ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 மாணிக்கம் நடேசன்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 aeroboy2000

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

அனுபவம் – ஒரு பக்க கதை
 SK

சரிடா செல்லம்..! – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

நபிகள் நாயகம் – பொன்மொழிகள்
 ஜாஹீதாபானு

இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
 SK

நீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ -Win மொழி:
 SK

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
 M.Jagadeesan

இலைகளில் பனித்துளி
 SK

கேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம்
 SK

வேலை – ஒரு பக்க கதை
 SK

வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம்
 SK

காவல்துறையிலேயே இந்த நிலையா? கனிமொழி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்
 SK

ஸ்மார்ட்ஃபோனின் 5 தீமைகள் இவைதான்!
 ayyasamy ram

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ராஐ யோகங்கள் தரும் உச்ச சனீஸ்வரன்

View previous topic View next topic Go down

ராஐ யோகங்கள் தரும் உச்ச சனீஸ்வரன்

Post by சிவா on Thu Nov 08, 2012 10:25 pm



பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.

ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான் ‘சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை’ என்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்’ என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.

சாக்கடையில் பதுங்கிய இந்திரன்

ஒரு சமயம் தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று, ‘நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம்?’ என்று கேட்டான். அதற்கு சனி பகவான், ‘நான் நீதிமான். எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது’ என விளக்கம் சொன்னார். ‘அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடு’ என்று தேவேந்திரன் வேண்டினான். சனீஸ்வரர் அந்த கால நேரத்தை தெரிவித்தார்.

சனீஸ்வரர் தெரிவித்த அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டு சாக்கடையில் போய் ஒளிந்துகொண்டான். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்த பிறகு வெளியே வந்த தேவேந்திரன், சனீஸ்வரரிடம் சென்று, ‘உங்கள் பார்வையில் இருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களா’ என்று பெருமையடித்துக் கொண்டான். சனீஸ்வரர் சிரித்துக்கொண்டே, ‘நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் உழன்றீர்களே.. அதுகூட என் பார்வை, பீடிப்பினால்தான்’ என்றார். இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் சமத்துவ நாயகன் என்பதை அறிய முடிகிறது.

சனீஸ்வரரின் அதிகாரம்

எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் திசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. ஆனால் சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன், கோச்சார பலமும் அதிகமாகும். ஒருவர் பிறந்த ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வரும்போது ஏழரை சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு நான்காம் வீட்டில் வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும் ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார்.

நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், ‘சனியனே! உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுது’ என்று சொல்லி திட்டுவார்கள். உன்னை புதன் பிடித்து ஆட்டுகிறது. கேது ஆட்டுவிக்கிறான் என்று யாரும் சொல்வதில்லை. எந்த கிரக திசா புக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனீஸ்வரரின் தலைதான் உருளும்.

இதில் சிறிதளவும் உண்மை கிடையாது. எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை செய்கின்ற அதிகாரம் உண்டு. சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் நம்மிடையே தவறாக ஏற்பட்டு விட்டது. இப்படி சர்வ வல்லமை பெற்ற சனி கிரகம் ஒரு ராசியை கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது. அந்த வகையில் சனிபகவான் தன் உச்ச ராசியை அடைய சுமார் 30 ஆண்டுகள் பிடிக்கும். தற்போது 2012-ம் ஆண்டு முதல் சனி தன் உச்ச வீடான துலா ராசியில் அமர்ந்துள்ளார்.

ஆகையால் பூரண பலத்துடன் திகழ்கிறார். இதனால் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்ப ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த உச்ச சனியால் சகல யோக அதிர்ஷ்டங்கள், சுப விசேஷங்கள் கூடிவரும். யோக பாக்யத்தை அருள்வார். மற்ற ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கங்கள், நிறை, குறைகள், கஷ்ட-நஷ்டங்கள் இருந்தாலும் உச்ச பலம் காரணமாக சில சாதகமான பலன்கள் உண்டாகும். ஜாதகத்தில் சனி திசை நடப்பவர்களுக்கு இந்த உச்ச நேரம் மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும்.
-
‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ராஐ யோகங்கள் தரும் உச்ச சனீஸ்வரன்

Post by T.N.Balasubramanian on Fri Nov 09, 2012 8:17 am

Quote " எந்த கிரக திசா புக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனீஸ்வரரின் தலைதான் உருளும்.

இதில் சிறிதளவும் உண்மை கிடையாது. எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை செய்கின்ற அதிகாரம் உண்டு. சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் நம்மிடையே தவறாக ஏற்பட்டு விட்டது. இப்படி சர்வ வல்லமை பெற்ற சனி கிரகம் ஒரு ராசியை கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது. அந்த வகையில் சனிபகவான் தன் உச்ச ராசியை அடைய சுமார் 30 ஆண்டுகள் பிடிக்கும்".


உண்மை இதுதான் . பெயர் வந்த காரணமும் இதுதான்.
மற்ற கிரகங்கள் சூரியனை சுற்ற எடுத்து கொள்ளும் காலத்தை விட சனி கிரகம் எடுத்துக் கொள்வது அதிகம். 30 ஆண்டுகள்.

சமஸ்கிருத மொழியில் , சனைகி + சரஹா = சனீஸ்வர அதாவது விந்தி + நடத்தல். ஒரு கால் அவருக்கு ஊனம் அதான் ஒரு முறை சூரியனை சுற்ற 30 ஆண்டுகள் ஆகின்றன.

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22425
மதிப்பீடுகள் : 8338

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum