ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

பேல் பூரி

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

ஈகரை பேல் பூரி

Post by Muthumohamed on Tue Dec 04, 2012 5:12 pm

கண்டது

(விளாத்திகுளம் பேருந்துநிலையம் அருகில் தேங்காய்ப் பால் விற்பனை வண்டியில்)

அன்னையின் பால் அன்புக்கு

தென்னையின் பால் தெம்புக்கு(செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

பெரும் புகை
(பெரியகுளத்தில் ஆட்டோ ஒன்றின் பின்புறம்)

சிறுபறவைக்கு பறக்க ஆசை

சிறுவனுக்கு மண் வீடு கட்ட ஆசை

எனக்கோ உன் இதயத்தில்

குடியிருக்க ஆசை(கும்பகோணம் நால்ரோட்டில் நின்றிருந்த லாரியின் பின்னால்)

மப்பில ஓட்டாதே

தப்புல மாட்டாதே
(திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூரில் சிக்கன் கடையின் பெயர்)

மக்கள்திலகம்
கேட்டது

(பந்தநல்லூர் கடைவீதியில்)

போஸ்ட்மேன்: பாலு, உனக்கு 100 ரூபாய் மணியார்டர் வந்திருக்கு

பாலு: யாரு அனுப்பியிருக்கா சொல்லுங்க?

போஸ்ட்மேன்: மூதேவி... நேத்து நீ உங்க அக்காவுக்கு பணம் அனுப்புனியே, பெறுநர் முகவரியில உங்க அக்கா பேரைப் போடாம உன் பேரைப் போட்டுருக்கே. அந்தப் பணம்தான் வந்திருக்கு!
(குத்தாலம் ஆரம்பப் பள்ளியொன்றில் மாணவர்களிடம் வகுப்பாசிரியை)

சத்தம் போடாதே

கையைக் கட்டு

வாயைப் பொத்துதமிழ் புத்தகத்தை எடுத்து

எல்லாரும் படிங்க...(கும்பகோணம் சாக்கோட்டை வீடு ஒன்றில்)

கணவன்: குழந்தை அழுதா அழட்டும். தயவுசெய்து நீ தாலாட்டுப் பாடாதே

மனைவி: ஏங்க?

கணவன்: ரெண்டு பேரும் சேர்ந்து அழற மாதிரி கேக்குது!(வேலூர் தேநீர் கடையில் நண்பர்கள்)

""மச்சான்... நான் பணத்தைவிட நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன் தெரியுமா? ''

""மச்சி... ரொம்ப சந்தோஷம்டா... உங்கிட்டேயிருந்து இப்படியொரு டயலாக்கை நான் எதிர்பார்க்கலைடா... இனிமேல் நீ ஏங்கிட்ட கடனாக் கொடுத்த ஆயிரம் ரூபாயைத் திருப்பிக் கேக்க மாட்டேன்னு சொல்லு''!
(தருமபுரி கந்தசாமி வாத்தியார் தெருவில் நீண்ட நாளைக்குப் பிறகு சந்தித்த நண்பர்களிருவர்)

""டேய் மச்சான் ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டிருந்தியே... அந்த லவ் இப்ப எப்படி போயிட்டிருக்கு?''

""நாளைக்குக் கல்யாணம்டா''

""என்னடா சொல்லற... எனக்குப் பத்திரிகையே வைக்கலை''

""எனக்கே அவ வைக்கலை''
மைக்ரோ கதை

கேக்கை இரண்டாக விண்டதில் ஒரு பாதி பெரியதாகவும், மற்றொரு பாதி சிறியதாகவும் அமைந்துவிட்டது. ஜான் பெரிய பகுதியை எடுத்துக் கொண்டு, சிறிய பகுதியைத் தனது அக்காவுக்குக் கொடுத்தான்.

""நானாக இருந்தால் பெரியதை உனக்குக் கொடுத்துவிட்டு, சிறியதை நான் எடுத்துக் கொள்வேன்'' என்றாள் அக்கா.

""இப்போது மட்டுமென்ன? அப்படித்தானே ஆகியிருக்கிறது. இதற்காக ஏன் வருத்தப்படுகிறாய்?'' என்றான் ஜான்.


ஊரில் பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் இருந்தன. நிறைய வருமானம் வந்தது. ஆனால் அவருக்கு ஒரு பிரச்னை. தூக்கம் வருவதில்லை.

ஒருநாள் பணக்காரர் தனது தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது ஒரு மரத்தடியில் அவருடைய வேலைக்காரன் வெறும் தரையில் துண்டை விரித்து மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

பணக்காரருக்குப் பொறாமையாக இருந்தது. தூங்கிக் கொண்டிருந்தவனை ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார். மறுநாள் அவனை வீட்டுக்கு வரவழைத்தார்.

""எனக்கோ ஏகப்பட்ட சொத்துக்களிருக்கு. எந்தவிதத்திலும் குறைவில்லை. ஆனா படுத்தால் தூக்கம் வரமாட்டேங்குது. ஆனால் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு வழியில்லாத உனக்கு அடிச்சுப் போட்ட மாதிரி தூக்கம் வருது. அது எப்பிடி?'' என்று கேட்டார்.

அதற்கு வேலைக்காரன், "" ஐயா, உங்களை மாதிரி பணக்காரங்க எல்லாரும் நல்லாத் தூங்க ஒரே வழிதான் இருக்கு'' என்று சொன்னான்.

""என்ன செய்யணும்னு சொல்லு. எவ்வளவு செலவானாலும் செஞ்சிடுறேன்'' என்றார் ஆர்வத்துடன்.

""உங்க சொத்து சுகங்களைத் தான தர்மம் செஞ்சிட்டு, என்னை மாதிரி ஏழையாகி நல்லா உழைங்க. தூக்கம் தானா வரும்'' என்றான் வேலைக்காரன்.

தினமணி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by பாலாஜி on Tue Dec 04, 2012 5:16 pm

நகைச்சுவை நன்று சிரி சிரி சிரி

கடைசி கதை மிக நன்று சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by ஜாஹீதாபானு on Tue Dec 04, 2012 5:36 pm

சூப்பர் மகிழ்ச்சிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by jenisiva on Tue Dec 04, 2012 5:42 pm

""டேய் மச்சான் ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டிருந்தியே... அந்த லவ் இப்ப எப்படி போயிட்டிருக்கு?''

""நாளைக்குக் கல்யாணம்டா''

""என்னடா சொல்லற... எனக்குப் பத்திரிகையே வைக்கலை''

""எனக்கே அவ வைக்கலை''
சூப்பருங்க சிப்பு வருது
கடைசி இரண்டு கதையும் சூப்பர்
avatar
jenisiva
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 480
மதிப்பீடுகள் : 88

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by கரூர் கவியன்பன் on Tue Dec 04, 2012 5:44 pm

அத்துனையும் அருமை சூப்பருங்க
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by பூவன் on Tue Dec 04, 2012 5:50 pm

சுவையுடன் நகை இருந்தது அருமை முகமது ,
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Tue Dec 04, 2012 6:03 pm

@ஜாஹீதாபானு wrote:சூப்பர் மகிழ்ச்சி

கருத்துக்கு நன்றிகள்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Tue Dec 04, 2012 6:04 pm

@பாலாஜி wrote:நகைச்சுவை நன்று சிரி சிரி சிரி

கடைசி கதை மிக நன்று சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

நன்றிகள் பல
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Tue Dec 04, 2012 6:05 pm

@jenisiva wrote:""டேய் மச்சான் ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டிருந்தியே... அந்த லவ் இப்ப எப்படி போயிட்டிருக்கு?''

""நாளைக்குக் கல்யாணம்டா''

""என்னடா சொல்லற... எனக்குப் பத்திரிகையே வைக்கலை''

""எனக்கே அவ வைக்கலை''
சூப்பருங்க சிப்பு வருது
கடைசி இரண்டு கதையும் சூப்பர்

சிப்பு வருது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Tue Dec 04, 2012 6:06 pm

@பூவன் wrote:சுவையுடன் நகை இருந்தது அருமை முகமது ,

அந்த நகை மட்டும் எனக்கு அனுப்புங்க பூவன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by பூவன் on Tue Dec 04, 2012 6:09 pm

அந்த நகை மட்டும் எனக்கு அனுப்புங்க பூவன்


இந்தாங்க கடையே உங்களுக்கு தான்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by யினியவன் on Tue Dec 04, 2012 6:27 pm

சூப்பர் முகம்மத்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by பூவன் on Tue Dec 04, 2012 6:28 pm

@யினியவன் wrote:சூப்பர் முகம்மத்.

நகை கடையா ??
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by யினியவன் on Tue Dec 04, 2012 6:33 pm

@பூவன் wrote:
@யினியவன் wrote:சூப்பர் முகம்மத்.

நகை கடையா ??
இல்ல வடை பானு வடைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by பூவன் on Tue Dec 04, 2012 6:34 pm

இல்ல வடை பானு வடை

பாவம் அவங்க கடையை காலி பண்ணிடாங்க , இப்போ அச்சலா அக்கா கடை போட்டுடாங்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by krishnaamma on Tue Dec 04, 2012 7:20 pm

ரொம்ப அருமை இரண்டு கதைகளும் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
டயலாக்குகளும் அருமை புன்னகை பகிர்வுக்குநன்றி நன்றி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Tue Dec 04, 2012 11:52 pm

@பூவன் wrote:
அந்த நகை மட்டும் எனக்கு அனுப்புங்க பூவன்


இந்தாங்க கடையே உங்களுக்கு தான்

நகை கேட்டதற்கு நகை கடை கொடுத்ததற்கு மிக்க நன்றிகள் பூவன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by பூவன் on Wed Dec 05, 2012 12:05 am

கடையை பத்திரமா பார்த்துகோங்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Wed Dec 05, 2012 12:12 am

@பூவன் wrote:கடையை பத்திரமா பார்த்துகோங்க

கண்டிப்பா பாத்துக்குவேன் நகை கடை அல்லவா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Tue Dec 11, 2012 8:10 pm

கண்டது

(சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடையில்)

வாய்ப்புகளை உருவாக்கு

வாழ்க்கையை உயர்வாக்கு

(பட்டுக்கோட்டை அருகே உள்ள இரு ஊர்களின் பெயர்கள்)

எழுத்தாணி வயல்

எண்ணாணி வயல்

(ஒச்சேரியில் இருந்து பனப்பாக்கத்துக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

தர்மநீதி
(திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் - பெருந்துறை பாதையில் ஓர் உணவகத்தின் பெயர்)

கும்பிடு குருசாமி ஹோட்டல்

(சென்னை கிரீன்வேஸ் சாலையில் முட்டை ஏற்றிச் சென்ற வாகனத்தில்)

நலமுடன் வாழ...

நாளொரு முட்டை


(கிருஷ்ணகிரி கடைவீதியில் இரு தோழிகள்)

""தனியா இருந்தேன்னா, நான் பாட ஆரம்பிச்சிடுவேன்''

""நாலு பேர் இருக்கும்போது பாட ஆரம்பிச்சா கூட ஆட்டோமேடிக்காக நீ தனியாயிடுவே ''(உடுமலைப்பேட்டை வித்யாசாகர் கல்லூரி வாசலில் இரு மாணவர்கள்)

""ஒரு FIGURE - ஐக் கரெக்ட் பண்ண 4 டிப்ஸ்''

""தெய்வமே... சொல்லுடா''

""ERASER, PENCIL, SCALE, PAPER. நான் சொன்னது DIAGERAM -ஐ. போய்ப் படிக்கிற வேலையைப் பாருடா''(சென்னை கிழக்குத் தாம்பரம் மளிகைக் கடை ஒன்றில்)

""ஏம்ப்பா... நாட்டுப் பூண்டு கேட்டா, சைனாப் பூண்டு கொடுத்திட்டியே''

""சைனாவைப் பாத்தா உங்களுக்கு நாடாத் தெரியலியா? என்ன?''
மைக்ரோ கதை

ஓர் ஊரில் ஒவ்வோர் ஆண்டும் வெள்ளம் வந்து, ஊர் மக்களைப் பாடாய்ப்படுத்தி வந்தது. வழக்கம்போல அந்த ஆண்டும் மழைக்காலத்தில் திடீரென வெள்ளம் வந்துவிட்டது. மக்கள் உயிர் பிழைக்க "குய்யோ முறையோ'வென்று கத்திக் கொண்டு, மேட்டுப் பகுதியை நோக்கி ஓடினார்கள். குழந்தைகளையும், முதியவர்களையும் வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற அந்த ஊர் இளைஞர்கள் தீவிரமாக உதவிக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஊரில் பழனி என்ற படித்த இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் மட்டும் யாருக்கும் உதவாமல், ஓர் உயரமான பாறையின் மீது ஏறி நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த எல்லாருக்கும் தாங்க முடியாத கோபம் வந்தது.

"இவன்லாம் படிச்சவனா? ஊரே வெள்ளத்தால் கஷ்டப்படுது. இவன் வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கான்' என்று அவனைத் திட்டிக் கொண்டே இருந்தனர்.

மூன்று நாட்களில் வெள்ளம் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியது.

ஊரில் உள்ள பெரிய மனிதர்கள், இளைஞர்கள் எல்லாரும் கூடினர். பழனியைக் குற்றவாளியாக்கி நிறுத்தினர்.

"நீயெல்லாம் படித்தவனா?' என்ற கோபக்குரல் கூட்டத்தின் எல்லாத் திசைகளிலும் இருந்து கேட்டது.

ஆனால் பழனி எதற்கும் அசையாமல் புன்முறுவலுடன் இருந்தான்.

அதற்குப் பிறகு சொன்னான்:

""ஒவ்வொரு வருஷமும் வெள்ளம் வருது. அதை எப்படித் தடுத்து நிறுத்துவதுன்னுதான் பாறை மேல் நின்னு பார்த்துக்கிட்டிருந்தேன். காட்டாறை வேற பக்கமாத் திசை திருப்பிவிட்டா வெள்ளம் வரவே வராது'' என்றான்.

அவன் சொன்ன ஐடியா சரி என்று பட்டது ஊர் மக்களுக்கு.

""அதுக்குத்தான்யா நாலெழுத்துப் படிச்சிருக்கணும்ங்கிறது.''ஒரு சிறுவன் தெருவில் அழுது கொண்டிருந்தான்.

""ஏம்ப்பா அழுவுற?'' ஒரு பெரியவர் கேட்டார்.

""நான் ஒரு ரூபா வச்சிருந்தேன். அதை இங்கே தொலைச்சிட்டேன்''

""சரி... சரி... அழாதே... நான் பத்து ரூபா தர்றேன்''

பெரியவர் கொடுத்த பத்து ரூபாயை வாங்கிக் கொண்ட சிறுவன் மீண்டும் அழுதான்.

""ஏம்ப்பா அழுகுற?'' பெரியவர் கேட்டார்.

""நான் தொலைச்ச ஒரு ரூபாயும் இருந்தா, என் கிட்டே 11 ரூபாய் இருக்குமே. இப்ப 10 ரூபாய்தானே இருக்கு''

கதிர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Fri Jan 04, 2013 12:58 am

ஒருவன் தன்னை விட்டு விலகமாட்டான் என்று
உறுதியாகத் தெரிந்த பிறகு அவனைப் பெண்
படுத்தும்பாடு இருக்கிறதே…அம்மம்மா…அய்யய்யோ..!!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Fri Jan 04, 2013 12:58 am

எதிர்க்கட்சிகள் என்பது ஊழல் செய்யாத கட்சி
அல்ல, ஊழல் செய்ய வாய்ப்பு கிடைக்காத கட்சி..!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Fri Jan 04, 2013 12:58 am

ஃபேஸ்புக் ட்விட்டர் எல்லாம் வர்றதுக்கு முன்பே
ஸ்டேட்டஸ் போட்டவன் தமிழன்
#ஆட்டோ வாசகங்கள்
-

==================================
நன்றி: ஆனந்த விகடன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Sun Jan 20, 2013 11:25 pm

அடிக்கடி கோபப்பட்டால் கோபத்துக்கு மரியாதை இல்லை.

கோபமே படாவிட்டால் நமக்கே மரியாதை இல்லை!

-

ஆண்களிடம் காதலை வாங்க கேனத்தனமா ஒரு சிரிப்பு

போதும்.

பெண்ணிடம் காதலை சொல்ல கேனத்தனமா செலவு செய்யணும்..!

-

கேக்குறவன் கேனையனா இருந்தா ஆரோக்யாபால்

ஓனர் அமலாபால்’னு சொல்வாரு..!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Muthumohamed on Sun Jan 20, 2013 11:26 pm

பக்கத்துவீட்டுக்காரனிடம் கொஞ்சம் முகம் கொடுத்து பேசிவிட்டால்

போதும்.

‘கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு’ கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்!

-

மொட்டை வெயிலில், அமெரிக்கன் எம்பஸி கியூவில் ஏற்பாடாத

சலிப்பு, ரேஷன் கடை கியூவில் சட்டென வந்து விடுகிறது..!

-

நன்றி: கல்கி (முக நூலில் ரசித்தவை)
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: பேல் பூரி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum