புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
3 Posts - 2%
jairam
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
2 Posts - 1%
Poomagi
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
1 Post - 1%
சிவா
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
17 Posts - 4%
prajai
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
8 Posts - 2%
jairam
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மதுரை மாவட்டம்  Poll_c10மதுரை மாவட்டம்  Poll_m10மதுரை மாவட்டம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை மாவட்டம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed May 23, 2012 6:48 pm

மாவட்டங்களின் கதைகள் - மதுரை மாவட்டம் ( Madurai District)
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சான்றோர்கள் வாழ்ந்த இடம்



அடிப்படைத் தகவல்கள்
தலைநகரம் மதுரை
பரப்பு 3,741 ச.கி.மீ.
மக்கள்தொகை 25,78,201
ஆண்கள் 13,03,363
பெண்கள் 12,74,838
மக்கள் நெருக்கம் 689
ஆண்-பெண் 978
எழுத்தறிவு விகிதம் 77,820
இந்துக்கள் 23,51,019
கிருத்தவர்கள் 56,352
இஸ்லாமியர் 1,37,443

புவியியலமைவு

அட்சரேகை: 900.30-100.30N
தீர்க்கரேகை: 770.00-780.30E

இணையதளம்:
www.madurai.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்:

மின்னஞ்சல்: collrmdu@tn.nic.in
தொலைபேசி: 0452-2531110


எல்லைகள்: இதன் வடக்கில் திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களும்: தெற்கில் விருதுநகர் மாவட்டமும்; கிழக்கில் சிவகங்கை மாவட்டமும்: மேற்கில் தேனி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.


வரலாறு: புராணங்களில் இது கடம்ப வனம் என்று வழங்கப்படுகிறது. ஒருமுறை இவ்வனத்தின் வழியாகச் சென்ற தனஞ்செயம் என்னும் விவசாயி, ஒரு கடம்ப மரத்தினடியில் தேவேந்திரம் ஒரு சுயம்புலிங்கத்தை தியானித்து நிற்பதைக் கண்டார். விரைந்து மன்னர் குலசேகரப் பாண்டியனிடம் தகவல் சொல்ல, அவர் வனத்தை சீராக்கி, சிவலிங்கம் இருந்த இடத்தைச் சுற்றி ஒரு கோவிலைக் கட்டினார். சிவபெருமானின் திருமுடியிலிருந்து வழிந்த மதுரம் (தேன்) வாழ்ந்த இடமானதால் இது மதுரை எனப் பெயர் பெற்றது. மதுரை பெயர்க்காரணம் பற்றிய ஐதீகக் கதை.
தென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கிய இடம் மதுரைக்கு உண்டு. முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டி வந்தது இம்மதுரை நகரம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை ஆட்சி செய்த விசயன் என்ற மன்னன் தன்னுடைய பட்டத்தரசியாக மதுராபுரி (மதுரை) இளவரசியை மணந்ததாக இலங்கையின் பண்டைய வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்திஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன. தமிழ் வளர்ச்சிக்குத் தனியே சங்கம் வைத்து வளர்த்த பெருமையும் இந்த நகரத்துக்கு உண்டு என்று பழமையான வரலாறுகள் தெரிவிக்கின்றன. மதுரை தமிழின் ஐம்பெருங்காப்பியங்களின் ஒன்றான சிலப்பதிகாரம் கதையின்படி அதன் நாயகி கண்ணகியால் ஒரு முறை எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இலக்கியங்களில் மதுரை
தமிழின் பழமையான இலக்கியங்களான நற்றிணை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு ஆகிய நூல்களில் மதுரை குறித்து கூறப்பட்டுள்ளன. சில இடங்களில் "கூடல்" என்றும் சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூறு முதலிய நூல்களில் "மதுரை" என்றும் மதுரை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
மதுரை என்னும் ஊர்ப்பெயர் மருதத்துறை > மதுரை எனக் கொள்ளும் அளவுக்கு வையை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதி. [6] [7] [8]
மதுரை ஆட்சியாளர்களின் காலவரிசை
வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும்போது மதுரை பல்வேறு அரசாட்சியின் கீழ் இருந்தாலும், பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் காலம் தான் மதுரைக்குப் பொற்காலமாக இருந்திருக்கிறது. கிமு 6 முதல் கிபி 5ஆம் நூற்றாண்டு வரையில் சங்ககாலப் பாண்டியர்கள் வசமும், 5 முதல் 13ஆம் நூற்றாண்டு வரையில் இடைக்காலப் பாண்டியர்கள் வசமும் இருந்த மதுரை 14 முதல் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை டெல்லி சுல்தான்களின் வசம் இருந்தது. விஜயநகரப் பேரரசு மூலம் அந்த சுல்தான்களின் பொற்காலஆட்சி முறியடிக்கப்பட்டு 1520 ஆம் ஆண்டில் விஜயநகரர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் நாயக்கர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அவர்கள் ஆட்சியாண்டில் 1623 முதல் 1659 ஆம் ஆண்டு வரையிலான மன்னர் திருமலையின் ஆட்சி மீனாட்சியம்மன் கோயிலுக்கும் மதுரைக்கும் ஒரு பொற்காலமாக இருந்திருக்கிறது. 1736 ஆம் ஆண்டில் நாயக்கர்கள் வீழ்ச்சியுற, 1801 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரிடம் சென்றது. ஆங்கிலேயர்கள் இவ்விடத்தின் கலைப் பொருட்களை வளர்க்காவிட்டாலும், அழிக்கவில்லை.
தற்போதைய மதுரையின் மையப்பகுதி பெரும்பாலும் நாயக்கர்களால் கட்டப்பட்டதாகும். கோயில், மன்னர் அரண்மனை நடுவிலிருக்க, அதனைச் சுற்றி வீதிகளையும் குடியிருப்புகளையும் அமைக்கும், இந்து நகர அமைப்பான "சதுர மண்டல முறை" மதுரையில் பின்பற்றப்பட்டுள்ளது.
மக்கள்
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1230015 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[9] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மதுரை மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மதுரை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,041,038 மக்கள் மதுரை மாவட்டத்தில் வசிக்கின்றார்கள். இந்த எண்ணிக்கை கடந்த 2001 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை விட 17.95% அதிகம் ஆகும். இவர்களில் 1,528,308 பேர் ஆண்கள், 1,512,730 பேர் பெண்கள் ஆவர்கள். மதுரை மாவட்டத்தின் மக்கள் தொகையில் 81.66% பேர் கல்வியறிவு பெற்றவர்களாவர். இதில் ஆண்களின் விகிதம் 86.55% ஆகவும் பெண்களின் விகிதம் 76.74% ஆகவும் இருக்கிறது
நிர்வாகம்
மதுரை நகரின் நிர்வாகம் மதுரை மாநகராட்சியின் வசம் உள்ளது. மாநகராட்சியின் தலைவர் மேயர் (மாநகரத் தந்தை) என்று அழைக்கப்படுகிறார். இவர் தவிர 100 வட்டங்களிலிருந்து (வார்டுகள்) உள்ளன. ஒவ்வொரு வட்டதிளிருந்தும் ஒரு உறுப்பினர்கள் வீதம் 100 பேர் மாநகரட்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போதைய மேயராக ராஜன் செல்லப்பா மற்றும் துணைமேயராக கோபாலகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார்கள். மதுரை மாநகராட்சி அலுவலகம் வைகை ஆற்றுக்கு வடக்கே அழகர்கோவில் ரோட்டில் தல்லாகுளம் அருகே செயல்பட்டு வருகின்றது.
கலாச்சாரம்
நகரின் மத்தியில் கணிசமான அளவில் சௌராஷ்டிர மக்கள் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தவிர வியாபார நிமித்தமாக பல்வேறு காலகட்டங்களில் குடிபெயர்ந்த வட இந்திய மக்களும் வசித்து வருகின்றனர். ரயில்வே சந்திப்பின் மேற்கே உள்ள ரயில்வே காலனி பகுதிகளில் ஆங்கிலோ-இந்திய மக்கள் மக்களும் வசித்து வருகின்றனர். எனவே நகரில் பலதரப்பட்ட கலாச்சாரங்கள் நிலவுகிறது.
உணவு
தமிழகத்தின் பிற நகரங்களை போலவே மதுரை நகரிலும் முக்கிய உணவாக அரிசி சோறு உள்ளது. இவை தவிர இங்கு பிரியாணி, வெண்பொங்கல், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி (உணவு) போன்ற உணவுப் பொருட்களும் வடை வகைகளும் நகர மக்கள் விரும்பி உட்கொள்ளும் உணவுப் பொருட்கள் ஆகும். இங்கு சில கடைகளில் கிடைக்கும் இட்லி வகைகளின் தனிப்பட்ட சுவையினால் ''மதுரை மல்லிகை இட்லி' என்ற புனைப்பெயருடன் அறியப்படுகிறது. "ஜில் ஜில் ஜிகர்தண்டா" என்று உள்ளூர் கடைகாரர்கள் அழைக்கப்படும் சீனப் பாசி கலந்த ஒரு வகை குளிர்பானம் மதுரைக்கு வரும் வெளியூர் சுற்றலாப் பயணிகள் விரும்பி அருந்தும் குளிர்பானமாக உள்ளது.
கல்வி


அமெரிக்கன் கல்லூரி
முதன்மைக் கட்டுரை: மதுரையில் உள்ள கல்வி நிலையங்கள்
இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனங்களுள் சில மதுரையில் அமைந்துள்ளன. இரண்டு கல்லூரிகள் நூறு ஆண்டுகளுக்கு மேலாகவும், சில கல்லூரிகள் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாவும் செயல்பட்டு வருகின்றன. மதுரையில் மதுரை பல்கலைக்கழகம் என்கிற பெயரில் பல்கலைக்கழகம் 1966 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தற்போது இது மதுரை காமராசர் பல்கலைக் கழகமாக செயல்பட்டு வருகிறது. மதுரைக்கு அருகிலுள்ள திருப்பரங்குன்றத்தில் புகழ் பெற்ற பொறியியல் கல்லூரியாக அரசு உதவி பெறும் தியாகராஜர் பொறியியல் கல்லூரி விளங்குகிறது. இது தவிர மதுரையைச் சுற்றிலும் பல சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. சட்டம் தொடர்பான கல்வித் தேவைகளுக்கு மதுரை அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இந்நகரில் இருக்கும் சேதுபதி மேல்நிலைப் பள்ளி 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. இதில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பணியாற்றியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து
சென்னை-நாகர்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்நகரம், தென்னிந்திய இரயில்வேயின் மிக முக்கிய சந்திப்பாகும். அதனுடன் நாட்டின் மற்ற முக்கிய நகரங்களை இணைக்கும் விமான நிலையமும் உண்டு.
சுற்றுலா
File:Thirumalai Nayakkar Palace, Madurai.jpg|


இந்தோ-செராமிக் பாணியில் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் அரண்மனை தூண்கள்


மீனாட்சி அம்மன் கோயில் குளம்


காந்தி அருங்காட்சியகம்
கோவில் நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், கூடல் அழகர் பெருமாள் கோவில் போன்ற கோவில்களும் இவை தவிர திருமலை நாயக்கர் அரண்மனை, காந்தி அருங்காட்சியகம், மதுரை, குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி மற்றும் சமணர் மலை என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்கள் நிறைய இருக்கின்றன. மதுரைக்கு மிக அருகில் அழகர் கோவில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களும் இந்து மதத்தின் சிறப்புமிக்க சில பாடல் பெற்ற தலங்கள் ஆகும்.
குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வரும் சுற்றுலா மையமாக மதுரை விளங்குகிறது. இது தவிர வட இந்தியர்களும், தமிழகத்தின் பிற மாவட்ட பயணிகளும் விரும்பி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள சில சுற்றுலா மையங்கள் உள்ளாட்சி அமைப்புகளால் அதிக நிதி ஒதுக்கப்பட்டு வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. திருமலை நாயக்கர் மஹால் பல கோடி செலவிடப்பட்டு ஒலி-ஒளி காட்சி போன்ற அம்சங்களுடன் மீண்டும் புதிப்பிக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள பிற சுற்றுலாத் தலங்கள்
மதுரைக்குப் அருகாமையில் உள்ள மாவட்டங்களான இராமநாதபுரம் மாவட்டத்தில் புண்ணிய தலங்களில் ஒன்றான இராமேஸ்வரம், சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோயில், ஆவுடையார்கோயில், திருப்பூவணம் பூவணநாதர் கோயில் போன்ற நூற்றாண்டுகள் கடந்த கோவில்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், திண்டுக்கல் மலைக்கோட்டை, தேனி மாவட்டத்தில் சுருளி நீர்வீழ்ச்சி, வைகை அணை மற்றும் இம்மாவட்டத்திற்கு அருகிலுள்ள கேரள மாநில எல்லையில் உள்ள தேக்கடி, மூணாறு போன்றவையும் சில மணி நேரப் பயணத் தொலைவில் உள்ள சுற்றுலாத் தளங்கள் ஆகும்.
தகவல் தொடர்பு
மதுரையில் பி.எஸ்.என்.எல், டாடா, ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகிய தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு அளிக்கின்றன. பி.எஸ்.என்.எல், ஹட்ச், ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் நகர்பேசி இணைப்பு அளிக்கின்றன. இது தவிர இந்நிறுவனங்கள் அகலப்பாட்டைஇணைய இணைப்புகளும் அளிக்கின்றன. அனைத்து தேசிய, அனைத்துலக தொலைக்காட்சிகளும் மதுரையில் தெரிகின்றன. ஸ்டார் விஜய், சன் டிவி, கலைஞர் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி மற்றும் அவற்றின் சிறப்பு அலைவரிசைகளும், எஸ். எஸ் மியூசிக், தூர்தர்சன் பொதிகை ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகளும் மதுரை நகரில் கிடைக்கின்றன. வானொலிகளில் பண்பலை அலைவரிசைகளான சூரியன் பண்பலை, ரேடியோ மிர்ச்சி, ஹலோ பண்பலை ஆகியனவும் அனைத்திந்திய வானொலியின் மதுரை நிலையம் நகரில் செயல்பட்டு வருகின்றன. தினமலர், தினகரன், தமிழ் முரசு, தினத்தந்தி, தினமணி, மாலை மலர் ஆகிய தமிழ் செய்தித் தாள்களும், தி இந்து, தி நியூ இந்தியன் எக்சுபிரசு, டெக்கான் கிரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் மதுரையில் பதிப்புகளை கொண்டுள்ளன.
பிரச்சினைகள்
ஒவ்வொருநாளும் பெருகிவரும் இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்றவற்றின் காரணமாக நகருக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்கள், முறைப்படுத்தப்படாத போக்குவது விதிகள், வைகை ஆற்றில கலந்துவிடப்படும் பல்வேறு விதமான மாசுபட்ட திட திரவக் கழிவுகள், சாலைகளின் ஓரங்களில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் குப்பைகள் மற்றும் சாக்கடைகள் என பல சவால்களை மதுரை நகரம் எதிர்கொண்டு வருகிறது.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள்


மதுரை நகரின் நெரிசலான சாலைகள்
மதுரை நகர் கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வரும் மிக முக்கிய பிரச்சினையாக வைகை ஆறு மாசுபடுவதை சொல்லலாம். மதுரை நகரின் முக்கிய சாக்கடைகள், சிறு தொழிற்சாலைகளின் கழிவுநீர் போன்றவை வைகை ஆற்றில் கலக்கப் படுவதால் வைகை ஆறு மாசடைந்து காணப்படுகிறது. இது தவிர வைகையின் இரு கரைகளிலும் உள்ள மக்கள் குப்பைகளை அதிக அளவில் வைகை ஆற்றுக்குள் கொட்டுவதாலும் ஆறு மாசடைகிறது. இவற்றைப் பற்றி உள்ளூர் தினசரிகள் சுட்டிகட்டுவதும், மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக நடவடிக்கை எடுப்பதும் மதுரையில் வாடிக்கையாக நடக்கும் நிகழ்வுகள்.
வைகையாற்றில் கழிவுகள்
மக்கள் குடியிருப்புகளிளிருந்து வெளியேறும் சாக்கடை நீர், ஆற்றின் கரையோரம் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் மற்றும் நகரின் பல இடங்களில் சேகரிக்கப்படும் மனிதக் கழிவுகள் முதலியன வைகை ஆற்றில நேரடியாக கலந்து விடப்படுகின்றன. இவை தவிர இறைச்சிக் கடை கழிவுகள் முதலிய திடக்கழிவுகளும் ஆற்றுக்குள் கொட்டப்படுகின்றன. இதனால் வைகை ஆறு மாசடைந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் ஆற்றில இறங்கும் இடத்திற்கு மிக அருகில் பந்தல்குடி கண்மாய் நீர் வைகையாற்றில் கலக்கும் இடம் தற்போது சாக்கடை கலக்கும் இடமாக மாறிவிட்டது. எனவே வருடத்தின் பெருவாரியான நாட்களில் கள்ளழகர் ஆற்றில இறங்கும் இடமும் மாசடைந்து காணப்படுகிறது.
போக்குவரத்து பிரச்சினைகள்
நீண்ட காலத்திற்கு முன்பு வடிவைக்கப்பட்ட நகரின் சில பிரதான சாலைகள் வளர்ந்து வரும் வாகனப் போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. சிம்மக்கல், கோரிப்பாளையம், காளவாசல், பழங்காநத்தம், காமராஜர் சாலை போன்ற இடங்களில் நாளின் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதனை மனதில் வைத்து வழிமொழியப்பட்ட பறக்கும் சாலைகள் திட்டம் இன்னும் திட்ட அளவிலேயே இருக்கின்றன. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மதுரை நகருக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் நெரிசலை குறைக்கும் வகையில் புதிய பாலங்கள் எதுவும் இன்னும் அமைக்கப்படவில்லை.
சென்னையை அடுத்து மதுரை மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு மெட்ரோ ரயில் போக்குவரத்து மதுரை நகருக்கு கிடைக்கும் பட்சத்தில் தற்போதைய போக்குவரத்து பிரச்சினை பெரும்பகுதி குறைக்கப்படும்.
திருவிழாக்கள்


மாரியம்மன் தெப்பத் திருவிழா
மதுரை நகரில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா சமயத்தில் திருக்கல்யாணம் என்று பரவலாக அறியப்படும் மீனாக்ஷி அம்மன் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில இறங்குதல் என அழைக்கப்படும் வைகையாற்றில் கள்ளழகர் ஆற்றில இறங்கும் திருவிழாவும் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களால் விமரிசையாக கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் சில. சித்திரை திருவிழா தமிழகம் முழுவதும் பரவலாக அறியப்படும் ஒரு திருவிழா ஆகும். தெப்பத்திருவிழா தெப்பத்தில் கொண்டாடப்படும் வருடாந்திர விழாவாகும். இவை தவிர கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, தெற்குவாசல் புனித மேரி தேவாலயத்தில் கொண்டாடப்படும் கிருஸ்துமஸ் விழா போன்றவை நகரின் பிற முக்கிய திருவிழாக்கள்.




1786-ல் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1996-இல் இம் மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டம் புதியதாக உருவாகப்பட்டது.

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள் - 2
மதுரை, உசிலம்பட்டி,
தாலூகாக்கள் - 7: மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மேலூர், பேரையூர், திருமங்கலம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி
மாநகராட்சி -1: மதுரை
நகராட்சிகள்-6: மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, ஆனையூர், அவனியாபுரம், திருப்பரங்குன்றம். ஊராட்சி ஒன்றியங்கள்-13: அலங்காநல்லூர், செம்பட்டி, கள்ளிக்குடி, கொட்டாம்பட்டி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு,மேலூர், சேடப்பட்டி, டி. கல்லூப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி.

முக்கிய ஆறுகள்: பெரியாறு, வைகை
குறிப்பிடத்தக்க இடங்கள்
திருமலை நாயக்கர் அரண்மனை: திருமலை நாயக்கரால் கட்டப்பட்டட இந்த அரண்மனை சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துவருகிறது.

நாயக்கர் மஹாலின் உட்புறத்தோற்றம்

குட்லாம்பட்டி அருவி: மதுரை - கொடைக்கானல்சாலையில், 36 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.


ஸ்ரீ அரவிந்தர் அன்னை தியான மண்டபம்: மதுரை இரயில் நிலையத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் திருநகரில் உள்ள இந்த இதயான மண்டபம் ஸ்ரீ அரவிந்தர் அனைக்கு அர்ப்பணிக்கபட்டது. மிகப் பழமையான தியான மண்டபம்.

கூடல் அழகர் கோவில்: கூடலழகரான திருமால் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும், கிடந்த கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

கோச்சடை அய்யனார் கோவில்: வட்டாரப் பண்பாட்டின் அடையாளமாக எழுந்து நிற்கும் இக்கோயில் குடிகொண்டிருக்கும் கோச்சடை அய்யனார் மதுரை மக்களின் காவல் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறார்.

வண்டியூர் மாரியம்மன் கோவில்: மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் தெப்பக் குளக்கரையில் அமைந்திருக்கும் தெப்பக் குளக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில். திருமலைநாயக்கர், மகால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இடத்தை அப்படியே தெப்பக்குளமாக்கி விட்டார். இத் தெப்பக்குளத்தின் மையத்தில் ஒரு பிள்ளையார் கோயிலும் உள்ளது.
ஸ்ரீமத் நடனகோபால நாயகி சுவாமிகள்

(1943-1914) 'மதுரையில் ஜோதி' என்றும் சௌராஷ்டிர ஆழ்வார் என்றும் போற்றப்படுபவர். கடவுளை நாயகனாகவும், தன்னை நாயகியாகவும் பாவித்து இவர் பாடிய கீர்த்தனைகள் கேட்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவை.


இருப்பிடமும் சிறப்புகளும்:

சென்னையிலிருந்து 447 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

தமிழகத்தின் 'உறங்கா நகரம்' அல்லது 'தூங்கா நகரம்'

மதுரை பொற்றாமைக் குளக்கரைச் சுவர்களில் 1330 குறள்கள் பதிக்கப்பட்டுள்ளன.

மதுரையம்பதி, கூடல் நகர், கடம்பவனம் மதுரையின் சிறப்பு பெயர்கள்

பாண்டிய மன்னர்களின் தலைநகரம்.

கலாச்சாரப் பெருமை மிக்க புகழ்பெற்ற சுல்லாத்தலம்.

மதுரையில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.

மதுரையின் பஞ்சப்பட்டிப் பகுதியில் நவரத்தினக் கற்கள் கிடைக்கின்றன.

ராணி மங்கம்மாள் சத்திரத்தில் அமைந்துள்ள காந்தி அருங்காட்சியகத்தில், விடுதலைப்போரின் முக்கிய நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் சில முக்கிய இடங்கள்: திருப்பரங்குன்றம், அழகர் மலை, மீனாட்சியம்மன் கோவில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம்.

ஏப்ரல்-மே மாத்ததில் நடைபெறும் சித்திரைத் திருவிழா பிரபலமானது. அழகர் ஆற்றில் இறங்கும் முக்கிய விழாவே திருவிழாவின் முக்கிய அம்சம்.

எம்.எஸ். சுப்புலட்சுமி, மதுரை காந்தி எம்.எம்.ஆர். சுப்பராயன்.


தங்கம்பழனி
&
விக்கிபீடியா



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu May 24, 2012 12:30 am

நன்று

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக