ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

View previous topic View next topic Go down

புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by விநாயகாசெந்தில் on Sun Aug 26, 2012 12:11 pm


புரூஸ் லீ பற்றிய தகவல் !!!


புரூஸ் லீ என்று பிரபலமாக அறியப்பட்ட புரூஸ் ஜுன் ஃபேன் லீ (நவம்பர் 27, 1940 - ஜூலை 20 1973) அமெரிக்காவில் பிறந்த குங்ஃபூ விங் சுன் என்ற தற்காப்புக்கலை நிபுணரும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் ஆவார். ஜீட் குன் டோ என்ற உள்ளொளித் தற்காப்புக்
கலையைத் தோற்றுவித்தவர். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்...
. இவரது திரைப்படங்கள் காரணமாக மேற்கு நாடுகளில் சீனத் தற்பாதுகாப்புக்கலை தொடர்பில் அதீத ஆர்வம் ஏற்படமை குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கை
தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது பெரும் இழப்பு.

புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிரியை தாக்கும் வேகத்துக்கு அன்றைய திரையுலகத் தொழில்நுட்பத்தால் ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 கட்டங்கள் என்பதே கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஒரு வினாடிக்கு 34 கட்டங்களாக மாற்றியமைத்தனர்.1940 27, நவம்பர் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் சைனா டவுன் பகுதியில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் புரூஸ் லீ பிறந்தார். இவரது தந்தை லீ ஹோய்-சுவென், ஒரு நடிகர். தாய் கிரேஸ் ஒரு கத்தோலிகர்.

புரூஸ் லீக்கு பெற்றோர்கள் 'லீ ஜுன்பேன்' என பெயர் வைத்தனர். சீன மொழியில் இதற்கு உலக பாதுகாவலர் என்று பொருள். இந்த பெயர் அமெரிக்க நர்ஸின் வாயில் நுழையவில்லை 'ஜுன் பேன்' சிரமமாக இருந்ததால் அந்த நர்ஸ் புரூஸ் என செல்லமாக கூப்பிட, அதுவே பிற்காலத்தில் அவரது பெயராக நிலைபெற்றது.புரூஸ் லீக்கு மூன்று மாதம் ஆனபோது அவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. 12 வயதுவரை லா செல் கல்லூரியில் மேல்நிலைக் கல்வி பயின்றார் புரூஸ் லீ. பிறகு புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் அவரது படிப்பு தொடர்ந்தது.1959-ம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் ஹாங்காங் கேங்ஸ்டர் ஒருவரின் மகனை தாக்கினார் புரூஸ் லீ. இந்த சம்பவத்தால் பயந்து போன அவரது தந்தை, புரூஸ் லீயை சான் பிரான்சிஸ்கோ அனுப்பி வைத்தார்.இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் புகழ் தற்காப்பு கலை வட்டாரத்தில் பரவ ஆரம்பித்தது. சான் பிரான்ஸ்கோவிலும், சியாட்டிலிலும் படிப்பை தொடர்ந்தவர் பிறகு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிலாஸபி பிரிவில் சேர்ந்தார். அங்கு தான் இவர் தனது மனைவி லிண்டா எமரியைச் சந்தித்தார்.

நடிகராக

புரூஸ் லீயின் நடிப்பு வாழ்க்கை அவரது சிறு வயதிலேயே தொடங்கியது. அவரது தந்தை ஒரு நடிகர் என்பதால் தனது 18-வயதிற்குள் இருபது படங்களில் நடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது 'பேட்மேன்' படத்தின் தயாரிப்பாளர் வில்லியம் டோசியர் பார்வையில் பட்டது இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

அவர் அமெரிக்காவில் இருந்தபோது ’தி கிரீன் ஹார்னட்’ , 'அயர்ன் சைடு’ , 'ஹியர் கம் த பிரைடுசு’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். அமெரிக்காவிலிருந்து ஹாங்காங் திரும்பிய புரூஸ் லீயுடன் கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனி தயாரிப்பாளர் ரேமண்ட் செள ஒப்பந்தம் செய்து கொண்டார். இவரது தயாரிப்பில் புரூஸ் லீ நடித்து வெளிவந்த முதல்படம் பிக்பாஸ். 1971-ல் வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும் பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. பாக்சிங் சாம்பியனாகவும்,'கிரவுன் காலனி சா சா’ சாம்பினாகவும் அறியப்பட்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது.கடத்தல் முதலாளிகளுக்கும் அப்பாவி தொழிலாளிக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமே 'பிக் பாஸ்' படத்தின் கதை. புரூஸ் லீயின் அதிவேக சண்டைகளும், கண்களில் அவர் காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்தது.

இதையடுத்து 1972-ல் 'பிஸ்ட் ஆஃப் பியூரி' படம் வெளியானது. தனது மாஸ்டரை கொன்றவர்களை புரூஸ் லீ பழிவாங்கும் கதை. நரம்புகள் புடைக்க எதிரியை ஒரே குத்தில் அவர் வீழ்த்தி ஆக்ரோஷமாக கூச்சலிடும் காட்சி ரசிகர்களின் ரத்த ஓட்டத்தை எகிறச் செய்தது. முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டூடண்டுகளுடன் சண்டையிடும் காட்சி இதன் பிரதானம். 15 மில்லியன் டாலர்களை இப்படம் குவித்தது. புரூஸ் லீ கதை எழுதி இயக்கிய 'வே டு த டிராகன்' படம் 'பிஸ்ட் ஆவ் பியூரி' வெளியான அதே ஆண்டு வெளியானது. (இப்படத்தை 'ரிடர்ன் ஆவ் த டிராகன்' எனவும் கூறுவர்). இப்படம் உலகம் முழுவதும் புரூஸ் லீயின் புகழை கொண்டு சேர்த்தது. அவருடன் சேர்ந்து குங்பூ கலையும் புகழடைந்தது.

இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் குங்பூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக 'வே டு த டிராகன்' படத்தின் இறுதிக்காட்சியில், தான் அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்த கராத்தே மாஸ்டர் சக் நாரிஸை புரூஸ் லீ பயன்படுத்தினார்.
அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ் லீ உருவாக்கிய படம் 'என்டர் த டிராகன்'. ஹாலிவுட்டை மட்டுமின்றி உலகையே ஆட்கொண்டது இந்தப் படம். அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் இது வசூலித்தது (அமெரிக்காவில் மட்டும்) 850, 000 டாலர்கள்! இன்றைய மதிப்பில் இது பல மில்லியன்கள் பெறும். உலகம் முழுவதும் இப்படம் 200 மில்லியன் டாலர்களை வசூலித்து புரூஸ் லீயை தற்காப்பு கலையின் முடிசூடா மன்னனாக்கியது.

மரணம்
ஆனால், இந்த வெற்றியை அவரால் பார்க்க முடியவில்லை; 'என்டர் த ட்ராகன்' வெளியாவதற்கு மூன்று வாரங்கள் முன்பு 1973-ம் ஆண்டு ஜுலை 20 மரணத்தை தழுவினார் புரூஸ் லீ. அன்று இரவு தலைவலி என்று தூங்கச் சென்ற புரூஸ் லீக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழவே இல்லை. 'கோமா' நிலைக்கு சென்றவர் ஹாங்காங் குயின் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலே காலமானார். இன்று வரை புரூஸ் லீயின் மரணம் மர்மமாகவே உள்ளது.


ஜீட் குன் டோ
கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களை சேர்த்து புரூஸ் லீ உருவாக்கிய புதிய தற்காப்பு கலை அவரது பெயரிலேயே 'புரூஸ் லீ குங்பூ' என அழைக்கப்பட்டது. இதனை தத்தவப் பாடத்துடன் சேர்த்து 'ஜே கேடி' எனும் புதிய பயிற்சியை அறிமுகப்படுத்தினார். இதனை பயிற்றுவிக்க பல பள்ளிகளையும் திறந்தார்.

உடற்பயிற்சி
புரூஸ் லீ உடம்பை பேணிய விதம் அலாதியானது. காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை வயிறு மற்று தசைகளுக்கான பயிற்சி. பிறகு எடை பயிற்சி மற்றும் சைக்கிளிங். புரூஸ் லீ விரும்பி செய்த மற்றொரு பயிற்சி ஓடுவது. ஐந்து முதல் ஆறு மைல்கள் அதி வேகமாக ஓடிக்கொண்டே ஐந்து நிமிடத்துக்கொருமுறை வேகத்தை மாற்றிக் கொள்வது.

புரூஸ் லீ உடல் உறுதி சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார். பிரத்யேகமா செய்த உணவுகளையே அவர் பெரும்பாலும் எடுத்துக் கொண்டார். ஒருவர் உள்ளங்கையை மூடி திறப்பதற்குள் அவரது கையை தாக்கும் அளவுக்கு வேகம் புரூஸ் லீயிடம் இருந்தது. ஒரு கையின் சுண்டுவிரல் மற்றும் கட்டை விரலை மட்டும் பயன்படுத்தி தண்டால் எடுக்கும் அளவுக்கு விரல்களை உறுதிப்படுத்தி வைத்திருந்தது இன்னொரு ஆச்சரியம்.

சிலை
திரையில் இத்தனை ஆக்ரோஜமாக இத்தனை உண்மையாக நிகழ்த்தி காட்டிவர்கள் புரூஸ் லீக்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது முழு உருவ வெண்கல சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை சென்ற நூற்றாண்டின் சமூகத்தை பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ் லீயையும் சேர்த்துள்ளது.

நடித்துள்ள திரைப்படங்கள்


* என்டர் த டிராகன்
* த பிக் பாஸ்
* ரிட்டன் ஆவ் த டிராகன்
* ஃவிஸ்ட் ஆவ் ஃவியூரி
* வே ஆவ் த டிராகன் —
avatar
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1189
மதிப்பீடுகள் : 386

View user profile

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by சிவா on Sun Aug 26, 2012 12:17 pm

புரூஸ் லீ பற்றிய தகவலுக்கு நன்றி செந்தில்! இவருடைய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்!

பின்குறிப்பு:

இவர் இரண்டு விரல்கள் மூலம் தண்டால் எடுத்தார்! நான் ஒரு விரலில் தண்டால் எடுத்து வருகிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by யினியவன் on Sun Aug 26, 2012 12:20 pm

மீண்டும் ப்ரூஸ் லீன்னு போஸ்டர் அடிச்சிடலாமா சிவா? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by சிவா on Sun Aug 26, 2012 12:29 pm

@யினியவன் wrote:மீண்டும் ப்ரூஸ் லீன்னு போஸ்டர் அடிச்சிடலாமா சிவா? புன்னகை

எனக்குத்தான் விளம்பரம் பிடிக்காதே யினியவன்! அதனால் வேண்டாம்! புரூஸ் லீயின் 100 வது படத் துவக்க விழாவிற்குக் கூடச் சென்று வந்துள்ளேன்! இதுவரை இதை உங்களிடம் கூறினேனா? பாடகன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by அருண் on Sun Aug 26, 2012 12:35 pm

@சிவா wrote:
பின்குறிப்பு:

இவர் இரண்டு விரல்கள் மூலம் தண்டால் எடுத்தார்! நான் ஒரு விரலில் தண்டால் எடுத்து வருகிறேன்!

இந்த வித்தையை எனக்கும் கற்று கொடுங்க பாஸ்.! புன்னகை
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by யினியவன் on Sun Aug 26, 2012 12:45 pm

@சிவா wrote:எனக்குத்தான் விளம்பரம் பிடிக்காதே யினியவன்! அதனால் வேண்டாம்! புரூஸ் லீயின் 100 வது படத் துவக்க விழாவிற்குக் கூடச் சென்று வந்துள்ளேன்! இதுவரை இதை உங்களிடம் கூறினேனா? பாடகன்
ஆகா இன்னிக்கு ஞாயிறு அல்லவா? மறந்துட்டேன். சிவா அதிகம் வேண்டாம் - அளவா சாப்பிடுங்க. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by சிவா on Sun Aug 26, 2012 1:54 pm

@அருண் wrote:
@சிவா wrote:
பின்குறிப்பு:

இவர் இரண்டு விரல்கள் மூலம் தண்டால் எடுத்தார்! நான் ஒரு விரலில் தண்டால் எடுத்து வருகிறேன்!

இந்த வித்தையை எனக்கும் கற்று கொடுங்க பாஸ்.! புன்னகை

வித்தையா? அடப்பாவிகளா இது ஒரு கலை! பைத்தியம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by சிவா on Sun Aug 26, 2012 1:55 pm

@யினியவன் wrote:
@சிவா wrote:எனக்குத்தான் விளம்பரம் பிடிக்காதே யினியவன்! அதனால் வேண்டாம்! புரூஸ் லீயின் 100 வது படத் துவக்க விழாவிற்குக் கூடச் சென்று வந்துள்ளேன்! இதுவரை இதை உங்களிடம் கூறினேனா? பாடகன்
ஆகா இன்னிக்கு ஞாயிறு அல்லவா? மறந்துட்டேன். சிவா அதிகம் வேண்டாம் - அளவா சாப்பிடுங்க. புன்னகை

வேலை செய்து கொண்டிருக்கிறேன் தல!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Aug 26, 2012 2:15 pm

புரூஸ் லீ பற்றிய தகவல் பகிர்வுக்கு நன்றி...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by Rangarajan Sundaravadivel on Sun Aug 26, 2012 2:39 pm

பகிர்வுக்கு நன்றி தோழரே

avatar
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 164
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by ராஜா on Sun Aug 26, 2012 4:22 pm

பகிர்வுக்கு நன்றி செந்தில் , புரூஸ்லி பற்றிய செய்திகளை படிக்கும்போதெல்லாம் அவரின் மர்மமான மரணம் தான் ஞாபகத்துக்கு வரும்.

@சிவா wrote:இவர் இரண்டு விரல்கள் மூலம் தண்டால் எடுத்தார்! நான் ஒரு விரலில் தண்டால் எடுத்து வருகிறேன்!
எப்படி தல , மல்லாக்க படுத்துகிட்டு எடுப்பீங்களா?? சிரிப்பு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by கேசவன் on Sun Aug 26, 2012 5:58 pm

தகவலுக்கு நன்றி
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by யினியவன் on Sun Aug 26, 2012 6:00 pm

@ராஜா wrote:
@சிவா wrote:இவர் இரண்டு விரல்கள் மூலம் தண்டால் எடுத்தார்! நான் ஒரு விரலில் தண்டால் எடுத்து வருகிறேன்!
எப்படி தல , மல்லாக்க படுத்துகிட்டு எடுப்பீங்களா?? சிரிப்பு
சிவா சொல்றது புது s3 ல ஒரு கேம் ராஜா!!! புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by சிங்கம் on Mon Aug 27, 2012 11:04 am

என் முதல் குரு ப்ரூஸ் லீ, தற்போதைய குரு ஜாக்கிசான்.
avatar
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by யினியவன் on Mon Aug 27, 2012 11:08 am

@சிங்கம் wrote:என் முதல் குரு ப்ரூஸ் லீ, தற்போதைய குரு ஜாக்கிசான்.
அடுத்த குரு சிம்பு தானே? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by சிங்கம் on Mon Aug 27, 2012 11:37 am

அடுத்த குரு சிம்பு தானே?
மனுசங்களபத்தி பேசும் போது கொரங்க எதுக்கு இழுக்கறீங்க ?
avatar
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by யினியவன் on Mon Aug 27, 2012 12:48 pm

@சிங்கம் wrote:
அடுத்த குரு சிம்பு தானே?
மனுசங்களபத்தி பேசும் போது கொரங்க எதுக்கு இழுக்கறீங்க ?
குரங்குகள் கோச்சுக்காதுன்னு இப்படி எல்லாம் அபாண்டமா பழி போட கூடாது. காட்டுக்கு சிங்க ராசாவா இருக்கற நீங்க உங்க சமஸ்தானத்தில் இருக்கும் குரங்கை இன்சல்ட் பண்ணக் கூடாது. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by அகிலன் on Mon Aug 27, 2012 6:51 pm

அபார சக்தி கொண்ட மனிதர்களுக்கு ஆயுள் குறைவு என்பது புரூஸ் லீ க்கும் சரியாகிவிட்டது.
அவர் புகழ் என்றும் நிலைக்கட்டும்.

அடுத்ததாக புரூஸ் லீ யின் இடத்தை தனுஷ் தான் பிடிப்பார் என்று பேசிக்கொள்ளுகிறார்கள் உண்மையா?
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by விநாயகாசெந்தில் on Mon Aug 27, 2012 7:00 pm

@அகிலன் wrote:அபார சக்தி கொண்ட மனிதர்களுக்கு ஆயுள் குறைவு என்பது புரூஸ் லீ க்கும் சரியாகிவிட்டது.
அவர் புகழ் என்றும் நிலைக்கட்டும்.

அடுத்ததாக புரூஸ் லீ யின் இடத்தை தனுஷ் தான் பிடிப்பார் என்று பேசிக்கொள்ளுகிறார்கள் உண்மையா?
நல்ல காமெடி
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1189
மதிப்பீடுகள் : 386

View user profile

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by விநாயகாசெந்தில் on Mon Aug 27, 2012 7:01 pm

@அகிலன் wrote:அபார சக்தி கொண்ட மனிதர்களுக்கு ஆயுள் குறைவு என்பது புரூஸ் லீ க்கும் சரியாகிவிட்டது.
அவர் புகழ் என்றும் நிலைக்கட்டும்.

அடுத்ததாக புரூஸ் லீ யின் இடத்தை தனுஷ் தான் பிடிப்பார் என்று பேசிக்கொள்ளுகிறார்கள் உண்மையா?
நல்ல காமெடி
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1189
மதிப்பீடுகள் : 386

View user profile

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by சார்லஸ் mc on Mon Aug 27, 2012 8:25 pm

@அகிலன் wrote:அபார சக்தி கொண்ட மனிதர்களுக்கு ஆயுள் குறைவு என்பது புரூஸ் லீ க்கும் சரியாகிவிட்டது.
அவர் புகழ் என்றும் நிலைக்கட்டும்.

அடுத்ததாக புரூஸ் லீ யின் இடத்தை தனுஷ் தான் பிடிப்பார் என்று பேசிக்கொள்ளுகிறார்கள் உண்மையா?

நீங்கள் என்ன சொல்ல வருகிறிர்கள் அகிலன்.???!!!

2 ஆப்ஷனில் எதை குறிப்பிடுகிறீர்கள்? பயம்
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4347
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by அகிலன் on Tue Aug 28, 2012 1:20 am

@சார்லஸ் mc wrote:
@அகிலன் wrote:அபார சக்தி கொண்ட மனிதர்களுக்கு ஆயுள் குறைவு என்பது புரூஸ் லீ க்கும் சரியாகிவிட்டது.
அவர் புகழ் என்றும் நிலைக்கட்டும்.

அடுத்ததாக புரூஸ் லீ யின் இடத்தை தனுஷ் தான் பிடிப்பார் என்று பேசிக்கொள்ளுகிறார்கள் உண்மையா?

நீங்கள் என்ன சொல்ல வருகிறிர்கள் அகிலன்.???!!!

2 ஆப்ஷனில் எதை குறிப்பிடுகிறீர்கள்? பயம்
why this கொலைவெறி? உங்களுக்கு நண்பா?
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: புரூஸ் லீ பற்றிய தகவல் !!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum