உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Empty தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Dec 12, 2017 12:46 pm

நன்றி திரு இரமணி அவர்களே
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by சண்முகம்.ப on Thu Jan 11, 2018 8:23 am

கோரா.காம் என்றொரு இணையதளம் இருப்பது பலருக்குத் தெரியுமென்று நினைக்கிறேன். அதைப்பற்றி நான் எழுதிய குறள் வெண்பாக்கள்:

எந்தவினா என்றாலும் கோரா தனில்கேட்டால்

தந்திடுவர் தக்க பதில்.

……………………………………

மனதில் எழுந்திடும் ஐயமெலாம் தீர்ப்பாய்

தினமும்நீ கோராவில் கேட்டு.

………………………………………

கேட்க கசடற சொற்பிழையால் வாராதே

நாட்கள் கழிந்தும் விடை.

………………………………………

ஏராள மானத் தகவல்கள் நீயறியக்

கோராவே என்றும் துணை.

………………………………………..

தானறிந்த வற்றைப் பிறருக்குச் சொல்லுதலே

யானறிந்த வற்றில் சுகம்.

………………………………………..

கோடி வலைதளங்கள் உண்டெனினும் கோராவிற்

கீடில்லை என்பர் சிலர்.

………………………………………….

பதில்தேடும் எல்லோர்க்கும் தக்கயிடம் கோரா

அதிலுண்டே சான்றோர் பலர்.

………………………………………….

கற்றோர்க்குக் கோரா கலையரங்கம் கேள்வியெழப்

பெற்றோர்க் கதுவே கடல்.

…………………………………………..

விதிகளுக் கேற்ப விளக்கமாய்ச் செய்த

பதில்பெறுமே வாக்கு பல.

…………………………………………….

பலன்நல்கும் தக்க விடையளிப்போர் தம்மைப்

பலர்தேடிப் பின்பற் றுவர்.
சண்முகம்.ப
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 11/01/2018
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by சிவா on Thu Oct 11, 2018 11:48 pm

சூப்பருங்க


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by தூயவள் on Wed Oct 17, 2018 8:16 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 804769
நல்லதொரு பதிவு !

வள்ளுவம் சொன்ன வழி செல்லுவம்
தள்ளுவம் தவற்றின் நெறி.

நன்றி, வணக்கம்!

தூயவள்
தூயவள்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
மதிப்பீடுகள் : 19

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by M.Jagadeesan on Wed Oct 17, 2018 8:32 pm

@தூயவள் wrote:
@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 804769
நல்லதொரு பதிவு !

வள்ளுவம் சொன்ன வழி செல்லுவம்
தள்ளுவம் தவற்றின் நெறி.

நன்றி, வணக்கம்!

மேற்கோள் செய்த பதிவு: 1282040

இக்குறள் வெண்பா இலக்கணப்படி இல்லையே !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by M.Jagadeesan on Wed Oct 17, 2018 8:36 pm

திருக்குறள் கற்றால் திருப்பம் உறுதி
விருப்புடன் கற்போம் தினம் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by தூயவள் on Wed Oct 17, 2018 8:42 pm

[quote="M.Jagadeesan"]
@தூயவள் wrote:இக்குறள் வெண்பா இலக்கணப்படி இல்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1282042
ஐயா வணக்கம் ! நான் தமிழிலக்கணம் முறையாகப் பயிலவில்லை. மரபில் கவிதை இயற்றிப் பழக்கமில்லை, ஒரு ஆர்வத்தில் இங்கேப் பதிவிட்டுவிட்டேன் . மன்னிக்க வேண்டுகிறேன். தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 1757813334 தங்களது பதிவுகளைப் படித்து வருகிறேன். உங்கள் ஆழ்ந்த அறிவுப்பகிர்வுக்கு மிக்க நன்றி ! ஓர் ஆசிரியராய் அமைந்து எனக்கும் தமிழ்க் கற்றுத்தர வேண்டுமென்று தங்களை வேண்டுகிறேன். அந்த எண்ணத்தோடு தான் ஈகரையில் இணைந்தேன்.
@M.Jagadeesan wrote:திருக்குறள் கற்றால் திருப்பம் உறுதி
விருப்புடன் கற்போம் தினம் .
மேற்கோள் செய்த பதிவு: 1282043
நான் மறுமொழி பதிவிடுமுன்னரே என் வேண்டுகோளையேற்றாற்போல் திருத்தம் செய்திட்ட உங்களுக்கு என் பணிவான வணக்கமும், நன்றியும் ! தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 1571444738
தூயவள்
தூயவள்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
மதிப்பீடுகள் : 19

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by மாணிக்கம் நடேசன் on Thu Oct 18, 2018 11:04 am

கோரா.காம் இதை ஆங்கிலத்தில் எப்படி தேடுவது. அதற்கான தொடர்பிறை ஆங்கிலத்தில் தர முடியுமா??? நன்றி ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4357
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1314

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by M.Jagadeesan on Sat Jun 22, 2019 12:47 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
@சாமி wrote:நல்ல முயற்சி ஐயா இந்த திரி!
நானும் முயன்றுள்ளேன்.
நான் கிறுக்கியது வெண்பா வரம்பிற்குள் உள்ளதா என்று கூறுங்கள்.
பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்

அன்புடன்
சாமி
முதற்க்கண் எனது நன்றி உரித்தாக்குகிறேன் சாமி. அருமையான முயற்சி. சொல்லவந்த கருத்து மிகவும் அருமை. குறிப்பிட்ட இடத்தில் தளை தட்டுகிறது. குறித்துள்ளேன் பாருங்கள்.

பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்
முதலில் சுட்டிய இடத்தில் நேரொன்றிய ஆசிரியத்தளையும், அடுத்ததில் கலித்தளையும் வருகிறது. இயற்ச்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே வெண்பாவில் வரவேண்டும் சாமி அவர்களே. இதையே சற்று மாற்றி,
மைந்தர்கள் கற்றல் விடின் ......என்றால் மிகவும் சரியாகப் போய்விடும். தொடர்ந்து எழுதுங்கள். மிகச்சிறந்த வெண்பாப் புலவராக வருவீர்கள். வாழ்த்துகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 804827

தயாளன் ஐயா அவர்களுக்கு !

மைந்தன் - ஒருமை
மைந்தர் - பன்மை

எனவே மைந்தர்கள் என்று எழுதினால் பன்மைக்குப் பன்மை சேர்த்ததுபோல் ஆகிவிடும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by M.Jagadeesan on Sat Jun 22, 2019 1:01 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா : 003

வாழ்த்துக்கள் தஞ்சைநல் வாசன் வலையிலும்மை
வீழ்த்தினர்காண் வீரமம்தா பாய்!!


இன்று காலை நமது தம்பி தஞ்சை வாசன் - மம்தா பாய் இருவரின் திருமணம் இனிய முறையில் நடந்தேறியது. நேற்று மாலை திருமண வரவேற்ப்பு வைபவம் நடந்தது. நானும் என் மனைவியும் கலந்துகொண்டோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனித்திரியில் இணைத்துள்ளேன். பார்க்க:
http://www.eegarai.net/t85460-31-05-2012#805079
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 805091

தயாளன் ஐயா !

என் கண்ணுக்குப் பட்ட குறைகளையெல்லாம் இங்கே சுட்டுகிறேன் . தவறாக எண்ணவேண்டாம் .

வாழ்த்துக்கள் என்று எழுதாமல் வாழ்த்துகள் என்று எழுதுவதே சரி .
வரவேற்ப்பு என்று எழுதாமல் வரவேற்பு என்று எழுதுவதே சரி .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by M.Jagadeesan on Sat Jun 22, 2019 1:09 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா - 002

செல்லும் வழியினிலே சேரிருக்கும் சோர்விருக்கும்
வெல்லுமோர் மேல்வழியே அஃதுநாம் எடுக்கும் எல்லா முயற்ச்சிகளிலும் பல தடைகள் வரத்தான் செய்யும். அது நமது வெற்றிக்காகத்தான் என நினைத்து தொடர்ந்து செல்ல வேண்டும்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 804830

சேறு என்பதே சரி .

சேறிருக்கும் என்று வருதல் வேண்டும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by M.Jagadeesan on Sat Jun 22, 2019 1:32 pm

@நாகசுந்தரம் wrote:உயர்திரு தயாளன் ஐயா மிகவும் நன்றி ! ஈகரை கவிஞர்கள் மத்தியில் இருந்தால்
கவிப்புலமை பெறலாம் என்பதற்கு இந்த திரி மேலும் ஒரு சான்று.
இலக்கணம் பயிலாத எனது இந்த குறளை குறை களைந்து ஏற்றிடுவீர் அல்லது மாற்றிடுவீர்.

நாளை எனநாளைக் கடத்தாது நலம் சேர்த்தால்
நாளும் வராதே நமன்.


அன்பன் நாகசுந்தரம்.
மேற்கோள் செய்த பதிவு: 804967

நாளை எனநாளைத் தள்ளாதீர் நண்பர்காள்
மூளையுடன் இன்றே முடி .

முதல் சீரும் மூன்றாம் சீரும் முதலெழுத்து ஒன்றி மோனை நயம் பயத்தல் நலம் .
அது கட்டாயம் இல்லையென்றாலும் , ஓசை நயத்திற்கு அது உதவும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by M.Jagadeesan on Sat Jun 22, 2019 1:35 pm

@M.Jagadeesan wrote:
@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா - 002

செல்லும் வழியினிலே சேரிருக்கும் சோர்விருக்கும்
வெல்லுமோர் மேல்வழியே அஃதுநாம் எடுக்கும் எல்லா முயற்ச்சிகளிலும் பல தடைகள் வரத்தான் செய்யும். அது நமது வெற்றிக்காகத்தான் என நினைத்து தொடர்ந்து செல்ல வேண்டும்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 804830

சேறு என்பதே சரி .

சேறிருக்கும் என்று வருதல் வேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1299529

முயற்ச்சி என்று எழுதாமல் முயற்சி என்று எழுதுவதே சரி .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by M.Jagadeesan on Sat Jun 22, 2019 2:11 pm

@பிஜிராமன் wrote:குறள்வடிவம் கற்றால் குதூகலம்தன் னோடு
மறவாது வெண்பா நமக்கு

ஐயா, அருமையான திரி.........மிக்க நன்றிகள்.....இனி நிறைய வெண்பா கவிகளை பார்க்கலாம் ஈகரையில்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 805875

ஐயா !

எப்போதும் செய்யுளில் தமிழ்ச் சொற்களையே ஆளவேண்டும் . குதூகலம் என்பது தமிழ்ச்சொல் அல்ல .

குறள்வடிவம் கற்றே குவலயத்தில் செந்தமிழை
சிறப்போடு வைப்போம் அறி .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by M.Jagadeesan on Sat Jun 22, 2019 2:30 pm

@கேசவன் wrote:
உண்ணுவது எல்லாம் உணவல்ல மாமிசத்தை
உண்ணா உணவே உணவு
அருமை அய்யா ஆனால் இங்கு மாமிசம் என்பதற்கு பதிலாக வேறு எதாவது சொல் உபயோகிக்கலாமா
மேற்கோள் செய்த பதிவு: 807829
வள்ளுவர் மாமிசத்தைப் புலால் அல்லது ஊன் என்றே குறிப்பிடுகிறார் . எனவே குறளை

உண்ணுவது எல்லாம் உணவல்ல ஊனுணவை
உண்ணா நிலையே உயர்வு .

என்று மாற்றுதல் நலம் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 50 Empty Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை