக் குழந்தைகளை கான்வென்டுகளில் படிக்க வைத்து, இந்தியை கற்க வைக்கிறீர்களே.

தமிழர்கள் முட்டாள்கள் அல்ல; திறமைசாலிகள்! எத்தனை மொழிகளையும் அவர்களால் கற்க முடியும். தயவுசெய்து அவர்களை முட்டாள்களாகவும், நாதியற்றவர்களாகவும் இனிமேல் ஆக்க நினைக்காதீர்கள்.

சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருந்தாலும், தமிழர்கள் கோடீஸ்வரர்களாகவோ, லட்சாதிபதிகளாகவும் இல்லை. நீங்கள் தீட்டிய மகத்தான திட்டங்களால், நீங்கள் உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கிற போது, அவர்கள் இன்னும் வறியவர்களாகவே நீடிக்கிறார்கள்! அது ஏன்?இந்திரா அம்மையாருக்குப் பயந்து, அவருடன் சேர்ந்து நீங்களும் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததினால் தானே இன்று, நம் மீனவர் சமுதாயம், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்கள் இன்னுயிரையும் பறிகொடுத்த வண்ணம் உள்ளனர்.

இன்று, ஒவ்வொரு தமிழனும் தண்ணீருக்காகவும், மின்சாரத்திற்காகவும், தரமான கல்வி, மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்படுவதற்கு நீங்களும் காரணம் என்பதை, உங்களால் மறுக்க முடியுமா? தமிழரின் உரிமையான காவிரி, முல்லைப் பெரியாறு நீரை பெற நீங்கள் உங்கள் அமைச்சர் பதவிகளை, தியாகம் செய்யாவிட்டால் கூட பரவாயில்லை. குறைந்த பட்சம் உரத்த குரலையாவது, என்றைக்காவது பார்லிமென்டில் எழுப்பியிருக்கிறீர்களா?

சமச்சீர் கல்வியை மாணவர்கள் அனைவர்க்கும் வழங்குவதில், தவறேதும் இல்லை. ஆனால், சமச்சீர் கல்வியில் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டுமானால், ஆரம்ப நிலையிலிருந்தே அக்குழந்தைகளுக்கு, நகர்ப்புற மாணவர் களுக்கு அளிக்கப்படும் அதே தரமான கல்வியை வழங்கி, அதற்கான தகுதியுள்ள ஆசிரியர் களை நியமித்து கற்பிப்பதுதானே முறை? அதை விடுத்து தரமற்ற கல்வியை எல்லா மாணவர் களையும் படிக்க வைப்பது, இருக்கிற நல்ல அம்சங்களையும் கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கி யது ஏன்?

மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, அலைவரிசை கொள்ளை என்று கொள்ளை களுக்கு, மேல் கொள்ளைகளை நாட்டில் அரங்கேற்றி, நாட்டு வளத்தை கெடுத்து, வீட்டு வளத்தை பெருக்கி கொண்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுருக்கின்றனவே? மனசாட்சி என்ற சொல்லை தமிழ் அகராதியில் இருந்து நீக்கி விட்டீர்களா?

இந்திய தமிழர்கள் ஒருபுறம் இருக்க, இலங்கை தமிழர்களுக்காக காலம் கடந்து, இப்போது வக்காலத்து வாங்குகிறீர்களே? இதை உங்கள் ஆட்சிக்காலத்தில் ஏன் செய்யவில்லை. பேசுவது ஒன்றும், செய்வது ஒன்றாகவும் அல்லவா இருக்கின்றன உங்கள் செயல்பாடுகள். ஒன்று நன்றாக புரிகிறது... தமிழகம் உங்களை போன்றவர்களுக்கு நல்ல விளைச்சல் நிலம். இங்கே பரம்பரை பரம்பரையாக நல்ல விளைச்சலை பெறமுடியும் என்பதுதான் அந்த உண்மை. வாழ்க உங்கள் பற்று; வளர்க தமிழகம் உங்கள் புண்ணியத்தில்...!

ஜி.கிருஷ்ணசாமி,கூடுதல் காவல்துறைகண்காணிப்பாளர் (பணிநிறைவு), எழுத்தாளர், சிந்தனையாளர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 1:10 am

தமிழக வங்கிகள் திரட்டிய டெபாசிட் 21 சதவீதம் உயர்வு


சென்னை: சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ஓராண்டு காலத்தில், தமிழகத்தில் உள்ள வங்கிகள் திரட்டிய டெபாசிட், 20.92 சதவீதம் வளர்ச்சிகண்டு, 4.02 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.இதே காலத்தில், இவ்வங்கிகள் வழங்கிய கடன், 22.01 சதவீதம் வளர்ச்சியடைந்து, 4.73 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.இந்தியாவில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் உள்ள வங்கிகள், திரட்டும் டெபாசிட்டும், வழங்கும் கடன்களின் அளவும் சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.கணக்கீட்டு காலத்தில், தமிழகத்தைச் சேர்ந்த வங்கிகள், முன்னுரிமை துறைக்கு வழங்கிய கடனின் அளவு, 41 சதவீதம் என்ற அளவிலும், வேளாண் துறைக்கு வழங்கிய கடன் அளவு, 18.27 சதவீதம் என்ற அளவிலும் உள்ளன. இவை, தேசிய அளவில் முறையே, 40 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற அளவில் உள்ளன.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 1:10 am

டிசம்பர் 31ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு

சென்னை: முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, நாளை நடக்கிறது. மாவட்டத்துக்குள், பணி நியமனம் வேண்டுபவர்களுக்கு, காலையிலும், வேறு மாவட்டங்களில், நியமனம் வேண்டுபவர்களுக்கு, பிற்பகலிலும் கலந்தாய்வு நடக்கிறது.

முதுகலை ஆசிரியர்கள், 2,895 பேரை நியமனம் செய்வதற்கான போட்டி தேர்வு, சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. இதுதொடர்பான வழக்கு, கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், 500 பணியிடங்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தற்போது, 2,300 பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான கலந்தாய்வு, நாளை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடக்கிறது. தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கு, அழைப்பாணை கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

தேர்வுப் பட்டியலில் இருந்து தகுதியில்லாத, 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 1:12 am

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்குத் தீர்வு என்ன?
மீபகாலமாக பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களை கடவுளாக போற்றும் நமது நாட்டில் ஏன் இந்த நிலை? நமது கலாச்சாரம் முறையாக பாதுகாக்கப்படவில்லையா? இத்தகைய சீரழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிதான் என்ன? இன்னும் நாம் பழங்கால சட்டங்களையே பின்பற்ற போகிறோமா அல்லது மாற்றம் தான் பிரச்னைக்கு தீர்வா என இந்திய கிரிமினல் சட்டங்களை கடுமையாக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கின்றோம். ஏதாவது பிரச்னை வரும்போது தான் இதன் வலிகள் நமக்கு உணர முடிகிறது. மனித ஒழுக்கம் குறையும் போது குபீரென பிரச்னைகள் உருவெடுக்கின்றன. நாட்டில் நாள்தோறும் எத்தனையோ குற்றங்கள் நடந்து வந்தாலும் , ஒரு சில குற்ற நடவடிக்கைகள் மட்டுமே முக்கியத்துவம் பெறுவதுடன் அனைவராலும் பேசக்கூடிய விஷயமாகி விடுகிறது. காரணம் சம்பவத்தின் தன்மை மற்றும் கொடூர செயல் ஆகியனதான். என்றாலும் பாதிக்கப்பட்ட விஷயம் விழிப்புணர்வு காரணமாக விஸ்வரூபமெடுக்கிறது. இதற்கு சான்றுதான் டில்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு. போதையில் இருந்தவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர் மீது திணிக்கப்பட்ட இந்த கொடூரம் அனைவரையும் கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இவர் உயிர் பிழைத்து விடுவாரா என்ற ஏக்கம் இந்தியா முழுவதும் எழுந்தது. ஆனால் அவர் இன்று அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டார்.

இது போன்ற சோகத்திற்கும் , கொடிய விஷயத்திற்கும் முடிவு கட்ட வேண்டுமாயின் என்ன நடவடிக்கை இருக்கலாம் ? சில நாடுகளைப் போல கண்ணுக்கு கண், கல் வீசி கொல் என்று கொண்டு வர முடியுமா இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் இது ஒன்றி போக முடியுமா? அப்படியானால் என்ன தான் தீர்வு ? சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது . இது போன்ற வாசகர்கள் எண்ணம் என்ன என்பதை அறிய தினமலர் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்படுகிறது. இதில் தாங்களும் தங்களின் கருத்துக்களை கீழக்கண்ட இணைப்பில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 1:13 am

தேயிலை தோட்டத்தில்15 அடி மலை பாம்பு
கூடலூர்:தனியார் தேயிலை தோட்டத்தில் புகுந்த, 15 அடி மலைப்பாம்பை, வனத்துறையினர் மீட்டு, முதுமலையில் விட்டனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் மேபீல்டு அருகே, ஆதிவாசி குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில், பெண்கள் தேயிலை பறிக்க சென்றனர். அப்போது, நீளமான மலைப்பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்ததை கண்டு பெண்கள் அலறினர். தகவல் அறிந்த, பிதர்காடு, வனச்சரகர் கணேசனின் உத்தரவுப்படி, காவலர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள், 15 அடி மலைப்பாம்பை பிடித்தனர். முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், மலைப்பாம்பு விடப்பட்டது.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 1:14 am

வன்கொடுமைக்கு ஆளான மாணவி உடல் தகனம்; துவாரகாவில் ரகசிய இறுதிச்சடங்கு

சிங்கப்பூர்: டில்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி உடல் துவாரகாவில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவர் வசித்த மகாவீர் என்க்ளேவ் பகுதியில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகிய‌ோர் மாணவியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

சிகி்ச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று அதிகாலையில் இறந்தார். அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு புதுடில்லி விமான நிலையத்திற்குவந்தது. புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் வந்த போது மாணவியின் உடலை பார்க்க பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ‌காங்.,. தலைவர் சோனியா மட்டும் வந்தனர். உடல் எத்தனை மணிக்கு வருகிறது எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை ரகசியமாகவே வைத்திருந்தனர்.உள்ளூர் எம்.பி., மற்றும டில்லி பா.ஜ., தலைவர் விஜேந்தர்குப்தா ஆகியோருக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. துவாராகா மயானத்திற்கு உடல் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. இங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். கடும் பனிப்பொழிவு இருந்த நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. இந்நேரத்தில் ரகசியமாக தகனம் முடிக்கப்பட்டது. உடல் மக்கள் பார்வைக்கு வைக்கும்போது கூடுதல் பதட்டம் ஏற்படும் என்பதால் மத்திய உளவுத்துறை அறிவுரையின்படி டில்லி போலீசார் தகனத்தை ரகசியமாக முடித்து விட்டதாக ‌டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

சிறப்பு வக்கீல் நியமனம்:


இதற்கிடையில் மாணவிக்கு வ்னகொடுமை செய்த குற்றவாளிகள் மீது 3ம்தேதி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர். இந்த வழக்கில் மாணவி சார்பில் ஆஜராக சிறப்பு வக்கீலை அரசு நியமித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் கொந்தளி்ப்பான நிலை நிலவுவதால், இந்த வழக்கை விரைவில் விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது.

பாதுகாப்பு அதிகரிப்பு:


டில்லியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் மீண்டும் வெடிக்குமோ என்ற காரணத்தினால் நகர் முழுவதும் சிறப்பு அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.போலீசார் குவிக்கப்பட்டு்ள்ளனர். இதனால் டில்லியில் பரபரப்பு காணப்படுகிறது. இந்தியா கேட், ரைசினா ஹில்ஸ் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதிக்கு செல்லும் சாலைகளும் மூடப்பட்டுள்ளன. ராஜ்பத், விஜய் சவுக், போன்ற பகுதிகளுக்கு செல்லும் பாதைகள்மூடப்பட்டதுடன.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 1:21 am

இன்றும், நாளையும் பூஸ்டர் பேக்குகள் செல்லாது செல்போன் நிறுவனங்கள் அறிவிப்பு

சென்னை : பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக்கொள்வது வழக்கம். முன்பு வாழ்த்து அட்டைகள், தபால் மற்றும் போன் மூலம் வாழ்த்துக்களை பரிமாறி வந்தனர். செல்போன் வருகைக்கு பிறகு வாழ்த்து சொல்வது மிகவும் எளிதாகி விட்டது. உலகில் எந்த பகுதியில் இருந்தும் வாழ்த்துகளை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.

இதற்காக செல்போன் நிறுவனங்கள் எஸ்எம்எஸ் அனுப்ப பூஸ்டர் கார்டு போட்டால் மாதத்துக்கு குறிப்பிட்ட எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பலாம் என்று சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்காக ஒரு மாதம், 2, 3 மாதம் என்று கட்டணங்களில் ‘பூஸ்டர் பேக்குகள்‘ உள்ளன. பண்டிகை நாட்களில் இந்த பூஸ்டர் பேக்குகள் செல்லாது என்று செல்போன் நிறுவனங்கள் அறிவிக்க தொடங்கியுள்ளன.

நாளை புத்தாண்டு பிறக்கிறது. இதற்காக செல்போன் நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன் ஒரு மெசேஜ் வந்தது. அதில், பூஸ்டர் பேக்குகள் இன்று மற்றும் நாளை(ஜனவரி 1ம் தேதி) செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அன்றைய தினம் அனுப்பப்படும் ஒரு உள்ளூர் எஸ்எம்எஸ்க்கு தலா 1, தேசிய எஸ்எம்எஸ்க்கு 1.50 காசு, சர்வதேச எஸ்எம்எஸ்க்கு 5 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் என ஒரு டோல் ஃபிரீ‘ எண் வழங்கப்பட்டுள்ளது. செல்போன் நிறுவனங்களின் எஸ்எம்எஸ் கட்டண அறிவிப்பை தொடர்ந்து ஒவ்வொருவரும் நேற்றே தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு செல்போனில் இருந்து புத்தாண்டு எஸ்எம்எஸ் அனுப்ப தொடங்கி விட்டனர்.

- தினகரன்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 1:22 am

நீச்சல்குளம் அருகே மேடை அமைக்க தடை
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நிபந்தனைகள்

சென்னை : புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களை கிண்டல், கேலி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தற்காலிக மேடை அமைக்க தகுதி சான்றிதழ் அவசியம் என்று போலீசார் நிபந்தனை விதித்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை நகரில் உணவு விடுதி மற்றும் கேளிக்கை விடுதி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
உணவு மற்றும் கேளிக்கை விடுதிகள்:

* உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். எல்லா நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
* அனுமதிக்கப்பட்ட அரங்கங்களில் மட்டுமே கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.
* தற்காலிக மேடைகள் அமைக்க, அதன் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வண்ணம், பொதுப்பணி துறை மற்றும் தீயணைப்பு துறையினரிடமிருந்து தகுதி சான்றிதழ் பெறப்பட வேண்டும். நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அருகிலோ மேடை அமைத்தல் கூடாது.
* நீச்சல் குளம் செல்லும் வழிகள், சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புதடை ஏற்படுத்த வேண்டும்.
* ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். நிகழ்ச்சி முடிவில் போதையில் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டி செல்லவும், வாகனங்களை சாலைகளில் நிறுத்தவும் நிர்வாகத்தினர் அனுமதிக்க கூடாது. விதி மீறல் ஏதேனும் நிகழுமாயின், நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.
* அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர, மற்ற பகுதிகளில் மது பரிமாறுதல் கூடாது.
* உணவு மற்றும் மதுபான சேவை (உரிமத்துடன்) அதிகாலை 2 மணிக்குள் முடித்து கொள்ள வேண்டும்.
* போதையில் தகராறு செய்பவர்களை உணவு விடுதி நிர்வாகம் உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

பொதுமக்களுக்கான கட்டுப்பாடு

* பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பட்டாசு வெடித்தல் கூடாது.
* பெண்களிடம் கேலி, கிண்டலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* வர்ணப் பொடிகள், வர்ணம் கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை தவிர்த்தல் வேண்டும்.
* குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவோர் லைசன்ஸ் ரத்து செய்யப்படுவதுடன், வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
* அதிவேகமாக ஓட்டிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* கடலுக்குள் இறங்கி விளையாடுதல் மற்றும் படகுகளில் செல்வதை தவிர்த்தல் வேண்டும்.
இவ்வாறு போலீசார் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

-தினகரன்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 1:24 am

1 லட்சம் பேருக்கு பட்டங்களை ஆளுநர் ரோசய்யா வழங்கினார்

சென்னை : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக 3ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று நடந்தது. ஆளுநர் ரோசய்யா தலைமை தாங்கி பட்டங்களை வழங்கினார். உயர்கல்விதுறை அமைச்சர் பழனியப்பன், தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவன தலைவர் ஜெனா பேசினர். துணைவேந்தர் விஸ்வநாதன், பதிவாளர் விஸ்வலிங்கம் பங்கேற்றனர்.

2010,2011ம் கல்வி யாண்டில் பிஎட் படித்த 58,853, எம்எட் படித்த 3,131, எம்பில் படித்த 7 மாணவர்களுக்கும், 2011, 2012ம் கல்வியாண்டில் பிஎட் படித்த 55,792, எம்எட் படித்த 2,705 என மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 481 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. மர்ம மனிதனால் பரபரப்பு: பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் பழனியப்பன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி மேடைக்கு வந்த மர்மநபர், ஆளுநரிடம் சென்று மனு ஒன்றை கொடுத்தார். உடனடியாக ஆளுநரின் நேரடி பாதுகாவலர் அவரை மடக்கி பிடித்தார். பின்னர், அவரை அங்கு நின்றிருந்த துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் மேடைக்கு பின்னால் அழைத்து சென்று விசாரித்தனர். இதனால் விழா மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.

-தினகரன்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 1:26 am

பாலியல் கொடுமை தடுக்க கடுமையான சட்டம் வரும்
சென்னை : மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி சென்னையில் இருந்து நேற்று நண்பகல் விமானம் மூலம் பெங்களூர் சென்றார். முன்னதாக, விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் பாலியல் வன்கொடுமையை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற உள்ளது. தனிசிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.

காவிரி நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது பற்றி மத்திய அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர் இல்லாமல் சம்பா சாகுபடி பயிர் கருகி உள்ளது பற்றி மாநில அரசு விரிவான ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும். மத்திய அரசு அந்த அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் வைத்து ஆலோசனை நடத்தி நிபுணர்குழு ஒன்றை தமிழகத்துக்கு அனுப்பிவைக்கும். அந்த குழு காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்.

முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது, வஞ்சிக்கிறது என்றெல்லாம் பேசுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இன்னும் சொல்லப்போனால் 4 வழிப்பாதை, 6 வழிப்பாதை போன்ற நெடுஞ்சாலை பணிகளுக்கு இந்தியாவிலேயே தமிழகத்துக்குத் தான் அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில்தான் நீண்டதூரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நமது நாட்டில் உள்ள அணு உலைகளில் விபத்து நடந்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்க 15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கிவைத்துள்ளது. அணு உலைகளுக்கான உபகரணங்களை வழங்கிய நிறுவனங்களிடமிருந்து முறையான இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வசூலித்துக்கொள்ளும் இதைப்போன்ற பொய் பிரசாரம் செய்பவர்கள் அதை நிறுத்த வேண்டும் என்றார்.

-தினகரன்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 1:28 am

முதல்வர் அறிவிப்பு
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.72.8 கோடி மானியம்


சென்னை: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.72.8 கோடி மானியமாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் நிதிநிலைமை சீராக்கப்பட, கடந்த ஆண்டு மானியமாக ரூ.82 கோடியே 54 லட்சத்து 57 ஆயிரத்து 662 வழங்கப்பட்டது. தற்போது மாநில அரசின் பங்காக 23 தகுதியுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.1 கோடியே 87 லட்சத்து 82 ஆயிரத்து 119 மானியமாகவும், ராமநாதபுரம், திருநெல்வேலி, புதுக்கோட்டை மற்றும் மதுரை ஆகிய நான்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மானியமாக ரூ. 70 கோடியே 20 லட்சத்து 70 ஆயிரத்து 191 என மொத்தம் ரூ. 72 கோடியே 8 லட்சத்து 52 ஆயிரத்து 310 மானியமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

-தினகரன்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 1:29 am

4 மணி நேரத்தில் முடிந்தது டெல்லி மாணவியின் உடல் தகனம்

புதுடெல்லி: டெல்லி மாணவியின் உடலை இன்று அதிகாலையில் தகனம் செய்ய போலீசார் ஏற்பாடுகள் செய்தனர். இதை ரகசியமாக வைத்திருந்தனர். டெல்லியின் தென் மேற்கு பகுதியில் துவாரா செக்டாரில் இந்திய கல்வி மற்றும் கலாசார மையம் நடத்தி வரும் தகன மேடைக்கு அனுமதி பெற முயற்சித்தனர். நேற்றிரவே மையத்தின் அதிகாரிகளை போலீசார் சந்தித்து அனுமதி கேட்டனர். அதிகாலை 6.30 மணிக்கெல்லாம் தகனம் செய்துவிட ஏற்பாடுகள் செய்தனர். ஆனால், இந்து முறைப்படி சில சடங்குகள் செய்ய வேண்டும். சூரிய உதயத்துக்கு முன்னர் தகனம் செய்ய கூடாது என்று பெற்றோரும் உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காலை 7.30 மணிக்கு மாணவியின் உடலுக்கு தந்தை தீ மூட்டினார். அப்போது மாணவியின் சகோதரர்கள், உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர். டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் மற்றும் மீடியாக்களை அனுமதிக்கவில்லை. சிங்கப்பூரில் இருந்து 3.30 மணிக்கு மாணவியின் உடல் டெல்லி வந்த 4 மணி நேரத்துக்குள் தகனம் முடிந்து விட்டது. தகனம் செய்யும் நேரம், இடம் தெரிந்தால் ஆயிரக்கணக்கானோர் குவிவார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை இருந்தது. அதனால் உடனடியாக தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சப்தர்ஜங் மருத்துவமனையில் மாஜிஸ்திரேட்டிடம் 2 முறை மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட் பெண் நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர். இதற்காக சாட்சிகள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

=தினகரன்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 1:30 am

இலங்கை கடற்படை விடுவித்த
நாகை, காரைக்கால் மீனவர்கள் 27 பேர் இன்று ஊர் திரும்பினர்


நாகை: இலங்கை கடற்படை விடுவித்த நாகை, காரைக்கால் மீனவர்கள் 27 பேரும் இன்று காலை ஊர் திரும்பினர். நாகை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன், பாலு, செல்வமணி, அஞ்சப்பன், ரவிச்சந்திரன், மணிமாறன், செல்வம், சத்தியன், நாகமணி, கார்த்திகேயன், முருகேசன், காத்தான், கலைவாணன், வாஞ்சிநாதன் ஆகிய 14 பேர் கடந்த 21ம் தேதி 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் 23ம் தேதி மதியம் கோடியக்கரைக்கு கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், படகுகளுடன் 14 பேரையும் கைது செய்து, திரிகோணமலைக்கு அழைத்து சென்று போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதேபோல் காரைக் கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 20ம் தேதி, கடலுக்கு மீன்பிடிக்க சென்ற முருகவேல், சிங்காரவேல், கந்தசாமி, வேதையன், ஜெயபிரகாஷ், மாணிக்கவேல், பிரபு, எஸ்.ராஜேந்திரன், வினித், பாலா, ஜீவானந்தம், வி.ராஜேந்திரன், காளிதாஸ் ஆகிய 13 பேரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 27 பேரையும் திரிகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்ததை அடுத்து அவர்களை இலங்கை கடற்படையினர், இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நேற்று காலை ராமேஸ்வரம் மண்டபம் வந்து சேர்ந்தனர். நாகை மீனவர்கள் 14 பேரும் இன்று காலை நாகை துறைமுகம் வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகளும், மீனவர்களின் உறவினர்களும் வரவேற்றனர். இதேபோல் காரைக்கால் மீனவர்கள் 13 பேரும் இன்று காரைக்கால் வந்தனர்.

-தினகரன்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 31, 2012 1:34 am

வங்கிகளிடம் ரூ.25,000 கோடி கடன் கேட்கிறது மத்திய உரத் துறை அமைச்சகம்

மானியம் வழங்குவதற்காக பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து ரூ.25 ஆயிரம் கோடி கடன்பெற மத்திய உரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் உரத் துறை மானியம் ரூ.1,04,000 கோடி அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வங்கித் துறை சிறப்பு ஒப்பந்தத்தின் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலை உரத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.பொட்டாஷ், டை அமோனியம் பாஸ்பேட் ஆகிய உரங்களுக்கான மானியத்தை கடந்த ஜூலை மாதம் முதலும், யூரியாவுக்கான மானியத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் முதலும் உரத்துறை அமைச்சகம் செலுத்தவில்லை என்று உரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக பதிலளிக்க உரத்துறை அமைச்சக அதிகாரிகள் மறுத்துவிட்டனர். எனினும், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.61,256 கோடியை உரத்துறை அமைச்சகம் ஏற்கெனவே செலவிட்டுவிட்டது. மானியங்களைச் செலுத்த கூடுதல் நிதி தேவைப்படுகிறது என்று அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், உரத்துறையிடம் இருந்து மானியம் கிடைக்காததால் நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தொழில் அமைப்பான இந்திய உர நிறுவனங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது. உரத் தொழில்துறையில் காக்க ரூ.40 ஆயிரம் கோடி வரை அவசரமாகத் தேவைப்படுகிறது.அது கிடைக்காத பட்சத்தில் இத்துறையே முற்றிலுமாக முடங்கி, விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும். எனவே இதுபோன்ற சமயங்களில் பொதுத்துறை வங்கிகளின் உதவியைத்தான் நாட வேண்டியிருக்கும். 2008-09ஆம் ஆண்டில் உர நிறுவனங்களுக்கு உதவ இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்பட்டது என்று உர நிறுவனங்களின் கூட்டமைப்பின் இயக்குநர் சதீஷ் சந்தர் கூறியுள்ளார்.

-தினமணி
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Tue Jan 01, 2013 11:12 pm

திருத்தணி பெண்ணுக்கு 5 கிலோ எடை குழந்தை

திருத்தணி: திருத்தணியில் பெண் ஒருவருக்கு 5.1 கிலோ எடை கொண்ட குழந்தை பிறந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கே. கே. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசுலு. இவரது மனைவி அனிதா (23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அனிதா திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை 11.38 மணிக்கு ஆபரேஷன் மூலம் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தையின் எடை 5.1 கிலோ என டாக்டர்கள் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டத்திலேயே இந்த அளவு அதிக எடை கொண்ட குழந்தை பிறந்துள்ளது இதுவே முதல் முறை என மருத்துவமனை டாக்டர்கள் வேத பிரியா மற்றும் மோகனன் தெரிவித்தனர்.

-தினமலர்

avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Tue Jan 01, 2013 11:13 pm

உ.பி.,யில் மருத்துவ மாணவி பெயரில் பள்ளி

பாலியா( உ.பி): டில்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டு, சிங்கப்பூரில் மரணமடைந்த மருத்துவ கல்லூரி மாணவியின் சொந்த ஊரான உ.பி.,யின் பாலியா மாவட்டத்தில் உள்ள மெட்வார் காலன் கிராமத்தில் உள்ள துவக்க பள்ளிக்கு, அந்த மாணவியின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முடிவு, மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்களுடன் நடந்த ஆலோசனைக்கு பின்னர் எடுக்கப்பட்டதாக கிராம தலைவர் கூறினார். விரைவில் பஞ்சாயத்து கூட்டப்பட்டு பெயர் சூட்டுவதற்கான ஒப்புதல் பெறப்படும் என கூறினார். கிராமத்தில் மாணவியின் நினைவாக கட்டடம் மற்றும் கிராமத்தில் வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும் என மருத்துவ மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Tue Jan 01, 2013 11:14 pm

களி"மண்' சுரண்டலில் பல "கோடி'கள் இழப்பு
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சுற்றி நூற்றுக்கணக்கான கண்மாய்கள், மற்றும் பல லட்சம் ஏக்கர் நிலங்களில், சுரண்டப்படும் "களிமண்'ணால், அரசிற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. மதுரை மெகா கிரானைட் சுரண்டலுக்கு, ஈடாக மாவட்டத்தில் களிமண் கொள்ளை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது.

வறண்ட ராமநாதபுரம் மாவட்ட, "வானம் பார்த்த பூமி'யில், பரமக்குடி, நயினார்கோவில், போகலூர் உள்ளிட்ட பகுதிகளில், நூற்றுக்கணக்கான கண்மாய்கள் உள்ளன. மாவட்டத்தில் விவசாயம், பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மழையை நம்பி பல ஆயிரம் ஏக்கரில் விதைத்த விவசாயிகள், வைகை ஆற்று நீரை எதிர்நோக்கி இருந்தனர்.
வைகையில் இருந்து விவசாயத்திற்கு திறந்துவிடப்படும் நீர், பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து, சிவகங்கை, ராமநாதபுரம் கண்மாய்களுக்கு பிரித்து விடப்படுகிறது. வரத்து கால்வாய் மூலம் கண்மாய்க்கு தண்ணீர் வரும். ஆனால் சமீப ஆண்டுகளாக மழை இன்றியும், வைகை ஆறும் "கை'விரித்த விட்ட நிலையில், கண்மாய்களும் காய்ந்துள்ளன. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும், கரிமூட்டம், செங்கல் காளவாசல் தொழில் "களை' கட்டி வருகிறது.

பாதாள அளவிற்கு பள்ளம் தேண்டி :

செங்கல் தயாரிப்பில் பிரதானமாக சவடு மண்(களிமண்), மணல், தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக காளவாசல் வைத்திருப்பவர்கள், தனியார் நிலங்கள், மற்ற எந்த இடத்தில் மண் அள்ளினாலும், மாவட்ட கனிமவளத்துறையினரின் அனுமதியுடன் மட்டுமே எடுக்க முடியும். இவ்வாறு அனுமதி பெற்ற கண்மாய்களில் 3 மீட்டர், தனியார் நிலங்களில் 2.15 மீட்டர் ஆழத்தில் மட்டுமே களிமண் அள்ள வேண்டும் என்பது விதி. ஆனால், செங்கல் காளவாசல் அதிபர்கள் பலரும், ஆளும், ஆண்ட கட்சிகளின் பிரமுகர்களாக உள்ளதால், மண் கொள்ளை, அதிகாரிகளின் துணையோடு சக்கை போடு போடுகிறது. அதிகாரிகளுக்கு, தாராளமாக வாரி இறைக்கப்படுகிது. அரசு இயந்திரத்திற்கு "கண்'கள் கட்டப்பட்ட நிலையில், பெயரளவிற்கு அனுமதி வாங்கிக் கொள்கின்றனர். இதன் படி ஒவ்வொரு கண்மாய்களிலும், கருவேல மரங்களை வெட்டி வழி ஏற்படுத்திக் கொண்ட பின்னர், அதில் உள்ள களிமண்ணை இஷ்டத்திற்கு அள்ளிக் கொள்கின்றனர். மழைக்காலங்களிலும் களிமண் கொள்ளையை அரங்கேற்ற, ஒரு சில கண்மாய்களுக்கு தண்ணீர் வந்தாலும், மடைக் கண்களை கூட எட்டிப்பார்க்க முடியாத அளவிற்கு பாதாள அளவிற்கு பள்ளம் தேண்டி வைத்துள்ளனர். இதில் தஞ்சமடையும் தண்ணீர், பயன்பாட்டிற்கு வராமலேயே காய்ந்து விடுகிறது.

பல கண்மாய்கள் "கபளீகரம்':

வைகை ஆற்று மணல் கொள்ளையால், தரை தட்டிப் போன ஜீவநதிக்கு மத்தியில், கண்ணுக்கு தெரியாமல் பல கண்மாய்கள் "கபளீகரம்' செய்யப்படுவது தொடர்கதையாகியுள்ளது. இதன் மூலம் வறண்ட, "தண்ணி இல்லா காட்டிற்கு' மாறுதல் ஆகி வரும் அதிகாரிகள், ஓராண்டு பணியில் இருந்து சென்றாலும், சகல வசதியுடன் "பிரியாவிடை' பெற்று செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் கண்மாய்களில் குடிகொண்டுள்ள கருவேல மரங்கள், களிமண்ணை, அரசு முøறாக டெண்டர் விட்டு, பல கோடி வருவாய் ஈட்டி, மக்கள் பணிகளை வளமுடன் செயல்படுத்த முடியும். இது குறித்து நேர்மையான அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பல கண்மாய்களில், கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன. இதனை பயன்படுத்தி அரசு கூறும் 3 மீட்டர் ஆழத்திற்கும் அதிகமாக களிமண் அள்ளப்பட்டுள்ளன. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் தேக்குவது என்பது கானல் நீராகியுள்ளது. மாவட்ட நிர்வாகம், தனி அதிகாரிகளை நியமித்து கண்மாய்களை ஆராய்ந்தால், பல கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டது அம்பலமாகும், என்கின்றனர். இயற்கை வளங்களை பாதுகாக்க, வருங்கால சந்ததிகள் வளமுடன் வாழும் நோக்கில், விவசாயம் செழிக்க களிமண் கொள்ளையை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Tue Jan 01, 2013 11:16 pm

பெண்கள் போன் செய்தால் போதும்: "கவனிக்க' அடியாட்களை அனுப்புகிறது சிவசேனா

மும்பை:டில்லியில் மருத்துவ மாணவி, பாலியல் பலாத்காரத்தில் கொல்லப்பட்டதை அடுத்து, பெண்கள் பாதுகாப்பிற்காக, சிவசேனா இளைஞர் அணி, பெண்களுக்கான, "ஹெல்ப் லைன்' துவக்கியுள்ளது. மறைந்த பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனா கட்சி, சில ஆண்டுகளுக்கு முன் வரை, காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அந்த தினத்தன்று, இளம் ஜோடிகளை அடித்து விரட்டிய அந்த கட்சி, இப்போது, பெண்களின் பாதுகாவலர்களாக மாறியுள்ளது.

பால் தாக்கரேயின் பேரன், ஆதித்ய தாக்கரே தலைமையிலான, "சிவசேனா யுவ சேனா' அமைப்பு, மும்பை பெண்களுக்கான, 24 மணி நேர, ஹெல்ப் லைனை ஏற்படுத்தியுள்ளது.
பிறரால் தங்களுக்கு தொந்தரவு என கருதும் பெண்கள், இந்த எண்களை தொடர்பு கொண்டால் போதும், அந்த இடத்தில் வந்திறங்கும் சிவசேனா கட்சியினர், தொந்தரவு செய்பவர்களை, நன்கு, "கவனித்து' விடுவர்.

டில்லி சம்பவத்தை அடுத்து, சில நாட்களுக்கு முன் தான், மும்பையில் இந்த வசதியை, ஆதித்ய தாக்கரே ஏற்படுத்தியுள்ளார். தினமும், 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாக கூறப்படுகிறது.அதுபோலவே, சிவசேனாவில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்து, முன்னணி தலைவராக விளங்கும், முன்னாள் முதல்வரும், இப்போதைய, மாநில அமைச்சருமான, நாராயண் ரானேயின் மகன், நிதேஷ் ரானே நடத்தி வரும், "சுவாபிமான் சங்கத்னா' அமைப்பும், பெண்களின் பாதுகாவலர்களாக மாறியுள்ளது.

இது பற்றி, ரானேயின் அமைப்பை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கூறியதாவது:எங்களுக்கு அழைப்பு வந்த உடனேயே அந்த இடத்தில் உள்ள எங்கள் கட்சியினரை உஷார்படுத்தி, சம்பவ இடத்திற்கு அனுப்பி, அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்குவோம். அடுத்த சில நிமிடங்களில், போலீசுக்கும் தகவல் தெரிவித்து, அவர்களும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள செய்வோம். தொடர்ந்து சில நாட்களுக்கு அந்த விவகாரத்தை கண்காணிப்போம். இதனால் அந்த பெண்ணுக்கு, முழு அளவில் பாதுகாப்பு கிடைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum