ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

அவளுக்கு அறியாத வயசு ...!!
 SK

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

லிப்டு கால்கட்டு ...!!
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முகமூடி - விமர்சனம்

View previous topic View next topic Go down

முகமூடி - விமர்சனம்

Post by Guest on Fri Aug 31, 2012 10:06 am

அதாகப்பட்டது... :
ஸ்பைடர்மேன், பேட் மேன் என ஆங்கிலத்தில் பல சூப்பர் ஹீரோக்கள் இருந்தாலும் தமிழில் அத்தகைய சூப்பர் ஹீரோ கேரக்டர்கள் இதுவரை இல்லை எனலாம்..அந்த வகையில் தமிழில் முதல் சூப்பர் ஹீரோப் படம் என்ற பெருமையுடன், தமிழில் குங்பூ கலையை மையமாக வைத்து, யுடிவி தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் இன்று வெளியாகும் படம் முகமூடி.ஸ்டோரி லைன் :
ப்ரூஸ் லீ என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஹீரோ குங்பூ மேல் உள்ள மோகத்தால் (கவனிக்க: குஷ்பூ அல்ல குங்பூ) வேலைக்குச் செல்லாமல் வெட்டியாக ஊரைச் சுற்றுவதோடு கமிசனர் நாசரின் பெண்ணான ஹீரோயினையும் சுற்றுகிறார், ஒன் சைடு லவ் தான். அதே நேரத்தில் ஊரில் பல இடங்களில் ஒரு குரூப் கொலை/கொள்ளையில் ஈடுபடுகிறது. அதைப் பிடிக்கும் தீவிர முயற்சியில் நாசர் இறங்குகிறார். ஹீரோயினை ஒன் சைடாக லவ் பண்ணும் ஹீரோ, ஹீரோயினை எப்படி லவ் பண்ணுவது என்று யோசிக்கையில், ‘பேண்ட்டுக்கு மேல் ஜட்டி போட்டுக்கொண்டு போனால் லவ் பீறிட்டுக்கொண்டு கிளம்பும்’ என்ற விபரீத ஐடியா தோன்றுகிறது. எனவே ஸ்பைடர் மேன் கெட்டப்பில் சிவப்புக்கலர் ஜட்டி போட்டுக்கொண்டு ராத்திரி நேரத்தில் போகிறார். (பின்னே, பகல்ல அப்படிப் போனா நாய் கடிச்சுடாது? நமக்கு இருக்கிறதோ ஒரே ஒரு ஹீரோ...!).

அப்போது அந்த ஏரியாவில் திருட வரும் கொள்ளைக்கார கும்பலில் ஒருவனைப் பிடித்து போலீஸிடம் ஒப்படைக்கிறார். யார் நீ என்று போலீஸ் கேட்க, முகமூடி என்று சொல்லி, அதே பெயரில் ஃபேமஸ் ஆகிறார். மீண்டும் ஹீரோயினை பார்க்க சாதா உடையில் (பத்திரமாக!) செல்லும்போது, நாசரை வில்லன் குரூப் சுட்டுவிட, பழி ஹீரோ மேல் விழுகிறது. ஹீரோவும் வில்லன் குரூப் ஆள் என போலீஸ் தேடுகிறது. ஹீரோ தான் குற்றவாளி அல்ல என்று போலீஸிடம் நிருபித்தாரா? வில்லன் குரூப்பை துவம்சம் செய்தாரா? ஹீரோயினிடம் தான் தான் சிவப்பு ஜட்டி முகமூடி என்று நிரூபித்து காதலில் ஜெயித்தாரா என்பதே கதை.

திரைக்கதை :
படத்தின் ஓப்பனிங் கொள்ளை சீனிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார்கள். கொள்ளைக்கார கும்பல் பற்றியும், அதைத் தேடும் போலீஸ் பற்றியும் அறிமுகம் செய்துவிட்டு, ஹீரோ போர்சனுக்கு கதை நகர்கிறது. முதல் ஃபைட் சீனிலேயே குங்பூ வீரனாக ஹீரோவைக் காட்டுவதால், சூப்பர் ஹீரோவாக ஜீவாவை எளிதில் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஹீரோவுக்கு ஒரு காதல் என கமிசனர் வீட்டிற்கு அதன் மூலம் லின்க் கொடுத்து, விரைவாகவே ஹீரோவுக்கும் வில்லன் குரூப்புக்கும் இடையே நேரடி மோதலுக்கு படம் வந்துவிடுவதால், முதல் பாதி ஜெட் வேகத்தில் பறக்கிறது.

ஈவிரக்கமற்ற கொள்ளைக்கும்பல் - பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ் - களமிறங்கும் சூப்பர் ஹீரோ என படம் சூடாகும் நேஅத்தில் இண்டர்வெல் வருகிறது. அதன்பிறகு ஹீரோ, ஏதோ செய்யப்போகிறார் என்று பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. மொத்த கொள்ளைக்கூட்டமும் யார் என போலீஸே கண்டுபிடித்துவிடுகிறது. அதற்கு உடந்தையான போலீஸ் அதிகாரி மூலம் எல்லா உண்மைகளும் போலீஸே தெரிந்துகொள்கிறது..ஹீரோ ஒன்றும் செய்யாமலேயே எல்லாம் சுபமாக முடியப்போகும் நேரத்தில், வில்லன் நரேன் ஹீரோயின் உட்பட சில குழந்தைகளை கடத்தி வைத்துக்கொண்டு, ’முகமூடி எங்கள் தங்கக்கட்டிகளோடு நேரில் வந்தால் தான் பணயக்கைதிகளை விடுவிப்போம்’ என்று அந்தக்கால நம்பியார்த்தனமான கோரிக்கையை வைப்பதிலேயே படம் புஸ்ஸாகிவிடுகிறது. ’யூ டூ மிஷ்கின்?’ என்று கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால் படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் அட்டகாசம். முதல் சீன் முதல் இண்டர்வெல் வரை படம் பிசிறு தட்டாமல், நிச்சயம் ஹிட் தான் என்று நினைக்க வைக்கிறது. மிஷ்கினின் வழக்கமான ‘கால் க்ளோசப்’களை இங்கே குங்பூவுக்கு பயன்படுத்தியிருப்பதால், ரசிக்க முடிகிறது. ஏற்கனவே இதே மாதிரி சூப்பர்ஹீரோப் படங்கள் ஆங்கிலத்தில் வந்துவிட்டாலும், படத்தில் குங்பூ கான்செப்ட்டைக் கலந்ததன் மூலம் தனித்துத் தெரிகிறது முகமூடி. யுத்தம் செய் படத்தை விட, முகமூடி ஸ்பீடு தான்

ஜீவா :
இந்த படத்திற்காக ஆறுமாதம் ஜீவாவும் நரேனும் குங்பூ கத்துக்கிட்டதாக செய்தி வெளியானது. அது உண்மை தான் என்று படம் பார்க்கையில் புரிகிறது. சூப்பர் ஹீரோ கேரக்டருக்குப் பொருந்தும் வண்ணம் உடம்பில் முறுக்கேற்றி, ஃபைட் சீன்களில் நிறையவே ரிஸ்க் எடுத்து கலக்குகிறார் ஜீவா. காதல் காட்சிகளிலும் வழக்கமான குறும்புக்கு பஞ்சமில்லை. ஒரே நேரத்தில் வீட்டுக்கு தண்டச் சோறாகவும், ஊருக்கு சூப்பர்மேனாகவும் மாறும் கேரக்டருக்கு நன்றாகவே பொருந்திப் போகிறார் ஜீவா.

குஜிலி :
இதிலும் பூஜா ஹெக்டே என்ற தேறாத கேஸ் ஒன்று தான் ஹீரோயின். நல்லவேளையாக அதிக காட்சிகள் இல்லை. தமிழ் சினிமாவிற்கு சீக்கிரமே நல்ல ஹீரோயின்கள் கிடைக்க பிரார்த்திப்போம்.
நரேன்/செல்வா :
நரேன் இதில் வில்லனாக நடித்திருக்கிறார். ஆரம்பக்காட்சிகளில் பயங்கர வில்லனாக தோன்றும் அவர், பெண்மை கலந்த நடையாலும்/பேச்சாலும் டம்மியாகத் தெரிகிறார். ஜீவாவின் மாஸ்டராக வரும் செல்வா, அந்த கேரக்டருக்கு ஒத்துவரவில்லை. புரோட்டா மாஸ்டரைவிடவும் பலவீனமானவராக அவர் இருப்பதால், மாஸ்டர் கேரக்டருக்கு வேறு ஸ்ட்ராங்கான ஆளைப் போட்டிருக்கலாம்.

வசனம் :

’புரூஸ்லி யார் மாதிரியும் ஆகணும்னு நினைக்கலை..தான் என்னவா ஆக நினைச்சாரோ அப்படியே ஆனார். அதனால நீயும் அவர் மாதிரி வரணும்னு நினைக்காதே..உனக்கு என்ன ஆகத் தோணுதோ அப்படி ஆகு’ என்பது போன்ற பல நல்ல வசனங்கள் நம்மைக் கவர்கின்றன. ஹீரோ தான் ஒரு ஐ.டி.டீம் லீடர் என ஹீரோயின் தோழியிடம் அளந்துவிடும்போது, ஹீரோவின் அப்பா வந்து பேசும் டயலாக் அட்டகாசம். சிரிப்பில் தியேட்டரே அதிர்கிறது.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:


- மிஷ்கினின் ஃபேவரைட் கேமிரா ஆங்கிள்ஸும், தனித்துவமான காட்சியமைப்பும்

- குங்ஃபூ ஸ்டைல் சண்டைக்காட்சிகள்

- ஜீவா

- ஸ்டைலிஷான மேக்கிங். நச்சென்ற ஒளிப்பதிவு (சத்யா)

- சண்டைக்காட்சிகளில் வில்லன் ஹீரோ/மாஸ்டரை உணர்ச்சிவசப்பட வைத்து, அடித்து வீழ்த்துவது.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- இண்டர்வெல் வரை பெப்பை ஏற்றிவிட்டு, கடைசியில் சொதப்பியது

- நரேன் தான் வில்லன் என்ற சஸ்பென்ஸை உடனே, சப்பென்று உடைத்தது

- 9 மாதத்திற்கு ஒரு மாநிலம் என திட்டம் போட்டு, திருடும் கும்பல் என்று சொல்லிவிட்டு, அவர்கள் பெரிய குங்பூ ஸ்கூலை நடத்துவதாகவும், பப்ளிக் முன்னிலையில் போட்டி நடத்துவதாக காட்டியிருப்பது.

- கிளைமாக்ஸ் சண்டையில் ஹீரோவின் தாத்தா கோஷ்டி செய்யும் நகேஷ்காலத்து காமெடி..என்ன கொடுமை சார் அது!

- படத்தின் தரத்துடன் ஒட்டாத கிளைமாக்ஸ் காட்சியும், அதற்கான லீடும்

- மிஷ்கின் யதார்த்ததையும் விட முடியாமல், சூப்பர் ஹீரோயிசத்துக்குள்ளும் முழுக்க போக முடியாமல் ரெண்டும் கெட்டானாய் தவித்திருக்கிறார். நம்பக்கூடியவகையில் காட்சிகளை அமைப்பதற்கான கதை இதுவல்ல. ஹீரோ கடைசிவரை சாதாரண மனிதனாகவே போராடுவதால், ஜட்டி வித்தியாசத்தைத் தவிர இதுவும் வழக்கமான படம் தானோ என்று எண்ணவைக்கிறது.

அப்புறம்....:

- கே-யின் இசையில் பார் ஆந்தம் பாட்டு நன்றாக இருக்கிறது. பாடல்களைவிட பிண்ணனி இசையில் அதிக உழைப்பு தெரிகிறது.

- தனித்தனிக் காட்சிகளாகப் பார்த்தால், நீட்டாக இருக்கிறது. மிஷ்கினும் இன்னொரு பார்த்திபன் ஆகிவிடுவாரோ?

- இது எந்தப் படத்தின் காப்பி என்று அடுத்து விவாதம் ஆரம்பிக்கும் என்று நம்புகிறேன்..இருந்தாலும், ஸ்பைடர்மேன் - பேட் மேன் - அயன்மேன் எல்லாம் கான்செப்ட் படி ஒன்றுதான் என்றாலும், அவை முந்தையதன் காப்பி என்று நாம் சொல்வதில்லை..எனவே இந்தப் படத்தையும் விட்டுவிடலாமே!

- நந்தலாலா படம் தோற்றதுக்குக் காரணமே பதிவர்கள்தான் என்று குற்றம் சாட்டினார் மிஷ்கின். சித்திரம் பேசுதடி-அஞ்சாதே மாதிரி படம் கொடுத்தால், நாங்கள் ஏன் குறை சொல்லப் போறோம்?

பார்க்கலாமா? :

- முக்கால்வாசிப் படம் வரை பார்க்கலாம் (மிஷ்கின் / ஜீவாவுக்காக!)
--
சென்கோவி வலை பூ

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: முகமூடி - விமர்சனம்

Post by Guest on Fri Aug 31, 2012 6:56 pmமுகமூடி -சினிமா விமர்சனம்


நாட்ல முகமூடி போடாத கொள்ளைக்காரர்கள் நிறைய பேர் இருக்காங்க, இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வர் ,பிரதமர்கள், என் நீளும் பட்டியல்கள். ஆனா பாருங்க அவங்க கிட்ட அதிகாரம், அரசியல் செல்வாக்கு, அரசாங்க பாதுகாப்பு, ஒத்துழைப்பு இதெல்லாம் இருக்கு.. சோ அவங்களை ஒண்ணும் பண்ண முடியாது.. போலீசோட வேலை என்ன? அஞ்சு பத்து திருடுனவன், பேங்க்ல கொஞ்சமா கொள்ளை அடிக்கறவன் இவங்களைத்தானே பிடிக்க முடியும்?கோடிக்கணக்குல ஊழல் பண்ணுனவங்க வாய்தா ராணிகளாகவும், நம்ம குடும்பத்தை தவிர வேற யாருக்கும் தமிழ் நாட்டின் சொத்து போயிடக்கூடாதுன்னு நினைக்கும் மனசும், , மற்றவர்கள்க்கு வாய்ப்புத்தராத தலைவர்கள் இருக்கும் தேசம் இது..


கமிங்க் டூ த பாயிண்ட், பணக்கார வீடுகள்ல கொள்ளை அடிக்கும் முகமூடிக்கொள்ளைக்காரர்களை பிடிக்க ஒரு போலீஸ் ஸ்பெஷல் டீம்.. நாசர் தான் அதுக்கு லீடர்.. அவர் பொண்ணு தான் ஹீரோயின். ஒரு வேலையும் செய்யாம தறுதலையா இருக்கும் ஹீரோ ஜீவா அந்த டொக்கு ஃபிகரை பார்த்ததுமே ஒரு தலையா லவ்வறாரு..


பால் வடியும் முகமா இருக்கும் ஹீரோ எப்படி இப்படி ஃபைட் போடறார்னு எந்த நாயும் கேள்வி கேட்டுடக்கூடாதே.... அதனால அவர் குங்க்ஃபூ மாஸ்டர்ட்ட ஃபைட் கத்துக்கிட்ட ஆளா ஓப்பனிங்க்லயே காட்டிடறாங்க..


வில்லன்களை பிடிக்கும் முயற்சில நாசர் கிட்டத்தட்ட கொலை செய்யப்படறார்... அதாவது கொலை முயற்சில ஆள் எஸ்.. ஆனா ஹீரோதான் கொலை செஞ்சதா ஹீரோயின் நம்பற மாதிரி ஒரு சிச்சுவேஷன்.. இடைவேளை ( பயங்கர டர்னிங்க் பாயிண்ட் )


அதுக்குப்பின் எல்லா பட ஹீரோ மாதிரி ஹீரோ தான் கொலையாளி இல்ல.. அப்டினு நிரூபிக்க ஒரிஜினல் கொலையாளியை பிடிச்சு போலீஸ்ல ஒப்படைப்பதே இந்த டப்பா படத்தின் கேவலமான கதை.


ஹீரோ ஜீவா நல்ல அர்ப்பணிப்போட உழைச்சிருக்கார்.. குங்க்ஃபூ ஃபைட் நிஜமாவே கத்திட்டு வந்திருப்பார் போல .. ஓக்கே.. ஆனா அடுத்த கவுதம் படத்து கெட்டப்பே இதுக்கும் போட்டது எடுபடலை.. அந்த பிஞ்சு மூஞ்சி எப்படி ஆக்‌ஷன் ஹீரோவுக்கு செட் ஆகும்? மீசை இல்லாமல் மழு மழு முகம் இருந்தா தமிழ் சினிமால ஆக்‌ஷன் ஹீரோவா காட்ட முடியாது.. ( குருதிப்புனல் கமல் விதி விலக்கு )கோ படத்துக்குப்பின் வந்தான் வென்றான் , ரவுத்திரம் போல ஜீவாவுக்கு இதுவும் ஒரு சறுக்குப்படமே.

ஹீரோயின் பூஜா ஹெக்டே..தானா வந்து அவர் நம்மை ஹக் பண்ணாக்கூட வேணாம் விலகம்மா என சொல்ல வைக்கும் சுமார் அழகுதான்.. பாடல் காட்சில ஃபுல் முதுகை காட்டறார்.. ஒரு சோகக்காட்சில லோ ஹிப் காட்றார்.. ஒரு காதல் சீன்ல லோ கட் காட்டறார்.. ஆனா நடிப்பை மட்டும் கடைசி வரை காட்டவே இல்லை.. எல்லாத்தையும் இப்பவே காட்டிட்டா எப்படி? அடுத்த படத்துல நடிப்பைக்காட்டலாம்னு பெண்டிங்க் வெச்சிருக்காராம்.. 60 மார்க் போடலாம்.. லிப்ஸ். கண் எல்லாம் நல்லாருக்கு.. கனகாம்பரப்பூ கலர்ல அவர் உதடுகள் வசீகரிக்கிறது.. தொப்பை போடாத அவர் இடை அழகு.. மற்றபடி அவர் வந்து போகும் 13 காட்சிகளில் இயக்குநர் சொல்லிக்குடுத்ததை செய்கிறார்..


வில்லனாக நரேன்.. இயக்குநருக்கு என்ன கோபமோ தெரில .. நல்லா பழி வாங்கிட்டார்.. இவர் வரும் ஆரம்ப காட்சிகள் நல்லா இருந்தாலும் க்ளைமாக்ஸ் காட்சிகள் படு சொதப்பல். என்னமோ கார்பெண்டர் மாதிரி சுத்தியலோட அவர் சுத்துவதும், ஹீரோவை நக்கல் அடிப்பதாக நினைத்து இவரே கேவலப்படுவதும் சகிக்கல..

நாசர் கனகச்சிதமான நடிப்பு..


இயக்குநர் பாராட்டு பெறும் காட்சிகள்


1. முதல் குங்க் ஃபூ ஃபைட் சீன் ஷார்ப் அண்ட் கலக்கல்.. ஹாலிவுட் படம் போல் காட்சி அமைப்பு..


2. எஃப் எம்மில் செம ஹிட் ஆன வாயைப்பொத்தி சும்மா இரு பாட்டு படப்பிடிப்பு அம்சம்.. ஒளிப்பதிவு, கேமரா ஆங்கிள் எல்லாம் ரசிக்கும் விதத்தில்


3. ஹீரோயின் ஹீரோவை துப்பு சுல்தானி மாதிரி கேவலமா துப்பியதை நினைத்து புலம்பும் ஹீரோ தன் தாத்தா எதார்த்தமா துப்பும் போது ஜெர்க் ஆவது கலக்கல்..


4. ஹீரோ வில்லன் சேசிங்க் சீனில் நள்ளிரவில் ஒரு கள்ளக்காதல் ஜோடி கொஞ்சுவதும்.. கண் மூடி சொக்கிய நிலையில் இருக்கும் அந்த ஜிகிடியின் கன்னத்தில் ஹீரோ ஒரு தட்டு தட்டி செல்லும்போது அது தன் கள்ளக்காதலன் தான் என அந்த கற்புக்கரசி நினைத்து புளகாங்கிதம் அடைவதும் செம காமெடி சீன்.


5. படு மொக்கை படத்தை என்னமோ பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படம் மாதிரி போஸ்டர் டிசைன், ட்ரெயிலர் எல்லாவற்றிலும் கலக்கலான ஓப்பனிங்க் கொடுத்த மிஸ்கினின் திறமை..


6. டைட்டில் டிசைன் மார்வெல் பிக்சர்ஸின் ஸ்டைலை சுட்டிருந்தாலும்
ரசிக்கும்படி இருப்பது


இயக்குநரிடம் சில கேள்விகள் ,


1. யுத்தம் செய் படத்தில் ஃபைட் சீன்க்கு பேக்கிரவுண்ட் மியூசிக் நல்லா இருந்ததுன்னு எல்லாரும் சொன்னாங்க.. ஓக்கே அதுக்காக அதே இசையை எடுத்து இதுக்கும் போடனுமா?

2. தமிழ் நாடே கொண்டாடும் ஹீரோ முகமூடியை பார்க்கனும்னு வில்லன் போலீஸ்ட்ட கோரிக்கை வைக்கறான்.. எப்போ தமிழ் நாடு கொண்டாடுச்சு? அவர் இருக்கும் தெருவுக்குக்கூட தெரியாது.. அபப்டி ஒரு சீனே வைக்கலையே?

3. வில்லன் ஆசாரியா? கார்பெண்டரா? ஏன் லூஸ் மாதிரி கைல ஒரு சுத்தியை வெச்சுக்கிட்டு சுத்திட்டு இருக்கான்?

4. ஸ்பைடர் மேன், பேட் மேன், அயர்ன்மேன், சூப்பர்மேன் என்று வில்லன் ஹீரோவை நக்கல் அடிப்பது படு கேவலம். அதுவும் 5 முறை அப்படி பண்றார்.. க்ளைமாக்ஸ் சீரியஸா இருக்க வேண்டாமா? கோபம் வற்ற மாதிரி காமெடி பண்ணாதீங்கன்னு எத்தனை டைம் சொல்றது?


5. ஹீரோயின்க்கு ஹீரோவை 6 டைம் நேருக்கு நேர் பார்த்தப்ப வர்லை.. முக மூடி போட்டுட்டு வேன் கிட்டே யூரின் போறப்ப எதார்த்தமா ஹீரோயின் ஹீரோவை அந்த கேவலமான கோலத்துல பார்த்த பின் காதல் பொங்கிட்டு வருது.. யோவ்,, இது என்ன கில்மா படமா?


6. க்ளைமாக்ஸ்ல வில்லன் ஸ்கூல் குழந்தைங்க இருக்கும் வேன்ல உள்ளே போக நினைச்சா கதவைத்திறந்து போக மாட்டாரா? ஏன் லூஸ் மாதிரி டாப்பை சுத்தியால அடிச்சுட்டு இருக்கார்? அவருக்கும் டாப் அதாவது மேல் மாடி காலியா?


7. ஹீரோயின் ஹீரோகிட்டே லவ்வை வெளிப்படுத்த பல வழி இருந்தும் ஏன் கேனம் மாதிரி ஹீரோ நெஞ்சை தடவி தடவிப்பார்க்கறாரு? ஆண்ட்டி மாதிரி..

( நல்ல வேளை.. )


8. குங்க் ஃபூ மாஸ்டர் ஹீரோவுக்கு எல்லாத்தையும் கத்துக்குடுக்காம இன்ஸ்டால்மெண்ட்ல வித்தைகள் கத்து தர்றாரே, அது ஏன்?


9. க்ளைமாக்ஸ் ஃபைட் சீன் தான் பொதுவா இந்த மாதிரி ஆக்‌ஷன் படத்துக்கு முக்கியம்.. ஆனா ஏன் சொதப்பல் ஃபைட்?


10. ஹீரோ அந்த குழந்தைங்க முன்னால பல்டி, குட்டிக்கரணம் எல்லாம் அடிச்சு டாக்டர் ராமதாசை விட பெரிய காமெடியன் ஆக ட்ரை பண்றது படு கேவலமா இருக்கு.. ஆக்‌ஷன் ஹீரோ இமேஜையே அது உடைக்குது..11. ஹீரோவுக்கு அந்த ப்ளூ கலர் பனியன் லெக்கின்ஸ் டிரஸ் படு கேவலமா இருக்கு.. பார்த்தா சிரிப்பு தான் வருது.. அதுக்கு மேல சிவப்பு கலர் ஜட்டி வேற .. அவ்வ்வ்வ்.. ராமராஜன் நடிச்சிருக்கனும்

மனம் கவர்ந்த வசனங்கள்

1. யாரையும் நம்பாதீங்க.. கமிஷனர் உட்பட.. எப்பவும் சிவில் டிரஸ்ல வாங்க.. யூனிஃபார்ம் வேண்டாம்.. , இந்த ஃபார்மாலிட்டி சார்.. மோர் எல்லாம் கட் பண்ணுங்க , டியூட்டியை பாருங்க..


2. அதென்ன மாப்ளை 18 வயசுல இருந்து 81 வயசு வரை எல்லாரும் டாஸ்மாக் வந்துடறாங்க?


3. அதெப்பிடிடா தண்ணி அடிக்க உன் கிட்டே மட்டும் காசு வந்துடுது?4. புரூஸ்லி யார் மாதிரியும் ஆகணும்னு நினைக்கலை..தான் என்னவா ஆக
நினைச்சாரோ அப்படியே ஆனார். அதனால நீயும் அவர் மாதிரி வரணும்னு
நினைக்காதே..உனக்கு என்ன ஆகத் தோணுதோ அப்படி ஆகு’


5. எங்கேடா போறே?


அவளைப்பார்க்கனும்


பார்த்து?


கன்னத்துல அறையனும்.

அவ கமிஷனர் பொண்ணுடா..

அப்போ 2 டைம் அறையனும்..

6. இப்போதான் சாமி மலை ஏறி இருக்கு.. திரும்பவும் ஏற வெச்சுடாதீங்க..


7. அங்கே என்னடா பண்றே?


டாடி, பைக்கை ரிப்பேருக்கு குடுத்திருக்கேன்.. மெக்கானிக் பார்த்திட்டு இருக்கான்.. ( பில்டப் ஹீரோயின் முன்)


உன்கிட்டே சொந்தமா ஒரு சைக்கிள் கூட இல்லையேடா.. சரி சரி.. நைட் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு.. சரக்கு அடிச்சு வாமிட் எடுத்துட்டு இருக்காதே..


8. ஏண்டா மூடு அவுட்டா இருக்கே?


என்னால முடியல..

அப்போ நல்ல டாக்டராப்பாரு


அய்யோ தாத்தா.. அதில்லை.. அந்த முடியல அல்ல.. இது வேற.. சோகம்..


9. லவ் ஒரு டெஸ்ட் மாதிரி டா..

ம்க்கும், நான் ஸ்கூல் டெஸ்ட்டே பாஸ் பண்ணலை..10. குனிஞ்சு நடக்காத.. என்னை மாதிரி ஆகிடுவே..

உன்னை மாதிரி இருந்தா நான் அவளை பார்க்காமயே இருந்திருப்பேன்..


11. தாத்தா.. ஏதாவது ஐடியா குடு ப்ளீஸ்;.

எல்லாத்தையும் நானே சொல்ற மாதிரி இருந்தா நானே அந்தப்பொண்ணை லவ் பண்ணிடலாமே? நீ எதுக்கு ?


12. நீ என்னமோ தப்பு பண்றே? உனக்கு என்னமோ நடக்கப்போகுது..


13. டேய்.. இப்போ நீ என்ன பண்ணப்போறியோ.. எனக்கு வயிற்றை கலக்குது..


எனக்கும் தான்..


14. வில்லன் - என் நிழல் கூட என் பின்னால் வராது.. ஆனா நீ வந்துட்டே.. எனக்கு போலீஸ் வாசனை பிடிக்காது, ஆனா சாவு வாசனை பிடிக்கும்..எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40 ( 37 தான் போடனும் நியாயப்படி பார்த்தா, ஆனா விகடன்ல மிஸ்கின்னா ஒரு சாஃப்ட் கார்னர், அள்ளி வீசுவாங்க )

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - வேலை வெட்டி இல்லாதவங்க, பொழுது போகாதவங்க யாரா இருந்தாலும் டி வில அடுத்த வாரம் போட்டுடுவாங்க.. அது வரை வெயிட் பண்ணவும் . இந்த டப்பாவை . ஈரோடு அபிராமியில் பார்த்தேன்

--
அட்ரா சக்க

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: முகமூடி - விமர்சனம்

Post by அருண் on Sat Sep 01, 2012 2:01 pm

என்னமோ நு எதிர் பார்த்தா படம் மொக்கையா.! சிரி

ஒரு சோகக்காட்சில லோ ஹிப் காட்றார்.. ஒரு காதல் சீன்ல லோ கட் காட்டறார்.. ஆனா நடிப்பை மட்டும் கடைசி வரை காட்டவே இல்லை..
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: முகமூடி - விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum