ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சுட சுட செய்திகள்...அச்சலா

Page 5 of 15 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15  Next

View previous topic View next topic Go down

best சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down


best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 12, 2012 12:31 am

@Muthumohamed wrote:உங்கள் சேவை எங்களுக்கு மென் மேலும் தேவை :suspect:

நன்றிகள் ... 🐰
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 12, 2012 10:27 am

சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர் காலமானார்

வாஷிங்டன்: சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர், செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. 2013ம் ஆண்டு கிராமி விருதுக்கு பண்டிட் ரவிசங்கர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 12, 2012 10:27 am

ஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தை

மும்பை: மும்பை பங்குச்சந்தை இன்று 92 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது. இன்று காலை 91. 65 புள்ளிகள் உயர்ந்து 19,478.79 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை 25.80 புள்ளிகள் உயர்ந்து 5,924.60 புள்ளிகளாக இருந்தது.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 12, 2012 10:28 am

தொடர் சரிவில் ஆப்பிள் நிறுவன பங்குகள்!!!

சிட்னி: அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமை இடமாக கொணடு, நவீன காலகட்டத்திற்கு தேவையான கம்ப்யூட்டர், ஐபோன், ஐபேடு போன்ற பொருட்களை தயாரித்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் நிறுவனத்தின் சென்ற ஆண்டு கால் இறுதி வருமானம் கலிபோர்னிய மாகாண அரசின் கஜானா கையிருப்பை விட அதிகமாக இருந்தது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலர் ஸ்டீவ் ஜாப் கான்செர் நோய் காரணமாக காலமானார். ஆப்பிள் நிறுவனத்திருக்கு இவருடைய மரணம் மிக பெரிய இழப்பாக இருந்தது.

மேலும் அண்மை காலமாக சாம்சுங் மற்றும் கூகுள் நிறுவனகள் , ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக மொபைல் போன்கள் மற்றும் டேபிலேட் பீசிஎனப்படும் கையளவு கணினி ஆப்பிள் தரத்திற்கு நிகராகவும் அதே சமயத்தில் குறைந்த விலையில் கொடுக்கின்றனர். இவை மட்டும் இல்லாமல் ஆப்பிள் ஐபோன், ஐபேடு ஆகிய வற்றில் இணைய தளத்தில் இறுதி டவுன்லோட் செய்ய இயலாது. ஆனால் சாம்சுங் மற்றும் கூகுள் நிறுவனகள் விற்கும் மொபைல் மற்றும் டேபிலேட் பீசீகளில் எதை வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து கொள்ளவும் , பயன் படுத்தும் வசதியும் உள்ளது. எனவே சாம்சுங் மற்றும் கூகுள் நிறுவன தயாரிப்பிற்கு உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

இது ஆப்பிள் நிறுவன பங்குகளை வெகுவாக பாதித்தது. அமெரிக்க $705ல் இருத்த ஆப்பிள் நிறுவன பங்குகள் வெகுவாக குறைய தொடங்கின. இதனை சரிகட்ட ஆப்பிள் நிறுவனம் 7 " ஐபேடுகளை அண்மையில் வெளியிட்டது . ஆனால் அந்த 7 " ஐபேடுகள் மக்களிடம் மிக பெரிய வரவேற்பை பெறவில்லை. இதனால் ஆப்பிள் நிறுவன பங்குகள் அமெரிக்க $547 ஆக குறைந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்க $420 ஐ தொடும் என கணிக்கப் பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலுக்கு உத்தரவாதம் என்ற நிலை மாறி , அந்த முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 12, 2012 10:29 am

நாடு முழுவஙதும் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை: 7வது சம்பள கமிஷன் அமைத்தல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் இன்று ‌வேலை நிறுத்தததில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மத்திய அரசின் சேவைகளான தபால்துறை, பாஸ்போர்ட் அலுவலகம் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 12, 2012 10:30 am

ராக்கெட்டினை ஏவியது வடகொரியா

பையோங்: நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் ராக்கெட்டினை வட‌கொரியா இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. அமெரிக்காவின் எதிர்ப்பினை மீறி இரண்டாம் கிம் ஜோங் என்ற இந்த ராக்கெட்டினை வடகொரியா ஏவியுள்ளதாக கூறப்படுகிறது. வடகொரியாவின் ராணுவ அமைச்சகம் சார்பில் தெற்கு கடற்கரையில் ஒகினாவா தீவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 12, 2012 10:30 am

விடியவிடிய நடந்த ஆசிரியர் தேர்வு கலந்தாய்வு

சென்னை:ஆசிரியர் தகுதி்த்தேர்வில் தேர்வு பெற்றவர்களுக்கான கலந்தாய்வு விடிய விடிய நடந்தது. இதில் அதிகாலை மூன்று மணி நடந்தது. உள் மற்றும் வெளி மாவட்டங்களில் பணி நியமனம் தொடர்பாக நேற்று துவங்கிய இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு துவங்கியது. நேற்று அதிகமான நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது இதையடுத்து நள்ளிரவு 3 மணி வரை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது .இதற்கான விழாவில் முதல்வர் ஜெ. கலந்து கொள்கிறார்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 12, 2012 10:31 am

போலீஸ் பாதுகாப்பு கேட்கும் டில்லி எம்.எல்.ஏ.க்கள்

புதுடில்லி: தங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர். கடந்த ஜூன் மாதம் டில்லியில், லோக் ஜனசக்தி கட்சியின் எம்.எல்.ஏ. ஷோயிப் இக்பாலை , மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் காயமடைந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.டில்லியில் நேற்று சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் நேற்று அனைத்துக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள்,தங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். இது தொடர்பாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரப்படும என முதல்வர் ஷீலா தீட்ஷித் தெரிவித்தார்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ரா.ரா3275 on Wed Dec 12, 2012 10:31 am

இவங்க என்னைக்குதான் வேலைநிறுத்தம் நடத்துல?... அநியாயம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 12, 2012 10:32 am

மோடி ஹாட்ரி வெற்றி‌ பெறுவார்: அத்வானி

ஆமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் மோடிக்கு ஹாட்ரி வெற்றி பெறுவார் என அத்வானி கூறினார். குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. நாளை முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. ரானிப் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி பிரசாரம் செய்து பேசியதாவது; குஜராத் சட்டசபை தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தேர்தில் இரு முறை நரேந்திரமோடி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறையும் பா.ஜ. வெற்றி பெறும் மீண்டும் முதல்வராக மோடி ஹாட்ரிக் அடிப்பார். அவரது தலைமையில் நல்லாட்சி நடந்து வருகிறது. திறமையும் ,துணிச்சலும் மிக்க அவரது நிர்வாகத்திறமையினால் அவர் வெற்றி பெற்று குஜராத்தின் வள்ர்ச்சிக்காக மீ்ண்டும் நல்லாட்சி தருவார் என்றார்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 12, 2012 10:33 am

ரஜினி ரசிகருக்கு அரிவாள் வெட்டு

மயிலாடுதுறை: சீர்காழியில், ரஜினி ரசிகரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை, @பாலீŒõர் @தடி வருகின்றனர்.நாகை மாவட்டம் சீர்காழி தியாகராஜ நகரைச் சேர்ந்தவர், ராஜா (எ)அலைகடல்ராஜா , 35; டிரைவர். நகர ரஜினி ரசிகர் மன்ற துணை செயலராக உள்ளார். நேற்று மாலை, ராஜா தன் நண்பர்களுடன் திருமஞ்சன வீதியில் உள்ள, டாஸ்மாக் மதுபான கடை அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, இருவர் அவரை அரிவாளால் வெட்டினர். இதனால், ராஜா பாருக்குள் ஓடி கதவை பூட்டிக் கொண்டார். சத்தம் கேட்டு அங்கு கூட்டம் கூடியதையடுத்து, மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இந்த தாக்குதலில், ராஜாவின் கை மற்றும் விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by கரூர் கவியன்பன் on Wed Dec 12, 2012 1:55 pm

உடனடி செய்திகளை தந்தமைக்கு நன்றி அச்சலா அவர்களே
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 12, 2012 11:53 pm

உலகம் அழிய போவதாக வதந்தி
திருவெண்ணெய்நல்லூர் : உலகம் அழியப்போவதாக பரவிய வதந்தியால், திருவெண்ணெய்நல்லூர் அருகே கிராம பெண்கள், சூரியன் அஸ்தமிக்கும் வரை, வீட்டு வாசலில் விளக்கேற்றி வழிபட்டனர். விழுப்புரம் மாவட்டம், அரசூர் காலனியில், வரும், 21ம் தேதி, உலகின் ஒரு பகுதி அழியப் போவதாக, வதந்தி பரவியது. "இதற்கு பரிகாரமாக, காலை முதல், சூரியன் அஸ்தமிக்கும் வரை, வீட்டின் வாசலில், காமாட்சியம்மன் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்' என்ற தகவல் பரவியது. இதையடுத்து, அரசூரிலுள்ள பலர் வீட்டு வாசலிலும் விளக்குகளை ஏற்றி, அனையாமல் பார்த்துக் கொண்டனர்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 12, 2012 11:54 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் யாகம்

மதுரை : தமிழகத்தில் மழை வேண்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நேற்று வருண யாகம் நடந்தது. இந்தாண்டு பருவ மழை பொய்த்ததால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் கருகி வருகின்றன. இதனால், பெரிய கோவில்களில், மழை வேண்டி வருண யாகம் நடத்துமாறு, அரசு அறிவுறுத்தியது. மீனாட்சி அம்மன் கோவில் சுவாமி சன்னிதி அருகே, இதற்கான பூஜை நடந்தது. பட்டர்கள் கூறுகையில், "ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள நந்தி தொட்டியில், தண்ணீரை நிரப்பி, இப்பூஜை செய்தால், மழை பெய்யும் என்பது ஐதீகம்; ஐந்து ஆண்டுகளுக்கு முன், இப்பூஜை செய்த போது, அடுத்தடுத்த ஆண்டுகளில், தொடர்ச்சியாக மழை பொழிந்தது. அதேபோல், வரும் ஆண்டில் நிச்சயம் மழை பொழியும்' என்றனர்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 12, 2012 11:54 pm

டி.என்.பி.எஸ்.சி., நியமனம் : ஐகோர்ட் உத்தரவு

மதுரை : டி.என்.பி.எஸ்.சி., பணி நியமனத்தில், பெண்கள் பிரிவில் ஒரு இடத்தை காலியாக வைக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. சுஜாதா,38, தாக்கல் செய்த மனு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு, ஜூலை 7 ல், நடந்தது. நான் தட்டச்சர் பணிக்கு தேர்வு எழுதினேன். பிற்பட்ட சமுதாயதத்தை சேர்ந்த நான், 300ல், 198 மதிப்பெண் பெற்றேன். பிற்பட்டோர் பெண்கள் பிரிவில், "கட்-ஆப்' மதிப்பெண், 193.50 நிர்ணயிக்கப்பட்டது. நான், அதைவிட அதிகம் பெற்றுள்ளேன். கவுன்சிலிங், டிச.,13 முதல் 14 வரை சென்னையில் நடக்கிறது. எனக்கு அழைப்பு வரவில்லை. டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்திற்கு புகார் செய்தேன். மனு மீது நடவடிக்கை எடுக்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில், குறிப்பிட்டுள்ளார். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. "" பிற்பட்டோர் பெண்கள் பிரிவில், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும்,'' என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்தி வைத்தார்

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 12, 2012 11:55 pm

வட கொரியாவுக்கு இந்தியா கண்டனம்

புதுடில்லி: வடகொரியா ஏவுகணை தயாரித்துள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த செயல் கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும். இது தேவையற்ற செயல். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். மேலும் இது ஐ.நா., தீர்மானத்தை மீறும் செயல் என்று கூறியுள்ளது.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 12, 2012 11:56 pm

டெஸ்ட் தொடரை டிரா செய்யுமா இந்தியா

நாக்பூர்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 டெஸ்‌டில் ‌தோல்வி அடைந்துள்ள இந்திய அணி, இந்த போட்டியிலும் தோல்வியடைந்தால் டெஸ்ட் தொடரை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை இந்திய அணி டிரா செய்ய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதே நேரத்தில், இந்த போட்டியில், இங்கிலாந்து அணி டிரா செய்தாலே இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றும். தற்போது 4 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 12, 2012 11:57 pm

டெண்டுல்கர் குறித்த யூகம் வேண்டாம்: தோனி
நாக்பூர்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுவது குறித்து யூகங்கள் செய்வதை நிறுத்த வேண்டும் என இந்திய அணி கேப்டன் தோனி கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், சச்சின் குறித்து யாரும் யூகம் செய்ய வேண்டாம். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில், பலருடைய தவறான எண்ணங்களை தகர்த்துள்ளார். சச்சின் குறித்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்க முடியாது. அவரிடமே கேளுங்கள் என கூறினார்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 12, 2012 11:58 pm

காம்பிர் மீது தோனி புகார்?

புதுடில்லி: இந்திய அணி துவக்க வீரர் கவுதம் காம்பிர் மீது கேப்டன் தோனி புகார் கூறியிருப்பதாக கூறப்படுகிறது. காம்பிர் தனது இடத்தை தக்க வைத்து கொள்ள மட்டுமே முயற்சி செய்வதாகவும், அவர் சுய நலமுடன் செயல்படுகிறார். தனக்காக மட்டுமே விளையாடுகிறார். அணிக்காக விளையாடுவதில்லை என பி.சி.சி.ஐ.,யிடம் தோனி புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Wed Dec 12, 2012 11:59 pm

கடலூரில் பிளாஸ்டிக்கிற்கு தடை
கடலூர்: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஜனவரி 1ம் தேதி முதல் கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு அறிவித்துள்ளார்.
-தினமலர்

avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 12:00 am

இரு ஆண்டுகளில் நக்சல்களுக்கு எதிரான தாக்குதலில் 540 போலீசார் பலி

புதுடில்லி: கடந்த இரு ஆண்டுகளில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இதுவரை 540 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக பார்லிமென்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங், பார்லிமென்ட் ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்து பேசியதாவது: கடந்த 2010-ம் ஆண்டு துவங்கி நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது 540 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களது குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஆர்.பி.என். சிங் கூறினார்.
-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 12:01 am

கள்ளத்தொடர்பு: சிங்கப்பூர் சபாநாயகர் ராஜினாமா

சிங்கப்பூர்: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் சிக்கிய சிங்கப்பூர் பார்லிமென்ட் சபாநாயகர் தனது பதவியை ராஜினாமா செய்தார். சிங்கப்பூரில் , மக்கள் நடவடிக்கை கட்சி ஆட்சியில் உள்ளது. இக்கட்சியைச் சேர்ந்த மைக்கேல் பால்மர் (44) அந்நாட்டு பார்லிமென்ட் சபாநாயகராக உள்ளார். இவர் தனது கிழக்கு பங்கூல் பார்லிமென்ட் தொகுதி அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் , பல முறை அவருடன் செக்ஸ் உறவு வைத்திருந்ததாக புகார் எழந்தது.
இதையடுத்து தனது சபாநாயகர் பதவியையும், எம.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். தற்காலிக சபாநாயகராக, துணை சபாநாயகர் சார்லஸ் சோங், பொறுப்பேற்றார். இதனை அந்நாட்டு பிரதமர், துணை பிரதமர் ஆகியோர் நியமித்தனர். விரைவில் கிழக்குபங்கூல் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் எனவும் தெரிவித்தனர்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 12:02 am

உத்தர்காண்ட் மாஜிமுதல்வர் மரணம்

பாட்னா: உத்தர்க்காண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உடல்நலக்குறைவால் காலமானார். பீகார் மாநிலத்தை இரண்டாக பிரித்து உத்தர்க்காண்ட் மாநிலம் கடந்த 2000-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது அம்மாநிலத்தின் முதல், முதல் அமைச்சராக நித்யானந்தசுவாமி (88) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் டேராடூன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மறைவுக்கு பீகார் முதல்வர் நிதீஷ்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 12:03 am

நடை பயணத்தை துவங்கினார் வைகோ
திருநெல்வேலி: பூரண மதுவிலக்கு கோரி ம.தி.மு.க., சார்பில் விழிப்புணர்வு நடை பயணம் இன்று துவங்கியது. இதில் கட்சி பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் 1200 இளைஞர்கள் கலந்து கொண்டனர். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் வழியாக 14 நாட்கள் நடைபெறும் இந்த நடை பயணம் மதுரையில் நிறைவு பெறுகிறது.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா on Thu Dec 13, 2012 12:04 am

ரஜினிக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: இன்று 63வது பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் ரஜினிக்கு முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் மு.க., அழகிரி, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி பேட்டி: தனது பிறந்த நாள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினி,சிறப்பான இந்நாளில் எனது பிறந்தநாள் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. என்னுடைய பிறந்தநாளை ரசிகர்கள் அவர்களின் பெற்றோரை வழிபடும் நாளாக கொண்டாடினால் இன்னும் சந்தோஷப்படுவேன். அப்பவும், இப்பவும், எப்பவும் சொல்வேன், என்னைவிட பெற்றோர்கள் தான் முக்கியம் என்றார். மேலும் இப்போது தான் நடித்து வரும் கோச்சடையான் படம் பற்றி கூறுகையில், கோச்சடையான் படம் இன்றைய சினிமா தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம். இப்படம் மட்டும் வெற்றிப்பெற்றால் இனி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச படங்களும் இதே தொழில்நுட்பத்தில் வெளிவந்து வெற்றி பெறலாம் என்றார்.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 5 of 15 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum