உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by சக்தி18 Today at 2:41 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

Admins Online

ரமணியின் கவிதைகள்

ரமணியின் கவிதைகள் - Page 2 Empty ரமணியின் கவிதைகள்

Post by ரமணி on Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down


ரமணியின் கவிதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி on Thu Nov 08, 2012 6:56 am

அருகிடும் வானுயிர் வாழ்வு
ரமணி, 17/10/2012

வயல்களில் வீடுகள் விளையும் போது
வந்து முதலில் குடிபுகும் மக்கள்
இயற்கைச் சூழலின் வாழ்வும் அழகும்
செயற்கையில் நாள்பட மறைவது காண்பர்.

இன்னமும் மனைகள் சுற்றிலும் காலியிருக்க
தினமும் காணும் வானுயிர் வாழ்வின்
விந்தையும் ஒலியும் வண்ணமும் செயலும்
சிந்தையில் என்றும் சீர்த்து நிற்கும்.

இந்திய ராபின் என்று பெயர்பெற்ற
குண்டுக் குருவிகள் கூட்டமாய்ப் பறந்து
ஆரவாரத் திரள்களாய் ஆங்காங்கே அமர்ந்து
தரையில் தத்தியும் கொத்தியும் தேடும்.

ஒன்றுடன் ஒன்று பேசிக் கொண்டும்
ஒன்றை யொன்று துரத்திக் கொண்டும்
பூந்தொட்டி நீரில் குளித்துக் கொண்டும்
கொன்றை மரத்தில் அமர்ந்து நோட்டமிடும்.

காலையில் காக்கைக்கு வைத்த உணவைக்
காக்கையைத் துரத்திவிட்டுப் பகிர்ந்து கொண்டும்
விடுமுறையில் குழந்தைகள் போல தினமும்
அட்டகாசம் செய்வதோர் இனிய அனுபவம்.

கடுகளவு உடலுடன் காதுறுத்தும் குரலுடன்
செடியிடைத் தத்திக் கழுத்தை வெட்டிப்
பூக்களில் தேடும் தேன்சிட்டு உண்ணும்
பட்டுப் பூச்சிகள் விட்ட மீதம்.

மாலை வேளையில் மின்கம்பி மேலமர்ந்து
சாலையின் அமைதியை அனுபவிக்கும் வால்குருவி.
எப்போதும் மழைவிரும்பிக் கூவும் குயில்கள்
தப்பாது எதிரொலிக்கும் நாமதுபோல் கூவினால்!

காக்கைகள் கூடத் துணிவு பெற்று
காலையில் இட்டதைச் சடுதியில் விழுங்கி
மாலையில் சிலநாட்கள் மிஞ்சிய கடைச்சரக்குக்
காரவகை இட்டால் காலிபண்ணும் சட்டென.

காக்கையின் குஞ்சுகள் குரல்காட்டிப் பழகும்.
குருவிகள் புறம்போக்கியில் கூடுகட்டும் நாம்*அசந்தால்!
திருட்டில் வளர்ந்த குயில்குஞ்சின் குரல்கேட்டு
வெருட்டும் காக்கையதை விரட்டி ஓயும்.

மழைபெய்தால் போதும் இன்னும் பலவகை
வண்ணங்கள் கூட்டும் எங்கிருந்தோ வந்து!
மழைக்காலம் முடிந்ததும் மறைந்தே போகும்நம்
எண்ணங்களில் இருந்து இவ்வகைப் பறவைகள்.

மழைநீர் தேங்கிய மனைகளின் சேற்றில்
வெண்ணிறக் கழுத்துடன் காணான் கோழிகள்
மழைநீரில் ஓடிச் செடிகளில் மறைந்து
சின்னக் குழந்தைக் குரல்களில் குழுமும்.

நீலச் சிறகும் செங்காலும் கண்பட
சாலை ஓரச் சுவரில் அமர்ந்து
சட்டெனப் பறக்கும் மீன்கொத்திப் பறவையின்
குரல்கேட் டால்நம் காதுகள் விறைக்கும்.

சேற்றினை அளைந்து சிறுமீன் உண்ணும்
வெண்சிறகுக் கொக்குகள் மேயும் மாடுகள்
கூடவே நடந்து கால்களில் கொத்திப்
பூச்சிகளை உண்டு மாடுகளுக்கு உதவும்.

இயற்கை ஒன்றிய இந்நாள் வாழ்க்கை
செயற்கை மழையில் எந்நாள் மறையுமோ?
இருக்கும் வரையில் கண்களில் விருந்து
மறைந்த பின்னர் மனதில் மட்டும்.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி on Sat Nov 10, 2012 11:30 am

11. கடவுளிடம்...
ரமணி, 21/08/2012

கடவுளிடம் கேட்பது தவறா? என்றான் சிஷ்யன்.
கேட்பதைவிடத் தருவதைப் பெறுவது மேலென்றார் அவன்குரு.
அதுசரி, ஆனால் ஏனிப்படி? என்றான் சிஷ்யன்.

குழந்தை தின்பண்டம் தானே எடுத்துக் கொண்டால்
அதனிரு கைகள் சேர்ந்தாலும் குறைவே ஆகும்.
அதுவே அம்மா கொடுத்தால் அதிகம் ஆகாதோ
யோசித்துப் பார்சிஷ்யா யாசிக்கும் போது என்றார்குரு.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி on Mon Nov 12, 2012 11:35 am

27. தீபாவளித் திருநாள்
ரமணி, 12/11/2012
(பலவிகற்ப பஃறொடை முடுகியல் வெண்பா)

நரகசுரன் மாண்டநாளை அன்னைவரம் பெற்றபடி
இன்னுமிருள் மன்னியுள்ள போதினிலே கண்விழித்து
எண்ணெய்தேய்த் துக்குளித்துப் புத்தாடை கட்டி
வெடிவெடித்துக் கொண்டாடித் தித்திக்கும் தின்பண்டம்
நாவில் இனித்திடவே சுற்றமும் நட்பும்
தொலைபேசி நேர்வந்து வாழ்த்தி மகிழ்ந்திடவே
எல்லோரும் இன்புறுமித் தீபவொளிப் பொன்னாளில்
கண்ணனை உன்ன உயர்வு.

[’பெற்றபடி, இன்னுமிருள், மன்னியுள்ள, கண்விழித்து, வெடிவெடித்து, இனித்திடவே, தொலைபேசி, மகிழ்ந்திடவே’
போன்ற மூவசைச் சீர்களில் வரும் நடு அசையில் இருகுறில் இணந்து வந்து ஓசையை முடுக்கி விடுவது
(விரைவு பெறச் செய்வது) முடுகியல் வெண்பா.]

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி on Tue Nov 20, 2012 10:21 am

குறட்பா முயற்சிகள்
ரமணி, 20/11/2012

மருத்துவச் சாலையில் பெற்ற குழந்தை
மருத்துவர் சொன்ன பொழுது. ... 1

அழகான பேர்வைக்க இன்டர்நெட் சேவை
குழந்தைக்குச் சின்ன பெயர். ... 2

மாலையில் அம்மாப்பா பேணும் குழந்தையைத்
காலையில் தாதி வளர்ப்பு. ... 3

ஓய்ந்திட வாரம் குழந்தை உலாவரும்
சாய்ந்தபடி தள்ளுவண்டி யில். ... 4

உடையில் கிழக்கு மனதினில் மேற்கு
தடையில்லா நம்பெண் மகள். ... 5

உடையில் மனதில் விழைவது மேற்கு
கடைதேடும் நம்மாண் மகன். ... 6

குன்றாமல் கொள்வது கொஞ்சம் கொடுப்பது
இன்றைய வர்த்தக வாழ்வு. ... 7

வலியோரை வாழ்த்தி எளியோரத் தாழ்த்தும்
கலிசூழ்ந்த தீய உலகு. ... 8

பெற்றோரைப் பேணிடார் சுற்றத்தை நாடிடார்
கற்றும் உதவாக் கரை. ... 9

பொருளும் பணமும் புகழும் உவந்து
அருளும் விலைபேசும் மா. ... 10 ... [மா = உலகு]

பற்றும்கை பிள்ளையார்கை என்றாகி வாழ்க்கையில்
உற்றதுணை என்றுகைப் பற்று. ... 11

அறுதலைக் கந்தன் உறுதுணை என்றாகி
மீண்டும் பிறத்தல் அறு. ... 12

தாமதம் இல்லாமல் நற்கதி பெற்றிடப்
பூமகளே சம்மதம் தா. ... 13

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by றினா on Tue Nov 20, 2012 12:43 pm

நன்றாக இருக்கின்றன உங்கள் கவிதைகள்.

வாழ்த்துக்கள்.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
மதிப்பீடுகள் : 385

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி on Tue Nov 20, 2012 8:43 pm

கவிதையை/கழுதையைக் கட்டிப் போடு!
ரமணி 20/11/2012

(நிலைமண்டில ஆசிரியப்பா)
புதுக்கவிதை யென்றுநான் புனைந்திட முனைந்தது
புதுக்கழுதை யாகியே புறங்கால் உதைவிட்டுத்
தலைதெறித்(து) ஓடியும் திரிந்தும் கணிணியின்
வலைமின் தாள்களை விழுங்குவது கண்டதை
அசைச்சீர் தளைத்தொடை ஓசை கொண்டுவந்(து)
இசைவலி யுறுத்திக் கட்டிப் போட்டேனே.

உதைத்தது கடித்துக் குதறிவிட் டாலோ
பதைத்தது விடுத்தெனை ஓடிவிட் டாலோ
நியதி இல்லா சுதந்திர உரிமையில்
அவதி யுறுவது அடியேன் அன்றோ!Last edited by ரமணி on Wed Nov 21, 2012 8:59 am; edited 1 time in total
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Wed Nov 21, 2012 8:22 am

வலியோரை வாழ்த்தி எளியோரத் தாழ்த்தும்
கலிசூழ்ந்த தீய உலகு. ... 8


.............சிறப்பு . குறள் தன்மையுடன் இருக்கிறது.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
மதிப்பீடுகள் : 578

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி on Wed Nov 28, 2012 5:36 pm

நகைச்சுவை வெண்பாக்கள்
யார் உங்கள் ருக்கு?
ரமணி, 28/11/2012

நாருக்குப் பூமணம்போல் நீருக்குத் தீஞ்சுவைபோல்
ஊருக்குக் கோவில்போல் சீருக்கு ஓசைபோல்
காருக்குப் பெட்ரோல்போல் யாருக்கும் தீங்கெண்ணா
வேருக்கு நீராவாள் ருக்கு.

எருக்கு முளைபோல் கிறுக்குப் பிடிபோல்
முருக்குப் புளிபோல் நறுக்குத் தெறிபோல்
கருக்குதல் காய்க்கத் தருக்கு நிறைந்தே
செருக்குடன் வாழ்ந்திடும் ருக்கு.

[முருக்கு=எலுமிச்சை கருக்குதல்=திட்டுதல்
தருக்கு=வலிமை, தைரியம் செருக்கு=கர்வம்]

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி on Fri Nov 30, 2012 7:51 pm

5. நகைச்சுவை வெண்பாக்கள்
ரமணி, 30/11/2012


பெருங்காயம் வெங்காயம் ஓர்விகுதி யாயின்
பெருங்காயம் ஆகுமோ வெங்காயம் -- முன்னது
உண்ணும் உணவில் மணம்பெருக்கும் -- பின்னதோ
கண்ணீர் பெருக்கி விடும்.
[விகுதி=சொல்லின் இறுதிப் பகுதி]

மாவிளம் பிஞ்சுதான் மாவடு ஆயினும்
மாவடு என்றால் பெருங்காயம் என்றுபொருள்
மாவடுவி லேது பெருங்காய(ம்) ஏனெனில்
மாவடுவின் காயம் சிறிது.
[காயம்=உடல்]

மாவடு தன்னுருவில் ஓங்கி வளர்ந்திட
மாங்காய் பெயரில் பெருங்காயம் பெற்றந்த
மாங்காயே கல்லடி வாங்கிப்பின் காயத்தில்
மாவடு வோடு விழும்.
[காயம்=உடல், அடிபட்ட காயம் வடு=தழும்பு]

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி on Mon Dec 24, 2012 9:12 pm

8. மரபு வழியில் புதுக்கவிதை: கடவுளிடம்...
ரமணி, 24/12/2012
(இணைக்குறள் ஆசிரியப்பா)


கடவுளிடம் வேண்டிக் கேட்பது தவறா?
என்றான் சிஷ்யன்.
கடவுளிடம் வேண்டிக் கேட்பதினும்
கடவுள் கொடுப்பதைக் கொள்வது மேலாகும்
என்றார் அவன்குரு.
ஏனிப்படி குருவே என்றான் சிஷ்யனே.

குழந்தை தின்பண்டம் விழைந்து எடுத்தால்
குறையளவே கொள்ளுமன்றோ?
குழந்தை இருகைகள் குவித்து அள்ளினாலும்
குறையளவே ஆகுமன்றோ?
அம்மா கொடுத்தால் அதிகம் ஆகாதோ?
என்றார் அவன்குரு:
யோசித்துப்பார் சிஷ்யா யாசிக்கும் போதினிலே!

[குறிப்பு: பேரா. பசுபதி தமது ’கவிதை இயற்றிக் கலக்கு’ புத்தகத்தில் இணைக்குறள் ஆசிரியப்பாவைப் பற்றி, "இது, வடிவில், தற்காலப் புதுக்கவிதை மாதிரி இருக்கும்" என்கிறார் (பக்.93) இந்த உத்தியை முயன்று பார்க்க எழுதிய கவிதையிது. கதை பழைய குமுதம் பக்தி இதழில் இருந்து.]

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ச. சந்திரசேகரன் on Tue Dec 25, 2012 3:45 am

பெற்றோரைப் பேணிடார் சுற்றத்தை நாடிடார்
கற்றும் உதவாக் கரை. ... 9

இக்காலத்துக்கு வேண்டிய கு(ரல்)றள்.

அனைத்தும் அருமை தொடர்க.
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மதிப்பீடுகள் : 277

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி on Tue Dec 25, 2012 6:32 pm

9. திரமும் திறமும்
ரமணி, 25/12/2012

தன்திறம் என்பது தந்திரம் இல்லை.
தன்திறம் உணர்த்தும் தன்னியல் பெதுவென.
தந்திரம் உரைப்பதோ தானெனும் அகந்தையே.

என்திறம் என்பது எந்திரம் இல்லை.
எந்திரப் புலவனே தன்திறம் காட்டுவன்
என்றே நிகழும் இன்றைய நிலையிலும்
என்திறம் என்பது எந்திரம் இல்லை.
எந்திரம் தாண்டிய இன்திறக் கலைகள்
தாங்கிடும் உள்ளப் பாங்கெனக் குளதே.

மன்திறம் என்பது மந்திரம் இல்லை.
மன்னெனில் காவலன் மன்னன் கணவன்.
மந்திரத் தாலே மாங்காய் காய்க்குமோ?
மன்னன் கணவன் அவரவர் ஆவது
மன்னன் திறமன்றி மந்திரம் ஆகுமோ?

கேள்திறம் என்பது கேந்திரம் இல்லை.
கேந்திரம் என்பது குறுவட்ட மையம்
கேந்திர மையம் குறிப்பது தன்னை.
கேளென் பதுவோ சுற்றமும் நட்பும்.
கேளிர் திறன்தம் குடும்ப மையமெனில்
கேளிர் ஆகார் இவர்கள் எனக்கே.

சுயம்திறம் எல்லாம் சுதந்திரம் இல்லை.
சுயம்திறம் என்பது சகலர்க்(கு) உண்டு.
சுதந்திரம் என்பதும் சகலர்க்(கு) உண்டு.
நீயென் பின்னால் நிழலெனத் தொடர
நானென் குடைவீசி நடக்கும் போது
என்குடை உன்நாசி தொடாத வரைதான்
என்சுதந் திரத்தின் வரையென யாகும்.
சுயத்தில் ஆளும் திறமை யெல்லாம்
சுதந்திரம் என்னும் பெயரில் மற்றோர்
சுயம்திறம் அடக்கிச் சூளும் போது
சுயம்திறம் யாவும் சுதந்திரம் ஆகுமோ?

முகத்திற னுக்கு முகாந்திரம் இல்லை.
முகத்திற னாலே முகஸ்துதி பெறினும்
முகத்திறன் அகத்தை முன்வைப்ப தாமோ?
முகத்தில் உள்ளது அகத்தில் இலையென
முகத்தைப் பூசியே மழுப்பக் கற்றோர்
முகத்திறம் என்பது அகத்திறன் ஆகுமோ?

இன்திறம் இருந்தால் இந்திரம் வருமா?
இன்திறம் என்பது இனிய திறமைகள்
இந்திரம் என்பது இந்திர பதவி.
இறைவன் கருணை இல்லா விட்டால்
இனியதே எண்ணிச் செய்யும் திறமை
இருந்தால் கூட இந்திரம் வருமோ?

ஆள்திறம் என்பது ஆத்திரம் இல்லை.
ஆள்திறன் குணத்தா லாவது ஆனால்
ஆள்திறன் நலம்தர ஆத்திரம் நீங்கும்.
ஆள்திறன் பணத்தால் ஆவது ஆனால்
ஆள்திறன் பலம்தர ஆத்திரம் ஓங்கும்.
ஆள்திறன் ஆத்திரம் சூழ்ந்திடும் கலியே.

நம்திறன் நோக்கி நயம்பட வாழ்ந்து
இன்திறன் வளர்த்து இனிமை சேர்த்தால்
இறைத்திறம் ஓங்கிச் சரித்திரம் படைப்போம்.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி on Tue Jan 01, 2013 4:43 pm

11. பெருமையும் புகழும்
(ஆசிரியத் தாழிசை)

எத்தகு மனிதன் வாழ்வில்
பெருமையும் புகழும் பெறுவான்?
குருவிடம் சிஷ்யன் கேட்டான்.

கேள்வியே தவறு சிஷ்யா!
எத்தகு வாழ்வில் மனிதன்
பெருமையும் புகழும் பெறுவான்?

நாடகம் ஒன்று நடப்பதாக
நினைவிற் கொள்வோம் சிஷ்யா
நவின்றார் அவனது ஆசான்.

அரசன் வேடத்தில் ஒருவன்
அறிஞன் வேடத்தில் ஒருவன்
வறியவன் வேடத்தில் ஒருவன்.

பெருமை யாருக்கு இவர்களில்?
நடிப்பில் சிறப்பவ னுக்கே!
நன்றாய்ச் சொன்னாய் சிஷ்யா!

வாழ்க்கை நாடக வழிதான்
வாழும் மனிதனோர் நடிகன்
வேடம் முக்கியம் அல்ல.

அறம்தரும் நெறிகளைக் கொண்டு
அகிம்சை வழியே நடந்து
ஆணவம் எல்லாம் துறந்து

தானொரு நடிகன் ஆயினும்
தானும் அவனும் வேறெனும்
தத்துவம் அறிந்து கொண்டு

ஒருவன் வாழ்வில் நடித்தால்
பெருமையும் புகழும் அவனுக்கே!
அருமையாய் முடித்தார் ஆசான்.

--ரமணி, 01-01-2013
[கதை: பழைய குமுதம் பக்தி இதழில் இருந்து.]

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by ரமணி on Wed Jan 09, 2013 12:05 pm

24. தமிழ் ஹைக்கூவின் புதுவடிவம்: ஐக்குறள்
ரமணி, 19/10/2012


அசைகள் பதினேழில் ஜப்பானின் ஹைக்கூவாம்.
மூன்று வரியில் மனது.

இரண்டு வரிகளில் ஈரசை மூவசைச்
சீர்களேழு வந்து இறுதிச்சீர் ஓரசையாய்
முற்றும் குறள்வெண்பா ஏற்ற வடிவம்
தமிழ்மொழியில் ஹைக்கூ எழ.

கீழெல்லை ஈரசை மொத்தம் பதிமூன்று
மேலெல்லை மூவசை பத்துடன் ஒன்பது
காய்ச்சீர் இயற்சீர் இணைப்பில் இடையெல்லை
போதாதா ஹைக்கூ எழ?

தமிழ்மொழியில் ஹைக்கூ குறளில் எழும்போது
ஐக்குறள் என்போம் அதை.

அணுக்குறள் என்றும் துளிக்குறள் என்றும்
அழக்கலாம் என்போம் இதை.

*****

இயற்கை முரண்காட்டி வெட்டும் பதமொன்றில்
சேருமே ஹைக்கூவில் காண்.

பனித்துளி ஆவியாகும்; வையம் பனித்துளி.
ஓர்நொடியில் போகும் புதிது.


புகழ்பெற்ற ஜப்பான்ய ஹைக்கூ கவிஞராம்
இஸ்ஸாவின் ஹைக்கூ இது.

வேறுசில ஜப்பான்ய ஹைக்கூ வரும்கீழே
ஐக்குறள் ரூபத்தில் நம்.

சேற்றிலே நாற்றுநடும் பெண்கள் அழகில்லை.
பாடிடும் தொல்பாட் டழகு. ... [ரைஃஜான்]

வளிக்காலம். கூட்டில் பசிமிக வீணாக
வாய்திறக்கும் இஸ்ஸாவோ தத்து. ... [இஸ்ஸா]

அழகான கிண்ணத்தில் பூக்கள் அமைப்போமா?
உண்பதற்கு இல்லை உணவு. ... [பாஷோ]

கீழ்விழுந்த பூவா கிளைக்குத் திரும்புவது?
வெண்பட்டுப் பூச்சியே ஓ! ... [மோரிடாகே]

கீழ்விழுந்த சுள்ளி கிளைக்குப் திரும்புதுபார்.
வண்ணத்துப் பூச்சி. வியப்பு. ... [மோரிடாகே]


*****

முதல்வரியில் காட்சி. இரண்டினில் காரணம்.
ஐக்குறள் தட்டெழுதும் போது.

இப்படியோ அல்லது வேறு அமைப்பிலோ
ஐக்குறள் ஆக்குவோம் நாம்.

குறள்வடிவு மட்டும். எதுகைமோனை கட்டில்லை.
தானே அமைந்தால் அழகு.

*****

24. தமிழ் ஹைக்கூவின் புதுவடிவம்: ஐக்குறள்
ரமணி, 19/10/2012

அம்மா எனும்பசு அய்யோஓ என்கிறது.
வாயில் நெகிழிப்பை யோடு! ... 1
[நெகிழி=plastic]

புல்லிருந்த பூமியை நக்கித் துடைத்திடும்.
நாயாய் அலையும் பசு. ... 2

எறும்புக்கு இட்ட அரிசிமாவுக் கோலம்.
கரந்துண்ணும் காக்கை அணில். ... 3

சுட்டெரிக்கும் வெய்யில். சுவரோரம் வண்டி.
எருதுகள் வாயில் நுரை. ... 4

முன்னே ஒளிவெள்ளம். சாலை விருட்சம்.
சுவரில் எறிந்துசெல்லும் கார். ... 5

ரமணி, 14/11/2012
கற்சிலை வாழ்வின் வழிகாட்டி? ஹஹ்ஹஹ்ஹா!
ஐகானே எங்கள் வழி. ... 6

மழைத்துளிகள் ஒன்றாகும். அத்வைதம். கம்பி.
பழையது வேலைக்கா ரிக்கு. ... 7

நீயேநான் நானேநீ என்றதோழா! பில்பணம்.
பர்ஸினை விட்டேன் மறந்து. ... 8

தங்கும் கடன்கள். கழுதை பறிமுதல்.
வங்கியின் லெட்ஜர் பணால். ... 9

வரும்நாள் விதியினால் இன்றுநேற்(று) ஆகும்.
வெறும்கனவில் வாழ்க்கை நடப்பு. ... 10

ரமணி, 16/11/2012
நானுறங்கத் தானெழுந்து என்பணி மும்முரத்தில்
தான்மறைந்து போகுமென் பானு. ... 11

தும்பிபோல் சாகசங்கள் செய்யும் ஹெலிகாப்டர்.
பூவில் அருந்துமோ தேன்? ... 12

ரமணி, 22/11/2012
தொட்டால் நசித்திடும் வாசனைப் பன்னகம்.
ஊதுவத்திச் சாம்பல் புகை. ... 13
[பன்னகம் = பாம்பு]

பொன்னிற நெற்றிவானில் அந்திவண்ணச் சூரியன்.
சின்ன விபூதி முகில். ... 14

கற்பூரம் சாம்பிராணி ஊதுவத்தி யென்றுநாளும்
உற்சவம் வேண்டும் -- கொசு. ... 15

ரமணி, 09/01/2013
தங்கச் சிறுகூண்டு. மங்காத ஆசைபல.
பங்கப் படுமே கிளி. ... 16

கிளைத்த மரமொன்றைக் கிள்ளைகள் கொஞ்சும்.
கிளியோ மரமோ நிஜம்? ... 17

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by Guest on Wed Jan 09, 2013 12:06 pm

சூப்பருங்க அருமை ஹைக்கூகள் ..

தொடருங்கள் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

ரமணியின் கவிதைகள் - Page 2 Empty Re: ரமணியின் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை