ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

புறநானூறு - ஒரு மீளாய்வு

View previous topic View next topic Go down

புறநானூறு - ஒரு மீளாய்வு

Post by Rangarajan Sundaravadivel on Tue Sep 11, 2012 8:32 pm

1.கண்ணி கார்நறுங் கொன்றை;காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை;
ஊர்தி வால்வெள்ளேறே! சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்ஏறு என்ப!
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை,
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே!
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறைநுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை,
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே!
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீர் அறவு அறியாக் கரகத்துத்
தாழ் சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே!

பாடலாசிரியர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்

பொருள்:தலையிலும், அழகிய மார்பிலும் கொன்றை மலர் அணிந்திருப்பான். அவனது வாகனம் வெண்மையான எருது, அவனது கொடியும் அந்த எருதேயாகும். கழுத்தில் கறையுடயவன்; அக்கறை வேதம் ஓதுகின்ற அந்தணர்களால் புகழப்படும். பெண்ணுருவைத் தனது ஒரு பக்கத்தில் கொண்டவன்; அவ்வுருவைத் தன்னுள் அடக்கி மறைத்துக் கொள்ளவும் அவனால் முடியும். பிறைநிலவினைப் போன்று ஒளிரும் நெற்றியுடையவன். அப்பிறை பதினெட்டு கணத்தவராலும் வழிபடப்படுவதாகும். எல்லா உயிர்களுக்கும் காவலாக விளங்குபவன். நீர் வற்றாத கங்கையைத் தனது கடைமுடியில் கொண்டுள்ளவன். அத்தகைய பெருமான தவமியற்றுபவருக்கு மிகவும் இனிமையானவன்.

மீளாய்வு:
இப்பாடலடிகளில் சிவபெருமானின் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் ஓரளவு புராண, இதிகாசப் பரிச்சயம் கொண்டவருக்கு இப்பாடலில் குறிப்பிடப்படும் பெருமான் சிவபெருமான் என்பது எளிதில் விளங்கி விடும்.

இப்பாடலில் இருந்து பின்வரும் விஷயங்கள் தெளிவாகின்றன என்று எடுத்துக் கொள்ளலாம்.
1. இப்பாடல் சிவபெருமானைப் புகழ்ந்து எழுதப்பட்டது.
2.வேதம் ஓதுகிற அந்தணர்கள், அதாவது பிராமணர்கள் தமிழகத்தில் கடைச்சங்க காலத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தனர். இதனால் வருணாசிரம முறை வேர்விடத் தொடங்கியது என்பதை உணரலாம்.
3.இப்பாடலாசிரியர் பாரதத்தைத் தமிழில் எழுதியுள்ளார். (ஆனால் நம்மிடத்தில் அதன் சுவடிகள் இல்லை)

இதனால் வடவாரிய கலாச்சாரம் தமிழகத்தில் கடைச்சங்க காலத்திலேயே தழைத்தோங்கத் தொடங்கியிருந்தது என்பதை அறியலாம்.

(இக்கருத்துகளைப் பற்றி கலந்துரையாட விரும்பும் தோழர்கள் இத்திரியிலேயே தங்கள் கருத்தைப் பதிவு செய்யவும். இது ஒரு தொடர் பதிவு.)
avatar
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 164
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - ஒரு மீளாய்வு

Post by சாமி on Tue Sep 11, 2012 10:16 pm

2.வேதம் ஓதுகிற அந்தணர்கள், அதாவது பிராமணர்கள் தமிழகத்தில் கடைச்சங்க காலத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தனர். இதனால் வருணாசிரம முறை வேர்விடத் தொடங்கியது என்பதை உணரலாம்.

தவறான புரிதல் நண்பரே!
> வேதம் என்பது தமிழ் நான்மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு என்பதைக் குறிக்கும். (ரிக், யசுர், சாமம், அதர்வணம் இவையாவும் வடமொழி வேதங்கள். இவை கடவுளை மறுப்பவை, தேவர்களை மதிப்பவை.)

> வேதம் , வேள்வி இவையெல்லாம் தமிழரின் பழக்கம். பிற்காலத்தில் ஒரு பிரிவு ஆரியரால் அவை எடுத்துக் கொள்ளப்பட்டன.

> அந்தணர், வேதியர், மறையோர், ஐயர், பார்ப்பனர் போன்ற சொற்கள் எந்த ஒரு தனிப்பட்ட இனத்தையும் குறிக்கும் சொல் அல்ல. அது சான்றோரைக் குறித்த சொல். பிராமணன் என்ற சொல் மட்டுமே இனத்தைக் குறிக்கும் சொல்.

இதனால் வடவாரிய கலாச்சாரம் தமிழகத்தில் கடைச்சங்க காலத்திலேயே தழைத்தோங்கத் தொடங்கியிருந்தது என்பதை அறியலாம்.

> ஆரியர்கள் வருகை கி.மு.1500 தான். கடைச்சங்க காலம் என்பது கி.மு. 18 , 000 . ஏறத்தாழ ஆரியர் வருகைக்கு 16500 ஆண்டுகளுக்கு முன்னர்.

நன்றி
சாமி
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: புறநானூறு - ஒரு மீளாய்வு

Post by Rangarajan Sundaravadivel on Wed Sep 12, 2012 7:09 am

வேதம் என்பது தமிழ் நான்மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு என்பதைக் குறிக்கும். (ரிக், யசுர், சாமம், அதர்வணம் இவையாவும் வடமொழி வேதங்கள். இவை கடவுளை மறுப்பவை, தேவர்களை மதிப்பவை.)

1.ஆனால் இத்தமிழ் நான்மறைகள் இருந்ததற்கும், அவை ஆரிய நான்மறைகள் அல்லவென்பதற்கும் நம்மிடம் எத்தகைய சரித்திர சான்றும் இல்லை. அவற்றிலிருந்து எப்பகுதியும் நமக்குக் கிடைக்கவில்லை.

ஆரியர்கள் வருகை கி.மு.1500 தான். கடைச்சங்க காலம் என்பது கி.மு. 18 , 000 . ஏறத்தாழ ஆரியர் வருகைக்கு 16500 ஆண்டுகளுக்கு முன்னர்.

2.இறையனார் களவியலுரைப் படி முதற்சங்கம் 4449 ஆண்டுகளும், இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகளும், மூன்றாவது அல்லது கடைச்சங்கம் 1750 ஆண்டுகளும் நிலைபெற்றிருந்தன. இதன்படி சங்கங்களின் மொத்த காலம் ஏறத்தாழ 9900 ஆண்டுகள் எனலாம். ஆனால் சங்கத்தின் இருப்பை அப்படியே ஏற்றுக் கொண்ட சான்றோர் கூட கி.மு.9700லிருந்து கி.பி.2ம் நூற்றாண்டு வரை சங்கம் நிலைபெற்றிருந்தது என்னும் கருதுகோளையே முன் வைக்கின்றனர். (நீங்கள் கி.மு 18000 என்ற கணக்கினை முன் வைத்ததற்கான நூலாதாரங்களைக் காட்டினால் அவற்றை ஆய்ந்து என்னைத் தெளிவு படுத்திக் கொள்கிறேன்). இதனால் ஆரிய கலாச்சாரம் தமிழகத்தில் கடைச்சங்க காலத்தில் நுழைந்ததைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.


avatar
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 164
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - ஒரு மீளாய்வு

Post by Guest on Wed Sep 12, 2012 10:34 pm

சூப்பருங்க அருமை தோழா

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: புறநானூறு - ஒரு மீளாய்வு

Post by சதாசிவம் on Mon Sep 17, 2012 2:27 pm

நல்ல படைப்பு நண்பரே, தொடருங்கள்.

[You must be registered and logged in to see this link.] wrote:வேதம் என்பது தமிழ் நான்மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு என்பதைக் குறிக்கும். (ரிக், யசுர், சாமம், அதர்வணம் இவையாவும் வடமொழி வேதங்கள். இவை கடவுளை மறுப்பவை, தேவர்களை மதிப்பவை.)

1.ஆனால் இத்தமிழ் நான்மறைகள் இருந்ததற்கும், அவை ஆரிய நான்மறைகள் அல்லவென்பதற்கும் நம்மிடம் எத்தகைய சரித்திர சான்றும் இல்லை. அவற்றிலிருந்து எப்பகுதியும் நமக்குக் கிடைக்கவில்லை.

ஆரியர்கள் வருகை கி.மு.1500 தான். கடைச்சங்க காலம் என்பது கி.மு. 18 , 000 . ஏறத்தாழ ஆரியர் வருகைக்கு 16500 ஆண்டுகளுக்கு முன்னர்.

2.இறையனார் களவியலுரைப் படி முதற்சங்கம் 4449 ஆண்டுகளும், இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகளும், மூன்றாவது அல்லது கடைச்சங்கம் 1750 ஆண்டுகளும் நிலைபெற்றிருந்தன. இதன்படி சங்கங்களின் மொத்த காலம் ஏறத்தாழ 9900 ஆண்டுகள் எனலாம். ஆனால் சங்கத்தின் இருப்பை அப்படியே ஏற்றுக் கொண்ட சான்றோர் கூட கி.மு.9700லிருந்து கி.பி.2ம் நூற்றாண்டு வரை சங்கம் நிலைபெற்றிருந்தது என்னும் கருதுகோளையே முன் வைக்கின்றனர். (நீங்கள் கி.மு 18000 என்ற கணக்கினை முன் வைத்ததற்கான நூலாதாரங்களைக் காட்டினால் அவற்றை ஆய்ந்து என்னைத் தெளிவு படுத்திக் கொள்கிறேன்). இதனால் ஆரிய கலாச்சாரம் தமிழகத்தில் கடைச்சங்க காலத்தில் நுழைந்ததைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.உங்களின் கருத்தை ஏற்கிறேன். பல நேரங்களில் நாம் தமிழை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் வடமொழி வேதத்தை, நூல்களை ஏற்க மறுக்கிறோம் .avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - ஒரு மீளாய்வு

Post by Rangarajan Sundaravadivel on Mon Sep 17, 2012 4:52 pm

பல நேரங்களில் நாம் தமிழை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் வடமொழி வேதத்தை, நூல்களை ஏற்க மறுக்கிறோம்

நாம் வடமொழி வேதங்களையும், நூல்களையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை அல்ல. அனைத்தையும் விமர்சனத்துக்கும், ஆய்வுக்கும் உட்படுத்த வேண்டும் என்பதே என் அவா, தோழரே.

avatar
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 164
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - ஒரு மீளாய்வு

Post by Rangarajan Sundaravadivel on Mon Sep 17, 2012 10:06 pm

2. மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும் உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலைப் புணரிக் குணகடல் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது களத்தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்,
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே!

பாடலாசிரியர்: புலவர் முரஞ்சியூர் முடி நாகராயர்
பாடப் பெற்றவர் சேரமான பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்
திணை: பாடாண் திணை
துறை: ஓம்படை வாழ்த்து

பொருள்: மண்ணால் நிரம்பிய நிலமும், அதன் மேல் விளங்கும் ஆகாயமும்,அதனுடன் இயைந்து விளங்கும் காற்றும், காற்றால் பெருகும் நெருப்பும், நெருப்பின் முரணாய் வழங்கும் நீரும் என ஐம்பெரும் பூதங்களாய் வழங்கும் இயற்கையைப் போன்றவனே!

நின்னைப் போற்றாதவரிடம் பொறுமை காட்டுவாய். ஆழ்ந்த அறிவும், ஆற்றலும், வள்ளன்மையும், பகைவரை அடக்கும் வலிமையும் உடையவனே!

உன் ஆட்சிக்குரிய பகுதியில் உள்ள கிழக்குக்கடலில் உதிக்கும் கதிரவன், மீண்டும் உன் ஆட்சிக்குரிய மேற்குக் கடலில் நீராடும். (அஸ்தமிக்கும்) பெரிய நிலப்பரப்பை உடையவனே! வானினை எல்லையாகக் கொண்டவனே!

பிடரிமயிர்களுடைய குதிரைப் படையுடைய ஐவர் (பாண்டவரைக் குறிப்பதாகக் கருதப்பட்டது), நூற்றுவரோடு (கவுரவர்) போர்புரிந்த களத்தில் மிகுந்த சோறு அளித்து உதவி புரிந்தவனே!

பால் புளித்தாலும், பகல் இருண்டாலும், நான்கு வேதங்களின் நெறி திரிந்தாலும் தன் கடன் பிறழாத பரிவார சுற்றத்தோடு, நெறி தவறாது நிலைத்து வாழ்க!
சிறுதலையும் பெருங்கண்ணும் உடைய மான், பிணையாகிய தன் பெண் மானுடன் மேவவும், அந்தணர் மாலைப் பொழுதில் அருங்கடன்களை (சந்தியாவந்தனம்) செய்யவும், மூன்று வகையான தீயுடன் சிறந்து விளங்கும் அழகுடைய இமயத்தைப் போன்றும் பொதிகையைப் போன்றும் நீ நீடூழி வாழ்க!

மீளாய்வு: நம்மிடம் சங்க காலத்தைப் பற்றிய வரலாற்று நூற்கள் இல்லை. எனவே நம்மிடம் இருக்கும் சில மூலங்களை வைத்தே நாம் வரலாற்றைக் கட்ட வேண்டும். அதாவது சங்க இலக்கியங்களில் இருந்து. இத்தகு நிலையில் பிழை நிகழ்வதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் எது உயர்வு நவிற்சி, எது இயல்பு நவிற்சி என்று நம்மால் பிரித்தறிய முடியாது.

மகாபாரதப் போரைப் பற்றிய தகவல் இப்பாடலில் குறிப்பிடப்பட்ட காரணத்தைக் கொண்டு குருஷேத்திரம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி என்று நம்மால் முடிவு செய்ய முடியாது. பாரதம் ஒரு காவியமாக தமிழில் அக்காலத்தில் பெருந்தேவனாரால் உருவாக்கப்பட்டிருந்தது என்பதை நாம் அறிகிறோம். எனவே பாரதப் போரின் மீது இப்புலவர் ஏற்றிச் சொல்லும் ஒரு கவித்துவச் சுதந்திரத்தின் பகுதியாகக் கூட இது இருக்கக் கூடும்.

அந்தணரின் சந்தியாவந்தனமும், நான்கு வேதங்களும் மீண்டும் குறிப்பிடப்படுகின்றன. எனவே ஆரியக் கலாச்சாரம் தமிழகத்தில் அதிகமாக விரவியிருந்தது என்பதை உணரலாம்.


avatar
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 164
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - ஒரு மீளாய்வு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum