ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விமர்சனங்களை நான் எப்போதுமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை-ஒரு கல் ஒரு கண்ணாடி ஹீரோ

View previous topic View next topic Go down

விமர்சனங்களை நான் எப்போதுமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை-ஒரு கல் ஒரு கண்ணாடி ஹீரோ

Post by ரா.ரா3275 on Mon May 14, 2012 1:23 am

சினிமா ஹீரோ என்ற இடத்தை அடைய வெகு நாள்களாகவே நீங்கள் திட்டமிட்டது போல் தெரிகிறதே...?

நான் சினிமாவில் தொடர்ந்து இருப்பதால் உங்களுக்கு அப்படி தெரியலாம். தொடக்கத்தில் பெரிய திட்டம் எதுவும் இல்லை. சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக உயர்ந்த நேரம், நிறைய பேர் 'நீங்களே ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தால் என்ன?' என்று கேட்டார்கள்.
அவர்களுக்கெல்லாம் ஒரு சின்ன மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்தேன். இந்த இடம் பலருக்கு கனவு. சிலருக்கு வாழ்க்கை. அப்படிப்பட்ட ஒரு இடம் இப்போது எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி. வேள்வி, தவம் எதுவும் இல்லாமல் இந்த இடத்தை அடைந்திருக்கிறேன். ஆனால் இது பெரிய இடம். இதை தக்க வைத்து கொள்ள இப்போது நேரம் வந்திருக்கிறது.

உங்கள் தம்பி அருள்நிதி நடித்த 'வம்சம்' நீங்கள் நடிக்க வேண்டிய படமாமே. நடித்திருந்தால் அந்தப் படமே நல்ல அறிமுகத்தைக் கொடுத்திருக்குமே?

பாண்டிராஜ் என்னிடம்தான் 'வம்சம்' கதையை முதலில் சொன்னார். 'பருத்தி வீரன்' படத்தின் பாதிப்பு அதில் சின்னதாக இருந்தது. அது மாதிரியான ஒரு கதை என் உடல்வாகுக்குச் சரியாக வருமா? என்ற கேள்வி எனக்குள் வந்தது.
அப்போது ஹீரோவாகும் எண்ணத்தில் இருந்த அருள்நிதியிடம் பாண்டிராஜை அனுப்பி வைத்தேன். அந்தக் கதை அவனுக்குப் பிடித்திருந்தது. இது மாதிரி கதை கேட்ட அனுபவம் நிறைய இருக்கிறது. ஆனால் எனக்கான கதை என்ன என்பதும், என் நடிப்பு எப்படியிருக்கும் என்பதும் எனக்கு மட்டுமே தெரியும்.
'சார் கட் பண்ணினா ஒரு டாட்டா சுமோக்குள்ளே இருந்து இறங்குறீங்க'ன்னு சொல்லப்பட்ட கதைகளில் எனக்கு ஆர்வமில்லை. அப்போதுதான் டைரக்டர் ராஜேஷ் ஒரு ஒன் லைன் சொன்னார். சுத்தமாக புரியவில்லை. அவர் மூன்று மணி நேரம் கதை சொல்லியிருந்தாலும் நிச்சயம் எனக்கு அது புரிந்திருக்காது. ஏனென்றால் அதில் கதையே இல்லை.
அப்படி ஒரு கதைதான் எனக்குத் தேவைப்பட்டது. அதுவுமில்லாமல் ராஜேஷின் 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' ஆகிய படங்கள் எனக்குப் பிடிக்கும். அந்த சாயலிலேயே இதுவும் இருந்ததால் நடிக்க வந்து விட்டேன்.

மு.க.முத்து, மு.க.ஸ்டாலின், அருள்நிதிக்குப் பின் நடிக்க வரும் உங்களை உங்கள் தாத்தா எப்படி பார்க்கிறார்?

பெரிதாக அட்வைஸ் எதுவும் சொல்லவில்லை. சேனல்களில் இப்போது 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் டிரெய்லர் போய்கொண்டிருக்கிறது. அதைப் பார்த்த அவர் ஒரு நாள் காலை போன் செய்து 'படம் ரீலிஸ் ஆயிட்டா? எனக்குக் காட்ட மாட்டீயா?'ன்னு கேட்டார். 'தாத்தா இன்னும் படம் ரிலீஸ் ஆகலை. பாட்டு மட்டும்தான் ரீலீஸ் ஆகியிருக்கு'ன்னு சொன்னேன்.
'அப்ப பாட்ட காட்டு'ன்னு ஆசையா கேட்டார். உடனே போய் பாட்டைப் போட்டுக் காட்டினேன். 'அழகே அழகே...', 'பட்டர் பிளை...' இரண்டு பாடல்களும் அவருக்குப் பிடித்திருந்தது. யார் மியூசிக். யார் பாடலாசிரியர் என எல்லாவற்றையும் கேட்டு விட்டு, 'டூயட் காட்சிகளில் கூச்சப்பட்டு நடிச்சிருக்க. அது நல்லாவே தெரியுது' என்றார். 'தாத்தா இது முதல் படம்தான்' என சொல்லிவிட்டு அப்போதும் கூச்சப்பட்டு நின்றேன். வாய் விட்டு சிரித்தார் தாத்தா.

மு.க. ஸ்டாலின் என்ன சொன்னார்?

அப்பா, அம்மா இரண்டு பேருக்கும் ரொம்பவே சந்தோஷம். பாடல்கள் அனைத்தையும் காட்டினேன். சந்தோஷப்பட்டார்கள்.

தியேட்டர் கிடைக்கவில்லை, படம் சரியாக ஓடவில்லை என பல தயாரிப்பாளர்கள் இன்னும் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ பெரிய ஹீரோ, பெரிய இயக்குநர் என தயாரிப்பில் இருந்து கொண்டே இருக்கிறீர்கள்? உண்மையில் சினிமா நம்பத்தகுந்த இடமா?

நல்ல சினிமாவை கொடுத்தால் நிச்சயம் வெற்றி பார்க்கலாம். செய்வதை நன்றாக செய்ய வேண்டும். இது எல்லா வியாபாரத்திலும் உள்ள விஷயம்தான்.
எல்லோருக்கும் புரிந்த ஒன்றுதான். படம் ஓடவில்லை, தியேட்டர் கிடைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். நான் எந்த அளவுக்கு லாபங்களை எடுத்திருக்கிறேனோ அந்த அளவுக்கு நஷ்டத்தையும் அடைந்திருக்கிறேன். சில படங்கள் நஷ்டம் அடைத்திருக்கிறது. அதற்காக சிலரைக் கூப்பிட்டு காசை திருப்பிக்கொடுத்திருக்கிறேன்.
லாபத்தை மட்டுமே அடையும் தொழில் எங்கேயாவது இருக்கிறதா? லாப, நஷ்டங்களைத் தாண்டி நல்ல படங்களைக் கொடுக்கிற தயாரிப்பாளர் என்ற பெயரும் கிடைத்திருக்கிறது. அது ஆறுதல் தரும்.
இதோ இப்ப கூட சீனு ராசாமி 'நீர்ப்பறவை' என்ற ஒரு நல்ல கதை சொன்னார். பிடித்திருந்தது. குறைந்த பட்ஜெட்தான். 'எடுத்துட்டு வாங்க'ன்னு சொல்லிவிட்டேன். நல்ல படம் கொடுத்தால் ஜெயிக்கலாம். நம்பிக்கை இருக்கிறது.

ஆனாலும் சில தியேட்டர்களை இன்னும் நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருப்பதாக சொல்லப்படும் விமர்சனம் குறித்து...

பல முறை இதற்கு பதில் சொல்லி விட்டேன். ஆனால் யாரும் விட்டபாடில்லை. நல்ல சினிமாவை நேசித்து நிற்கிற தயாரிப்பாளராகச் சொல்கிறேன். ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்வது பிரசவ வேதனை.
ஒரு படத்தை ரசிகர்களிடம் எடுத்து சென்று சேர்ப்பதில் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்பது சினிமா தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும். ஒரு விஷயத்தை நான் வெளிப்படையாக இங்கே சொல்லியாக வேண்டும்.
எந்த ஆட்சியாக இருந்தாலும் நல்ல படம் எடுத்தால் ஓடும். நல்ல படம் இல்லையென்றால் எந்த ஆட்சியிலும் ஓடாது. இது ஒரு சாதரண விதிதான். 'கிளவுட் நைன்' நிறுவனம் தயாரித்து வெளியிட்ட 'மங்காத்தா' சென்ற ஆண்டின் பெரிய ஹிட் படம். அருள்நிதி நடித்த 'மௌன குரு' படத்தைப் பார்க்காதவர்களே இல்லை. இதெல்லாம் யார் திட்டமிட்டது? விமர்சனங்களை நான் எப்போதுமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

தமிழ் சினிமாவில் நிறைய பேர் உங்களுக்கு நல்ல பழக்கம். அவர்களெல்லாம் என்ன சொன்னார்கள்?

நிறைய பேர் வாழ்த்து சொன்னாங்க. சினிமாவில் மனசுக்கு நெருக்கமா நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் நான் சினிமாவில் நடிப்பதில் சந்தோஷம். இதே போல் என் படத்தைப் பார்த்துவிட்டும் 'நல்லா நடிச்சிருக்கே' என்று அவர்கள் வாழ்த்தணும்னு நான் நினைக்கிறேன். பார்க்கலாம்.

நன்றி : கூடல்.காம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: விமர்சனங்களை நான் எப்போதுமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை-ஒரு கல் ஒரு கண்ணாடி ஹீரோ

Post by kkarthik on Mon May 14, 2012 3:28 am

நன்றி
avatar
kkarthik
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 76
மதிப்பீடுகள் : 31

View user profile

Back to top Go down

Re: விமர்சனங்களை நான் எப்போதுமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை-ஒரு கல் ஒரு கண்ணாடி ஹீரோ

Post by முரளிராஜா on Mon May 14, 2012 8:12 am

பகிர்வுக்கு நன்றி ரா ரா
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: விமர்சனங்களை நான் எப்போதுமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை-ஒரு கல் ஒரு கண்ணாடி ஹீரோ

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum