ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழ்ச்சொல் வேட்டை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Sun Nov 18, 2012 7:39 am

தமிழ்ச்சொல் வேட்டை - தொடர்பதிவு
ஒன்று)

புதுச் சொற்களை உருவாக்குவதற்கான சொல் வேட்டையில் ஈடுபடும் முன்னால், வாசகர்கள் ஒரு செய்தியை கவனத்தில் கொள்ளுதல் நலம். நீதிமன்றங்களில் சாட்சி விசாரணையின் போது குறியிடப்படும் பத்திரங்களை ஆங்கிலத்தில் எக்சிபிட்(exhibit) என்று சொல்வார்கள். இந்தச் சொல்லுக்கு சரியான மொழிபெயர்ப்பு "காட்சிக்கு வைக்கப்படுவது' என்பதே ஆகும்.

ஆனால், இந்தச் சொல்லை தமிழில் மொழிபெயர்த்த மொழியியல் வல்லுநர்கள் இதைச் "சான்றாவணம்' என்று மொழிபெயர்த்தார்கள். அதற்குக் காரணம், வழக்குகளில் காட்டப்படும் பத்திரங்களை "ஆவணம்' என்று சொல்லும் வழக்கம் தமிழகத்தில் இருந்ததற்கு இலக்கியச் சான்றுகள் இருந்ததுதான்.

இறைவன், சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட்கொண்ட போது, இறைவனிடம் சுந்தமூர்த்தி நாயனார் கேட்ட கேள்வி:
"ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்றைக் காட்டுக''
என்பதாகும். எனவே, சொல் வேட்டையில் ஈடுபடும்போது, இலக்கியச் சான்றுகளோடு நாம் புதுச் சொற்களைத் தேடிக் கண்டுபிடித்தால் மிகப் பயனுள்ளதாக இருக்கும். அப்படி முடியாதபோது, சொற்களின் வேர்களுக்குப் போய் (root of the word) புதுச் சொற்களை உருவாக்குவதில் தவறில்லை.

சில நேரங்களில், சில மொழிபெயர்ப்புகள் ஒரு காலத்தில் சரியானவையாகவும், பிற்காலத்தில் சரியற்றதாகவும் ஆகிவிட வாய்ப்பு உண்டு. உதாரணத்திற்கு ட்ரெயின் (train) என்கிற ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்க்கும் போது நீராவி என்ஜினைக் கருத்தில் கொண்டு அது விடும் புகையை மையப்படுத்திப் "புகை வண்டி' என்று மொழிபெயர்த்தார்கள். ஆனால், இன்றைக்கு எந்த ரயில் வண்டியும் புகை விடுவதே இல்லை. எனவே, இனிமேலும் ரயில் வண்டியைப் புகை வண்டி என்று அழைப்பது பொருத்தமாகுமா என்பது தெரியவில்லை. சிலர் இதைத் "தொடர் வண்டி' என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், "ட்ரெய்லர்' கூட தொடர் வண்டிதான் என்பதால் ரயிலைத் தொடர்வண்டி என்று அழைப்பது எங்ஙனம் சரியாக இருக்கும்?

"ஃபோபியா' (phobia) என்கிற ஆங்கிலச் சொல் உயரம் குறித்த அச்சம், இருள் குறித்த அச்சம், தனிமை குறித்த அச்சம், தண்ணீர் குறித்த அச்சம் போன்ற பல்வேறு வகையான அச்சங்களைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். ஆங்கிலச் சொல் அகராதிகளில் இந்தச் சொல்லுக்கு "அச்சம்' என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே காரணத்தால், தமிழில் இந்தச் சொல்லை "அச்சம்' என்றே குறிப்பிடுகிறோம். ஆனால், "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு அச்சம், பயம், நடுக்கம் போன்ற சொற்களைத் தாண்டி வேறு ஒரு பொருள் இருக்கிறது. ஆனால், அதை உணர்த்தும் சரியான தமிழ்ச்சொல் இல்லை என்றே தோன்றுகிறது. எனவே "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லை அடுத்த வாரத்திற்குள் உருவாக்கி வாசகர்கள் அனுப்பி வைக்கலாம்.

முன்பே கூறிய இக்கருத்துகளை மனதிலே கொண்டு, இந்த வாரம் "ஃபோபியா' என்கிற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லை நாம் தேடுவோம்.

இனி, அடுத்த வாரம் "ஃபோபியா'வுக்குப் புதிய தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்த களிப்பில் இன்னொரு புதுச் சொல் வேட்டையில் இறங்குவோம்...

(தொடரும்) (நன்றி-தினமணி-நீதி அரசர் வி.இராமசுப்ரமணியன்)

இதுவரை வேட்டையாடிய சொற்கள்:
ஃபோபியா = வெருளி அல்லது வெருட்சி
அடிக்ட்' = மீளா வேட்கையன்
அடிக்ஷன் = மீளா வேட்கை
டென்சன் = கொதிப்பு
பாரநோய = மனப்பிறழ்வு
அப்ஜக்டிவ் – சப்ஜக்டிவ் = புறத்தாய்வு - அகத்தாய்வு
இன்புட்-அவுட்புட் = உள்ளீடு-வெளியீடு
அக்ரோனிம் = தொகுசொல்.
அப்ரிவியேஷன் = சொற்சுருக்கம்
பங்க்சுவேஷன் மார்க்ஸ் = நிறுத்தற் குறிகள்
அல்யூஷன் = மறை பொருள்
காமன் சென்ஸ் = இயல்பறிவு.
ஆஸ்ட்ரல் = விசும்புருவான' அல்லது "விசும்புரு


Last edited by சாமி on Sun Jan 27, 2013 8:17 am; edited 3 times in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Sun Nov 18, 2012 7:46 am

இரண்டு)
ஃபோபியா என்ற சொல்லை முதற்சொல்லாக வைத்து இந்தச் சொல் வேட்டையைத் "தமிழ்மணி'யில் சென்ற வாரம் தொடங்கியபோது வாசகர்களும், தமிழ்ச் சான்றோரும், மொழியியல் வல்லுநர்களும் என்ன தீர்ப்பு அளிப்பார்களோ என்று எனக்கு ஒரு புதுவகையான ஃபோபியா ஏற்பட்டது. ஆனால், ஆன்றவிந்த சான்றோர் பலர், பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இருந்தும் கொண்டுவந்து கொட்டியிருக்கும் இணைச்சொற்களைப் பார்க்கும்போது மலைப்பும், வியப்பும் ஏற்பட்டிருக்கிறது.

÷அறந்தாங்கியிலிருந்து மு.சீவானந்தம் என்ற வாசகர் ஃபோபியா என்ற சொல்லுக்கு "அரட்டி' என்ற சொல்லையும், தூத்துக்குடி மெஞ்ஞானபுரத்திலிருந்து அ.ஜெயசிங் என்ற வாசகர் "கற்பனை அச்சம்' என்ற சொல்லையும், தஞ்சாவூரிலிருந்து மருத்துவர் ச.தமிழரசன் "வெறுப்பு' என்ற சொல்லையும், சென்னை வழக்குரைஞர் இ.தி.நந்தகுமார் "பேரச்சம்' என்ற சொல்லையும், மயிலையிலிருந்து ஜி.ஸந்தானம் என்ற வாசகர் "பேரச்சம்'ó அல்லது "தொடரச்சம்' என்ற சொல்லையும், ஃபோபியாவைக் குறிக்கும் சொற்களாக எழுதி அனுப்பியிருக்கிறார்கள்.

÷ கோயம்புத்தூர் கோவில்பாளையத்திலிருந்து முனைவர் வே.குழந்தைசாமி, கம்பராமாயணத்திலிருந்து மேற்கோள் காட்டி, ஃபோபியா என்ற சொல்லுக்கு "வெருள்' அல்லது "வெருட்சி' என்பது சரியான இணைச்சொல்லாக அமையும் என்று குறிப்பிட்டிருக்கிறார். புலவர் அடியன்மணிவாசகன் என்னும் அன்பர் மனம் கலங்கிக் குழம்புதலை, "அலமரல்', "தெருமரல்'ó என்றும், அச்சத்தால் மனம் நடுங்குதலை "அதிர்வு', "விதிர்ப்பு' என்றும், மனம் துணுக்குறுதலை "வெருவுதல்' என்றும் இலக்கியச் சான்றோடு சுட்டிக்காட்டியிருக்கிறார். இதைத் தவிர சூழ்நிலை மற்றும் இயற்கைதரும் அச்சத்தை பேம், நாம் மற்றும் உரும் என்ற சொற்களால் நம் இலக்கியங்கள் குறித்திருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

÷திருவண்ணாமலையிலிருந்து புலவர் சி.சம்பந்தன் என்பவர் "நலிதல்', "கலங்குதல்', "அலமரல்' ஆகிய சொற்களை பத்துப்பாட்டு, நெடுநல்வாடையிலிருந்தும், "விதிர் விதிர்ப்பு' என்ற சொல்லை சிவப்பிரகாசர் அருளிய நால்வர் நான்மணி மாலையிலிருந்தும் எடுத்துக்காட்டியிருக்கிறார்.

÷முத்தாய்ப்பாக, பொன்புதுப்பட்டி சேக்கிழார் சிவநெறிக்கழகத்தைச் சேர்ந்த சைவப்புலவர் தமிழ்ச்செல்வி என்பவர் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையையே அனுப்பியிருக்கிறார். தமிழில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல், பண்புச்சொல் என்று பிரிக்கப்பட்டு, அவை மேலும் தெய்வப்பெயர், மக்கள் பெயர், விலங்கு, மரம், இடம், பல்பொருள் பெயர், செயற்கை வடிவம், பண்பு, செயல், ஒலி என்று பிரிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி அச்சம் என்ற தமிழ்ச்சொல் பண்புச்சொல் என்றும், பல்வேறு பண்பு நிலைகளில் ஏற்படும் அச்சங்கள் 47 தமிழ்ச் சொற்களால் குறிக்கப்பட்டிருப்பதாகவும் எழுதியிருக்கிறார்.

÷அவை: (1) ஓடல், தேங்கல், ஞெரேலெனல், கூசல், திட்கல், உலமரல், அளுக்கல், ஞொள்கல், துடுக்கெனல், துட்கல், குலைதல், வெய்துறல், துண்ணெனல் என்பவை அச்சம் தோன்றுவதற்கான குறிப்புகளை உணர்த்துபவை என்றும்; (2) அப்படித் தோன்றி நம் மனதை ஆக்கிரமிக்கும் அச்சத்தை வெருவு, சூர், பீர், வெறுப்பு, வெறி, வெடி, கவலை, பீதி, உருவு, பேம், பிறப்பு, கொன், உட்கு, பனிப்பு, அணங்கு, புலம்பு, அதிர்ப்பு, அடுப்பு, பயம், உரும், தரம் ஆகிய சொற்கள் அடையாளம் காட்டும் என்றும்; (3) அச்சம் அடைந்த மனதில் சிந்தனையும், எண்ணங்களும் மாறுபட்டு, சிதிலமடையும் போது, அது கலக்கம் என்றும், துரிதம், பிரமம், கதனம் என்று குறிப்பிடப்படுவதாகவும்; (4) கலக்கமுற்ற மனதில் ஏற்படும் நடுக்கம், விதிர்ப்பு, விதப்பு, கம்பம், விதலை, கம்பிதம், பனிப்பு, பொதிர்ப்பு, உலைவு என்ற சொற்களால் உணர்த்தப்படுவதாகவும் எழுதியிருக்கிறார்.

÷மேலும், ஃபோபியா என்ற சொல்லில் உள்ள 3 எழுத்துகளும் பேம், பீதி, பயம் என்ற 3 தூய தமிழ்ச் சொற்களின் சேர்க்கையில் உருவாகிப்பின் மருவியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டு, தமிழ்ச்சொல் அகராதி சூளாமணி நிகண்டு நுலைச் சான்றாகக் காட்
டியுள்ளார்.

÷அரியலூரிலிருந்து முனைவர் சா.சிற்றரசு என்பவர் கடலால் தோன்றும் அச்சத்தை "நாம்' (நாமநீர் வேலி உலகுக்கு.... சிலம்பு) என்றும், எதிரியால் - பகைவரால் தோன்றும் அச்சத்தை "பேம்' என்றும், ஆட்சியாளரால் - சூரியனின் வெம்மையால் தோன்றும் அச்சத்தை "உரும்' என்றும், தனிமையால் உள்ளத்தில் தோன்றும் அச்சத்தை "உள்நடுங்கல்' என்றும், காட்டில் உண்டாகும் அச்சத்தை "சூர்' என்றும், இலக்கியச் சான்றுகளோடு சுட்டிக்காட்டி, ஃபோபியா என்ற சொல்லை "அச்சம்' என்று குறிப்பிட்டாலே போதும் என்றும் எழுதியிருக்கிறார்.

÷எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் அருள் நடராசன் என்னும் வாசகர் ஃபோபியா என்ற சொல்லுக்கு "வெருளி' என்ற சொல்லை அவர்கள் (மருத்துவர்கள்) பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டு, 128 வகையான ஃபோபியாக்களையும், அவை அனைத்திற்கும் உரிய 128 வகை வெருளிகளையும் பட்டியல் போட்டே அனுப்பி விட்டார்.

÷மூடப்பட்ட இடத்திற்குள் ஏற்படும் க்ளாஸ்ட்ரோஃபோபியாவை "அடைப்பிட வெருளி' என்றும், கம்ப்யூட்டரால் வரும் ஃபோபியாவை "கணினி வெருளி' என்றும் அவர் குறிப்பிட்டிருப்பது சுவையாக இருக்கிறது.

÷ஆக, தமிழ்ச் சான்றோர் அனுப்பியுள்ள குறிப்புகளைக் கூர்ந்து நோக்கின், இரண்டு செய்திகள் நமக்குப் புலப்படுகின்றன. ஒன்று, பல்வேறு வகையான அச்சங்களைக் குறிக்கும் சொற்கள் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இருக்கின்றன என்பது; இரண்டாவது, "வெருளி' அல்லது "வெருட்சி' என்னும் சொல் ஏற்கனவே இலக்கியங்களில் காணப்படுவது மட்டுமன்றி, மருத்துவர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. எனவே, வெருளி அல்லது வெருட்சி என்னும் சொல் ஃபோபியாவைக் குறிக்கும் சொல்லாகக் கொள்ளலாம்.

அடுத்த சொல் வேட்டை

அடிக்ட் (ADICT) என்கிற சொல்லுக்கும் பொருத்தமான ஒரு சொல் தமிழில் இருப்பதாகத் தெரியவில்லை. "அடிமை' என்ற சொல் பொருத்தமாக இல்லை. "போதை' என்ற சொல் சரியான தமிழ்ச் சொல்லா என்று தெரியவில்லை. அதைக் குறிக்கும் சரியான தமிழ்ச் சொல்லை (சொற்களை) வாசகர்கள் உருவாக்கி அனுப்பி வைக்கலாம்.

வேட்டை தொடரும்...


Last edited by சாமி on Thu Jan 03, 2013 10:48 pm; edited 1 time in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by றினா on Sun Nov 18, 2012 10:55 am

அருமையாக இருக்கின்றது. தொடருங்கள்.

நாங்கள் எதிர்கொள்ளும் சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும் என நினைக்கிறேன்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by ஆரூரன் on Wed Nov 21, 2012 8:07 pm

நல்ல தொடர் . தொடருங்கள் ...!
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Wed Nov 21, 2012 8:25 pm

ஆங்கிலத்தில் 'அடிக்ட்' என்ற சொல்லுக்கு இந்த வார்த்தை : ' விடுதலையறியா ' என்ற வார்த்தையை உபயோகிக்கலாம்.

சிலப்பதிகாரத்தில் கோவலன் மாதவியிடத்தில் 'விடுதலையறியா விருப்பினனாக' இன்ருந்ததாக இளங்கோவடிகள் கூறுகிறார்.
avatar
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3794
மதிப்பீடுகள் : 578

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by அசுரன் on Wed Nov 21, 2012 10:16 pm

அடிக்ட் (ADICT) என்கிற சொல்லுக்கும் பொருத்தமான ஒரு சொல் தமிழில் இருப்பதாகத் தெரியவில்லை. "அடிமை' என்ற சொல் பொருத்தமாக இல்லை. "போதை' என்ற சொல் சரியான தமிழ்ச் சொல்லா என்று தெரியவில்லை. அதைக் குறிக்கும் சரியான தமிழ்ச் சொல்லை (சொற்களை) வாசகர்கள் உருவாக்கி அனுப்பி வைக்கலாம்.

விடுபடமுடியாத பழக்கம் என்று கூட சொல்லலாமே?

விடுதலையறியா! விடுபடமுடியா! எது சரி?
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சிவா on Wed Nov 21, 2012 10:47 pm

addict என்பதற்கான தனித் தமிழ் வார்த்தையை அடிமை மட்டுமே! ஆனால் இதைத் தனியாகக் கூறினால் பல பொருள் தரும் சொல்லாக இருக்கும்.

Drug addiction - போதைக்கு அடிமை!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by யினியவன் on Wed Nov 21, 2012 10:54 pm

கணவன் என்றாலும் அடிமை தானே சிவா? புன்னகை

சாமி அருமையான திரி - தொடருங்கள்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by அசுரன் on Wed Nov 21, 2012 10:55 pm

அடிமை தனியாக கூறினால் பல பொருள் தரும்.... சரி தான் சிவா
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by ரா.ரா3275 on Thu Nov 22, 2012 12:38 am

நல்ல திரி...தொடரட்டும் மொழி சேவை...நன்று சாமி...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by T.N.Balasubramanian on Thu Nov 22, 2012 7:13 am

[You must be registered and logged in to see this link.] wrote:addict என்பதற்கான தனித் தமிழ் வார்த்தையை அடிமை மட்டுமே! ஆனால் இதைத் தனியாகக் கூறினால் பல பொருள் தரும் சொல்லாக இருக்கும்.

Drug addiction - போதைக்கு அடிமை!

அருமையிருக்கு அன்பு மலர்

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22152
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Sun Nov 25, 2012 7:46 am

மூன்று)
இந்த வாரச் சொல் வேட்டைக்குள் நுழைவதற்கு முன், ஒரு வாக்கு மூலத்தை வாசகர்களுக்கு நான் அளிக்க வேண்டும். நான் தமிழ் அறிஞன் அல்லன். ஆனால் தமிழ் ஆர்வலன். இந்த வேட்டையில் பங்கேற்கும் வாசகர்களும், படித்து மகிழும் அல்லது படித்துப் பார்க்கும் பலரும், மொழியியலில் என்னைவிட மிகப்பெரிய அறிஞர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். எனவே, இந்த வேட்டையில் தேர்ந்தெடுக்கப்படும் சொற்கள், என்னுடைய அல்லது தினமணி ஆசிரியருடைய இறுதித் தீர்ப்பல்ல. தீர்ப்பளிப்பதற்கு, இது நீதி மன்றமும் அல்ல. இதில் தேர்ந்தெடுக்கப்படும் சொற்களை நாங்கள் தமிழ்கூறும் நல்லுலகம் முன் பரிசீலனைக்கு வைக்கிறோம். அவர்களது தீர்ப்பிற்கு நாம் கட்டுப்படுவோம். இனி இந்தவார வேட்டைக்கு வருவோம்.

÷"அடிக்ட்' என்ற சொல்லை சென்ற வாரம் நாம் வேட்டைக்கு விட்டோம். பட்டுக்கோட்டையில் இருந்து பன்னீர்செல்வம் என்னும் வாசகர் சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி "விடுதல் அறியா விருப்பினன்' என்ற சொற்றொடரையும், வேட்கை, கூடுதல் விருப்பம், மிகு விருப்பம் என்னும் சொற்களையும் மாற்றாகக் குறிப்பிட்டு விட்டு, "அடிக்ட்' என்ற சொல்லுக்குக் "கொடு வேட்கை'' என்னும் சொல்லும் பொருத்தமாக இருக்கும் என்று எழுதியிருக்கிறார்.

÷அம்பத்தூரிலிருந்து புலவர் உ.தேவதாசு, கள், கவறு (சூது), காமம் இவற்றுக்கு ஆட்பட்டு மீள முடியாமல் போகும் நிலையையே "அடிக்ட்' என்ற சொல் குறிப்பதானால் சிலப்பதிகாரம் கூறும் "விடுதல் அறியா விருப்பம்' அல்லது "வேட்கை' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றும் உரைத்திருக்கிறார். கோவை கோவில்பாளையம் முனைவர் வே. குழந்தைசாமியும் விடுதல் அறியா விருப்பினன், மீளா வேட்கை, வேட்கை அடிமை, மீளா விருப்பினன், மீளா விருப்பு ஆகிய சொற்களை எழுதியுள்ளார்.

÷வில்லிவாக்கம் சோலை. கருப்பையா பித்து, பைத்தியம் ஆகிய சொற்களையும், உள்ளகரத்திலிருந்து வி.ந.ஸ்ரீதரன் "மீளான்' என்ற சொல்லையும், பட்டாபிராம் பாரதி நேசன் ""பண்பில் பழக்கம்', "மது மயக்கம்' என்ற சொற்களையும், திருவாரூர் தனபாலன், ""ஆட்படுதல்' என்ற சொல்லையும், காஞ்சிபுரம் முனைவர் அமுத.இளவழகன், ""விடுதல் அறியா விருப்பினன்', ""விடா விருப்பு', "விடா வேட்கை' என்னும் சொற்களையும், போளூர் ரகுபதி முழுகுதல், அனுபவித்தல், திளைத்தல், மகிழ்தல், துர்பழக்கம் என்னும் சொற்களையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

÷புலவர் அடியன் மணிவாசகன் திருவள்ளுவர், அக நிலையிலும், புற நிலையிலும் தீமை செய்து ஒழுகுதலை, படிறு + ஒழுக்கம் = படிற்றொழுக்கம் என்று சொல்வதையும், தேவாரத்தில் "மீளா அடிமை உனக்கே' (சுந்தரர்) என்று சொல்லப்படுவதையும் சுட்டிக்காட்டி, காட்சி நிலையில் திடீரென அறிவு மயங்குவது "மருட்கை' எனப்படும் எனவும், தொல்காப்பியத்தில் மருட்கை என்பது அறிவுக்குப் பொருந்தாத சிறுமைச் செயல் என்று குறிப்பிடப்படுவதால், அடிக்ட் என்ற சொல்லுக்கு, படிற்றொழுக்கம், "சிறுமைச் செயல்' என்ற சொற்கள் பொருத்தமாக இருக்கும் என்றும் எழுதியிருக்கிறார். பாடியில் இருந்து முனைவர் மு. அரங்கசுவாமி திருமூலரின் வாக்காகிய "வேட்கை விட்டார் நெஞ்சில்'' என்பதைக் குறிப்பிட்டு, வேட்கை என்னும் சொல் சரியாக இருக்கும் என்கிறார்.

÷போதை என்னும் சொல், "போதல்' என்னும் சொல்லில் இருந்து வருவதாலும், போதல் என்ற சொல்லுக்கு நன்கு பயிலுதல் என்று பொருள் உள்ளதாலும், ஆட்பட்ட மனம், தீமையைப் பழகுவதால், அடிக்ட் என்ற சொல்லுக்கு "தீயொழுழுக்கம்' என்பதே பொருத்தமான சொல்லாக இருக்கும் என்றும் ""நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்'' என்ற குறளைச் சுட்டிக் காட்டி, புதுச்சேரி தெ.முருகசாமி எழுதியுள்ளார்.

÷நாமக்கல் கா. சிவராஜ், அடிமை உணர்ச்சி தன்னுணர்ச்சியால் வருவதால் "அடிக்ட்' என்ற சொல்லுக்குத் "தன்னடிமை' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். அதற்குச் சான்றாக பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் வரும் "தன்னை இழந்து அடிமையான பின்னர் தாரம் ஏது வீடு ஏது?' என்ற பாடலைச் சுட்டிக் காட்டுகிறார்.

÷திருச்சியிலிருந்து தி.அன்பழகன், தீய பழக்கங்களுக்கு மனிதன் அடிமையாவது பலவீனம் என்பதால், "அடிக்ட்' என்ற சொல்லுக்கு "பழக்கவீனம்' அல்லது "மாறாப்பழக்கம்' என்ற சொற்கள் பொருத்தமாக இருக்கும் என்கிறார். ஜெயகிருஷ்ணன் என்பவர், "வேட்கை' என்றும், கே.ஆர்.சுரேந்திரன் "விடாப் பழக்கம்'' பொருத்தமாக இருக்கும் என்றும் எழுதி இருக்கிறார்கள்.

÷சேக்கிழார் சிவநெறிக் கழகத்திலிருந்து சைவப் புலவர் தமிழ்ச்செல்வி, பகுத்தறிவுள்ள மனிதன் தகாத செயல்களைச் செய்யும் பொழுது அவனை "அறிவு இல்லாதவன்', "மடையன்' என்று அழைப்பதால், "அடிக்ஷன்' என்ற சொல்லுக்கு "அறிமடம்' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றும், அதே சமயம் மனம் அறிவுக்குக் கட்டுப்படாமல் இருப்பதால், "மனக்கோட்டம்' அல்லது "ஒüவியம்' என்ற சொற்களாலும் இதைக் குறிக்கலாம் என்கிறார். "கோட்டி' என்ற சொல் ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

÷இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது "அடிக்ட்' என்ற சொல்லுக்கு "மீளா வேட்கையன்' என்ற சொல்லும், "அடிக்ஷன்' என்ற சொல்லுக்கு "மீளா வேட்கை' என்பதும் பொருத்தமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. "மீளா அடிமை' என்ற சொல்கூட பொருத்தமாக இருக்கலாம். ஆனால், இறைவனுக்கு ஆட்பட்டவர்களை அப்படிக் குறிப்பிடுவதால் "அடிக்ட்' என்ற சொல்லுக்கு அதே சொல்லை பயன்படுத்துவதை மனம் ஒப்ப மறுக்கிறது. "விடுதல் அறியா விருப்பினன்'' என்பது பொருத்தமாக இருந்தாலும், அது நீண்ட தொடராக இருக்கும் காரணத்தால் அதைவிட "மீளா வேட்கை' என்ற சொல்லே பொருத்தம் என்று தோன்றுகிறது.

அடுத்த சொல் வேட்டை
"டென்ஷன்'. "பதட்டம், பதற்றம் என்கிற சொற்கள் ஏற்கெனவே இருந்தாலும், ஒரு மனிதனின் உடல் நிலையில் ஏற்படும் "ஹைபர் டென்ஷன்' "இரத்தக் கொதிப்பு' என்று கூறப்படுகிறது. மனோ நிலையில் ஏற்படும் டென்ஷன் சில சமயம் "நிலைகொள்ளாமை' என்று அழைக்கப்படுகிறது. ஒரு கிராமத்திலோ, ஒரு சமூகத்திலோ ஏற்படும் பதட்டமும் டென்ஷன் என்றே அழைக்கப்படுகிறது. எது சரியாக இருக்கும்?

அடுத்த வார சொல் வேட்டைக்கான சொல் - "டென்ஷன்'

வேட்டை தொடரும்...


Last edited by சாமி on Thu Jan 03, 2013 10:49 pm; edited 1 time in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Sun Nov 25, 2012 8:42 am

டென்ஷன் என்ற சொல்லுக்கு: மழுங்கல் (எந்த செயலிலும் ஈடுபட முடியாத நிலை) அல்லது அதிர்நிலை (ஒரு அதிர்வுற்ற நிலை ,
நாடி நரம்புகளில் ஒரு விதமான பதற்ற நிலை)
avatar
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3794
மதிப்பீடுகள் : 578

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by ஆரூரன் on Tue Nov 27, 2012 12:06 am

[You must be registered and logged in to see this link.] wrote:ஆங்கிலத்தில் 'அடிக்ட்' என்ற சொல்லுக்கு இந்த வார்த்தை : ' விடுதலையறியா ' என்ற வார்த்தையை உபயோகிக்கலாம்.

சிலப்பதிகாரத்தில் கோவலன் மாதவியிடத்தில் 'விடுதலையறியா விருப்பினனாக' இன்ருந்ததாக இளங்கோவடிகள் கூறுகிறார்.

மகிழ்ச்சி நம்ம கா.ந.க ஐயா சொன்னதை நிறைய பேர் சொல்லி இருக்காங்க !!!
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Sun Dec 02, 2012 8:38 am

நான்கு)
அனேகமாக தேர்வுக்கும், தேர்வு முடிவுக்கும் காத்திருக்கும் பிள்ளைகளைப் போல் நமது வாசகர்களும் ஞாயிறு அன்று உதயமாகும் தமிழ் மணிக்காக எழுதுகோலோடும், ஏட்டோடும் காத்திருப்பார்கள் போல் தெரிகிறது. அந்த அளவிற்கு இலக்கியச் சான்றுகளோடு அளப்பரிய சொற்செல்வங்களை வாசகர்கள் கொண்டுவந்து கொட்டுகிறார்கள்.

கோவில்பாளையம் முனைவர் வே.குழந்தைசாமி, ""பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை'' என்ற திருவாசகக் கூற்றையும், ""மனம் பதைப்பு அறல் வேண்டும்'' என்ற திருப்புகழ் வரியையும் சுட்டிக்காட்டி "பதைப்பு' அல்லது "பதற்றம்' என்பது "டென்சன்' என்ற சொல்லுக்குச் சரியான சொல்லாக இருக்கலாம் என்கிறார். "ஹைப்பர் டென்சன்' என்ற சொல்லுக்குக் கம்ப இராமாயணத்தில் பயன்படுத்தப்படும் மனக்கொதிப்பு, என்ற சொல்லைச் சுட்டிக் காட்டுகிறார்.

தஞ்சாவூரிலிருந்து பா.ஜம்புலிங்கம், இரத்தத்தில் ஏற்படும் அழுத்தம் இரத்த அழுத்தம் (ஹைப்பர் டென்சன்) என்றும், சித்தத்தில் ஏற்படும் அழுத்தம் டென்சன் என்று குறிப்பிடப்படுவதால், "மன அழுத்தம்' அல்லது "மன இறுக்கம்' என்ற சொல் சரியாக இருக்கும் என எழுதியிருக்கிறார். அதே கருத்தை பொன்னமராவதியிலிருந்து அ.கருப்பையாவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பவானிசாகரிலிருந்து பெரு.தமிழ்வேந்தன், "டென்சன்' என்ற சொல்லுக்கு உள்ளழுத்தம், உட்படு சினம், உள்ளழற்சி, உள்ளரவம், உள்ளிடல் போன்ற பல சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

சென்னையிலிருந்து ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன் என்பவர், உணர்ச்சி மிகுதியின் காரணமாக மன நெருக்கடிக்கு ஆளாவதால் "மிகு உணர்ச்சி' என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறார்.

சென்னை கோட்டூரிலிருந்து ஜெயகிருஷ்ணன் என்பவர், "டென்சன்' என்ற சொல்லை "அழுத்தம்' என்று சொல்வது சரியாக இல்லை என்றும், "இறுக்கம்' அல்லது "மன இறுக்கம்' என்பதே முறையானதாக இருக்கும் என்கிறார்.

திருச்சியிலிருந்து தி.அன்பழகன், "டென்சன்' என்ற சொல்லுக்கு "கொந்தளிப்பு' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றும், தமிழ் இலக்கணத்தின் வழி "கடல் கொந்தளிப்பு' என்பது இயல்பு வழக்காகும் என்றும், "ஊர் கொந்தளிப்பு' என்பது தகுதி வழக்காகும் என்றும் குறிப்பிடுகிறார்.

சென்னை வில்லிவாக்கத்திலிருந்து சோலை. கருப்பையா என்பவர், ஒரு கிராமத்திலோ அல்லது சமூகத்திலோ ஏற்படும் டென்சன் "பதட்டம்' என்ற சொல்லாலும், மனோநிலையில் ஏற்படும் டென்சன் "படபடப்பு' என்ற சொல்லாலும் உளவியல் சார்ந்த டென்சன் "மன இறுக்கம், மன அழுத்தம், கொந்தளிப்பு' ஆகிய சொற்களாலும் அழைக்கப்பட்டு ஏற்கனவே புழக்கத்திற்கு வந்துவிட்ட காரணத்தால், நாம் டென்சன் என்ற சொல்லுக்கு ஓர் ஒற்றைச் சொல்லைத் தேடி அலையத் தேவையில்லை என்கிறார்.

புலவர் அடியன்மணிவாசகன், டென்சன் என்ற சொல்லுக்கு அகரமுதலியில் "மனத்தாக்க அழுத்த உணர்வு' என்றும், "உள அழுத்த அலைவு' என்றும் பல பொருள்கள் குறிப்பிடப் பட்டிருப்பதாகவும், மனச்சோர்வு, மனக்களைப்பு, மனஉளைச்சல், மனவலி, மனப்போராட்டம் ஆகிய யாவும் மனதிற்கு சுமையாகி விடுவதால் டென்சன் என்ற சொல்லுக்கு "மனச்சுமை' என்ற பெயர் கொடுக்கலாம் என்கிறார். ""களைப்பின் வாராக் கையறவு உளவோ'' என்று பட்டினத்தார் கூறுவதால் "கையறவு' என்றும் சொல்லும் மனச்சுமை அழுத்தத்திற்குப் பொருந்தும் என்று சொல்லிவிட்டு, இறுதியில் மனச்சுமை, கையறவு, மன அழுத்தம், அகப்பிதுங்கல், அகவேக்காடு, பொறுக்க இயலாமை மனவுறுத்தம், மனச்செறுக்கம் ஆகிய சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

கல்லூரிக் கல்வி மேனாள் இணை இயக்குநர் பேராசிரியர் திருக்குறள் க.பாஸ்கரன், அகரமுதலியிலிருந்து "இழுவிசை' மற்றும் "நெருக்கடி நிலை' ஆகிய சொற்களைச் சுட்டிக்காட்டி, அமைதியின்மை அல்லது இதய இறுக்கம் என்கிற சொற்கள் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

அம்பத்தூரிலிருந்து புலவர் உ.தேவதாசு, பொதுவாக டென்சன் என்ற சொல்லுக்கு மறுகுதல், அலமரல், பதைபதைப்பு, நிலைதிரிதல், ஊசலாட்டம் எனப் பல சொற்களை இணையாகக் கொள்ளலாம் என்றாலும், இத்தகைய நிலை தடுமாறலுக்கு அவரவர் மனநிலை காரணமாக அமைவதால், "மன உளைச்சல்' என்ற சொல் பொருந்தும் என்கிறார். அதற்குச் சான்றாக கம்ப இராமாயணத்திலிருந்து சீதையின் மனநிலையைக் குறிக்கும் ஒரு பாடலையும், இராமனின் மனநிலையைக் குறிக்கும் ஒரு பாடலையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

நங்கநல்லூரிலிருந்து டி.வி. கிருஷ்ணசாமி, மன இறுக்கம் என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். ச. இராசதுரை "கொடுநோய்' என்பது பொருந்தும் என்று எழுதுகிறார்.

கிழவன் ஏரியிலிருந்து செ.சத்தியசீலன், திருவாசகத்தில் திருச்சதகப் பகுதியில் வருகின்ற ""மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து'' என்று வருவதை மேற்கோள்காட்டி எழுதியிருக்கிறார். எனவே, டென்சன் நேரத்தில் இருக்கும் மனநிலையைக் குறிக்க "பெருவிதிர்ப்பு' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறார்.

புதுச்சேரியிலிருந்து நா.கிருஷ்ணவேலு, டென்சன் என்ற சொல்லுக்கு "கூடுதல் சக்தி' மற்றும் "வலியவிசை' (வலிமையான விசை) என்ற சொற்களையும், புதுச்சேரி தெ.முருகசாமி, டென்சன் என்ற சொல்லுக்கு "பரபரப்பு' என்ற சொல்லையும் பரிந்துரைக்கிறார்கள்.

பாடியிலிருந்து முனைவர் மு.அரங்கசுவாமி, டென்சன் என்ற சொல்லுக்கு தனிமனித அளவில் நிலையழிதல், தடுமாறுதல், மனக்கொதிப்பு, பதறுதல் ஆகிய சொற்களையும் சமூக அளவில் பதற்றம், இறுக்கம், கொந்தளிப்பு ஆகிய சொற்களையும் பயன்படுத்தலாம் என்று கூறி, சேக்கிழார் பெருமானுடைய அப்பூதியடிகள் நாயனார் புராணத்திலிருந்தும், திருவாசகத்திலிருந்தும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

ஆலந்தூர் புலவர் இரா. இராமமூர்த்தி, தொல்காப்பியம் மற்றும் நற்றிணை ஆகியவற்றிலிருந்து " கையறவு' என்ற சொல்லையும், சிவப்பிரகாசர் அருளிய நால்வர் நான்மணிமாலையிலிருந்து "விதிர்விதிர்ப்பு' என்ற சொல்லையும் சிலம்பு மற்றும் புறநானூற்றிலிருந்து "அடர்' என்ற சொல்லையும் பரிந்துரைக்கிறார். அவர் எழுதிய கடிதத்தில் ஒரு அற்புதமான புதுச்சொல்லை நற்றிணையிலிருந்து எடுத்துக் கையாண்டிருக்கிறார். அந்தச் சொல், "அஞர்' என்பதாகும். கடற்பயணத்தில் கலம் உடைந்து நீரில் வீழ்ந்தோர் மரப்பலகையைப் பற்றிக் கொள்வதை ""பலர் கொள் பலகைபோல வாங்க வாங்க நின்ற ஊங்கு அஞர் நிலையே'' என்று நற்றிணை விளக்குவதையும், புறநானூற்றில் 238-ஆவது பாடல் ""ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு'' என்று கூறியதையும் எடுத்துக்காட்டியிருக்கிறார். இறுதியில் டென்சன் என்ற சொல்லுக்கு மருட்கை, ஆரஞர், விதுப்புறுதல், பதுறுதல், படர்மெலிதல் என்ற சொற்களைப் பரிந்துரைக்கிறார். இந்தக் கடிதத்தில் நம்மை மகிழ்விப்பது தற்போது பேச்சுவழக்கில் இல்லாத "அஞர்' மற்றும் "ஆரஞர்' என்னும் சொற்களாகும்.

இவையெல்லாம் பார்க்கும் போது, டென்சன் என்ற சொல்லுக்கு "கொதிப்பு' என்ற சொல் சரியாக வரும்போல் தெரிகிறது. காரணம், இரத்தத்தில் வரும் கொதிப்பு இரத்தக் கொதிப்பாகவும், சித்தத்தில் ஏற்படும் கொதிப்பு மனக்கொதிப்பாகவும் வழக்கத்திலும் புழக்கத்திலும் வந்துவிட்டதாகப் பலர் எழுதியிருக்கிறார்கள்.

அடுத்த வார சொல் வேட்டைக்கான சொல் - 'Paranoia' பாரநோய


Last edited by சாமி on Thu Jan 03, 2013 10:50 pm; edited 1 time in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by Kuzhali on Sat Dec 08, 2012 1:49 pm

இந்த வாரம் இந்த வார்த்தைக்கு யாரும் விடை கண்டுபிடிக்க முயலவில்லையா?
avatar
Kuzhali
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 87
மதிப்பீடுகள் : 17

View user profile

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Sun Dec 09, 2012 9:09 pm

ஐந்து)
எடுத்த எடுப்பில் நான் இரு செய்திகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒன்று, நான் கனவிலும் எதிர்பார்க்காத அளவில், இந்தச் சொல் வேட்டை எங்கெங்கோ தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் குறியீடாக இந்த வாரம் புழல் சிறையிலிருந்து ஒரு சிறை வாசி (அவரைக் கைதி என்று சொல்ல மனம் ஒப்பவில்லை) நான்கு சொற்களை எழுதி அனுப்பியிருக்கிறார். நான் நெகிழ்ந்து போனேன். இரண்டாவது, சொல் வேட்டையில் பங்கேற்கும் வாசகர்கள் ஆங்காங்கே அவரவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து வட்டார வழக்காக இருந்து, இன்று வழக்கொழிந்து போன அல்லது போய்க்கொண்டிருக்கும், சொற்களையும் தேடிப்பிடிக்கலாம். உண்மையில் சொல்லப்போனால், வழக்குச் சொற்களுக்கு தமிழ் மொழியில் தனி இடம் உண்டு.

÷கம்பன் தன் காப்பியத்தில் முதலில் பாடிய பாட்டு ""குமுதனிட்ட குலவரைக் கூத்தரில்'' என்றும், அப்பாட்டில் வரும் "துமி' என்ற ஒரு வழக்குச் சொல் ஒரு சர்ச்சையைக் கிளப்பியது என்றும், கலைவாணியின் அருளால் அந்த சர்ச்சை முடிவுற்றது என்றும் ஒரு கதை உண்டு. எனவே, வாசகர்கள் பண்டைய இலக்கியங்களில் வேட்டை நடத்தும்போதே, கூடவே வழக்குச் சொற்களைத் தேடுவதும் நலம் பயக்கும் என்று கருதுகிறேன். இனி இந்த வார வேட்டைக்கு வருவோம்.

÷நான் மேலே கூறியது போல் புழல் சிறையிலிருந்து தே.புதுராஜா, தனது கடிதத்தில் "பாரநோய' என்ற சொல்லுக்கு தன்னிலை அறியாக் குறைபாடு, அவ நம்பிக்கை, தொடர்புத் திறன் குறைபாடு, வேண்டா பயம் குறைபாடு என்னும் நான்கு சொற்களைப் பரிந்துரைத்திருக்கிறார்.

÷சென்னை சேத்துப்பட்டிலிருந்து மு.கேசவராமன், "பாரநோய' என்ற சொல்லுக்கு மன மாயை, கற்பனை, பொய்த் தோற்றம், கற்பனை நினைப்பு, கானல், எதிர்மறை ஏற்பு, அச்சம், பீதி, மன மயக்கம் ஆகிய சொற்களைப் பரிந்துரைத்திருக்கிறார்.

÷கிழவன் ஏரியிலிருந்து புலவர் செ.சத்தியசீலன், திருக்குறளைச் சான்றாகக் காட்டி "பாரநோய' என்ற சொல்லுக்கு "மிகை அச்சம்' என்பது பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

÷நங்கநல்லூர் டி.வி. கிருஷ்ணசாமி, "மனப்பிரமை' என்ற சொல்லையும், புதுச்சேரி தே. முருகசாமி, வீண் குழப்பம், தற்சார்பின்மையுடன் கலங்கி மருகுவது ஆகிய சொற்களையும் எடுத்துரைத்துள்ளார்கள்.

÷அண்ணாநகர் ஆனந்தக்கிருஷ்ணன், மனப்பிறழ்வு, மனச்சிதைவு ஆகிய சொற்களையும், திருப்பத்தூர் புலவர் விமலாநந்தன், "கற்பனையான அச்சம்' அல்லது "புதிரான அச்சம்' என்ற சொற்களையும் எழுதியிருக்கிறார்கள்.

பாடியிலிருந்து மு.அரங்கசுவாமி, தமிழ் லெக்சிகன்-இல் "பாரநோய' என்ற சொல் குறிப்பிடப்படவில்லை என்றும், ""மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்'' என்ற பழமொழியை அடியொற்றி பாரநோய என்ற சொல்லுக்கு "மருள்' அல்லது "மருளி' சரியான தமிழ்ச் சொல்லாக அமையும் என்றும் கூறுகிறார்.

÷வில்லிவாக்கம் சோலை.கருப்பையா, கானல் கற்பனை பீதி, கானல் உணர்வு அச்சம் அல்லது கற்பிதவாதம் என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

÷புலவர் அடியன் மணிவாசகன், "பாரநோய' என்ற சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக அகர முதலியிலிருந்து "அறிவுப்பிறழ்ச்சி' அல்லது "தருக்கியல்', "சித்தப்பிரமை' ஆகிய சொற்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், நல்ல மனநலக் குறைவினால் ஏற்படும் நோயாக இது இருப்பதால் "மனநோய்' என்று கூறுவதே மருத்துவத்தை நாடும் அறிவு திரிபுக்கும், மூளை கலக்கத்திற்கும் செயல் மாறாட்டத்திற்கும் பொருந்தி வரும் என்றும் உரைத்திருக்கிறார்.

÷திருச்சி தி.அன்பழகன், தெளிவின்மையைக் குறிக்கும் தமிழ்ச்சொல் "ஆசு' என்பதால், "பாரநோய' என்ற மனநோய் அல்லது மனக்கோளாறை "ஆசுள்ளம்' என்று அழைக்கலாம் என்கிறார்.

÷கோயம்புத்தூர் கோவில்பாளையம் முனைவர் வே.குழந்தைசாமி, திருவருட்பாவில் வள்ளலார் பல இடங்களில் "மருள்' என்ற சொல்லை (மருளுடைய மனப்பேதை நாயினேன்) குறிப்பதாலும், திருவாசகத்தில் மணிவாசகப் பெருமானும் ""மருளனேன் மனத்தை மயக்கு அற நோக்கி'' என்றும், நம்மாழ்வார் ""மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே'' என்றும் கூறுவதால், "மருள்' என்ற சொல் சரியாக இருக்கலாம் என்கிறார். மேலும், திருவருட்பாவில் "மருட்பகை தவிர்த்து' என்ற சொல்லால் மருளையும், பகை அச்சத்தையும் வள்ளலார் சுட்டிக் காட்டுவதால், மருட்பகை அல்லது மருள் என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

÷ஆலந்தூரிலிருந்து புலவர் இரா.இராமமூர்த்தி, தியங்குதல்,

வெருவருதல், திகைத்தல் ஆகிய சொற்களையும், வி.ந.ஸ்ரீதரன், மன மயக்கம் அல்லது மதி மயக்கம் என்ற சொற்களையும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

இவற்றைப் பார்க்கும்போது சென்னைப் பல்கலைக்கழக அகர முதலியில் குறிப்பிட்டிருக்கும் "தருக்கியல்', "சித்தப்பிரமை' என்பது பொருத்தமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதை விட,

"மனப்பிறழ்வு என்பது பொருத்தமாக இருக்கும்.

அடுத்த வார சொல் : OBJECTIVE - SUBJECTIVE (அப்ஜெக்டிவ் - சப்ஜெக்டிவ்)

(வேட்டை தொடரும்)Last edited by சாமி on Thu Jan 03, 2013 10:51 pm; edited 1 time in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Sun Dec 16, 2012 10:39 pm

ஆறு)
சொல் விளையாட்டு ஒரு சுவையான விளையாட்டே. ஒரே சொல்லுக்கு பல்வேறு பொருள்களும் ஒரே பொருளைக் குறிக்கும் பல்வேறு சொற்களும் நமது அன்னைத் தமிழில் இருப்பது போலவே ஆங்கிலத்திலும் உண்டு. "ஆப்ஜக்ட்' என்ற சொல் ஒரு பொருளையும் குறிக்கலாம். ஒரு இலக்கையும் குறிக்கலாம். அதே போல் "சப்ஜக்ட்' என்பது ஒரு பொருளை அறியும் அல்லது உணரும் ஒன்றையும் குறிக்கலாம். அதே சமயம் ஒரு கூட்டத்திலோ, ஓர் அவையிலோ, விவாதிக்கப்படும் பொருளையும் குறிக்கலாம். எனவே சில சமயங்களில் இவ்விரு சொற்களுமே ஒரே பொருளில் பயன்படுத்தப்படலாம். சில நேரங்களில் ஒன்றுக்கொன்று அப்பாற்பட்ட (எதிர்மறையாகக் கூட) பயன்படுத்தப்படலாம்.

ஆனால் இவ்விரு சொற்களும் அப்ஜக்டிவ்-சப்ஜக்டிவ் என்ற குறிப்பிட்ட வரையறையில் பயன்படுத்தப்படும் போது, இலக்கு, பொருள் போன்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மனம்சார்ந்த குறியீடுகளாக இச்சொற்கள் மாறிவிடுகின்றன. இந்த நுணுக்கத்தின் அடிப்படையில் இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

÷புலவர் அடியன் மணிவாசகன் சப்ஜக்டிவ் என்பதை வினைமுதல் என்றும், அப்ஜக்டிவ் என்பதை "எதிர்மறை பொருள்' என்றும் சென்னை பல்கலைகழக அகரமுதலியை அடிப்படையாக வைத்தும், ஆனால் அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டும் எழுதியிருக்கிறார்.

÷வேலூரிலிருந்து புலவர் அரு.சுந்தரேசன், சப்ஜக்டிவ் என்பது "மனதில் தூண்டுதல் இல்லாமல் எழுகிற எண்ணம்' என்றும், அப்ஜக்டிவ் என்பது "நோக்கம், இலக்கு' என்கிற பொருளிலேயும் குறிக்கப்படுவதால் இவ்விரு சொற்களையும் எண்ணம், கருத்து, நோக்கம், இலக்கு என்ற சொற்களால் குறிப்பிடலாம் என்கிறார்.

÷கோவையிலிருந்து வழக்குரைஞர் நந்திவர்மன், அப்ஜக்டிவ் என்ற சொல்லுக்கு அகரமுதலியில் "புறவயமான குறிக்கோள்' மற்றும் "நோக்கம்' என்ற சொற்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், "நோக்கம்' என்ற சொல் சரியாக இருக்கலாம் என்று சிவபுராணத்திலிருந்து மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார். சப்ஜக்டிவ் என்ற சொல்லுக்கு "அக எண்ணம் சார்ந்த' என்ற பொருளை எடுத்தியம்பியுள்ளார்.

÷கடலுர் சத்தியமூர்த்தி, அப்ஜக்டிவ் என்ற சொல்லை "குறிக்கோள்' என்று சொல்லலாம் என்றும், தனிமனித விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட நிலையில் அச்சொல்லை பயன்படுத்தும் போது முனிவு, கனிவு இன்றி, என்று கூறலாம் என்று சொல்லிவிட்டு அதே போல் சப்ஜக்டிவ் என்பது தனிமனித விருப்பு வெறுப்புக்கு உட்பட்டு ஏற்படும் காரணத்தால் அதை "விழைவு வழி' என்று குறிப்பிடலாம் என்றும் எழுதியுள்ளார்.

÷கோவை கோவில்பாளையத்திலிருந்து முனைவர் வே.குழந்தைசாமி, அப்ஜக்டிவ் என்பதை "ஒருதலையன்மை' அல்லது "கோடாத சிந்தை' என்றும், சப்ஜக்டிவ் என்பதை "ஒருதலைச்சிந்தை' அல்லது "மனக்கோட்டம்' என்றும் அழைக்கலாம் என்கிறார்.

÷ஆலந்தூர் புலவர் இரா.ராமமூர்த்தி, அகம், புறம் இந்த இரண்டின் வெளிப்பாடே அனைத்தும் என்பதனால் சப்ஜக்டிவ் என்பதை "அகவயம்' என்றும், அப்ஜக்டிவ் என்பதை "புறவயம்' என்றும் குறிக்கலாம் என்றும் இது அறிவியலுக்கும், அருளியலுக்கும், காதலுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிடுகிறார்.

÷திருச்சியிலிருந்து தீ.அன்பழகன், சப்ஜக்டிவ் என்பதை "தன்முனைப்பு' என்றும், அப்ஜக்டிவ் என்பதை "தன்மிதப்பு' என்றும் கூறலாம் என்கிறார்.

÷திருப்பத்தூர் புலவர் ச.மு.விமலாநந்தன், அப்ஜக்டிவ் என்பதை "பயனுறு நோக்கம்' என்றும், சப்ஜக்டிவ் என்பதை "தானாக மனதில் எழுகிற' என்றும் குறிப்பிடலாம் என்கிறார். ஆனால், இவை அனைத்தும் மிகச் சரியான சொற்களாகத் தெரியவில்லை.

÷ஆங்கில அகரமுதலிகள் அப்ஜக்டிவ் என்ற சொல்லை சாதாரண எண்ணங்கள், உணர்வுகளிலிருந்து மாறுபட்டு புறப்பொருள்களை ஒரு சரியான துலாக்கோலில் இட்டு எடைபோடுவது என்று குறிப்பிடுகின்றன. சப்ஜக்டிவ் என்ற சொல்லை ஆங்கில அகரமுதலிகள் மனதில் உதிக்கின்ற அல்லது எண்ணுபவரின் எண்ண ஓட்டத்தைச் சார்ந்த ஒன்றாகக் குறிக்கின்றன. ஆக, தான் என்ன நினைக்கிறோம் என்பதை ஒதுக்கிவிட்டு, அறிவியலின்பாற்பட்டு ஒரு செய்தியையோ, ஒரு நிகழ்வையோ, ஒரு நபரையோ எடை போடுவதை அப்ஜக்டிவ் என்றும்; தான் கொண்ட கொள்கை அல்லது முடிவு அல்லது கருத்துகளின் அடிப்படையிலோ அல்லது அறிவியல் சார்பில்லாமலோ எடைபோடும் முயற்சியை சப்ஜக்டிவ் என்றோ சொல்லலாம்.

÷அந்த வகையில் பார்க்கும் போது வழக்குரைஞர் சேலம் அ.அருள்மொழி தொலைபேசியில் என்னிடம் "அகக்காரணிகளைக் கொண்டு ஒன்றை ஆராய அல்லது எடைபோடப் புகுங்கால், அதை "சப்ஜக்டிவ்' என்று சொல்லலாம் என்றும், புறக்காரணிகளைக் கொண்டு ஆராயும் அல்லது எடைபோடும் முயற்சியை "அப்ஜக்டிவ்' என்றும் சொல்லாமே' என்றார். அந்த வகையில் பார்க்கும்போது, "அப்ஜக்டிவ் - சப்ஜக்டிவ்' என்ற சொற்களுக்கு "புறத்தாய்வு - அகத்தாய்வு' என்றும் சொல்லலாம் என்று கருதுகிறேன்.

"அப்ஜக்டிவ் - சப்ஜக்டிவ்' என்ற சொற்களுக்கான வாசகர்களின் தேர்ந்த முடிவு புறத்தாய்வு - அகத்தாய்வு

-----------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்த வார சொல் : INPUT - OUTPUT (இன்புட்-அவுட்புட்)

(வேட்டை தொடரும்)


Last edited by சாமி on Thu Jan 03, 2013 10:51 pm; edited 1 time in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Wed Dec 26, 2012 12:31 pm

ஏழு)
கடந்த ஆறு வாரமாக நடக்கும் சொல் வேட்டை, பல பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்று, எங்கெங்கோ தமிழ் ஆர்வலர்களும், தமிழ் அறிஞர்களும் குடத்தில் இட்ட விளக்கு போல், முகவரி தெரியாமல் தங்களை ஒடுக்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே. சொல் வேட்டையின் மூலம் புதுச்சொற்களைப் போலவே, அவ்வறிஞர்களும் வெளிக்கொணரப் பட்டால், அது நமக்கு மிகப் பெரிய மகிழ்வைத் தரும். எனவே, சொல் வேட்டையை வாரந்தோறும் படித்து மகிழ்ந்த அல்லது படித்த பின் மாற்றுக் கருத்து கொண்ட அனைவரும், தங்களது கருத்துகளைப் பதிவு செய்ய ஒரு மேடையாகவோ, மன்றமாகவோ இத்தொடரைப் பயன்படுத்திக் கொண்டால், அது அவர்கள் செய்யும் மிகப் பெரிய தொண்டாக அமையும். ஆகவே, வாரந்தோறும் தொடர்ந்து நம்மோடு களத்தில் இறங்கும் வாசகர்களைப் போலவே, இன்னும் பலரும் நம்மோடு பயணிக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு, இந்தவார வேட்டைக்கு வருவோம்.

ஆங்கிலச்சொல் அகராதிகளின் படி, "இன்புட்' என்ற சொல் இரு சொற்களின் கூட்டுச் சேர்க்கை ஆகும். எனவே, அச்சொல் உள்ளே செலுத்தப்படும் அல்லது கொடுக்கப்படும் பொருளையும் குறிக்கலாம் அல்லது கொடுப்பதான செய்கையையும் குறிக்கலாம். இவை தவிர, ஒருவர் மற்றவர்க்கு வழங்கும் கருத்துகளையும், ஆலோசனைகளையும், செய்திகளையும் கூட அச்சொல்லால் குறிக்கலாம். அதேபோல் "அவுட்புட்' என்ற சொல்லும் இரு சொற்களின் சேர்க்கையே. அச்சொல்லும் ஒன்றிலிருந்து வெளியேற்றப்படும் பொருளையோ, அதன் அளவையோ குறிக்கலாம், வெளியேற்றுவதான செய்கையையும் குறிக்கலாம். கணினி மயமாகிவிட்ட இவ்வுலகில், அச்சொல் செய்தித் தொகுப்புகளின் பரிமாற்றத்தையும் குறிக்கலாம். இவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

தாராபுரத்திலிருந்து பல் மருத்துவர் கந்தவேள், "உட்படுதல் - வெளிப்படுத்துதல் அல்லது உள்ளாக்குதல் - வெளியிடுதல்' என்னும் சொற்களை எழுதியிருக்கிறார். காஞ்சிபுரத்திலிருந்து டி.சிவா, இன்புட்-அவுட்புட் சொற்களை மருத்துவத்தோடு பொருத்திப் பார்த்து "இன்புட்' என்பதற்கு "அகஞ்சேரல்' அல்லது "உள்வாங்கல்' என்றும், "அவுட்புட்' என்பதற்கு "புறந்தள்ளல்' அல்லது "வெளியேற்றல்' என்றும் குறிக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்.

சென்னை உள்ளகரத்திலிருந்து வி.ந.ஸ்ரீதரன், "உள்ளீர்ப்பு, வெளிக்கொணர்வு' என்னும் சொற்களைப் பரிந்துரைக்கிறார். புலவர் அடியன் மணிவாசகன், "இன்புட்' என்ற சொல் பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் பயன்படுத்தப்படும் காரணத்தால், "அகநிகழ்வு' என்று கூறலாம் என்றும், அதே போல் "அவுட்புட்' என்பதை "புறநிகழ்வு' என்று குறிப்பிடலாம் என்றும் சொல்கிறார்.

வேலூரிலிருந்து புலவர் அரு.சுந்தரேசன், பொருளியல் மற்றும் வணிகத்தின் அடிப்படையில் "முதலீடு-வருவாய்' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தலாம் என்கிறார். பேராசிரியர் க.பாஸ்கரன், "அகபங்களிப்பு-புறவிளைவு' என்னும் சொற்களையும் பயன்படுத்தலாம் என்கிறார்.

ஆலந்தூர் புலவர் இரா.இராமமூர்த்தி, இன்புட், அவுட்புட் என்னும் சொற்கள் அறிவியல், மின்சாரம், கணினி சார்ந்த சொற்களாக இருப்பதால், இவற்றிற்கு "ஆகாறு - போகாறு, உள்ளீடு - வெளியீடு, உள்ளிறக்கம் - வெளியேற்றம், பெறுதல் - வழங்குதல், தரவு - விளைவு' என்னும் பல்வேறு சொற்களைக் காட்டுகிறார்.

அண்ணா நகரிலிருந்து திரு.ஆனந்தகிருஷ்ணன், உள்ளீடு மற்றும் வெளியீடு என்பவை எல்லோராலும் அறியப்பட்ட சொற்களாக இருப்பதாலும், கருவிகள் மற்றும் இயந்திரங்களின் உற்பத்தியிலும், தொழில்துறையிலும், புழக்கத்தில் இருப்பதாலும் இச்சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

திருச்சி தி.அன்பழகன், தொழில்துறை சார்ந்தும், கணினி சார்ந்தும் இச்சொற்களுக்கு இணைச்சொற்களைக் காண வேண்டுமென்றும், அதனால் இன்புட்-அவுட்புட் என்பதை "உள்ளுட்டம்-வெளிவாட்டம்' என்று அழைக்கலாம் என்றும் கூறுகிறார்.

புதுச்சேரி தே.முருகசாமி, சிலப்பதிகாரத்தில் பொற்கொல்லன் சிலம்பை ஆய்ந்த நிலையைக் கருதி இன்புட்-அவுட்புட் ஆகிய சொற்களுக்கு "அகவேலைப்பாடு, புறவேலைப்பாடு' என்பவை பொருத்தமாகும் என்கிறார். கடலூர் என்.ஆர்.சத்தியமூர்த்தி, "இடுவன-தருவன' என்ற சொற்களைத் தந்திருக்கிறார்.

அச்சொற்களுள் "இடுவன-தருவன' என்ற சொற்கள் பொருள் நயமும், ஓசை நயமும் மிக்கவையாக அமைந்திருந்தாலும், அவை "இடுகின்ற-தருகின்ற' பொருளைக் குறிக்குமேயன்றி, "இடுகின்ற-தருகின்ற' செயல்களைக் குறிக்குமா என்பது ஐயமாக இருக்கிறது. தரவு, விளைவு என்ற சொற்கள் கற்றோர் மனதைக் கவரும் வகையில் இருந்தாலும், உள்ளீடு-வெளியீடு என்ற சொற்கள் புழக்கத்தில் வருவதற்கு எளிமையாக இருக்கும் என்ற காரணத்தால் அச்சொற்களைப் பயன்படுத்துவதே சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அடுத்த வார சொல்: அக்​ரோ​னிம் (acronym)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Thu Jan 03, 2013 10:58 pm

எட்டு)
சொல்​வேட்டை,​​ பழைய மற்​றும் புதிய சொற்​களை மட்​டும் நமக்கு அறி​மு​கப்​ப​டுத்​த​வில்லை.​ அதை​யும் தாண்டி,​​ எங்​கெங்கோ இருக்​கும் மொழிப் பற்​றா​ளர்​க​ளை​யும்,​​ அவர்​கள் தங்​க​ளுக்கே உரிய ஆய்​வுப் பார்​வை​யோடு கொண்​டி​ருக்​கும் பல்​வே​று​பட்ட கருத்​து​க​ளை​யும் நமக்கு அறி​மு​கப்​ப​டுத்தி வரு​கி​றது.​ ஒரு சிலர்,​​ கம்​ப​னது காப்​பி​யத்​தில் பொன்​மா​னைப் பற்​றிய ஐயத்​தைக் கிளப்​பிய இலக்​கு​வ​னி​டம்,​​ ""இரா​மன் இல்​லா​தன இல்லை இளங்​கு​மர'' என்று கூறி​ய​தைப் போல்,​​ தமிழ் மொழி​யில் இல்​லாத சொற்​களே இல்லை என்​னும் கருத்​தைக் கொண்​டி​ருக்​கி​றார்​கள்.​ இன்​னும் சிலர்,​​ புதிய பொருள்​க​ளை​யும்,​​ புதிய சூழ்​நி​லை​க​ளை​யும்,​​ புதிய செய்​தி​க​ளை​யும் குறிக்​கும் சொற்​கள் நமக்​குத் தேவை​தானா என்ற ஐயத்​தை​யும்,​​ ஏற்​க​னவே முழு​மை​யாக வளர்ச்​சி​ய​டைந்து,​​ செம்​மொ​ழி​யா​கச் சுடர்​விட்​டுப் பிர​கா​சிக்​கும் நம் மொழிக்கு இவை அவ​சி​ய​மில்லை என்​றும் எண்​ணு​கி​றார்​கள்.​ அவர்​கள் அனை​வ​ரின் கருத்​து​க​ளுக்​கும் நான் தலை​வ​ணங்​கு​கி​றேன்.​

÷அதே நேரத்​தில்,​​ ஒரு கருத்தை அறி​ஞர்​கள் முன் பதிவு செய்ய நான் விழை​கி​றேன்.​ இன்​றைய சூழ்​நி​லை​யில் ஒவ்​வொரு நாளே​டும்,​​ காலத்​தின் கட்​டா​யத்​தி​னால்,​​ நமக்​குத் தேவை​யான,​​ தேவை​யற்ற,​​ விரும்​பு​கிற,​​ விரும்​பாத,​​ மகிழ்ச்​சியை அல்​லது துன்​பத்​தைத் தரும் பல செய்​திக் குப்​பை​களை நம் சிறு மூளைக்​குள் கொண்டு வந்து கொட்​டு​கின்​றன.​ கொஞ்​சம் கொஞ்​ச​மாக நாம் அறிந்தோ,​​ அறி​யா​மலோ,​​ விரும்​பியோ,​​ விரும்​பா​மலோ,​​ குப்​பைத் தொட்​டி​யா​கிப் போய்க்​கொண்​டி​ருக்​கும் நம் மூளைக்​கும்,​​ மன​திற்​கும் ஒரு மாற்​றுப் பயிற்​சியே இச்​சொல் வேட்டை.​ இனி இந்த வார வேட்​டைக்கு வரு​வோம்.​

÷வி​ழுப்​பு​ரத்தி​லி​ருந்து முதல்​நிலை விரி​வு​ரை​யா​ளர் வேல்.சிவ.கேதாரி சிவ​சங்​கர்,​​ "ஒரு மொழி​யின் அனைத்​துச் சொற்​க​ளை​யும் வேறொரு மொழி​யில் மொழி​பெ​யர்ப்​ப​தும் இய​லாது,​​ அது தேவை​யும் அற்​றது என்​றும்,​​ ஆங்​கி​லத்​தில் வரி​வ​டி​வ​மும்,​​ ஒலி​வ​டி​வ​மும் மாறு​ப​டு​வ​த​னால் அக்​ரோ​னிம் கிடைப்​ப​தா​க​வும்,​​ தமிழ் மொழி​யின் இயல்​பின்​படி அக்​ரோ​னிம் கிடை​யாது என்​றும்,​​ அப்​ப​டியே செயற்​கை​யாக உரு​வாக்க வேண்​டு​மா​னால்,​​ அதன் பயன்​பாட்​டைக் குறித்து அக்​ரோ​னிம் என்​பதை "விரி​ப​தம்' என்று குறிப்​பி​ட​லாம்' என்​கி​றார்.​ ஆனால்,​​ அவ​ரது கருத்​தில் ஒரு சிறிய சிக்​கல் இருக்​கி​றது.​ தமி​ழி​லும் சில நேரங்​க​ளில் சில எழுத்​து​கள் அவை பயன்​ப​டுத்​தப்​ப​டும் இடங்​க​ளைப் பொறுத்து மாறு​பட்ட ஒலி​க​ளைக் கொடுக்​கின்​றன.​ ÷எ​டுத்​துக்​காட்​டாக "அச்சு' என்ற சொல்​லில் உள்ள "சு' என்ற எழுத்து உரு​வாக்​கும் ஒலி​யும்,​​ அஞ்சு,​​ நெஞ்சு,​​ பஞ்சு போன்ற சொற்​க​ளில் உள்ள "சு' என்ற எழுத்து உரு​வாக்​கும் ஒலி​யும் மாறு​ப​டு​கின்​றன.​ அதைப்​போல் "விரி​ப​தம்' என்​பது அப்​ரி​வி​யே​ஷன் என்ற சொல்​லுக்கு எதிர்​ம​றை​யான "எக்ஸ்​பான்​ஷன்' என்​ப​தைக் குறிக்​க​லாமே தவிர,​​ அக்​ரோ​னிம் என்​ப​தைக் குறிக்க முடி​யாது.​ அவ்​வா​ச​கரே எடுத்​துக்​காட்​டாக சுரதா,​​ கல்கி போன்ற சொற்​க​ளைக் காட்​டி​யி​ருக்​கி​றார்.​ சுரதா என்​ப​தன் விரி​ப​தம் "சுப்பு ரத்​தின தாசன்' ஆக இருக்க முடி​யுமே தவிர,​​ சுப்பு ரத்​தின தாசன் என்ற பெய​ரின் விரி​ப​த​மாக சுரதா இருக்க முடி​யாது.​

÷நெல்​லையி​லி​ருந்து பெரு​ம​ணல் ராயர் என்​னும் அன்​பர்,​​ "சிநோ​னிம்' என்ற ஆங்​கி​லச் சொல்​லுக்கு அருஞ்​சொல் என்ற சொல்​லும்,​​ "ஆண்​ட​னிம்' என்ற ஆங்​கி​லச் சொல்​லுக்கு எதிர்ச்​சொல் என்ற சொல்​லும் வழங்​கப்​ப​டு​வ​தால்,​​ அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு "குறுஞ்​சொல்' என்ற சொல்​லைப் பயன்​ப​டுத்​த​லாம் என்​கி​றார்.​

÷இ​லந்தை சு.இரா​ம​சாமி,​​ "முதல் எழுத்து வருக்​கம்' என்ற சொல்​லைப் பரிந்​து​ரைக்​கி​றார்.​ பாடியி​லி​ருந்து முனை​வர் மு.அரங்​க​சு​வாமி,​​ சொல்​சு​ருக்​கம்,​​ சொல்​ஒ​டுக்​கம் போன்ற சொற்​கள் பொருந்​து​வது போல் தோன்​றி​னா​லும்,​​ தமிழ் இலக்​க​ணத்​தில் இரண்டு சொற்​க​ளுக்கு இடையே சில உரு​பு​கள் மறைந்து வந்து பொரு​ளைத் தரு​வது "தொகை' என்று அழைக்​கப்​ப​டு​வ​தால்,​​ அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு,​​ சொல் இலக்​க​ணத்தை அடி​யொற்றி "சொற்​தொகை' என்ற சொல்லை உரு​வாக்​க​லாம் என்​கி​றார்.​

÷ஸ்ரீ​ரங்​கத்தி​லி​ருந்து மாதா சம்​பத்,​​ மகா​பா​ர​தப் போரில் ஈடு​பட்ட படை​வீ​ரர்​கள் அக்​ரோ​னி​க​ளா​கப் பிரிக்​கப்​பட்​டி​ருந்த கார​ணத்​தால்,​​ "அக்​ரோனி என்ற சொல்​லுக்​குப் "படை​வீ​ரர்​க​ளின் கூட்​டம்' என்​பது பொரு​ளா​கும் என்​றும்,​​ அதை அடி​யொற்றி அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு "சேர்க்கை' என்று பொருள் கொள்​வது பொருத்​த​மா​ன​தா​கும் என்​றும் குறிப்​பி​டு​கி​றார்.​ ஆனால் இக்​க​ருத்து சரி​யா​ன​தா​கத் தோன்​ற​வில்லை.​ மகா​பா​ர​தப் போரில் ஈடு​பட்ட படை​வீ​ரர்​க​ளின் கூட்​டம் வட மொழி​யில் அெக்ஷ​ள​ஹிணி​ சேனை என்​ற​ழைக்​கப்​பட்​டதே தவிர,​​ அக்​ரோனி என்​ற​ழைக்​கப்​ப​ட​வில்லை.​ ஓர் அùக்ஷ​ள​ஹிணி என்​பது வட​மொ​ழி​யில்,​​ குறிப்​பாக மகா​பா​ர​தத்​தில்,​​ சுமார் 20,000 தேர்​கள்,​​ 20,000 யானை​கள்,​​ 65,000 குதி​ரை​கள் மற்​றும் 1,00,000 காற்​படை வீரர்​கள் அமைந்த ஒரு சேனைக்கு அளிக்​கப்​பட்ட பெய​ரா​கும்.​ இதற்​கும் அக்​ரோனி அல்​லது அக்​ரோ​னிம் என்​ப​தற்​கும் எவ்​வி​தத் தொடர்​பும் இல்லை.​

÷ரா​சப்​பா​ளை​யம் சத்​தி​ரப்​பட்​டியி​லி​ருந்து தமிழ் பேரா​சி​ரி​யர் க.பாண்​டித்​துரை,​​ வேலை ஆயு​த​மாக உடைய முரு​கனை வேல்​மு​ரு​கன் என்​ற​ழைப்​ப​தும்,​​ பாலை உடைய குடத்தை பாற்​கு​டம் என்​ற​ழைப்​ப​தும் தமி​ழில் தொகை எனப்​ப​டும் என்​றும்,​​ தொக்கி ​(மறைந்து)​ நிற்​கும் சொல் தொகு​சொல் ஆகு​மென்​றும்,​​ தொட​ராக விரி​யும் சொல் விரி​சொல் ஆகு​மென்​றும் கூறு​கி​றார்.​ எனவே,​​ அக்​ரோ​னிம் என்​பதை "தொகு​சொல்' என்​ற​ழைக்​க​லாம் என்​கி​றார்.​

÷கல்​லி​டைக் குறிச்​சியி​லி​ருந்து இந்​திய வரு​வாய்ப் ​ பணி​யைச் சேர்ந்த ​(இ.வ.ப.)​ கமால் அப்​துல் நாசர் அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு "குறுஞ்​சொற்​றொ​டர்' என்ற சொல்​லைப் பரிசீ​லிக்​க​லாம் ​ என்​கி​றார்.​

ஆலந்​தூர் புல​வர் இரா.இரா​ம​மூர்த்தி யாப்​ப​ருங் கலக்​கா​ரிகை என்​னும் செய்​யுள் இலக்​கண நூலில்,​​ சீர்,​​ தளை,​​ மா,​​ இனம் ஆகி​ய​வற்​றின் எடுத்​துக்​காட்​டுப் பாடல்​களை அவற்​றின் முதல் அசை​க​ளைத் தொகுத்து,​​ "முதல் நினைப்​புக் காரிகை' என்ற பாட​லில் குறிப்​பி​டு​வ​தா​லும்,​​ நாலா​யிர திவ்​யப் பிர​பந்​தத்​தில் பத்​துப்​பத்து பாடல்​க​ளின் முதல் அசை​களை இறு​தி​யில் "அடி​வ​ரவு' என்ற தலைப்​பில் தொகுத்​த​ளிக்​கும் கார​ணத்​தி​னா​லும் அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு முதல் நினைப்பு,​​ அடி​வ​ரவு,​​ முதல் தொகுப்பு,​​ முதல் எழுத்​துச் சுருக்​கம்,​​ சொற்​சு​ருக்​கம் ஆகிய சொற்​கள் பொருந்​தும் என்​கி​றார்.​

÷சென்னை வழக்​குரை​ஞர் இ.தி.நந்​த​கு​மா​ரன்,​​ முருகா என்​னும் பெயரே முகுந்​தன் ​(திரு​மால்)​,​​ ருத்​ரன் ​(சிவன்)​ மற்​றும் கம​லன் ​(பிரம்​மன்)​ ஆகிய மூவ​ரின் பெயர்​க​ளின் முதல் எழுத்​துச் சேர்க்​கையே ​(மு,​​ ரு,​​ க)​ என்​றும்,​​ சுப்பு ரத்​தின தாசன்,​​ சுரதா ஆனது இவ்​வ​ழியே என்​றும்,​​ இப்​ப​டிச் சுருங்​கக் கூறு​வது தமி​ழில் சுருங்​கச்​சொல் அணி அல்​லது ஓர் அலங்​கா​ரம் என்​ற​ழைக்​கப்​ப​டு​வ​தா​க​வும் எழு​தி​யுள்​ளார்.​ சுட்டி என்ற சொல் சுருங்​கு​வ​தை​யும்,​​ சுட்​டிக்​காட்​டு​வ​தை​யும் குறிப்​ப​தால்,​​ ஒரு சொல்​லின் முதல் எழுத்​து​களை மட்​டும் எடுத்து உரு​வாக்​கப்​ப​டும் இன்​னொரு சொல்லை "சுட்​டி​யம்' என்​ற​ழைக்​க​லாம் என்​றும் கூறு​கி​றார்.​

÷தஞ்​சைத் தமிழ்ப் பல்​க​லைக்​க​ழ​கத்தி​லி​ருந்து முனை​வர் பா.ஜம்பு​லிங்​கம்,​​ தமி​ழில் அக்​ரோ​னிம் பயன்​பாடு இருப்​ப​தா​கத் தெரி​ய​வில்லை என்​றும்,​​ எம்.ஜி.ஆர்.,​​ என்.டி.ஆர்.,​​ எம்.எஸ்.,​​ உ.வே.சா., மு.வ.​ போன்​ற​வர்​க​ளின் பெயர்​கள் மட்​டும்,​​ மரி​யாதை நிமித்​த​மா​கச் சுருக்​கித் தரப்​பட்​ட​தா​க​வும் குறிப்​பிட்​டு​விட்டு,​​ அக்​ரோ​னிம் என்​பது சுருக்​க​மா​கக் குறி​யீட்டு நிலை​யில் அமை​வ​தால் "சுருக்​கக் குறி​யீடு' என்​பது பொருத்​த​மாக இருக்​க​லாம் என்​கி​றார்.​

÷பு​ல​வர் அடி​யன் மணி​வா​ச​கன்,​​ படைப்​பி​யற்​கை​யின் உண்​மை​யி​யல் நாத​மான ஓம் என்​பதே மூன்று சொற்​க​ளின் முதல் எழுத்​து​க​ளின் சேர்க்​கை​யாக அமை​வ​தா​லும்,​​ திவ்​யப் பிர​பந்​தத்​தில் ஒரு பதி​கத்தை நினைவு கூறு​வ​தற்​காக ஒவ்​வொரு பாட்​டின் முதல் சொல்​லை​யும் எடுத்​துத் தொகுத்து,​​ அதை ஈர​டிப்​பாட்​டுப் போல அமைத்து,​​ அதற்கு "அடி​வ​ரவு' என்று பெயர் சூட்​டி​யுள்ள கார​ணத்​தா​லும்,​​ அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு "முதல் எழுத்து ஆக்​கச்​சொல்' அல்​லது "முதல் எழுத்து வரவு' என்ற சொற்​க​ளைப் பயன்​ப​டுத்​த​லாம் என்​கி​றார்.​

இவை அனைத்​தை​யும் அல​சிப்​பார்த்து ஒரு முடி​வுக்கு வரும் முன்,​​ ஒரு செய்​தியை வாச​கர்​கள் அறிய வேண்​டும்.​ அக்​ரோ​னிம் என்ற சொல் ஆங்​கில மொழி​யி​லேயே 20-ஆம் நூற்​றாண்​டில்​தான் பயன்​பாட்​டிற்கு வந்​த​தாக ஒரு கருத்து நில​வு​கி​றது.​ ஒரு சொற்​றொ​ட​ரின் முதல் எழுத்​து​களை மட்​டும் ஒன்று சேர்ப்​ப​தி​னால் வரும் கூட்​டுச்​சேர்க்கை,​​ தனி​யாக நின்று எந்​தப் பொரு​ளை​யும் தரா​த​போது,​​ அது அப்​ரி​வி​யே​ஷன் என்​றும்,​​ அந்​தக் கூட்​டுச்​சேர்க்​கையே ஒரு பொரு​ளைக் குறிக்​கும் சொல்​லாக மாறி​வி​டும்​போது,​​ அது அக்​ரோ​னிம் என்​றும் குறிப்​பி​டப்​ப​ட​லாம்.​ அந்த அடிப்​ப​டையை வைத்​துப் பார்க்​கும்​போது,​​ அக்​ரோ​னிம் என்​பதை "தொகு​சொல்' என்​ற​ழைப்​ப​தும்,​​ அப்​ரி​வி​யே​ஷன் என்​பதை "சொற்​சு​ருக்​கம்' என்​ற​ழைப்​ப​தும்​தான் பொருத்​த​மாக இருக்​கும்.​
அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு,​​ வாச​கர்​கள் தரும் இணைச்​சொல் தொகு​சொல்.​

அடுத்த சொல் வேட்டை​​:கேள்​விக்​குறி,​​ ஆச்​ச​ரி​யக்​குறி,​​ முற்​றுப்​புள்ளி போன்ற குறி​யீ​டு​கள் ஒட்டு மொத்​த​மாக ஆங்​கி​லத்​தில் "பங்க்​சு​வே​ஷன் மார்க்ஸ்' என்​றும்,​​ அவற்​றைப் பயன்​ப​டுத்​தும் நடை​மு​றையை "பங்க்​சு​வே​ஷன்' என்​றும் குறிக்​கின்​ற​னர்.​ இவற்​றுக்கு இணை​யான தமிழ்ச் சொற்​கள் உண்டா?​
(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by ராஜு சரவணன் on Fri Jan 04, 2013 1:00 am

எனது புதிய பதிவை பார்க்கவும்.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Sun Jan 06, 2013 8:47 pm

ஒன்பது)
நமது சொல் வேட்டையின் நோக்கம், ஒரு குறிப்பிட்ட ஆங்கிலச் சொல்லுக்கு இசைவான தமிழ்ச் சொல்லை, பழைய இலக்கியங்களிலிருந்தும், மொழி ஆராய்ச்சி நூல்களிலிருந்தும் தேடித் தெரிந்து கொள்வதா? அல்லது ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து அதைப் புழக்கத்தில் விடுவதா?' என்று ஷா.கமால் அப்துல்நாசர் என்பவர் ஓர் அடிப்படை கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து புழக்கத்தில் விடுவது என்றால், அதைத் தமிழர் மனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு, அவ்வாசகர் ""தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார்'' என்ற குறளை மேற்கோள் காட்டி, அக்குறளில் வரும் "கடிகொண்டார்' என்ற சொல்லை அடித்தளமாகப் பயன்படுத்தி, ஆங்கிலத்தில் சொல்லப்படும் "புரொஹிபிட்டரி ஆர்டர்' என்ற சொற்றொடருக்கு "கடிகொள்ளாணை' என்ற சொல் பொருத்தமாக இருப்பினும், புழக்கத்தில் "தடுப்பாணை' என்பதே ஏற்றுக் கொள்ளப்பட்டது' என்பதைக் குறிப்பிட்டு, சொல் வேட்டையில் சொற்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்.

வாசகர்கள் பலருக்கும் இப்படிப்பட்ட கேள்விகளும், ஐயங்களும் எழுந்திருக்கலாம். எனவே, இதைத் தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமை.

இச்சொல் வேட்டையின் உண்மையான நோக்கம், புதுச் சூழ்நிலைகளுக்கும், புதுக் கருத்துகளுக்கும் பொருந்தும் புதுச் சொற்களை உருவாக்க வேண்டும் என்பதே! ஆனால், இந்த சொல் வேட்டையைத் தொடங்கிய பிறகு, புழக்கத்திலிருக்கும் ஒருசில ஆங்கிலச் சொற்களுக்கே பெருவாரியான மக்கள் ஏற்றுக்கொள்ளும் அல்லது பழக்கத்தில் கொண்டு வந்திருக்கும் சொற்கள் தமிழில் இல்லையோ என்ற ஐயம் எழுந்தது. அதோடு, வாசகர்களும் இச்சொல் வேட்டைக்குப் பல்வேறு பரிமாணங்களை அளித்து, பல்வேறு கோணங்களில் இதை அணுகத் தொடங்கியதால், சொல் வேட்டையின் நோக்கமும், அது தொடங்கப்பட்ட தளமும், என்னையும் அறியாமலேயே விரிவுபடுத்தப்பட்டு, புதுச் சூழ்நிலைகளுக்கான புதுச்சொற்கள், புது அல்லது பழங்கருத்துகளுக்கான அருஞ்சொற்கள், அவ்வருஞ் சொற்களின் எளிமைப் படுத்தப்பட்ட வடிவங்கள், அவ் வடிவங்களில் எளிதில் புழக்கத்திற்கு வரக்கூடியவை என்றெல்லாம் சொல்வேட்டையின் தளம் விரிவு படுத்தப்பட்டுவிட்டது. எனவே, இதை இனியொரு சிறிய எல்லைக்குள் சிறைப்படுத்த முடியாது.

இனி இந்தவாரச் சொல் வேட்டைக்கு வருமுன், சுவையான சில செய்திகளை வாசகர்களுக்குச் சொல்ல விழைகிறேன். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், உலகின் தொன்மையான மொழிகளில் "பங்க்சுவேஷன் மார்க்ஸ்' எனப்படும் குறியீடுகளுக்கான தேவை பழங்காலத்தில் அமையவில்லை போல் தெரிகிறது. கிரேக்கர்களும், ரோமானியர்களும் சில குறியீடுகளை கிறிஸ்துவுக்கு முன்பே (கி.மு.) பயன்படுத்தியதாகத் தெரிந்தாலும், உலகம் முழுவதிலும் புனித விவிலியம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட காலத்தில்தான் இக் குறியீடுகளுக்கான தேவை அதிகரித்ததாகத் தெரிகிறது. பதினாறாம் நூற்றாண்டில் ஆல்டஸ் மேனுடியஸ் என்பவரால் இக்குறியீடுகள் முறைப்படுத்தப்பட்டதாக ஒரு குறிப்பும் உண்டு.

அதிகமாக நம்மிடம் புழக்கத்திலிருக்கும் பங்க்சுவேஷன் மார்க்ஸ், கமா, ஃபுல் ஸ்டாப், கோலன், பிராக்கட், எக்ஸ்க்ளமேஷன், அப்பாஸ்ட்ரஃபி, கொட்டேஷன், கொஸ்டின் மார்க் ஆகியவைதான். ஆனால், அவற்றைத் தாண்டி பல பங்க்சுவேஷன் மார்க்ஸ் இன்று ஆங்கிலத்தில் பெருவாரியாகப் பழக்கத்தில் வந்துவிட்டன. அவை: (1) டாகர் அல்லது ஓபிலிஸ்க் - கூறியது கூறும் குறையைக் களைவதற்கான குறியீடு (2) காரட் அல்லது வெட்ஜ் - சொன்ன கருத்தில் விட்டுப்போன ஒன்றைக் குறிக்கும் குறியீடு (3) சாலிடஸ் - நாணயத்தின் பல்வேறு மதிப்புகளை, அதாவது ரூபாய்க்கும், காசுக்கும் உள்ள வேறுபாட்டைக் காட்ட, தற்போதைய டெசிமல் முறை கொண்டுவரப்படுவதற்கு முன் பயன்படுத்தப்பட்ட குறியீடு, (4) ஆஸ்டரிக் - ஒரு சொல் அல்லது கருத்தின் விரிவாக்கத்தை வேறிடத்தில் விரித்துரைப்பதைக் காட்டும் குறியீடு, (5) கில்மெட்ஸ் - ஆங்கிலமல்லாத மொழிகளில் கொட்டேஷன் மார்க்காகப் பயன்படுத்தப்படும் குறியீடு, (6) ஷெப்ஃபர் ஸ்ட்ரோக் - கணிதத்தில் கால்குலஸ்ஸில் பயன்படுத்தப்படும் குறியீடு, (7) பிகாஸ் சைன் - காரணம் என்ற சொல்லைக் குறிக்கும் குறியீடு (இது "ஆகவே' என்ற சொல்லைக் குறிக்கும் குறியீட்டைத் தலைகீழாகப் போடும் குறியீடு), (8) செக்ன் சைன் - பொதுவாக வழக்குரைஞர்களால் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவை மாறுபடுத்திக்காட்டப் பயன்படுத்தப்படும் குறியீடு, (9) எக்ஸ்க்ளமேஷன் கமா - ஒரு வாக்கியம் முடியும் முன்பே ஏற்படும் ஆச்சர்யத்தைக் குறிக்கும் குறியீடு, (10) கொஸ்டின் கமா - ஒரு வாக்கியம் முடியும் முன்பே ஏற்படும் வினாவைக் குறிக்கும் குறியீடு, (11) இன்ட்டெர்ரோபாங்க் - வியப்பையும், வினாவையும் ஒருசேரக் குறிக்கும் குறியீடு, (12) ஹீடரா அல்லது பில்க்ரோ - ஒரு பத்திக்கும் இன்னொரு பத்திக்கும் உள்ள வேறுபாட்டைக் குறிக்கும் குறியீடு, (13) ஸ்னார்க் - சொன்ன சொல்லுக்குக் கிண்டலாக இன்னொரு பொருள் உண்டு என்பதைக் குறிக்கும் குறியீடு.

கணினியின் தாக்கம் அதிகரித்த பிறகு, இன்னும் பல குறியீடுகள் இளைய தலைமுறையிடம் வந்துவிட்டன. தங்களுடைய மகிழ்ச்சி, துயரம், அழுகை, வியப்பு போன்ற உணர்ச்சிகளைக் காட்டும் குறியீடுகள் இன்று கைபேசியிலும், கணினியிலும் வந்துவிட்டன. இனி இந்தவாரச் சொல்வேட்டைக்கு வருவோம்.

பங்க்சுவேஷன் மார்க்ஸ், மேலை நாட்டு மொழிகளின் வரவால் தமிழ் மொழியில் பயனாக்கம் பெற்றன என்றும், ஓலைச்சுவடிகளில் எழுத்தாணியைக் கொண்டு எழுதப்பட்ட காலங்களில், சுவடிகள் கிழிந்துவிடும் வாய்ப்பு இருந்தமையால் இக்குறியீடுகள் பயன் படுத்தப்படாமல் இருந்தன என்றும் குறிப்பிட்டுவிட்டு, புலவர் அரு.சுந்தரேசன், அச்சொல்லுக்கு "நிறுத்தற்குறிகள்' என்றச் சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். மேலும் அனைத்து நிறுத்தற்குறிகளையும் வரிசைப்படுத்தியுள்ளார்.

வி.ந.ஸ்ரீதரன், "வாக்கியக்குறியீடு' என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறார். பாபாராஜ் என்பவர், சென்னைப் பல்கலைக்கழக சொற்களஞ்சியத்தை மேற்கோள்காட்டி பங்க்சுவேஷன் மார்க்ஸ் என்றச் சொல்லுக்கு நிறுத்தக்குறியீடு, முத்திரைகள் என்ற சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

செ.சத்தியசீலன், நிறுத்தற்குறிகள், எழுத்துக்கள் அன்று என்றும், அவை பொருள் தரும் அடையாளங்கள் என்றும் குறிப்பிட்டு, "பொருள்குறிகள்' என்பது கூடப் பொருத்தமாக இருக்கும் என்கிறார். டி.வி.கிருஷ்ணசாமி, "குறியீட்டியல்' என்றச் சொல்லைப் பரிந்துரைக்கிறார்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்குங்கால், "பங்க்சுவேஷன் மார்க்ஸ்' என்றச் சொல்லுக்கு "நிறுத்தற் குறிகள்' என்பதே புழக்கத்திற்கு வந்துவிட்ட காரணத்தினாலும், அச்சொல் அனைத்துக் குறியீடுகளையும் உள்ளடக்கிய காரணத்தினாலும், அதுவே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

அடுத்த வார சொல்:
மறைமுகமாக ஒரு மனிதனையோ ஓர் இடத்தையோ, ஒரு நிகழ்வையோ சுட்டிக்காட்டும் முறைக்கு ஆங்கிலத்தில் 'அல்யூசன்' என்று பெயர். இதன் தமிழாக்கம் அல்லது தமிழ் இணைச்சொல் என்ன?

avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Wed Jan 16, 2013 10:49 pm

பத்து)
இங்கிலத்தில் உள்ள பல சொற்கள் இலத்தீன் மொழியிலிருந்து உருவானவை என்பதை அறிவோம். "அல்யூசியோ' என்ற இலத்தீன் சொல்லுக்கு "சொல் விளையாட்டு' என்பது பொருள். "அல்யூசியோ' என்ற சொல்லை வேர்ச்சொல்லாகப் பயன்படுத்தி "அல்யூடியர்' என்ற சொல் இலத்தீன் மொழியிலேயே உருவானது. அச்சொல்லுக்கு "கிண்டலாகக் குறிப்பிடுவது' அல்லது "விளையாட்டாகக் குறிப்பிடுவது' என்ற பொருளுண்டு. அந்த இலத்தீன் சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவான ஆங்கிலச் சொல்தான் "அல்யூஷன்'.

அச்சொல்லுக்குரிய பொருளை மிகச்சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், "ஒருவரை நேரில் பார்க்காமலேயே, அவரிடம் நேரிடையாகப் பாடம் படிக்காமலேயே அவரை மானசீக குருவாக எண்ணி, ஒருவன் கற்றுத்தேர்ந்தான் என்றால், அதனை நாம் "இவன் ஒரு ஏகலைவன்' என்கிறோம். அப்படி நாம் குறிப்பிடும் முறை அல்யூஷன்.

கண்ணெதிரே அக்கிரமம் நடப்பதைக் கண்டும் காணாதது போல் இருப்பவனை, "இவன் ஒரு திருதராட்டிரன்' என்கிறோம். இது ஓர் அல்யூஷன். ஒரு கட்சிக்குள் அல்லது ஒரு குழுவுக்குள் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவர விரும்பும் உறுப்பினரை "இளம் துருக்கியர்' என்றழைப்பதும் அல்யூஷன் ஆகும். இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டு, இந்தவார சொல் வேட்டைக்கு வருவோம்.

"அல்யூஷன்' என்ற ஆங்கிலச் சொல் பொதுவாக எதிர்மறைப் பொருளிலேயே கையாளப்படும் காரணத்தால், அச்சொல்லுக்கு "உட்குறிப்பு' அல்லது "மறைகுறிப்பு' என்னும் சொற்கள் பொருத்தமாக இருக்கலாம் என்று ஷா.கமால் அப்துல் நாசர் எழுதி, திருக்குறள் 128ஆவது அதிகாரத்தின் தலைப்பு "குறிப்பு அறிவுறுத்தல்' என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலவர் இரா.இராமமூர்த்தி, தொல்.செய்யுளியல் 122ஆவது நூற்பாவை மேற்கோள்காட்டி, ""மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு'' ஆகும் என்பதனால், "கரப்பு மொழி' அல்லது "மொழி கரப்பு' என்ற சொற்கள் பொருத்தமாக இருக்கலாம் என்றும், "பிறிது மொழிதல்' என்பதும் பொருத்தமாகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புலவர் செ.சத்தியசீலன், மறைமுகமாக ஒருவரையோ, ஓரிடத்தையோ, ஒரு நிகழ்வையோ உணர்த்தும் சொற்கள் "குறிப்புச் சொற்கள்' என்று கூறப்படுவதாலும், சில சமயம் சில குழுக்களிலுள்ள மக்கள் அவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய சொற்களைப் பயன்படுத்திக் கொள்வதை தமிழிலக்கணம் "குழூஉக்குறி' என்று குறிப்பதால், "அல்யூஷன்' என்ற சொல்லுக்கு "பொருள்மறை சொல்' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

டி.வி.கிருஷ்ணசாமி, "மறைவாகக் குறித்தல்' அல்லது "குறிப்பால் உணர்த்துதல்' என்ற சொற்கள் பொருத்தமாக இருக்குமென்கிறார். தி.அன்பழகன், "மறைபொருள்' அல்லது "தொகைசொல்' ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

புலவர் அடியன் மணிவாசகன், பண்டைத் தமிழில் "அல்யூஷன்' என்ற சொல்லுக்கு உள்ளுறைப்பொருள், இறைச்சிப்பொருள், குழூஉக்குறி ஆகிய சொற்கள் பொருந்தும் என்று கூறிவிட்டு, அதற்குச் சான்றாக தொல்.பொருள். 994ஆவது சூத்திரத்தைக் மேற்கோள் காட்டியுள்ளார். அதே சமயம், பொதுவாக ஒருவரிடம் மறைமுகமாகப் பேச நேரும்போது, அதைச் சான்றோர் "முன்னிலைப் புறமொழி' என்பர் என்றும், அது இறைச்சிப்பொருள் போன்றதே என்றும், இவற்றுள் "முன்னிலைப் புறமொழி' என்னும் சொல் எளிமையாகவும், பொருத்தமாகவும் இருக்குமென்கிறார்.

வழக்குரைஞர் அ.அருள்மொழி, ஒரு சொல் நேராகக் குறிக்கும் பொருள் ஒன்றாயினும், அது பயன்படுத்தப்படும் இடம், பொருள் ஆகியவற்றைப் பொறுத்து, அது வேறொன்றைக் குறிப்பதாக அமையலாம் என்றும், அதற்குத் தமிழ் மொழியில் பல சான்றுகள் (இடக்கரடக்கல், தற்குறிப்பேற்றல், வஞ்சப் புகழ்ச்சி, பிறிது மொழிதல்) உள்ளன என்பதை எடுத்துக்காட்டி "அல்யூஷன்' என்பதைப் "பிறிதொன்றுரைத்தல்' என்று சொல்லலாம் என்கிறார். தற்போது சாதாரணமாக "பிக் ப்ரதர் ஈஸ் வாட்சிங்' என்ற சொற்றொடர் அமெரிக்கக் கண்காணிப்பைக் குறிக்கப் பயன்படுத்துவதை எடுத்துக்காட்டி, "அல்யூஷன்' என்பது உருபும் பயனும் தொக்கி நிற்பதாலும், அதில் உட்பொருள் மறைந்து நிற்பதாலும் "மறைபொருள் உவமை' என்பது அதற்கு இணைச் சொல்லாகும் என்கிறார்.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, பெருவாரியான வாசகர்கள் "பொருள் மறை' அல்லது "மறை பொருள்' என்பதை அதிகமாகச் சுட்டிக்காட்டி இருப்பதால், "மறை பொருள்' என்பதே பொருத்தமாக இருக்கும்.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Tue Jan 22, 2013 3:13 pm

பதினொன்று)
""காமன் சென்ஸ் ஈஸ் தி மோஸ்ட் அன்காமன் திங் இன் தி வோர்ல்டு'' என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவதுண்டு. அமெரிக்க வரலாற்றை அடியோடு மாற்றிப்போட்ட 48-பக்கங்கள் கொண்ட ஒரு துண்டுப் பிரசுரத்திற்கு, தாமஸ் பெயின் இட்ட பெயர் "காமன் சென்ஸ்'. இன்றைக்குச் சரியாக 237 ஆண்டுகளுக்கு முன் (ஜனவரி,1776-இல்) ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படாமல் மொட்டையாகப் பிரசுரிக்கப்பட்ட இந்தத் துண்டுப் பிரசுரம்தான், காலனி ஆதிக்கத்திலிருந்து அமெரிக்கா விடுதலைபெறக் காரணமாக அமைந்தது. அப்பிரசுரம், அமெரிக்க அரசியலில் மட்டுமன்றி, துண்டுப் பிரசுர விற்பனையிலும் 1776-இல் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. முதல் மூன்று மாதங்களில் 1,20,000 பிரதிகளும், முதலாண்டிலேயே 5 லட்சம் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தது அந்தத் துண்டுப் பிரசுரம். இச்செய்தியை புத்தகக் கண்காட்சி நடைபெறும் வேளையில் நினைவில் நிறுத்தி, நாம் இந்தவார வேட்டைக்கு வருவோம்.

÷அமெரிக்கா - கலிபோர்னியாவிலிருந்து புலவர், பொறிஞர். சி.செந்தமிழ்ச்சேய், ""கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள'' என்ற குறளை மேற்கோள் காட்டி, "சென்ஸ்' என்ற சொல்லுக்குப் புலன், புலன் உணர்வு, அறிவு நலம் என்பது பொருளாகும் என்றும், ஆகவே, "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு இயல்பாகிய புலனுணர்வு, இயல்பாகிய புலனறிவு என்பவை பொருந்தக் கூடும் என்றும் குறிப்பிட்டுவிட்டு, கடலூர் மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை பதிப்பித்துள்ள ஆட்சிச் சொற்கள் அகர முதலியில் "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு, "இயல்பறிவு' என்று பொருள் கொண்டுள்ளனர் என்றும் எழுதியுள்ளார்.

÷முனைவர் பா.ஜம்புலிங்கம், "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு, (1) பகுத்தறிந்து பார்ப்பதால் பகுத்தறிவு, (2) விவேகத்தோடு சிந்திப்பதால் விவேக அறிவு, (3) பொதுப்படையாக இருப்பதால் பொதுப்படை அறிவு, (4) சிந்தனையை சரிநிகராகப் பயன்படுத்துவதால் சிந்தையறிவு ஆகிய நான்கு சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

÷பேராசிரியர் மருத்துவர் பி.ஞானசேகரன், "விவேகம்' என்ற சொல்லையும், கவிக்கோ. ஞானச்செல்வன், "ஒத்ததறிவான் உயிர் வாழ்வான்' என்பதனால், "ஒப்புரவறிவு' என்பதே பொருந்தும் என்றும் எழுதியிருக்கிறார்கள்.

÷ஏ.ஸ்ரீதரன் பூங்கொடி, 355-ஆவது குறளையொட்டி "மெய்யறிவு' என்ற சொல்லையும், "நெஞ்சே தெளிந்து' என்ற ஈற்றில் முடியும் திருவாய்மொழியை அடியொற்றி "தெள்ளறிவு' என்ற சொல்லையும் பரிந்துரைக்கிறார்.

÷வி.ந.ஸ்ரீதரன், "காமன் சென்ஸ்' என்பது அனைவர்க்கும் அடிப்படையில் இருக்க வேண்டிய ஒன்றாகும் என்றும், "நெருப்பு சுடும்' என்பது அறிந்திருக்க வேண்டிய ஒன்றாக இருப்பதுபோல் தாமாக அறிந்திருக்க வேண்டிய காமன் சென்ûஸ, "தன்னறிவு' என்பதே சரியாகும் என்றும் கூறுகிறார்.

÷வி.என்.ராமராஜ், காணல், கேட்டல், தொடுதல் ஆகியவை மக்களுக்கும், மாக்களுக்கும் இயல்பானவையாயினும், மனிதன் கற்றும், கேட்டும், பட்டும், படித்தும் பெறும் அறிவினால் அகத்திற்கும், புறத்திற்கும் எது நல்லது, எது கெட்டது என்ற மதிநுட்பம் பெறும் காரணத்தால், "காமன் சென்ஸ்' என்ற வார்த்தைக்கு "புத்தி' என்ற ஒரு வார்த்தையையோ, அல்லது நுட்ப அறிவு - மதிநுட்பம் என்னும் இரு சொற்களையோ பயன்படுத்தலாம் என்கிறார். சான்றாக, மதி அல்லது மதிநுட்பம் ஆகிய சொற்களை திருவள்ளுவர், அருணகிரியார், வள்ளலார் ஆகியோர் பயன்படுத்திய பாக்களையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

÷புலவர் உ.தேவதாசு, காமன், ஜெனரல் ஆகிய இரு சொற்களுமே "பொது' என்ற பொருளைக் குறித்தாலும், ஜெனரல் ஆஸ்பிடல், இன்ஸ்பெக்டர் ஜெனரல், ஜெனரல் போஸ்ட் ஆபீஸ் போன்ற சொற்களில் பயன்படுத்தப்படும்போது "ஜெனரல்' என்ற சொல்லுக்கு "தலைமை' என்ற பொருளும் வரக்கூடிய காரணத்தால், "பொது ஒழுங்கு', "நடைமுறை அறிவு' ஆகிய சொற்கள் பொருந்தலாம் என்கிறார். நடைமுறை அறிவும் நடைமுறை ஒழுக்கமும் தனி மனித வாழ்வையும், அறிவையும் தாண்டி, சமூக அளவில் செயல்படும் காரணத்தாலும், உலகத்தோடு ஒட்ட ஒழுகலின் அவசியத்தை வள்ளுவம் உணர்த்துவதாலும், "ஒட்ட ஒழுகல்' என்ற இலக்கிய வடிவத்தை "பொது ஒழுங்கு', "நடைமுறை அறிவு' ஆகிய இவ்விரு சொற்களால் குறிக்கலாம் என்றும் எழுதியுள்ளார்.

÷இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, மெரியம்-வெப்ஸ்டர் ஆங்கில அகரமுதலி "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு, ""ஒரு பொருண்மை அல்லது நிகழ்வைச் சாதாரணமாகப் புரிந்து கொண்டு அதன் விளைவாக நாம் அதைப்பற்றி ஏற்படுத்திக் கொள்ளும் முறையான கருத்தாக்கம் அல்லது முடிவு'' என்று பொருள் கூறுகிறது. கேம்பிரிட்ஜ் அகரமுதலி, அதே சொல்லுக்கு ""ஒரு மனிதனுக்குச் சரியாக மற்றும் பாதுகாப்பாக வாழத் தேவையான நடைமுறை அறிவும் கருத்தாக்கமும்'' என்று பொருளுரைக்கிறது. இதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அரிஸ்டாட்டில், ஜான் லாக் போன்ற சிந்தனையாளர்கள், நமது புலன்களால் தனித்தனியாக அறியப்படும் ஒன்றுக்கு, நம் உள்ளம் அல்லது உள்ளுணர்வு கொடுக்கும் முழு வடிவம் அல்லது ஒட்டு மொத்த உருவகம் "காமன் சென்ஸ்' என்றார்கள்.

÷இதை வைத்துப் பார்க்கும் போது, புலன்களாலும், மனத்தாலும் அவற்றைத் தாண்டிய உள்ளுணர்வாலும் மனித உயிர்கள் இயல்பாக அறிந்து கொள்ளும் ஒன்றே காமன் சென்ஸ் ஆவதால், அதற்கு இணைச் சொல் "இயல்பறிவு' என்பதே பொருத்தமாகும்.

காமன் சென்ஸ் என்ற சொல்லுக்கு வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் இணைச் சொல் இயல்பறிவு.

அடுத்த சொல் வேட்டை: வானியல் தொடர்பானவற்றிலும், மனித உடலைப் பற்றிய ஆன்மிக அல்லது தத்துவ விசாரத்திலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல் "ஆஸ்ட்ரல்' ஆகும். அதற்கு இணையான தமிழ்ச்சொல் என்ன?
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by ஹர்ஷித் on Tue Jan 22, 2013 3:22 pm

காமன் சென்ஸ் என்ற சொல்லுக்கு வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் இணைச் சொல் இயல்பறிவு.
சூப்பருங்க
நன்றி திரு.சாமி அவர்களே.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum