உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by சக்தி18 Today at 2:41 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

Admins Online

கவிதையில் யாப்பு

கவிதையில் யாப்பு - Page 2 Empty கவிதையில் யாப்பு

Post by ரமணி on Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down


கவிதையில் யாப்பு - Page 2 Empty கவிதையில் யாப்பு - Page 2

Post by ரமணி on Sat Nov 10, 2012 12:00 pm

கவிதையில் யாப்பு: பயிற்சி விடைகள்
3.4. அகவற் பயிற்சி
பயிற்சி 1. விடை

கல்வி செல்வம் வீரம் கொண்ட
நல்லோர் இன்று கானல் நீரே.


கல்/வி செல்/வம் வீ/ரம் கொண்/ட
நல்/லோர் இன்/று கா/னல் நீ/ரே.

நேர்நேர் நேர்நேர் நேர்நேர் நேர்நேர்
நேர்நேர் நேர்நேர் நேர்நேர் நேர்நேர்

பயிற்சி 2. விடை

வருவது உரைத்திடும் அரியதோர் கலைதனில்
கரையறு புலமையை உடையவர் மிகச்சிலர்.


வரு/வது உரைத்/திடும் அரி/யதோர் கலை/தனில்
கரை/யறு புல/மையை உடை/யவர் மிகச்/சிலர்.

நிரைநிரை நிரைநிரை நிரைநிரை நிரைநிரை
நிரைநிரை நிரைநிரை நிரைநிரை நிரைநிரை

’புலமையை’ என்பதில் ஐகாரக் குறுக்கம்
பயில ஈரசைச் சீராகும் அறிக. ... [புலமையை -> புலமயை]

பயிற்சி 3. விடை

காற்றினும் கடுகிச் சென்றது புரவி.
பாட்டினில் அதனைச் சொல்வது எளிதோ?


காற்/றினும் கடு/கிச் சென்/றது புர/வி.
பாட்/டினில் அத/னைச் சொல்/வது எளி/தோ?

நேர்நிரை நிரைநேர் நேர்நிரை நிரைநேர்
நேர்நிரை நிரைநேர் நேர்நிரை நிரைநேர்

பயிற்சி 4. விடை

குளிர்பனிக் காற்றின் பெயராம் ஊதை
வடக்கில் இருந்து வருவது வாடை
கிழக்கில் கொண்டல் மேற்கில் கோடை
தெற்கில் தென்றல் சுழன்றால் சாரிகை.


*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 2 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி on Sat Nov 10, 2012 1:41 pm

பயிற்சி 5. செப்பலிலிருந்து அகவல்

செப்பல் ஒலிக்கும் கீழ்வரும் செய்யுளின்
மூவசைச் சீர்களை ஈரசை யாக்கி
முதற்சீர் எதுகையும் பொருளும் தங்கி
அகவல் ஓசை கேட்க எழுதுக.

கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடந்திட
மாடியில் போட்ட வடாம்.


பயிற்சி 6. துள்ளலிலிருந்து அகவல்

துள்ளல் ஒலிக்கும் கீழ்வரும் செய்யுளின்
மூவசைச் சீர்களை ஈரசை யாக்கி
மூன்று அடிகளில் வந்திடு மாறு
அகவல் ஓசை கேட்க எழுதுக.

வீட்டுக்குள் பறந்தோடும் குழந்தையைப் பிடித்திழுத்து
இடுப்பினிலே இருத்திவைத்து நிலாகாட்டி உணவூட்டினாள்.


பயிற்சி 7. உரைநடை வாக்கியத்திலிருந்து அகவல்

கீழ்வரும் உரைநடை வாக்கியம் வைத்து
ஈரசைச் சீர்கள் மட்டுமே பயின்று
மூன்று அடிகளில் வந்திடு மாறு
அகவல் ஓசை கேட்க எழுதுக.

இரண்டு மருங்குகளிலும் பரந்த மணல் இருக்க, கரை ஓரத்தில் கையகலத்துக்கு நீர் ஆடிடும் வறண்ட காவிரி.

பயிற்சி 8. கலைந்த சொற்களிலிருந்து அகவல்
கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
மூன்று அடிகளில் வந்திடு மாறு
அகவல் ஓசை கேட்க எழுதுக.

மகிழ்ந்த துள்ளலில் கேட்டு சிரித்து துள்ளிய குட்டி பாப்பா பயந்தது கன்றுக் உறுமல் நன்றாய்ச் பன்றியின்

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 2 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி on Sun Nov 11, 2012 7:41 am

பயிற்சி 5. விடை

கண்ணால் பார்த்தால் காக்கை பறக்குமா?
மண்காற் றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடு பட்டு வாழ்க்கை நடக்க
மாடியில் உலர்த்திய வடகம் அன்றோ?

பயிற்சி 6. விடை

குறைந்தது மூன்று விதத்தில் எழுதலாம்.
இறுதி அடியினில் அகவல் ஓசை
சொற்கள் சுருங்க மாறுதல் காண்க.

வீட்டின் உள்ளே ஓடிடும் குழந்தையைப்
பிடித்து இழுத்து இடுப்பில் இருத்தி
நிலவினைக் காட்டியே உணவினை ஊட்டினாள்.

வீட்டின் உள்ளே ஓடும் குழந்தையைப்
பிடித்து இழுத்து இடுப்பில் இருத்தி
நிலவைக் காட்டி உணவை ஊட்டினாள்.

வீட்டின் உள்ளே ஓடும் குழந்தையைப்
பிடித்து இழுத்து இடுப்பில் இருத்தி
நிலவு காட்டி உணவூட் டினாள்.

பயிற்சி 7. விடை

இரண்டு பக்கமும் மணலே பரந்து
கரையின் ஓரம் ஒருகை அகலமே
நீரென நிற்கும் வரண்ட காவிரி.

இருபுறம் மணலே பரந்து இருக்கக்
கரையின் விளிம்பில் கோவண அகலமே ... [’கையின் அகலமே’]
நீரது நிற்கும் வரண்ட காவிரி.

பயிற்சி 8. விடை

கன்றுக் குட்டி துள்ளிய துள்ளலில்
நன்றாய்ச் சிரித்து மகிழ்ந்த பாப்பா
பன்றியின் உறுமல் கேட்டு பயந்தது.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 2 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி on Sun Nov 11, 2012 7:11 pm

பயிற்சி 9. மறைந்துள்ள பழமொழிகள்
கீழ்வரும் பெயர்வினைச் சொற்களில் நான்கு
பழமொழிகள் உள்ளன மறைந்து. அவற்றைத்
தேடி அந்தாதி போலமைத்து நான்கு
அடிகளில் அகவல் ஒலிவர எழுதுக.

மலை, பனி, குளம், கிணறு, தவளை, உலகு
வந்தது, நீங்கும், பெய்தால், நிரம்பும், போட்டு, தேடினான், அறியுமோ


பயிற்சி 10. காளமேகத்தின் சிலேடை அகவலில்

எள்ளும் பாம்பும் ஒன்றெனக் காளமேகம்
வெள்ளிய பாவில் சிலேடையாய்ச் சொன்னதை
அடிகளின் சீர்களில் ஈரசை பயின்று
அகவல் ஓசை கேட்க எழுதுக.

ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் -- தேடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடும்பாம் பெள்ளெனவே யோது.
---காளமேகப் புலவர், பாம்பும் எள்ளும் சிலேடை


*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 2 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி on Mon Nov 12, 2012 7:20 am

3.6. செப்பல் ஓசை

செப்புதல் என்றால் பதில்சொற் கூறுதல்
தானே இயல்பாக மறைவின்றி மொழிவது.

"மறைத்துக் கூறாது செப்பிக் கூறுதல்"
என்பார் நச்சினார்க் கினியர் உரையில்.

"இசைகுறித்து வருதலின்றி செப்புத லாகிய
வாக்கியம் போன்ற ஓசை" என்று
கூறுவார் இளம்பூ ரணர்தம் உரையில்.

வெண்பா யாப்பது செப்பல் ஓசையில்
வெண்பாவில் வராது அகவல் ஓசை
செப்பலை விளக்கும் கீழ்வரும் வெண்பா.

வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்
வெண்டளையால் தானே வருவது செப்பலோசை
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேரும்
வருவது வெண்டளை காண்.

வெண்பாவின் ஈற்றசை நாள்,மலர் காசு,
பிறப்பு எனப்பட்ட வாய்பாடில் ஓரசையாய்
நேரோ நிரையோ இவற்றுடன் குற்றுகரம்
சேர்ந்தோ வருமெனக் காண்.

செப்பல் ஓசை பயின்று வருகிற
வெண்பா வுக்கோர் உதாரணம் காண்போம்:

நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்
தான்செல் உலகத் தறம்.
--விளம்பி நாகனார், நான்மணிக்கடிகை ௧௧


இன்னொரு உதாரணம் பாரதி தருவது:

நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்---உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்!
சிந்தையே, இம்மூன்றும் செய்.

---பாரதியார், விநாயகர் நான்மணி மாலை ௨௫

3.7. செப்பல் முயற்சி

நாமும் செப்பல் புனைந்திடு வோமா?
செப்பல் ஓசையின் தேவைகள் என்ன?

மாமுன் நிரையும் விளம்முன் நேரும்
காய்முன் நேரும் சீரிடை அடியிடை
வந்தால் செப்பல் தானே பயிலும்.

காய்ச்சீர் என்பது நேரில் முடியும்
மூவசைச் சீரென நினவிற் கொள்வோம்.

தானே இயல்பாக மொழிவது மற்றும்
வாக்கியம் போல அமைவது செப்பல்.

கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடக்க
மாடியில் போட்ட வடாம்.


(இந்த அடிகளில் வருவது வெண்பா.
வெண்பாவின் தேவைகள் பின்னர்க் காண்போம்.)

இந்த வரிகளை அலகிடக் கிடைப்பது
கண்/ணோ/டு கண்/ணோக்/கின் காக்/கை பறக்/குமா?
மண்/ணோ/டு காற்/றடித்/தால் உள்/ளம் பத/றுமே!
பா/டுபட்/டுக் கா/யவைத்/து வாழ்க்/கை நடக்/க
மா/டியில் போட்/ட வடாம்.

சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நேர்-நேர்-நேர் நேர்-நேர்-நேர் நேர்-நேர் நிரை-நிரை
நேர்-நேர்-நேர் நேர்-நிரை-நேர் நேர்-நேர் நிரை-நிரை
நேர்-நிரை-நேர் நேர்-நிரை-நேர் நேர்-நேர் நிரை-நேர்
நேர்-நிரை நேர-நேர் மலர்.

மூன்றாம் நான்காம் அடிகளைப் பிணைத்து
நேர்-நேர் எனவரும் தளைமுரண் கண்டீரோ? ... [நடக்க--மாடியில்]
இம்முரண் போக்கிட இப்படி மாற்றுவோம்.

கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடந்திட ... [’நடக்க’ என்பதை மாற்றி]
மாடியில் போட்ட வடாம்.


எதுகை மோனை முயற்சிகள் இன்றி
இன்றைய பேச்சு வழக்கில் பயிலும்
சொற்கள் பயன்படுத்தி இன்னொரு வெண்பா.

இந்த வரிகளை அலகிட்டுப் பார்த்து
செப்பல் ஓசை சீரிடை அடியிடை
வருவது கண்டு உறுதி செய்யவும்.

நேரம் தவறாமல் வேளைக்குச் சாப்பாடு
நாயர் கடைடீ நினைத்தபோது சூடாக
வாரம் ஒருமுறை மாட்டினி மூவிகள்
பேச்சிலர் வாழ்க்கையே வாழ்வு!


*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 2 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி on Mon Nov 12, 2012 6:25 pm

பயிற்சி 9. விடை

மலைபோல் வந்தது பனிபோல் நீங்கும்.
பனியது பெய்தால் குளமது நிரம்புமா?
குளத்தில் போட்டுக் கிணற்றில் தேடினான்.
கிணற்றுத் தவளை அறியுமோ உலகு?

பயிற்சி 10. விடை

ஆடிக் குடம்புகும், ஆடையில் இரையும்,
மூடித் திறக்கின் முகம்காண், மண்டையில்
தேய்த்தால் பரபர, பிண்ணாக் குமுண்டு;
ஆய்ந்தால் பாம்பும் எள்ளும் ஒன்று.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 2 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி on Tue Nov 13, 2012 8:08 am

3.8. செப்பல் பயிற்சி

கீழ்வரும் வெண்பாக்கள் செப்பல் ஓசை
அடிகள் இயற்றத் துணை கொள்க.

வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்
வெண்டளையால் தானே வருவது செப்பலோசை
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேரும்
வருவது வெண்டளை காண்.

வெண்பாவின் ஈற்றசை நாள்,மலர் காசு,
பிறப்பு எனப்பட்ட வாய்பாடில் ஓரசையாய்
நேரோ நிரையோ இவற்றுடன் குற்றுகரம்
சேர்ந்தோ வருமெனக் காண்.

பயிற்சி 1. வெண்பா வரத் திருத்துதல்

கீழுள்ள அடிகளை அலகிட்டுப் பார்த்து
தளைதட்டும் நான்கசைச் சீரையும்
அடியிடைத் தளைதட்டும் சீரையும்
தக்கபடி மாற்றிச் சரியாக எழுதவும்.

எல்லோரும் தூங்கும்போது எனக்கு விழிப்பு
பகலே இரவு இரவே பகலாம்
யாரெது சொன்னாலும் கேட்க வேண்டும்
அபார்ட்மென்ட் வாச்மேன் நான்.


பயிற்சி 2. அகவலில் இருந்து செப்பல்

கீழ்வரும் அகவல் அடிகளை மாற்றி
இரண்டடி யில்வரும் குறள்வெண்பா வாகச்
செப்பல் ஓசை கேட்க எழுதுக.

கல்வி செல்வம் வீரம் கொண்ட
நல்லோர் இன்று கானல் நீரே.


பயிற்சி 3. அகவலில் இருந்து செப்பல்

கீழ்வரும் அகவல் அடிகளை மாற்றிச்
செப்பலில் குறள்வெண்பா ஒன்று எழுதுக.

வருவது உரைத்திடும் அரியதோர் கலைதனில்
கரையறு புலமையை உடையவர் மிகச்சிலர்.


பயிற்சி 4. அகவலில் இருந்து செப்பல்

கீழ்வரும் அகவற் செய்யுளைக் குறள்வெண்பா
வாக்கிச் செப்பல் கேட்க எழுதுக.

காற்றினும் கடுகிச் சென்றது புரவி.
பாட்டினில் அதனைச் சொல்வது எளிதோ?


பயிற்சி 5. துள்ளலிலிருந்து செப்பல்

துள்ளல் ஒலிக்கும் கீழ்வரும் செய்யுளை
மூன்று அடிகளில் சிந்தியல் வெண்பா
வாக்கிச் செப்பல் கேட்க எழுதுக.

வீட்டுக்குள் பறந்தோடும் குழந்தையைப் பிடித்திழுத்து
இடுப்பினிலே இருத்திவைத்து நிலாகாட்டி உணவூட்டினாள்.


*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 2 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி on Wed Nov 14, 2012 6:45 am

3.8. செப்பல் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. விடை

கொடுத்துள்ள அடிகள்:
எல்லோரும் தூங்கும்போது எனக்கு விழிப்பு
பகலே இரவு இரவே பகலாம்
யாரெது சொன்னாலும் கேட்க வேண்டும்
அபார்ட்மென்ட் வாச்மேன் நான்.


அடிகளை அலகிட:
எல்/லோ/ரும் தூங்/கும்/போ/து எனக்/கு விழிப்/பு
பக/லே இர/வு இர/வே பக/லாம்
யா/ரெது சொன்/னா/லும் கேட்/க வேண்/டும்
அபார்ட்/மென்ட் வாச்/மேன் நான்.

சீர்களின் அசைகள் நோக்க:
நேர்-நேர்-நேர் நேர்-நேர்-நேர்-நேர் நிரை-நேர் நிரை-நேர்
நிரை-நேர் நிரை-நேர் நிரை-நேர் நிரை-நேர்
நேர்-நிரை நேர்-நேர்-நேர் நேர்-நேர் நேர்-நேர்
நிரை-நேர் நேர்-நேர் நேர்

1. ’தூங்/கும்/போ/து’ என்று வரும் சீரில் நான்கு அசைகள் காண்க.
இதைத் ’தூங்/க’ (நேர்-நேர்) எனத் திருத்தினால்,
முன்வரும் மூவசைச்சீர் ’எல்/லோ/ரும்’ என்ற (நேர் கடைவரும்) காய்ச்சீருடனும்,
பின்வரும் ’எனக்/கு’ என்ற (நிரை முதல் நேர் கடைவரும்) மாச்சீருடனும்
தளையில் (வெண்டளையெனப்) பொருந்துவது காண்க.

2. ’பக/லாம் -- யாரெது’ என்று (அடியிரண்டின் இறுதி அடிமூன்றின் முதல் சீர்கள்) வருவது
(நேர் முன் நிரை வராததால்) தளைதட்டும்.
இந்தச் சொல்லை ’எவ/ரெது’ என்று திருத்தினால் (இரண்டாம் மூன்றாம்) அடியிடையும்,
அடுத்து வரும் சீருடனும் தளையில் ஒன்றும்.

3. அடிமூன்றில் ’கேட்/க -- வேண்டும்’ என்று வருவது நேர் முன் நேர் வந்து தளைதட்டும்.
இதை ’கேட்/டிட -- வேண்டும்’ என்று திருத்த, நிரை முன் நேர் வந்து தளையில் ஒன்றும்.

4. இறுதி அடியில் ’அபார்ட்/மென்ட் -- வாச்/மேன் -- நான்’ என்று வருவது நேர் முன் நேர் வர,
இரண்டாம் சீரின் முன்னும் பின்னும் தளை தட்டும்.

’அபார்ட்மென்ட்டின் -- வாச்/மேன் -- நான்’ என்று திருதினால் முதலிரு சீர்கள் தளையில் ஒன்றும்.
ஆயினும் சிர்கள் இரண்டும் மூன்றும் (இப்போதும் நேர் முன் நேர் வர) சேரும்போது தளை தட்டும்.
’அபார்ட்/மென்ட்/டின் கா/வலா/ளி நான்’ என்று திருத்தினால் சீரிரண்டில் ’வாச்மேன்’ என்பது ’காவலாளி’ என்று
மூவசைச் சீராகி, இருபுறமும் தளையில் ஒன்றும் காண்க.

திருத்தியபின் வெண்பா:
எல்லோரும் தூங்க எனக்கு விழிப்பு
பகலே இரவு இரவே பகலாம்
எவரெது சொன்னாலும் கேட்டிட வேண்டும்
அபார்ட்மென்ட்டின் காவலாளி நான்.


பயிற்சி 2. விடை

கல்வியும் செல்வமும் வீரமும் கொண்டுள்ள
நல்லவர்கள் கானல்நீர் இன்று.

பயிற்சி 3. விடை

வருவது கூறும் அரிய கலையில்
கரையில் புலமை சிலர்க்கு.

வருவது கூறும் அரிய கலையில்
கரையறு வல்லோர் சிலர்.

பயிற்சி 4. விடை

காற்றினும் வேகமாகச் சென்ற புரவியது.
பாட்டில் உரைப்ப தெவண்?

பயிற்சி 5. விடை

வீட்டினுள் ஓடும் குழந்தையைப் பற்றிழுத்துத்
தூக்கி இடையில் இருத்தி நிலாக்காட்டி
ஊட்டினாள் அன்னை உணவு.
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 2 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி on Thu Nov 15, 2012 9:04 am

பயிற்சி 6. துள்ளலிலிருந்து செப்பல்

துள்ளல் ஒலிக்கும் கீழ்வரும் செய்யுளை
இரண்டு அடிகளில் குறளியல் வெண்பா
வாக்கிச் செப்பல் கேட்க எழுதுக.

படியளக்கப் பெருமாளின் வரம்தரும்கை இருக்கிறதே!
அடிநோக்க நதிகங்கா அமுதூற்றாய்ப் பொழிகிறதே!


பயிற்சி 7. கலைந்த சொற்களிலிருந்து மா-முன்-நிரை வரும் செப்பல்

கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
நான்கு அடிகளில் முதலிரண்டில் ஒலியியைபும்
இறுதி யிரண்டில் எதுகையும் அமைந்து
சீர்கள் அனைத்தும் மாமுன் நிரைவந்து
செப்பல் ஓசை கேட்க எழுதுக.

கிடக்கும் இருளில் மறைக்க மனையில் முகத்தில் படிந்து திகில். சிதைந்த சிலந்தி விழியை
நுழைந்தால் அகத்தில் வலைகள் உறைந்து


பயிற்சி 8. கலைந்த சொற்களிலிருந்து விளம்-முன்-நேர் வரும் செப்பல்

கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
முதல்நிரல் வைத்து இரண்டு அடிகளும்
பின்னிரல் வைத்து ஈற்றடி யிரண்டும்
அடிகள் இரண்டில் ஓரெதுகை அமைந்து
செப்பல் ஓசை கேட்க எழுதுக.

கொய்துநீ நித்திய பூத்திடும் மல்லிகை அந்தியில் மாலையாய்க் முந்தியே மொட்டுகள்
பூமணம் கட்டவுன் தங்கிநீ தொட்டிடப் பூக்குமே நார். கைகளில்


பயிற்சி 9. கலைந்த சொற்களிலிருந்து காய்-முன்-நேர் வரும் செப்பல்

கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
இரண்டு அடியில் காய்முன் நேர்வர
செப்பல் ஓசை கேட்க எழுதுக.

தாய். தூங்கிவிட்டாள் தூங்காத தூளியாட்டித் தாலாட்டித் பாப்பாவைத் தூளியாட்டித்

பயிற்சி 10. உரைநடை வாக்கியத்திலிருந்து செப்பல்

கீழ்வரும் உரைநடை வாக்கியம் வைத்து
இரண்டு அடிகளில் வந்திடு மாறு
செப்பல் ஓசை கேட்க எழுதுக.

பெருமாள் படி அளந்ததால் தம் பாவங்களைப் பணமாக்கி உண்டியலில் போட்டனர்!

*****


Last edited by ரமணி on Sun Nov 18, 2012 6:08 pm; edited 1 time in total
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 2 Empty Re: கவிதையில் யாப்பு

Post by kirikasan on Thu Nov 15, 2012 3:29 pm

மிகவும் பிரயோசமானதும், என்போன்ற மரபுக்கவி விரும்பிகளுக்கு கைதந்து உயர வைக்கும்
பணியையும் போற்றி வாழ்த்துகிறேன் வாழ்க!!!
அன்புடன்
கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 2 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி on Fri Nov 16, 2012 8:16 am

பயிற்சி 6. விடை

படியளக்க மாலின் வரம்கை இருக்க
அடிகங்கை யூற்றின் அமுது.

பயிற்சி 7. விடை

சிதைந்த மனையில் சிலந்தி வலைகள்
உறைந்து கிடக்கும் இருளில் நுழைந்தால்
முகத்தில் படிந்து விழியை மறைக்க
அகத்தில் உதிக்கும் திகில்.

பயிற்சி 8. விடை

அந்தியில் பூத்திடும் நித்திய மல்லிகை
முந்தியே மொட்டுகள் கொய்துநீ மாலையாய்க்
கட்டவுன் கைகளில் பூமணம் தங்கிநீ
தொட்டிடப் பூக்குமே நார்.

பயிற்சி 9. விடை

தூளியாட்டித் தாலாட்டித் தூங்காத பாப்பாவைத்
தூளியாட்டித் தூங்கிவிட்டாள் தாய்.

பயிற்சி 10. விடை

படியளக்கும் மாலிடம்தம் பாவமெலாம் உண்டியலில்
போட்டார் பணமாக்கி யே!
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 2 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி on Fri Nov 16, 2012 8:27 am

வணக்கம் திரு. கிரிகாசன்.

அறுபதுகளில் ஆரபித்ததாலோ என்னவோ எனக்கு உங்களைப் போல் எதுகை மோனைகள் அமைத்து நீரோட்டம் போலக் கவிதைகளைப் புனைய முடிவதில்லை; அல்லது அவ்வாறு சில வரிகள் புனைவதற்கே மிகவும் உழைத்து நீண்ட நேரம் செலவிட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் ’கவிதையில் யாப்பு’ தொடர் உங்களுக்கும் பயனுள்ளதாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி. ஏதேனும் பிழைகள், குறைகள் கண்டால் உடனே அஞ்சலிடுங்கள், திருத்திக் கொள்கிறேன், கற்றுக் கொள்கிறேன்.

இங்குள்ள நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் ஆசான்-மாணாக்கர்கள் தாமே? கற்றதைப் பகிர்ந்துகொள்ளும் போது ஆசான்; பகிர்ந்ததைக் கற்றுக்கொள்ளும் போது மாணாக்கன்.


@kirikasan wrote:மிகவும் பிரயோசமானதும், என்போன்ற மரபுக்கவி விரும்பிகளுக்கு கைதந்து உயர வைக்கும்
பணியையும் போற்றி வாழ்த்துகிறேன் வாழ்க!!!
அன்புடன்
கிரிகாசன்
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 2 Empty Re: கவிதையில் யாப்பு

Post by kirikasan on Fri Nov 16, 2012 3:10 pm

@ரமணி wrote:வணக்கம் திரு. கிரிகாசன்.

அறுபதுகளில் ஆரபித்ததாலோ என்னவோ எனக்கு உங்களைப் போல் எதுகை மோனைகள் அமைத்து நீரோட்டம் போலக் கவிதைகளைப் புனைய முடிவதில்லை; அல்லது அவ்வாறு சில வரிகள் புனைவதற்கே மிகவும் உழைத்து நீண்ட நேரம் செலவிட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் ’கவிதையில் யாப்பு’ தொடர் உங்களுக்கும் பயனுள்ளதாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி. ஏதேனும் பிழைகள், குறைகள் கண்டால் உடனே அஞ்சலிடுங்கள், திருத்திக் கொள்கிறேன், கற்றுக் கொள்கிறேன்.

இங்குள்ள நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் ஆசான்-மாணாக்கர்கள் தாமே? கற்றதைப் பகிர்ந்துகொள்ளும் போது ஆசான்; பகிர்ந்ததைக் கற்றுக்கொள்ளும் போது மாணாக்கன்.


@kirikasan wrote:மிகவும் பிரயோசமானதும், என்போன்ற மரபுக்கவி விரும்பிகளுக்கு கைதந்து உயர வைக்கும்
பணியையும் போற்றி வாழ்த்துகிறேன் வாழ்க!!!
அன்புடன்
கிரிகாசன்

ஒரு உண்மையை ச் சொல்லவா எனக்கு மரபு தெரியாது. எதுகை மோனை தெரியும் அதை விட்டு வேறு எதையும் நான் அரைகுறையாகப் படித்தும்(இங்கே ஈகரையில்தான்)
அவை எதுவும் கவிதை புனையும்போது ஞாபகத்தில் வருவதில்லை. என்பாட்டில் செய்கிறேன். இன்றைய என்கவிதை காணவும் எனவே நான் இன்னமும் மாணாக்கன்தான்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 2 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி on Sat Nov 17, 2012 7:47 am

3.9. துள்ளல் ஓசை

துள்ளல் என்பது குதித்தல் ஆகும்.
துள்ளலில் நடையே தடைப்படும்;
பசுவின் கன்று துள்ளல் போல,
இடையிடை உயர்ந்து மீண்டும் சமன்படும்.

துள்ளலை விளக்கும் கீழ்வரும் மூன்று
அடிகளில் சீரிடை மட்டும் கலித்தளை
பயின்றிடத் துள்ளல் வருவது காண்க.

ஓரடிக்குள் அறுதியிட்டு அடியிடையே தொடராமல்
காய்ச்சீர்முன் நிரைவந்த கலித்தளையால் கலிப்பாவில்
துள்ளலோசை பயின்றுவந்து பசுக்கன்றை நினைவூட்டும்.

கீழ்வந்த கலிப்பாவின் தளையோசை அறிந்துகொள்க:

ஒருநோக்கம் பகல்செய்ய ஒருநோக்கம் இருள்செய்ய
இருநோக்கில் தொழில்செய்தும் துயில்செய்தும் இளைத்துயிர்கள்
கருநோக்கா வகைக்கருணைக் கண்ணோக்கம் செயுஞானத்
திருநோக்க அருணோக்கம் இருநோக்கும் செயச்செய்து
மருநோக்கும் பொழில்தில்லை மணிமன்றுள் நடஞ்செய்வோய்.
---குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட்கோவை

3.10. துள்ளல் முயற்சி
நாமும் துள்ளல் புனைந்திடு வோமா?
துள்ளல் ஓசையின் தேவைகள் என்ன?

காய்ச்சீர்முன் நிரைவந்தால் கலித்தளை யாகும்
கலிப்பாவில் அதுபெரிதும் பயின்று வந்திடும்.
சீரிடைத் தளைத்தல் வேண்டும் அடியிடைத்
தளைத்தோ தளைத்தல் இன்றியோ வரலாம்.

வீட்டுக்குள் பறந்தோடும் குழந்தையைப் பிடித்திழுத்(து)
இடுப்பினிலே இருத்திவைத்து நிலாகாட்டி உணவூட்டினாள்.


இந்த வரிகளை அலகிடக் கிடைப்பது
வீட்/டுக்/குள் பறந்/தோ/டும் குழந்/தை/யைப் பிடித்/திழுத்(து)
இடுப்/பினி/லே இருத்/திவைத்/து நிலா/காட்/டி உண/வூட்/டினாள்.

சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நேர்-நேர்-நேர் நிரை-நேர்-நேர் நிரை-நேர்-நேர் நிரை-நிரை
நிரை-நிரை-நேர் நிரை-நிரை-நேர் நிரை-நேர்-நேர் நிரை-நேர்-நிரை

பிடித்திழுத்(து) இதுப்பினிலே என்ற சீர்கள்
பிடித்திழுத் திடுப்பினிலே என்றாகிப் புணர்ச்சியில்
கருவிளம் கருவிளங்காய்ச் சீர்களாகி விளம்முன்
நிரைவர நிரையொன் ராசிரியத் தளையாகு(ம்)
எனினும் பெரிதும் கலித்தளை பயின்று
வருவதால் அடிகளில் துள்லலே கேட்கும்

குழந்தையின் துள்ளலும் தாய்தடு மாற்றமும்
பொருளிலும் ஒலியிலும் இயல்வது நோக்குக.

துள்ளலோசை தொடர்ந்துவர நிரையசையில் தொடங்குகிற
புளிமாங்காய் கருவிளங்காய் எனும்காய்ச்சீர் களையடுக்கி
அடிதோறும் அமைத்திட்டால் எழுதும்பா முழுவதுமே
ஒலித்துள்ளல் வருமெனினும் இதுபோல எழுதுவது
கடினமென்றும் ஒருநிலையில் செயற்கையாகு(ம்) எனவுமறிக.

சீர்களில் மட்டுமே தளைத்து வந்தாலும்
கலித்தளை மட்டுமே பயின்று வருகிற
துள்ளல் தொடர்ந்து எழுதுதல் கடினம்.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 2 Empty Re: கவிதையில் யாப்பு

Post by ரமணி on Sun Nov 18, 2012 1:04 pm

3.11. துள்ளல் பயிற்சி

நினைவிற் கொள்ள:
காய்ச்சீர்முன் நிரைவந்தால் கலித்தளை யாகும்
கலிப்பாவில் அதுபெரிதும் பயின்று வந்திடும்.
சீரிடைத் தளைத்தல் வேண்டும் அடியிடைத்
தளைத்தோ தளைத்தல் இன்றியோ வரலாம்.

நிரைமுதலாய் வருகின்ற புளிமாங்காய் கருவிளங்காய்
எனும்காய்ச்சீர் களையடுக்கி அமைத்திட்டால் கலித்தளைதான்
பயின்றுவர ஒலித்துள்ள(ல்) உயர்ந்துவரும் தடங்கலின்றி.

பயிற்சி 1. எல்லாம் கலித்தளை: காய்-முன்-நேர்

கீழ்வரும் வரிகளை அலகிட்டுப் பார்த்து
துள்ளல் ஓசை சீரிடை வருவது
ஒவ்வொரு வரியிலும் உறுதி செய்யவும்.

படியளக்கப் பெருமாளின் வரம்தரும்கை இருக்கிறதே!
அடிநோக்க நதிகங்கா அமுதூற்றாய்ப் பொழிகிறதே!


பயிற்சி 2. அகவலிலிருந்து துள்ளல்

கீழ்வரும் வரிகளில் ஈரசைச் சீர்களை
தக்க வேற்றுமை விகுதிகள் கொடுத்து
காய்வரும் சீர்களாக மாற்றிக் கலித்தளை
சீரிடை மட்டும் வந்திடு மாறு
துள்ளை ஓசை கேட்க எழுதுக.

வானப் பரப்பில் மேகச் சுவடில்லை!
சூரியன் தெரியாத வெளியில் நீலநிறம்!


பயிற்சி 3. செப்பலிலிருந்து துள்ளல்

செப்ப லோசை பயின்று வருகிற
கீழ்வரும் வெண்பா அடிகள் நான்கையும்
காய்ச்சீ ராக்கிக் கலித்தளை சீரிடை
அடியிடை வருமாறும் இறுதி யடியில்
நாற்சீர்கள் வருமாறும் அமைத்துத்
துள்லை ஓசை கேட்க எழுதுக.

சிதைந்த மனையில் சிலந்தி வலைகள்
உறைந்து கிடக்கும் இருளில் நுழைந்தால்
முகத்தில் படிந்து விழியை மறைக்க
அகத்தில் உதிக்கும் திகில்.


பயிற்சி 4. தூங்கலிலிருந்து துள்ளல்

கனிமுன் நிரைவரும் வஞ்சித் தளையிட்டு
இருசீர் களில்வரும் கீழுள்ள அடிகளை
நாற்சீர் அடிகளில் அமைத்துக் கலித்தளை
சீரிடை அடியிடை முழுதும் பயின்று
துள்லை ஓசை கேட்க எழுதுக.

பனியிறங்கிடும் பருவத்தினில்
அதிகாலையில் எழுந்தவுடனே
தனியாகவே நகரத்துள
தெருக்கள்வழி உலாவந்தபின்
மணிகண்டனின் கடைதருகிற
ஒருகோப்பையின் இலைத்தேஎநீர்
பருகிநின்றுநான் உரையாடலில்
களித்தநாளது இனிவருமோ?

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

கவிதையில் யாப்பு - Page 2 Empty Re: கவிதையில் யாப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை