ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சுட சுட செய்திகள்...அச்சலா

Post new topic   Reply to topic

Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

View previous topic View next topic Go down

best சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down


best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sat Dec 08, 2012 12:01 pm

புதிய நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் இல்லை: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வங்கி கணக்கு முடக்கம்- ஐ.ஒ.சி. நடவடிக்கைஒலிம்பிக் சாசன விதி முறையை பின்பற்றாததால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை (ஐ.ஒ.ஏ.) சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஒ.சி) சஸ்பெண்டு செய்தது. ஒலிம்பிக் சாசன விதி முறையை பின்பற்றாத வரை சஸ்பெண்டை நீக்க முடியாது என்று ஐ.ஒ.சி அறிவித்துவிட்டது.

தடைக்கு பிறகு இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தல் நடந்தது இந்த புதிய நிர்வாகிகளை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அங்கீகரிக்கவில்லை. புதிய நிர்வாகிகள் அங்கீகரிக்கப்படாதது. அவர்கள் இந்த ஒலிம்பிக் சங்கம் சார்பில் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட அதிகாரம் இல்லை என்றும் அறிவித்துள்ளது.

இதே போல இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வங்கி கணக்கையும் ஐ.ஒ.சி. முடக்கியுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தலைவர் அபய்சிங் சவுதாலா, பொதுச் செயலாளர் லலித் பனோட் ஆகியோர் இந்திய ஒலிம்பிக் சங்க வங்கி கணக்கு பற்று ஒலிம்பிக் சாசன நிதி தொகையும் கையாள முடியாது என்று அறிவித்துள்ளது.

இதே போல இந்திய ஒலிம்பிக் சங்க புதிய நிர்வாகிகளை மத்திய விளையாட்டு அமைச்சர்களும் அங்கீகரிக்க வில்லை. இந்திய ஒலிம்பிக் சங்கத்தை நிர்வகிக்க 10 பேர் கொண்ட இடைக்கால குழுவை விளையாட்டு அமைச்சகம் நியமித்துள்ளது. முன்னனி விளையாட்டு வீரர்களை அடங்கியதாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
-மாலை மலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sat Dec 08, 2012 12:03 pm

இந்திய நிறுவனத்திடமிருந்து ஏர் போர்ட்டை திரும்பப்பெற்றது மாலத்தீவுகள்: பின்னணியில் சீனா?மாலே: இந்திய நிறுவனமான ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனத்திடமிருந்து மாலே ஏர்போர்ட்டை திரும்பப்பெற்றது மாலத்தீவுகள். இந்த பிரச்னையின் பின்னணியில் சீனா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாலத்தீவுகள் தலைநகர் மாலேவில் உள்ள இப்ராகிம் நசிர் சர்வதேச விமான நிலையத்தை சுமார் 511 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மேம்படுத்தும் ஒப்பந்த பணியை இந்திய நிறுவனமான ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு பெற்றது. மாலத்தீவுகள் அதிபராக முகமது நசீத் இருந்த போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், மாலத்தீவுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது முகமது வாகித் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், திடீரென இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக மாலத்தீவுகள் அரசு தெரிவித்தது. முறைகேடுகள் மூலமாக இந்த ஒப்பந்தம் ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசு குற்றம் சாட்டியது.

மாலத்தீவுகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிங்கப்பூர் கோர்ட்டில் ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த கோர்ட், மாலத்தீவுகளின் நலனுக்கு ஏற்றவாறு செயல்பட அந்நாட்டு அரசுக்கு உரிமை உண்டு என்றும், எனினும் விதிமுறைகளை மீறி ஏர்போர்ட் எடுத்துக்கொள்ளப்படும்பட்சத்தில், உரிய நிவாரணம் கோரி ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனம் மனு செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது. தங்களுக்கு சாதகமாக உத்தரவு கிடைத்த உடனேயே செயலில் இறங்கிய மாலத்தீவுகள் அரசு, நேற்று நள்ளிரவு அவசர அவசரமாக ஏர்போர்ட் ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனத்திடமிருந்து மாலத்தீவுகள் அரசு எடுத்துக்கொண்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனம், இந்த ஒப்பந்தத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் எவ்வித பிரச்னையும் இருக்காது என உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிபதியின் தீர்ப்பை முழுமையாக படித்த பின் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பின்னணியில் சீனா? சுமார் 1190 தீவுகளைக் கொண்ட மாலத்தீவுகள் பிராந்திய ரீதியாக, இந்திய பெருங்கடலில் மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது. இந்திய கடற்படை தற்போது மாலத்தீவுகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவைச் சுற்றி வளைக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் சீனா, மாலத்தீவுகளில் தனது காலடியை பதிப்பதற்காகவே இந்த வேலைகளைச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மாலத்தீவுகள் அதிபர் முகமது வாகித் சீனா சென்ற போது, அந்நாட்டிற்கு 500 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க சீனா முன்வந்துள்ளது. இதன் காரணமாகவே இந்திய நிறுவனத்தின் ஒப்பந்தம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக இந்த ஒப்பந்தம் சீன நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்க ஒன்றுமில்லை. பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பர்மா என இந்தியாவைச் சுற்றி பல இடங்களில் தனது தடத்தை பதித்துள்ள நிலையில், மாலத்தீவுகளிலும் சீனா தனது ஆதிக்கத்தை பரவவிட்டுள்ளது. இதற்கு பதிலடியாக இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-தின மலர்


avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sat Dec 08, 2012 12:05 pm

குஜராத் தேர்தல் வேட்பாளர்களில் 32 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்:தேர்தல் கண்காணிப்பு குழுஆமதாபாத் : குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 32 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என தேசிய தேர்தல் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. குஜராத் தேர்தலில் மொத்தம் 9400 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களின் சொத்து விபரங்களை ஆய்வு செய்ததில் இவர்களில் 301 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என தெரிய வந்துள்ளது.
தேர்தல் குழு தகவல்:
இரு கட்ட தேர்தல்களிலும் போட்டியிடும் 1666 வேட்பாளர்களில் 940 பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாக ஆமதாபாத்தில் நேற்று வெளியிட்ட தகவல் அறிக்கையில் குஜராத் தேர்தல் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. மேலும் 2007ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 21 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்துள்ளனர்.

கட்சிகளின் சொத்து விபரம்:
தேர்தல் கண்காணிப்பு குழு முக்கிய கட்சிகள் வாரியாக அவற்றின் சொத்து மதிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி காங்கிரசிற்கு ரூ.7.17 கோடியும், பா.ஜ., விற்கு ரூ.5.47 கோடியும், தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ரூ.4.36 கோடியும், குஜராத் பரிவர்த்தன் கட்சிக்கு ரூ.1.13 கோடியும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ.46.24 லட்சமும், சமாஜ்வாடி கட்சிக்கு ரூ.22.31 லட்சமும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு ரூ.17.87 லட்சமும் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் முதலிடம்:
கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களை காங்கிரஸ் கட்சியினர் பெற்றுள்ளனர். உயர் பதவிகளை வகிக்கும் வேட்பாளர்கள் பட்டியலிலும் காங்கிரசே அதிகளவில் உள்ளது. இவர்களில் காங்கிரஸ் வேட்பாளர் பல்வந்த்சிங் ராஜ்புட்டிற்கு ரூ.268 கோடி சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்களில் 9 பேர் தங்களின் பான் மதிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 940 வேட்பாளர்களில் 214 பேர் தங்களின் பான் மதிப்பை வெளியிடவில்லை. இரு கட்ட தேர்தல்களிலும் எம்.எல்.ஏ., பதவிக்கு போட்டியிடுபவர்களில் 170 பேர் 2007ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-தின மலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sat Dec 08, 2012 12:08 pm

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விசா ; கடும் சோதனை ' ; உள்துறை அமைச்சர்புதுடில்லி: ""இந்தியா - பாக்., இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியை பார்க்க வரும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு, கடும் சோதனைக்கு பிறகே, விசா வழங்கப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், சுசில் குமார் ஷிண்டே கூறினார்.
செய்தி சேனல் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேயிடம், இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:நம் அண்டை நாடு என்ற வகையில், பாக்., அணி இந்தியாவில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு, கலாச்சாரம், பொழுது போக்கு ஆகியவை அரசியலுக்கு அப்பாற்பட்டவை. இதில், பங்கேற்க பொதுமக்கள் வரவேண்டும்; அது தான் நல்லது.

கிரிக்கெட் போட்டிகளை பார்க்க வரும் ரசிகர்களுக்காக, 3,000 விசாக்களும், வி.ஐ.பி.,க்களுக்கு, 300 விசாவும் வழங்கப்படுகிறது. விசா வழங்கும் நடைமுறைகள் மிகவும் கடுமையாக இருக்கும். ஒவ்வொருவரை பற்றியும் முழுமையாக விசாரித்த பின், விசா வழங்கப்படும்.

இவ்வாறு சுசில் குமார் ஷிண்டே கூறினார்.கடந்த, 2007ம் ஆண்டு பாக்., அணி, இந்தியாவில் பங்கேற்ற போட்டியை பார்ப்பதற்காக, பாகிஸ்தானிலிருந்து வந்திருந்த, 12 பேர், காணாமல் போயினர். அவர்கள் என்ன ஆயினர் என்பது, இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sat Dec 08, 2012 2:27 pm

பாதாள சாக்கடையில் 22 ஆண்டுகளாக குடும்பம் நடத்தும் தம்பதி


மெடிலின்: கொலம்பியா நாட்டை சேர்ந்த தம்பதியர், 22 ஆண்டுகளாக, பாதாள சாக்கடைக்குள் குடும்பம் நடத்தி வருகின்றனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியா, ஒரு காலத்தில், போதை கடத்தல் கும்பலின் புகலிடமாக இருந்தது. இதனால், மெடிலின் உள்ளிட்ட நகரங்களில், எப்போதும் வன்முறை நடந்து கொண்டே இருக்கும். அந்நாட்டு அரசின் தீவிர நடவடிக்கையால், போதை கடத்தல் கும்பல்கள் ஒழிக்கப்பட்டுள்ளன.

மெடிலின் நகரில் வசிப்பவர், மைக்கேல் ரெஸ்டிரிபோ, 62. இவரது மனைவி மரியா கிரேசியா. கூலி வேலை செய்து வந்த மைக்கேல், போதைக்கு அடிமையானதால், வறுமையில் வாடினார். மெடிலின் நகரில் கட்டப்பட்ட பாதாள சாக்கøடையின் ஒரு பகுதியை, நகராட்சி அதிகாரிகள் தேவையில்லை, என ஒதுக்கி விட்டனர். இதனால், இந்த பாதாள சாக்கடையை, மைக்கேல் தம்பதியினர் வீடாக மாற்றிக்கொண்டு, 22 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு துணையாக ஒரு நாயும், இந்த கால்வாயில் வசிக்கிறது. மின் வசதியை ஏற்படுத்தி கொண்ட மைக்கேல், ஒன்றரை அடி உயரம், 65 சதுர கொண்ட, பாதாள அறையில் டிவி, மின்விசிறி, உள்ளிட்டவற்றை வைத்திருக்கிறார்.

மழை காலங்களில், பாதாள சாக்கøடையின் மூடியை வைத்து மூடிக்கொண்டு உள்ளே இருக்கின்றனர். வெயில் காலங்களில், வெளிச்சத்துக்கு மூடியை திறந்துவைத்து விடுகின்றனர். இவர்களுடன் வசிக்கும் நாயுடன் தான், இந்த பாதாள அறைக்குள் தூங்குகின்றனர். இதுவரை நகராட்சி அதிகாரிகள் இவர்களை அகற்ற, எந்த நடவடிக்கை எடுக்காததால், இவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.


-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sat Dec 08, 2012 2:28 pm

சிறையில் பூரி சுட அனுமதி கோரி மரத்தில் ஏறி 8 கைதிகள் அட்டகாசம்சேலம்:சேலம் மத்திய சிறையில், கைதிகள் பூரி சுட்டு சாப்பிட, அதிகாரிகள் தடை விதித்ததால், ஆத்திரமடைந்த கைதிகள், எட்டு பேர், பூரி சுட தங்களுக்கு அனுமதி வழங்க கோரி, நேற்று சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.அதை அடுத்து அவர்களிடம் சிறை அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்திய பின், போராட்டத்தை கை விட்டனர்.

கஞ்சா:

சேலம் மத்திய சிறையில், 745 கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் மத்தியில் தடை செய்யப்பட்ட மொபைல் போன், கஞ்சா ஆகியவற்றின் நடமாட்டம் அதிகரித்தது. அது மட்டுமின்றி, சிறையில் தாங்கள் அடைக்கப்பட்டு இருந்த அறைகளில், பூரி உள்ளிட்ட பொருட்களை சமைத்து சாப்பிட்டு வந்ததாக தெரிந்தது.இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள்,சோதனை மேற் கொள்ள முடிவு செய்தனர். சில நாட்களுக்கு முன் ஜெயிலர் ஊர்மிளா, சிறையில் உள்ள அறைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது, பிளாக் எண். 8ல், உள்ள ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ள, சேலம் மாவட்டம் ஓமலூரை அர்ஜுனன், 24, அறையில் பூரி சுட்டதை கண்டு பிடித்தார். அதை அடுத்து அவனை எச்சரித்த ஜெயிலர் ஊர்மிளா, அறையை மாற்றவும் உத்தரவிட்டார். பூரி சுட வசதியாக எல்லாப் பொருட்களும் கிடைத்தது எப்படி என்றும் விசாரித்தார்.

இடமாற்றம்:

நேற்று முன்தினம், அர்ஜுனன், வேறு அறைக்கு மாற்றப்பட்டான். அவன் மட்டுமின்றி, அவன் அறையில் அடைக்கப்பட்டு இருந்த பிற கைதிகளும் வேறு அறைக்கு, மாற்றம் செய்யப்பட்டனர்.நேற்று காலை, வழக்கம் போல் அறையில் இருந்து வெளியேறிய கைதிகளில், அர்ஜுனன், திடீர் என, பிளாக் எண். 8, அருகே இருந்த மரத்தில் ஏறி, தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தான். அவனுக்கு ஆதரவாக ஏழு பேர், மரத்தில் ஏறி தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

மேலும், அவர்கள், தங்களின் அறைகளில் சோதனை நடத்தக் கூடாது; பூரி உள்ளிட்ட உணவுகளை சமைத்து சாப்பிட அனுமதிக்க வேண்டும்; மேலும், மீண்டும் ஒரே அறையில், தங்களை அடைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். இவர்களிடம் ஜெயிலர் ஊர்மிளா பேச்சுவார்த்தை நடத்தினார்.கண்காணிப்பாளர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால், மட்டுமே போராட்டத்தை கை விடுவோம் என, தெரிவித்தனர். அதை அடுத்து கண்காணிப்பாளர், பேச்சுவார்த்தை நடத்தி, கைதிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
விசாரணை:

கைதிகளின் இந்த திடீர் போராட்டத்தின் பின்னணி குறித்து, சிறைத் துறை அதிகாரிகளுடன், போலீசார் இணைந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கைதிகளை போராட்டத்துக்கு தூண்டியது, தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் கலவர வழக்கில் கைதாகி, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ரஜினிகாந்த் என்பது தெரிய வந்துள்ளது.

அதை அடுத்து ரஜினிகாந்த் உட்பட, தற்கொலை மிரட்டலில் ஈடுபட்ட எட்டு கைதிகளையும், வேறு சிறைக்கு மாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.


-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sat Dec 08, 2012 2:29 pm

வேலூர் சிறையில் ரூ.1,38 000 பறிமுதல்

வேலூர்: வேலூர் சிறையில் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மத்திய சிறையில் மாவட்ட எஸ்.பி., ஈஸ்வரன் தலைமையில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் 5 டி.எஸ்.பி., 138 போலீசார் ஈடுபட்டனர். இந்த சோதனை அதிகாலை 6.30 மணி முதல் காலை 9.30 வரை நீடித்தது. அப்போது கைதிகள் அறையில், ரூ. ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் பணம், 5 சிம்கார்டுகள், 10 மொபைல்கள், 138 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sat Dec 08, 2012 2:30 pm

காவிரி நீர் தமிழகம் வந்தது

மேட்டூர்: கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட காவிரி தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. நீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். இன்று மாலைக்குள் தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரியில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, கர்நாடகா 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sat Dec 08, 2012 2:31 pm

காவிரி விவகாரம்: மாண்டியாவில் இன்று பந்த்

பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதை கண்டித்து கர்நாடகாவில் இன்று மாண்டியா மாவட்டத்தில் பந்த் நடக்கிறது. இதையொட்டி கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு பலத்த போலீ்ஸ் பாதுகாப்பு போடப்பட்டு்ள்ளது. மேலும் பல்வேறு கன்னட மற்றும் விவசாய அமைப்புகள், வீட்டிற்கு ஒருவர் பந்த்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், கடைகளை அடைக்கவும் வலியுறுத்தியுள்ளளனர்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sat Dec 08, 2012 2:32 pm

நாகை அருகே ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு

நாகை: நாகை அருகே பள்ளம் தோண்டிய போது, 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தானந்தம் (50). கொத்தனார். இவர் தனது வீட்டின் பின்புறத்தில் பள்ளம் தோண்டிய போது, அதில் ஒன்றரை அடி உயர ஐம்பொன்னால் ஆன விநாயகர், 2 அடி உயர வள்ளி மற்றும் ஒரு திருவாச்சி உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. இது தொடர்பாக வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sat Dec 08, 2012 2:34 pm

நிலத்தடியில் அமெரிக்கா அணுகுண்டு சோதனை

வாஷிங்டன்: நிலத்தடியில் அணுகுண்டு சோதனையை நடத்தி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தில் நிலத்தடியில் அமெரிக்கா இந்த சோதனையை நடத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய அணுசக்தி பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 27வது முறையாக அமெரிக்கா அணுகுண்டு சோதனையை நடத்தியுள்ளதாகவும், வாஷிங்டனை பாதுகாக்கும் நோக்கில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sat Dec 08, 2012 2:37 pm

ஏழையாகி விட்டதாக கருதும் பிரான்ஸ் மக்கள்

பாரிஸ்:பிரான்ஸ் நாட்டில் உள்ள, பெரும்பாலான மக்கள், தங்களை ஏழைகளாகக் கருதுகின்ற னர்.உலகின் வளர்ந்த நாடுகளாகக் கருதப்பட்ட,ஐரோப்பிய நாடுகள்,தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.வேலையில்லா திண்டாட்டம், ஆட்குறைப்பு, மானியங் கள் வெட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளால், அவதியுறும் ஐரோப்பிய மக்கள், தாங் கள் ஏழைக ளாகி விட்டதாகக் கருதுகின்றனர்.ஐரோப்பிய வர்த்தக பத்திரிகை இது குறித்து சமீபத்தில், ஆய்வு மேற்கொண்டது.

மாதச் சம்பளம் வாங்குவோர், கைத்தொழில் செய்வோர், தற்போதைய பொருளாதார நெருக் கடியால் தாங்கள் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளனர். டாக்டர்கள், இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகளாக இருப்பவர்கள், தாங்களும் பொருளாதார ரீதியாக நலிவடைந்து விட்ட தாக தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, பிரான்ஸ் நாட்டில் உள்ள, 50 சதவீதம் பேர், ஏழையாகி விட்டதாகவும், இன்னும் நிலைமை மோசமாகி விடுமோ என்று பயப்படுவதாகவும், கருத்து தெரிவித்துள்ளனர்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sun Dec 09, 2012 8:58 am

வட ‌கொரியா ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு

சியோல்:வடகொரியா விண்வெளியில் ‌ராக்கெட் ‌ஏவுதலை ஒத்தி வைத்துள்ளதாக கொரிய ஏஜென்சி செய்தி தெரிவிக்கிறது.தொழில் நுட்ப காரணங்களால் ராக்‌கெட் அனுப்புவதில் சி்க்கல் உள்ளதால் தற்சமயம் ராக்கெட் ஏவுதல் ஒத்து வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கூறியபடி டிசம்பர் 10 மற்றும் 22 தேதிகளில் அனுப்ப இயலாது என ரிவிக்கப்பட்டுள்ளது.இருந்தபோதிலும் அதற்காக கொரிய விண்வெளி குழு விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ராக்கெட் அனுப்புவது குறித்து தீவிரமாக செயல்பட்டுவருகிறார்கள். தற்‌போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அக்‌குழு தெரிவிக்கிறது.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sun Dec 09, 2012 8:58 am

இந்திய-சீன எல்லை பிரச்சினை:குர்ஷித்

பருக்காபாத்:இந்திய- சீன எல்லைப்பிரசசினை குறித்து இருநாடுகளிடையே சுமூகமாக பேச்சவார்த்தை நடப்பதாக மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் நேற்று கூறியதாவது:சீனாவில் வரக்கூடிய புதிய தலைவர்களால் இருதரப்பு பேச்சுவார்த்தை நற்பயனாக நடக்கும் என நம்பிக்க‌ை தெரிவித்தார்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sun Dec 09, 2012 8:59 am

மாணவர்களை கடத்த முயற்சி:3 வாலிபர்கள் போலீசில் ஒப்படைப்பு

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, தேவனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேட்டு விளாரத்தை சேர்ந்தவர் துரைசாமி, லட்சுமி தம்பதியரின் மகன் ஆனந்தகுமார், 6, வெங்கடாஜலம், ஜெயலட்சுமி மகன் விஜய், 7. இருவரும், அங்குள்ள ஊராட்சி துவக்கப்பள்ளியில், இரண்டாம் வகுப்பு படிக்கின்றனர்.அதேபோல், பொன்னுசாமி, தனலட்சுமி மகன் கேசவன், 7, முதல் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை, 11 மணிக்கு, சிறுவர்கள் மூன்று பேரும், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, “போர்டு’ காரில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், மாணவர்களை பிடித்து காரில் ஏற்றி, கடத்திச் சென்றனர்.அப்போது, மாணவர்கள் கூச்சலிட்டனர். அருகில் வேலை செய்து கொண்டிருந்த, தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், விபரீதத்தை உணர்ந்து, காரை வழிமறித்து மடக்கிப் பிடித்தனர்.காரில், மூன்று வாலிபர்கள் இருந்தனர். அவர்களை பிடித்த பொதுமக்கள், மாணவர்களை பத்திரமாக மீட்டனர். அதையடுத்து, மூன்று வாலிபர்களையும், வாழவந்திநாடு போலீஸில் ஒப்படைத்தனர். போலீசார், வாலிபர்களிடம் எவ்வித விசாரணையும் நடத்தாமல் இருந்ததால், ஆத்திரமடைந்த, 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, மாணவர்களை கடத்த முயன்ற காரை பறிமுதல் செய்து, வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

-தினமலர்

avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sun Dec 09, 2012 9:01 am

நுண்காப்பீடு திட்டம் இந்தியா முதலிடம்

மதுரை:""நுண்காப்பீட்டுத் திட்டத்தில் இந்தியா, முதலிடத்தில் உள்ளது,'' என, உலக வங்கி ஆலோசகர் மொஸ்லிதீன் அகமது தெரிவித்தார்.மதுரையில் தானம் அறக்கட்டளை சார்பில், நடந்த நுண்காப்பீட்டுத் திட்ட சிறப்புப் பயிற்சியின்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் 2005ல் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்று கோடி குடும்பங்கள் பயன்பெறுகின்றன. குறிப்பாக பயிர் காப்பீடு, கால்நடை, தனிநபர் விபத்து, மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. மத்திய அரசு, இதற்கான மானியத்தை, மார்ச் வரை, கொடுக்க அனுமதித்துள்ளது, என்றார். நெதர்லாந்து பிரதிநிதிகள் ரியான் ப்ளோரிஜின், கர்லிஜின் மொர்சிங், டாடா தானம் அகாடமி இயக்குனர் உமாராணி, பீப்பீள் மியூச்சுவல் சி.இ.ஓ., பாலசுப்ரமணியம் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடுகளை செய்தார்.

-தினமலர்

avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sun Dec 09, 2012 9:03 am

"மெகா லோக் அதாலத்'ரூ.3 கோடி இழப்பீடு
மதுரை:சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்த "மெகா லோக் அதாலத்' மூலம், 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 3 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் இதை துவக்கினார். மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 843, சிவில் மற்றும் காசோலை மோசடி மேல்முறையீடு 57 உட்பட 900 வழக்குகள் பட்டியலிடப்பட்டன.ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதிகள் கே.சாமிதுரை, ஐ.டேவிட் கிறிஸ்டியன், டி.தங்கவேல், மலைசுப்பிரமணியன், ஏ.ஆர்.ராமலிங்கம், எம்.தணிகாசலம், பி.முருகேசன் மற்றும் மாவட்ட கோர்ட் நீதிபதிகள் விசாரித்தனர். பதிவாளர் (நீதித்துறை) தங்கக்கனி, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அருள், போக்குவரத்துக் கழகம், இன்சூரன்ஸ் அதிகாரிகள், டாக்டர்கள் பங்கேற்றனர்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sun Dec 09, 2012 9:28 am

18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்பட்ட
18 ஆயிரத்து 382 ஆசிரியர்களுக்கு சென்னையில்
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வரும் 13-ஆம்
தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் விழாவில் பணி
நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

ஆசிரியர் தகுதி தேர்வு, மறுதேர்வில் வெற்றி
பெற்றவர்களில் 18,382 பேர் ஆசிரியர்களாக தேர்வு
செய்யப்பட்டனர். இவர்களில் 9,664 இடைநிலை
ஆசிரியர்களாகவும், 8,718 பேர் பட்டதாரி
ஆசிரியர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையில்
வரும் 13-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும்
விழாவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட
உள்ளன.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.
மைதானத்தில் இந்த விழா நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை
அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sun Dec 09, 2012 5:10 pm

இந்தியாவிற்குள் நுழைய அமெரிக்க எம்.பி.,க்களுக்கு ரூ. 125 கோடி செலவிட்ட வால்மார்ட்வாஷிங்டன்: இந்தியாவில் தனது சூப்பர் மார்க்கெட்டை திறக்க ஆதரவளிக்கக்கோரி, இதுவரை அமெரிக்க எம்.பி.,க்களுக்கு மட்டும் சுமார் ரூ. 125 கோடி (25 மில்லியன் டாலர்) செலவழித்துள்ளது வால்மார்ட் நிறுவனம்.
இந்தியாவில் சமீபத்தில் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பார்லிமென்ட்டில் இது தொடர்பாக நடந்த ஓட்டெடுப்பில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகியவற்றில் மத்திய அரசு வெற்றி பெற்றது. இதையடுத்து பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலடி பதிப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் சில்லரை வணிக ஜாம்பவான் என கருதப்படும் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் கால்பதிக்க அமெரிக்க எம்.பி.,க்களுக்கு இதுவரை சுமார் ரூ. 125 கோடி வரை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2008ம் ஆண்டு முதல் வால்மார்ட் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபை, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் சபை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றில் தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம், இந்தியாவில் கால்பதிக்கும் தங்களது முயற்சிகளுககு ஆதரவளிக்கக்கோரி, பேரம் பேசியுள்ளது வால்மார்ட். இந்தாண்டு மட்டும் இதுவரை ரூ. 18 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வால்மார்ட் நிறுவனம் உலகெங்கிலும் உள்ள தனது கடைகள் மூலம் ஆண்டுக்கு 444 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தகம் செய்து வருகிறது. இந்தியாவில் தற்போது சில்லரை வர்த்தகத்தில் புழங்கும் தொகை 500 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 50 ஆயிரம் கோடி). அதிகரித்து வரும் தனிநபர் வருமானம் மற்றும் செலவழிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், வரும் 2020ம் ஆண்டில் இந்த தொகை 1 டிரில்லியன் டாலர் (ரூ. 1 லட்சம் கோடி) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த அபரிமிதமான வளமே, வால்மார்ட் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் கடை விரிக்க ஆவலுடன் இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.
-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sun Dec 09, 2012 5:12 pm

காஷ்மீர் பிரச்னை தீர இந்தியா பாக்., மீண்டும் ஒன்றாக வேண்டும்: நீதிபதி மார்கண்டேய கட்ஜூபுதுடில்லி: காஷ்மீர் மற்றும் பயங்கரவாதிகள் பிரச்னை தீர, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த தெற்காசிய ஊடகங்கள் கமிஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், "காஷ்மீர் பிரச்னைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் இந்திய பாகிஸ்தான் பிரிவினை என்பதே ஒரு கள்ளத்தனமான நடவடிக்கை. இரு நாட்டு கொள்கை என்பதை நான் எப்போதும் ஒத்துக்கொள்ள மாட்டேன். பாகிஸ்தானை ஒரு சட்டபூர்வமான நாடாக நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். காஷ்மீர் பிரச்னைக்கு ஓரே நிரந்தர தீர்வு, மீண்டும் இந்தியா பாகிஸ்தான் நாடுகள் ஒன்றிணைவதே. மத்தியில் வலிமையான, மதச்சார்பற்ற, நவீன கால மனப்பான்மை கொண்ட அரசு அமைய வேண்டும்.

நான் சொல்கிறேன் இந்தியாவில் 90 சதவீதம் பேர் முட்டாள்கள். உங்களுக்கெல்லாம் தலையில் மூளை என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை. டில்லியில் வெறும் ரூ. 2 ஆயிரத்தில் ஒரு ஜாதி மோதலை ஏற்படுத்தி விடலாம். வழிபாட்டுத்தலம் என்று கூட பார்க்காமல் சிலர் இதை செய்யத் தயாராக இருக்கின்றனர். இதை நம்பி பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்கின்றனர். இந்த மோதலுக்குப்பின்னால் சில விஷமிகள் இருப்பதை அவர்கள் உணர்வதேயில்லை.

கடந்த 1857ம் ஆண்டுக்கு முன்னால் வரை இந்தியாவில் ஜாதி, இன மோதல்கள் இல்லை. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக உள்ளது. மிகவும் கசப்பான உண்மையை நான் உங்களுக்குச் சொல்கிறேன் இந்தியாவில் உள்ள மக்களில் 80 சதவீதம் பேர் மத வெறியர்களாக உள்ளன. இது எவ்வாறு நடந்தது. இதற்கு காரணம் ஆங்கிலேயர்களே. அவர்களின் வருகைக்குப்பின்னரே நாட்டில் மத மோதல்கள் அதிகரித்தன. இந்தியர்களை மத ரீதியாக பிரித்தால் மட்டுமே தங்களால் இந்நாட்டை ஆளமுடியும் என்ற ஆங்கிலேயர்களின் சதியே இந்த மோதல்களுக்கு காரணம். நமது முன்னோர்கள் இந்தி மற்றும் உருது ஆகிய மொழிகளை கற்றனர். ஆனால் பின்னர் வந்த ஆங்கிலேயர்கள், இந்தி இந்துக்களுக்கு என்றும், உருது முஸ்லிம்களுக்கு என்றும் பிரித்து, இருவருக்குமிடையே பிரிவினையை ஏற்படுத்தி விட்டனர். இந்தியர்களாகிய நாம், இந்த விளையாட்டெல்லாம் நம்மை முட்டாளாக்க செய்யப்பட்டவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த கசப்பான விஷயங்களை நான் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.

-தினமலர்

avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sun Dec 09, 2012 5:17 pm

மும்பை தாக்குதல்: பாக்., கோர்ட்டில் ஆதாரங்கள் ஒப்படைப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்து வரும் மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய படகுகளின் புகைப்படங்கள் ஆகியவற்றை புலனாய்வு போலீசார், பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sun Dec 09, 2012 5:18 pm

பிரதமர் மிகவும் நேர்மையானவர்: ரத்தன் டாடா

புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் நேர்மையானவர் என தொழிலதிபர் ரத்தன் டாடா கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, நாட்டில் நுகர்வோருக்கு மிகவும் பயனளிக்கும். இந்த விவகாரத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே திருப்தி கிடைத்துள்ளது. இது போதாது. இந்தியாவில் ஊழல் மற்றும் வரி காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. அரசின் ஒப்புதல் என்பதை எளிதாக எடுத்து கொள்ளக்கூடாது. இல்லாதபட்சத்தில் இந்தியாவை அனைவரும் எளிதாக எண்ணுவர். விமான போக்குவரத்து துறையில் நுழையும் எண்ணம் டாடா நிறுவனத்துக்கு இல்லை என கூறினார்

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 10, 2012 7:59 am

மதுரைக்கு ரூ.30 கோடி இழப்பு காவிரியால்

மதுரை:காவிரி நீர் பிரச்னையால், மதுரையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு, சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரிகள், மூன்று நாட்களாக காத்திருப்பதால், 30 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
மதுரையில் இருந்து தினமும், 50 லாரிகள், மைசூருக்கு நவதானியம், எண்ணெய், ஜவுளிகளை கொண்டு செல்கின்றன. அங்கிருந்து, ரப்பர் போன்ற பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.காவிரி பிரச்னையால், மைசூரு எல்லையில், பாதுகாப்பு கருதி, லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.மதுரை லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் சாத்தையா கூறியதாவது:பெங்களூருவிலிருந்து மைசூருக்கு செல்லும் பாதையும் மூடப்பட்டு உள்ளதால், நேற்று முன்தினம் வரை தமிழக எல்லையில், 2,000 லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.இதனால், 30 கோடி ரூபாய் வரை, வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதேசமயம், பெங்களூரு வழியே, வடமாநிலங்களுக்கு லாரிகள் வழக்கம் போல் செல்கின்றன, என்றார்.

-நன்றி:தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 10, 2012 8:00 am

எய்ட்ஸ் நோய் பாதிப்போர் குறைவு: கலெக்டர் பெருமிதம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தால், எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, கலெக்டர் லில்லி தெரிவித்தார்.உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி மாவட்ட நிர்வாகம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக தர்மபுரியில் மாணவ, மாணவிகளின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் லில்லி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தர்மபுரி அரசு மருத்துமனையில் தொடங்கிய பேரணி இலக்கியம்பட்டி, செந்தில் நகர் வழியாக கலெக்டர் அலுவலகத்தில் முடிந்தது.தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தின விழா கலெக்டர் லில்லி தலைமையில் நடந்தது. எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மேற்பார்வையாளர் உலகநாதன் வரவேற்றார். டி.ஆர்.ஓ., ராமர், தர்மபுரி மாவட்ட பாசிடிவ் நல சங்க தலைவர் ராஜாமகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியை தொடர்ந்து கலெக்டர் லில்லி பேசியதாவது:தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 2006ம் ஆண்டு முதல், 2012 நவம்பர் மாதம் வரை 278 கர்ப்பிணி பெண்கள் உட்பட, 5ஆயிரத்து, 343 பேர் எச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.2012 நவம்பர் மாதம் வரை, 444 பேர் எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட, 164 பேர் குறைவாகும். அரசின் சுகாதார அமைப்புகள் , அரசு சார நிறுவனங்கள், சமூக சங்கங்கள் ஆகியவை அரசின் பிற துறைகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் எச்.ஐ.வி., குறித்த விழிப்பபுணர்வு பிரச்சாரம் மற்றும் திட்டங்களால் இப்பாதிப்பு குறைந்துள்ளது.மாவட்டத்தில் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை பரிசோதனை மற்றும் சிறந்த சிகிச்சை வழங்கிட, 17 நம்பிக்கை மையங்கள், ஒரு கூட்டு மருந்து சிகிச்சை மையம், நான்கு இணைப்பு கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள், ஐந்து சுகவாழ்வு மையங்கள், மூன்று ரத்த வங்கிகள், ஒரு சமூக நல, மையம், ஒரு இளைப்பாறுதல் மையம், இரு இலவச சட்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது, என பேசினார்.எச்.ஐ.வி., தொற்றுள்ள குழந்தைகள் மற்றும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த, 62 குழந்தைகளுக்கு கல்வி செலவுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக, 2 லட்சத்து, 22 ஆயிரம் ரூபாய் மற்றும் எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, 70 விவசாயிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும், ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் ஆணையை கலெக்டர் லில்லி வழங்கினார்.மேலும் எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோய் தொடர்பாக பள்ளி, கல்லூரிகளில் நடந்த பேச்சு, ஓவிய, வாசகம் எழுதும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களும், எச்.ஐ.வி., தொற்றுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை, பிரசவம் பார்த்த மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள்,உதவி செவிலியர்கள் ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.எய்ட்ஸ் தடுப்பு சங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Mon Dec 10, 2012 8:01 am

2 மணி நேரத்திற்கு தோல்வி; 18 மணி நேரத்திற்கு? ஸ்டாலின் கிண்டல்

விருதுநகர்: ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் இருண்ட ஆட்சியை ஜெ., நடத்துகிறார். ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனை, சபாநாயகர் உட்பட 13 அமைச்சர்களை மாற்றியது; ஊழலுக்கு துணை போகாத உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டது தான். ஜெ., போடும் வழக்குகளை சந்திக்க தயாராக இருக்கிறோம்.தி.மு.க., ஆட்சியில், மின்தடை குறித்து முன் அறிவிப்பு செய்யப்பட்டது; இரண்டு மணிநேர மின்தடைக்கே, தி.மு.க.,விற்கு தோல்வி என்றால், 18 மணி நேரத்திற்கு என்ன பரிசோ? என்றார்

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum