ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சுட சுட செய்திகள்...அச்சலா

Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

View previous topic View next topic Go down

best சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down


best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 26, 2012 10:34 pm

நான்காவது இன்னிங்சை துவக்கினார் நரேந்திர மோடி: பதவியேற்பு விழாவில் ஜெ.,


ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தின் முதல்வராக 4வது முறையாக பதவியேற்றார் நரேந்திர மோடி. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 182 இடங்களில் 115ஐ கைப்பற்றி ஆளும் பா.ஜ., தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியை தக்க வைத்து சாதனை படைத்தது. குஜராத் சட்டசபை பா.ஜ., தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, குஜராத் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று காலை நடந்தது. இதற்காக ஆமதாபாத்தில் மிகப் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ‌‌மொத்தம் 1 லட்சம் பேர் அமரும் வசதி கொண்ட ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பதவியேற்பு விழாவையொட்டி, மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். இதற்காக அவர் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் ஆமதாபாத் சென்றடைந்தார். சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தேசிய தலைவர் நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், வெங்கய்யா நாயுடு, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். நரேந்திர மோடிக்கு, கவர்னர் கமலா பெனிவால் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில், இன்று காலை தனது டுவிட்டர் இணையதளத்தின் வாயிலாக தொண்டர்களிடையே உரையாடிய மோடி, எதிர்கால இந்தியா சிறப்பாக அமைவதற்கான ரகசியம், அதன் ஒருங்கிணைப்பு மற்றும் உறுதிப்பாட்டிலேயே உள்ளதாக தெரிவித்துள்ளார். மோடியின் இந்த பேச்சு, தேசிய அளவில் அவர் தன்னை நிலைநிறுத்துவதற்கான வழிகளை நோக்கி செல்வதாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 26, 2012 10:35 pm

ஈவ்-டீசிங் செய்வோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் : உ.பி., அரசு அதிரடி
அலகாபாத் : ஈவ்-டீசிங் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பெண்களை பாதுகாக்க சட்டங்களை கடுமையாக்கவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம் கடுமையாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் மற்றவர்களுக்கும் பயம் வரும் என உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

புதிய நடவடிக்கையின் பின்னணி:

உத்தர பிரதேச முதல்வராக அகிலேஷ் பதவி ஏற்ற பிறகு தேர்தலில் அவர் அளித்த வாக்குறுதிப்படி சட்ட ஒழுங்கு சீரமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அகிலேஷ் உத்தரவிட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் கடந்த 10 மாதங்களில் 40க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தர பிரேதசத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்கள் குறித்து ஆபாச கருத்துக்களை வெளியிட்ட இளம் தம்பதியரை மாணவர்கள் பொது இடத்தில் கடுமையாக தாக்கி உள்ளனர். இது தொடர்பாக 6 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் தேசிய பாதுகாப்பு சட்டம் கடுமையாக்கப்பட உள்ளது. இந்த சட்டத்தின் கீழ் ஏற்கனவே கற்பழிப்பு வழக்கில் ஈடுபட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான அகிலேஷின் திட்டங்கள் :

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக அவசர தொலைப்பேசி எண்ணான 1090 திட்டத்தை அகிலேஷ் கடந்த மாதம் துவக்கி வைத்தார். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் லக்னோவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் குறைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அவசர தொலைப்பேசி எண் திட்டத்தின் கீழ் இது வரை 61,000 அழைப்புகள் பெறப்பட்டு, பெண்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 15,000 தொலைப்பேசி அழைப்புகள் அறிமுகமில்லாத நபரிடம் இருந்து வந்த ஆபாச அழைப்புகள் ஆகும்.

குற்றவாளிகளுக்கு தண்டனை :

டில்லியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு எதிரான குரல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து பெரில்லி கோர்ட் டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு வழங்கி உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வந்தாலும் இது போன்று தண்டனை பெறும் குற்றங்களும், வெளியே தெரிய வரும் சம்பவங்களும் மிக மிக அரிது என அரசு தரப்பு வழக்கறிஞர் தயாகி தெரிவித்துள்ளார். இருப்பினும் இது போன்ற வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை அளிக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 26, 2012 10:36 pm

விரைவில் புதிய அறிவியல் கொள்கை: மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்

புதுடில்லி: அறிவியல் துறையில் பெண்களின் பங்கு மற்றும் வரும் 2020-ம் ஆண்டில் அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்றாக உருவாவது குறித்த கொள்கைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இது குறித்த விபரம் வருமாறு: வரும் ஜனவரி 3-ம் தேதி மேற்குவங்க மாநில தலைநகர் ‌கோல்கட்டாவில் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேச உள்ளார். அப்‌போது அறிவியல்,தகவல் மற்றும் அறிவியல் துறையில் பெண்களை அதிகளவில் ஈடுபடுத்துவது போன்ற கொள்கைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவை அதிகரிப்பது குறித்த அறிவிப்பும் கொள்கை முடிவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ஓப்புதல்: கடந்த 2003-ம் வகுக்கப்பட்ட அறிவியல் கொள்கை தற்போது பல்வேறு மாறுதல்களுடன் புதிய கொள்கையாக அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இன்று பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வரும் 2020-ம் ஆண்டிற்குள் அறிவியல்துறையில் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தி்யா நிலைநிறுத்திக்கொள்ள புதிய கொள்கை பயன்படும் என இத்துறை அதிகாரிகள் நம்‌பிக்கை தெரிவித்துள்ளனர்.


-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 26, 2012 10:37 pm

ஜப்பான் புதிய பிரதமருக்கு மன்மோகன் வாழ்த்து

புதுடில்லி: ஜப்பான் புதிய பிரதமர் ஷின்சோ அபேவுக்கு பிரதமர் மன்‌மோகன்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பானில் நடந்த பொதுத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான சுதந்திர ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. இக்கட்சியைச் சேர்ந்த ஷின்சோ அபே பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் இந்தியா சார்பில் அபேவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில், ஜப்பான் பிரதமராக தேர்வு பெற்றதற்கு எனது வாழ்த்துக்கள், உங்களது வெற்றியால் உலகளவிலான நட்புறவு நாடு இந்தியா என்ற முறையில், இந்தியா- ஜப்பான் இரு தரப்பிலும் உறவு மேன்மேலும் வலுப்பெறும். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 26, 2012 10:38 pm

தென்காசி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., தங்கசாமி தலைமையில் சோதனை நடந்து வருகிறது.


-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 26, 2012 10:38 pm

12ம் நூற்றாண்டை சேர்ந்த ஐம்பொன் சிலைகள் மீட்பு

நாகை: காணாமல் போன பலகோடி மதிப்பிலான 12ம் நூற்றாண்டை சேர்ந்த ஐந்து ஐம்‌பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்குளம் ஊரில் உள்ளது எழுமேஸ்வர உடையார் கோயில். இந்த கோவிலில் கடந்த 1.4.12 அன்று 6 ஐம்பொன் சிலைகள் களவு போயின. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் வேதாரண்யம் அருகே ஏ.எஸ்.பி. சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான இரண்டு பேரை போலீசார் விசாரித்ததில் அவர்கள் இருவரும் தான் சிலையை திருடியது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் தஞ்சாவூர் அம்மாபேட்டையை சேர்ந்த கமலக்கண்ணன்(26), திருவாரூரை சேர்ந்த தினேஷ்(23) என்பதும், சிலையை சென்னை மகாலிபுரத்தை சேர்ந்த பத்பநாபன் என்ற கலைப்பொருட்களை விற்பனை செய்து வருபவரிடம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பத்மநாபனிடம் இருந்த பெருமாள் சிலை (3அடி), லட்சுமணன் சிலை (3 1/2 அடி), குருவாயூரப்பன் சிலை(1 1/2 அடி), ஸ்ரீதேவி - பூதேவி சிலை (2 அடி) ஆகிய ஐந்து ஐம்பொன் சிலைகளையும் மீட்டனர். மேலும் ஒரு சிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.


-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 26, 2012 10:42 pm

மலேஷியாவில் வெள்ளம்; 14 ஆயிரம் பேர் தவிப்பு

கோலாலம்பூர்: மலேஷியாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 14 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மழை காரணமாக டெரன்கனு, பஹாங், கெலன்டன் போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களிலிருந்து சுமார் 13,746 பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் வெள்ளத்தின் நிலைமை மோசமாக உள்ளது. இதனால் பஹாங் செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.


-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 26, 2012 10:43 pm

மன ஆறுதல் போதாது; பண ஆறுதல் வேண்டும்; முதல்வருக்கு விவசாயிகள் வேண்டுகோள்
"விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம்' என்ற முதல்வரின் அறிவிப்பு டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, மன ஆறுதலை தந்துள்ள நிலையில், பயிர் இழப்பீட்டு தொகையை அதிகரித்து, பண ஆறுதல் வழங்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறுவை சாகுபடி பொய்த்த நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் காவிரி தண்ணீர் தராமல், கர்நாடகா ஏமாற்றியதால், டெல்டா மாவட்டங்களில், 11.20 லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.நிலம், நகை உள்ளிட்டவற்றை அடகு வைத்து விவசாயம் செய்த நிலையில், கண்முன்னே பயிர்கள் கருகுவதால், மனம் உடைந்த விவசாயிகள் தொடர்ச்சியாக தற்கொலை செய்து வருகின்றனர்.இப்பிரச்னையை கையில் எடுத்துள்ள அரசியல்கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர், பயிர் இழப்பீடு வழங்க வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், "சம்பா பயிர் இழப்பு ஏற்பட்டால், அரசு உரிய நிவாரணம் வழங்கும். பயிர் இழப்பீடாக ஏக்கருக்கு, 13.7 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். எனவே, விவசாயிகள் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்' என, வேண்டுகோள் விடுத்தார்.பயிர் கருகுவதால் என்ன செய்வது என தெரியாமல், மன உளைச்சல் அடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு முதல்வரின் அறிவிப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், முதல்வர் அறிவித்துள்ள நிவாரணத்தொகை, பயிர் இழப்பை சரி செய்வதற்கு போதுமானதாக இருக்காது என, விவசாயிகள் கருதுகின்றனர். எனவே, பயிர் இழப்பீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலர் ஆறுபாதி கல்யாணம் கூறியதாவது:முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு உண்மையிலேயே விவசாயிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மன ஆறுதலை தருகிறது. இந்த அறிவிப்பை, 20 நாட்களுக்கு முன்பே வெளியிட்டு இருந்தால், உயிர் இழப்பை தடுத்திருக்க முடியும். 13.7 ஆயிரம் ரூபாயை, பயிர் இழப்பீடாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயியும் ஏக்கருக்கு, 20 ஆயிரம் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார். அதனால், அரசு வழங்கும் இழப்பீடு போதுமானதாக இல்லை. இந்த பணத்தால், அடகு வைத்த பொருட்களை மீட்கவோ, குடும்பத்தை காப்பாற்றவோ முடியாது.எனவே, பயிர் இழப்பீட்டு தொகையை, ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல், வழங்கினால் மட்டுமே, வரும் காலங்களில், விவசாயிகளையும், விவசாயத்தையும் அரசால் காப்பாற்ற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -தினமணி
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Muthumohamed on Wed Dec 26, 2012 11:59 pm

@அச்சலா wrote:
@Muthumohamed wrote:இல்லை உங்களை காணததின் காரணமாக இன்று தான் துவங்கினேன்
எனக்கு முன்பே தனி திரி துங்கலாம் என்று இருந்தேன்
அதை நமது இனியவரின் ஆலோசனைப்படி இன்று துவங்கினேன்
வாழ்த்துக்கள்.தொடருங்கள் உங்கள் நல்ல ஆக்கங்களை.. மகிழ்ச்சி

உங்களின் ஆசியுடன் தொடருவேன் அம்மா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 27, 2012 12:12 am

@Muthumohamed wrote:
@அச்சலா wrote:
@Muthumohamed wrote:இல்லை உங்களை காணததின் காரணமாக இன்று தான் துவங்கினேன்
எனக்கு முன்பே தனி திரி துங்கலாம் என்று இருந்தேன்
அதை நமது இனியவரின் ஆலோசனைப்படி இன்று துவங்கினேன்
வாழ்த்துக்கள்.தொடருங்கள் உங்கள் நல்ல ஆக்கங்களை.. மகிழ்ச்சி
அருமையிருக்கு சூப்பருங்க

உங்களின் ஆசியுடன் தொடருவேன் அம்மா
:வணக்கம்: நன்றி
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Fri Dec 28, 2012 1:49 am

ஜன.1 முதல் இணையதளம் மூலம் கட்டிட வரைபட அனுமதி மதுரை மாநகராட்சி அறிவிப்பு
மதுரை,: மதுரை மாநகராட்சி பகுதியில் வரும் ஜன.1ம் தேதி முதல் கட்டிட வரைபட அனுமதி இணைய தளம் மூலம் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி ஆணையர் நந்தகோபால் கூறுகையில்: பொது மக்கள் கட்டிய கட்டிட வரைபடம் அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைபட வரைவாளர் மூலம் தயார் செய்து கம்ப்யூட்டர் மூலம் இணையதளத்தில் கட்டிட வரைபடம் சரிபார்க்கப்படும். இதனை உறுதி செய்த பின் மாநகராட்சி ஆணையாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும். பிறகு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகை விபரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் வரைபடம் சரிபார்த்து உடன் அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பத்துடன் புளு பிரிண்ட 5 நகல்கள், பத்திர நகல், 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் உறுதிமொழிப் படிவம். அந்த இடத்தினுடைய நான்கு மூலைகளும் தெரியுமாறும் மனை உரிமையாளர் அங்கு நின்று எடுக்கப்பட்ட புகைப்படம், மனை உரிமையாளரின் 2 பாஸ்போர்ட் புகைப்படம், விண்ணப்ப கட்டணம், கட்டிட உரிமையாணை கட்டணம் கட்டிட இடிபாடு அகற்றும் கட்டணம், தொழிலாளர் நலநிதி கட்டணம், உள்ளூர் திட்டக்குழுமம் அபிவிருத்தி கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் தபால் செலவு கட்டணம் ரூ.100 ஆகிய கட்டணங்களை மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் செலுத்த வேண்டும். இந்த ரசீது, விண்ணப்பதாரரால் நேரில் வர இயலாதபட்சத்தில் அவரால் சான்றிளிக்கப்பட்ட கடிதம் இணைக்கப்பட வேண்டும்.
மாநகராட்சியின் மைய நகரமைப்பு பிரிவில் விண்ணப்பம் பெறப்பட்டதும் சம்பந்தப்பட்ட அலுவலர்களை உடன் சரிபார்க்கப்பட்டு ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக கட்டிட அனுமதி உத்தரவு வழங்கப்படும். கட்டிட உத்தரவு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் உரிமைதாரரின் முகவரிக்கு பதிவுத்தபாலில் நேரடியாக அனுப்பப்படும்.
இடைத்தரகர்களை அணுக வேண்டாம்: பொது மக்கள் கட்டிட அனுமதி பெறுவதற்கு இடைத்தரகர்களை அணுகாமல் நேரடியாக தங்களுக்கு தேவையான கட்டிட வரைபடத்தை வரைவாளர் மூலம் தயார் செய்து மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை மாநகராட்சி கருவூலம் மூலம் செலுத்தலாம். கட்டணத்தைவிட அதிகமாக தொகையை யாரிடமும் வழங்க வேண்டாம் இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாநகராட்சி மைய நகரமைப்பு பிரிவில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

-தினகரன்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Fri Dec 28, 2012 1:51 am

‘உங்க வீட்டுக்கு மேல ஐஎஸ்எஸ் பறக்குது’ : எஸ்எம்எஸ் அனுப்புது நாசா

நியூயார்க்: சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் எங்கு பறக்கிறது என்று எஸ்எம்எஸ் மூலம் மக்களுக்கு தெரிவிக்கும் சேவையை நாசா தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ரஷ்யா, ஜப்பான், கனடா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது ‘ஐஎஸ்எஸ்’ சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம். இதில் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்பட 6 பேர் தங்கியிருந்து தற்போது ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ராக்கெட்களை நிலைநிறுத்தும் தளம், ஆய்வுக் கருவிகள், விஞ்ஞானிகள் தங்கி ஆய்வு நடத்தும் பகுதி என மொத்தம் 450 டன் எடை கொண்ட ஐஎஸ்எஸ், பூமியில் இருந்து சராசரியாக 370 கி.மீ. உயரத்தில் பறந்தபடி பூமியை தினமும் 15 முறை சுற்றி வருகிறது.

சூரியன், சந்திரனுக்கு அடுத்தபடியாக வானில் பளிச்சென்று தெரியும் பொருள் என்பதால், அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் டெலஸ்கோப் உதவியின்றி வெறும் கண்ணாலேயே ஐஎஸ்எஸ்-ஐ பார்க்கலாம் என்று நாசா கூறியுள்ளது. அதை பார்க்க விரும்புபவர்களின் வசதிக்காக புதிய எஸ்எம்எஸ் சேவையை நாசா தொடங்கியுள்ளது. அதாவது, ஐஎஸ்எஸ் பறந்துவரும் பகுதியில் உள்ளவர்களுக்கு ‘உங்கள் வீட்டின் மீது ஐஎஸ்எஸ் பறக்கிறது’ என்று நாசா எஸ்எம்எஸ் அனுப்புகிறது. ஐஎஸ்எஸ் செயல்பட தொடங்கி 12 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையிலும், மக்களுக்கு ஐஎஸ்எஸ் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக நாசா இணை நிர்வாகி வில்லியம் கெர்ஸ்டன்மயர் தெரிவித்துள்ளார்.

-தினகரன்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Fri Dec 28, 2012 2:08 am

மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் வருவாய் ரூ.50 லட்சம்
மதுரை, டிச.28 - மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் டிசம்பர் மாத உண்டியல் வருவாய் ரூ.50 லட்சம் கிடைத்துள்ளது. கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான பி.ஜெயராமன் தலைமையில் கோயில் உண்டியல்கள், உபகோயில்களின் உண்டியல்களில் உள்ள காணிக்கைகளை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு உண்டியல் மூலம் ரூ. 50 லட்சமும், அன்னதான உண்டியல் மூலம் ரூ.90 ஆயிரம் கிடைத்துள்ளது. கோயில் உண்டியல்களில் பக்தர்கள் தாலிச் சங்கிலி, தங்கக்காசுகள் காணிக்கையாகவும் அளித்துள்ளனர். அதன்படி 360 கிராம் தங்கமும், 450 கிராம் வெள்ளிப் பொருள்களும் கிடைத்துள்ளன. உபகோயிலான தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 2.40 லட்சமும், அன்னதான உண்டியல் மூலம் ரூ.36 ஆயிரமும்,செல்லூர் திருவாப்புடை யார் கோயில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.26 ஆயிரம் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். வருண பாராயணம் மழைவேண்டி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த 12-ம் தேதி சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபம் அருகே வருணபாராயண சிறப்பு யாகம் தொடங்கியது. இதில் 7 நதிகளது புனித நீர் அடங்கிய கலசங்கள் யாகசாலையில் பூஜை செய்யப்பட்டு, வேதபாராயணம் முழங்க, பொற்றாமரைக் குளத்தில் புனிதநீர் கலக்கப்பட்டது. வருணபாராயண நிறைவு நிகழ்ச்சியானது புதன்கிழமை நடைபெற்றது. இதில் ,பத்துக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு, நதிகளது புனிதநீருக்கு சிறப்புப் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த நீரானது பொற்றாமரைக்குளத்தில் கலக்கப்பட்டது. பாராயணத்தின் நிறைவு நாளான புதன்கிழமை மாலை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றுடன் லேசான மழையும் பெய்தது பக்தர்களை பரவசப்படுத்தியது.

-தினபூமி
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Fri Dec 28, 2012 2:09 am

சூரிய மின் சக்தியில் உலகிலேயே முதலிடம் பெறுவோம்

துடெல்லி, டிச.28 - கடந்த ஆட்சியால் ஏற்பட்ட மின் பற்றாக்குறையை சமாளிக்க உறுதியான முடிவு எடுத்துள்ளோம். சூரிய மின் சக்தியில் உலகிலேயே 2015-ல் முதலிடம் பெறுவோம் என்று முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

தற்போது நிறைவேறி வரும் மின் உற்பத்தி மற்றும் பரிமான திட்டங்களை குறித்த காலத்தில் முடிப்பதற்கு தமிழ்நாடு அரசு பல நெருக்கடிக்கு இடையில் ஆக்கப்பூர்வமான செயல்களை மேற்கொண்டுள்ளது. 2015 -ல் மீண்டும் உபரி மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதற்கு பல குறுகிய கால திட்டங்களையும் மேற்கொண்டுள்ளோம். வினியோக நிறுவனங்களுக்கு நிதி உதவி மறுசீரமைப்பு திட்டம் நீண்ட கால பிரச்சனையாக இருந்துவந்துள்ளது. எவ்வாராகினும் நிதி உதவி பொறுப்பு மற்றும் வரவு செலவு பராமரிப்பு வரம்புகள் ஆகியவற்றை தீவிரமாக அமல்படுத்த வேண்டியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணத்தை உயர்த்த என்னுடைய தலைமைலான அரசு பல துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எங்கள் ஆட்சியில் எற்படாத கடந்த ஆட்சி விட்டுச் சென்ற பிரச்சனைகளால் ஏற்பட்ட மின் நெருக்கடியை சமாளிப்பதற்கு என்னுடைய அரசு எடுத்த உறுதியான நடவடிக்கையையே இது காட்டுகிறது.

தமிழ்நாடு 2015 -ல் 3000 மெகாவாட் சூரிய மின் சக்தியை பெற்று உலகிலேயே முதலாவதாக திகழும் வகையில் தமிழகத்தின் சூரிய மின் சக்தி திட்டம் 2012 அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாங்கள் நிறைவேற்றிய மழைநீர் சேமிப்பு திட்டத்தை போல சூரிய மின் சக்தி திட்டத்தையும் மக்கள் இயக்கமாக மாற்ற என்னுடைய அரசு முடிவெடுத்துள்ளது. எங்களுடைய இத்தகைய முயற்சிகளுக்கு நிதி அடிப்படையிலும் சரியான கொள்கை முடிவுகளாலும் மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

-தினபூமி.
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by DERAR BABU on Fri Dec 28, 2012 1:34 pm


நண்பர்கள் வைத்த பந்தயத்தில் 28 முட்டை குடித்தவர் சாவு
துனிஷ், டிச 28-

நண்பர்கள் வைத்த பந்தயத்தில் 28 முட்டைகள் குடித்தவர் இறந்தார்.

துனிசியா நாட்டில் எல் பேட்டன் பகுதியை சேர்ந்தவர் தாவூ பட்னாசி (20). இவர் வேக வைக்காமல், 30 முட்டைகளை அப்படியே குடிப்பதாக தனது நண்பர்களிடம் பந்தயம் கட்டினார்.

அதன்படி மடமட வென முட்டைகளை உடைத்து குடித்தார். 28 முட்டைகளை குடித்த அவரால் அதற்கு மேல் குடிக்க முடியவில்லை. 28 முட்டைகளை குடித்த அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

இதனால் அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்............

மாலைமலர்
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by DERAR BABU on Fri Dec 28, 2012 2:26 pm

சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் டெல்லி மருத்துவ மாணவி

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் உடல்நிலை அபாய கட்டத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவியின் உடல்நிலை மோசம் அடைந்ததற்கு இரத்த அழுத்தம் குறைபோனதே காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேல் சிகிச்சைக்காக மாணவியை சிங்கப்பூர் விமானத்தில் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றதே இரத்த அழுத்தம் குறைய காரணம் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பாலியல் பலாத்காரம் சம்பவங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதே போல் பீகார் தலைநகர் பாட்னாவில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டன.

மாணவி உயிருக்கு போராட்டம்

அறுவை சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் நிலையில் மாணவியின் உடல்நிலை இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அம்மாணவிக்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அம்மாணவியின் நுரையீரல் மற்றும் வயிற்றுப் பகுதி மிகவும் சிதைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by DERAR BABU on Fri Dec 28, 2012 2:28 pm

இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுக்க வேண்டும் : தாலிபன் தீவிரவாதிகள் நிபந்தனை...

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க, இந்தியா மீது அந்நாடு போர் தொடுக்க வேண்டும் என தாலிபன் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். பாகிஸ்தான் அரசு அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அந்நாட்டு மீது தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டிலுள்ள பத்திரிக்கை அலுவலகத்திற்கு தாலிபன் செய்தி தொடர்பாளர் அமீர் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் பாகிஸ்தானில் தற்போது உள்ள சட்டங்களை ரத்து செய்துவிட்டு, இஸ்லாமிய மது கோட்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவை பழிவாங்கும் வகையில் பாகிஸ்தான்,

இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை பாகிஸ்தான் அரசு உறுதி செயதுள்ளது. ஆனால் தாலிபன்களின் இந்த நிபந்தனையை நிராகரிப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உறுதிபட தெரிவித்துள்ளது. இதனிடையே காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ 250 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக எல்லை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இனி வரும் மாதங்களில் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்..
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by DERAR BABU on Fri Dec 28, 2012 2:31 pm

டெல்லி மாணவி இறந்ததாக எஸ்எம்எஸ் வதந்தி ....

ஓடும் பஸ்சில் பலாத்கார கொடுமைக்கு ஆளான டெல்லி மாணவி, சிறப்பு சிகிச்சைக்காக நேற்று சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இறந்து விட்டதாக செல்போனில் நேற்று மாலை எஸ்எம்எஸ்சில் வதந்தி பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் கடந்த 16ம் தேதி, 23 வயதான மருத்துவ மாணவியை ஓடும் பஸ்சில் ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து டாக்டர்கள் ஆலோசனையின்படி, மாணவிக்கு சிங்கப்பூரில் சிறப்பு சிகிச்சை அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு நேற்று

மாணவியை விமானத்தில் கொண்டு சென்றனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் மாணவி இறந்து விட்டதாகவும், இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 2 மாதம் கருப்பு ஆடை அணிய

வேண்டும் என்றும், மனிதாபிமானம் உள்ள அனைவரும் இந்த செய்தியை 4 நபர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என்றும் செல்போன்களில் வதந்தி பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தினகரன்
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by DERAR BABU on Fri Dec 28, 2012 2:43 pm

சென்னையில் கிரிக்கெட் போட்டிக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!

சென்னை: சென்னையில் 30-ந் தேதி நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. சிதம்பரம் மைதானத்தை சுற்றி 7 ஆயிரத்து 500 போலீஸ் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர். அதிவிரைவுப்படை, அதிவிரைவு பதிலடிக் குழு, கமாண்டோ படை பாதுகாப்பில் ஈடுபடும்.

மைதானத்தின் 18 நுழைவு வாயில்களிலும் 218 கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது. கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் காலை 6 மணிக்கே மைதானத்தில் இருக்க அறிவுரை கூறப்பட்டுள்ளது.

7500 பேர பாதுகாப்புக்கு போட்டா , மற்ற இடங்களில் பாதுகாப்புக்கு என்ன பண்ணுவிங்க .? பாகிஸ்தான் இங்க வந்து விளையாடுவதால என்ன பயன் ? கொஞ்சம் தீவிரவாதிங்க வீசா வாங்கிகிட்டு இந்தியால புகுந்துடுவங்க . போன தடவைமாதிரி தான் நடக்கும் .....

avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Muthumohamed on Fri Dec 28, 2012 3:08 pm

V.BABU wrote:இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுக்க வேண்டும் : தாலிபன் தீவிரவாதிகள் நிபந்தனை...

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க, இந்தியா மீது அந்நாடு போர் தொடுக்க வேண்டும் என தாலிபன் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். பாகிஸ்தான் அரசு அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அந்நாட்டு மீது தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டிலுள்ள பத்திரிக்கை அலுவலகத்திற்கு தாலிபன் செய்தி தொடர்பாளர் அமீர் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் பாகிஸ்தானில் தற்போது உள்ள சட்டங்களை ரத்து செய்துவிட்டு, இஸ்லாமிய மது கோட்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவை பழிவாங்கும் வகையில் பாகிஸ்தான்,

இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை பாகிஸ்தான் அரசு உறுதி செயதுள்ளது. ஆனால் தாலிபன்களின் இந்த நிபந்தனையை நிராகரிப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உறுதிபட தெரிவித்துள்ளது. இதனிடையே காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ 250 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக எல்லை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இனி வரும் மாதங்களில் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்..

முதலில் தாலிபானை ஒழிக்கவேண்டும்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by SajeevJino on Fri Dec 28, 2012 6:45 pm

V.BABU wrote:இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுக்க வேண்டும் : தாலிபன் தீவிரவாதிகள் நிபந்தனை...

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க, இந்தியா மீது அந்நாடு போர் தொடுக்க வேண்டும் என தாலிபன் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். பாகிஸ்தான் அரசு அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அந்நாட்டு மீது தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டிலுள்ள பத்திரிக்கை அலுவலகத்திற்கு தாலிபன் செய்தி தொடர்பாளர் அமீர் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் பாகிஸ்தானில் தற்போது உள்ள சட்டங்களை ரத்து செய்துவிட்டு, இஸ்லாமிய மது கோட்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவை பழிவாங்கும் வகையில் பாகிஸ்தான்,

இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை பாகிஸ்தான் அரசு உறுதி செயதுள்ளது. ஆனால் தாலிபன்களின் இந்த நிபந்தனையை நிராகரிப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உறுதிபட தெரிவித்துள்ளது. இதனிடையே காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ 250 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக எல்லை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இனி வரும் மாதங்களில் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்..


இதற்காக தானே காத்திருந்தேன் ..என்னருமை தலிபான் நண்பர்களே ....இது தான் எமக்கு சரியான சந்தர்ப்பம் பாகிஸ்தானை இந்தியாவுடன் சேர்த்து விட்டு பலுசிஸ்தான் நாட்டுக்கும் விடுதலை கொடுத்து விடலாம் ...

எனது .50 cal துப்பாக்கி ரெடியாக இருக்கிறது ...சீக்கிரம் வாருங்கள்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by SajeevJino on Fri Dec 28, 2012 6:47 pm

@அச்சலா wrote:3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்


சிறிய சந்தேகம் எகிப்த பெண்கள் 5000 வருடங்களுக்கு முன்பே தங்க ஆபரணம் அணிந்ததற்கு சில ஆதாரங்கள் உள்ளன
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sun Dec 30, 2012 12:51 am

தூத்துக்குடி கடைகளில் அதிரடி சோதனை 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று 100க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பாலித்தீன் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், மற்றும் பாலீத்தின் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிகள், பிரசாரங்கள் நடத்தப்பட்டது.
இதையடுத்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மற்றும் மாநகராட்சி சுகாதார துறை ஆய்வாளர்கள் கடைகளில் அவ்வப்போது திடீர் ஆய்வு செய்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தால் பறிமுதல் செய்தும் அபராதமும் விதித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் கோகுல்தாஸ் மற்றும் மாநகராட்சி சுகாதார துறை ஆய்வாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தூத்துக்குடியில் டபிள்யூசி ரோடு, வஉசி மார்க்கெட், வடக்குரதவீதி, தெற்குரத வீதி, விஇ ரோடு உள்பட பல இடங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது 25 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மொத்தம் 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்தற்காக ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது.


-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sun Dec 30, 2012 12:59 am

போட்டியில் ஜெயிக்க 28 பச்சை முட்டை சாப்பிட்ட வாலிபர் சாவு
மாஸ்கோ:நண்பர்களுடன் பந்தயம் கட்டி 28 பச்சை முட்டையை உடைத்து சாப்பிட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். துனியாவின் வடகிழக்கில் உள்ள கைரோவன் நகருக்கு அருகில் உள்ளது எல் பேட்டன். இங்கு வசித்தவர் தவோ பேட்னசி. வயது 20. இவர் நண்பர்களுடன் ஜாலியாக இருந்த போது, Ôஎன்னால் 30 பச்சை முட்டைகளை அடுத்தடுத்து சாப்பிட முடியும்Õ என்று சவால் விடுத்துள்ளார். அது முடியாது என்று கூறிய நண்பர்கள், 30 முட்டைகளை சாப்பிட்டால் பணம் தருவதாக பந்தயம் கட்டினர். அதன்படி, பச்சை முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து சாப்பிட்டார். தொடர்ந்து 28 முட்டைகளை சாப்பிட்டு விட்டார்.

பந்தயத்தில் தவோ ஜெயித்து விடுவாரோ என்று நண்பர்கள் பரபரப்பு அடைந்தனர். அப்போது திடீரென வயிற்று வலியில் தவோ துடித்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவர் எதனால் இறந்தார் என்பது உடனடியாக தெரியவில்லை இந்த செய்தியை துனியாவின் ஷெம்ஸ் எப்எம் ரேடியோ நேற்று வெளியிட்டது.கடந்த அக்டோபர் மாதம் புளோரிடாவில் உயிருள்ள கரப்பான் பூச்சிகள், புழுக்களை சாப்பிடும் போட்டி நடந்தது. இந்த போட்டியில் 32 வயதுடைய ஒருவர் பங்கேற்று வெற்றி பெற்றார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தது குறிப்பிடத்தக்கது.

-தினகரன்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sun Dec 30, 2012 1:02 am

முருங்கைக்காய் விலை கிலோ ரூ.180

நாகர்கோவில் : கன்னியாகுமரியில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உச்சகட்டமாக முருங்கைக்காய் விலை கிலோ ரூ.180க்கு மொத்த விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. குமரியில் கோயில், கொடை விழா மற்றும் திருமண நிகழ்ச்சிகள் காரணமாக பங்குனி, சித்திரை மற்றும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் காய்கறி விலை மிகவும் அதிகமாக இருக்கும்.

பொங்கலுக்கு பின்னர் விலை குறையும். ஆனால் நடப்பாண்டில் காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்காவிட்டாலும் கமிஷன் வியாபாரிகளே கூடுதல் விலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

மேலும் தற்போது விவசாய நிலங்கள் குறைந்து வருவதும் முக்கிய காரணமாகும். குமரியில் நெல்லுக்கு அடுத்து வாழை மற்றும் வெள்ளரி, வெண்டைக் காய், பாகற்காய் போன்றவை உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும். இதனால் வெள்ளரி, பூசணி கிலோ ரூ.3 முதல் ரூ.4க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளில் விவசாய நிலங்கள் வீட்டு மனையாக மாற்றப்பட்டு வருவதால் வெள்ளரியின் விலை ரூ.30 எட்டியுள்ளது.

-தினகரன்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum