ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்)

View previous topic View next topic Go down

காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்)

Post by kirikasan on Tue Sep 04, 2012 12:49 pm

முதலில் எனக்கு பொதுஇடத்தில் முறையாக நாலுவார்த்தை பேசத்தெரியாது. குட்டையைக்
குழப்புகிறேன் என்று அழகாக என்னை வர்ணித்து விடுவார்கள் நானாவது உருப்படியாக
நாலுவார்த்தை சொல்லுவதாவது என்ற அபிப்பிராயம் எனக்கு மேலேஎனக்கு இருக்கும்போது
ஏனிந்த விஷப்பரீட்சை?

சரி இங்கே ஏதோ சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. சொல்லா விட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறிவிடும் என்று விக்கிரமாதித்தனிடம் வேதாளம் கூறுமாமே! அதுபோல் உனக்கும் நடந்துவிடும் என்று எனக்குப் பின்னால் ஒரு ஒலி கேட்கிறது. வம்பு ஏன்? கூறிவிடுகிறேன்

முதலில் எனக்குச் சமயங்களைப்பற்றி பெரிதாகஎதுவும் தெரியாது. ஒத்துக்கொள்கிறேன் ஆனால் 55 வருடங்கள் பூமியில் வாழ்ந்த அனுபவத்தில் சில மன எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் இதைக்கூறும்போது தெரியாத விடத்து தெரியாது என்னும் உண்மையைக் கூறிவிடுவேன் பிழையாகச்சொன்னால் அதை பிழையென்று ஒத்துக்கொள்வேன்

காதலும் கடவுளும்
எந்த ஒருசமயத்துக்கும் இல்லாத ஒரு விடயம் இந்து சைவ சமயத்துக்குண்டு எங்கள் கடவுள் அல்லது கடவுள்கள் ஜோடியாக மணம்முடித்து சாதாரண வாழ்க்கையோடு ஒத்த வகையில் இருக்கிறார்கள். கடவுளைப்பற்றிக் குறை கூறுவதென்றால் முதலில் இங்கு சிந்திக்கத் தொடக்க வேண்டும்.
ஆதியும் அந்தமுமில்லாத அரும்பெரும் ஜோதியே கடவுள் என்றால் அதற்கு இரண்டு பிள்ளைகள் இருப்பது எப்படி? அவர்கள் வளர்ந்து கல்யாணம் செய்கிறார்கள். ஒருமகன் முருகன் முதல் மனைவி இருக்க இன்னொரு பெண்னை விரும்புகிறார். தாத்தா வேஷம் போட்டு அவளிடம் செல்வார். அண்ணன் விநாயகர் யானை வேடத்தில் வருவார் வள்ளி பயத்தில் ஓடிவந்து தாத்தாவைக் கட்டிப் பிடிப்பார். காப்பாற்றுங்க என்று கத்துவார். யானை போய்விட சேனை வயலோரத்தில் டூய்ட் பாட்டோ என்னவோ, சினிமாவில் வரும் சம்பவங்களைக் காணுகிறோம்.
இங்கேயே, ”இதெல்லாம் எனக்கு ஒத்து வராதப்பா ரெம்பத்தான் புழுகுகிறீங்க என்னை விட்டுடுங்க”என்று நாத்திகனாகப் போய்விட வேண்டும். அதாவது அருவமும் உருவமும் இல்லாத ஐம்பெருங் குணங்களை உடைத்த ஒரு தீ வடிவான ஜோதியே உண்மைக் கடவுள் என்னும்போது அத்துடன் நிறுத்திக் கொள்வது ஆரோக்கியம் என்று வரையறுத்துக்கொள்ள வேண்டும் ஒருவரே கடவுள் அதுவும் சக்திஎனும் தீப்பிழம்பு வடிவானது என்று கூறவேண்டும். அந்த Universal Power ஐ கையெடுத்துக் கும்பிடவேண்டுமா அல்லது மனதுக்குள் நினைத்தால் மட்டும்போதுமா என்ற கேள்விகள் ஒரு பக்கம் இருக்க அப்படியென்றால் கோவில்களோ அங்கு காணும் எந்தச்சிலை வழிபாடுகளோ தேவையில்லை ஒதுக்குங்கள்என்று கூறவேண்டும் இது இவருக்கு நாத்திகப்பட்டத்தை லேசாகக்கொடுத்துவிடும். .

இன்னொன்று கண்ணை மூடிக்கொண்டு அம்மாஅப்பா சொல்வதை அப்படியே ஏற்று கடவுள்கள் எல்லோரும் இருக்கின்றனர் என்று மற்றவர் சொல்வதைக் கேட்காமல் பக்திமயமாக இருப்பது மூன்றாவது இந்த இரண்டு பகுதியிலும் சேராது நடுவில இருக்கும் என்னைப் போன்றவர்களும் உண்டு. அது கடவுள் ஒரு சக்தியின்வடிவம அதற்கு வேறு உருவங்கள் இல்லை.ஆனால்
கோவில்களும் வழிபாட்டு முறைகளும் மக்களுக்கு அவசியமானதொன்று. அவைஇருக்கட்டும். படிக்காத பாமர மக்களுக்கு பல நெறிகளைக் கூறி வழிகாட்ட இதைவிட சிறந்த வழி வேறு ஒன்றில்லை என்பது.

கடவுள் வழிபாட்டால் நன்மை அதிகமா தீமை அதிகமா?

இப்படி ஒரு கேள்வியைக்கேட்டால் நன்மைதான் அதிகமென்பேன். அவை என்னென என்பதை பட்டியலிட்டு கூற என்னால் முடியாது. தேவையென்றால் அந்தவிடயத்துக்கு வருவோம் இப்போது எனது ட்தலைப்பு காதலும் கடவுளும்.
சைவ சமயத்தில் பெரிய கடவுளாகிய சிவபெருமான் தனியாக இல்லை. பார்வதி என்ற பெண்ணுடன் இணைந்து காணப்படுகிறார் ஒரு சிவமும் சக்தியும் சேர்ந்த விதிமுறைக்குள் மிகப்பெரிய தத்துவமே அடங்கியுள்ளது. சிவ வழிபாட்டில் சின்னமாக சிவலிங்க பூசை காணப்படுகிறது இது தனித்த ஆண்குறி, பெண்குறியின் அடையாளம் அல்ல. அது தனித்த அந்த வகையானது மட்டுமேயானால் எப்போதோ தேய்ந்து மறைந்து அழிந்து போயிருக்கும்.என்று நான் எண்ணுகிறேன்

அது எம்மால் புரிந்துகொள்ள முடியாத பிரபஞ்சத்தின் காணும் சக்தியைத் பிரபாலித்து நிற்கிறது. அந்த அண்டத்தின் உருவாக்கம், பூமியின் வருகை, அதிலுள்ள உயிரினங்களின் ஆரம்பம் இவையுடன் பின்னிப் பிணைந்துள்ளது. நாம் காணாததொன்றை உண்மையோ பொய்யோ உரைக்கிறது இது எவ்வளவு நன்மையை தருகிறது என்பது முக்கியம்

உலகில் ஒரு ஆணில்லாமல் பெண்ணால் வாழமுடியாது. பெண்ணில்லாமல் ஆண் தனித்து வாழமுடியாது. முடியும் என்ற விதண்டாவாதம் வேண்டாம் எப்படி வாழ்வது? ஒருசாதரண உடல்நிலைகொண்டவரால் முடியாது. இந்த தாம்பத்தியம் இல்லையேல் அவர் காமம் உடலைக் கருக்க ஒன்று பைத்தியம் பிடித்துவிடும் நிலை ஏற்படும். அல்லது உடலில் நோய் ஏற்பட்டு சீக்கிரம் போய்விடுவார். விஞ்ஞான் ரீதியாகவே தாம்பத்யம் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளதாக கூறப்படுகிறது

ஒரு உறவின் பின் ஏற்படும் சாந்தியும் மன அமைதியும் மூளையை நற்சிந்தனைகள் செலுத்தக்கூடிய பக்குவமும் உடலின் சீரான இரத்த ஒட்டமும் அது எவ்வளவு முக்கியம் என்பது கல்யாணமான எல்லோருக்கும் புரியும். எனவே ஒன்றாக வாழ்வதற்கே ஆணும் பெண்ணும் உருவாக்கப்பட்டனர் அல்லது தானாக உருவாகியுள்ளது என்று சொல்பவர்கள் சொல்லிக்கொள்ளலாம். ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. ஆணை நோக்கி பெண்ணையும் பெண்ணை நோக்கி ஆணையும் கவரும்விதத்தில் உணர்ச்சிகளை உருவாக்கி காதல் எனும் தூண்டுதலை ஏற்படுத்தி அந்தக் காதலுக்காக உலகில் எதையுமே துறக்கத் தக்கதாக வெறி கொள்ளவைத்து பெற்றவர் ஊரையே பகைத்து வெறுத்தும் அவளே வேண்டும் என சிந்திக்கத் தக்கதாக இயங்கக்கூடிய விதத்தில் ஆக்கிவிடுகிறது இத்தக்காதல். இந்த விடயத்தை எமது இந்துசமயம் உள் வாங்கிக்
கொண்டது என்பது என் கருத்து அதாவது நிஜத்தை வாழ்வின் விதியை மறுக்காமல் ஏற்றுக்கொண்டது எமதுசமயம், அல்லது
இயற்கையின் தத்துவத்தை சரியான முறையில் புரிந்துகொண்டது எமதுசமயம்

காதல் இல்லாமல் வாழ்வு இல்லை ;அந்தக் காதலே வாழ்க்கை. வாழ்க்கையே காதல் என்று இருக்கும்போது அதைவிட்டு தனியே ஒரு வாழ்க்கை நெறிமுறைகளை போதனையை எடுத்துச் செல்ல முடியாது என்பது சமயக்கோட்பாடுகளை உருவாக்கியவர்களின்
சிந்தனையோ தெரியவில்லை. அதனால் கடவுளாக சிவனையும் சக்தியையும் சேர்த்து உருவாக்கி சிவனில் பாதி சக்தியென்றும், சிவனில்லாமல் சக்தி இல்லை சக்தி இல்லாமல் சிவனில்லை என்றார்கள்

(தொடரும்)
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2679
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Re: காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்)

Post by சிவா on Tue Sep 04, 2012 12:55 pm

கடவுளையும், மனிதனின் சராசரி வாழ்வையும் இணைத்து அனைவருக்கும் எளிதாகப் புரியும் வண்ணம் எழுதியுள்ளீர்கள் அண்ணா!

அருமை, நேரம் கிடைக்கும் பொழுது தொடர்ந்து எழுதுங்கள். உங்களால் மேலும் எம் மதத்தின் மீதும், எம் குடும்பத்தின் மீதும், எம் இனத்தின் மீதும் எங்களுக்கு பற்று அதிகரிக்கட்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்)

Post by kirikasan on Tue Sep 04, 2012 1:05 pm

@சிவா wrote:கடவுளையும், மனிதனின் சராசரி வாழ்வையும் இணைத்து அனைவருக்கும் எளிதாகப் புரியும் வண்ணம் எழுதியுள்ளீர்கள் அண்ணா!

அருமை, நேரம் கிடைக்கும் பொழுது தொடர்ந்து எழுதுங்கள். உங்களால் மேலும் எம் மதத்தின் மீதும், எம் குடும்பத்தின் மீதும், எம் இனத்தின் மீதும் எங்களுக்கு பற்று அதிகரிக்கட்டும்.

நன்றிகள் !நிச்சயமாக எழுதுவேன். கொஞ்சம் இதுபற்றி ஆராய்ந்தேன் ! புரிந்தது பாதி புரியாததுமீதி! சொல்ல முடிந்ததை சொல்லுவேன். மீண்டும் நன்றிகள்!
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2679
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Re: காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்)

Post by ராஜா on Tue Sep 04, 2012 1:06 pm

மிக அழகாக எளிய வகையில் உள்ளது உங்கள் கட்டுரை ஐயா , தொடர்ந்தும் எழுதினால் நல்லது நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்)

Post by kirikasan on Tue Sep 04, 2012 1:15 pm

@ராஜா wrote:மிக அழகாக எளிய வகையில் உள்ளது உங்கள் கட்டுரை ஐயா , தொடர்ந்தும் எழுதினால் நல்லது நன்றி

நன்றிகள்! சக்தியை சக்தி தரும்போது எழுத்துக்கள் தொடர்வதில் தடையிருக்காது! எழுதுவேன்! நன்றிகள்!
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2679
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Re: காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்)

Post by kirikasan on Thu Sep 06, 2012 12:07 am

2. ஆதி முதலான சக்தி

(இங்கே எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். தலைப்பை விட்டு தவறினாலும் பின்னர் அதற்குள் வருவேன்)

இங்கே எழுதும்போது மனதி ஏற்பட்ட எண்ணங்களை வடித்துளேன். தவறுகள் சுட்டிக்காட்டலாம்)

கடவுளின் காதலைப்பற்றி அடுத்த தொடரில் கூறுகிறேன் . இப்போது ஆதிசக்தி யிலிருந்து தொடங்கி என்மனக்கருத்துக்கலைப்பகிர்கிறேன்

இந்த பிரபஞ்சம் எப்படி வந்தது என்று எவருக்கும் தெரியாது. இப்படித் தானென்று ஊகித்துச் சொல்வதெல்லாம் சரியாக இருக்க வேண்டுமென்றும் இல்லை. ஆனாலும் அந்த ஊகங்கள் என்னவென்று பார்த்தால் ஆகமுதல் ஆரம்பம் ஒரு ஒளிவடிவமான அதி பிரகாசமான சக்தியொன்றே இருந்ததாகக் கொள்ளலாம். புராணங்களும் ஆதிசக்தி ஒளியின் வடிவென்றே கூறுகிறது. காந்தஅலைகள் செறிந்த அதி புத்திசாலி அமைப்பான இந்த சக்தியே எமது உலகின் கர்த்தாவாக இருக்கவேண்டும் . அது இந்த பிரபஞ்சத்தில் எம் ஆராய்வு எல்லைக்கு அப்பாற்பட்டு இருந்து எம்மைக் கட்டுப்படுத்து கிறதோ என்பது ஒரு ஊகம்.. இந்தஒளிவடிவானது. மிகப் பிரமாண்டமான பிரகாசம் கொண்டு கோடிகோடி சூரியன்கள் சேர்ந்ததுபோன்று, கண்களால் பார்க்கமுடியாத அளவுமிகப் பிரகாசமாக இருக்கவேண்டும். இதைப் பார்த்தாலே கண்கள் குருடாக்கி விடும் சக்திவாய்ந்ததாக இருக்கலாம்... ( இதனால்தான் இன்றும் கடவுளைக் கண்களால் காண முடியாமல் இருக்கிறதோ .என்னவோ???)

கிறிஸ்தவ மதத்தை எடுத்துக் கொண்டாலும் மாபெரும் வல்லமை வாய்ந்த ஒளியாக பரலோகத்தில் இருப்பவரே பரிசுத்த ஆண்டவர் என்கிறது.. ஆகவே ஒளியொன்றே எம்மை தாங்கும் இவ்வுலத்தின் ஆதிமூல கர்த்தாவாக இருக்க வேண்டும் வேறு எதுவாகவும் இருக்க முடியாது. இன்றும் பிரபஞ்சத்தில் விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் மகாபெரும் நெருப்பு ஜுவாலைகளும் ஒளித்திரள்களும் வெடித்துத் சிதறும் சூரியக் குஞ்சுகளும் நட்சத்திரங்களுமாகப் பெரும் நெருப்பு வீச்சுக்களையே படம்பிடித்துக் காட்டுகிறார்கள்.
எம் அறிவுக்கு எட்டியதே இதுவென்றால் எம் பார்வைக்கு எட்டாத இடத்தில் எங்கோ எம்மைஉருவாக்கிய சக்திஎனும் மாபெரும் ஜோதி பிரபஞ்சத்தில் எந்ததிக்கில் இருக்கிறதோ அது எப்படி இருக்குமோ எவ்வளவு பிரமாண்டமானதுவோ அறியோம்.

இந்த மாபெரும் சக்தியே (இந்தசக்தி வேறு சிவனின் சக்தி வேறு!) நாளடைவில் தீக்குளம்பின் கூறுகளாகச் சிதறிக் குளிர்ந்து பூமி மற்றும் கோள்கள் எல்லாம் உருவாகியும் அண்டங்களில் நட்சத்திரங்களையும் சூரியக் குழந்தைகளையும் காந்த சக்தி வலயங்களுடன் கூடி சுழற்சியையும் உருவாக்கி யிருக்கலாம்
. இரகசியம் என்ற் ஆங்கில நூலில் rhonda Byrne யின் கூற்றின்படி மகா சக்தியான ஓர் காந்த வடிவம் வானத்திலே காணப்படுவதாகவும் அண்டவெளியிலிருந்து காந்த அலைகளூடாக எம்து மூளையோடு அதற்கு தொடர்பு கொண்டு காணப்படுவதாகவும், எமது மூளையின் காந்த அலைகளை அதுபுரிந்து அதன் விருப்பப்படி வாழ்வின் முறைகளை சூழலை மாற்றியமைத்துக் கொடுப்பதாகவும் கூறுகிறார். அதனால் நாம் எது அடிக்கடி எண்ணுகிறோமோ அது நடக்கும்..என்றவர் நல்ல எணங்களோடு இருக்கும்போது, உங்களுக்கு நல்லதே நடக்கும்; தீயது நடக்கக் கூடாது எனப்பயந்தாலும் அதிகம்

தீமைகளையே எண்ணுவதால் தீமையே நடக்கும் என்று எழுதியுள்ளார்.

சக்திக்கு எப்போதும் இயக்கம் உண்டு. எமது இந்த ஆதிசக்தியானதும் அசைந்து கொண்டிருக்கிறது. அண்டவெளியில் பாருங்கள். எல்லாமே அசைந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்தப்பிரமாண்டமான கோளங்களை லாவகமாகச் சுற்றி ஏதோ ஒருசக்தி கட்டுபடுத்துகிறது என்று தெரிகிறது. தங்கள் நிலையிலிருந்து தவறிவிடாமல் சுழன்று கொண்டிருக்கின்றன.

இந்த அண்டத்தின் சூரியனைச் சுற்றும்கோளங்களின் சுழற்சியைபோலவே அணுவை எடுத்துப் பார்த்தாலும் இலத்திரன்கள் சுற்றுகின்றன. அதுபோல் எமது உடலிலும் இழையங்களின் உள்ளே மிகச் சிறிய cellஐ ஆரய்ந்தால் அங்கும் அதே சுழற்சி இருக்கிறது

எம்து உடலில் இரத்தம் சுழன்று கொண்டிருக்கிரது சுவாசம் வெளியே வருவதும் உள்ளே போவதுமாக சுழற்சியாக இயங்குகிறது. ஒரு சுழற்சியின் வடிவமே வாழ்க்கை.

அப்படி நிலைத்து நிற்காது காற்றைப்போல் அசையும் இந்த அண்டத்தின் பொறிமுறை அசைவேயாகும். நாம் பிறக்கிறோம், தந்தையின் அணுவும் தாயின் முட்டையும் சேர்ந்து கருவாகிறது அதன்பின் வளர்ச்சி. இதன்போது மூளை உருவாகிறது. மனிதமாகிறது இது தானாகவே நடக்கிறதா? அப்படித் தெரியவில்லையே! எல்லாமே ஒரு அட்டவணை வைத்துத் தயாரிப்பதுபோல் ஒழுங்காக நடக்கிறதே என்னைபொறுத்தவரையில் இதற்கு எங்கிருந்தோ ஒரு அறிவுறுத்தல் உண்டு இப்படி நடக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு அதற்கு இந்த சக்தியே மூலாதாரம். இந்த காந்த அலைகளின் இழுப்பு இல்லையென்றால் சூரியனை உலகம் சுற்ற வேண்டியதில்லை. பூமியில் நாம் ஒட்டியிருக்க வேண்டுமென்பதில்லை. அண்ட வெளிக்குள் விழுந்து விடுவோம் பூமி உடைந்து சிதறலாம் , சூரியன் அணைந்து போகலாம்.

இனி மனிதனின் எண்ணங்களைப் பார்ப்போம். நினைவுகள்தான் வாழ்க்கை. உலகில் நாம் வாழுகிறோம் என்றால் அந்த வாழ்க்கை ஐம்புலன்களால் உணரப்படும் மின் அலைகளின் கலவையான எண்ணங்களே. அந்த மின்னழுத்த மாற்றம் மூளையில் அனுபவங்களைக் ஏற்படுத்துகிறது. அவள் அழக்காக இருக்கிறாள். இது எம்மது மூளையில் தோன்றும் மின்னேற்ற விளைவுகளே! ஒருவருக்கு அழகானது மற்றவருக்கு இல்லாமல் போகலாம். இந்த மின்சார உணர்வுகள் கெட்டு மூளையின் மின்னேற்றம் இறங்கிவிட்டால் மிஞ்சுவது வெறு பிணம் மட்டுமே அதைத் தூக்கி எரித்துவிடவேண்டியதுதான் அந்த மின்சாரத்தை கருவில் சிசுவில் ஏற்றுவது யார்? சக்தியா வானத்தின் காந்தமின் அலைகளா . நிச்சயமாக !


(தொடரும்)


Last edited by kirikasan on Sun Sep 09, 2012 10:42 am; edited 1 time in total
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2679
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Re: காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்)

Post by சிவா on Thu Sep 06, 2012 9:03 am

/// மகா சக்தியான ஓர் ஒளிவடிவம் வானத்திலே காணப்படுவதாகவும் அண்டவெளியிலிருந்து காந்த அலைகளூடாக எம்து மூளையோடு அதற்கு தொடர்பு கொண்டு காணப்படுவதாகவும், எமது மூளையின் காந்த அலைகளை அதுபுரிந்து அதன் விருப்பப்படி வாழ்வின் முறைகளை சூழலை மாற்றியமைத்துக் கொடுப்பதாகவும் கூறுகிறார். அதனால் நாம் எது அடிக்கடி எண்ணுகிறோமோ அது நடக்கும்..என்றவர் நல்ல எணங்களோடு இருக்கும்போது, உங்களுக்கு நல்லதே நடக்கும்; தீயது நடக்கக் கூடாது எனப்பயந்தாலும் அதிகம் தீமைகளையே எண்ணுவதால் தீமையே நடக்கும்

Original source: http://www.eegarai.net/t88949-topic#ixzz25enEIHX0
///


எண்ணம் போல் வாழ்வு என்பது இதனால்தானோ.

மிகவும் நன்று, தொடருங்கள் அண்ணா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்)

Post by kirikasan on Sun Sep 09, 2012 10:37 am

3 வது பகுதி

இருட்டாக இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி அதில் எங்கும்நிறைந்த ஒளியாக வியாபித்த ஆதிசக்தியானது மகப்பெரிய சக்தியென்பதில் ஐயமில்லை

விஞ்ஞானக் கூற்றின்படி இந்த மாபெரும் தீ பிரமாண்டமே சூனியத்தில் வெடித்து சிதறியே பிரபஞ்சக் கோள்கள் உருவாகியது என்று கூறுப்படுகிறது அந்த சக்தியிலிருந்து பிறந்துதான் தான் அண்டத்தில் காணும் அனைத்துமாகும். அப்படியே பூமியும் உருவாகியது அல்லது அந்த சக்தி உருவாக்கியது. அதனால்தான் இந்தபூமிக்குள் இன்னும் அந்த சக்தியான நெருப்பு காணப்படுகிறது. இந்த சக்தியே அண்டமெங்கும் கோள்கள் சுற்ற விதிமுறைகளை வழிவகுத்தது. அதே விதிமுறையை வைத்து உலகின் பொருட்களாக மனிதம் உட்பட்ட உயிரினங்கள் எல்லாம் படைத்தது.

இரகசியம் என்ற நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது
இதையே சற்று மாறுதலாக நான் பார்க்கிறேன். அதாவது எமது மூளையில் ஏற்படும் எண்ணங்களும் அதற்கேற்ப மாறும் மின்னேற்றங்களும் அதன்விளைவாக மூளை கொடுக்கும் கட்டளைகளையும் பிரபஞ்சத்தில் அந்த சக்தியை சென்றடைகின்ற்ன. அங்கிருந்து எங்கள் வேண்டுதலுக்கு பதில் கிடைக்கிறது ஆமாம் இப்படித்தான் அதன் அமைப்போ அந்த பிரபஞ்சத்தின் சக்தி எங்கள் மூளையைப் போலவும், பிரபஞ்சம் என்கிற உடலில் அதன் அங்கங்களாக கோள்கள் சூரியன்கள், உலகம், நாம் எல்லாமுமே இருப்பதாகவும் இவை ஒன்றோடொன்று தொடர்பு கொண்டனவாகவும் கூறலாமோ?.

நாம் ஒரு முள்ளை மிதிக்கும்போது ஏற்படும்வலி நரம்புவழியாக ஓடி மூளைக்கு தகவல் கொடுப்பதுபோல் எமது எண்ணங்கள் அண்டவெளியூடாக அந்த சக்தியை அடைகிறது. அங்கிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டு எம்மைவந்து அடைந்து வாழ்க்கையில் போக்கை
மாற்றுகிறது அந்தக்கட்டளையே விதி என்கிறோம். ’முள்ளை மிதித்த காலைத் தூக்கு முள்ளைக் காலிலிருந்து எடு’ என்னும் விதியைப்போல..

ஆகவே இரகசியம் என்கிற நூலின் கருத்தை ஒட்டியதாக எனது எண்ணங்களும் திகழ்கின்றன. ஆகவே ஒரு மனிதனின் உடலும் மூளையும் போலத்தான் அண்டவெளியும் ஆதிசக்தியும் உள்ளன..ஒரு தடவை விஷ்ணுவுக்கும் பிரமனுக்கும் யார்பெரிது என்று போட்டிவந்தபோது சிவன்
அண்டம் முழுதாய் வியாபித்து நின்று அடிமுடி தேடிவரச் செய்தாரே! அதனிலும் பெரியது இந்தசக்தி.

சரி இனி தலைப்பை ஒட்டி கூறவிளைகிறேன்.

நான் வேதம் புராணம் எதுவும் படிக்கவில்லை. ஆனால் புராணத்தைக் கண்டவர்கள் சொன்னதைக் கேட்டு எழுதுகிறேன் பிழை இருப்பின் மன்னிக்க

ஆதிசக்தி உலகில் முதல் கடவுளாக இருந்தது நடந்தமாற்றங்கள் சில அறிந்தேன். காலங்களை நான்கு யுகங்களாகப் பிரித்து முதல்
யுகத்தில் மனிதர்கள் காணும் படியாக சக்தி இருந்ததாகவும் அடுத்தயுகத்தில் மனிதருக்கும் சக்திக்குமிடையில் சிறு இடைவெளி ஏற்பட்டதாகவும் மூன்றாவது யுகத்தில் இன்னும் பெரிதாகி, இப்போது கலியுகத்தில் அந்த சக்தி, காளி (இரண்டுமே kali) உருவெடுத்து நிற்பதாகவும் மனிதரின் கொடுமைகளால் உலகை பிரளயத்தில் அழிக்கும் முடிவைசெய்வாள் என்றும் பல கதைகள் உண்டு முடிந்தால் இன்னொரு சமயம் அதைப்
பார்ப்போம்

ஆதிசக்தியானது பிரபஞ்சத்தை ஆளுமைகொண்ட பெரும்சக்தியாக விளங்கியது. பிரபஞ்சத்தில் உருவாக்கம் மாறுதல் அழிப்பு போன்றவற்றில் மாபெரும் சக்தியாக விளங்கிய ஆதிசக்தி தன்படைப்புக்களான மும்மூர்த்திகளையும் அழைத்து பிரமனிடன் ,” நீ இதுவரை ஏதும் செய்யும் வலிமையற்றவனாக இருந்தாய். இன்று முதல் இந்த உலகின் படைப்பு தொழிலை நீயே பொறுப்பேற்கிறாய் என்று கூறி தன் சக்தியிலிருந்து ஒரு சிறு பாகத்தை பிரித்து எடுத்து சரஸ்வதியை உருவாக்கி , “இதோ உனக்கு வலிமை சேர்ப்பதற்காக என்னுடைய ஒரு பாகத்தை உனக்கு துணையாக அனுப்பிவைக்கிறேன்.

இருவரும் ஒன்றுசேர்வதால் மாபெரும் சக்தியைப் பெறுகிறீர்கள். அதன்மூலம் ஆக்கும் தொழிலை தடையின்றிப் பிரபஞ்சம் முழுதும் நிறைவேற்றுக” எனப் பணித்தது. அதேபோல விஷ்ணுவை அழைத்து இலக்குமியை தன்னிலிருந்து பிரித்தெடுத்து அவரிடம்
ஒப்படைத்து இருவரும் ஒன்றுசேர்ந்து காத்தல் தொழிலை செய்யும்படியும், சிவனிடம் அழித்தல் வேலையை ஒப்படைத்து சக்திபெறுவதற்காக
மற்றையவர்களைப்போல சக்தியை உருவாக்கி சிவனிடம் வழங்கியதாவும் கூறப்படுகிறது..

இதிலிருந்து ஆண்களுக்கு பெண்ணின்மூலமாகவே சக்தி ஏற்படுவதாகவும் அவளே படைத்தல் தொழிலுக்கு உதவியும் (கருப்பையில் உருவாக்கியும்) காத்தலுக்குரிய சக்தியை வழங்குவதாகவும் அழித்தலுக்கும் உதவுவதாகவும் கொள்ளலாம்.. அதன்படி ஆணும்பெண்ணும் சேரும் சக்தியில்தான் உயிர்களை உருவாக்கமுடிகிறது. காப்பற்ற முடிகிறது. .அழிவுக்கு ஏதும் சொல்ல முடியவில்லை. தாமே அழிந்து புதிய
வரவுகளுக்கு இடம்கொடுப்பதுதான் இதன் தத்துவமோ தெரியவில்லை

(தொடரும்)
***************************

avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2679
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Re: காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்)

Post by சிவா on Sun Sep 09, 2012 10:52 am

மூன்றாவது பகுதிக்கு நன்றி அண்ணா! இன்னும் சிறிது நேரத்தில் படிப்பேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்)

Post by kirikasan on Sun Sep 09, 2012 11:44 am

@சிவா wrote:மூன்றாவது பகுதிக்கு நன்றி அண்ணா! இன்னும் சிறிது நேரத்தில் படிப்பேன்!

மகிழ்ச்சி படித்துவிட்டுக் கூறுங்கள். தவறுகள் இருந்தால் கூறுங்கள்!!
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2679
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Re: காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்)

Post by ராஜா on Mon Sep 10, 2012 11:02 am

ஆதிபராசக்தியின் சக்தி அதாவது பிரபஞ்சத்தின் அளவு நாளுக்கு நாள் விரிவடைந்துகொண்டே இருக்கிறது என்று படித்துள்ளேன் அண்ணா, எளியமுறையில் அனைவருக்கும் புரியும் படி விளக்குகிறீர்கள் தொடர்ந்து வழங்குங்கள்.

பிரபஞ்சத்தை பற்றியும்ன் அதன் சக்தியை பற்றியும் நினைக்க ஆரம்பித்தால் நாம் எம்மாத்திரம் என்ற எண்ணம் வந்துவிடும்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்)

Post by kirikasan on Tue Sep 11, 2012 3:30 am


4 சிவன்


இதே சம்பவம் வேறுவிதமாகவும் கூறப்படுகிறது. அதாவது ஆதிசக்தி முதலில் பிரபஞ்சத்தின் கட்டுமாணப் பணிகளுக்கென்று பிரம்மாவை நியமித்தார் என்றும் பிரம்மா புதியனவற்றை நிர்மாணித்து அண்டத்தைக் கட்டிஎழுப்பும்போது ஆக்கம் மட்டுமே இடம் பெற்றதால் இடநெருக்கடி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பிரச்சனைக்கு தீர்வாக ஆதிசக்தி ஒருபக்கமாக அழித்தலை கைக்கொள்ளும்படியும் அழித்தலின்றி சிருஷ்டி நடைபெற முடியாது என கூறியதாகவும் அதனால் பிரம்மா உதவிக்காக ஆக்கும் தொழிலைக் கவனிக்க பிரஜாபதி என்கிற தக்சனையும் படைத்ததாகவும், படைத்தவற்றை பாதுகாத்துக் (பராமரிப்பு) கொள்ளும் விடயத்தை விஷ்ணுவை உருவாக்கி அளித்ததாகவும் சிவனை தோற்றுவித்து அழிக்கும் வேலையை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது

இந்த மூவரில் சிவன் அழித்தலில் ஈடுபட்டிருந்ததால் அவர் சுத்தமாக இருக்க முடியவில்லை அல்லது அப்படி அவருடைய புகழைக்கண்டு பொறாமையால் பேசிக்கொண்டார்கள் என்று தெரிகிறது. மற்றையவர்கள் தத்தம் அரண்மனைபோன்ற வாசஸ்தலங்களில் வாழ்ந்தபோது சிவன் கைலாயம் எனப்படும் இமயமலை காட்டுக்குள்ளே வாழ்ந்துவந்தார். அந்த சூழலில் காணப்படும் குளிரில் தவம் செய்வதிலேயே அதிக நேரத்தை செலவழித்தார். மற்றவர்கள் கேலியாக சுடலையில் திரிபவரென்றும் (அழித்தலின்பின் அவ்விடம் மயானமாகக் காட்சி தரும்) சாம்பலை அள்ளிப்பு பூசுபவர் என்றும் (அழித்தலால் அவ்விடம் சிதையும்பொது எழுந்த தூசிகள் உடம்பில் ஒட்டிக் காணப்படும்.) தலைவாரிகொள்ளாதவர் என்றும் (தூசி படிந்த தலையை வாரிக்கொள்வது கஷ்டம்) கணங்கள் என்னும் பேய்களோடு நட்பு கொண்டவர் என்றும் கூறுவர். (இந்த கணங்களே அழிவுசெய்வதற்கான கையாட்கள்)

அழகான ஆடைகள் அணிவதில்லை. தங்க நகைகள் அணிவதில்லை, அரையில் சுற்றிய ஒரு சிறிய துண்டுடன் காட்சியளிப்பார். ஆனால் அதிக சக்தி வாய்ந்தவராக இருந்தார் அவருக்கு மூன்றாவது கண் இருந்தது. அதைஅழித்தலுக்கு தீயை உருவாக்கப் பயன்படுத்துவார். நன்றாக நடனம் ஆடுவார். அதில் மிகுந்த விருப்பம் கொண்டவராகக் காணப்பட்டார்

அடிக்கடி நடனமாடுவர் அவர் பேய்களுடன் சேர்ந்து மயானத்தில் கூத்தாடுவார் என்று கூறியபோதும் உன்மையில் அழித்தலைச் செய்துவிட்டு அந்த இடத்தில் வேலையாட்களுடன் சேர்ந்து துள்ளிக்குதிப்பார் எனத்தெரிகிறது. இவருடைய செயல்திறனும் சக்தியும் இவருக்கு புகழை வரவழைத்தது. அழித்தலில் ஈடுபட்டபோதும் இவருடைய நேர்மை நியாயமான, எதிலும் பற்றற்ற வீரப்போக்கு அனைவரையும் கவர்ந்தது.இவருடைய கீர்த்தி பிரபஞ்சம் எங்கும்பரவி மிகப்புகழ்பெற்ற கடவுளாக திகழ்ந்தார். இது இவரோடு சமமாக பிரபஞ்சத்தில் உருவான தக்சன் என்கிற பிரஜாபதிக்கு எரிச்சலை வரவழைத்தது

பிரஜாபதியினுடைய மனைவி பெயர் பிரஜுதி என்றும் அறியக்கிடக்கிறது. இவர்களுக்கு 60 பெண்பிள்ளைகள் இருந்தார்கள் அவர்களில் ஒருத்தியான சக்தி (sati) மிகவும் அழகானவளாக பார்த்தோர் வியக்கும்படியான தோற்றத்துடன் காணப்பட்டார்.
அரண்மனையில் வாழ்ந்தபோதும் பிரபஞ்சம் முழுவதும் புகழ்பெற்ற சிவனின் கீர்த்தியைக் கேள்வியுற்று அவரின்மேல் அளவற்ற காதல் கொண்டாள் சக்தி.இந்தக் காதலை தன் எதிரியான சிவனின் மேல் ஏற்பட்டதைக் கண்டு முற்றாக எதிர்த்தான் தக்சன்.

தொடரும்
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2679
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Re: காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்)

Post by ராஜா on Tue Sep 11, 2012 11:08 am

சிவபுராணம் அருமை தொடருங்கள் .

எனக்கு சிவபுராணம் படிக்கவேண்டும் என ஆசை , ஆனால் உரைநடை வடிவில் எங்கு கிடைக்குமென தெரியவில்லை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum