உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:18 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:16 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:14 pm

» ஜெயம் ரவி நடிக்கும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:11 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:10 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:04 pm

» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:00 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:59 pm

» சுப்ரமணி – நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:56 pm

» டாக்டர் நினைச்சதுல ஒண்ணுகூட நடக்கல…! –
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:55 pm

» நாக்கறுந்த மணி – கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:53 pm

» எல்லாப் பணிப்பெண்களுக்கும் ‘டாப்சும், லெக்கின்சும்’ எடுத்துக் கொடுத்திருக்காரு....!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:50 pm

» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:47 pm

» உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:44 pm

» ஆவாரம்பூ காபி
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:43 pm

» மழையும் மஞ்சளும்
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:41 pm

» அதென்னடி ஆர்கானிக் லிப்ஸ்டிக்...?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:38 pm

» ஆவாரை - தேநீர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:37 pm

» ஆவாரம்பூ சட்னி
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:36 pm

» புத்தக தேவைக்கு...
by Rajendran Bellie Today at 3:36 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by ackashok Today at 11:41 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:19 am

» உடனே மறக்க வேண்டியது…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» ராணியை அடித்த அர்ச்சகர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:48 am

» நடிப்பது எப்படி?: கற்றுத் தருகிறார் நடிகர் சார்லி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:45 am

» இன்றைய கோபுர தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:43 am

» பி.சி.சி.ஐ., தலைவரானார் கங்குலி
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:41 am

» இருவருக்கு இலக்கியத்திற்கான 'புக்கர்' பரிசு
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» அமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:34 am

» சீனாவின் தேசிய நிலவியல் பூங்கா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:30 am

» உங்க மருமகள் உங்களை அறைஞ்சிட்டாளா…!?
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:28 am

» பொறுமை ஒருபோதும் தோற்பதில்லை...!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:26 am

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by prajai Yesterday at 11:17 pm

» விமோசனம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா
by T.N.Balasubramanian Yesterday at 6:37 pm

» தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டாள்..!!
by ஜாஹீதாபானு Yesterday at 4:54 pm

» உலக புத்தகத்தின் முதல் அடி, தமிழன் தான்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:38 pm

» தமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் தகவல்
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» வேலன்:-வெவ்வேறு நாட்டினுடைய அலாரம் கடிகாரம் பயன்படுத்த
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» விலை இல்லா கட்சித் தாவலுக்கும் தயார்…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» ஒழுக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» இதயத்திற்கு நடிக்க தெரியாது, துடிக்க மட்டுமே தெரியும்…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:54 am

» கூடைமேலே கூடை வைச்சு ,,,,,,,,,,தமிழ் இலக்கணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» * உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am

» தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» வலை பாயுதே- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 4:25 am

» பார்வதி கல்யாணம் - வர்ஷா புவனேஸ்வரி ஹரிகதா {காணொளி}
by ayyasamy ram Sun Oct 13, 2019 10:24 pm

Admins Online

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Empty தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by M.Jagadeesan on Sat Jun 22, 2019 2:43 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா : 010

செய்வோம்நாம் வாருங்கள் செந்தமிழில் வெண்பாவை
நெய்வோம்நாம் நேர்த்தியுடன் பாட்டு

----- சுந்தரராஜ் தயாளன்.

செய்/வோம்/நாம் - வா/ருங்/கள் - செந்/தமி/ழில் - வெண்/பா/வை
நெய்/வோம்/நாம் - நேர்த்/தியு/டன் - பாட்டு


நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் - நேர்/நிரை/நேர் – நேர்பு


தேமாங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு


எதுகை : செய்வோம்நாம், நெய்வோம்நாம்
மோனை : செய்வோம்நாம், செந்தமிழில்; நெய்வோம்நாம், நேர்த்தியுடன்

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 808822

ஐயா !

செய்வோம்நாம் வாருங்கள் செந்தமிழில் வெண்பாவை
நெய்வோம்நாம் நேர்த்தியுடன் பாட்டு

வெண்பாவை என்று சொல்லிய பிறகு பாட்டு எதற்கு ?

செய்வோம்நாம் வாருங்கள் செந்தமிழில் வெண்பாவை
நெய்வோம்நாம் நேர்த்தியுடன் இங்கு .

என்று இருப்பது நலம் .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5280
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by M.Jagadeesan on Sat Jun 22, 2019 3:03 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா : 012

வாழ்வது வாழ்வதற்கே வையகத்தில் வீணாக
வீழ்வது மிக்கவோர் வீண்வாழ்/வது - வாழ்/வதற்/கே - வை/யகத்/தில் - வீ/ணா/க
வீழ்/வது - மிக்/கவோர் - வீண்

நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை – நேர்/நிரைநேர்

கூவிளம் – கூவிளம்காய் – கூவிளம்காய் – தேமாங்காய்
கூவிளம் – கூவிளம்நாள்

எதுகை : வாழ்வது, வீழ்வது
மோனை : வாழ்வது – வாழ்வதற்கே – வையகத்தில்;
வீழ்வது – மிக்கவோர் – வீண்

ஈற்றுச்சீர் : வீண் – நேர் – நாள்

தினம் தினம் செய்தித்தாள்களிலும், இணையத்திலும் நாம் பார்க்கின்ற வேதனையான ஒரு விடயம், தற்கொலை என்பது தான். பள்ளியில் ஆசிரியர் திட்டினார் என்பதற்காக மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை, அம்மா திட்டினார் என்பதற்காக, தேர்வில் தோல்வி அடைந்துவிட்டோம் என்று ஒரு தவறான செய்தி வந்தவுடன் மண்ணெண்ணெய் ஊற்றி மாய்த்துக்கொள்ளும் மடமை; சினிமாவின் தாக்கத்தால் திட்டிய ஆசிரியரையே கத்தியால் குத்தி கொலை செய்த மாணவன்; காதலர்கள் தற்கொலை, காதலன் வீட்டிற்க்கே சென்று காதலி தீக்குளித்து மரணம், தான் தர்ககொலை செய்வதை எல்லோரும் பார்க்கும்படி இணையத்தளத்தில் வீடியோ கேமெரா ஓடிக்கொண்டிருக்கும்போதே தூக்கில் தொங்கிய பெண் ......என்று இப்படி வெகு மலிவாக ஆகிவிட்டது இந்த வேதனையான இவ்விடயம். இதன் தாக்கத்தால் எழுந்ததே இக் குறள்.
சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 809648

ஐயா !

இலக்கணப்படி குறட்பா சரியென்றாலும் , கருத்துச் செரிவில் தொய்வு இருப்பதாகவே தோன்றுகிறது .

வாழ்வதற்கே வாழ்க்கை வறுமையிலும் தற்கொலையால்
வீழ்வது வீணென்று கூறு .

என்று இருக்கலாமே !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5280
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by M.Jagadeesan on Sat Jun 22, 2019 4:53 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Studym

குறள் வெண்பா: ௧௧௩ (113)

அடிக்கின்றார் பூட்பாலிஸ் அத்துடனே அங்கே
படிக்கின்றார் பாடமதைப் பார்


அடிக்/கின்/றார் - பூட்/பா/லிஸ் - அத்/துட/னே - அங்/கே
படிக்/கின்/றார் - பா/டம/தைப் - பார்

நிரை/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்

புளிமாங்காய் –1- தேமாங்காய் –2- கூவிளங்காய் –3- தேமா -4-
புளிமாங்காய் –5- கூவிளங்காய் –6- நாள்


1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை: டிக்கின்றார்; டிக்கின்றார்

மோனை: டிக்கின்றார் – த்துடனே – ங்கே; டிக்கின்றார் – பாடமதைப் – பார்

ஈற்றுச்சீர்: பார் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 850676

பூட்பாலிஸ் என்ற ஆங்கிலச் சொல்லை தவிர்த்தல் நலம் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5280
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by M.Jagadeesan on Sat Jun 22, 2019 5:08 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Meendumviruku

குறள் வெண்பா : ௧௦௭(107)

வேண்டாம் விடுயென்று விட்டெறிந்து விட்டீரே
மீண்டும்பார் விற்கும் விறகு


வேண்/டாம் விடு/யென்/று விட்/டெறிந்/து விட்/டீ/ரே
மீண்/டும்/பார் விற்/கும் விற/கு

நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை/பு

தேமா –1- புளிமாங்காய் –2- கூவிளங்காய் –3- தேமாங்காய் -4-
தேமாங்காய் –5- தேமா –6- பிறப்பு

[b]1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.இயற்ச்சீர் வெண்டளை [/b]


எதுகை : வேண்டாம்; மீண்டும்பார்

மோனை : வேண்டாம் – விடுயென்று – விட்டெறிந்து – விட்டீரே;
மீண்டும்பார் – விற்கும் - விறகு

ஈற்றுச்சீர் : விறகு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 847873

விடு + என்று = விடுவென்று என்று வரும் . புணர்ச்சியின்போது வகர உடம்படுமெய் தோன்றும் .

விடுயென்று வராது ஐயா !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5280
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by M.Jagadeesan on Sat Jun 22, 2019 5:10 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Costlyitem

குறள் வெண்பா: ௧௦௩ (103)

ஆறுமுக மானவனே அய்யனே பார்கொடுமை
ஏறுமுகம் என்னும்பெட் ரோல்


ஆ/றுமு/க - மா/னவ/னே - அய்/யனே - பார்/கொடு/மை
ஏ/றுமு/கம் - என்/னும்/பெட் - ரோல்

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்

கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளம் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமாங்காய் – நாள்

வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை


எதுகை : றுமுக; றுமுகம்

மோனை : றுமுக – ய்யனே; றுமுகம் – ன்னும்பெட்

ஈற்றுச்சீர் : ரோல் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 846505

பெட்ரோல் என்னும் ஆங்கிலச்சொல்லை தவிர்த்திருக்கலாம் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5280
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by M.Jagadeesan on Sun Jun 23, 2019 10:26 am

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

Uploaded with ImageShack.us

குறள் வெண்பா: ௧௧௯ (119)

வெட்டுங்கள் காடுகளை வெட்டியழி நல்வளத்தை
விட்டுவிடு வீண்கழிவை.....வேஸ்ட்டு


வெட்/டுங்/கள் – கா/டுக/ளை – வெட்/டிய/ழி – நல்/வளத்/தை
விட்/டுவி/டு – வீண்/கழி/வை – வேஸ்ட்/டு

நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு

தேமாங்காய் –1- கூவிளங்காய் –2- கூவிளங்காய் –3- கூவிளங்காய் -4-
கூவிளங்காய் –5- கூவிளங்காய் –6- காசு

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை: வெட்டுங்கள்; விட்டுவிடு

மோனை: வெட்டுங்கள் – வெட்டியழி; விட்டுவிடு – வீண்கழிவை – வேஸ்ட்டு

ஈற்றுச்சீர்: வேஸ்ட்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

[இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக]

நாம் எவ்வளவு சுயநலவாதியாக இருக்கின்றோம் என்பதை இப்படமும் குறளும் விளக்குகின்றன. காடுகளை அழிக்கின்றோம், கனிமவளங்களை சூறையாடுகின்றோம். இப்படியே போனால் பின்வரும் நம் சந்ததிகளுக்கு வெறும் கழிவுகள் மட்டுமே !!!
மேற்கோள் செய்த பதிவு: 860017

வேஸ்ட்டு என்ற ஆங்கிலச்சொல்லைத் தவிர்த்திருக்கலாம் . மேலும் காடுகளை வெட்டவும் , நல்வளத்தை அழிக்கவும் அறிவுரை கூறுவதுபோல் உள்ளது இக்கவிதை .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5280
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by சக்தி18 on Sun Jun 23, 2019 10:55 am

பகுத்தறியும் அறிவில்லா விட்டாலும், ஆங்கிலச் சொற்களை தவிர்க்கலாம் என்றே தோன்றுகிறது.

கடைசிக் குறளை நானும் அப்படித்தான் புரிந்து கொண்டேன்.
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 874
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 333

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 51 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை