ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வாரம் ஒரு கோயில்-அறிவோம்..

View previous topic View next topic Go down

best வாரம் ஒரு கோயில்-அறிவோம்..

Post by அச்சலா on Tue Dec 04, 2012 12:30 am

திலதர்ப்பணபுரி திருக்கோவில்ஸ்தல வரலாறு.....

பட்டினியால் வாடும் ஏழைகளுக்கு உணவளித்தல் 3 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. புண்ணிய நதிகளில் நீராடுதல் 3 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. ஏழைப் பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்தல். 5 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. திருக்கோவிலில் தீபம் ஏற்றி வைத்தல் 5 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது.

அன்னதானம் செய்வது 5 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. பித்ரு பூஜை செய்ய உதவுதலுக்கு 6 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. திருக்கோவில்களுக்கு புனர்நிர்மாணம் செய்விப்பதற்கு 7 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திமக்கிரியை செய்வித்தல் 9 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது.

பசுவின் உயிரைக் காப்பாற்றுவது 14 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. இவற்றைப் போலவே, முன்னோர்களுக்கு கயா சேத்திரத்தில் திதி பூஜை செய்தல் 21 தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கிறது. நமக்காக வாழ்ந்து, நம்மைப் பற்றி, நம் எதிர் காலத்தை பற்றி மட்டுமே சிந்தித்த நம் முன்னோர்களுக்காக நாம் செய்ய வேண்டிய முக்கியமான கடமைகளில் ஒன்றாக இந்த பித்ரு பூஜை அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகக் கூட நாம் இதுபோன்ற விஷயங்களை செய்யலாம்.

மகாளய அமாவாசை என்கிற புண்ணிய நாளில் நம் முன்னோர்களை வழிபட்டு அவர்களது நல்லாசியினைப் பெறுவோம். மகாளய அமாவாசை தினத்தன்று திலதர்ப்பணபுரி கோவிலை தரிசிப்பது மிகப் பொருத்தமாக இருக்கும். இந்த திலதர்ப்பணபுரி திருக்கோவில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

தல மூர்த்தி : ஸ்ரீ முக்தீஸ்வரர்
தல இறைவி : சொர்ணவல்லி
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தல விருட்சம் : மந்தார திலதர்ப்பணபுரி

திலம் என்றால் எள், புரி என்றால் தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு தலங்கள் 7 உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி விளங்குகிறது. ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன.

ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்லும் போது ஜடாயு என்ற பறவை ராவணனிடம் இருந்து சீதையை காப்பாற்ற முயன்று சிறகுகள் வெட்டப்பட்டு இறந்தது. சீதையைத் தேடி ஸ்ரீ ராமரும், லட்சுமணனும் இலங்கையை நோக்கிப் பயணம் மேற்கொண்டனர். ஸ்ரீ ராமருக்கு தனது தந்தை தசரதனுக்குச் செய்ய வேண்டிய பித்ரு காரியங்களைச் செய்யாமல் இருப்பது மனதிற்கு மிகவும் வேதனையைக் கொடுத்தது.

அதை நேரத்தில் தன் பொருட்டு உயிரை விட்ட ஜடாயு பறவைக்கும் பித்ரு பூஜை செய்ய விரும்பினார் ஸ்ரீ ராமர். அவ்வாறாக இலங்கைக்கு செல்லும் பாதையில் இந்த திலதர்ப்பணிபுரிக்கு வந்து இங்குள்ள அரசலாற்றில் நீராடி தன் தந்தை தசரதனுக்கும், ஜடாயு பறவைக்கும் வந்து இங்குள்ள அரசலாற்றில் நீராடி தன் தந்தை தசரதனுக்கும், ஜடாயு பறவைக்கும் பித்ரு கடமைகளைச் செய்தார்.

அவர்களும் மனம் குளிர்ந்து ஸ்ரீராமரின் பித்ரு கைங்கர்யங்களை நேரில் வந்து ஏற்றுக் கொண்டு அவர்களை ஆசீர்வதித்தனர். இவ்வாறாக இத்தலம் பித்ரு தலம் ஆகியது. கோதாவரி நதிக் கரையில் போகவதி என்னும் ஊரை நட்சோதி மகாராஜா ஆண்டு கொண்டிருந்தார். அவரது அரசவைக்கு ஒருநாள் நாரதர் பெருமான் வருகை புரிந்தார். அரசர் நாரதரிடம், இந்தியத் திருநாட்டிலே எந்த தலம் புண்ணியத் தலமாக விளங்குகிறது என்று வினவினார்.

அதற்கு நாரதர், எந்தத் திருத்தலத்தில் நாம் செய்யும் பிண்ட தானத்தை பித்ருக்கள் நேரில் வந்து பெற்றுச் செல்கின்றரோ, அந்தக் திருத்தலமே புண்ணியத் திருத்தலம், எனக் கூறினார். மன்னன் பல திருத்தலங்களுக்குச் சென்று, கடைசியாக திலதர்ப்பணபுரி திருத்தலம் வந்து, அமாவாசை அன்று பித்ரு பூஜைகள் செய்து, பிண்ட தானம் வழங்கினார். பித்ருக்கள் நேரில் வந்து பிண்ட தானம் பெற்று மனம் குளிர்ந்து ஆசி வழங்கினர்.

திலதர்ப்பணபுரி திருத்தலம் நுழையும் போதே ஒரு சிறந்த, அரிய விஷயம் நம்மை வியப்படைய வைக்கிறது. திருக்கோயிலை பார்த்துக் கொண்டு, மேற்கு நோக்கி ஆதி விநாயகர் சன்னதி உள்ளது. இந்த விநாயகரை நரமுக விநாயகர், மனித முக விநாயகர் என்றும் அழைக்கின்றனர். வேழ முகம் தோன்றுவதற்கு முன்பாக உள்ள மனித முகத்துடன் கணபதி காட்சி தருகிறார். ஜடாமுடியுடனும், ஆனந்த முத்திரையுடனும் காட்சி தருகிறார்.

திலகைப்பதி, கோவில்பத்து, சிதலபதி என்ற பெயர்களையும் உடைய திலதர்ப்பணபுரி ஆலய சிவ சன்னதியில், நம்பிக்கையோடு செய்யப்படும் எள் தர்ப்பணம், யாகம், அர்ச்சனை அனைத்தும் விசேஷம் வாய்ந்தது. திருக்கோயிலின் தெற்கு புறத்தில் ராமர் தன் கையாலேயே பிடித்து வைத்து பூஜை செய்த அழகநாதர் இருக்கிறார்.

நந்திகேஸ்வரர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, மகாவிஷ்ணு, அஷ்டபுஜ துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், சூரியன், சந்திரன், பைரவர், நாயன்மார்களில் முதன்மையான நால்வர் சன்னதிகள் உள்ளன. இந்த சாமி சிலைகள் அனைத்தும் நுட்பமான வேலைபாடுகளுடன் அச்சில் வார்த்தது போல அழகாக உள்ளன.

கிழக்கு நோக்கி பத்தாயிரம் ருத்ராட்சங்கள் கொண்ட ருத்ராட்சப் பந்தலின் கீழ் நாகம் குடை பிடிக்க ஸ்ரீ முத்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். அருகிலேயே சொர்ணவல்லித் தாயார் சன்னதி உள்ளது. சிவபிரானின் சொல் பேச்சு கேட்காமல், பார்வதி தனது தந்தை நடத்தும் யாகத்திற்குச் சென்றார். அங்கு தனது தந்தை தட்சனால் அவமானப் படுத்தப்பட்டு திரும்பினார்.

அந்த பாவம் தீர இங்கு வந்து மந்தார மரம் ஒன்றை நட்டு வைத்து அங்கேயே குடிகொண்டார். சில காலங்கள் கழித்து சிவன் மனம் மாறி பார்வதியை தன் இடபாகத்தில் அமர்த்திக் கொண்டார். பார்வதியால் நடப்பட்ட மந்தார மரமே இங்கு தலவிருட்சமாகக் திகழ்கிறது.

பிதுர் லிங்கங்களுக்கு நேராக வலது காலை மண்டியிட்டு ரமர் தர்ப்பணம் செய்யும் காட்சி. நட்சோதி மன்னன் தர்ப்பணம் செய்யும் காட்சி போன்றவற்றை இத்திருக்கோயிலில் காணலாம். இக்கோயில் மகாளய பட்சமாகிய 15 நாட்கள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் செய்யப்படும் காருண்ய தர்ப்பணம் இங்கு மிக விசேஷம். சொர்ணவல்லித் தாயார், பிரம்மா, மகாலட்சுமி, ஸ்ரீராமர், நட்சோதி மன்னன் போன்றவர்களே இத்திருக்கோவில் வந்து பித்ரு தர்ப்பணம் செய்துள்ளனர் என்றால், இக்கோவிலின் மகிமையும், பித்ரு தர்ப்பணத்தின் மகிமையும் நமக்கு விளங்கும்.

நன்றி: மாலைமலர்..


Last edited by அச்சலா on Mon Dec 10, 2012 8:18 am; edited 1 time in total
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: வாரம் ஒரு கோயில்-அறிவோம்..

Post by அச்சலா on Tue Dec 04, 2012 12:31 am

வேதங்கள் வழிபட்ட வேதபுரீஸ்வரர் கோவில்ஸ்தல வரலாறு.....

சென்னை திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் பிரசித்திப் பெற்றது. அதே திருவேற்காட்டில் உலகை ஆளும் ஈசனுக்கும் தனி ஆலயம் அமைந்துள்ளது. பாலாம்பிகை சமேதராக உள்ள இந்த தலத்தின் இறைவனுக்கு வேதபுரீஸ்வரர் என்று பெயர். கருமாரி அம்மன் கோவிலில் இருந்து தென் மேற்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமையப்பெற்றுள்ளது.

வேதங்கள் வழிபட்ட தலம்..........

நான்கு வேதங்களும் வேல மரங்களாக மாறி நின்று, ஈசனை வழிபட்ட காரணத்தால், இந்த இடம் வேற்காடு (வேல் காடு) என்று பெயர் பெற்றது. ஐந்து நிலைகளை உடைய ராஜகோபுரத்தைக் கொண்டு, நிமிர்ந்து நிற்கும் இந்த ஆலயத்தில் வேதபுரீஸ்வரர் சுயம் புவாய் சிவலிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.

இறைவனின் கருவறைக்கு எதிரில் நந்தியும், முன்னதாக கொடி மரம், பலிபீடம் அமைந்துள்ளன. கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் பின்புறத்தில் ஈசனும், அம்பாளும் திருமணக் கோலத்தில் அகஸ்திய முனிவருக்கு திருக்காட்சி கொடுக்கும் தரிசனம் காண கண்கோடி வேண்டும். அருகிலேயே தலைமகனான கணபதியுடன் சிவனும், பார்வதியும் எழுந்தருளிய சன்னதி அமைந்துள்ளது. மூலவரின் கருவறை விமானம் கஜபிருஷ்ட வடிவம் கொண்டதாகஅமைக்கப்பட்டுள்ளது.

பைரவர் வழிபாடு...........

விநாயகர், தட்சிணாமூர்த்தி, பொல்லாப்பிள்ளையார், நால்வர், 63 நாயன் மார்கள், அநபாய சோழன், சேக்கிழார், காசி விசுவநாதர், விசாலாட்சி, சண்டி கேசுவரர், துர்க்கை, பிரம்மா முதலிய தெய்வங்கள் உட் சுவற்றில் எழுந்தருளியுள்ளனர். கருவறை கோஷ்டத்தின் பின்புறத்தில் லிங்கோத்பவர் அருள்புரிகிறார்.

மாத சிவராத்திரி நாட்களில் மாலை வேளையில் லிங்கோத்பவருக்கு 5 நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நம் வாழ்க்கை இனிதாகும். கல்வி, ஞானம், செல்வம், இறையருள் கிட்டும். பாலாம்பிகை தெற்கு நோக்கியபடி தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அதன் அருகில் நடராஜர் சிவகாமி அம்பாள் தனி சன்னதியில் உள்ளனர். அம்பிகையின் சன்னதி வாயில் அருகில் பைரவர் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இத்தல பைரவரை சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டமச் சனி முதலியவை விலகும்.

பரசுராமர் பூஜித்த ஈசன்..........

63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலம் இது. இத்தல முருகப்பெருமான் அரு ணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றவர். ராஜ கோபுரம் வழியாக உள்ளே நுழைந்ததும் வலதுபுறத்தில் சனீஸ்வரர் சன்னதி உள்ளது. வெளிப்பிரகாரத்தில் அருணகிரிநாதர், மூர்க்க நாயனாருக்கும் தனிச்சன்னதிகள் உள்ளன.

அக்னி, எமன், நிருதி, வாயு, வருணன், மற்றும் குபேரன் ஆகியோரும், வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளாரும் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர். பாரதப் போரில் பங்கேற்க விரும்பாத பலராமர், தீர்த்த யாத்திரை சென்ற போது திருவேற்காட்டில் பூஜித்தார்.

பலராமர் பூஜித்த லிங்கம் 'பலராமேசர்' என்ற திருநாமத்துடன் திரிபுராந்தகேச லிங்கத்திற்கு தெற்கில் அமைந்துள்ளது. இதே போல் பரசுராமரும் திருவேற்காட்டிற்கு வந்து இத்தல மந்தாகினி தீர்த்தத்தில் நீராடி வேல மரத்தடியில் எழுந்தருளியுள்ள சிவலிங்கத்தை பூஜித்துள்ளார். பின்பு சிவலிங்கம் ஒன்றை அமைத்தும் வழிபட்டுள்ளார். அவர் பூஜித்த லிங்கம் 'பரசுராமேஸ்வரர்' என்ற பெயரில் உள்ளது.

வலிமை இழந்த சக்ராயுதம்.........

தசீசி என்ற சிவனடியாரின் சக்தியால் திருமாலின் சக்கரம் தனது வலிமையை இழந்தது. திருவேற்காட்டில் ஈசனை வழிபட்டு திருமால், தனது சக்ராயுதத்தின் வலிமையை மீண்டும் பெற்றார். திருமால் இத்தல ஈசனை வழிபட வந்தபோது, ஆதிசேஷனும் வந்து ஈசனை வழிபட்டது.

அப்போது திருவேற்காடு வந்தடைந்தவர்களை தீண்ட மாட்டேன் எனக் கூறியதாம். எனவே இந்த தலம் விஷம் தீண்டா பதி என்றும் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் நவக்கிரக சன்ன திகள் தாமரை பூ வடிவில், எண்கோண மேடையில் உட்பிரகாரத்தின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

முருகர் வழிபட்ட சிவபெருமான்.....

இந்த தலத்தில் முருகப்பெருமான், சுப்பிரமணியராக நின்ற கோலத்தில் இரண்டரை அடி உயரத்தில் காட்சிய ளிக்கிறார். சூரசம்ஹாரம் முடிந்த பின்னர், இந்த தலத்தில் உள்ள வேத புரீஸ்வரரை முருகப்பெருமான் வந்து வழிபட்டுள்ளார். முருகப்பெருமான் பூஜித்த ஸ்கந்த லிங்கம், முருகப் பெருமானுக்கு முன்பாக அதே சன் னதியில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் முருகப்பெருமான் உரு வாக்கிய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில் உள்ளது. இந்த தீர்த் தத்தில் தொடர்ந்து 9 ஞாயிற்றுக்கிழ மைகள் அல்லது கார்த்திகை மாத ஞாயிறு, திங்கட்கிழமைகளில் நீராடி வேதபுரீஸ்வரை வழிபட்டால் சகல தோல் சம்பந்தமான நோய்கள் அகலும்.

கருமாரி அம்மன் திருஉருவம்..........

வேதபுரீஸ்வரர் கோவில் பிரகாரத் தூணில் ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, காலடியிலும் நாகம் கொண்டு தேவி கருமாரியம்மன் வீற்றிருக்கும் சிற்பமானது சிறப்பு வாய்ந்தது. திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலின் கருவறையில் முதலில் நாகப்புற்று, பின்பு அம்மனின் தலை மட்டும் வெளியில் தெரிந்தது.

சில காலம் கழித்து கருமாரி அம்மனின் முழு உருவத்தையும் கருவறையில் பிரதிஷ்டை செய்ய பக்தர்கள் எண்ணம் கொண்டனர். அப்போது திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில் பிரகார தூணில் இருந்த திருக்கோலமே கருமாரிஅம்மனின் தோற்றம் என ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே வேதபுரீஸ்வரர் கோவில் தூணில் உள்ள கருமாரி அம்மனை வழிபட்டாலே, தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டதற்கான பெரும் புண்ணியம் கிட்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

சென்னை- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேலப்பன் சாவடி என்ற ஊரில் இருந்து பிரிந்து செல்லும் கிளை சாலையில் 2 கிலோ மீட்டர் சென்றால் திருவேற்காடு வரும். திருவேற்காடு பஸ் நிலையத்தின் வடக்கே கருமாரி அம்மன் கோவில் உள்ளது. மேற்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

- சிவ.அ.விஜய் பெரியசுவாமி,
கல்பாக்கம்.
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

best Re: வாரம் ஒரு கோயில்-அறிவோம்..

Post by iraivanadimai on Tue Feb 05, 2013 6:11 pm

சிறந்த பதிவு சகோதரி ஏன் நிறுத்தி விட்டீர்கள் தொடர்ந்து எம் தாய் தமிழகத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த கோவில்களை பற்றி சொல்லுங்கள்.
avatar
iraivanadimai
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

best Re: வாரம் ஒரு கோயில்-அறிவோம்..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum