ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சாமி on Sun Aug 26, 2012 10:07 pm

First topic message reminder :

(ண, ன பொருள் வேறுபாடு)
அணல் - தாடி, கழுத்து, அனல் - நெருப்பு
அணி – அழகு, அனி - நெற்பொறி

அணு – நுண்மை, அனு - தாடை, அற்பம்
அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம்

அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல், அனை - அன்னை, மீன்
அணைய - சேர, அடைய, அனைய - அத்தகைய

அண்மை – அருகில், அன்மை - தீமை, அல்ல
அங்கண் – அவ்விடம், அங்கன் - மகன்

அண்ணம் – மேல்வாய், அன்னம் - சோறு, அன்னப்பறவை
அண்ணன் – தமையன், அன்னன் - அத்தகையவன்
அவண் – அவ்வாறு, அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
.....................................................................................................................................................................
ஆணகம் – சுரை, ஆனகம் - துந்துபி
ஆணம் – பற்றுக்கோடு, ஆனம் - தெப்பம், கள்

ஆணி - எழுத்தாணி, இரும்பாணி, ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
ஆணேறு –ஆண்மகன், ஆனேறு - காளை, எருது

ஆண் – ஆடவன், ஆன் - பசு
ஆணை - கட்டளை, ஆட்சி, ஆனை - யானை

(தொடரும் - நன்றி-தினமணி)


Last edited by சாமி on Sun Oct 28, 2012 7:30 am; edited 2 times in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down


Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சென்னையன் on Sun Oct 28, 2012 5:52 pm

அருமை அருமை அருமை. தொடரட்டும் உங்கள் திருப்பணி.மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
சென்னையன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 161
மதிப்பீடுகள் : 26

View user profile

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சாமி on Mon Nov 05, 2012 3:13 pm

பலம் - கிழங்கு, வலி, நெற்றி, சக்தி, சேனை, வன்மை, உறுதி, எடை
பழம் - கனி, முதுமை

பல்லி - சிற்றூர், இடையர் ஊர், உழுகருவி, ஓர் உயிரி, வண்டியுறுப்பு
பள்ளி - இடைச்சேரி,புத்தர்கோயில், குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை, பள்ளிக்கூடம்

பலி - பலியிடுதல், பலியுயிர்
பழி - குற்றம்

பால் - திரவ உணவு, பகுப்பு, இயல்பு
பாழ் - வீண், வெறுமை

பீழை - துன்பம்
பீளை - கண் அழுக்கு

புலி - காட்டு விலங்கு
புளி - புளியமரம்,புளியங்காய்

புலை - புலால், ஊன், கீழ்மை
புழை - துளை, வாயில், நரகம்

புகல் - அடைக்கலம்
புகழ் - பெருமை

புல் - அற்பம், கலவி, புல்பூண்டு
புள் - பறவை

பூலம் - புற்கட்டு
பூளம் - பூவரசு

பூழை - துவாரம், கோபுரவாயில்
பூளை - பூளைச்செடி, இலவம் பஞ்சு
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சாமி on Thu Nov 15, 2012 12:32 pm

(ல, ழ, ள பொருள் வேறுபாடு)
பாலி - தானியக் குவியல், தூற்றாத தானியம்
பாழி - கொடுத்தல், ஈதல்
பாளி - வரப்பு, எல்லை

பொலிவு - அழகு, நிறைவு
பொழிவு - பொழிதல், மேன்மை

போலி - பொய், வஞ்சகம், ஒப்பு
போளி - இனிப்புப் பண்டம்

பொலிதல் - செழித்தல், மங்கலமாதல்
பொழிதல் - ஈதல், கொடுத்தல், சொரிதல்,பெய்தல், நிறைதல்

மலம் - அழுக்கு, பாவம்
மழம் - இளமை, குழந்தை

மலை - குன்று, பொருப்பு, வெற்பு
மழை - மழைநீர், குளிர்ச்சி, மேகம்

மலைத்தல் - வியத்தல், தடுமாறுதல்
மழைத்தல் - மழை பெய்திருத்தல், குளிர்ந்திருத்தல்

மாலிகை - மாலை, கழுத்தணி, வரிசை
மாளிகை - அரண்மனை, கோயில்

மாலை - அந்திப்பொழுது, பூமாலை
மாழை - மயக்கம், இளமை, அழகு
மாளை - புளியம்பட்டை

மால் - திருமால், மயக்கம், அருகன், இந்திரன், பெருமை, மேகம்
மாள் - இறத்தல், சாதல் (இற,சாவு)

முலை - உடலிலுள்ள ஓர் உறுப்பு
முழை - குகை
முளை - முளைத்தல், தறி, ஆப்பு, அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்

முழி - விழி (விழித்தல்)
முளி - மரக்கணு, விரல்முளி, வாட்டம்

மூலி - மூலிகை, மரம், வேருள்ளது
மூழி - அகப்பை, சோறு, நீர்நிலை, கோணம்

மூலை - இரு கோடுகள் சந்திக்கும் இடம்
மூளை - மண்டைக்குள் இருக்கும் ஓர் உறுப்பு(முதன்மைப் பகுதி)

மெல்ல - மென்று தின்பது
மெள்ள - மெதுவாக

மாலி - மொளலி கிரீடம்
மாழி - மேழி, கலப்பை
மாளி - துணிமூட்டை,

வலம் - சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி
வளம் - வளமை, அழகு

வலவன் - திருமால்
வளவன் - சோழன், வேளாளன்

வலன் - ஓர் அரசன், வெற்றி, வல்லவன்
வளன் - செழுமை, வளப்பன்
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by காயத்ரி வைத்தியநாதன் on Thu Nov 15, 2012 5:17 pm

பயனுள்ள பதிவு..பகிர்விற்கு நன்றி..சேமித்துக்கொண்டேன்.. சூப்பருங்க
avatar
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 241
மதிப்பீடுகள் : 90

View user profile http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by ரா.ரா3275 on Thu Nov 15, 2012 5:20 pm

///வளன் - செழுமை, வளப்பன்///
வளன் என்பதை கிறித்தவர்கள் ஜோசப் என்று கூறுகின்றனரே...அதன் பொருளும் இதுதானா?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சாமி on Sun Nov 18, 2012 7:27 am

(ல, ழ, ள பொருள் வேறுபாடு)
வழப்பம் - வழக்கம், இயல்பு
வளப்பம் - வளமை, செழிப்பு

வலி - நோய், வலிமை, துன்பம்
வழி - நெறி, பாதை, தடம், உபாயம்
வளி - காற்று

வலை - மீன் முதலியன பிடிக்கும் ஒரு கருவி
வழை - சுரபுன்னை, புதுமை, இளமை
வளை - கை வளையல், எலி வளை

வல் - வலிமை, விரைவு, திறமை
வள் - ஒலிக்குறிப்புச் சொல்

வல்லம் - வாழை, ஓர் ஊர்
வள்ளம் - மரக்கலம், படகு, அளவு, தொன்னை

வல்லி - பூமி, பெண், பிரிதல், படர் கொடி
வள்ளி - வள்ளியம்மை, ஆபரணம், சந்திரன்

வலு - வலிமை, பலம், பற்று
வழு - குற்றம், தவறு, பழிப்புரை, கேடு
வளு - இளமை, இளைய

வாலி - கிஷ்கிந்தை அரசன்
வாழி - வாழ்க (எனவாழ்த்துதல்)
வாளி - அன்பு, வட்ட வாள், வீரன், ஒரு காதணி

வாலை - இளம்பெண், திராவகம் வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி
வாழை - வாழைமரம்
வாளை - வாளை மீன்

வால் - விலங்குகளின் ஓர் உறுப்பு
வாழ் - வாழ்வாயாக (என்று வாழ்த்துதல்)
வாள் - போர்வாள், நீண்டகத்தி

விலா - விலா எலும்பு
விழா - திருவிழா, கொண்டாட்டம்
விளா - இளமை, வெண்மை, நிணம்

விழி - கண், கருவிழி
விளி - கூப்பிடு, அழை, ஏழிசையில் ஒன்று

விலை - மதிப்பு, விலைக்கு விற்றல்
விழை - விரும்பு, ஆசைப்படு
விளை - ஒரு மீன்வகை, விளைவி (விளைச்சல்)

விலக்கு - விலக்கி விடு, தவிர்
விளக்கு - விளக்கமாகச் சொல், தீபம்

விலங்கு - பூட்டு, கை, கைகளைப் பிணிக்கும் கருவி, மிருகம்
விளங்கு - திகழ் (திகழ்தல்), சிற்றரத்தை (மூலிகை வகை)

வெல்லம் - சக்கரைக்கட்டி, கருப்பட்டி
வெள்ளம் - மிதமிஞ்சிய நீர்பெருக்கு

வேலம் - வேலமரம், தோட்டம்
வேழம் - யானை, கரும்பு, மூங்கில்

வேல் - வேலாயுதம்
வேள் - வேளிர் குலத்தவன், மன்மதன், ஆசை

வேலை - பணி, கடல்
வேளை - பொழுது, நேரம், ஒருவகைக் கீரை
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சாமி on Sun Nov 25, 2012 7:58 am

அர - பாம்பு
அற - தெளிய, முற்றுமாக

அரவு - பாம்பு
அறவு - அறுதல்,தொலைதல்

அரம் - ஒரு கருவி
அறம் - தர்மம், நீதி, கற்பு, புண்ணியம், கடமை, அறநூல், துறவறம்

அரி - திருமால், அரிசி, அழகு, அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு, சிவன்
அறி - அறிந்துகொள்

அரிய - கிடைத்தற்கு அரிதான, கஷ்டமான
அறிய - அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள

அரன் - சிவன்
அறன் - தர்மம்,அறக்கடவுள்

அரிவை - பெண் (7பருவத்துள் ஒன்று. ௧௮ வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்ட பெண்)
அறிவை - அறிவாய்

அருகு - புல்வகை(அருகம்புல்)
அறுகு - அண்மை

அக்கரை - அந்தக் கரை
அக்கறை - ஈடுபாடு

அரை - பாதி, மேகலை, வயிறு, ஒரு மரம்
அறை - வீட்டின் பகுதி, அடி, பாத்தி, ஒலி, பாசறை, சொல், குகை, வஞ்சனை, மாளிகை

அரைதல் - தேய்தல்
அறைதல் - அடித்தல், சொல்லுதல்

அப்புரம் - அந்தப் பக்கம்
அப்புறம் - பிறகு

அர்ப்பணம் - உரித்தாக்குதல்
அற்பணம் - காணிக்கை செலுத்துதல்

அரு - உருவமற்றது
அறு - துண்டித்துவிடு, அறுத்துவிடு

அருமை - சிறப்பு, அன்பு, இன்மை, சுலபத்தில் கிடைக்காதது
அறுமை - நிலையின்மை, ஆறு

ஆரு - குடம், நண்டு
ஆறு - ஒரு எண், வழி, சமயம், தன்மை, நதி, ஒழுக்கம், பக்கம், நிலை

ஆர - நிறைய, அனுபவிக்க
ஆற - சூடுஆற(குறைய)

ஆரல் - ஒருவகை மீன்
ஆறல் - சூடு குறைதல்

இரத்தல் - யாசித்தல்
இறத்தல் - இறந்துபோதல், சாதல்

இரகு - சூரியன்
இறகு - சிறகு

இரக்கம் - கருணை
இறக்கம் - சரிவு, மரணம்

இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழிறங்கி வா

இரவம் - இரவு
இறவம் - இறால் மீன்

இரவி - சூரியன், எருக்கு, மலை, வாணிகத்தொழில்
இறவி - இறத்தல்

இரவு - இரவு நேரம், யாசித்தல்
இறவு - மிகுதி, இறால்மீன், இறுதி, தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம்
(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சாமி on Sun Dec 02, 2012 8:41 am

(ர, ற பொருள் வேறுபாடு)

இரை -ஒலி, உணவு
இறை - கடவுள், அணு, அரசன், ரேகை, சந்து, கடமை, தலைமை, விடை, உயரம், மூலை

இரு - இரண்டு, பெரிய, உட்கார், அமர்ந்துகொள்
இறு - ஒடி, கெடு, சொல்லு

இரும்பு - கடிவாளம், கிம்புரி, ஆயுதம், ஓர் உலோகம்
இறும்பு - வண்டு, சிறுமலை

இருப்பு - கையிருப்பு, இருப்பிடம், ஆசனம், நிலை, பொருள், முதல்
இறுப்பு - வடிப்பு

இருத்தல் - அமர்ந்திருத்தல், காத்திருத்தல்
இறுத்தல் - வடித்தல், செலுத்தல், எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல், முடித்தல், முறித்தல்

இருக்கு - மந்திரம்,
இறுக்கு - அழுத்து, இறுக்கிக்கட்டு

இரைத்தல் - ஒலித்தல், மூச்சுவாங்குதல்
இறைத்தல் - சிதறுதல், மிகு செலவு

உரவு - அறிவு, ஒலி, மிகுதி, வலி, ஞானம், விடம்
உறவு - நட்பு, சுற்றம், எறும்பு

உரவோர் - அறிஞர், முனிவர்
உறவோர் - சுற்றத்தார், அடைந்தோர்

உரி - தோல், மரப்பட்டை, அரைப்படியளவு, உரிச்சொல்,கொத்துமல்லி
உறி - உறிவெண்ணெய், தூக்கு
(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by Kuzhali on Mon Dec 03, 2012 11:33 am

பொருள் வேற்றுமைகள் மிக அருமை.......
avatar
Kuzhali
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 87
மதிப்பீடுகள் : 17

View user profile

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சாமி on Sun Dec 09, 2012 9:15 pm

(ர, ற பொருள் வேறுபாடு)

உரு - வடிவம், அழகு, உடல், மரக்கலம், நிறம், அச்சம், பெருமை, மேன்மை
உறு - மிகுதி

உருக்குதல் - இளக்குதல், மெலியச் செய்தல்
உறுக்குதல் - சினத்தல், அதட்டுதல்

உரை - புகழ், விளக்கவுரை, நூல், பொன்மாற்று, அறிவுரை, சொல்
உறை - இடம், பண்டம், பொருள், மருந்து, பாலில் இடும் பிரை, துளி, மழை, ஆடை, துன்பம், பாம்பின் விஷப்பை

உரைப்பு - தங்குதல், தோய்தல்
உறைப்பு - காரம், கொடுமை

உரையல் - சொல்லல்
உறையல் - மாறுபாடு, பிணக்கு

உரிய - உரிமையான
உறிய - உறிஞ்ச

ஊரல் - ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப் பறவை
ஊறல் - தினவு, ஊற்று, சாறு, வருவாய், ஊறுதல், களிப்பு

ஊரு - அச்சம், தொடை
ஊறு - இடையூறு, துன்பம், காயம் உறுதல், தீண்டல், குற்றம், புண், கொலை

எரி - தீ, கார்த்திகை, பிரபை, இடபராசி, நெருப்பு, நரகம், வெம்மை, கந்தகம்
எறி - விடுதல், எறிதல், குறிப்பாகக் கூறுதல்

ஏர - ஓர் உவமஉருபு
ஏற - மிகுதி, உயர (ஏறுதல்)

ஏரி - நீர்நிலை, குளம்
ஏறி - உயர்ந்த, மேலே ஏறி

ஒரு - ஒன்று, ஒப்பற்ற, ஆடு
ஒறு - தண்டி, அழி, இகழ்

ஒருத்தல் - ஆண் விலங்குகளின் பொதுப்பெயர்
ஒறுத்தல் - தண்டித்தல், துன்புறுத்தல், வருத்துதல், வெறுத்தல், கடிதல், இகழ்தல், குறைத்தல்

ஒருவு - நீங்கு
ஒறுவு - வருத்தம், துன்பம்

கரடு - மரக்கணு, மணிக்கட்டு, முருடு, வளர்ச்சியற்றது
கறடு - தரமற்ற முத்து

கரம் - கிரணம், விஷம், செயல், கை, கழுதை
கறம் - கொடுமை, வன்செய்கை

(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சாமி on Sun Dec 16, 2012 10:42 pm

(ர, ற பொருள் வேறுபாடு)

கரவு - பொய், வஞ்சனை, மறைவு
கறவு - கப்பம்

கரவை - கம்மாளர் கருவி
கறவை - பாற்பசு

கரி - அடுப்புக்கரி, நிலக்கரி, யானை, சாட்சி, பெண்கழுதை, விஷம், கருமை
கறி - இறைச்சி, மிளகு

கரத்தல் - மறைத்தல்
கறத்தல் - கவர்தல், பால் கறத்தல்

கருத்து - எண்ணம்
கறுத்து - கருநிறங்கொண்டு

கரு - சினை, பிறவி, முட்டை, நடு, கருநிறம், அணு, அடிப்படை
கறு - சினம், வைராக்கியம், கோபம், அகங்காரம்

கருப்பு - பஞ்சம்
கறுப்பு - கருநிறம், பேய், கோபம், குற்றம், கறை

கரை - எல்லை, தடுப்பு, ஓரம்
கறை - அழுக்கு, குற்றம், ரத்தம்

கரையான் - மீனவன்
கறையான் - செல் (ஓர் உயிரி)

கர்ப்பம் - கருவுறுதல், உள், சினை
கற்பம் - கஞ்சா, அற்பம், ஊழிக்காலம், தேவலோகம், திருநீறு, ஆயுள், மந்திர சாஸ்திரம், 432 கோடி, மூப்பு நீக்கும் மருந்து

கர்ப்பூரம் - சூடம், பொன், மருந்து, கூடம்
கற்பூரம் - பொன்னாங்கண்ணி
(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by Dr.S.Soundarapandian on Tue Dec 18, 2012 8:46 pm

மொழியியலில் CORPUS எனப்படும் மொழிக்கூறு விவரத்தொகுப்புக்குப் பேருதவியாகும் தங்களின் பணி திரு சாமி அவர்களே! தொடருங்கள்!
-முனைவர் சு .சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by Muthumohamed on Wed Dec 19, 2012 12:23 am

நல்ல பதிவு தொடருங்கள் உங்கள் பதிவுகளை
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Dec 19, 2012 8:01 am

மிகவும் நன்று சாமி அவர்களே....தொடருங்கள் மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Wed Dec 19, 2012 9:48 am

தங்களின் பதிவு சிறந்த தமிழ் அகராதியாக இருக்கிறது. நன்றி சாமி அவர்களே.
avatar
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3794
மதிப்பீடுகள் : 578

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சாமி on Fri Dec 21, 2012 7:15 pm

[You must be registered and logged in to see this link.] wrote:மொழியியலில் CORPUS எனப்படும் மொழிக்கூறு விவரத்தொகுப்புக்குப் பேருதவியாகும் தங்களின் பணி திரு சாமி அவர்களே! தொடருங்கள்!
-முனைவர் சு .சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி

நன்றி ஐயா!
இந்த பணிக்கு உண்டான பெருமை 'தினமணி நாளிதழை' த்தான் சாரும்.
எனது வேலை 'வெட்டி ஒட்டுவது' மட்டும்தான் ஐயா.
அதாவது 'தினமணி' யில் வரும் இந்த தொடரை 'வெட்டி' ஈகரையில் 'ஒட்டுவது'.

அன்புடன்
சாமி
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சாமி on Wed Dec 26, 2012 12:39 pm

(ர, ற பொருள் வேறுபாடு)

காரி - கரிக்குருவி. காக்கை, வயிரவன், ஐயனார், ஒரு நதி, சனி, விஷம், ஒரு வள்ளல், வாசுதேவன்
காறி - காறிஉமிழும் கழிவு

காரு - வண்ணான், தேவதச்சன்
காறு - காறுதல் (காறி உமிழ்), அளவு

காரை - ஒரு வகை செடி, ஒரு வகை மீன், சிமெண்ட் மணல் சேர்ந்த கலவை
காறை - ஒரு கழுத்தணி

கீரி - ஓர் உயிரினம்
கீறி - பிளந்து, அரிந்து

குரங்கு - ஒரு விலங்கு
குறங்கு - தொடை, கொக்கி

குரவர் - கடவுள், குரு, பெரியோர், அரசர்
குறவர் - ஒரு ஜாதியினர்

குரவை - கூத்து வகை, ஒலி, கடல், மகளிர் மகிழ்ச்சி
குறவை - ஒருவகை மீன்

குரத்தி - தலைவி, குருவின் மனைவி
குறத்தி - குறத்தி ஜாதிப் பெண்

குருகு - பறவை, குட்டி, கொக்கு, உலைத்துருத்தி, உலைமூக்கு, குருக்கத்தி, நாரை, கோழி, கைவளை
குறுகு - அண்மைப்படுத்து

குருகினம் - பறவை இனம்
குறுகினம் - நெருங்கினோம்

குரை - சத்தம், ஒலி, குதிரை, பெருமை, ஓசை
குறை - குற்றம், காரியம், கடன், வேண்டுகோள், வறுமை

குரு - ஆசிரியர், மேன்மை, கனம், வியாழன், நிறம், தந்தை, இரசம்
குறு - குறுகு

கூரல் - ஒரு மீன், பறவை இறகு
கூறல் - சொல்லுதல், விற்றல்

கூரை - சிறிய ஓலை வீடு, வீட்டின் மேற்கூரை, சிற்றில்
கூறை - புது ஆடை, சீலை

கூரிய - கூர்மையான
கூறிய - சொன்ன

கூர - குளிர்ச்சி மிக
கூற - சொல்ல, வேண்டல்

கோரல் - கூறுதல்
கோறல் - கொல்லல்

கோரை - புல்வகை
கோறை - குவளை, பொந்து

கோரல் - சேர்தல், குளிர் காற்று, மலைப்பக்கம்
கோறல் - குளிர் காற்று, மழை

சிரை - சிரைத்தல், முடிநீக்கல்
சிறை - சிறைச்சாலை, மதில், காவல், பக்கம், நீர்க்கரை, இறகு, அடிமை, அறை, அணை
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சாமி on Thu Jan 03, 2013 11:03 pm

(ர, ற பொருள் வேறு​பாடு)

சீரிய -​ சினந்த,​​ சிறந்த,​​ சீராய்​
சீறிய -​ சினந்த​

சுரா​ -​ கள்​
சுறா​ -​ சுறா மீன்​

சூரல்​ -​ மூங்​கில்,​​ பிரம்பு​
சூறல்​ -​ தோண்​டல்​

சுருக்கு​ -​ வலை,​​ சுருக்​கம்,​​ கட்டு,​​ பூமாலை,​​ வகை,​​ குறைவு,​​ நெய்த்​து​டுப்பு​
சுறுக்கு​ -​ விரைவு​

செரு​ -​ போர்,​​ ஊடல்​
செறு​ -​ வயல்,​​ பாத்தி,​​ குளம்​

செரு​நர்​ -​ பகை​வர்,​​ படை​வீ​ரர்​
செறு​நர்​ -​ பகை​வர்​

சொரி​ -​ தினவு,​​ அரிப்பு,​​ பொழி​
சொறி -​ சிரங்கு,​​ சொறி​தல்​

தரித்​தல்​ -​ அணி​தல்,​​ பொறுத்​தல்,​​ தங்​கல்,​​ தாம​தித்​தல்,​​ தாங்​கு​தல்​
தறித்​தல் -​ வெட்​டு​தல்​

தரி​ -​ அணி,​​ அணிந்​து​கொள்​
தறி -​ தூண்,​​ ஆப்பு,​​ நெசவு இயந்​தி​ரம்,​​ முளைக்​கோல்​

தரு​தல் -​ கொடுத்​தல்​
தறு​தல்​ -​ இறு​கக்​கட்​டு​தல்​

தாரு​ -​ மரம்,​​ தேவ​தாரு,​​ பித்​தளை​
தாறு​ -​ குலை,​​ அங்​கு​சம்,​​ முள்,​​ இரும்பு,​​ முள்​கோல்​

திரம்​ -​ மலை,​​ உறுதி,​​ நிலை,​​ பூமி​
திறம்​ -​ உறுதி,​​ நரம்​புள்ள வீணை,​ கூறு​பாடு,​​ சுற்​றம்,​​ குலம்,​​ பக்​கம்,​​ வல்​லமை,​​ ஒழுக்​கம்,​​ மேன்மை, வர​லாறு,​​ கார​ணம்​

திரை​ -​ அலை,​​ கடல்,​​ திரைச்​சீலை​
திறை​ -​ கப்​பம்​

துரவு​ -​ கிணறு​
துறவு​ -​ துறத்​தல்,​​ துற​வ​றம்​

துரை​ -​ பெரி​யோன்,​​ தலை​வன்​
துறை​ -​ நீர்த்​துறை,​​ வழி,​​ இடம்,​​ நூல்,​​ கடற்​கரை,​​ உபா​யம்,​​ பாவி​னம்​

துரு​ -​ களிம்பு​
துறு​ -​ கூட்​டம்,​​ நெருக்​கம்​

தூரல்​ -​ தூரு​தல்,​​ வருத்​தம்​
தூறல்​ -​ மழைத்​துளி,​​ பழி சொல்​லு​தல்​

தூரன்​ -​ குலத்​தின் பெயர்​
தூறன்​ -​ மூர்க்​கன்​

துரு​ -​ வீதி​
துதறு​ -​ அழி​

தேரார்​ -​ கல்​லா​த​வர்,​​ கீழ்​மக்​கள்,​​ பகை​வர்​
தேறார்​ -​ அறி​வி​லார்,​​ பகை​வர்

(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சாமி on Sun Jan 06, 2013 8:36 pm

(ர, ற பொருள் வேறுபாடு)

தேரி - மணல் திட்டை, மணல் குன்று
தேறி - தேர்ச்சி பெற்று, தெளிந்து

நரை - நரைமுடி, வெண்மயிர், மூப்பு, எருது, கவரிமா, மரச்சொத்தை, பெருமை
நறை - தேன், சாதிக்காய், கள், வாசனை, நறும்புகை, பச்சிலைக்கொடி, குற்றம்

நாரி - பெண், பார்வதி, வாசனை, கள், சேனை, பன்னாடை, தேன்,
நாறி - கற்றாழை

நிருத்தம் - கூத்து, நடனம், பதம் பிரித்துப் பொருள் கூறும் நூல், பற்றின்மை
நிறுத்தம் - நிறுத்தும் இடம்

நிரை - பசு, ஒழுங்கு, வரிசை
நிறை - கற்பு, அளவு, அழிவின்மை, நீதி, வரையறை, திண்மை, நிரப்பு

நூரல் - அவிதல், பதங்கெடுதல்
நூறல் - அவித்தல்

நேரி - அமுக்கு, நசுக்கு, அழுத்து
நேறி - வழி, கோயில், கற்பு

பரட்டை - பரட்டைத்தலை
பறட்டை - செழிப்பற்றது

பரதி - கூத்தாடுபவன்
பறதி - அவசரம், பறத்தல்

பரத்தல் - அலமறுதல், மிகுதல்
பறத்தல் - பறந்துசெல்லல்

பரம்பு - வயலை சமப்படுத்தும் பலகை
பறம்பு - பாரியின் மலை

பரல் - விதை, பருக்கைக்கல்
பறல் - பறவை

பரவை - கடல், ஆடல், பரப்பு
பறவை - பறப்பவை, ஒரு நோய்

பரி- குதிரை, பெருமை, விரைவு, செலவு, சுமை, மிகுதி
பறி - பறித்தல், கொள்ளை, பொன், வலை, உடம்பு,ஓலைப்பாய்

பரித்தல் - காத்தல், ஓடுதல், தாங்குதல், சுமத்தல், சூழ்தல், தரித்தல்,
பறித்தல் - பிடுங்குதல்

பரிவு - அன்பு, துன்பம், இரக்கம்
பறிவு - கழிவு, அதிர்தல்

பருகு - குடி, அருந்து
பறுகு - பறட்டை, அன்பு, பக்குவம்

பரை - சிவசக்தி
பறை - இசைக்கருவி, இறகு, வாத்தியம், பறவை, சொல்

(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சாமி on Tue Jan 22, 2013 3:20 pm

(ர, ற பொருள் வேறுபாடு)

பாரை - கடப்பாரை
பாறை - கற்பாறை

பிரை - உறைமோர், பயன்
பிறை - பிறைச்சந்திரன்

பீரு - புருவம்,அச்சமுள்ளோன்
பீறு - கிழிவு

புரம் - மாடம், கோயில், இராஜதானி, ஊர், முன், மேல்மாடம், ஒரு நகரம்
புறம் - இடம், வரியில்லா நிலம், பக்கம், வெளி,பின்புறம், முதுகு

புரவு - கொடை, நிலம், செழுமை, காத்தல்,அரசர், கப்பம், ஆற்றுநீர் பாயும் நிலம்
புறவு - காடு, புறா,

பெருக்கல் - நிறைத்தல், மிகுத்தல், நிரப்புதல், அதிகப்படுத்தல்,மிகுவித்தல்
பெறுக்கல் - அரிசி, மிகுத்தல்

பொரி - நெற்பொரி, பொரிதல்
பொறி - தீப்பொறி, அறிவு, எழுந்து, வரிவண்டு

பொரித்தல் - வறுத்தல், குஞ்சு பொரித்தல்
பொறித்தல் - எழுதுதல், தீட்டுதல், பதித்தல், அடையாளமாக வைத்தல்

பொருப்பு - மலை, பக்கமலை
பொறுப்பு - பாரம், பொறுமை

பொரு - போர்
பொறு - பொறுத்திரு

மரத்தல் - விறைத்தல்
மறத்தல் - மறதி, நினைவின்மை

மரம் - தாவர வகை, மூலிகை, மரக்கலம்,பறைவகை
மறம் - வீரம், போர், சினம், மாறுபாடு, கொலை, பாவம், வலி, கொடுமை, மயக்கம்.

மரி - விலங்குகளின் குட்டி
மறி - தடை செய்

மரித்தல் - இறத்தல், சாதல்
மறித்தல் - தடுத்தல்,திரும்புதல், அழித்தல்.

மரை - மான்
மறை - வேதம் (எ.கா:- அறம் பொருள், இன்பம் வீடு என்கிற நால் வேதங்கள்)

(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by சாமி on Sun Jan 27, 2013 8:22 am

(ர, ற பொருள் வேறுபாடு)
மரு - மலை, பாலைநிலம், மணவிருந்து, நீரில்லா இடம், மருக்கொழுந்து.
மறு - குற்றம், மச்சம், எதிர், வேறு, அடையாளம்

மருப்பு - கொம்பு, யானைத் தந்தம், யாழ்த்தண்டு.
மறுப்பு - எதிர்ப்பு

மருகு - வாசனை தாவரம்
மறுகு - சிறியதெரு

மாரன் - மன்மதன், காமன்
மாறன் - பாண்டியன், சடகோபாழ்வார்

முரி - பாலைநிலம், நொய், சிதைவு.
முறி - ஒடி, பத்திரம், தளிர், எழுது, துண்டு

முருக்குதல் - அழித்தல், உருக்குதல்.
முறுக்குதல் - சுழற்றுதல், திரித்தல்.

வரம் - இறைவன் கொடுப்பது, வேண்டும் பொருள், தெய்வ ஈகை, மேன்மை, விருப்பம்.
வறம் - வற்றுதல், வறட்சி, பஞ்சம், நீரின்மை, வறுமை, வெம்மை.

வரவு - வருமானம், வழி
வறவு - கஞ்சி

வரப்பு - எல்லை, வரம்பு
வறப்பு - வறட்சி, வறுமை, வற்றுதல்

விரகு - விவேகம், உபாயம், உற்சாகம், புத்தி, கபடம்.
விறகு - எரிகட்டை

விரலி - மஞ்சள்
விறலி - மெய்ப்பாடு தோன்ற ஆடிப்பாடும் பெண், 16 வயதினள்.

விரல் - மனித உடலில் உள்ள உறுப்பு
விறல் - பெருமை, வீரம், வெற்றி, மிகுதி, வலி.

விராய் - விறகு
விறாய் - செருக்கு, இறுமாப்பு

வெரு - அச்சம்
வெறு - வெறுத்துவிடு

வெரல் - மூங்கில்
வெறல் - வெல்லுதல், வெற்றி கொள்ளல்

விரை - விரைந்துசெல்
விறை - மரத்துப்போ(தல்)

"மயங்கொலிச் சொற்கள்' பகுதி நிறைவடைந்தது. இப்பகுதிக்கு உதவிய (பார்வை) நூல்கள்: பாலூர் கண்ணப்ப முதலியாரின் "தமிழ் இலக்கிய அகராதி', புலவர் துரையின் "தமிழ் மலர்ப் பூஞ்சோலை', மற்றும் கிரியாவின் புதிய தமிழ் அகராதி.

(நன்றி - தினமணி நாளிதழ்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மயங்கொலிச் சொற்கள்! - தொடர் பதிவு - Page 2

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum