ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.
 ayyasamy ram

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 Mr.theni

வாரியார் வாழ்க்கையில்...
 சிவனாசான்

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சும்மாயிருக்கும் போது….
 சிவனாசான்

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 சிவனாசான்

கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்
 சிவனாசான்

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 சிவனாசான்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் காலமானார்
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்- சிறுவர்மலர்
 சிவனாசான்

உஷார் மாப்பிள…!! – ஒரு பக்க கதை
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

திருத்தணி முருகா - திரைப்பட பாடல் - காணொளி
 ayyasamy ram

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
 SK

கொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்
 SK

மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
 SK

அதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
 SK

கேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
 SK

‘இருட்டுப் பயம் இனி இல்லை!’
 SK

ஐடியா – ஒரு பக்க கதை
 SK

‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
 ayyasamy ram

நல்லெண்ண தூதராகவே பாகிஸ்தான் செல்கிறேன் - சித்து
 ayyasamy ram

ARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

வால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’
 சிவனாசான்

TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

June மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்
 சிவனாசான்

RRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 SK

2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை
 thiru907

6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-
 SK

அருட்களஞ்சியம்
 ayyasamy ram

தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.
 SK

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்" எண்ணியிருந்தது ஈடேற"… எட்டு பாக நாவல்
 udhayam72

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 Mr.theni

நிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.
 Mr.theni

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி
 Mr.theni

சரவண கோலங்கள்
 SK

செய்தி சுருக்கம் - தினமணி
 SK

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்
 SK

சித்தப்பாவின் ‘விட்டு’கள்
 ayyasamy ram

கையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!
 SK

அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்
 SK

ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது
 SK

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 SK

வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி
 ayyasamy ram

டைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்!
 SK

இந்தப் பையனை ஞாபகமிருக்கா?
 SK

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 SK

என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்
 SK

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 sanji

வீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்

View previous topic View next topic Go down

காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்

Post by balakarthik on Sun Oct 14, 2012 4:17 pmஒரு பத்திரிக்கைக்காரன் என்கிற முறையில் பரமாச்சாரியார் பற்றி இரண்டு முக்கிய செய்திகளில் நான் பங்கு பெற நேர்ந்தது.

ஒன்று - நான் நிருபராக ஒரு மாலை பத்திரிக்கையில் பணிபுரிந்த போது . வயது இருபது தான் இருக்கும்.

அடுத்தது - assosiate editor ஆக வார இதழில் பணிபுரிந்தபோது !

அது 1962 என்று நினைக்கிறேன் . அன்று ஞாயிற்றுக்கிழமை . மாலை பத்திரிக்கைக்கு பரபரப்பாக ஏதாவது வேண்டுமே! அன்று நானும் நியூஸ் எடிட்டரும் என்னன்னவோ செய்தும் - பெரிய சேதி கிடைக்கவில்லை .

ஒரு மணி . எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க , நான் தபாலில் வந்தவைகளை பிரித்து பார்த்துக்கொண்டிருந்தேன். மத சம்பந்தமான ஒரு இதழ் . பிரித்து பார்த்தேன். அதிர்ச்சி அடைந்தேன்.

'திருக்குறளை படிக்க வேண்டாம்' என்று பரமாச்சாரியர்கள் சொன்னதாக ஒரு செய்தி . அது மார்கழி மாதம்.

திருப்பாவையில் - பாவை நோன்பு கடைபிடிப்பது பற்றி ஆண்டாள் . ' நெய் உண்ணோம் . பால் உண்ணோம் ' என்று வரிசைப் படுத்துகிறார். அப்போது தீக்குறளை சென்றோதோம்' என்று அந்தப்பாடலில் வருகிறது.

இதற்குப்பொருளாக - 'திருக்குறளை படிக்கக்கூடாது ' என்று பரமாச்சாரியார் கூறியதாக அதில் இருந்தது !

தீக்குறளை சென்றோதோம் என்றால் - ஒருவரைப்பற்றி ' கோள் ' சொல்வது - புறம்கூறுவது செய்ய மாட்டோம் என்று தான் பொருள்.

திருப்பாவை வேதத்தின் சாரம் என்று சொல்லப்படுவது . ஒருவரைப்பற்றி பொல்லாங்கு - கோள் - சொல்வதை வேதம் மாபெரும் பாவம் , தவறு என்று கூறுகிறது. ஆண்டாள் அதைத்தான் கூறினார்.

பரமாச்சாரியார் இப்படி கூறியிருப்பாரா ? எங்கோ தவறு நடந்திருக்கிறது என்று நினைத்தவாறு - அந்தப்பகுதியை நியூஸ் எடிட்டர் பார்வைக்கு அனுப்பினேன் . பிறகு மறந்தேன்

அன்று மாலை பேப்பரை பார்த்து திடுக்கிட்டேன்.

'திருக்குறளைப் படிக்காதே - காஞ்சி சங்கராச்சாரியார் உத்தரவு !" என்று வெளியிடப்பட்டிருந்தது. இது பரபரப்பு ஏற்படுத்திவிட்டது .தமிழ் அறிஞர்கள் திடுக்கிட்டார்கள் . பெரும் கண்டனம் தமிழ் அறிஞர்களிடம் இருந்து கிளம்பியது.

எனக்கு வருத்தமாக இருந்தது. நிச்சயம் ஏதோ பிழை என்று தோன்றியதை செய்தி ஆசிரியரிடம் கூற தவறி விட்டேனே என்று உள்ளம் உறுத்தியது.

மற்ற தமிழ் நாளிதழ்களிலும் அடுத்தடுத்து வந்த நாட்களில் தினமும் இந்த செய்தி பெரிதுபடுத்தபட்டது. தினம் ஒரு கண்டன அறிக்கை !

ஆச்சாரிய சுவாமிகளிடமிருந்து விளக்கம் வராது என்பது எனக்கு தெரியும் . யாராவது அவரிடம் போய் பேசினால் , தவறு திருத்தப்பட வாய்ப்பு ஏற்படும்.

அதற்குள் ' குமுதம் ' இதழில் இது குறித்து தலையங்கம் எழுதப்பட்டு விட்டது. தலைப்பு -
'யானைக்கும் அடி சறுக்கும்?'

குமுதம் தலையங்கம் அக்காலத்தில் மிகவும் விறுவிறுப்புடன் இருக்கும் . சுடச்சுட விஷயங்களைத் தொடுவார் எஸ்.ஏ.பி.

இந்த தலையங்கம் பலன் தந்தது . திருமதி சௌந்திரா கைலாசம் , காஞ்சி பெரியாரை தரிசிக்க சென்றார்.அப்போது இந்த விஷயத்தை மெதுவாக எழுப்பினார். பெரியவர் கூறியது தவறாக வந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார்.

காஞ்சி பெரியவர் கூறிய விளக்கம் அடுத்த குமுதம் இதழில் செய்தியாக திருமதி கைலாசம் எழுதினார் :

"மார்கழி மாதம் கடவுளைப்பற்றிய நினைவுகளுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய மாதம் .
தீக்குறள் மட்டுமல்ல - திருக்குறள் போன்ற மிக உயர்ந்த நல்ல விஷயங்களைக்கூட கூறாமல் - கடவுள் நாமத்தையே சொல்ல வேண்டும் "

பெரியவர் இப்படி மார்கழி மாதத்தில் இறைவனை மட்டுமே நினைக்க வேண்டியதை வலியுறுத்த சொல்லி இருக்கிறார் !

இந்த விளக்கம் வந்தவுடன் அமைதி ஏற்பட்டுவிட்டது . சௌந்திரா கைலாசம் அவர்களுக்கு என் மனம் நன்றி கூறியது.

அடுத்த நிகழ்ச்சி - 1987 ம் ஆண்டு .

ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி மடத்தை விட்டு வெளியேறியதை அடுத்து ஏற்பட்ட பரபரப்பு நிகழ்ச்சி.

பல்வேறு அவதூறான செய்திகள் வந்து கொண்டிருந்தன. எனது இதழுக்காக உண்மைகளை சேகரித்தேன்.

காஞ்சிபுரம் சென்று ஸ்ரீமடத்திலும் மெல்ல தகவல் சேகரித்தேன். மகா பெரியவர் - ஓரிடத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். இந்த விஷயமாக மகா பெரியவரை பேட்டி எடுத்தால் என்ன என்றே தோன்றியது. 1962 நிகழ்ச்சியில் - ' அவசரப்பட்டதுபோல' இப்போது கூடாது . எதிரே காட்சி தருகிறாரே ... கேட்கலாமே என்று மனசாட்சி கூறியது . பணிந்தேன்.

சுவாமிகளிடம் நான் பேச முற்பட்ட போது சுற்றி இருந்த வயதான பக்தர்கள் தடுத்தார்கள். ' பெரியவரிடம் இதைப்பற்றி எல்லாம் கேட்பதா ? அவரை பேட்டி எடுப்பதா ' என்று சினந்து என்னை வெளியேறச் சொன்னார்கள்.

"என்ன .... என்ன .... அவன் என்ன கேட்கிறான் ?" என்று சுவாமிகள் நாற்புறமும் திரும்பி
விசாரித்தும் - அதற்கு பக்தர்கள் பதில் கூறாமல் என்னை விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்கள்.

நான் ஸ்ரீமடத்தைவிட்டு வெளியே வந்து , டிபன் சாப்பிட போகலாம் என்று நினைத்தேன். அதற்குள் ஒரு வயதான பக்தர் ஓடிவந்தார். " பெரியவா கூப்பிடுகிறார்" என்றார். நான் ஓடினேன்.

"என்ன சந்தேகம் ..... கேளு " என்று மெதுவான குரலில் பரமச்சாரியார் கூறினார். நான் கேள்விகளை பணிவுடன் கேட்டேன்.

"பரமாச்சாரியாரிடம் கோபித்துக் கொண்டே ஜெயேந்திரர் வெளியேறினாரா ? என்று கேட்டேன் . பக்தர்கள் முகத்தில் கோபம் பளிச்சிட்டது.

' அப்படி இல்லை . அவருக்கு என் மீது ரொம்ப அன்பு . எனக்கு கனகாபிஷேகம் செய்து பார்த்தரே " என்று பரமாச்சாரியார் கூறும் போது ஜெயேந்திரர் மீது அவருக்கு இருந்த அன்பு வெளிப்பட்டது.

" ஸ்ரீ மடத்திலிருந்து பணம் எடுத்துச் சென்றாரா ?" என்று கேட்க நேர்ந்தது.

பரமாச்சாரியார் மறுத்து தலையாட்டினார். " அவருக்கு எதற்கு பணம் ? அவர் நினைத்தால் பணம் கொட்டும் . இந்த மடம் ஏழை மடமாக இருந்தது. அதை மாற்றி - பல நல்ல காரியங்களை செய்பவர் அவர் " - சுவாமிகள் கூறினார்.

வெளியே சொல்லப்பட்ட வதந்திகளை நான் கேட்க நேர்ந்தது.

"இம் மாதிரி நிகழ்ச்சி ஸ்ரீ மடம் பற்றி மக்கள் என்னவாறு நினைக்க செய்யும் "....

"மக்கள் மிக உயர்ந்தவர்கள் . அவர்கள் கருத்து எதுவானாலும் அது முக்கியம் . அதை அலட்சியப்படுத்தமுடியுமா ?" - பெரியவர் கூறினார். இன்னும் பல கேள்விகள் எழுப்பினேன் !

பத்திரிக்கையில் இந்த பேட்டி பரபரப்பாக வந்தது. ஜெயேந்திரர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. அடுத்து சில நாட்களில் ஜெயேந்திரர் திரும்பினார்.

பரமாச்சாரியாரிடம் சங்கடமான கேள்விகள் கேட்டதற்கு ஒரு சில பக்தர்கள் என்னை திட்டினாலும் , ஜெயேந்திரர் பற்றி பரமாச்சாரியார் அந்த பேட்டியில் உயர்வாக கூறியிருந்தது - தமிழகம் முழுவதும் இருந்த பக்தர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளித்தது.

நன்றி:- அந்திமழை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்

Post by யினியவன் on Sun Oct 14, 2012 6:03 pm

நான் இங்கு என்ன சொல்றதுன்னு தெரியல பாலா.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்

Post by balakarthik on Sun Oct 14, 2012 6:12 pm

@யினியவன் wrote:நான் இங்கு என்ன சொல்றதுன்னு தெரியல பாலா.

எதுவும் சொல்லலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்

Post by அருண் on Sun Oct 14, 2012 6:15 pm

அறிய நிகழ்வுகளை காண தந்தமைக்கு நன்றி பாலா..!
அன்று மடம் இருந்த நிலைமை வேறு இன்று இருக்கிற நிலைமை வேறு.!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்

Post by balakarthik on Sun Oct 14, 2012 6:17 pm

@அருண் wrote:அறிய நிகழ்வுகளை காண தந்தமைக்கு நன்றி பாலா..!
அன்று மடம் இருந்த நிலைமை வேறு இன்று இருக்கிற நிலைமை வேறு.!

அது உண்மைத்தான் பெரியவருடன் கட்டுபாடுகளும் கட்டுகோப்புகளும் காற்றோடு பறந்தது நான் மூன்று ஆண்டுகள் அங்கே வேத பாடசாலையில் படித்துள்ளேன் இப்பொழுது எல்லாமே மிக மிக மோசம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்

Post by யினியவன் on Sun Oct 14, 2012 6:20 pm

பக்தி மார்க்கமாக எனக்கு நம்பிக்கையும் ஈடுபாடும் இல்லேன்னாலும் மற்ற பெரியவர்களின் மீதுள்ள மரியாதை ஏனோ ஜெயேந்திரர் மேல் இல்லவே இல்லை.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்

Post by balakarthik on Sun Oct 14, 2012 6:22 pm

@யினியவன் wrote:பக்தி மார்க்கமாக எனக்கு நம்பிக்கையும் ஈடுபாடும் இல்லேன்னாலும் மற்ற பெரியவர்களின் மீதுள்ள மரியாதை ஏனோ ஜெயேந்திரர் மேல் இல்லவே இல்லை.
இப்பொழுது நம்பிக்கை உள்ளவர்களுக்கே அவர் மேல் மரியாதை இல்லை அண்ணே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்

Post by அருண் on Sun Oct 14, 2012 6:49 pm

@balakarthik wrote:
நான் மூன்று ஆண்டுகள் அங்கே வேத பாடசாலையில் படித்துள்ளேன் இப்பொழுது எல்லாமே மிக மிக மோசம்

அப்ப நீங்க சங்கராச்சரியார் சிஷ்யபிள்ளை நு சொல்லவே இல்லை.! அதிர்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்

Post by balakarthik on Sun Oct 14, 2012 6:56 pm

@அருண் wrote:அப்ப நீங்க சங்கராச்சரியார் சிஷ்யபிள்ளை நு சொல்லவே இல்லை.! அதிர்ச்சி
விட்டா போதுமுன்னு ஓடிவந்துட்டேன் அருண் அப்பலாம் கட்டுப்பாடு ரொம்ப அதிகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்

Post by அருண் on Sun Oct 14, 2012 7:11 pm

@balakarthik wrote:விட்டா போதுமுன்னு ஓடிவந்துட்டேன் அருண் அப்பலாம் கட்டுப்பாடு ரொம்ப அதிகம்

என்ன பாஸ் இன்னாருக்கும் நீங்க இருந்திருந்திங்க என்றால் உங்களை டிவியில் பார்த்து இருப்போம்.!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்

Post by balakarthik on Sun Oct 14, 2012 7:16 pm

காவியில் பாவியாகி டிவியில் தெரிய நான் சித்தி பெற்ற நித்தி அல்ல


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்

Post by T.N.Balasubramanian on Sun Oct 14, 2012 8:45 pm

பாலாவின் பழமைகாலம், வேதம் கற்ற வித்யார்த்தி, பத்திரிகை ஆசிரிய சேவை பல பல.
உங்கள் தற்போதைய நகைச்சுவை விருந்தை விரும்பி ரசித்தவன். இருப்பினும் மகாபெரியவா , பரமாச்சார்யர் அவர்களுடன் பேட்டி எடுத்தது, இவைகளை படிக்கையில் உம் மதிப்பு அதிகம் உயர்ந்தது.
எங்கள் குலகுரு பரமாச்சார்யா சந்திரசேகரசரஸ்வதி என்று கூறும் பொழுதே , எழுதும் போதே என் கண்களில் ஆனந்த கண்ணீர் துளிகள். விடை காணா விஷயங்கள் குழப்பும் போதெல்லாம் "பெரியவா" நாமம் கூறி தெளிவு பெற்ற நேரங்கள் பல.

தற்போதைய சமாச்சாரங்கள் பேசாமல் இருப்பதே மனதிற்கு நிம்மதி.

பதிவுக்கு நன்றி, பாலா. மூன்று வருட அனுபவங்கள் எழுதலாமே.!!

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22446
மதிப்பீடுகள் : 8338

View user profile

Back to top Go down

Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்

Post by badri7986 on Mon Oct 15, 2012 9:34 am

ஜெயேந்திரர் ஓடி போனாரா ? அது என்ன நிகழ்ச்சி ? யாரேனும் தெளிவுபடுத்த முடியுமா ?
avatar
badri7986
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்

Post by ரா.ரா3275 on Mon Oct 15, 2012 9:48 am

@badri7986 wrote:ஜெயேந்திரர் ஓடி போனாரா ? அது என்ன நிகழ்ச்சி ? யாரேனும் தெளிவுபடுத்த முடியுமா ?

அவர் ஓடினதும் அவர் பின்னாலேயே பா.கா ஓடினதும் ஊரே சேர்ந்து மூவரையும்(?) துரத்தியதையும் எப்படி வெளியே சொல்வார் ஓமன் கிளை ஓனர்?...
புன்னகை சிரி சிரி புன்னகை சிரி சிரி ஜாலி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்

Post by Guest on Mon Oct 15, 2012 10:48 am

என்ன என்னமோ பேசறாங்க ..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்

Post by யினியவன் on Mon Oct 15, 2012 11:20 am

ஓடாத ஓட்டம் என்ன
ஓடியதின் காரணம் என்ன
என்ன என்ன என்ன என்ன என
அறிய துடிக்கும் பத்ரிக்கு காரணம் சொல்லுங்க பாஸ்...

அது நாடறிந்த ரகசியம் தானே - ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் கேட்டா என்னத்த சொல்றது?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum