ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தும்மல் விளைவித்த ஊடல்!

View previous topic View next topic Go down

தும்மல் விளைவித்த ஊடல்!

Post by சிவா on Wed Aug 01, 2012 12:01 am
தும்மல்' என்ற செயல் உடற்கூற்றியல் சார்ந்த நிகழ்வு. அளவுக்கு மீறிய நெடியைத் தாங்கமுடியாமல், அதை முகர்வதால் மூச்சு விடுவதில் உருவாகும் தடையழர்ச்சியின் வெளிப்பாடாக, திணறல் ஏற்பட்டு அதை, விடுவிக்க மூக்கும் வாயும் முழு ஆற்றலுடன் மூச்சை வெளியேற்றுவதால் உண்டாவது. தும்மல், "நீர்க்கோவை'யாலும் (ஜலதோஷம்) ஏற்படும். இஃதன்றி, காற்று மாசு, சுற்றுச்சூழல், உணவு, உடை, அணிகலன் இவற்றின் ஒவ்வாமையாலும் தும்மல் வரும். இவைதவிர மனவியல் காரணங்களாலும் தும்மல் உருவாகும் என்று கூறப்படுகிறது.

மங்களகரமான செயல்களைப் பற்றிப் பேசும்போது தும்மல் போடுபவர்கள் கடிந்துகொள்ளப்படுவதும் நடைமுறையில் உள்ளது. தும்முபவர் ஒற்றைத் தும்மலுடன் நிறுத்திவிடாமல், மேலும் ஓர் தும்மலைப் போட்டால் அதை நற்சகுனமாக ஏற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. குழந்தைகள் தும்மினால் அக்குழந்தைகளை ""நூறாண்டு வாழ்க!'' என்று குடும்பத்தினர் வாழ்த்தும் வழக்கம் இன்றும் உள்ளது. ஆனால், தும்மல் குறித்து திருவள்ளுவர் என்ன கூறியுள்ளார் என்பதைக் காண்போம்.

தலைவனும் தலைவியும் ஊடல்கொண்டு ஒருவருடன் ஒருவர் பேசுவதைத் தவிர்த்து இருக்கின்றனர். வழக்கம்போல தலைவன்தான் தன் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து, தான் சமாதானத்துக்குத் தயார் என்பதை உணர்த்த ஓர் உபாயம் கண்டுபிடிக்கிறான். தும்மல் போட்டால் அவரை வாழ்த்தும் பொருட்டு ""வாழ்க பல்லாண்டு!'' என்று கூறுதல் வழக்கத்தில் உள்ளதால், தலைவன் செயற்கையாக ஓர் தும்மலை வரவழைத்து தலைவியின் காதுகளில் ஒலிக்கும்படியாகப் பேரிரைச்சலுடன் தும்முகிறான்.

தலைவிக்கு, தலைவனின் நோக்கம் புரிந்துவிட்டது. அவரோடு நான் பேசாதிருக்கிறேன் ஆகையால், தம்மை ""நெடுங்காலம் வாழ்க'' என்று நான் வாய்திறந்து சொல்லவாவது அவரோடு நான் பேசுவேன் என நினைத்து அவர் தும்மினார் போலும்' என எண்ணினாள்.

""ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ்க என்பாக்கு அறிந்து'' (1312)


இவ்வாறு அவர்கள் ஊடலுக்கு விடைகொடுத்துவிட்டுக் கூடிக்களித்து வாழும் நிலையில், ஒருநாள் தலைவன் எதேச்சையாக ஓர் தும்மலை வெளிப்படுத்தினான். தலைவியும் அனிச்சைச் செயலாக தலைவனுக்குத் தன் வாழ்த்தைத் தெரிவித்தாள். ஆனால், உடனே அவளுள் ஓர் ஐயம் தோன்றியது. நாம் அருகிலேயே இருக்கிறோம். இந்நிலையில் இவர் தும்முகிறார் என்றால், இவரை வேறு யாரோ ஒரு மையல்கொண்ட தையல் நினைக்கிறாள் என்றுதானே பொருள் என முடிவு செய்கிறாள். உடனே தாம் கொடுத்த வாழ்த்தை அழித்துவிடுகிறாள். தலைவனை நோக்கி, ""உங்கள்பால் காதல்கொண்ட வேறு மங்கை எவளோ ஒருத்தி உங்களை நினைத்த காரணத்தால்தானே தும்மினீர்?'' என்று அழுது புலம்புகிறாள். தும்மலால் நேர்ந்த இந்தத் துன்ப நிகழ்வைக் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார் வள்ளுவர்.

""வழுத்தினாள் தும்மினேனாக அழித்து அழுதாள்
யார்உள்ளித் தும்மினீர் என்று'' (1317)


இதுகேட்டுப் பதறிப்போன தலைவன், தனது தும்மல் இயற்கையாக ஏற்பட்டதுதான் என்றும், தனக்கு வேறு எந்தப் பெண்ணுடனும் தொடர்பு இல்லை என்றும் தெளிவுபடுத்தி, தலைவியை சமாதானப்படுத்தினான். இந்தத் தும்மலை இயற்கைதான் என்பதை தலைவி புரிந்துகொண்டாள் என்று மகிழ்ந்தவனுக்கு அடுத்தும் ஓர் தும்மல் வரப்பார்த்தது. ஐயகோ.. இப்போதுதான் முந்தைய தும்மலால் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்திருக்கிறது; மீண்டும் ஓர் தும்மலா? மீண்டும் சிக்கல் உருவாகுமே என்று எண்ணி, வந்த தும்மலை அடக்க முயன்றான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த தலைவி, ""உங்களை யாரோ காதலுடன் நினைக்கிறார்கள்; அதனால்தான் தும்மல் வருகிறது. ஆனால் நான் கேட்டுவிடுவேனோ என்பதற்காக அதை மறைக்கப் பார்க்கிறீர்'' என்று கோபத்தை வெளிப்படுத்தும் முகத்தான் அழுது மீண்டும் ஊடல் கொள்கிறாள்.

""தும்மச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று'' (1318)


தும்மல் போடுவதில் இத்தனை நுட்பமான செய்திகளா? தும்மல் வந்தால் இனி காலம், நேரம் பார்த்துத்தான் தும்ம வேண்டும் போலிருக்கிறது!


"அடி'களின் பெருமை!

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் - இளங்கோவடிகள்

சிலப்பதிகாரத்தில் வரும் பெண் துறவி - கவுந்தியடிகள்

திருநாவுக்கரசு சுவாமியைப் போற்றி, பக்தி செய்தவர் - அப்பூதியடிகள்

முதன் முதலில் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் - மறைமலையடிகள்

இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர் - காந்தியடிகள்

இசைத் தமிழ் நூலான "யாழ்' நூலை எழுதியவர் - விபுலானந்த அடிகள்.

வடலூரில் சமரச சன்மார்க சத்திய ஞான சபையை நிறுவியவர் - இராமலிங்க அடிகள்.

மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமையத் தூண்டுகோலாக இருந்தவர் - ஞானியாரடிகள்

சோம.நடராசன்


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தும்மல் விளைவித்த ஊடல்!

Post by அசுரன் on Wed Aug 01, 2012 12:10 am

சின்ன தமிழ் படம் பார்த்தது போல இருந்தது.. இந்த தும்மல் மேட்டரு.. இனி மனைவி அருகில் இருக்கும்போது தும்மல் வந்தா அடக்கிக்கனும்ப்பா!...

அருமை அருமை... என்ன ஒரு தமிழ் விருந்து.. அறிவை வளர்க்கும் தமிழை நம் தமிழகம் மறப்பது தான் வேதனையாக உள்ளது..

அரிய பல தகவல்களை தொகுத்தளிக்கும் சிவாவுக்கு நன்றிகள்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தும்மல் விளைவித்த ஊடல்!

Post by சிவா on Wed Aug 01, 2012 12:14 am

[You must be registered and logged in to see this link.] wrote:சின்ன தமிழ் படம் பார்த்தது போல இருந்தது.. இந்த தும்மல் மேட்டரு.. இனி மனைவி அருகில் இருக்கும்போது தும்மல் வந்தா அடக்கிக்கனும்ப்பா!...

அருமை அருமை... என்ன ஒரு தமிழ் விருந்து.. அறிவை வளர்க்கும் தமிழை நம் தமிழகம் மறப்பது தான் வேதனையாக உள்ளது..

அரிய பல தகவல்களை தொகுத்தளிக்கும் சிவாவுக்கு நன்றிகள்

நன்றி அசுரன்!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தும்மல் விளைவித்த ஊடல்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum