ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்

View previous topic View next topic Go down

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்

Post by சிவா on Mon Sep 24, 2012 8:02 am
“மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்.’

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமானை ஒப்பர். மானம் வரின் உயிர் நீப்பர். உயிர் நீங்கத்தான் மானமெயது மெல்லைவரின் அதனைத் தாங்காது இருப்பர் (இழிவு சிறப்பும்மை) விகாரத்தால் தொக்கது.

உயிரும் மானமும் உடனில்லாமைக் கண் பின்னும் போவதாய் உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய் மானத்தை எய்துவரென்பதூம் உவகை அவர்க்கு அஃதியல் என்பது விளக்கி நின்றது பரிமேலழகர் மேலே கூறிய பாடலுக்குச் சுட்டிய பொருளாகும்.

பலர் எழுதிய உரைகளைக் காட்டிலும் சிறப்பு எனக்கருதுபவர் “தனக்கு அலங்காரமாகிய மயிர்க் கற்றையின் ஒரு மயிர் போகின், மானினத்து பின் உயிர் வாழாது அம்மயிர் துவக்குண்ட இடத்து நின்றுவற்றிவிடு உம். கவரிமா அன்ன கடப்பாடுடையர்’ எனும் கருத்தை காளிகர், அறிவிக்கிறார். இவரகளை அடியொற்றியே ஏனைய உரை ஆசிரியர்களும் கருத்துக் கூறுகின்றனர்.

கோவலனுக்கு, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் கொலைத்தண்டனை அளித்தார். கண்ணகியால் தன் கணவன் குற்றமற்றவன் என மன்னன் கேட்டு அறிந்ததும், அரசகுலத்துக்கே பழிச் சொல் ஏற்பட்டு விட்டதே எனக் கருதி, உயிர் துறந்த மன்னனை கவரி மானினத்தவன் எனச் சுட்டிக் காட்டுவர். சேர நாட்டுப் பெண்கள், தங்கள் கூந்தலைச் சீவி கவரிமயிர் இணைத்து கொண்டையிட்டுக் கொண்டு ஊசலாடி மகிழ்வர் எனும் கருத்தினை பதிற்றுப்பத்து (63:12) பகர்கிறது. எந்த மானுக்கும், மகளிர் கூந்தலுக்கு மயிர்தரும் அளவிற்கு நீளமான தடித்த மயிர் (சவுரி முடி) இருந்ததற்கான சான்றினை இலக்கியங்களும் இயம்பினதாகத் தெரியவில்லை! மேலும் விலங்கியல் ஆய்வாளர்களும் விளம்பினதாகத் தெரியவில்லை.

இதனை உறுதிப் படுத்த மான்களைப் பிடித்து, உடம்பிலுள்ள சில பகுதிகளில் இருந்து மயிர்களை மழித்து அகற்றி சோதித்துப் பார்த்து, மயிர்களை இழந்த மான்கள் உயிர் விட்டதாகத் தகவல் இல்லை.

பண்டைய பாடல்களில் பொதிந்துள்ள ஆழ்ந்த கருத்துக்களை, ஆய்வுக் கண்ணோடு ஆராய வல்ல தமிழ் வல்லுனர்களைத் தொடர்பு கொண்டு பாடலின் உட்பொருளை கேட்டறியலானேன்.

ஆய்வுக்க எடுத்துக் கொண்ட பாடலை சரியான கண்ணோட்டத்துடன் கூர்ந்து படித்தால் தெளிவு பிறக்கும் என அறியக் கேட்டதும், மறுமுறை குறளைச் சரியான கண்ணோட்டத்துடன் படித்ததில், வள்ளுவப் பெருந்தகை சுட்டிக் காட்டியது கவரிமான் அல்ல. அது கவரிமா என்பதை அறியலானேன்.

சிவனார் கயிலையில் உமாப்பிராட்டியார் (கௌரியோடு) காட்சி தருவதை யாவரும் கண்டிருப்பர். கௌரியைக் கவுரி எனவும் அழைப்பர். கவுரிக்கு உரிய விலங்கு கவுரிமா எனப்பட்டது. மா என்றால் விலங்கு, கவரிக்கு முதன் முதலில்விலங்கு எனும் பொருள் கொண்ட மா எனும் பின்னணியை வழங்கியவர் வள்ளுவரேயாவர். “அவ்வாறாயின் கவரிமா என்பது எது?’ இவ்விடத்தில்தான், வள்ளுவர் பெருந்தகை, தனது குறள் வாயிலாக நுழைகிறார்.

கவரிமா என்பதற்கு கழகத் தமிழ் அகராதி, ஒரு விலங்கு என்றே பொருள் கொள்கிறது. மான் என வெளிப்படையாக சுட்வில்லை. சுமார் 7000 அடி உயரமுள்ள பனிப்பிரதேசமான இமாலயப் பகுதிகளில் காணப்படும் எனச் சங்கப் பாடல்கள் அறிவிக்கின்றன. உயரமான மøப் பிரதேசங்களில் வாழும் இவ்விலங்குக்கு கடுங்குளிரைத் தாங்கிக் கொள்ள மயிற்கற்றை எனும் மேனிப் போர்வை அவசியம் தேவைப்படுகிறது.

தொல்காப்பிய மரபியலில் (17, 36, 39, 58) கவரி எனும் விலங்கு 4 இடங்களில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. அவற்றில் கவரியின் ஆண்பாற்பெயர் ஒருத்தல் ஏறு என்பதாக சுட்டப்படுகிறதே தவிர ஒரு இடத்திலும் கூட கவரிமான் எனக் குறிக்கவில்லை. “யாக்’ எனும் விலங்கானது எனும் ஆடுமாடு இனத்தைச் சேர்ந்ததாகும். இவ்விலங்கு மனிதர்களோடு நெருங்கிப் பழகும் தன்மை கொண்டது. இவை வாழும் பனிப் பிரதேசங்களில் வளரும் நரந்தம் எனும் புற்களையே உணவாக உட்கொள்ளும். அதனுடைய மயிற்கற்றை ஏதாவது ஒரு அவசியத்தையோ, பரிசோதிக்கவோ எண்ணி, அதன் மயிற்கற்றை மழிக்க நேரிட்டால், அவ்விலங்கு தரம் தாழ்த்திக் கொள்ளாது. அங்கேயே குளிரால் விரைத்து இறந்து விடுவது போன்றே, சான்றோர்கள் இழிவான காரியங்களால் தங்களுக்கு அவமானம் நேரிடின், உயிரைவிட சிறிதும் தயங்கமாட்டார்கள். மானமே பெரிது உயிரைத் துச்சமாகவே கருதுவர். சான்றோர்கள் பாடலில் நீப்பின் எனும் சொல்லுக்கு ஒரு மயிரை மட்டும் பிடுங்குவது அல்லது மயிற்கற்றைகளை மழிப்பதே என்பது பொருளாகும்.

மேற்கண்ட கருத்துக்களால் யாக் எனும் விலங்கே கவரிமா என்றும் கவரிமா என்பது கவரிமான் அல்ல என்றும் தெளிவாகிறது. இவ்வரிய கருத்தை சுருங்கச் சொல்லி விளங்க வைத்த வள்ளுவப் பெருந்தகையாரின், நுண்மான் நுழைப்புலனை எவ்வாறு புகழ்வதென்றே வார்த்தைகள் தோன்றவில்லை.

மு. அருணகிரி


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்

Post by m.mohan on Mon Sep 24, 2012 8:12 am

சிறந்த பகிர்வு.
என்றும் அன்புடன்
மோகன்
avatar
m.mohan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Sep 24, 2012 8:45 am

கவரிமான் என்பது மான் அல்ல அது யாக் என்று சொல்லப்படும் விலங்கு என்பது குறித்து ஒரு விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை ஏற்கனவே நம் ஈகரையில் படித்ததாக ஞாபகம் சிவா ...எனினும் இப்பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்

Post by மாணிக்கம் நடேசன் on Mon Sep 24, 2012 10:06 am

தலையிலதான் முடி எல்லாம் கொட்டிப் போச்சே, இன்னும் நீ ஏன் உயிரா இருக்கேன்னு என்ன கேக்குர மாரி இருக்கு. இருந்தாலும் மிக நல்ல பதிவு மாமா அங்கள்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

இதே விடயத்தை நான் எழுதியதையும் படிக்கவும்.http://johan-paris.blogspot.fr/2006/10/blog-post_05.html

Post by johan arunasalam on Thu Jan 09, 2014 7:12 pm

இதே விடயத்தை நான் எழுதியதையும் படிக்கவும்.http://johan-paris.blogspot.fr/2006/10/blog-post_05.html
avatar
johan arunasalam
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum