ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சுட சுட செய்திகள்...அச்சலா

Page 6 of 15 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 15  Next

View previous topic View next topic Go down

best சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down


best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Muthumohamed on Thu Dec 13, 2012 12:04 am

சூப்பரோ சூப்பருங்க உங்க செய்திகள்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 12:06 am

2016ல் "சுகாய்-30' போர் விமான தளமாக மாறுகிறது சூலூர்:இந்திய பெருங்கடல் அச்சுறுத்தலை சமாளிக்க நடவடிக்கை

கோவை:""இந்திய பெருங்கடல் பகுதியில் எதிரி நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதத்தில், தென்பிராந்திய விமானப்படை பிரிவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. "சுகாய்-30' உள்ளிட்ட போர் விமானங்களை கையாளும் விதத்தில், சூலூர் விமான படை தளம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டில், இது முழு அளவில், செயல்பாட்டுக்கு வரும்,'' என, தென்பிராந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஆர்.கே.ஜாலி தெரிவித்தார்.
கோவை அருகேயுள்ள சூலூர் விமானப்படை தளத்தில், நேற்று ஏர்மார்ஷல் ஜாலி நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய பெருங்கடல் பகுதி, 4000 கி.மீ., நீளத்தில் மிகப்பெரிய கடற்கரையை கொண்டது. இப்பகுதியில் 97 சதவீத வர்த்தகமும் கடல் போக்குவரத்தை நம்பி உள்ளது. நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ தளவாடங்கள், பாதுகாப்பு அமைப்புகள், அணுமின்நிலையங்கள், விமான தொழிற்சாலைகள், விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் இங்கு அமைந்துள்ளன. இதனால், இப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
எதிரி நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதத்தில் தென்பிராந்திய படைப்பிரிவுகள், அதிநவீன தளவாடங்களுடன் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. சூலூர் விமான படைதளத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. விமான ஓடுதளம் (ரன்வே) நவீனப்படுத்தப்பட்டு, அடுத்த மாதம் முதல் தயார் நிலையில் வரும். தற்போது, கூடுதலாக "டாக்ஸி வே' அமைக்கப்பட்டுள்ளது.
"தேஜாஸ்' இலகுரக போர் விமானங்களை கையாளும் நாட்டின் முதல் விமான தளமாகவும் சூலூர் படைதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும். 2016ம் ஆண்டில் "சுகாய்-30' போர் விமானங்களை கையாளும் விதத்தில் சூலூர் தளம் உருவாக்கப்படும். அதிநவீன போர்விமானங்கள், @ரடார்கள் மற்றும் பாதுகாப்பு தளவாட கருவிகள் நிறுவப்படும்.கடல் வழியான நடமாட்டத்தை கண்காணிக்கவும் , எந்த அச்சுறுத்தல் வந்தாலும் எளிதில் இயங்கவும், நிலை நிறுத்தவும் தயாராக விமானப்படை தளங்கள் உள்ளன. தேவைப்பட்டால், இங்குள்ள படைப்பிரிவு (ஸ்குவாட்ரன்) நிர்வாக வசதிக்காக, வேறு இடத்தில் மாற்றப்படும்.இதேபோல், தஞசாவூரிலும் விரைவில் முழு அளவிலான விமான படைதளம் செயல்படத் துவங்கும். ஒரு படைத் தளம் உருவாக்க 10 ஆண்டுகள் வரை தேவைப்படும். இதற்கு 2,000 கோடி முதல் 3,000 கோடி ரூபாய் வரை செலவாகும்.
விமானப்படையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பற்றாக்குறை எதுவும் இல்லை. ஓய்வு காலத்துக்கு முன்பே அலுவலர்கள் பணியில் இருந்து விலகுவதாக கூறுவது, கவலை அளிக்கக் கூடியதாக இல்லை. ஆண்டுதோறும் புதிய அலுவலர்கள் பலர் பணியில் சேர்ந்து வருகின்றனர். இதில், தென் மாநிலங்களின் பங்களிப்பு பாராட்டும் வகையில் உள்ளது. கால நிலை மாற்றத்தால், போர் விமானங்களை இயக்குவதில் சிரமம் எதுவும் இல்லை. இயற்கை சூழல் மாற்றம், இடர்பாடுகளை சமாளிக்கும் வகையில், பைலட்களுக்கு அதிநவீன பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, ஏர் மார்ஷல் ஜாலி தெரிவித்தார்.


-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 12:11 am

ஹைதராபாத் ஆஸ்பத்திரியில் குழந்தையின் கைவிரல்களை பூனை கடித்து தின்றதாக பெற்றோர்கள் புகார்
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹைதராபாத்தின் அரசு மருத்துவமனையில் தினக்கூலி ஒருவரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அங்கு தங்கி தாயும் சேயும் சிகிச்சை பெற்றுவந்த போது குழந்தையின் கையை பூனை கடித்துள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த இந்த தவறை மறைக்க பெற்றோர்களுக்கு தெரியாமல் கையில் கட்டு போட்டு அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருக்கின்றனர்.

குழந்தையின் கையை பிரிக்கவேண்டாம் மற்றும் யாருக்கும் இந்த குழந்தையை காட்டவேண்டாம் என்று கூறி அந்த குழந்தையை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி அவர்களுடைய கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டுக்கு சென்ற அந்த தினக்கூலி பெற்றோர்கள் குழந்தையின் கையில் சுற்றியிருந்த துணியை பிரித்து பார்த்தனர்.

அப்போது குழந்தையின் கையில் விரல்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் மனித உரிமை அமைப்பினர் அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைக்கு, அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

-மாலைமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 12:12 am

மரண தண்டனை குற்றவாளி அப்சல் குருவை உடனே தூக்கிலிடவேண்டும்: திக் விஜய்சிங் வலியுறுத்தல்

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் இன்று தனது சொந்த நகரமான மத்தியப் பிரதேச மாநிலம் ரகோகருக்கு சென்று இருந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பாராளுமன்ற தாக்குதல் மரண தண்டனை குற்றவாளி அப்சல் குரு பற்றி கூறியதாவது:-

பாராளுமன்ற தாக்குதலில் மரண தண்டனை குற்றவாளி அப்சல் குருவை விரைவில் தூக்கிலிடப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன். அப்சல் குருவால் கொடுக்கப்படும் கருணை மனுவை பரிசீலனை செய்து உடனடியாக மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

அப்சல் குருவை தூக்கிலிடப்படுவது குறித்து பாரதீய ஜனதா இரட்டை நிலைபாட்டுடன் இருக்கிறது. ஒரு புறம் அப்சல் குருவை தூக்கிலிடவேண்டும் என்கிறது. மற்றொரு புறம் பஞ்சாப் தீவிரவாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைக்கவேண்டும் என்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 12:13 am

அடுத்த வருடம் முதல் செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து: மத்திய மந்திரி கபில் சிபல் உறுதி

இந்தியாவிலுள்ள மொபைல் போன் பயன்பாட்டாளர்கள் அடுத்த வருடம் முதல் ரோமிங் கட்டணம் கட்ட தேவையில்லை என்று மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி கபில் சிபல் என்று கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தகவல் தொடர்பு துறை கொள்கை 2012-ன் படி 'ஒன் நேசன் - பிரீ ரோமிங்' என்ற குறிக்கோளை நடைமுறைப் படுத்துவோம் என்று முன்னதாகவே சொல்லியிருந்தோம். நாடு முழுவதும் ஒரே போன் நம்பரை பயன்படுத்துவதற்கு ரோமிங் கட்டணம் கட்ட வேண்டும் என்ற நடைமுறையை நீக்குவது தொடர்பான கொள்கைக்கு கடந்த மே மாதமே எங்கள் துறை ஒப்புதல் அளித்து விட்டது.

அதன் படி 2013-ம் ஆண்டு முதல் ரோமிங் கட்டணம் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இதற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளிக்கும். அதன் பிறகு இந்த சலுகை நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 12:14 am

தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் 27 லட்சம் லிட்டராக உயர்வு: அமைச்சர் மூர்த்தி தகவல்

நந்தனம் ஆவின் வளாகத்தில் 'ஆவின் புரோ பால்' என்ற புதிய வகை பாலை அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அண்ணாநகர் பகுதிக்குட்பட்ட ஆசிய விளையாட்டு கிராமத்தில் குடியிருக்கும் ஆவின் நுகர்வோர்களுக்கு ஆவின் மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து வழங்கும் 'ஆவின் ஸ்மார்ட் கார்டு' வழங்கினார். நிகழ்ச்சிக்கு பால்வளத்துறை ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குநர் ராமச்சந்திரன், முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்று அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-

முதல்-அமைச்சர் தமிழகத்தில் இரண்டாவது வெண்மைப் புரட்சியை உருவாக்கிட பல்வேறு பால் வளத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் காரணமாக தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் சரித்திர சாதனையாக நாளொன்றுக்கு 27 லட்சம் லிட்டர் என்ற அளவினை எட்டியுள்ளது. தற்பொழுது சென்னை மாநகரில் 4 வகையான பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1.5 சதவிகித கொழுப்புச்சத்து, 8.5 சதவிகித இதர சத்துக்கள் கொண்ட இருமுறை சமன்படுத்திய பால், 3 சதவிகித கொழுப்புச்சத்து, 8.5 சதவிகித இதர சத்து கொண்ட சமன்படுத்திய பால், 4.5 சதவிகித கொழுப்புச்சத்து, 8.5 சதவிகித நிலைப்படுத்திய பால் ஆகியவையாகும். இன்று ஆவின் புதிதாக 3.5 சதவீத கொழுப்புச்சத்தும் 10 சதவீத இதர சத்துக்களும் கொண்ட 'ஆவின் புரோ' என்ற புதிய வகை பால் 500 மி.லி ரூ.17-க்கு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாக 'ஆவின் புரோ பால்' மொத்த விற்பனையாளர்கள் மூலம் தனியார் சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும். ஆவின் நுகர்வோர்களுக்கு பால் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. அண்ணா நகர் பகுதிக்குட்பட்ட ஆவின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் கார்டு இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும். இணையதளம் மூலம் 658 நுகர்வோர்கள் ஸ்மார்ட் கார்டு பெற விண்ணப்பித்துள்ளனர். புதிய மாதாந்திர பால் அட்டை பெற 159 நுகர்வோர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு புதிய பால் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


-மாலைமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 12:15 am

மரணம் அடைந்த 5 போலீசார் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் உதவி: ஜெயலலிதா அறிவிப்பு

முதல் - அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை பெருநகர காவல், ஏழுகிணறு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த காமராஜ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 7.12.2012 அன்று காலமானார்.

நீலகிரி மாவட்டம், சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த கல்லன் 7.12.2012 அன்று சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த துளசி 8.12.2012 அன்று சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில், கானாத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படைப் பிரிவு முதல் நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த லெட்சுமிநாதன் 6.12.2012 அன்று பணியில் இருக்கும் போது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தில் பலத்த காயமடைந்து, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 8.12.2012 அன்று உயிரிழந்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகரம், பாலக்கரை போக்கு வரத்து ஒழுங்கு பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த ராதாகிருஷ்ணன் 8.12.2012 அன்று தனது இரு சக்கர வாகனத்தில் மல்லாச்சிப்புரம் அருகே சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் சதீஷ்குமார் 8.12.2012 அன்று காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், யு.கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துர்வாசன் என்பவரின் மகன் கிருஷ்ணப்பா 9.12.2012 அன்று தேன்கனிகோட்டை வட்டம், சின்ன நாகதுணை கிராமம் அருகே காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவங்களில் காலமான சதீஷ்குமார் மற்றும் கிருஷ்ணப்பா ஆகியோரின் குடும்பத்திற்கு வனத்துறை மூலம் தலா மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், சோழசிராமணி கிராமம், தமிழ் நாடு மின்சார வாரியத்தின் பவானி கட்டளை தடுப்பணை- 3ல் 5.12.2012 அன்று ஜெனரேட்டர் இயந்திரத்தின் சோதனை ஓட்டத்தின் போது, சேலம் மாவட்டம், மேச்சேரி, காவேரி புரத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் ரமேஷ் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

ஈரோடு நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் கணேஷ் மற்றும் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், குள்ளவீரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் தர்மன் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ரமேஷின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்த கணேஷ் மற்றும் தர்மன் ஆகியோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-மாலைமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 12:15 am

கிறிஸ்துமஸ்-பொங்கலுக்கு முன்னதாக ஒரே தவணையில் ரேசன் பொருட்கள்: அமைச்சர் செல்லூர் ராஜு உத்தரவு

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கே.கே.நகர், அசோக் பில்லர், போரூர், குன்றத்தூர் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் சோதனையில் ஈடுபட்டார். பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, மண்எண்ணை, சமையல் எண்ணை, பருப்பு வகைகள் ஒரே தவணையில் கொடுக்க வேண்டும் என்றும் ரேசன் கடை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் அத்தியாவசிய பொருட்களை முன்னதாக வழங்க வேண்டும். பொருட்களின் அளவு குறையாமல் வினியோகிக்க வேண்டும். இதில் தவறு செய்யும் ஊழியர்கள் மீது தயவு தாட்சன்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இந்த ஆய்வின் போது, கூடுதல் பதிவாளர் கலையரசி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

-மாலைமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 12:16 am

கடும் கோபத்தில் தாயை 94 தடவை குத்தி கொன்ற சிறுவன்

இங்கிலாந்தில் டார்செட் பகுதியில் உள்ள வேமவுத் என்ற இடத்தை சேர்ந்தவர் லீ விட்டில் (42). இவரது மகன் கிரன் ஸ்மித் (17). சம்பவத்தன்று விட்டில் உள்ள படுக்கை அறையில் வீட்டில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் ஸ்மித்திடம் விசாரித்தனர்.

அப்போது, போதை மருந்து விவகாரத்தில் எனது அண்ணன் சிக்கி கொண்டான். இதையடுத்து யார்க்ஷயரில் உள்ள டோன் காஸ்டரில் இருந்து வந்த மர்ம நபர்கள் எனது தாயுடன் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொன்று விட்டு எனது தாயாரிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி விட்டனர் என்று கதை அளந்தான். இதை போலீசார் நம்ப வில்லை.

மேலும், அவனது நடத்தையில் சந்தேகமும் ஏற்பட்டது. எனவே, அவனிடம் துருவி துருவி விசாரணை நடத்திய போது தாயை தானே கத்தியால் குத்தி கொன்றதை ஒப்புக் கொண்டான். தாயாருக்கு என்னை அதிகமாக பிடிக்காது. இதனால் அவர் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது. எனவே, அவருடன் வாக்குவாதம் ஏற்பட்ட போது ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தி கொன்று விட்டு பால்கனி வழியாக பைப் மூலம் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டேன் என்றான்.

கொலை செய்யப்பட்ட லீ விட்டிலின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பபட்டது. அங்கு அவரது உடலில் தலை, முகம், கை, கால்கள், முதுகு, தண்டு வடம் உள்ளிடட் 94 இடங்களில் கத்திகுத்து காயங்கள் இருந்தன. இதனால் அவரை ஸ்மித் 94 தடவை கத்தியால் குத்தி கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

-மாலைமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 12:17 am

கொழும்பில் சிங்களர்களை விட தமிழர்களே அதிகம்: மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல்

இலங்கையில் சமீபத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாகாணம் வாரியாகவும், நகரங்கள் மற்றும் கிராமங்கள் வாரியாகவும் இது தனித்தனியாக நடைபெற்றது.

அதில், தலைநகர் கொழும்பில் சிங்களர்களைவிட தமிழர்கள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அப்போது கொழும்பில் 50 சதவீத சிங்களர்கள் குடியேறி இருந்தனர். தற்போது நடைபெற்ற மக்கள்தொகை புள்ளி விவரப்படி அங்கு சிங்களர்களின் மக்கள் தொகை 24 சதவீதமாக குறைந்துள்ளது.

மாறாக 24.5 சதவீதம் இருந்த தமிழர்களின் தொகை 33 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோன்று 19 சதவீதமாக இந்த முஸ்லிம்களின் தொகையும் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கொழும்பு நகரில் தற்போது 79,468 சிங்களர்களும், 1 லட்சத்து 6 ஆயிரத்து 325 தமிழர்களும், 1 லட்சத்து 26 ஆயிரத்து 345 முஸ்லிம்களும் உள்ளனர்.

-மாலைமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 12:18 am

1000 கிலோ வெடிபொருள் ஏந்தி செல்லும் அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியாவின் பாதுகாப்புக்காக அக்னி ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் அக்னி-1 ரக ஏவுகணைகள் ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அக்னி-1 ரக ஏவுகணைகளை இந்திய ராணுவ அதிகாரிகள் அடிக்கடி சோதித்து பார்த்து வருகிறார்கள். கடைசியாக இந்த ரக ஏவுகணை கடந்த ஜுலை மாதம் 13-ந் தேதி சோதித்து பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அக்னி-1 ரக ஏவுகணை இன்று காலை மீண்டும் சோதிக்கப்பட்டது. வழக்கம் போல் ஓடிசா மாநில கடலோரத்தில் இந்த சோதனை நடந்தது. ஓடிசாவில் இருந்து கடலுக்குள் சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீலர் தீவில் இருந்து காலை 8.30 மணிக்கு அக்னி-1 ஏவுகணை ஏவப்பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக ராணுவ அதிகாரி பிரசாத் அறிவித்துள்ளார். இன்றைய சோதனையின் போது அக்னி-1 ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை சரியாக தாக்கியது. இத்தகைய சோதனை தொடந்து நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்னி-1 ஏவுகணை சுமார் 12 டன் எடை கொண்டது.15 மீட்டர் நீளம் உடையது. இந்த ஏவுகணை சுமார் 1000 கிலோ எடை கொண்ட வெடிப் பொருட்களை ஏந்திச் செல்லும். 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது.

-மாலைமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 12:20 am

வில்லிவாக்கம்: ஆட்டோவில் பயணி தவற விட்ட ரூ. 2 லட்சம் நகைகள் - டிரைவர் போலீசில் ஒப்படைத்தார்

அண்ணாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் கந்தன் (43). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை சவுகார்பேட்டையில் இருந்து அயனாவரத்துக்கு பயணிகளை ஏற்றி வந்தார். அவர்கள் இறங்கிச் சென்றதும் வீடு திரும்பி ஆட்டோவை நிறுத்தினார். மறுநாள் காலை ஆட்டோவை சுத்தம் செய்தபோது இருக்கையின் பின்னால் துணிப்பையில் புடவை, ஜாக்கெட் மற்றும் தங்க நெக்லஸ், கம்மல், வளையல், செயின், மோதிரம், செல்போன் போன்றவை இருந்ததை பார்த்து திடுக்கிட்டார். யாராவது தவற விட்ட பயணி வருவார்களா? என 2 நாட்களாக எதிர்பார்த்து இருந்தார்.

நகைகளையும் வீட்டில் வைத்து இருந்தார். ஆனால் யாரும் வராததால் இன்று காலை ஆட்டோ டிரைவர் கந்தன் நகைப்பையுடன் செகரட்டரியேட் காலனி போலீஸ் நிலையம் சென்றார். அங்கு போலீஸ் அதிகாரிகளிடம் நகைகளை ஒப்படைத்தார். இதை தவற விட்ட பயணிகள் உரிய அடையாளங்களை கூறி பெற்றுச் செல்லலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

-மாலைமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 12:23 am

நாக்பூரில் நாளை 4-வது டெஸ்ட்: வெற்றி நெருக்கடியில் இந்தியா
கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. மும்பையில் நடந்த 2-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 3-வது டெஸ்டில் 7 விக்கெட்டிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாக்பூரில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. டெஸ்ட் தொடரை சமன் செய்ய இந்த டெஸ்டில் கட்டாய வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தொடர்ந்து 2 டெஸ்டில் டோனி தலைமையிலான இந்திய அணி தோற்றதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்த தோல்வி காரணமாக தேர்வு குழு இந்திய அணியில் அதிரடி மாற்றம் செய்துள்ளது. யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான் ஆகியோருக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா, பிïஸ் சாவ்லா, பர்வீந்தர் அவன்னா இடம் பெற்று உள்ளனர். இந்திய அணி மும்பை மற்றும் கொல்கத்தா டெஸ்டில் அனைத்து வகையிலும் இங்கிலாந்திடம் சரண்டர் ஆனது. இந்திய அணியின் பேட்டிங்கும் சரியில்லை. பந்துவீச்சும் கவலை அளித்தது. இதையெல்லாம் நாக்பூர் டெஸ்டில் சரி கட்ட வேண்டிய நிலை உள்ளது. ஒட்டு மொத்த பேட்டிங்கும் மோசமாக உள்ளது.

சீனியர் வீரர்களான தெண்டுல்கர், ஷேவாக், காம்பீர் நிலைத்து நின்று ஆடி ரன்களை குவிப்பது அவசியமாகிறது. இதேபோல இளம் வீரர்களான புஜாரா, கோலி ஆகியோர் தங்களது பங்களிப்பை உணர்ந்து ஆட வேண்டும். மோசமான நிலையில் இருக்கும் கேப்டன் டோனி தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

பேட்டிங் திறன் குறைந்து காணப்படும் தெண்டுல்கர் ஓய்வு நெருக்கடியில் உள்ளார். நாக்பூர் டெஸ்டோடு அவர் ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் இந்த டெஸ்ட் அவருக்கு கடைசி டெஸ்டாக இருக்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த டெஸ்டில் அவர் சிறப்பாக ஆட வேண்டிய நிலையில் உள்ளார். யுவராஜ்சிங் இடத்தில் ரவிந்திர ஜடேஜா இடம் பெறலாம். ஏனென்றால் அவர் சமீபத்தில் ரஞ்சி டிராபியில் டிரிபிள் செஞ்சூரி அடித்தார். அதோடு ரகானேவும், முரளி விஜய்யும் தொடக்க வீரர்கள் என்பதால் ஜடேஜாவுக்கே வாய்ப்பு கிடைக்கும்.

ஜாகீர்கான் நீக்கப்பட்டதால் அந்த இடத்தில் அசோக் திண்டா இடம் பெறுவார். அவரும், இஷாந்த் சர்மாவும் வேகப்பந்து வீரர்களாக இருப்பார்கள். புதுமுக வீரர் அவன்னாவுக்கு வாய்ப்பு குறைவே. சுழற்பந்தில் அஸ்வின், ஒஜா தொடர்ந்து ஆடுவார்கள். பியூஸ் சாவ்லாவுக்கு குறைவான வாய்ப்பே இருக்கிறது.

இங்கிலாந்து அணி பொறுத்தவரை `டிரா' செய்தாலே தொடரை கைப்பற்றும். ஆனால் அந்த அணி இந்த டெஸ்டிலும் வென்று `ஹாட்ரிக்' வெற்றியை பெற்று தொடரை வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. இங்கிலாந்து அணி கடைசியாக 1984-85-ம் ஆண்டு இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. டெவிட் கோவர் தலைமையிலான அந்த அணி 5 டேஸ்ட் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வெல்லும் ஆர்வத்தில் இங்கிலாந்து உள்ளது.

இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் கேப்டன் கூக், பீட்டர்சன், டிராட், பிரையர் ஆகியோரும், பந்துவீச்சில் ஆண்டர்சன், ஸ்டீவன்பின், பனேசர், சுவான் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

-மாலைமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Muthumohamed on Thu Dec 13, 2012 1:14 pm

முலாயம் மீது சிபிஐ விசாரணையைத் தொடர உச்சநீதிமன்றம் அனுமதிசமாஜ்வாடிக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் மற்றும் அவரது மகன் அகிலேஷ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் மற்றும் டிம்பிள் யாதவ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சிபிஐ விசாரணை நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று வெளியானது. அதில், முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவ் மீதான சிபிஐ விசாரணையை எவ்வித இடையூறும் இன்றி சுதந்திரமாக சிபிஐ நடத்தலாம் என்றும், டிம்பிள் யாதவ் மீதான விசாரணையை கைவிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், சிபிஐ தனது விசாரணை அறிக்கையை, மத்திய அரசிடம் தாக்கல் செய்யாமல், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்திக் கொள்வதாக முலாயம் சிங் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Muthumohamed on Thu Dec 13, 2012 1:16 pm

ஈரான் சிறையில் 22 இந்திய மீனவர்கள்! மத்திய, மாநில அரசுகள் தலையிடுமா?

இந்திய மீனவர்கள் 22 பேர் ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவரம் அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மனித உரிமை மீறலை தடுத்துநிறுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று மீனவர் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
மீனவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது குறித்து தங்களுக்கு அதிகாரபூர்வ தகவல் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினரும் தங்களை தொடர்பு கொண்டுள்ளதாகவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுசெயலர் அருள்தந்தை சர்ச்சில் புதன்கிழமை தெரிவித்தார்.
வளைகுடா நாடுகளில் தமிழகத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 90 சதவிகிதம் பேர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
இந்திய தீபகற்ப பகுதியில் இருப்பதாலும் பெரும் கடல்பரப்பு உள்ளதாலும் மீனவர்கள் அடுத்த நாட்டு கடல் எல்லையை தாண்டும் பிரச்னைகள் அவ்வளவாக எழவில்லை. ஆனால், வளைகுடா நாடுகளின் கடற்பகுதி குறுகியது.
இதனால் அங்கு கடலில் மீன்பிடிக்க படகுகளில் செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வது அவர்களுக்கு தெரியாமலேயே நடந்து விடுகிறது.
இதனால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்படுவது கடந்த பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த அக்டோபர் 10-ம் தேதி கத்தார் நாட்டிலிருந்து 6 விசைப்படகுகளில் 29 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
அவர்களில் 26 பேர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரோக்கியபுரம், கடியப்பட்டினம், குளச்சல், சைமன் காலனி, இனையம், இனையம்புத்தன்துறை, ராமன்துறை, பூத்துறை ஆகிய கடற்கரை கிராமங்களை சேர்ந்தவர்கள். ஒருவர் காரைக்காலை சேர்ந்தவர், மேலும் இருவர் கேரள மாநிலத்தவர்.
கத்தார் நாட்டில் தங்கியிருந்து பல ஆண்டுகளாக மீன்பிடித்து வந்த இவர்கள்,அன்று ஈரான் கடல் எல்லையை தாண்டியதாக அந்நாட்டு கடலோர காவல் படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
சிறைபிடிக்கப்படும் மீனவர்கள் வழக்கமாக ஓரிரு நாளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்படுவார்கள்.
ஆனால் இந்த மீனவர்கள் கடலுக்குள் படகுகளிலேயே 60 நாள்களுக்கு மேல் சிறைவைக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு சிறைவைக்கப்பட்டிருந்தோருக்குப் பசியாற போதிய உணவு அளிக்கப்படவில்லை. மாற்று உடைகளும் வழங்கப்படவில்லை. இது குறித்து மீனவர்களின் உறவினர்களுக்கு தெரியவந்ததும் அவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு இந்த விவகாரத்தில் தலையிட்டு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு அந்த அமைப்பின் கத்தார் நாட்டு ஒருங்கிணைப்பாளர் எலியாஸ் மூலம் உதவிகள் கிடைக்கச்செய்தது.
இதனிடையே கடந்த 8-ம் தேதி 22 மீனவர்களை படகுகளில் இருந்து கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கிறார்கள். மற்ற 7 பேரும் படகுகளிலேயே சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் தற்போது இக்கிஸ் என்ற தீவுப்பகுதியிலுள்ள பெட்ராபாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சிறையில் அடைக்கப்பட்டுல்ள மீனவர் ரவி என்பவர், தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் வளைகுடா நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் தங்கனிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் கண்ணீர்விட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டால் உணவு, மாற்று உடை, பாதுகாப்பு கிடைக்கும் என்று மீனவர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அதற்குமாறாக சிறையில் மனித உரிமை மீறல் நடந்து வருவது தெரியவந்துள்ளது. 22 மீனவர்களும் உட்காரகூட முடியாத அளவுக்கு குறுகிய அறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இரவில் நின்றுகொண்டே தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. காலை, மாலை வேளைகளில் ஒரே ஒரு குப்பாஸ் எனப்படும் வெண்ணெய் தடவிய ரொட்டித்துண்டு மட்டும் அளிக்கப்படுகிறது.
ஆனால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும்போது ஒரு நேரத்துக்கு 5 குப்பாஸ் வரையில் சாப்பிடுவார்கள். தற்போது 22 மீனவர்களுக்கும் மதியம் ஒரே ஒரு தட்டில் மிகக்குறைந்த அளவுக்கே சாப்பாடு அளிக்கப்படுகிறது. ஒரு தட்டிலுள்ள சோற்றை காக்கைகள் கொத்தி தின்பதுபோல் 22 மீனவர்களும் சாப்பிட நேரிட்டுள்ளது. இதனால் அவர்கள் பசியால் வாடுகிறார்கள்.
இந்த மனித உரிமை மீறல் குறித்து தெற்காசிய மீனவர் தோழமை ஆலோசகர் வழக்குரைஞர் கொச்சேரி ஈரானிலுள்ள இந்திய தூதரகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்த மனித உரிமை மீறலை தடுக்கவும், சிறையிலுள்ள மீனவர்களுக்கு உணவு கிடைக்கவும், அப்பாவி இந்திய மீனவர்களை விடுவிக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்ச்சில் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் உடனே நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வளைகுடா நாடுகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவும், அந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

தினமணி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Muthumohamed on Thu Dec 13, 2012 1:17 pm

பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை மீண்டும் துவக்கம்

பழனி முருகன் கோயிலில், மலைமீதுள்ள கோயிலுக்குச் செல்ல அமைக்கப்பட்டிருந்த ரோப் கார் சேவை இன்று மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.

ரோப் காருக்கான கம்பி வட கயிறு மாற்றப்படும் பணி நடைபெற்று வந்ததை ஒட்டி, கடந்த ஒன்றரை மாதமாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பராமரிப்புப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில், இன்று ரோப் கார் சேவை மீண்டும் துவங்கியுள்ளது. இதனால் பழனிக்கு வந்துள்ள பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Muthumohamed on Thu Dec 13, 2012 1:18 pm

சூப்பர் சீரிஸ் இறுதிச் சுற்றுகளில் சாய்னா நேவால் தோல்வி

லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால், பி.டபிள்யு.எஃப் சூப்பர் சீரிஸ் இறுதிச் சுற்றுப் போட்டிகளில் மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்தார்.

வியாழக்கிழமை இன்று குரூப் பி பிரிவில் நடைபெற்ற இரண்டாவது நேரடிப் போட்டியில், தாய்லாந்தின் ரட்ச்னாக் இண்டனோனிடம் 21-13, 21-16 என்ற புள்ளிகளில் சாய்னா தோல்வியைத் தழுவினார். இந்தப் போட்டி 34 நிமிடங்கள் நடந்தது. கடந்த 2011ம் ஆண்டு இதே சூப்பர் சீரிஸ் இறுதிப் போட்டியில் அவர் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் உலகின் இரண்டாம் நிலையில் உள்ள சாய்னா, அடுத்து வெள்ளிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் ஜூலியன் ஷென்க்குடன் மோதவுள்ளார்.

தினமணி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Muthumohamed on Thu Dec 13, 2012 1:19 pm

நாடாளுமன்ற தாக்குதல் தினம் அனுசரிப்பு : தலைவர்கள் அஞ்சலிடிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் 11வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தாக்குதல் தின அஞ்சலி நிகழ்ச்சியில், மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், மக்களவைத் தலைவர் மீரா குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாடாளுமன்றத் தாக்குதலின் போது உயிரிழந்த வீரர், வீராங்கனைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து தலைவர்களும் மௌன அஞ்சலி செலுத்தினர்.

2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்துக்குள் புகுந்த 5 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தினமணி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Muthumohamed on Thu Dec 13, 2012 1:25 pm

பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்!

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற, 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

சமீபத்தில், TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகமெங்கும் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவும், 92 லட்சம் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவும், சென்னை நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வி கல்லூரி திடலில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்புரையாற்றிய ஜெயலலிதா, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு தமது அரசு ஆற்றிவரும் சீரிய பங்கினைப் பற்றி விரிவாக குறிப்பிட்டார். அவற்றில், எப்போதும் இல்லாத வகையில், பள்ளி கல்விக்கு, ரூ.14,553 கோடி ஒதுக்கியது, 1 முதல் 12ம் வகுப்பு வரை கட்டணமில்லா கல்வி மற்றும் மாணவர் இடைநிற்றலை தவிர்க்க, 10 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, ரூ.5000 ஊக்கத்தொகை திட்டம் போன்ற அம்சங்கள் முக்கியமானவை.

விழாவில், மாவட்டத்திற்கு தலா 1 ஆசிரியருக்கு பணி நியமன ஆணையையும், 16 மாணவர்களுக்கு, விலையில்லா கல்வி உபகரணங்களையும் முதல்வர் வழங்கினார். இதர ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை, அந்த விழா அரங்கிலேயே, அமைச்சர்கள் வழங்கினார்கள்.

தினமலர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 8:28 pm

நன்றிகள் முத்துமுஹம்மது அவர்களே!! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Muthumohamed on Thu Dec 13, 2012 10:38 pm

@அச்சலா wrote:நன்றிகள் முத்துமுஹம்மது அவர்களே!! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

உங்களுக்கும் எனது நன்றிகள் மகிழ்ச்சி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 10:45 pm

பிறந்த நாள் விழா ரஜினி ‌பேச்சு ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சென்னை: சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா கூட்டம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவிற்கு ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் மைதானத்திற்கு திடீர் என வந்த ரஜினி ரசிகர்களின் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்டார். தொடர்ந்து ரசிகர்களிடையே ரஜினி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 10:45 pm

7 கோடி பேருக்கு வேலையில்லை: அமைச்சர்

புதுடில்லி: ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, இந்தியாவில் 7 கோடி பேர் வேலை இல்லாமலோ அல்லது சரியான வேலை அமையாமலோ இருக்கின்றனர் என கூறினார்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 10:46 pm

குஜராத்தில் 67 சதவீத ஓட்டுப்பதிவு

ஆமதாபாத்: குஜராத் சட்டசபைக்கு முதல் கட்டமாக 87 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 67 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 10:47 pm

சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றம்

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த டி. கார்த்திகேயன் மாசு கட்டுப்பாட்டு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய கமிஷனராக தொழில்துறைசெயலாளராக இருந்த விக்ரம் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் கலெக்டர் ராஜேந்திர ரத்னு வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். கடலூர் கலெக்டராக, கிர்லோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 6 of 15 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 15  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum