உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» புத்தக தேவைக்கு...
by vinotkannan Yesterday at 8:06 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Yesterday at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:51 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Yesterday at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Yesterday at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Thu May 23, 2019 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Thu May 23, 2019 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Thu May 23, 2019 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Thu May 23, 2019 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Thu May 23, 2019 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Thu May 23, 2019 7:51 pm

» ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது
by T.N.Balasubramanian Thu May 23, 2019 5:26 pm

» முடிவு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Thu May 23, 2019 4:16 pm

» ரமலான் சிந்தனைகள்
by ஜாஹீதாபானு Thu May 23, 2019 4:12 pm

» சிரி… சிரி… சிரி… சிரி…
by ஜாஹீதாபானு Thu May 23, 2019 4:11 pm

» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
by ஜாஹீதாபானு Thu May 23, 2019 4:10 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Thu May 23, 2019 12:47 pm

» கற்றதும்... பெற்றதும்.. சுஜாதா
by பா. சதீஷ் குமார் Thu May 23, 2019 6:49 am

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by புத்தகப்பிாியன் Wed May 22, 2019 1:32 pm

» தள்ளினால் தளராதே, துள்ளியெழு!
by ayyasamy ram Wed May 22, 2019 11:52 am

» இளம் நடிகருக்கு பயிற்சி கொடுத்த அஞ்சலி
by ayyasamy ram Wed May 22, 2019 11:51 am

» தேர்தல் முடிவுக்குப் பிறகு வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Wed May 22, 2019 11:48 am

Admins Online

தமிழ் அகராதி - எ

தமிழ் அகராதி - எ Empty தமிழ் அகராதி - எ

Post by சந்திரகி on Mon Jul 09, 2012 10:44 am

ஆக்கமும், உழைப்பும் : http://www.thamilworld.com/forum/ - நன்றிகள்


எ - ஏழென்னும் எண்ணின் குறியீடு; ஓர் வினா எழுத்து
எஃகு - கூர்மை; அறிவு நுட்பம்; உருக்கு; ஆயுதம்; ஆராய்ச்சி செய்; நிமிர்ந்தெழு; நெகிழ்ச்சியுறு; தளர்ந்து அவிழ்; விரல்களால் இழு; ஏறுதல் செய் [எஃகுதல்]
எஃகம் - கூர்மை : நுதி : சக்கரம் : ஆயுதம் : வேல் : வாள் : சூலம் : எறிபடை.
எஃகல் - எஃகுதல்.
எஃகுக்கோல் - பஞ்சு கொட்டும் வில்.


எஃகுச்செவி - நுனித்தறியுஞ் செவி.
எஃகுதல் - அவிழ்தல் : உதைந்தேறுதல் : எட்டுதல் : எதிர்க்குதல் : தாழ்ந்தெழும்பல் : நீளல் : நெகிழ்தல் : நொய்தாக்கல் : பஞ்சு கொட்டல் : பஞ்சு பறித்தல்.
எஃகுபடுதல் - இளகின நிலையை அடைதல்.
எஃகுறுதல் - அறுக்கப்படுதல்.
எக்கச் சக்கம் - தாறுமாறு; ஒழுங்கீனம்


எக்கர் - மனல் குன்று; நுண் மணல்; கர்வமுடையவர்; பலர் முன் பேசத்தகாத மொழி
எக்கணும் - எவ்விடமும்.
எக்கமத்தளி - ஒரு வகை முழவு.
எக்கரணம், எக்கரவம் - எழுத்தின் உரப்பு ஓசை.
எக்கல் - எட்டல் : ஏறுதல் : குவிக்கப்படுதல் : குவித்தல் : சொரிதல் : பதித்தல் : பொருதல் : வயிற்றையுள்ளிழுத்தல்.


எக்கழுத்தம், எக்கழுத்தல் - இறுமாப்பு : ஏக்கழுத்தம் என்பதன் குறுக்கம்.
எக்களிப்பு - மிகுமகிழ்ச்சி.
எக்கனம் - அன்னம் : கவரிமா : நாய் : நீர்நாய்.
எக்காளை - ஒரு கஞ்சக் கருவி : கோணக் கொம்பு.
எக்கி - நீர் முதலியன வீசுங்கருவி.


எக்கியம் - வேள்வி : துவாபரயுகம்.
எக்கியோபவீதம் - பூணூல்.
எக்கு - எக்கென்னேவல்.
எக்குதல் - குவிதல் : மிகைச் செல்லுதல் : ஊடுருவிச் செல்லுதல் : உள்ளிழுத்தல் : மேலே செல்ல வீசுதல் : எட்டுதல்.
எக்கே - வருத்தக் குறிப்பு.


எக்களி - மிக்க மகிழ்ச்சியுறு [எக்களித்தல், எக்களிப்பு]
எக்காளம் - நீண்ட ஊதுகுழல்
எகத்தாளம், எகத்தாளி - அன்னப்பறவை; கவரிமான்; புளிய மரம்
எகத்தாளி - பரிகாசம்.
எகனை - எதுகை : பொருத்தம்.


எகினப்பாகன் - நான்முகன்.
எகினன் - நான்முகன் : நாய்.
எகின் - எகினம் : புளியமரம் : அழிஞ்சின மரம்.
எகுன்று - குன்றிக் கொடி.
எங்கண் – எவ்விடம்


எங்கணா - எங்குள்ளாய் : எங்கணாய்.
எங்கித்தை, எங்கு, எங்குத்தை - எவ்விடம்.
எங்கள் - வேற்றுமை ஏற்கும் பொழுது 'யாங்கள்' பெறும் உருவம்
எங்கு, எங்கே - எவ்விடம்
எங்ஙன், எங்ஙனம் - எவ்வாறு; எவ்விடம்


எச்சணி - சொல்லலங்கார வகையுள் ஒன்று.
எச்சரிக்கை, எச்சரிப்பு - முன்னறிவிப்பு : எச்சரித்தல் : ஒருவகைப் பாட்டு.
எச்சவனுமானம் - காரியங் கொண்டு காரணம் அறிதல் : அஃதாவது ஆற்றில் நீர்வரக் கண்டவன் மலைக்கண் மழையுண்டென அறிதல்.
எச்சவாய் - குதம் : மலவாய் : எருவாய்.
எச்சவுரை - மேற்கோள் காட்டிச் சித்தாந்தப்படுத்தி உரைப்பது.


எச்சன் - வேள்வித் தலைவன் : தீக்கடவுள் : திருமால்.
எச்சிலன் - உலோபி.
எச்சிலார் - எச்சிலுடையவர் : இழிந்தோர்.
எச்சிற்கல்லை - எச்சில் இலை.
எச்சிற்படுத்தல் - புண்படுத்தல் : கன்னிமை கெடுத்தல்.


Last edited by சந்திரகி on Mon Jul 09, 2012 11:42 am; edited 1 time in total
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
மதிப்பீடுகள் : 172

View user profile

Back to top Go down

தமிழ் அகராதி - எ Empty Re: தமிழ் அகராதி - எ

Post by சந்திரகி on Mon Jul 09, 2012 10:44 am

எச்சிப்பேய் - ஒரு பேய் : பெருந் தீனிக்காரன்.
எச்சு - உயர்வு : உயர்ந்த ஓசை : குறைவு.
எச்சம் - மிச்சம்; பறவை முதலியவற்றின் மலம்; குறைபாடு; சந்ததி; மகன்; (இலக்கணம்) பெயரெச்சம்; வினையெச்சம் (இலக்கணம்) தொக்கி நிற்கும் சொல்; யாகம்
எச்சரி - விழிப்புடனிருக்கச் செய் [எச்சரித்தல், எச்சரிக்கை]
எச்சில் - உமிழ்நீர்; அசுத்தமானது; உண்டு கழித்த மிச்சம்


எசமானன், எசமான் - வேள்வித் தலைவன்; குடும்பத் தலைவன்; அதிகாரி (பெண்பால் - எசமாட்டி )
எஞ்சல் - குறைபாடு; அழிவு; இல்லாதொழிதல்
எச்சமிடுதல் - மலங்கழித்தல்.
எஞ்சலார் - புதியவர்.
எஞ்சலித்தல் - குறைவு செய்தல்.


எஞ்சி நிற்றல் - குறைந்து நிற்றல் : தொக்கு நிற்றல்.
எஞ்சிய சொல்லின் எய்தக்கூறல் - நூல் உத்திகள் முப்பத்திரண்டினுள் ஒன்று : அது : சொல்லாது விடப்பட்டவைக்குச் சொல்லியதனால் இலக்கணம் பொருந்தச் சொல்லுதல்.
எஞ்சுதல் - எஞ்சுல் : மிஞ்சுதல் : குறைதல் : கெடுதல் : ஒழிதல் : தொக்கு நிற்றல் : கடத்தல் : செய்யா தொழிதல்.
எஞ்ஞம் - எக்கியம் : ஓமம் : யாகம் : வேள்வி.
எஞ்சாமை - முழுமை


எஞ்சு - மிஞ்சு; குறைவாகு; கேடுறு; இல்லாதொழி; வரம்பு கட; செய்யா தொழி; (இலக்கணம்) தொக்கி நில்
எஞ்ஞான்றும் - எக்காலத்தும்
எட்கசி, எட்கசிவு - எள்ளுண்டை.
எட்கிடை - எள்ளுக்கிடத்தற்கு வேண்டிய இடம்.
எட்குக்குழாம் - கரடிக் கூட்டம்.


எட்கோது - எள்ளுக்காய்த் தோல்.
எட்சத்து - எண்ணெய்.
எட்சி - உதயம் : எழுச்சி.
எட்சிணி - ஒரு பெண் பிசாசு (யட்சிணி)
எட்சினி - குபேரன் மனைவி : ஒரு பெண்.


எட்டடிப் பறவை - சிம்புள்.
எட்டமன் - எட்டயபுரத்தரசர்களின் பட்டப் பெயர்.
எட்டம் - தொலைவு : நீளம்.
எட்டர் - அரசனுக்கு நாழிகைக் கணக்குக் கூறும் மங்கலப் பாடகர்.
எட்டல் - எட்டுதல் : தொடுதல்.


எட்டன் - எட்டமன் : மூடன் : அறிவிலான்.
எட்டாக்கை - தொலை.
எட்டாரச் சக்கரம் - மிறைக்கவி.
எட்டிகம் - ஒரு குருவி : சீந்திற் கொடி.
எட்டிகள் - செட்டிகள்.


எட்டிகுடி - ஒரு முருகன் பதி.
எட்டிநோக்குதல் - அண்ணாந்து பார்த்தல்.
எட்டிப்புரவு - வாணிகத்தாற் சிறந்தோர்க்கு அரசன் கொடுத்த நிலம்.
எட்டிப்பூ - எட்டிப் பட்டம் பெற்ற வணிகர்கட்கு அரசர்களாற் கொடுக்கப்பெறும் பொற்பூ.
எட்டியர் - வைசியர்.


எட்டியல் - வாகைத் திணைத் துறைகளுள் ஒன்றாகிய அவைய முல்லைக்குரிய எட்டுறுப்புகள்.
எட்டி விரியன் - ஒரு பாம்பு.
எட்டிற்பத்தில் - இடையிடையே.
எட்டினர் - நண்பர்.
எட்டுக்கண்விட்டெறிதல் - எங்குந் தன் அதிகாரஞ் செல்லுதல்.


எட்டுதல் - கிட்டுதல் : நெருங்குதல் : புலப்படுதல் : தாவிப்பாய்தல் : விலகுதல் : அகப்படுதல் : தாவியுயர்தல் : பொருந்தல்.
எட்டுத்தொகை - சங்க காலத்தில் தொகுக்கப்பட்ட எட்டுநூல் : நற்றிணை : குறுந்தொகை : ஐங்குறு நூறு : பதிற்றுப்பத்து : பரிபாடல் : கலித்தொகை : அகநானூறு : புறநானூறு.
எட்பாகு - எள்ளுப்பாகு.
எட்ட - தூரத்தில்
எட்டி - வைசிய சாதி; வைசியர் பெறும் பட்டம்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
மதிப்பீடுகள் : 172

View user profile

Back to top Go down

தமிழ் அகராதி - எ Empty Re: தமிழ் அகராதி - எ

Post by சந்திரகி on Mon Jul 09, 2012 10:45 am

எட்டு - எட்டு எண்ணும் எண்; விருப்பம்; (ஒன்றை) அடைய நெருங்கு; அகப்படு; மனத்தில் புலப்படு; தாவிப் பாய்தல் செய்; விலகிச் செல் [எட்டுதல்]
எட்டுணை - எள்ளின் அளவு; ( எள் + துணை )
எடு - சுமத்தல் செய்; உயர்த்து; தராசில் நிறு; (ஆட்கள்) திரட்டு; உரத்துச் சொல்லு; உரத்துப் பாடு; புகழ்ந்து கூறு; பொறுக்கியெடு; உண்டாக்கு; நீக்கு; உட்கொள்; வளர்தல் செய்; பருத்தல் செய்; மேல் நோக்கியிரு; பொருந்தியிரு [எடுத்தல்]
எடாதவெடுப்பு - செய்ய முடியாத காரியம் : அரிய செயல்.
எடார் - மைதானம் : வெளி நிலம் : பேரிடம்.


எடுக்கல் - தூக்குதல்; அளவிடல்
எடுத்தல் - நிறுத்தலளவு; உயர்த்திய ஓசை
எடுப்பு - துயிலெழுப்பு; இசையெழுப்பு; துரத்து [எடுப்புதல்]
எடுபடு - நீக்கப்படு; நிலைபெயர்; செலவழிந்து போ [எடுபடுதல்]
எடுகூலி - சுமைகூலி.


எடுத்த எடுப்பில் - தொடக்கத்திலேயே.
எடுத்தபடி - முன் ஆயத்தமின்றி : உடனே.
எடுத்த மொழியின் எய்தவைத்தல் - நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று : அதுதான் சொல்லும் இலக்கணம் : தான் எடுத்துக் காட்டிய சொற்களுக்கே பொருந்த வைத்தல்.
எடுத்தலளவை - நிறுத்தலளவை.
எடுத்தலோசை - உயர்த்திக் கூறும் ஓசை.


எடுத்தன் - பொதிமாடு : காளை மாடு.
எடுத்தாட்சி - எடுத்தாளுதல்.
எடுத்தாளுதல் - கைக் கொண்டு வழங்குதல்.
எடுத்தியல் கிளவி - திருட்டாந்தம்.
எடுத்துக்கட்டி - கைப்பிடிச்சுவர்.


எடுத்துக்கட்டு - கட்டுக்கதை : பொய் : கற்பிதம் : பின்னின மயிரைச் சுருட்டிக் கட்டுதல்.
எடுத்துக்காட்டுதல் - நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று : அது தான் சொல்லும் இலக்கணத்திற்றானே இலக்கியத்தை எடுத்துக் காட்டுதல்.
எடுத்துக்காட்டு - மேற்கோள்; உதாரணம்
எடுத்துக்கைநீட்டுதல் - கைத் தொண்டு செய்தல்.
எடுத்துக் கொள்ளல் - ஏற்றுக் கொள்ளல் : தனதாக்கிக் கொள்ளல் : சுவீகாரங் கொள்ளுதல் : தூக்கிக் கொள்ளுதல் : மரணத்தால் கடவுள் தம்மிடம் அழைத்துக் கொள்ளுதல்.


எடுத்துக்கோள்வரி - கையறவெய்தி வீழ்தலைக் கண்டு பிறர் எடுத்துக் கொள்ளும்படி நடிக்கும் நடம்.
எடுத்துச் செலவு - படையெடுத்துச் செல்லுகை.
எடுத்துச் சொல்லுதல் - சிறப்பித்துக் கூறுதல் : விளக்கமாகக் கூறுதல்.
எடுத்துப்போடுதல் - நீக்குதல் : திடுக்கிடச் செய்தல்.
எடுத்துமொழிதல் - விளங்கச் சொல்லுதல்.


எடுத்தெறிதல் - பொருட்படுத்தாதிருத்தல் : மதிப்பின்றி நடத்தல்.
எடுத்தேத்து - எடுத்துப் புகழ்தல் : புகழ்ச்சி.
எடுத்தேறு - எடுத்தெறிதல்.
எடுத்தேற்றம் - குறிப்பின்மை : இணக்கமின்றியிருப்பது : இல்லாததைப் பேசுதல் : இடுவந்தி.
எடுத்தேற்றி - இலக்கணமின்றியிருப்பது.


எடுத்தோத்து - எடுத்தோதுவது : எடுத்துக் கூறும் விதி.
எடுபடுதல் - நீக்கப்படுதல் : நிலைபெயர்தல் : அதிர்தல் : விற்றழித்தல் : கெடுதல்.
எடுபாடு - குலைவு : செல்வாக்கு : நிலையின்மை : ஆடம்பரம்.
எடுபிடி - முயற்சி : விருது.
எடுப்பார்கைப்பிள்ளை - யாவருக்கும் வசப்படக் கூடியவன் : சூதறியாதவன்.


எடுப்புச்சாய்ப்பு - உயர்வு தாழ்வு : ஒப்புரவான நடை.
எடுப்புதல் - எழுப்புதல்.
எடுப்பெடுத்தல் - சூழ்ச்சியை மேற்கொள்ளுதல் : படையெடுத்துப் பொருதல் : அரியதை முயலுதல் : கருவங் கொள்ளுதல்.
எடுவுதல் - எடுத்தல்.
எடை - நிறையளவு; நீளுதல்; மிகுதல்; துயிலெழுப்புதல்


எடைக்கட்டு - நிறுக்கப்படும் பொருளுக்கு ஆதாரக் கலத்தின் கழிவு நிறை : எடை கட்டுதல்.
எண்கணன், எண்கணாளன், எண்கண்ணன் - நான்முகன்.
எண்காற்புள் - சரபப்பறவை : சிம்புள்.
எண்கு - கரடி : பல்லுகம் உளியம் : குடாவடி.
எண்குணத்தான் - அருகன் : கடவுள் : சிவன்.
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
மதிப்பீடுகள் : 172

View user profile

Back to top Go down

தமிழ் அகராதி - எ Empty Re: தமிழ் அகராதி - எ

Post by சந்திரகி on Mon Jul 09, 2012 10:45 am

எண்குணன் - எண்குணத்தான்.
எண்கோவை - காஞ்சி யென்னும் அரையணி.
எண்செய்யுள் - எண்ணாற் பெயர் பெறும் நூல் : எட்டுப்பாட்டு : அட்டகம்.
எண்டோளன் - சிவன்.
எண்டோளி - காளி : துர்க்கை : மனோன்மணி.


எண்ணங்குலைதல் - மனங்கலங்குதல் : மதிப்புக் கெடுதல்.
எண்ணத்தப்பு - நினைவு : மயக்கம் : அறிவுக்கேடு : மதியாமை : எண்ணத் தவறு.
எண்ணப்படல் - கவனிக்கப்படுதல் : நினைவிற்றோற்றல் : மதிக்கப்படுதல்.
எண்ணர் - கணிதர் : அமைச்சர் : தார்க்கிகர்.
எண்ணலங்காரம் - எண்ணுப் பெயர்கள் அடுக்கிவரும் அணி.


எண்ணலளவை - இலக்கத்தால் எண்ணும் அளவு.
எண்ணலளவையாகுபெயர் - எண்ணுக்குரிய பெயரை அதற்குரிய பொருட்கு வழங்குவது [ ஒன்று வந்தது : ஒன்று போயிற்று]
எண்ணலார் - பிறரை மதியாதவர் : பகைவர்.
எண்ணவி - நல்லெண்ணெய்.
எண்ணாட்டிங்கள் - அட்டமிச் சந்திரன்.


எண்ணாதகண்டன், எண்ணாத நெஞ்சன் - துணிவுள்ளவன்.
எண்ணாமை - கணக்கிடாமை : மதியாமை : பொருட்படுத்தாமை.
எண்ணார் - பகைவர்.
எண்ணிலார் - பகைவர்.
எண் - கணக்கிடல்; இலக்கம்; கணிதம்; சோதிடம்; நினைத்தல்; ஆலோசனை; மனம்; கலிப்பாவில் அம்போதரங்கம்


எண்கோணம் - எட்டு மூலையுருவம்
எண்சுவடி - பெருக்கல் வாய்ப்பாட்டு புத்தகம்
எண்ணம் - நினைப்பு; நாடிய பொருள்; மதிப்பு; கவலை; கணிதம்
எண்ணல் - எண்ணலளவை; கணக்கிடுதல்; கருத்து; ஆலோசனை
எண்ணலர், எண்ணார் - பகைவர்


எண்ணாதவன் - ஆலோசனையற்றவன்
எண்ணிக்கை - இலக்கம்; கணக்கிடுதல்
எண்ணியார் - நோக்கமுடையவர்
எண்ணு - கணக்கிடு; மதிப்பிடு; நினை; ஆலோசி; தியானம் செய்; உத்தேசம் செய்; தீர்மானம் செய்; உயர்வாகக் கொள் [எண்ணுதல்]
எண்ணெய் - எள் நெய்; நெய்ப்பொது


எண்மர் - எட்டு பேர்
எண்மானம் - எண்ணை எழுத்தால் எழுதுதல்
எண்மை - எளிய தன்மை; தாழ்மை
எண்ணிலி - அளவற்றது : எண்ணமற்றவள் : அறிவற்றவன்.
எண்ணின்று - எண்ணியது.


எண்ணில் கண்ணுடையோன் - கடவுள் : புத்தன்.
எண்ணின்று - எண்ணியது.
எண்ணுதல் - எண்ணல் : நினைத்தல் : முடிவு செய்தல் : மதித்தல் : கணக்கிடுதல்.
எண்ணுநர் - கருதினோர்.
எண்ணும்மை - எண்ணுப் பொருளில் வரும் உம்மையிடைச் சொல் நிலனுந் தீயும் நீரும்.


எண்ணுவண்ணம் - எண்ணிடைச் சொல் பயின்று வரும் சந்தம்.
எண்ணுறுத்தல் - உறுதிப்படுத்துதல்.
எண்ணூல் - கணிதநூல்.
எண்ணெய்க்காப்பு - எண்ணெய் முழுக்கு : சாத்தும் எண்ணெய்.
எண்ணெய்ச் சாயம் - எண்ணெயில் தோய்த்தேற்றும் சாயம்.


எண்ணெய்ச் சீலை - மெழுகு சீலை : எண்ணெயில் நனைந்த துணி.
எண்ணெய்த்தண்டு - எண்ணெய் பெய்திருக்குங் குழாய்.
எண்ணெய்ப் பனையன் - பனைவிரியன் பாம்பு.
எண்ணெய்மணி - வெண்மட்டமாகச் செய்யப்பட்ட ஒருவகை அணிகலம்.
எண்ணெய் வடித்தல் - எண்ணெய் ஊற்றுதல்.
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
மதிப்பீடுகள் : 172

View user profile

Back to top Go down

தமிழ் அகராதி - எ Empty Re: தமிழ் அகராதி - எ

Post by சந்திரகி on Mon Jul 09, 2012 10:46 am

எண்ணெய் வாணிகன் - செக்கான்.
எண்ணெழுத்து - இலக்கம்.
எண்ணேயம் - எண்ணெய்.
எண்பக - அளவிறக்க.
எண்படுதல் - அகப்படுதல்.


எண்பதம் - எளிய செவ்வி : எண்வகைத் தானியம்.
எண்பித்தல் - மெய்ப்பித்தல்.
எண்பேராயம் - எண்பெருந்துணைவர் : கரணத்தியலவர் : கரும விதிகள் : கனகச் சுற்றம் : கடை காப்பாளர் : நகரமாந்தர் : நளிபடைத்தலைவர் : யானை வீரர் : இவுளிமறவர் : சாந்து :பூ கச்சு : ஆடை : பாக்கு : இலை : கஞ்சுகம் : நெய் என்னும் எண்வகைப் பொருள்களையும் ஆராய்ந்து அரசனுக்களிப்பவர்களும் இப்பெயர் பெறுவர்.
எண்பொருள் - எளிதில் அடையும் பொருள்.
எண்மயம் - பிறப்பு : குலம் : கல்வி : செல்வம் : வனப்பு : சிறப்பு : தவம் : உணர்வு : ஆகிய எண்வகைச் செருக்கு.


எண்மார் - எண்ணுவார் : எண்ணுபவர்.
எண்வகைவிடை - எண்ணிறை.
எத்தன் - தந்திரமுள்ளவன்; ஏமாற்றுவோன் ( பெண்பால் - எத்தி )
எத்தனம் - (யத்ன) முயற்சி; ஆயத்தம்; கருவி
எத்தனை - எவ்வளவு; என்ன எண்ணிக்கை; பல


எத்து - வஞ்சனை செய் [எத்துதல்]
எத்துணை – எவ்வளவு
எதாசக்தி - தன்னால் முடிந்த அளவு
எதாப்சிரகாரம் - வழக்கம் போல்
எதார்த்தம் - உண்மை


எதி - துறவி
எதிர் - நிகழ்தல் செய்; முன்னாகு; எதிர்காலத்து நிகழ்; மாறுபடு; தம்மிற்கூடு; உபசாரம் செய்; எதிர்த்தல் செய்; கொடு; பெறு; முன்னே; முன்னுள்ளது; வருங்காலம்; போர்;போட்டியாயுள்ளது;முரண்; தடை [எதிர்தல், எதிர்த்தல்]
எதிர்காலம் - வருங்காலம்
எதிர்ந்தோர் - பகைவர்
எதிர்ப்படு - எதிரே தோன்று; சந்தித்தல் செய் [எதிர்ப்படுதல்]


எதிர்ப்பை - வாங்கிய அளவுக்குச் சரியாகத் திருப்பிக் கொடுத்தல்
எதிர்பார் - (ஒன்றின்) வரவு பார்த்திரு; பிறர் உதவியை நோக்கியிரு [எதிர்பார்த்தல்]
எதிர்மறை - மறுப்பு
எதிர்வு - எதிர்காலம்; சந்தித்தல்; நிகழ்ச்சி
எதிராளி, எதிரி - பிரதிவாதி; பகைவன்


எதிரொளி - பிரதிபலித்த ஒளி
எது - யாது
எதுகை - செய்யுள் அடிகளிலும் சீர்களிலும் இரண்டம் எழுத்து ஒத்து வரல்; பொருத்தம்
எதேச்சையாக - விருப்பப்படி
எந்திரம் - சூத்திரப் பொறி; செக்கு; கரும்பு ஆலை; சக்கரம்; தீக்கடை கோல்; மந்திரமெழுதிய சக்கரம்


எந்தை - என் தந்தை; என் தலைவன்
எப்படி - எவ்வாறு
எப்பொழுதும், எப்போதும் - எக்காலத்திலும்
எம் - 'யாம்' என்பது வேற்றுமை உருபு கொள்ளும் பொழுது பெறும் உருவம்
எம்பி - என் தம்பி


எம்மனோர் - எம் கட்சியினர்; நாங்கள்
எம்மான் - என் மகன்; எம் தலைவன்; எம் தந்தை
எம்மை - எப்பிறப்பு; எவ்வுலகம்; எம் தலைவன்
எம்மையோர் - எம்மை சேர்ந்தவர்
எமர், எமரங்கள் - எம்மைச் சேர்ந்தவர்


எய் - அம்பு விடு [எய்தல்] ; களைப்புறு; உடல் வருந்து; குறைவுபடு; அறிதல் செய் [எய்த்தல்]
எய்து - அடைதல் செய்; நெருங்கு; சேர்; நீங்கு; பொருந்து; உண்டாகு; நிகழ்தல் செய் [எய்தல்]
எய்ப்பு - சோர்வு; வறுமைக் காலம்
எய்யாமை - அறியாமை
எயில் - கோட்டைச் சுவர்; ஊர்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
மதிப்பீடுகள் : 172

View user profile

Back to top Go down

தமிழ் அகராதி - எ Empty Re: தமிழ் அகராதி - எ

Post by சந்திரகி on Mon Jul 09, 2012 10:46 am

எயிறு - பல்; யானைத் தந்தம்
எயின் - வேடர் சாதி
எரி - கவலையுடன் தீயெழு; ஒளிவிடு; எரிச்சலுண்டாகு; மனத் துன்புறு; சினங்கொள்; தீயால் அழியச் செய்; எரிச்சலுண்டாகச் செய் [எரிதல், எரித்தல்] ; நெருப்பு; பிரகாசம்; நரகம்; கந்தகம்; அக்கினிதேவன்
எரிச்சல் - எரித்தல்; அழற்சி; சினம்; பொறாமை; பெருங்காயம்
எரிந்து விழுதல்- சினந்து பேசுதல்


எரிப்பு - எரிதல்; காரச்சுவை
எரியோன் - அக்கினி தேவன்
எரிவு - எரிதல்; சினம்; பொறாமை
எரு - உரம்; மலம்; வறட்டி
எருக்கு - ஒருவகைச் செடி; கொல்லு; அழித்தல் செய்; வெட்டு; தாக்கு; சுமத்து


எருத்தடி - செய்யுளில் ஈற்றயல் அடி
எருத்தம், எருத்து - கழுத்து; பிடர்; கற்றயல்; கலிப்பாவில் ஓர் உறுப்பு (தரவு)
எருதடித்தல் - உழுதல்; முற்றிய கதிர்களிலிருந்து தானியம் உதிர எருதுகளை ஓட்டுதல்
எருது - காளை; இடபம்; இடபராசி
எருமை - ஒரு மிருகம்; எருமையை வாகனமாயுடைய எமன்


எருமைக்கடா, எருமைப் போத்து - ஆண் எருமை
எருவை - இரத்தம்; தாமிரம்; கழுகு; பருந்து வகை; ஒரு வகைச் செடி
எல் - சூரியன்; ஒளி; வெயில்; பகல்; நாள்; இரவு; இகழ்ச்சிக் குறிப்பு
எல்லவன் - சூரியன்; சந்திரன்
எல்லாம் - எல்லோரும்; முழுதும்


எல்லி - சூரியன்; பகல்; இரவு; இருள்
எல்லை - வரம்பு; முடிவு; தறுவாய்; இடம்; சூரியன்; பகல்; நாள்
எல்லைப்பிடாரி - சாலைகள் சந்திக்குமிடத்தில் உள்ளதாகக் கருதப்படும் ஒரு பெண் தேவதை
எலி - ஒரு பிராணி; பெருச்சாளிகள்; கள்ளிச் செடி
எலும்பு - பிராணி உடலில் கடினமான ஒரு பகுதி


எலுமிச்சை - ஒருவகை மரம்; எலுமிச்சையின் கனி
எலுவ - தோழனே!
எலுவல், எலுவன் - தோழன்; (பெண்பால் - எலுவை)
எவ்வது - எவ்விதம்; எவ்வாறு
எவ்வம் - துன்பம்; தாழ்வு; மானம்; வஞ்சகம்


எவ்வெட்டு - (எட்டு+எட்டு) தனித்தனியே எட்டு
எவண் - எவ்விடம்; எப்படி
எவன் - யாவன் (பெண்பால - எவள்); யாது; யாவை; எவ்வாறு; ஏன்; வியப்பு அல்லது இரக்கம் குறிக்கும் சொல்
எவை - யாவை
எழால் - ஒருவகைப் பறவை; யாழ் என்ற இசைக் கருவி; யாழின் இசை; மனிதக் குரல்


எழில் - அழகு; தோற்றப் பொலிவு; இளமை; உயர்ச்சி; வலிமை; குறிப்புப் பொருள்; சாதுரிய மொழி
எழிலி - மேகம்
எழினி - இடுதிரை; போர்வை; ஊறை; சங்க காலத்திருந்த கடையெழு வள்ளல்களில் ஒருவன்
எழு - தூண்; கதவின் குறுக்கே அடைக்கும் மரம்; ஒரு வகைப் போர்க் கருவி; மேலுயர்தல் செய்; எழுந்திரு; தோன்று; புறப்படு; மிருதல் செய்; வளர்ச்சியுறு; மனக்கிளர்ச்சி கொள்; துயில் நீங்கு; உயிர் பெறு; பரவு; தொடங்கு [எழுதல், எழல், எழுச்சி]
எழுந்ததிகாரம் - எழுத்திலக்கணம்


எழுத்தாணி - பனை ஓலையில் எழுதுதற்குரிய இருப்புக் கருவி
எழுத்தியல் - எழுத்திலக்கணப் பகுதி
எழுத்து - அட்சரம்; எழுதிய கடிதம்; இலக்கணம்; கையெழுத்து; கல்வி; எழுதிய சித்திரம்; கைரேகை
எழுது - எழுத்து எழுது; சித்திரம் எழுது; நூலியற்று; விதியாக அமை; அழுத்தமாகப் பதி [எழுதுதல்]
எழுந்திரு - எழுதல் செய் [எழுந்திருத்தல்]


எழுப்பு - எழச் செய்; துயிலெழச் செய்; ஒலியெழச் செய் [எழுப்புதல்]
எழுவாய் - உற்பத்தி; முதல்; (இலக்கணம்) முதல் வேற்றுமை; கருத்தா
எள் - ஒருவகைச் செடி; நிந்தை
எள்கு - இகழ்தல் செய்; அஞ்சுதல் செய்; ஏமாற்று; நாணுதல் செய்; வருந்து [எள்குதல்]
எள்ளு - இகழ்ச்சி செய்; அவமதி; ஒப்பாகு [எள்ளுதல், எள்ளல்]
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
மதிப்பீடுகள் : 172

View user profile

Back to top Go down

தமிழ் அகராதி - எ Empty Re: தமிழ் அகராதி - எ

Post by நாகசுந்தரம் on Mon Jul 09, 2012 10:46 am

மிகவும் நன்றி !
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 360
இணைந்தது : 27/12/2011
மதிப்பீடுகள் : 144

View user profile

Back to top Go down

தமிழ் அகராதி - எ Empty Re: தமிழ் அகராதி - எ

Post by சந்திரகி on Mon Jul 09, 2012 10:47 am

எள்ளுநர் - இகழ்பவர்
எளிது - சுலபமானது; அற்பமானது
எளிமை - சுலபம்; தாழ்மை; வலிமையின்மை; வறுமை; அடிமை [எளியன்]
எளிவரல் - சுலபமாதல்; இழிவடைதல்
எற்று - உதைத்தல்; தாக்குதல்; எத்தன்மையுடையது; வியப்பு அல்லது இரக்கம் காட்டும் குறிப்பு மொழி; உதைத்தல் செய்; மோது; கொல்; நீக்கு; (நூல்) அறு; நீங்கு; இரக்கம் கொள் [எற்றுதல்]

எற்றைக்கும் - எக்காலத்தும்
எறி - வீசிப்போடு; வெட்டு; அடித்தல் செய்; முறித்தல் செய்; அழித்தல் செய்; ஒதுக்கித் தள்ளு; கொள்ளையிடு; பொழிதல் செய்; பாய்ந்தெடு [எறிதல்]; வீச்சு; வீசுதல்
எறும்பி - யானை
எறும்பு - சிறு பூச்சி
எறுழ் - வலிமை; தூண்; குண்டாந்தடி; ஒருவகை மரம்


எறுழ்வலி - மிக்க வலிமை
என் - ஏன்; எது; வேற்றுமை ஏற்கும் பொழுது 'யான்' அடையும் உருவம்; ஒரு வினை விகுதி
என்ப - என்று சொல்லப்படுபவை; ஓர் அசைச் சொல்
என்பு - எலும்பு; உடம்பு; புல்
என்றால் - என்று சொன்னால்; அப்படி ஆனால்


என்றாலும் - ஆயினும்
என்று - எனச் சொல்லி; இணைப்பு இடைச் சொல்; ஓர் அசைச் சொல்; எந்த நாள்; சூரியன்
என்றும் - எப்பொழுதும்; ஒரு நாளும்
என்றூழ் - சூரியன்; வெயில்; கோடைக் காலம்
என்றைக்கும் - எக்காலத்தும்; ஒரு நாளும்


என்ன - எது; என்ன பயன்; ஓர் உவம உருபு
என்னணம் - எவ்வாறு
என்னதும் - சிறிதும்
என்னுதல் - என்று சொல்லுதல்
என்னே - என்ன; வியப்பு அல்லது இரக்கம் காட்டும் குறிப்பிடைச் சொல்


என்னை - என் தாய்; என் தந்தை; என் தலைவன்; யாது
என - ஓர் உவம உருபு
எனின் - என்று சொன்னால்
எனைத்தும் - முழுதும்
எனையதும் - சிறிதும்
எய்துதல் - எறிதல்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
மதிப்பீடுகள் : 172

View user profile

Back to top Go down

தமிழ் அகராதி - எ Empty Re: தமிழ் அகராதி - எ

Post by சந்திரகி on Mon Jul 09, 2012 10:47 am

naka wrote:மிகவும் நன்றி !

:வணக்கம்:
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
மதிப்பீடுகள் : 172

View user profile

Back to top Go down

தமிழ் அகராதி - எ Empty Re: தமிழ் அகராதி - எ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை