உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:21 pm

» “பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்’
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» பகவத்கீதை தத்துவங்கள்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» சஸ்பென்ஸ் கதை...!!
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» எதில் வலி அதிகம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by சக்தி18 Yesterday at 7:35 pm

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by T.N.Balasubramanian Yesterday at 6:57 pm

» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்?
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்
by சக்தி18 Yesterday at 6:34 pm

» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm

» வட தமிழகத்தில் மழை
by T.N.Balasubramanian Yesterday at 4:00 pm

» பேல்பூரி - கண்டது, கேட்டது....!!
by T.N.Balasubramanian Yesterday at 3:50 pm

» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்
by T.N.Balasubramanian Yesterday at 3:45 pm

» அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!!
by T.N.Balasubramanian Yesterday at 3:20 pm

» எதற்கடி வலி தந்தாய் - விக்ரன் மகன் துருவ் விக்ரம் பாடிய பாடல்!
by சக்தி18 Yesterday at 2:30 pm

» டார்லிங், ஒரு வார்த்தை சொல்லு…!!
by சக்தி18 Yesterday at 2:15 pm

» ஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி புதிய திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 10:24 am

» சீரமைப்பு பணி நிறைவு: விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» கூட்டை வரைந்து விடு – கவிதை
by ayyasamy ram Yesterday at 8:48 am

» எப்போதும் வேலை செய்....!- கபீர்தாசர்
by ayyasamy ram Yesterday at 6:19 am

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Yesterday at 6:09 am

» `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்
by ayyasamy ram Yesterday at 5:45 am

» பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் கய்யாம் மரணம்
by ayyasamy ram Yesterday at 5:20 am

» இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்! பாதுகாப்பு அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 5:15 am

» ஜார்கண்ட் மாநிலத்தில், மளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:13 am

» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்
by ayyasamy ram Mon Aug 19, 2019 8:36 pm

» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 8:19 pm

» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:42 pm

» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:36 pm

» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:34 pm

» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…!!
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:29 pm

» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:25 pm

» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது
by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 6:19 pm

» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:23 pm

» காலம் கற்பித்த பாடம்…!
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:18 pm

» அத்திவரதர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:15 pm

» நிம்மதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:15 pm

» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..?
by ayyasamy ram Mon Aug 19, 2019 2:13 pm

» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்
by ayyasamy ram Mon Aug 19, 2019 1:06 pm

» வீடியோ கால் லஞ்ச்
by ayyasamy ram Mon Aug 19, 2019 12:56 pm

» எல்லாமே தண்ணிதான்..!
by ayyasamy ram Mon Aug 19, 2019 12:55 pm

» அழுகை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Aug 19, 2019 12:53 pm

» கருட வாகனமும் கருடக் கொடியும்:
by ayyasamy ram Mon Aug 19, 2019 12:09 pm

» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்
by ayyasamy ram Mon Aug 19, 2019 12:01 pm

» இது இன்றைய மீம்ஸ்.
by ayyasamy ram Mon Aug 19, 2019 11:39 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Mon Aug 19, 2019 11:18 am

» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Mon Aug 19, 2019 10:55 am

» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்
by பழ.முத்துராமலிங்கம் Mon Aug 19, 2019 10:53 am

Admins Online

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Empty டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????

Post by 99likes on Sun Nov 25, 2012 5:47 pm

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? 73249_399604340109030_1483470535_n
டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????
உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரித்துப்போகும் ஆனால் பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரும் ஒரே நாளில் மரித்துப்போனால்? எண்ணிப்பார்க்கவே எம்முள் அச்சம் குடிகொள்வதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் நாள் இது நடந்தே தீரும் என்கிறது ஒரு கூட்டம்.
சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பூமியில் கோலோச்சி இருந்த டைனோசோர்கள் அழிந்தது போல ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் மனித இனமும் வருகின்ற டிசம்பரில் ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் அழியப்போகிறது.
பூமியில் பாரிய எரி கல் ஒன்று மோதுண்டதனால் வெளியான வெப்பம், தூசு என்பவற்றுடன் இக்கல் விழுந்தமையினால் ஏற்பட்ட பூமி அதிர்வு, கடல் பரப்பிலிருந்து வெளியான நீர் என்பவற்றாலேயே டைனோசர்கள் பூமியில் சுவடுகளாக மாறியதற்கு காரணம். மேலும் மெக்சிகோ பகுதியில் ஏற்பட்ட இச்சம்பவத்தின் போது வெளியான தூசு பூமியிலிருந்து முழுமையாக நீங்குவதற்கு சில ஆண்டுகள் எடுத்தது.
இதனால் அண்ணளவாக பூமியின் முழுப்பகுதியுமே பாதிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான இனங்கள் அழிவடைந்ததாம். இதிலிருந்து எஞ்சிய உயிரினங்களிலிருந்தே கூர்ப்பு மூலம் மனிதன் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக ஆரம்பித்து தற்கால மனிதனாக தோற்றம் பெற்று சுமார் 13 ஆயிரம் வருடங்கள் என்கிறது விஞ்ஞானம்.
இவ்வாறு பூமிக்கு வந்த மனித இனம், இந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் இப் பூமியை விட்டுச் செல்லப் போவதை யாராலும் தடுக்க முடியாது. இதனை நாசாவும் நன்கு அறிந்து வைத்துள்ளது. இவ்வாறெல்லாம் பல தகவல்களை கசியவிட்டு மக்களை பீதியில் தள்ளிவிட்டுள்ளார்கள் இனம் தெரியாதவர்கள் சிலர்.
உண்மையில் நிபிறு பிரளயம் என்றால்? இது நிச்சயம் டிசம்பரில் ஏற்படுமா? என்றவாறான பல கேள்விகளுக்கும் இதுவரையில் நம்பும் விதமாக வெளியாகியுள்ள தகவல்கள் இவ்வாறு அமைந்துள்ளது.
சூரியத்தொகுதியை போலவுள்ள பல்லாயிரக்கணக்கான தொகுதியில் ஒரு தொகுதியிலிருந்து நிபிறு எனும் கோள் 3600 வருடங்களுக்கொரு முறை பூமியை அண்மிக்கும் இதன் போது நிபிறுவின் துணைக்கோள்களுடன் சேர்த்து மொத்தமாக 6 கோள்கள் பூமியை பாதிப்புக்குள்ளாக்கும்.
இதனால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் சுனாமி, பூமியதிர்ச்சி, எரிமலை வெடிப்புக்கள் மற்றும் நிலங்கள் பல துண்டுகளாக பிளவடையும் இதனைத் தொடர்ந்து சுமார் 2 வருடங்களில் படிப்படியாக மிக மெதுவான முறையில் பூமி தன்னை மீளமைக்கும். இதற்கிடையில் பூமியிலுள்ள மனிதர்களில் 2ஃ3 பங்கினருக்கு மேல் அழிந்துவிடுவார்கள். இதுவே ‘நிபிறு பிரளயம்’ எனச் மிகச் சுருக்கமாக விளக்கியுள்ளார்கள்.
இம்முறை நிபிறு பிரளயம் ஏற்படப்போகும் சந்தர்ப்பத்தில் பூமியானது தன்னை தானே ஒழுங்குபடுத்த ஆரம்பிக்கும் காலமாக இருப்பதோடு துருவங்களும் இடமாற்றடையும். இந்நிலையில் 3 நாட்களுக்கு சூரியன் தனது சுழற்சியை நிறுத்தி வைத்திருக்கும். மேலும் 180 பாகையில் மாறி மாறி திரும்பலடையும் ஆனால் சுழற்சி இருக்கமாட்டாது என்கிறார்கள்.
இதற்காக பல நம்பிக்கைக்குரிய ஆதரங்களையும் முன்வைத்துள்ளனர். அவை அனைத்தும் 2012ஆம் ஆண்டினையே சுட்டிக்காட்டுகின்றது. எழுத்தாளரும், வானியல் ஆலோகசருமான 1500ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த நெஸ்ட்ரடோமஸ் அனுமானித்துள்ளதாவது, எமது கிரகம் பெரியதோர் இலக்கில் செல்லுகிறது அது 2012 முடிவடையும். ஆனால் அது எமக்கு கிடைக்கமாட்டாது.
மேலும் 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டைன் கூறியுள்ளதாவது, துருவப் பெயர்ச்சி இடம்பெறும் போது நாம் பாரியளவில் பாதிக்கப்படுவோம். இவையெல்லாம் இந்த நிபிறு பிரளயத்தையே குறிக்கிறது எனக் கூறும் அதே வேளை மாயன் நாட்காட்டியை சுட்டிக்காட்டியுள்ளனர்.
மிகப் பழைமை வாய்ந்த நாட்காட்டிகளில் ஒன்றான மாயன் 2012.12.21 அன்றுடன் முடிவடைகின்றது. அத்துடன் விஞ்ஞானத்தின் அண்மைய கண்டுபிடிப்புக்கள் பலவற்றினை துல்லியமா பல ஆண்டுகளுக்கு முன்னரே மாயன்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை கல்வெட்டுக்கள், சித்திரங்கள் என்பவற்றினூடாக விட்டுச்சென்றுள்ளனர். குறிப்பாக பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு உயிரினமும் அழிந்த பின்னர் புதியதோர் உயிரினம் தோன்றும், உயிரின் தொடர்ச்சியை சித்தரிக்கும் வகையிலமைந்துள்ள சித்திரங்கள் அதிசயிக்கத்தகதாகவே உள்ளது. இவ்வாறு விஞ்ஞானத்தை வென்ற மாயன்களின் கணிப்பின் படி உலகம் 2012இல் அழியும் என்பதே.
மேலும் ஹிப்ரு பைபிளும் 2012இல் உலகில் பாரிய அழிவுகள் உண்டு என்பதை உணர்த்துகின்றது. இது போல இன்னும் ஏராளமான குறிப்புக்கள் 2012ஆம் ஆண்டில் ஏற்படப்போகும் அழிவுகளை மத நம்பிக்கைகள் சார்ந்தும் சாராமலும் சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கின்றார்கள்.
இவை தவிர 3600 வருடங்களுக்கு முன்னர் நிபிறு பிரளத்தினால் பாதிக்கப்பட்டு எச்சங்களாகிய மனித இனத்தினால் அடுத்துவரும் சந்ததிக்கு விட்டுசென்ற சுவடுகளும் ஏராளம் உண்டு. அவற்றில் பல்வேறு அம்சங்கள் மத நம்பிக்கைக்குரிய எழுத்துருக்களாக மாற்றம் பெற்று இன்றுவரை அழியாது பேணப்படுகிறதாம்.
மேலும் நாசாவானது இந்த நிபிறு பிரளயம் பற்றி நன்கு அறிந்துள்ளதாகவும் அதிலிருந்து மீளுவதற்காக 1983ஆம் ஆண்டிலேயே ஆயத்தமாகிவிட்டதாகவும் இதற்காக இரகசியத் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதற்காக நாசா ரகசியமாக மேற்கொண்டுள்ள திட்டத்தினை விளக்குகையில், 1982ஆம் ஆண்டு சூரியத்தொகுதியிலுள்ள 9 கோள்களை தவிர மேலதிகமாகவும் ஒரு கோளினை கண்டுபிடித்துள்ளது நாசா. நிபிறு பிரளம் ஏற்படும் போது கண்டுபிடித்துள்ள புதிய கோளிற்கு தப்பிச் செல்வது திட்டம். அதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்ற வண்ணமே உள்ளது.
குறிப்பாக தப்பிச்செல்லதவற்குரிய கோளாக அப்புதிய கோளினை தேர்வு செய்துள்ளமைக்கான காரணம் என்னவெனில் பிரளயம் ஏற்படும் காலப்பகுதில் பூமிக்கு மிக மிக அண்மையில் இருக்கும் கோள் இதுவாம். அத்துடன் பூவியிலிருந்து இக்கோள் தூரமாக செல்லுவதற்கு 2 வருடங்களுக்கு மேலாகும். இதனால் மீளமைக்கப்பட்ட பூமிக்கு விரைவில் திரும்பிவிடலாம். இதற்காக அமெரிக்காவில் அதிகாரபூர்வமற்ற விமானம் நிலையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளதாம்.
குறித்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உலகிலுள்ள முக்கிய பணக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு இடங்களை கொள்வன செய்து வைத்துள்ளனர். இவை பிரளயத்திற்கான முன்னேற்பாடுகள் என்று கூறும் அதேவேளை மொத்த மனித குலத்தினையும் புதிய கோளில் குடியேற்றி பாதுகாப்பது சாத்தியமற்ற விடயம் என்பதாலேயே இதுவரையில் இத்தகவல்களை வெளியிடாமல் ரகசியம் பேணுகின்றனர் என்கின்றனர்.
மேலும் இந்த கோளினை கண்டுபிடித்த அடுத்த ஆண்டே நீண்டகால பாரிதோர் இலக்கினை நோக்காக கொண்டு IRAS (Infrared astronomical satellite) இனை நிறுவியது. இத்திட்டம் முழுவதற்குமாக ‘Planet X /(நிபிறு)’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.
பூமியின் தென்பகுதிகளிலேயே நிபிறு பிரளயத்தின் அறிகுறிகள் முதன் முதலில் தென்படும் என்ற காரணத்தினால் இத்திட்டத்தினை முன்னெடுக்க தென்துருவத்தில் ஸ்டோன்ஹென்ஜ்ஃஈஸ்டர் ஐலேண்ட் பிரதேசத்தினை தேர்வு செய்து நிபிறு கோள்கள் சம்மந்தமாக உலகுக்கு தெரியாமல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் தற்போது வெளியாகியுள்ள நிபிறு பிரளயம், பூமியை இருள் சூழல், துருவ மாற்றங்கள் என்பவை 2012இல் நடைபெறமாட்டாது என்று 2008ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து மறுத்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அடுத்த 4 மில்லியன் வருடங்களுக்கு பூமி அழிவடைய வாய்ப்பில்லை. அத்துடன் துருவமாற்றமோ பூமி தன்னைத் தனே ஒழுங்கு படுத்தும் செயற்பாடுகளோ 2012இல் இடம்பெற மாட்டாது என்றும் இது மாயன் மற்றும் சமரியரின் நம்பிக்கைகள் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்கு 2012இல் பூமியில் பாரிய அழிவுகள் இடம்பெறும் என்ற கருத்து வலுக்க குறித்த நபர்களால் கூறப்பட்டுள்ள சில அறிகுறிகள் நடந்துள்ளமை அழிவு ஏற்பட்டுவிடுமோ என அச்சத்தை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை.
2009ஆம் ஆண்டளவில் சூரியனைப் போன்றதொரு பிரகாசமான வால்வெள்ளி ஒன்று பூமியில் தோன்றும் அது வெற்றுக் கண்ணுக்குத் தென்படும் இதுவே பிரதான அறிகுறி என்று கூறியிருந்தனர். அப்படி ஒன்றும் 2009இல் இடம்பெறவில்லை என்றாலும் இந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில் நியூஸிலாந்து பகுதியில் கொமட் என்ற வால்வெள்ளி பகல் நேரங்களிலும் தென்பட்டுள்ளது. ஆனால் இதனால் பூமிக்கு ஆபத்தில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
அப்படியானால் 2012ஆம் ஆண்டில் பூமியில் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறுமா? என்றால், ஆபத்து வரும் என்று யார் சொன்னது, வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல்லுகிறோம் என்ற பாணியிலேயே விடையளிக்கின்றனர்.
வசந்த காலம், கோடை காலம், மாரி காலம் என மாறி மாறி வருடத்தினை அழகுபடுத்த பருவங்கள் வந்து போவதைப் போல டிசம்பர் மாதம் வதந்திகாலமாக மாறி மக்களை அச்சுறுத்தி வருவதை கடந்த சில வருடங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளத் தவறவில்லை.
உண்மையில் டிசம்பர் மாதம் வருடத்தின் இறுதி மாதமே அன்றி அது உலகத்தின் இறுதி மாதமல்ல என்பதை அடுத்தடுத்து வருகின்ற ஒவ்வொரு ஜனவரியும் அந்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றது.
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே எனும் பாணியில் டிசம்பர் மாதம் ஆரம்பமாவதுதான் தாமதம் வதந்திகள் முந்திங்கொள்ளும். அதுவும் ஆங்கிலப்படங்களின் வருவது போல உலகம் அழியப்போகிறது… எம்மை நோக்கி பெரிய ஆபத்து வருகிறது என்று கிளப்பிவிட ஒரு கும்பல் எப்போதும் டிசம்பர் மாதத்திற்காக காத்திருப்பதை நீங்களும் ஒரு நாள் உணர்ந்திருப்பீர்கள். ஒரு தடவையே சுனாமி எம்மைத் தாக்கியது ஆனால் ஓராயிரம் தடவைகள் எம்மை ஓட விட்ட கும்பலும் இதுவன்றோ.
இந்த வகையில் இம்முறையும் அந்த கும்பல் மக்களிடையே பீதியை கிளப்ப மறக்கவில்லை. வரும் டிசம்பர் மாதத்தில் சூரியன் 3 நாட்களுக்கு மேல் உதிக்காமல் பின்னர் மேற்கிலிருந்து உதிக்க ஆரம்பிக்கும். இது உலக அழிவின் ஆரம்பம், டிசம்பர் 21ஆம் திகதியுடன் மாயன் நாட்காட்டி முடிவுக்கு வருகின்ற அன்றைய தினம் நிபிறு பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியப்போகின்றது என பல கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.
ஆனாலும் 2003ஆம் ஆண்டிலிருந்தே 2012ஆம் குறிவைத்து ஏராளமான தகவல்கள், பூமியில் பாரிய அழிவுகள் உண்டு என்பதை உரைத்து வருகின்றது. அவை அனைத்தும் மத நம்பிக்கைகளுடன் தொடர்புபட்ட அதேவேளை விஞ்ஞானத்துடனும் ஒத்துப்போவதனால் இவை எதனையும் அத்தனை இலகுவில் இம்முறை வதந்திகள் என்ற பார்வையில் சிந்திக்க முடியவில்லை என்பதே உண்மை.
உண்மை உணர்ந்துகொள்ள நீண்ட நாட்கள் இல்லை. டிசம்பர் 21 எம்மை நெருங்கிக்கொண்டே இருக்கிறது. அதுவரை தேவையற்ற வதந்திகளினால் மக்களை பீதி ஏற்படுத்துவதை குறைத்து வீணாக உயிர்கள் பலியாவதை தவிர்ப்பதே சாலச் சிறப்பு. மேலும் நடப்பவை நன்றாகவே நடக்கும் என்று நம்புவோம்


Last edited by 99likes on Sun Nov 25, 2012 6:06 pm; edited 1 time in total
99likes
99likes
பண்பாளர்


பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
மதிப்பீடுகள் : 10

View user profile http://www.99likes.blogspot.in

Back to top Go down

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Empty Re: டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????

Post by கேசவன் on Sun Nov 25, 2012 5:58 pm

இந்த பதிவுக்கு நான் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பதில் எழுதுகிறேன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை மீண்டும் சந்திப்போம்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Empty Re: டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????

Post by பிளேடு பக்கிரி on Sun Nov 25, 2012 6:02 pm

உலகம் அழிஞ்சா என்ன? நான் அரபு நாட்டில் தானே இருக்கிறேன்.. ஜாலிடிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Empty Re: டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????

Post by அசுரன் on Sun Nov 25, 2012 6:07 pm

அது சரி... உலகம்ன்னா அரபு நாடு இல்ல போல.. நாமளும் எஸ்கேப் ஆயிடனும் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Empty Re: டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????

Post by பிளேடு பக்கிரி on Sun Nov 25, 2012 6:20 pm

@அசுரன் wrote:அது சரி... உலகம்ன்னா அரபு நாடு இல்ல போல.. நாமளும் எஸ்கேப் ஆயிடனும் புன்னகை
ஹா... ஹா... அப்படி தான் தல..டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Empty Re: டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????

Post by 99likes on Sun Nov 25, 2012 6:20 pm

@அசுரன் wrote:அது சரி... உலகம்ன்னா அரபு நாடு இல்ல போல.. நாமளும் எஸ்கேப் ஆயிடனும் புன்னகை
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
99likes
99likes
பண்பாளர்


பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
மதிப்பீடுகள் : 10

View user profile http://www.99likes.blogspot.in

Back to top Go down

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Empty Re: டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Nov 25, 2012 7:12 pm

இன்னும் 25 நாட்கள் உள்ளது...என்னுடைய கணிணியின் முகப்பு திறையில் இதன் கவுண்டவுன் ஓடிக்கொண்டே இருக்கிறது டிசம்பர் 21யை எதிர் நோக்கி... ஜாலி
எதையும் உடனடியாக மறுக்கவும் முடியாது ஏற்றுக்கொள்ளவும் முடியாது பொருத்து இருந்து பார்ப்போம் ஆவலுடன்... புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4538
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

View user profile

Back to top Go down

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Empty Re: டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????

Post by DERAR BABU on Sun Nov 25, 2012 7:50 pm

நோ டென்ஷன் , அல்வேஸ் வெல்கம் , எதுவாக இருந்தாலும் .
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Empty Re: டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????

Post by பூவன் on Sun Nov 25, 2012 7:55 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:இன்னும் 25 நாட்கள் உள்ளது...என்னுடைய கணிணியின் முகப்பு திறையில் இதன் கவுண்டவுன் ஓடிக்கொண்டே இருக்கிறது டிசம்பர் 21யை எதிர் நோக்கி... ஜாலி
எதையும் உடனடியாக மறுக்கவும் முடியாது ஏற்றுக்கொள்ளவும் முடியாது பொருத்து இருந்து பார்ப்போம் ஆவலுடன்... புன்னகை

இதுக்கும் கவுண்டவுன் ஆ நண்பரே ,சரி பொறுத்து இருந்து பார்போம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Empty Re: டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????

Post by டார்வின் on Sun Nov 25, 2012 8:01 pm

டிசம்பர் 21 க்குள் வீட்டில் வளர்க்கும் கோழிய எல்லாம் அடிச்சி சமைச்சி சாப்பிடணும் ! :idea:
டார்வின்
டார்வின்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 857
இணைந்தது : 03/02/2009
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Empty Re: டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????

Post by மோகன் on Sun Nov 25, 2012 8:05 pm

சிப்பு வருது சிப்பு வருது
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
மதிப்பீடுகள் : 44

View user profile http://vmrmohan@sify.com

Back to top Go down

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Empty Re: டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Nov 25, 2012 8:20 pm

@பூவன் wrote:
இதுக்கும் கவுண்டவுன் ஆ நண்பரே ,சரி பொறுத்து இருந்து பார்போம்
ஆம் நண்பரே 130 நாட்களுக்கு முன்பு இருந்து பயன்படுத்தி வருகிறேன்... சிரி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4538
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

View user profile

Back to top Go down

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Empty Re: டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????

Post by கே. பாலா on Sun Nov 25, 2012 8:23 pm

ADVANCE

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Happy-new-year-2013-firework-vector-1023342


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Empty Re: டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????

Post by பூவன் on Sun Nov 25, 2012 8:23 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:
@பூவன் wrote:
இதுக்கும் கவுண்டவுன் ஆ நண்பரே ,சரி பொறுத்து இருந்து பார்போம்
ஆம் நண்பரே 130 நாட்களுக்கு முன்பு இருந்து பயன்படுத்தி வருகிறேன்... சிரி

105 நாட்கள் போனது இன்னும் 25 நாட்கள் தான் அதையும் பொறுத்து இருந்து பாப்போம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Empty Re: டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Nov 25, 2012 8:31 pm

@கே. பாலா wrote:
ADVANCE

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Happy-new-year-2013-firework-vector-1023342
புன்னகை இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4538
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

View user profile

Back to top Go down

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க???? Empty Re: டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை