புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
44 Posts - 43%
heezulia
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
4 Posts - 4%
prajai
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
4 Posts - 4%
Jenila
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
kargan86
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
jairam
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
8 Posts - 5%
prajai
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
6 Posts - 4%
Jenila
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
4 Posts - 3%
Rutu
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
viyasan
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_m10விண்டோஸ் 8 - தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 8 - தகவல்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 4:20 pm

விண்டோஸ் 8 இந்த மாதம் 26 ஆம் நாள் பொதுமக்களுக்கு வர்த்தக ரீதியாக வெளியிடப்பட இருக்கிறது. ஏற்கனவே விண்டோஸ் 8 நுகர்வோர் பதிப்பினை, பல லட்சம் பேர் உலகெங்கும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கென ஊணிணூதட்ண்தீடிணஞீணிதீண்8.ஞிணிட் என்ற முகவரியில் ஒரு தளம் இயங்கி வருகிறது. விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு உதவும் தளம் எனத் தானாகவே பிரகடனப்படுத்திக் கொண்டு, சந்தேகங்களைத் தீர்த்து வருவதுடன், விண்டோஸ் 8 பயன்பாடு குறித்த கருத்துக்களையும் கேட்டு வருகிறது.

இந்த தளத்தில் உறுப்பினர்களாகப் பதிந்தவர்களிடையே, அண்மையில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எத்தனை பேர் தொடர்ந்து பயன்படுத்துவீர்கள் என்று கேட்டு ஒரு கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் கருத்து தெரிவித்தவர்களில், இரண்டுக்கு ஒருவர் தான் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுவோம் எனச் சொல்லி இருக்கின்றனர். விண்டோஸ் 7 53%, விண்டோஸ் 8 25%, எக்ஸ்பி 20%, மற்ற சிஸ்டம் 2%. விண்டோஸ் 7 சிஸ்டத்தினை இன்னும் முழுமையாகவும், நம்பிக்கையுடனும் பயன்படுத்திய பின்னர், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு தாவலாம் என்று பலரும் கூறி உள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையிலேயே, விண்டோஸ் 8 சிஸ்டத்தினையும் பயன்படுத்திப் பார்க்க பலர் முடிவு செய்துள்ளனர். ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டம் மேம்படுத்தப்படுகையில், அதனை விட்டுவிடாமல் மேம்படுத்திப் பயன்படுத்த வேண்டும். விண்டோஸ் 8 சிஸ்டம் வரவால், அதன் பயன்பாடு முடிந்துவிடக் கூடாது எனவும் பல வாடிக்கையாளர்கள் கூறி வருவதாக, இந்தக் கணிப்பு தெரிவிக்கிறது.

நிறுவனங்களைப் பொறுத்தவரை, விண்டோஸ் 8 சிஸ்டத்தை முழுமையான பயன்பாட்டுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள், 20% முதல் 25% வரைதான் இருப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது. எனவே, விஸ்டாவிற்குக் கிடைத்த வரவேற்பு தான் விண்டோஸ்8 சிஸ்டத்திற்கும் கிடைக்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விண்டோஸ் 7 போல ஒரு அமோக வரவேற்பினை விண்டோஸ்8 பெறாது எனவும் தெரிய வந்துள்ளது.

இதற்குக் காரணம் என்ன? விண்டோஸ் 8 தொழில் நுட்ப ரீதியாக ஒரு பெரிய மாற்றத்தைத் தந்துள்ளது. ஆனால், பயனாளர் ரீதியாக பெரிய அளவில் முன்னேற்றமும் மேம்பாடும் இல்லை. இதன் இருவகை யூசர் இன்டர்பேஸ், பயனாளர்களைக் குழப்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை ரீதியாகவும் விண்டோஸ் 8, அதிக வரவேற்பினைப் பெறத் தயங்குகிறது. 35% பேர் விலை நிச்சயம் அதிகமாக இருக்கும் என்ற எண்ண ரீதியாக தயங்கியுள்ளனர். புதிய ட்ரைவர்களுக்கும், ஹார்ட்வேர் மேம்பாட்டிற்கும் பணம் செலவழிக்க வேண்டும் எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 26% பேர் ஹார்ட்வேர் தேவையால் பின்வாங்குகின்றனர். தாங்கள் பயன்படுத்தும் மற்ற சாப்ட்வேர் புரோகிராம் இதில் இணைந்து இயங்காது என 25% பேர் விலகுகின்றனர்.

அப்படியானால், விண்டோஸ் 8 சிஸ்டம் பயனாளர்கள் வியக்கும் அளவிற்கான சிறப்புகளைக் கொண்டிருக்கவில்லையா என்ற கேள்விக்கு, பல புதிய அம்சங்கள் பட்டியலிடப்பட்டு வருகின்றன. அவை: 1. வேகமான இயக்க தொடக்கம் மற்றும் முடித்து வைப்பு 55%; எளிதான இன்ஸ்டலேஷன் 50%; இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 35%; ரீஸ்டார்ட், ரெஸ்டோர் சிறப்பு திறன் 28%; இதனுடன் இணைந்த அப்ளிகேஷன் இணைப்பு 26%; விண்டோஸ் எக்ஸ்புளோரர் 25%; அப்ளிகேஷன் ஸ்டோர் 23% மற்றும் மெட்ரோ 22%. ஆனாலும், விண்டோஸ் 8 மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று,கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரலாற்றில், குறிப்பாக விண்டோஸ் வரிசையில் மிகச் சிறப்பான ஓர் இடத்தைப் பெறும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



விண்டோஸ் 8 - தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 4:21 pm

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன்

விண்டோஸ் 8 சிஸ்டம் வர்த்தக ரீதியாக மக்களுக்கு வெளியிடப்பட இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், இதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு, இணையத்தில் கிடைக்கும் வகையில் தரப்படுகின்றன. இத்தகைய அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரிக்கும் பல டெவலப்பர்கள், மிக வேகமாக இவற்றை வடிவமைத்து வழங்கி வருகின்றனர். குறிப்பாக விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களிலும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால், இத்தகைய புரோகிராம்கள் அதிகம் தேவைப்படும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. செப்டம்பர் 21 அன்று, இந்த புரோகிராம்களின் எண்ணிக்கை, 2,000 ஐக் கடந்து 2,079 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. இவற்றில் 83% புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. செப்டம்பர் 9ல் கிடைத்த புரோகிராம்களில் 89% புரோகிராம்கள் இலவச புரோகிராம்களாக இருந்தன.

இவ்வாறு அதிகப்படியான எண்ணிக்கையில் அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிடைப்பதற்குக் காரணம், விண்டோஸ் 8 தொகுப்பு, நுகர்வோர் பயன்படுத்தும் வகையில் இலவசமாகத் தரப்பட்ட போது பல லட்சம் பேர் அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பதே. இப்போதும் நாளொன்றுக்கு இது போன்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் தினந்தோறும் சராசரியாக 100 என்ற எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. எனவே, விண்டோஸ் 8 வெளியாகும் போது, இந்த அப்ளிகேஷன் புரோகிராம்கள் எண்ணிக்கை 5,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.



விண்டோஸ் 8 - தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 4:23 pm


அடுத்த 20 ஆண்டுகளுக்கு விண்டோஸ் 8 மட்டுமே


""விண்டோஸ் 8 ஒரு நிறுவனத்தின் முயற்சியால் விளைந்த படைப்பு அல்ல. 20 ஆண்டுகளுக்கு கம்ப்யூட்டர் இயக்கத்தைத் தாங்கிப் பிடிக்கும் கட்டமைப்பு'' என மைக்ரோசாப்ட் நிறுவன முதலீட்டாளர்களின் நட்புப் பிரிவின் தலைவர் பில் கோபெட் அறிவித்துள்ளார்.

இது விண்டோஸ் 8 தொகுப்பினைச் சந்தைப்படுத்துவதற்காக சொல்லப்பட்ட கூற்று அல்ல. கம்ப்யூட்டர் பயனாளர்களை மையப்படுத்திச் செயல்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எதிர்காலக் கணிப்பாகும். 2014 ஏப்ரல் மாதம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான சப்போர்ட்டை நிறுத்திவிடும்போது, எக்ஸ்பி பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களும் (தற்போது 42%) தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மாற்றியே ஆக வேண்டும். அவர்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்தினை விரும்பவில்லை என்றால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்காகவது மாறுவார்கள். அப்படியானால், விண்டோஸ் 8 சிஸ்டத்தினை யார் விரும்புவார்கள்?

ஐபோன், ஆண்ட்ராய்ட் போன் மற்றும் ஐபேட் பக்கம் சென்ற நிறுவன வாடிக்கையாளர்கள், பெர்சனல் கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி என அனைத்தையும் ஒருங்கே அணைத்துச் செல்லக் கூடிய, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத்தான் மாறுவார்கள் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.

அதுமட்டுமின்றி, கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பயனாளர்கள், டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தினை விரும்பிப் பயன்படுத்துவார்கள் என்றும் மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. அதனால் தான், எதிர்ப்பு தோன்றிய போதும், ஸ்டார்ட் ஸ்கிரீன் இல்லாத யூசர் இன்டர்பேஸை கட்டாயப்படுத்துகிறது. பல புரோகிராம் டெவலப்பர்கள், தொடுதிரை வழி இயங்கும் வகையிலேயே தங்கள் புரோகிராம்களை அமைக்க, விண்டோஸ் 8 தொடுதிரை இயக்கம் கை கொடுக்கும். ஏனென்றால், ஸ்மார்ட் போன்களில் தொடுதிரை இயக்கம் தான் இன்றைய நிலையில் வழக்கமான ஒன்றாக மாறி உள்ளது. இதனையே இனி அனைவரும் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பிசிக்களில் எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு விண்டோஸ் 8 சிஸ்டம் மட்டுமே கை கொடுக்கும்.

எனவே, மைக்ரோசாப்ட் பழைய டெஸ்க்டாப் பழக்கத்திற்கு வழி விட்டால், தொடுதிரைப் பழக்கம் கம்ப்யூட்டரில் வராமலேயே இருந்துவிடும். புரோகிராம் அமைக்கும் தர்ட் பார்ட்டி டெவலப்பர்களும், தொடுதிரை இயக்கம் பக்கம் செல்ல மாட்டார்கள். இது அவர்களுக்கும், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் பெரிய மரண அடியாக இருக்கும். எனவே தான், சாதுர்யமாக, விண்டோஸ் 8ல் தரும் தொடுதிரை யூசர் இன்டர்பேஸினை மைக்ரோசாப்ட் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எனவே விண்டோஸ் தொடர்ந்து மக்களுடன் உறவாட, தொடுதிரை யூசர் இன்டர்பேஸ் நல்ல அடிப்படையை அமைக்கும். முதலில் டெவலப்பர்களுக்கு, விண்டோஸ் 8 சிஸ்டம் தொகுப்பினை வழங்குகையில், மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாகி ஸ்டீவ் பால்மர் இதனைத்தான் தெரிவித்தார். உலகில் ஆண்டுக்கு 40 கோடி கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் 26 கோடி கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் இயங்கும். இவற்றுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை டெவலப்பர்கள் உருவாக்குவது நல்ல விற்பனையைத் தரும் என்று கூறினார். இந்த வகையில் டெவலப்பர்களைத் தன் வசம் இழுத்துக் கொண்ட மைக்ரோசாப்ட், இவர்கள் வழியாக நுகர்வோர்கள் நிச்சயம் தங்கள் பக்கம் வருவார்கள் என்பதில் உறுதியாக உள்ளது.

தொடுதிரை இயக்கத்தின் அடுத்த பதிப்பு வரும்போது, நிச்சயம் பெரும்பாலான நுகர்வோர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்தினை அதன் தொடுதிரையுடன் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. அந்த வகையில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்காவது, விண்டோஸ் 8 நிலைத்து நிற்கும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது.

ஆனால், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் வேறு வழியில் சிந்தித்துக் கொண்டிருக்கலாம். இனிமேல் தான் அது தெரியவரும்.

கம்ப்யூட்டர் மலர்



விண்டோஸ் 8 - தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 09, 2012 4:24 pm

ஊணிணூதட்ண்தீடிணஞீணிதீண்8.ஞிணிட் என்ற முகவரியில் ஒரு தளம் இயங்கி வருகிறது.

இது என்ன தளம் தல ஏதாவது சைனிஸ் தளமா இல்ல ஸ்பானிஷ் தளமா



ஈகரை தமிழ் களஞ்சியம் விண்டோஸ் 8 - தகவல்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 09, 2012 4:28 pm

புன்னகை
balakarthik wrote:
ஊணிணூதட்ண்தீடிணஞீணிதீண்8.ஞிணிட் என்ற முகவரியில் ஒரு தளம் இயங்கி வருகிறது.

இது என்ன தளம் தல ஏதாவது சைனிஸ் தளமா இல்ல ஸ்பானிஷ் தளமா

இல்ல சாமியார்கள் தளமா !!! புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Tue Oct 09, 2012 4:29 pm

balakarthik wrote:
ஊணிணூதட்ண்தீடிணஞீணிதீண்8.ஞிணிட் என்ற முகவரியில் ஒரு தளம் இயங்கி வருகிறது.

இது என்ன தளம் தல ஏதாவது சைனிஸ் தளமா இல்ல ஸ்பானிஷ் தளமா

சிரி சிரி சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 4:44 pm

balakarthik wrote:
ஊணிணூதட்ண்தீடிணஞீணிதீண்8.ஞிணிட் என்ற முகவரியில் ஒரு தளம் இயங்கி வருகிறது.

இது என்ன தளம் தல ஏதாவது சைனிஸ் தளமா இல்ல ஸ்பானிஷ் தளமா

ஆமா, என்ன இது!



விண்டோஸ் 8 - தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Thariq
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 08/10/2012
http://www.vadakaraithariq.blogspot.com

PostThariq Thu Oct 11, 2012 10:58 pm

நான் விண்டோஸ் 8 தான் உபயோஹித்து வருகிறேன். நல்ல வேகமான தொடக்கம் இருக்கிறது. என்னை பொறுத்தவரை விண்டோஸ் 7 அளவிற்கு விண்டோஸ் 8 வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். ஆனால் டாப்லட்டில் விண்டோஸ் 8 பெரும் மாற்றத்தை உண்டுபண்ணும். மொபைலுக்கு ஆன்றாய்டும் டாப்லட்டிற்கு விண்டோஸ் 8 ம்தான் இனி வரும் காலத்தில் ஆதிக்கம் செலுத்த போகிறது. நன்றி சகோ



தாரிக் அஹமது அன்பு மலர்
avatar
Guest
Guest

PostGuest Fri Oct 12, 2012 10:06 am

CONSUMER PREVIEW பாவித்து வருகிறார்களா ?

Configuration சொல்லுங்கள் அண்ணே ..

Thariq wrote:நான் விண்டோஸ் 8 தான் உபயோஹித்து வருகிறேன். நல்ல வேகமான தொடக்கம் இருக்கிறது. என்னை பொறுத்தவரை விண்டோஸ் 7 அளவிற்கு விண்டோஸ் 8 வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். ஆனால் டாப்லட்டில் விண்டோஸ் 8 பெரும் மாற்றத்தை உண்டுபண்ணும். மொபைலுக்கு ஆன்றாய்டும் டாப்லட்டிற்கு விண்டோஸ் 8 ம்தான் இனி வரும் காலத்தில் ஆதிக்கம் செலுத்த போகிறது. நன்றி சகோ


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 12, 2012 10:23 am

எதுக்கும் இங்க போய் பாருங்க

http://windows.microsoft.com/en-US/windows-8/release-preview

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக