ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 ayyasamy ram

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 ayyasamy ram

செய்யத் தகாத 16.
 ayyasamy ram

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 ayyasamy ram

போராட்டம்...
 ayyasamy ram

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 Logeshwaran kob

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by krishnaamma on Tue May 08, 2012 7:36 pmவாக்கிய பஞ்சாங்கப்படி, குரு பகவான் மே 17, மாலை 6.25மணிக்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். 2013, மே 27 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார் இதையொட்டி ஏற்படும் பலன்களைக் காணலாம்.

நற்பலன் பெறும் ராசிகள்: மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம்.

சுமாரான பலன் பெறும் ராசிகள்: மிதுனம், தனுசு, கும்பம், மீனம்.

பரிகார ராசிகள்: ரிஷபம், சிம்மம், துலாம்.

தெரிந்து கொள்வோம் குருவை!

சொந்த வீடு - தனுசு, மீனம்
உச்சராசி - கடகம்
நீச்சராசி - மகரம்
திசை - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
நிறம் - மஞ்சள்
வாகனம் - யானை
தானியம் - கொண்டைக்கடலை
மலர் - வெண்முல்லை
வஸ்திரம் - மஞ்சள்நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
நிவேதனம் - கடலைப்பொடி சாதம்
உலோகம் - தங்கம்
இனம் - ஆண்
உறுப்பு - தசை
நட்புகிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்
பகைகிரகம் - புதன், சுக்கிரன்
மனைவி - தாரை
பிள்ளைகள் - பரத்வாஜர், கசன்
பிரதானதலங்கள் - ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்
தகுதி -ராஜகிரகம்
வழிபாட்டுபலன் -நல்லபிள்ளைகள், புத்திசாலித்தனம், கவுரவம்

குரு ஸ்லோகம்

குருபிரம்மா குரு விஷ்ணு
குருதேவோ மஹேஸ்வர:
குரு சாக்ஷõத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நம:

குரு காயத்ரி

விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்

வியாழநோக்கம் வந்தாச்சா: குரு இருக்கும் ராசியைவிட அவர் பார்க்கும் இடங்களுக்கே பலம் அதிகம். இதனையே குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிடர்கள் குறிப்பிடுவர். நவக்கிரகங்களில் குரு மட்டுமே பூர்ணசுபகிரகம் ஆவார். இவருக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உண்டு. ரிஷபத்தில் இருந்து 5,7,9 பார்வைகளால் கன்னி, விருச்சிகம்,மகர ராசிகளைப் பார்க்கிறார். இந்த ராசியினர் ஓராண்டுகாலத்திற்கு குருவின் பார்வையால் அனுகூலம் பெறுவர். இதை அடிப்படையாகக் கொண்டே ஜாதகம் பார்க்கும்போது, வியாழநோக்கம் வந்தாச்சா? என்று கேட்கும் வழக்கம் ஏற்பட்டது. ராசி, லக்னத்தை குரு பார்க்கும் போது தான் ஒருவருக்கு வாழ்வில் திருமணயோகம் உண்டாகும். திருமணம் மட்டுமின்றி, குழந்தைப்பேறு, நல்ல குடும்பம், செல்வம், பொன்பொருள்சேர்க்கை, ஆன்மிக சிந்தனை ஆகிய நற்பலன்களை குருபகவானே தருகிறார்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1)-நல்லநேரம் பொறந்தாச்சு!

Post by krishnaamma on Tue May 08, 2012 7:38 pmமேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1)-நல்லநேரம் பொறந்தாச்சு!
ஏப்ரல் 30,2012கல்யாண யோகம் வந்தாச்சு! 80/100

லட்சிய நோக்குடன் செயல்படும் மேஷராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் உள்ளார். ராசிக்கு பாக்ய, விரய ஸ்தான அதிபதியாக உள்ள குரு தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் இடம்பெறுவது சிறப்பாகும். ரிஷபத்தில் உள்ள குரு 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே எதிரி, ஆயுள் பலம், தொழில் ஸ்தானங்களை பார்க்கிறார். பணவரவு புதிய இனங்களில் வந்துசேரும். மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். தம்பி, தங்கை உங்கள் கருத்துக்கு மதிப்பளிப்பர். வீடு, வாகனத்தில் தேவையான நவீன மாற்றம் செய்வீர்கள். புதிய வீடு வாங்குவதற்கும் யோகமுண்டு. புத்திரர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். அவர்கள் மீதான பாசமும் அதிகரிக்கும். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்களால் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆயுள் ஸ்தானத்தில் குரு பார்வை பதிவதால் உடல்பலம் கூடும். தொல்லை கொடுத்து வந்த வியாதிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து வந்த பகையுணர்வு நீங்குவதோடு உதவியும் கிடைக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு வியாழ நோக்கம் அமைவதால் திருமண முயற்சி எளிதில் நிறைவேறும். திட்டமிட்டபடி மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.

தொழிலதிபர்கள்: ஓட்டல், மருத்துவமனை, கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், பால்பண்ணை, அரிசி ஆலை, காகிதம், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, ஆட்டோமொபைல், மின்சார உபகரணம், ஜவுளி, மினரல் வாட்டர், குளிர்பானம், படகு, வலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் அமோக வளர்ச்சியும் தாராள லாபமும் பெறுவர். மற்ற தொழிலதிபர்களும் விறுவிறுப்புடன் செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய கிளை துவங்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பால் பொருட்கள், கண்ணாடி, அழகுசாதனம், குளிர்பானம், காய்கறி, பூ, இறைச்சி, கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவால் அதிக லாபம் காண்பர். மற்ற வியாபாரிகளுக்கு விற்பனை கூடுவதுடன் அடிக்கடி வெளியூர் சென்று ஆதாயத்துடன் திரும்புவர்.

பணியாளர்கள்: அரசு துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பாக செயல்பட்டு பணிகளைக் குறித்த காலத்தில் முடிப்பர். பதவி உயர்வு, விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பைப் பெறுவர். எதிர்பார்த்த சலுகை அனைத்தும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் ஆர்வமுடன் கடமையாற்றி குறித்த காலத்தில் பணிகளைச் செய்து முடிப்பர். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகிய சலுகை பெறுவர். எதிர்பார்த்த கடனுதவி தேவையான சந்தர்ப்பத்தில் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். குடும்பத்தேவைக்கான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். உறவினர்களில் மத்தியில் அந்தஸ்து கூடும். சுபவிஷயங்களைத் தலைமையேற்று நடத்துவர். அவரவர் தகுதிக்கேற்ப ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபம் கிடைக்கும்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கம்ப்யூட்டர், மாடலிங், தொழில்நுட்பம், ஆசிரியர், சட்டம், ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், லைப்ரரியன், கலை, வணிகத்துறை, ஓவியம், இசை, நடனம் பயிலும் மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து தரத்தேர்ச்சி காண்பர். மற்ற துறை மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். படிப்புக்கான பணவசதி சீராக கிடைத்து வரும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரம்ப, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிகநேரம் ஒதுக்கி அக்கறையுடன் படிப்பர். படிப்பு முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: அனைவரிடமும் இன்முகத்துடன் நடந்து கொள்வர். சமூகநலனில் அக்கறையுடன் ஈடுபட்டு மக்கள் செல்வாக்கு காண்பர். தாராள செலவில்தொண்டர்கள் மத்தியில் சுய அந்தஸ்தை உயர்த்துவர். நீண்டநாள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு தலைமையின் ஆதரவால் கிடைக்கப் பெறுவர்.

விவசாயிகள்: விவசாயப்பணிகளை விரைந்து நிறைவேற்ற பணவசதி குறைவின்றிக் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் உண்டு. நவீன உழவுக்கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.

பரிகாரம்: முருகனை வழிபடுவதால் தாராள பணவரவும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சியும் உண்டாகும். செல்ல வேண்டிய தலம்: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில்

பரிகாரப்பாடல்:
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

குரு வக்ர பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய்க்கு நட்பு கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குரு வக்ரகதி பெறுகிறார். ஏற்கனவே குருவால் ஏற்படும் நற்பலன்கள் வக்ரகாலத்தில் இன்னும் கூடுதல் நன்மையாக மாறும். வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் அமையப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள்,வியாபாரிகள், பணியாளர்கள் முன்னேற்றம் பெறுவதோடு தாராள பணவரவும் கிடைக்கப் பெறுவர். எதிர்கால நலன்கருதி சேமிக்கவும் வாய்ப்புண்டு. உறவினர்களின் ஒத்துழைப்பால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். மறைமுக எதிரிகள் பலமிழந்து போவர். வெற்றி தேவதையின் அருள்பார்வை கிடைக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டாகும். நீண்டகாலமாக வாங்க நினைத்த ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். உற்சாகத்துடன் பணிகளில் ஈடுபடுவீர்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

ரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2)

Post by krishnaamma on Tue May 08, 2012 7:40 pmபிள்ளையால் சாதகம் வேலையில் பாதகம் 55/100

ஆடம்பர வாழ்வில் நாட்டம் மிக்க ரிஷபராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசியில் இடம் பெற்றுள்ளார். ராசியில் குருபகவான் அமர்வது ஜென்மகுரு என்கிற நிலையாகும். இதனால் மனக்குழப்பமும், செயல் தடுமாற்றமும் அவ்வப்போது தலைதூக்கும். ராசியில் அமர்ந்த குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணியம், புத்திரம், ஏழாம் இடமான மனைவி, நட்பு, ஒன்பதாம் இடமான பிதா, சவுபாக்ய வாழ்வு ஆகிய இடங்களை பார்க்கிறார். குருவின் பார்வை பதியும் ராசிகளின் வழியாக உங்கள் நற்பலன் கிடைக்கும். குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும். கையிருப்பு கரைவதோடு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு கூடும். வாகன பயணத்தில் மிதவேகத்தைப் பின்பற்றுவது அவசியம். புத்திரர் உங்களின் சிரமத்தை அறிந்து உதவி செய்ய முன்வருவர். அவர்களின் ஒத்துழைப்பு கண்டு பெருமிதம் கொள்வீர்கள். கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை காண்பர். பூர்வசொத்தில் கிடைக்கும் வருமானம் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும். உடல்நலனில் அக்கறை தேவை. அலைச்சல் காரணமாக சோர்வு அடிக்கடி உண்டாகும். சத்தான உணவு, முறையான ஓய்வு அவசியம். மருத்துவச் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு சொத்தின் பேரில் கடன் பெறவும், சொத்துக்களை விற்கவும் நிர்ப்பந்தமான சூழ்நிலை உருவாகும். பிறர் பொருளை பாதுகாப்பது, ஜாமின் கொடுப்பது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் சார்ந்த வகையில் தடைகளை எதிர்த்து போராட நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. சிலருக்கு விரும்பாத வீடு, பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

தொழிலதிபர்கள்: ஓட்டல், மருத்துவமனை, கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், பால்பண்ணை, அரிசி ஆலை, காகிதம், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, ஆட்டோமொபைல், மின்சார உபகரணம், ஜவுளி, மினரல் வாட்டர், குளிர்பானம், படகு, வலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் செயல்பாடுகளில் தாமத நிலையை எதிர்கொள்வர். மற்ற தொழிலதிபர்களும் கடின உழைப்பால் தடைகளைத் தகர்த்தெறிய முற்படுவர். லாபத்தை தக்கவைத்துக் கொள்ள விடாமுயற்சி தேவைப்படும். அளவான உற்பத்தியில் சீரான லாபம் காண்பர். வெளியூர் பயணத்தை ஆதாய நோக்கில் மட்டும் மேற்கொள்வது நல்லது.தொழிலாளர்களின்ஒத்துழைப்பு கிடைக்கும்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பால் பொருட்கள், கண்ணாடி, அழகுசாதனம், குளிர்பானம், காய்கறி, பூ, இறைச்சி, கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் சுமாரான விற்பனையால் மிதமான லாபம் காண்பர். மற்ற வியாபாரிகளும் மறைமுகப் போட்டிகளைச் சந்திப்பர். சகவியாபாரிகளின் அதிருப்திக்கு ஆளாக இடமுண்டு. மாற்றுத்திட்டம் மூலம் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெற முற்படுவர். அனுபவசாலிகளின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவர். தொழிலில் நிதானம், கடின உழைப்பு ஆகியவற்றைப் பின்பற்றுவது அவசியம்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணிகளில் தாமதநிலையைச் சந்திப்பர். நிர்வாகத்தினரின் குறிப்பறிந்து செயல்படுவது அவசியம். இல்லாவிட்டால் மேலதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும். எதிலும் கவனமுடன் செயல்படுவதால் நிலைமை சீராகும். சக பணியாளர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது நல்லதல்ல. முக்கிய தேவைகளை நிறைவேற்ற கடன் பெற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சலுகை பெறுவதில் பொறுமை மிக அவசியம். பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப ஆதாயம் கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியை குறித்தநேரத்தில் முடிக்க இயலாமல் அவதிப்படுவர். நிர்ணயித்த காலத்திற்குள் முடிக்க முடியாமல் அவப்பெயர் காண்பர். நிர்வாகத்தினரிடம் மோதல் போக்கைத் தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வு, சலுகை பெறுவதில் நிதானம் அவசியம். குடும்ப பெண்கள் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் கடன்தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். கணவரின் அனுமதியின்றி பிறரிடம் கடன் பெறக்கூடாது. புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை என்ற நிலை அடைவர்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கம்ப்யூட்டர், மாடலிங், தொழில்நுட்பம், ஆசிரியர், சட்டம், ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், லைப்ரரியன், கலை, வணிகத்துறை, ஓவியம், இசை, நடனம் பயிலும் மாணவர்கள் வெளிவட்டார பழக்கவழக்கம் குறைப்பதால் மட்டுமே படிப்பில் தேர்ச்சி பெறமுடியும். மற்ற துறை மாணவர்களும் படிப்பில் மந்தநிலை காண்பர். ஆரம்ப, மேல்நிலை பயிலும் மாணவர்கள் பெற்றோர் அறிவுரையை ஏற்பது எதிர்கால நலனுக்கு வழிவகுக்கும்.

அரசியல்வாதிகள்: மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டிவரும். சமூகப்பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். அதிகாரிகளிடம் மோதல் போக்கை கைவிடுவது நல்லது. ஆதரவாளர்களின் ஒத்துழைப்பைப் பெற அதிகப்பணம் செலவழிப்பர்.

விவசாயிகள்: விவசாயப்பணிகளைச் செய்ய தேவையான பணம் பெறுவதில் சுணக்கம் உண்டாகும். மிதமான மகசூலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் உண்டு.

பரிகாரம்:சிவபெருமானை வழிபடுவதால் தொழில் தடைகள் நீங்குவதோடு லாபமும் அதிகரிக்கும்.

செல்லவேண்டிய தலம்: மதுரை மீனாட்சியம்மன் கோயில்

பரிகாரப்பாடல்: மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே.

வக்ர கால பலன்: ராசிநாதன் சுக்கிரனுக்கு பகை கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் இன்னொருபகை கிரகமான குருபகவான் 10.10.2012 முதல் 6.2.2013 வரை வக்ரகதி பெறுகிறார். இந்த நாட்களில் அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்றுவதில் கூட தாமதம் உண்டாகும். குடும்பச் செலவுக்கு திண்டாட நேரிடும். கையிருப்பு கரைவதோடு சிலருக்கு கடன் வாங்கும் நிர்பந்தமும் உண்டாகும். வேண்டாத சிந்தனைகளால் கவலை அதிகரிக்கும். பணிச்சுமை அதிகரிப்பதால் உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள நேரிடும். உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழிலதிபர், வியாபாரிகளுக்கு விடாமுயற்சி தேவைப்படும். அரசு தொடர்பான அனுகூலம் பெற வாய்ப்பில்லை. பணியாளர்கள் ஓரளவே சலுகை பெறுவர். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது அவசியம். இல்லாவிட்டால் வீண்விரயம் தான். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பதால் பிரச்னையைத் தவிர்க்கலாம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

மிதுனம் (மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)

Post by krishnaamma on Tue May 08, 2012 7:42 pm

உடல்நிலை திருப்தி மனநிலை அதிருப்தி 65/100பிறர் கருத்தை மதித்து நடக்கும் மிதுனராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் குருபகவான் உள்ளார். கடந்த பெயர்ச்சியில் ஆதாய இடத்தில் இருந்து தாராள பணவரவு, அளப்பரிய நன்மைகளை வழங்கினார். குருவின் இப்போதைய பெயர்ச்சி நடைமுறை வாழ்வில் சிரமங்களை எதிர்கொள்ள வைக்கும். இருப்பினும் குருபார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக அனுகூல பலன்களைப் பெறுவீர்கள். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு நான்காம் இடமான வீடு, வாகனம், ஆறாம் இடமான பிணி, சத்துரு, எட்டாம் இடமான ஆசை நிறைவேறுதல் ஆகியவற்றை பார்க்கிறார். விடாமுயற்சியுடன் செயல்படுவதால் மட்டுமே வாழ்வில் வளர்ச்சியைத் தக்கவைக்க முடியும். வெளியூர் பயணத்தை பயனறிந்து மேற்கொள்வது அவசியம். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும். சிலர் கடன் பெற்று புதிய வீடு, வாகனம் வாங்குவர். புத்திரர்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைச் செய்து மகிழ்வீர்கள். படிப்பு, வேலைவாய்ப்பில் அவர்களின் செயல்பாடு சிறப்பாக அமையும். பூர்வ சொத்தில் சுமாரான அளவில் வருமானம் உண்டு. உடல் நிலை திருப்திகரமாக இருக்கும். இதனால் சிரமம் குறைந்து நடைமுறை வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சமரச தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. கணவன், மனைவி தங்களுக்குள் கருத்துவேறுபாடு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவர். தொழில் சார்ந்த வகையில் இலக்கை அடைய கூடுதல் முயற்சி தேவைப்படும். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும். மன அமைதியை பாதுகாக்க தியானம், தெய்வ வழிபாடு ஆகியவை உதவும்.

தொழிலதிபர்கள்: ஓட்டல், மருத்துவமனை, கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், பால்பண்ணை, அரிசி ஆலை, காகிதம், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, ஆட்டோமொபைல், மின்சார உபகரணம், ஜவுளி, மினரல் வாட்டர், குளிர்பானம், படகு, வலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் வளர்ச்சி பெற கடின உழைப்பு தேவைப்படும். மற்ற தொழிலதிபர்களும் விடாமுயற்சியுடன் குறுக்கீடுகளை முறியடித்து முன்னேறுவர். மிதமான லாபம், சீரான வளர்ச்சி என்ற நிலை தொடரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தமும், நடைமுறைச் செலவில் சிக்கனமும் லாபத்தை அதிகரிக்க வழிவகுக்கும்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பால் பொருட்கள், கண்ணாடி, அழகுசாதனம், குளிர்பானம், காய்கறி, பூ, இறைச்சி, கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் போட்டியைச் சந்திப்பதால் சுமாரான லாபம் காண்பர். மற்ற வியாபாரிகளுக்கும் இந்த நிலையே தொடரும். சகவியாபாரிகளின் செயல்பாட்டால் அதிருப்தி கொள்வர். புதிய முயற்சிகளை இப்போதைக்கு செய்யாமல் இருப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் செயல்பட்டால் லாபத்தை தக்க வைக்க இயலும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தாமதத்தைச் சந்திப்பர். சிலர் பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவதால் பிரச்னையில் இருந்து விடுபடலாம். சகபணியாளர்களால் பணிச்சுமை ஏற்படும். இருந்தாலும் அதற்கேற்ப வருமானம் கூடும். சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதத்தில் ஈடுபடுவது கூடாது. சலுகை பற்றிய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணிச்சுமை காரணமாக குளறுபடியான மனநிலைக்கு ஆளாவர். விருப்பமில்லாத பணி மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். செலவில் சிக்கனம் தேவை. குடும்ப பெண்கள் கணவரின் கருத்துக்கு மதிப்பளிப்பது அவசியம். இல்லாவிட்டால் குடும்ப அமைதிக்கு வழியில்லை. செலவினங்களை வகைப்படுத்தி திட்டமிடுதலுடன் செலவழிப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் மந்தநிலைக்கு உள்ளாவர். கணவர், தோழியர் வகையில் எதிர்பார்த்த உதவி குறைந்த அளவில் கிடைக்கும்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கம்ப்யூட்டர், மாடலிங், தொழில்நுட்பம், ஆசிரியர், சட்டம், ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், லைப்ரரியன், கலை, வணிகத்துறை, ஓவியம், இசை, நடனம் பயிலும் மாணவர்கள் படிப்புச் செலவுக்கான பணத்தைப் பெறுவதில் தாமதநிலை அடைவர். கவனச்சிதறல் காரணமாக தரத்தேர்ச்சி விகிதம் குறையும். மற்ற துறை மாணவர்களும் வெளிவட்டாரப் பழக்கத்தைக் குறைப்பது நல்லது. ஆரம்ப, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம். சக மாணவர்களின் உதவியால் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.

அரசியல்வாதிகள்: பொது விவகாரங்களில் நேர்மை குணத்துடன் செயல்படுவதால் மட்டுமே அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். தரவாளர்களின் விருப்பங்களை நிறைவேற்ற அதிக பணம் செலவாகும். அதிகாரிகளிடம் இதமாகப் பேசி மென்மையுடன் அணுகுவது நல்லது. தங்களின் லாபத்திற்காக எதிரிகள் சமரச முயற்சிக்கு முன் வருவர். சூழ்நிலைக்கு ஏற்ப ஆராய்ந்து செயல்படுவது அவசியம்.

விவசாயிகள்: பயிர் வளர்ப்பில் நடைமுறைச் செலவு கூடும். மாற்று பயிர் வளர்ப்புத் திட்டங்களை செயல்படுத்துவதால் ஓரளவு லாபம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் கிடைக்கும் லாபம் குடும்பத்தேவையை நிறைவேற்ற உதவும். நிலம் தொடர்பான பிரச்னையில் சமரச முயற்சிக்கு வாய்ப்புண்டு.

பரிகாரம்: லட்சுமிநரசிம்மரை வழிபடுவதால் குடும்பத் தேவை நிறைவேறும் விதத்தில் வருமானம் கூடும்.

செல்ல வேண்டிய தலம்: விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் லட்சுமிநரசிம்மர் கோயில்

பரிகாரப்பாடல்: ஆடிப் பாடி அகம் கரைந்து
இசை பாடிப் பாடி கண்ணீர் மல்கி
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ்வாணுதலே.

வக்ர கால பலன்: ராசிநாதன் புதனுக்கு பகை கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குருபகவான்10.10.2012 முதல் 6.2.2013 வரை வக்ரகதி பெறுகிறார். இதனால் மற்றவர்களின் செயல்பாடு கண்டு மனவருத்தத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் பேச்சை விரும்பி நடந்தவர்கள் கூட விலகிச் செல்ல வாய்ப்புண்டு. குடும்பச் செலவு கட்டுக்கடங்காமல் செல்லும். திட்டமிடுதல் இல்லாமல் அன்றாடப்பணிகளில் சிரமத்திற்கு உள்ளாவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கடின அலைச்சல் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்கள் மீதான நம்பிக்கை குறையும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடு அதிருப்தி தரும். தொழிலதிபர்கள் மூலதனத்தை அதிகரிப்பதோ, புதிய முயற்சி மேற்கொள்வதோ கூடாது. வியாபாரிகள் வாடிக்கையாளர் அதிருப்திக்கு ஆளாகலாம் கவனம். பணியாளர்கள் லுகை பெறுவதில் தாமதம் உண்டாகும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)

Post by krishnaamma on Tue May 08, 2012 7:43 pmவீட்டில் மகிழ்ச்சி பணியில் புத்துணர்ச்சி 85/100

வசீகரிக்கும் குணத்தால் பிறரை ஈர்க்கும் கடகராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் மிகுந்த ஆதாய பலன்களைத் தரும் வகையில் உள்ளார். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு மூன்றாம் இடமான புகழ், தைரியம், ஐந்தாம் இடமான புத்திர, பூர்வ புண்ணியம், ஏழாம் இடமான நட்பு, களத்திர ஸ்தானங்களை பார்க்கிறார். கடந்த காலங்களில் இருந்து வந்த சிரமம் அனைத்தும் அடியோடு நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான புதிய வழி உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். குடும்பத்தினர் தேவை அனைத்தும் நிறைவேறும். உங்களைப்புறக்கணித்த சொந்தபந்தம் வலிய வந்து உறவு கொண்டாடுவர். மனதில் புத்துணர்வு அதிகரிக்கும். எந்தச் செயலையும் தைரியத்துடன் அணுகுவீர்கள். தம்பி, தங்கையின் சுபநிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்துவீர்கள். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றத்தை தாராளச் செலவில் நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் செல்வாக்கு கூடும். புத்திரர் நன்கு படித்து கல்வியில் முன்னேற்றம் காண்பர். வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் பெறுவர். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிதாகச் சொத்து வாங்கும் யோகமுண்டு. உடல் ஆரோக்கியத்துடன் திகழும். மூத்த சகோதரர்கள் முக்கிய தருணங்களில் தகுந்த ஆலோசனை கூறி வழிநடத்துவர். குடும்ப ஒற்றுமை சிறந்தோங்கும். எதிர்கால தேவை கருதி சேமிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கணிசமாக அளவில் கையிருப்பு உயரும். வெளியூர் பயணத்தை லாபநோக்கில் நடத்தி வெற்றி காண்பீர்கள். திருமண வயதினருக்கு வியாழ நோக்கம் அமைவதால் திருமணம் விரைவில் கைகூடும்.

தொழிலதிபர்கள்: ஓட்டல், மருத்துவமனை, கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், பால்பண்ணை, அரிசி ஆலை, காகிதம், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, ஆட்டோமொபைல், மின்சார உபகரணம், ஜவுளி, மினரல் வாட்டர், குளிர்பானம், படகு, வலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் விறுவிறுப்புடன் செயல்பட்டு பொருள் உற்பத்தியைப் பெருக்கி லாபம் காண்பர். மற்ற தொழிலதிபர்களுக்கும் பன்மடங்கு ஆதாயம் உயரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வர். நவீன எந்திரங்களின் மூலம் தொழிலை நவீனமயமாக்குவர். தொழிலாளர்கள் நிறுவன வளர்ச்சியில் அக்கறை கொள்வர்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பால் பொருட்கள், கண்ணாடி, அழகுசாதனம், குளிர்பானம், காய்கறி, பூ, இறைச்சி, கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயத்தை உயர்த்துவர். போட்டி குறைந்து விற்பனை இலக்கை எளிதில் எட்ட இயலும். புதிதாகக் கிளை தொடங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் திறமையை வெளிப்படுத்துவர். நிர்வாகத்தினரின் ஆதரவால் பதவி உயர்வு, பாராட்டு கிடைக்கும். பணிச்சுமையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். எதிர்பார்த்த சலுகைகள் படிப்படியாக கிடைக்கத் தொடங்கும். சக பணியாளர்களிடம் நட்புக்கரம் நீட்டுவர். பணியிடத்தில் சுதந்திர உணர்வுடன் பணியாற்றுவர். அதிகாரிகளின் மத்தியில் செல்வாக்கு கூடும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் ஒருமுகத் தன்மையுடன் செயல்பட்டு பணியை செவ்வனே நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், பிற சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். குடும்ப பெண்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு கணவர், உறவினர்களிடம் செல்வாக்கு காண்பர். குடும்ப செலவுக்கான பணவசதி தாராளமாக கிடைத்து வரும். அவரவர் தகுதிக்கேற்ப பொன், பொருள் சேர்க்கை கிடைக்கும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றமும், நல்ல லாபமும் காண்பர்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கம்ப்யூட்டர், மாடலிங், தொழில்நுட்பம், ஆசிரியர், சட்டம், ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், லைப்ரரியன், கலை, வணிகத்துறை, ஓவியம், இசை, நடனம் பயிலும் மாணவர்கள் அக்கறையுடன் படித்து கல்விவளர்ச்சி காண்பர். மற்ற துறை மாணவர்களும் தரத்தேர்ச்சி பெறுவர். சக மாணவர்கள் மத்தியில் நற்பெயர் உருவாகும். ஆரம்ப,மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் படிப்பிற்காக அதிக நேரம் ஒதுக்குவர். படிப்புக்கான பணவசதி சீராகக் கிடைக்கும். பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். படிப்பு முடித்துவிட்டு, வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: இதுநாள்வரை செய்து வந்த சமூகப்பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய பதவி, பொறுப்பு தாமாக வந்து சேரும். ஆதரவாளர் மத்தியில் செல்வாக்கு கூடும். அதி காரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல் பணிக்கு புத்திரர்களாலான உதவிகளைச் செய்வர். எதிரிகள் தாமாக விலகிச் செல்வர். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும் . வழக்குவிவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும்.

விவசாயிகள்: விவசாயப்பணி சிறப்பாக நடைபெறும். அமோக விளைச்சலும், அதன்மூலம் அபரிமிதமான லாபமும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஆதாயம் கிடைக்கும். நிலம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். சுமூகத்தீர்வால் நிலப்பிரச்னை நல்லவிதமாகத் தீரும்.

பரிகாரம்: ராமரை வழிபடுவதால் வாழ்வில் அனுகூலமான பலன்கள் பன்மடங்கு உயரும்.

செல்ல வேண்டிய தலம்: கும்பகோணம் ராமர் கோயில்.

பரிகாரப்பாடல்: நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்.

வக்ர கால பலன்: உங்கள் ராசிநாதன் சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் சம அந்தஸ்து உள்ள கிரகமான குருபகவான் 10.10.2012 முதல் 6.2.2013 வரை வக்ரகதி அடைகிறார். இந்த நிலை, உங்கள் வாழ்வில் புதிய சாதனைகளை உருவாக்க உதவும். நீண்டநாள் எதிர்பார்ப்பு கூட நிறைவேறும். திட்டமிட்டிருந்த பணிகளை உற்சாகத்துடன் செயல்படுத்துவீர்கள். பணவரவும் திருப்திகரமான வகையில் கிடைக்கும். சமூகத்தில் பேச்சுக்கு மதிப்பிருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி தாராள பணச் செலவில் நடந்தேறும். தொழிலில் அதிர்ஷ்டகரமான வாய்ப்பின் மூலம் வருமானம் கூடும். குடும்பத்தினர்களின் தேவைகளை நிறைவேற்றி சந்தோஷம் காண்பீர்கள். தொழிலதிபர்கள், வியாபாரிகள், பணியாளர்கள் புதிய பதவி, பொறுப்பு, பாராட்டுகளைப் பெற்று மகிழ்வர். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதியர் ஒற்றுமையுடன் இருப்பர்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1)

Post by krishnaamma on Tue May 08, 2012 7:44 pmபத்தாமிட குருவால் பணியில் கவனம் 55/100

துணிச்சலுடன் வாழ்வை எதிர்நோக்கும் சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்த குருபகவான் பெயர்ச்சியாகி இப்போது பத்தாம் இடத்தில் உள்ளார். கடந்த காலங்களில் அளப்பரிய நற்பலன்களை குருவருளால் பெற்றீருப்பீர்கள். பத்தாம் இடத்தில் அமர்வால் குரு, உங்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவார். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு இரண்டாம் இடமான தனம், குடும்பம், நான்காம் இடமான தாய், வீடு, வாகனம், ஆறாம் இடமான கடன், பிணி, வழக்கு ஸ்தானங்களை பார்க்கிறார். பத்தில் குரு பதவிக்கு இடர் என்பது ஜோதிட சாஸ்திர மொழி என்றாலும் சந்திரனுக்கு பத்தாம் இடத்தில் குரு அமர்வதால் கஜ கேசரி யோக பலனைத்தரும். எனவே, நன்மையும் சிரமமும் கலந்த பலன் வாழ்வில் உண்டாகும். தாராள பணப்புழக்கம் இருப்பதால் குறுக்கிடும் சிரமங்களைக் குறைத்துவிடுவீர்கள். தம்பி, தங்கையின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகனத்தில் தேவையான நடைமுறை மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். புத்திரர் வேண்டாத நட்பும், பிடிவாத குணமும் கொண்டு செயல்படுவர். இதமான அணுகுமுறையால் அவர் களை பக்குவப்படுத்தி நல்வழிப்படுத்துவீர்கள். ஆன்மிகம் நாட்டம் அதிகரிக்கும். நல்லவர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவீர்கள். உடல்நலனில் அக்கறை ஏற்படும். எதிரியால் இருந்து வந்த தொல்லை குறையும். வழக்கு விவகாரங்களில் அனுகூலமான தீர்வு கிடைக்கும். கடன் தொந்தரவை ஓரளவு சரிக்கட்டுவீர்கள். தம்பதியர் ஒற்றுமை உணர்வுடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்கள் உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து நடப்பர். ஆடம்பர எண்ணத்துடன் அதிக பயன் தராத பொருள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் ஏற்படும் குறுக்கீடுகளை மாற்றுத்திட்டத்தின் மூலம் முறியடிக்க முயல்வீர்கள். தொழில் சார்ந்த பயணத்தை அடிக்கடி மேற்கொள்வீர்கள்.

தொழிலதிபர்கள்: ஓட்டல், மருத்துவமனை, கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், பால்பண்ணை, அரிசி ஆலை, காகிதம், டெக்ஸ்டைல்ஸ்,இரும்பு, ஆட்டோமொபைல், மின்சார,மின்னணு உபகரணம், ஜவுளி, மினரல் வாட்டர், குளிர்பானம், வலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் உற்பத்தி தரத்தை உயர்த்துவதில் குறுக்கீடுகளைச் சந்திப்பர். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்வர். நிர்வாக நடைமுறைச்செலவு அதிகரிக்கும். கடன் பெற்று அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வது நல்லதல்ல. புதிய தொழில் முயற்சியை இப்போதைக்கு தவிர்ப்பது அவசியம்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, மின்சார, மின்னணு பொருட்கள், பால் பொருட்கள், கண்ணாடி, அழகுசாதனம், குளிர்பானம், காய்கறி, பூ, இறைச்சி, கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் விற்பனை இலக்கை எட்டுவதில் தாமதத்தை சந்திப்பர். புதிய உத்திகளின் மூலம் வியாபாரத்தை மேம்படுத்த முயற்சிப்பர். சகவியாபாரிகளின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். விரிவாக்கம், புதிய தொழில் முயற்சிகளை அடுத்த குருபெயர்ச்சிக்குப் பிறகு செய்வது நல்லது.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணிசார்ந்த புதிய விஷயங்களை புரிந்து கொள்வதில் தயக்கம் கொள்வர். சகபணியாளர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். நிர்வாக அதிகாரிகளின் குறிப்பறிந்து நடப்பது மிக அவசியம். திட்டமிட்டு பணியாற்றினால் மட்டுமே நிர்ணயித்த காலவரையறைக்குள் பணியிலக்கை எட்ட முடியும். பணவரவு சீராக இருக்கும். பணிச்சுமையால் வருத்தம் ஏற்பட்டாலும், உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகையில் சில கிடைக்கும். பணியிடத்தில் பணி தவிர்த்த பிறவிஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியில் குளறுபடிகளை எதிர்கொள்வர். துறை சார்ந்த அனுபவசாலியின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவர். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கப் பெறுவர். பதவி உயர்வு, சலுகை பெறுவதில் தாமதம் உண்டாகும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். தாய்வழி உறவினர்களின் சீர்முறையால் சந்தோஷ வாழ்வு உண்டாகும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடின உழைப்பால் சுமாரான உற்பத்தி, விற்பனை காண்பர். பணப்பரிவர்த்தனையில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை அவசியம்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கம்ப்யூட்டர், மாடலிங், தொழில்நுட்பம், ஆசிரியர், சட்டம், ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், லைப்ரரியன், கலை, வணிகத்துறை, ஓவியம், இசை, நடனம் பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் பாராட்டும் விதத்தில் படிப்பர். மற்ற துறை மாணவர்களும் கல்வியில் வளர்ச்சி காண்பர். படிப்புக்கான பண வசதி சீராக கிடைக்கும். வெளிவட்டார விஷயங்களில் ஈடுபாடு குறையும். ஆரம்ப, மேல்நிலை பயிலும் மாணவர்கள் அக்கறையுடன் படித்து முன்னேற்றம் காண்பர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புண்டு.

அரசியல்வாதிகள்: ஆதரவு மனப்பாங்குடன் நடந்த சிலரே உங்களின் எதிரியாக மாறிவிடுவர். சமூகப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவீர்கள். புத்திரர், உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரிகளின் மறைமுக சூழ்ச்சிக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். வழக்கு விவகாரத்தில் ஓரளவே சாதகமான தீர்வு கிடைக்கும். புதிய பதவி, பொறுப்பு பெறுவதில் தாமதம் உண்டாகும்.

விவசாயிகள்: விவசாயப்பணிகளை நிறைவேற்ற அதிகச் செலவும், சிரமும் ஏற்படும். மிதமான மகசூலும், அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற லாபம் குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும். நில விவகாரம் சமரச முயற்சியால் தீர்ந்துவிடும். நிலம் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். அனுகூலத் தீர்வு கிடைக்கும்.

பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் தொழில் சார்ந்த பிரச்னை அனைத்தும் நீங்கி லாபம் பெருகும்.

செல்ல வேண்டிய தலம்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில்.

பரிகாரப்பாடல்: அருமறை முதல்வனை ஆழிமாயனைக்
கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனை
திருமகள் தலைவனை தேவ தேவனை
இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்.

வக்ர கால பலன்: உங்கள் ராசிநாதன் சூரியனுக்கு நட்பு கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குருபகவான் 10.10.2012 முதல் 6.2.2013 வரை வக்ரகதி பெறுகிறார். இதனால் மனதில் எதிர்மறை எண்ணம் உருவாகலாம் கவனம். தொழிலில் ஆர்வம் குறையும். வெளியூர் பிரயாணம் செய்ய ஆசைப்படுவீர்கள். ஆடம்பரம் மேலோங்கும். செலவு அதிகரிப்பதால் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்கத் தயங்குவீர்கள். வீடு வாகனத்தில் விரும்பிய மாற்றத்தை செய்து முடிப்பீர்கள். தொழிலதிபர்கள் நிர்வாகச் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவர். வியாபாரிகளுக்கு கடின உழைப்பு தேவைப்படும். பணியாளர்களுக்கு சலுகை ஓரளவே கிடைக்கும். பூர்வ சொத்தை விற்று கடன் அடைக்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். தம்பதியர் பொறுப்புடன் நடந்து குடும்ப நலன் காத்திடுவர்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2)

Post by krishnaamma on Tue May 08, 2012 7:46 pmசொத்து வாங்குவீங்க! சுகமாய் இருப்பீங்க! 75/100

தகுந்த திட்டத்துடன் செயல்புரிந்து வெற்றிபெறும் கன்னிராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான ரிஷபத்தில் குருபகவான் மிகுந்த அனுகூலத்துடன் உள்ளார். கடந்தகாலத்தில் இருந்த குருவின் அமர்வு வாழ்வில் பலவித கஷ்டங்களை தந்தது. இப்போதைய அமர்வு உங்கள் மாற்றத்தை உருவாக்கும். குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசியையும் ராசிக்கு மூன்றாம் இடமான புகழ், தைரியம், ஐந்தாம் இடமான பூர்வ புண்ணியம், புத்திரம் ஆகிய ஸ்தானங்களையும் பார்க்கிறார். இதனால் உங்கள் பலத்தை நீங்களே உணர்ந்து கொள்கிற தியும், புதிய நம்பிக்கையும் ஏற்படும். ஓடிப்போகிறவருக்கு ஒன்பதாம் இடத்தில் குரு என்பது ஜோதிட சாஸ்திர மொழி. தப்பு செய்து விட்டு, ஓடிப்போனாலும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்று இதற்கு பொருள் சொல்வார்கள். அந்தளவுக்கு பாதுகாப்பை இந்த பெயர்ச்சி காலம் தரும். உங்கள் வாழ்வில் ஓடி ஓடி உழைத்து முன்னேற புதிய வாய்ப்பு வாசல்கதவைத் தட்டும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதால், நன்மையும் தாராள வருமானமும் கிடைக்கும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். தம்பி, தங்கைகளுக்கு திட்டமிட்ட திருமண நிகழ்ச்சி நல்லபடியாக நடக்கும். வீடு, வாகன வகையில் செய்ய இருந்த மாற்றம் சிறப்பாக நிறைவேறும். புத்திரர்கள் செயல்திறனை வளர்த்து படிப்பு, பணி, தொழிலில் முன்னேற்றம் காண்பர். வேலையில்லாத குழந்தைகளுக்கு தகுந்த பணி கிடைக்கும். சொத்துவாங்க யோகம் உண்டு. பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானம் உயரும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஆடம்பரச்செலவு செய்யும் எண்ணம் மேலோங்கும். தம்பதியர் ஒற்றுமையாக நடந்து சமூகத்திலும் உறவினர்களிடமும் நன்மதிப்பு பெறுவர்.

தொழிலதிபர்கள்: கல்வி, நிதி நிறுவனம், லாட்ஜ், ஓட்டல், ரியல் எஸ்டேட், மருத்துவமனை, அச்சகம் நடத்துவோர், ஆட்டோமொபைல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, காகிதம், கட்டுமானப்பொருள், தோல், கண்ணாடிப்பொருள் உற்பத்தி செய்வோருக்கு அபரிமிதமான பணவரவு கிடைக்கும். மற்ற தொழில் செய்வோருக்கு இவர்களை விட லாபம் குறைவாக இருக்கும். ஏழரைச் சனிகாலம் என்பதால் அவ்வப்போது ஏற்படும் தடைகளைக் கடக்க வேண்டியிருக்கும். பணியாளர்களின் தேவைகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவீர்கள். தொழிலதிபர் சங்கங்களில் சிலருக்கு பதவி பொறுப்பு கிடைக்கும்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, கட்டுமானப் பொருள், கண்ணாடி, பர்னிச்சர், ஸ்டேஷனரி, காகிதம், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மின்சார, மின்னணு சாதனங்கள் வியாபாரம் செய்பவர்கள் விற்பனையில் முன்னேற்றம் அடைவர். அதிக லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும். புதிய நிறுவனங்களில் அதிக சரக்கு கொள்முதல் செய்வீர்கள். பிற பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு இவர்களை விட குறைந்த லாபம் கிடைக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அன்றாடப் பணிகளை எளிதாக நிறைவேற்றுவர். அதிகாரிகளின் பாராட்டு, நல்ல சம்பளம், பிற சலுகைகள் பெறுவர். அனுபவசாலிகள், தந்தையின் ஆலோசனையை ஏற்று நடப்பதால் பணியில் உயரிய பலன்களைபெறுவீர்கள்.

பெண்கள்:பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை எளிதாக புரிந்து செயல்படுவர். பணி இலக்கு திட்டமிட்ட காலத்தைவிட சீக்கிரம் நிறைவேறும். பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரை அனுசரித்து நடந்து நற்பெயர் பெறுவர். குடும்பச் செலவுக்கான பணவசதி தாராளமாகக் கிடைக்கும். மகிழ்ச்சிகர வாழ்வுமுறை தொடர்ந்திடும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூலம் உண்டு. ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தி, விற்பனையை உயர்த்துவர். உபரி பணவரவு உண்டு. இளம்பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், தொழில்நுட்பம், ஆசிரியர் பயிற்சி, ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், வங்கியியல், வணிகவியல், கலை, அறிவியல் மாணவர்கள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் பெறுவர். ஆசிரியர்களின் உதவி பரிபூரணமாக கிடைக்கும். மற்ற துறை மாணவர்களும் தரத்தேர்ச்சி பெறுவர். ஆரம்ப, நடுநிலை மாணவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மாநில ராங்க் பெற முயற்சிக்கலாம். சக மாணவர்கள் படிப்பில் உதவுவர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். சுற்றுலா பயணத்திட்டம் நல்லவிதமாக நிறைவேறும்.

அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடியை சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களிடம் எதிர்பார்த்த நன்மதிப்பு கிடைக்கும். புதிய பதவி தேடிவரும். புத்திரர்கள் உங்கள் பணி சிறக்க உதவி புரிவர். எதிரியை வெல்லும் திறன் அறிவீர்கள். கூடுதல் சொத்து கிடைக்கும். அரசு அதிகாரிகளின் மதிப்பைப் பெற்று திட்டங்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு காண்பர். சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும்.

விவசாயிகள்: விவசாயப்பணிகள் சிறப்பாக நடக்கும். மகசூல் உயர்ந்து கூடுதல் லாபம் பெற்றுத்தரும். கால்நடை வளர்ப்பிலும் பலன் உண்டு.

பரிகாரம்: ரங்கநாதரை வழிபடுவதால் தைரியம், மங்கல நிகழ்வு உண்டாகும்.

செல்ல வேண்டிய தலம்: ஸ்ரீரங்கம்

பரிகாரப்பாடல்: பச்சைமா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்அரங்கமா நகருளானே!

வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை, உங்கள் ராசிநாதன் புதனுக்கு பகை கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குருபகவான் வக்ரகதி பெறுகிறார். இதனால், மனதில் புத்துணர்வும், செயல்களில் நேர்த்தியும் ஏற்படும். பணவரவு பெற கிடைக்கிற வாய்ப்புக்களை தவறாமல் பயன்படுத்தி நன்மை பெறுவீர்கள். சமூகத்தில் உயரிய அந்தஸ்தும், புதியவர்களின் நட்பும் கிடைக்கும். புத்திரர்களுக்கு எதிர்பார்த்த வேலை வாய்ப்பு நல்ல சம்பளத்துடன் கிடைக்கும். உறவினர் வீட்டு மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும். பணியில் உள்ளவர்கள், எதிர்பார்த்த பதவி பொறுப்பு கிடைக்கப் பெறுவர். உடல்நலம் சீராக இருக்கும். பூர்வ சொத்தில் திருப்திகர பணவரவும், கூடுதல் சொத்து சேர்க்கையும் உண்டு. கணவன், மனைவி பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவர். வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த நன்மை வந்து சேரும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3)

Post by krishnaamma on Tue May 08, 2012 7:48 pmசிரமப்படுத்துறதுக்கே வந்துட்டாரு அஷ்டமக்குரு! 55/100

நன்றி மறவாத குணமுள்ள துலாம் ராசி அன்பர்களே!

குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான ரிஷபத்தில் பெயர்ச்சியாகி அனுகூலக்குறைவான தன்மையில் உள்ளார். அஷ்டம ஸ்தான குரு வாழ்வில் சில கஷ்டங்களை எதிர்கொள்ள வைக்கும். ஏழரைச்சனியின் பிடியிலும் சிக்கியுள்ள நேரம் இது. மனதில் இனம் புரியாத தயக்கம், கலக்கம் போன்றவை தருவார். இருப்பினும் குருவின் பார்வை பதிகிற இடங்களின் வழியாக நல்ல பலன் வந்து சேரும். குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 12ம் இடமான வெளியூர் பயணம், சுபச்செலவு, ராசிக்கு 2ம் இடமான பணவரவு, குடும்ப ஒற்றுமை, 4ம் இடமான வீடு, வாகனம் ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். இந்த சமயத்தில் பேச்சு தான் உங்களுக்கு எதிரி. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் தான் இந்த நிலை. நடைமுறை செலவு அதிகரிக்கும். சிறு அளவில் கடன் வாங்க நேரிடலாம். தம்பி, தங்கைகள் அவர்களுடைய சுயலாபத்தையே பார்ப்பார்கள். வீடு, வாகன வகையில் எல்லாம் நல்லபடியாகவே இருக்கும். தாய்வழி உறவினர்கள் உங்கள் வாழ்வு சிறக்க உதவுவர். புத்திரர்கள் படிப்பில் தரத்தேர்ச்சி பெறுவர். அவர்களுக்கு கவுரவமான வேலை கிடைக்கும். உடல்நிலை பாதிக்கப்படலாம். உயரமான கட்டடங்களில் பணி செய்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். படி, லிப்டில் ஏறும் போது கவனம். தண்ணீர் அதிகமாக உள்ள இடங்களிலும், நெருப்பு, மின்சார விஷயத்திலும் கவனம். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து குடும்ப மகிழ்ச்சி பாதுகாத்திடுவர். முக்கிய தருணங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளின் திருமணம், படிப்புச்செலவு உள்ளிட்ட சுபச்செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் புதிய அனுபவமும் நன்மையும் பெற்றுத்தரும். வாகன போக்குவரத்தில் மிதவேகமும் கூடுதல் கவனமும் அவசியம்.

தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் பணிச்சுமை அதிகரிக்கும். தளராத முயற்சியால் இலக்குகளை நிறைவேற்றுவீர்கள். ஓட்டல், மருத்துவமனை, கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், பால்பண்ணை, அரிசி ஆலை, காகிதம், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, ஆட்டோமொபைல், மின்சார உபகரணம், ஜவுளி, மினரல் வாட்டர், குளிர்பானம், படகு, வலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் உற்பத்தி இலக்கை எட்டுவதில் தாமதம் அடைவர். மற்றவர்களுக்கும் இதே நிலையே. குறைந்த லாபம் பெறும் வகையிலான ஒப்பந்தங்களே கையெழுத்தாகும். தொழிற்சாலையில் பாதுகாப்பு நடைமுறைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் சிலருக்கு தொழில் தாக்குப்பிடிக்கும்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பால் பொருட்கள், கண்ணாடி, அழகுசாதனம், குளிர்பானம், காய்கறி, பூ, இறைச்சி, கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் உரிய விற்பனை இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். மற்றவர்களுக்கு போட்டி கடுமையாக இருக்கும். லாபம் சுமார். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். பிறருக்காக எந்த வகையிலும் ஜாமீன் தரக்கூடாது. சுயதொழில் துவங்க நினைப்பவர்களுக்கு இது உகந்த சூழ்நிலை அல்ல.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களின் வேலையில் சிரமம் குறுக்கிடும். நிர்வாகத்தின் கண்டிப்பினால் மனச்சோர்வு ஏற்படும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கம்பெனி, அலுவலக நடைமுறைகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கவனக்குறைவால் பணியில் குளறுபடி உருவாகப்பெறுவர். ஒழுங்கு நடவடிக்கை இருக்கும். இரவல் பொருள் கொடுக்க, வாங்கக்கூடாது. குடும்பப் பெண்கள் பணத்தட்டுப்பாடு காரணமாக, செலவுகளை கட்டுப்படுத்தும் விதம் குறித்து கவலைகொள்வர். கணவர், குடும்ப உறுப்பினர்களின் உதவி மனதுக்கு ஆறுதல் தரும். தாய்வழி சீர்முறை கிடைத்து மகிழ்வீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் குறைந்த உற்பத்தி, சுமாரான விற்பனை காண்பர். நடைமுறைச்செலவு அதிகரிக்கும். இயன்றவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கம்ப்யூட்டர், மாடலிங், தொழில்நுட்பம், ஆசிரியர், சட்டம், ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், லைப்ரரியன், கலைத்துறை, வணிகத்துறை, ஓவியம், இசை, நடனம் பயிலும் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும். உரிய பயிற்சியும், கூடுதல் அக்கறையுமே தரத்தேர்ச்சியை தக்கவைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கத்தையும், வாகனத்தில் செல்வதையும் பெருமளவில் குறைப்பது நல்லது. படிப்பிற்கான பணவசதி கிடைக்க தாமதமாகும். சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.

அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் பெற்ற நற்பெயருக்கு களங்கம் வரும் வகையில் மாறுபட்ட நிகழ்வுகள் குறுக்கிடும். பொது விவகாரங்களில் ஒதுங்கிப் போவதால் சிரமம் தவிர்க்லகாம். ஆதரவாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மதிப்பு குறையும். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று உங்களை நீங்களே ஆறுதல்படுத்திக் கொள்ளுங்கள். அதிகாரிகளை அனுசரித்து சென்றால் தான், அரசுத்தொடர்பான காரியங்களை சாதிக்க முடியும். எதிரிகள் கலந்துகொள்கிற நிகழ்ச்சிகளை தவிர்ப்பதால் நன்னிலை பெறலாம். புத்திரர்கள் அரசியல் பணிக்கு உதவுவர்.

விவசாயிகள்: கூடுதல் நேரம் உழைக்க வேண்டியிருக்கும். அளவான மகசூல், சுமாரான பணவரவு உண்டு. கால்நடை வளர்ப்பில் வருகிற லாபம் மனதுக்கு நம்பிக்கை தரும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் கஷ்டம் குறைந்து நன்மை வளரும்.

செல்ல வேண்டிய தலம்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில்

பரிகாரப்பாடல்: விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாம்
தண்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து.

வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரனுக்கு பகை கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குருபகவான் வக்ரகதி பெறுகிறார். இதனால் மனதில் குழப்ப சிந்தனை அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மீதான நம்பிக்கையில் அதிருப்தி கொள்வீர்கள். வாகன போக்குவரத்தில் மிதவேகமும், பராமரிப்பு பணியில் தகுந்த கவனமும் பின்பற்றுவது நல்லது. உங்கள் சொல்லுக்கு வரவேற்பு கிடைக்கிற இடங்களில் மட்டும் பேசுங்கள். புத்திரர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அவர்களது படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் பாதிக்கப்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கை அடைய புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். பணியாளர்கள், சக பணியாளர்களை அனுசரித்து செயல்படுவது மட்டுமே நன்மை பெற உதவும். பாதுகாப்பு குறைவான இடங்களில் பிரவேசிக்க கூடாது.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை)

Post by krishnaamma on Tue May 08, 2012 7:49 pm
ஏழரையின் தாக்கத்தை ஏழாமிட குரு குறைப்பார் 70/100


உலக நிகழ்வுகளை அறிவதில் ஆர்வமுள்ள விருச்சிகராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான ரிஷபத்தில் மிகுந்த அனுகூலமாக உள்ளார். ஏழரைச் சனியின் ஆரம்பக்கட்டத்தில் சில சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கும் நீங்கள், இந்த சமயத்தில் அவற்றில் இருந்து ஓரளவு விடுபடுவீர்கள். கடந்த காலத்தில் இருந்த செயல் சுணக்கம் மாறி சுறுசுறுப்பு பெறுவீர்கள். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 11ம் இடத்தில் பதிவதால் ஆதாய பணவரவு உண்டு. 7ம் பார்வை ராசியில் பதிவதால் மனத்துணிவு, தெளிவான சிந்தனைத்திறன் ஏற்படும். 9ம் பார்வை ராசிக்கு 3ம் இடத்தில் பதிவதால் புகழ், அந்தஸ்து பெறுவீர்கள். அக்கம் பக்கத்தவருடன் அன்பு வளரும். தம்பி, தங்கைகள் வாழ்வில் முன்னேறி உங்களுக்கும் உதவிகரமாக செயல்படுவர். வீடு, வாகன வகையில் திருப்திகரமான நிலை உண்டு. புத்திரர்கள் குடும்பத்தின் பாரம்பரிய பெருமையைக் காத்திடும் வகையில் நற்செயல்களைச் செய்வர். படிப்பில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பிலும் கவுரவமான நிலையை அடைவர். பூர்வசொத்தில் பெறும் வருமானத்தின் அளவு உயரும். உடல்நலம் சிறந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். நிர்பந்தம் தரும் கடன்களை பெருமளவில் சரிசெய்வீர்கள். சந்திரனுக்கு ஏழில் குரு அமர்ந்து கெஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. இதனால் தொட்டது துலங்கும். புதிய பதவி, அளப்பரிய நற்பலன் எளிதாக வந்துசேரும். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து கொள்வதுடன், இணைந்து ஆலோசனை செய்து குடும்பவாழ்வு சிறக்க பாடுபடுவர். நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நண்பர்களுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உபரி வருமானம் உண்டு. இளம் வயதினருக்கு திருமண முயற்சி நிறைவேறும்.

தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், ஓட்டல், லாட்ஜ், டிராவல்ஸ், நிதி, கல்வி நிறுவனம், மருத்துவமனை நடத்துவோர், காகிதம், இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், பட்டாசு, மின்சார, மின்னணு சாதனங்கள், தோல் தொழிலில் உள்ளவர்கள் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி அதிகரித்து தொழிலில் சிறப்பு ஏற்படும். மற்ற தொழில் செய்வோருக்கும் தாராள லாபம் உண்டு. தொழிலதிபர் சங்கங்களில் பதவி கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிப்பீர்கள். புதிய சொத்து சேர்க்கை உண்டு. வெளிநாட்டு சுற்றுலா பயண வாய்ப்பு நிறைவேறும். புதிதாக தொழில் துவங்க முயற்சிப்பவர்கள் அளவான மூலதனத்துடன் துவங்கலாம்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, ஸ்டேஷனரி, மளிகை, அரிசி, எண்ணெய், பட்டாசு, மருந்து, தீப்பெட்டி, கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மினரல் வாட்டர் வியாபாரிகளுக்கு விற்பனை அதிகமாகி லாபம் உயரும். வியாபார சங்கங்களில் சிலருக்கு கவுரவமான பதவி வரும். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களை விட அதிக லாபமும் முந்தைய பாக்கி வசூலாவதுமான நற்பலன் நடக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி பணிகளை செவ்வனே நிறைவேற்றுவீர்கள்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் திறமையாகச் செயல்படுவர். பணிகளை வேகமாக நடித்து பதவி உயர்வு, புதிய பொறுப்பு, சலுகைகளைப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். தொழில்நுட்பங்களை ஆர்வமுடன் கற்றுக்கொள்வீர்கள்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் திறமையைப் பயன்படுத்தி பணிக்கு பெருமை சேர்த்திடுவர். எதிர்பார்த்த பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு கிடைக்கப்பெறுவர். குடும்பசெலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் விற்பனையில் வியத்தகு இலக்கை அடைவர். உபரி வருமானம் அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படும். இளம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமண வாழ்வு கைகூடும்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், ஆசிரியர், மேனேஜ்மென்ட், வணிகம், கலை, ஜர்னலிசம், தொழில்நுட்ப மாணவர்கள் ஞாபகத்திறன் சிறந்து உயர்ந்த தேர்ச்சி அடைவர். மற்ற துறை மாணவர்களுக்கும் பாராட்டும், பரிசும் கிடைக்கும். ஆரம்ப, மேல்நிலை மாணவர்களுக்கும் படிப்பு சிறப்பாக இருக்கும். சக மாணவர்களும், ஆசிரியர்களும் தேவையான உதவி புரிவர். படிப்பை முடித்தவர்களுக்கு கவுரவமான வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: கடந்தகால குறைபாடுகளைச் சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களின் மனதில் நம்பிக்கை உருவாகும். எதிர்பார்த்த பதவி தானாக வந்துசேரும். அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை கவனமுடன் கேட்டு நிறைவேற்றித்தருவர். எதிரிகள் வியந்து போகிற அளவில் உங்கள் செயல்பாடுகளின் தரம் அமையும்.புத்திரர்களால் அரசியலில் உதவி உண்டு.

விவசாயிகள்: விவசாயப்பணி சிறந்து அபரிமிதமான மகசூல்வரும். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் உண்டு.கூடுதல் நிலம் வாங்க அனுகூலம் உண்டு.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் தொழில் சிறந்து சமூக அந்தஸ்து உயரும்.

செல்ல வேண்டிய தலம்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்.

பரிகாரப்பாடல்:
புத்தியும் பலமும் தூயபுகழோடு
துணிவும் நெஞ்சில்
பத்தியும் அச்சமிலாப் பணிவும்
நோயில்லா வாழ்வும்
உத்தமஞானச் சொல்லின் ஆற்றலும்
இம்மை வாழ்வில்
அத்தனை பொருளும் சேரும்
அனுமனை நினைப்பவர்க்கே.

வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய்க்கு நட்பு கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குருபகவான் வக்ரகதி பெறுகிறார். இதனால் உங்கள் செயல்திறனில் சற்று சரிவு ஏற்படும். விலகிச் சென்ற உறவினர் விரும்பி வந்து நட்பு கொள்வர். இயன்ற அளவில் சமூகப்பணியிலும் ஈடுபடுவீர்கள். பணவரவு அதிகம் பெற புதிய வழி ஏற்படும். குடும்பத்தில் நடத்த வேண்டிய சுபநிகழ்ச்சி சீரும், சிறப்புமாக நிறைவேறும். புதிய வீடு, வாகனம் விரும்பியபடி வாங்குவீர்கள். உடல்நலம் நல்லவிதமாக இருக்கும். புத்திரர்களின் செயல்திறன் வளரும். புகழ்பெறும் வகையிலான செயல்களைச் செய்வீர்கள். எதிரிகள் உங்கள் வளர்ச்சி கண்டு விலகி ஓடுவர். தொழில், வியாபாரத்தில் வளம் சிறந்து அதிக அளவு லாபத்தை பெற்றுத் தரும். பணியில் உள்ளவர்கள் உயர்பதவி, பொறுப்பு எளிதில் கிடைக்கப் பெறுவர். பயணங்களின் போது பாதுகாப்பு நடைமுறையில் கவனம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம்1)

Post by krishnaamma on Tue May 08, 2012 7:51 pm

அயர வைப்பார் ஆறாமிட குரு 60/100புகழ்பெறுவதில் கூடுதல் விருப்பமுள்ள தனுசு ராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் உள்ளார். குருவின் ஆறாம் இட அமர்வு உங்கள் வாழ்வியல் நடைமுறையில் சில சிரமங்களை எதிர்கொள்ள வைக்கும். இருப்பினும் குருவின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக நல்ல பலன்களும் ஏற்படும். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு பத்தாம் இடமான தொழில், 12ம் இடமான கூடுதல் செலவு, இரண்டாம் இடமான குடும்பம், வாக்கு, பணவரவு ஆகிய இடங்களை பார்க்கிறார். பணரவரவு குறையும் என்பதால், குடும்பத்தேவைகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம். அதே நேரம் பணவரவுக்கான நல்ல வாய்ப்புகளும் தேடி வரும் என்பதால், அதைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் நிதிநிலை பற்றி கவலைப்பட வேண்டி வராது. தைரிய சிந்தனையும், மனதில் நம்பிக்கையும் வளரும். அவ்வப்போது உடல்நல பாதிப்பு வரலாம் என்பதால் பணிகளில் தாமதம் ஏற்படும். வீடு, வாகன வகையில் இருக்கிற வசதியை காத்துக் கொண்டாலே போதுமானது. தாய்வழி உறவினர்கள் கருத்து வேறுபாடு கொள்வர். அவர்களிடம் வாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. புத்திரர்கள் தொந்தரவு தராத வகையில் நல்ல குணத்துடன் நடந்துகொள்வர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து குடும்பச் செலவுகளை ஈடுகட்டும் வகையில் நடந்துகொள்வர். தம்பதியர் ஒற்றுமையுடன் குடும்பநலன் காத்திடுவர். நண்பர்களிடம் எதிர்பார்க்கிற உதவி கிடைக்கும். உறவினர் குடும்ப சுபநகிழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்கிற சூழ்நிலையும் அதனால் கூடுதல் செலவும் ஏற்படும். வெளியூர் பயணம் புதிய அறிமுகங்களை பெற்றுத்தரும்.

தொழிலதிபர்கள்: கல்வி, நிதி நிறுவனம், அச்சகம், டிபார்ட்மென்டல் ஸ்டோர், ரியல் எஸ்டேட், ஓட்டல், லாட்ஜ், டிராவல்ஸ், மருத்துவமனை நடத்துவோர், கட்டுமானப்பொருள், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, ஆட்டோமொபைல் தொழில் செய்வோர் பல்வேறு குளறுபடிகளை எதிர்கொள்வர். பணவரவு பெறுதில் தாமதம் இருக்கும். மற்ற தொழில் செய்வோருக்கு இவர்களை விட ஓரளவுக்கு நல்ல நிலை இருக்கும். கலங்காமல், உற்சாகத்துடன் செயல்படுவதால் தொழில் சிரமங்கள் விலகும். புதிய தொழில்நுட்பங்களை தொழிலில் பயன்படுத்துகிற கட்டாய சூழ்நிலை உருவாகும். புதிதாக தொழில் துவங்க விரும்புபவர்கள் எதிர்வரும் காலங்களில் முயற்சிக்கலாம்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, கட்டுமானப் பொருள், ஆட்டோமொபைல் உதிரிபாகம், தோல் பொருட்கள், பிளாஸ்டிக், கண்ணாடி, பூஜைப் பொருள், ஸ்டேஷனரி விற்பனை செய்பவர்கள் வியாபாரத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டாலும், சுமாரான விற்பனையும் அதற்கேற்ற லாபமுமே கிடைக்கும். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களை விட லாபம் சுமாராகவே இருக்கும். நீண்டகால பாக்கிகள் வருவது இழுத்தடிக்கும். வியாபாரத்தைத் தக்க வைக்க சிறிதளவு கடன் பெறுவீர்கள். சரக்கு
கிட்டங்கிகளில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணி இலக்கை நிறைவேற்றுவதில் ஏற்படுகிற குளறுபடியால் சஞ்சலம் கொள்வர். பணி சார்ந்த அனுபவசாலிகளின் ஆலோசனை பெற்று பணியை விரைந்து முடிக்கலாம். சம்பளம், சலுகையில் தற்போதைய நிலை தொடரும். ஒழுங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சிலருக்கு பணி வாய்ப்பு குருவருளால் கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உட்படுவர். அனுபவசாலிகளின் உதவியைக் கேட்டே பணிகளை முடிக்க வேண்டியிருக்கும். இதனால் ஏற்படும் தாமதத்தால், அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரும். சலுகைகளைக் கேட்பதில் நிதானம் வேண்டும். குடும்பப் பெண்கள் பாசத்துடன் செயல்பட்டு குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பைப் பெறுவர். வீட்டுச்செலவுக்கு தேவையான பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், சிக்கனம் பின்பற்ற வேண்டும். சுயதொழில் புரியும் பெண்கள் ஏற்கனவே பெற்ற ஆர்டர்களுக்கு பொருள்களை தருவதில் இழப்பு ஏற்படும். கூடுமானவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பதால் பணஇழப்பு வராமல் தவிர்க்கலாம்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், கம்ப்யூட்டர், ஆசிரியர், ஜர்னலிசம், வணிக, கலைத்துறை, மேனேஜ்மென்ட், கேட்டரிங் துறை மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதால் மட்டுமே எதிர்பார்த்த தரதேர்ச்சி இலக்கை அடையலாம். மற்ற துறை மாணவர்கள் இவர்களை விட சற்று கவனமாகப் படிப்பர். ஆரம்ப, மேல்நிலை மாணவர்கள் ஒரு நிமிஷத்தைக் கூட வீணாக்காமல் படித்தால் தான் உயர் மார்க் பெறலாம். நண்பர்களுடன் சேர்ந்து சுற்றும் பழக்கம் மேலோங்கும், தவிர்க்கவும். படித்து முடித்தவர்களுக்கு சுமாரான சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: கடந்தகாலத்தில் பெற்ற புகழை தக்கவைக்க அதிக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நடைமுறை செலவு அதிகரிக்கும். ஆதரவாள்ரகளின் எதிர்பார்ப்பை ஓரளவே நிறைவேற்ற முடியும். பொது விவகாரங்களில் கலந்துகொள்வதை தவிர்ப்பது சட்ட சிக்கல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். அதிகாரிகளுடன் சமரசமாக நடந்து கொள்ள வேண்டும். எதிரிகளின் தொந்தரவு கூடும். முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அதை பாதுகாப்பதில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.

விவசாயிகள்: நடைமுறைச்செலவு அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பிலும் சுமாரான வருமானமே உண்டு. விளைபொருட்களுக்கு தகுந்த விலை இல்லாததால் சிறு நஷ்டத்தை சந்திக்க இடமுண்டு.

பரிகாரம்: துர்க்கையை வழிபடுவதால் மனதைரியம், தொழில் சிறப்பு ஏற்படும்.

செல்ல வேண்டிய தலம்: சமயபுரம் மாரியம்மன் கோயில்.

பரிகாரப்பாடல்: இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுளிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே!

வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 27.2.2013 வரை உங்கள் ராசிநாதன் குருவுக்கு நட்பு கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில், குருபகவான் வக்ரகதி பெறுகிறார். இதனால் திட்டமிட்ட செயல்கள் நிறைவேற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். இடம், பொருள் அறிந்து பேசுவதால் மட்டுமே தொந்தரவு அணுகாமல் தவிர்க்கலாம். வீடு, வாகனத்தில் தேவையான பராமரிப்பு பணிபுரிந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். புத்திரர்கன் படிப்புக்கு கடன் வாங்க வேண்டி வரும். உடல்நிலையில் பாதிப்பு வரலாம். கவனம். எதிரிகள் ஏளனமாக பேசுவர். கண்டு கொள்ள வேண்டாம். தம்பதியர் குடும்ப நலன் காப்பதில் கூடுதல் அக்கறை கொள்வர். தொழில் வளர்ச்சி இலக்கு நிறைவேற கடும் உழைப்பைக் கொடுப்பது அவசியம். பணவரவு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். பணியில் உள்ளவர்கள் நேரம் தவறாமையை பின்பற்றுவது மட்டுமே நற்பெயர் பெற உதவும். வெளியூர் பயணம் எதிர்பார்த்த நன்மையைத் தரும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)-

Post by krishnaamma on Tue May 08, 2012 7:52 pmஅற்புதம் நிகழ்த்துவார் ஐந்தாமிட குரு 80/100

சாஸ்திர சம்பிரதாயங்களை மதித்து செயல்படும் மகர ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்த குருபகவான் பெயர்ச்சியாகி அனுகூல பலன் தருகிற ஐந்தாம் இடத்தில் உள்ளார். கடந்த காலத்தில் எதிர்கொண்ட சிரமங்கள் விலகி வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவீர்கள். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு ஒன்பதாம் இடமான பிதா, பாக்யம், பதினொன்றாம் இடமான ஆதாயம், ஒன்றாம் இடமான ராசி ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால் எண்ணத்திலும் செயலிலும் நல்ல மாற்றம் உருவாகும். சாதனை நிகழ்த்துகிற எண்ணத்துடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தம்பி, தங்கைகள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வீடு, வாகனத்தில் திருப்திகரமான நிலை உண்டு. ஏற்கனவே வீடு, வாகனம் இருப்பவர்களுக்கும் புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடந்து படிப்பிலும் நல்ல குணத்திலும் முன்னேற்றம் பெறுவர். பூர்வ சொத்தில் பெறுகிற வருமானத்தின் அளவு உயரும். ராசியை குரு பார்ப்பதால் உடல்நலமும் மனநலமும் சிறப்பாக இருக்கும். சொத்துக்களில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். கடன்களை அடைத்து நிம்மதியடைவீர்கள். கணவன், மனைவி பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்குவர். மங்கல நிகழ்ச்சி திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவேறும். தந்தை வழி உறவினர்கள் சொல்லும் ஆலோசனையைக் கேட்டு நடப்பதில் மிகுந்த பிரியம் கொள்வீர்கள். குடும்பத்திற்கான முக்கிய தேவைகள் நிறைவேறும். சகல சவுபாக்ய வசதிகளும் பெறுவீர்கள். திருமண வயதினருக்கு நல்ல வரன் கிடைத்து மங்கல நிகழ்வு இனிதாக நிறைவேறும்.

தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் மன ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். வளர்ச்சியும் மனதிற்கு நெகிழ்ச்சியும் கிடைக்கும். கல்வி, நிதி நிறுவனம், பால்பண்ணை, ரியல் எஸ்டேட், அரிசி ஆலை, டிராவல்ஸ், , லாட்ஜ், மருத்துவமனை நடத்துபவர்கள், ஆட்டோமொபைல், கிரானைட், அச்சகம், இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், மினரல் வாட்டர், மின்சார, மின்னணு பொருட்கள் தயாரிப்போர் தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் அதிகம் பெறுவர். மற்ற தொழிலதிபர்களுக்கு உற்பத்தியை உயர்த்த அனைத்து வசதிகளும் திருப்திகரமாக கிடைக்கும். உபரி வருமானம் உண்டு. உபதொழில் துவங்க வாய்ப்பு உருவாகி நிறைவேறும்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, கட்டுமானப் பொருள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், சமையலறை சாதனங்கள், பால்பொருட்கள், வாசனை திரவியம், மீன்கள், தோல் பொருட்கள், ஸ்டேஷன, பூஜை பொருள் வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளைச் செய்வர். லாபம் நன்றாக இருக்கும். மற்ற வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து புதிய வாடிக்கையாளர் மூலம் விற்பனை உயரும். லாப உயர்வு சேமிப்பை உருவாக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஆரோக்கிய உடல்நலம் அமைந்து பணி இலக்குகளை எளிதாக நிறைவேற்றுவர். சம்பள உயர்வு, பிற சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்பத்தின் முக்கியத் தேவைகளுக்கு தாராளமாக செலவு செய்வீர்கள். வருமானம், பிற சலுகைகளால் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிப்பீர்கள். கூடுதல் சொத்து முக்கிய வீட்டு சாதனப் பொருள் வாங்குகிற திட்டம் இனிதாக நிறைவேறும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் தமக்குரிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வர். பணி இலக்கு சிறப்பாக பூர்த்தியாகும். எதிர்பார்த்த சலுகைகள் சுணக்கமின்றி கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து ஒற்றுமை குணத்துடன் செயல்படுவர். குடும்பத்தின் முக்கிய தேவை தாராள செலவில் நிறைவேறும். மங்கல நிகழ்வுகளும் உண்டு. ஆடை, ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். கர்ப்பிணிகள் தகுந்த சிகிச்சை, ஓய்வு பின்பற்றுவது அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு பெறுவர்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், தொழில்நுட்பம், பியூட்டீஷியன், ஆசிரியர் பயிற்சி, வணிகம், கலைத்துறை, கேட்டரிங், ஆடிட்டிங், இதழியல் துறை மாணவர்கள் படிப்பில் கவனம், ஞாபகத்திறன் வளர்ந்து சிறந்த தரதேர்ச்சி பெறுவர். மற்றவர்கள் இவர்களை விட சிறப்பாகப் படித்து பரிசு, பாராட்டு பெறுவர். ஆரம்ப, மேல்நிலை மாணவர்கள் குருவின் அனுகிரகத்தைப் பயன்படுத்தினால் மாநில ராங்க் பெறலாம். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை உண்டு. பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடு விலகி அன்பு வளரும். படிப்புக்கான பணஉதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: சிறிய அளவில் செய்கிற பணியும் ஆதரவாளர்களிடம் நம்பிக்கையும் பிரமிப்பையும் உருவாக்கும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைத்து புதிய செயல்திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். பொது விவகாரங்களில் உங்களின் ஆலோசனை பெரிய அளவில் வரவேற்பை பெறும். எதிரியின் செயல்களால் பாதிப்பு எதுவும் வராது. புத்திரர்கள் சொல்லும் யோசனை உங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை துவங்கும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் தாராள உற்பத்தி, விற்பனை அமைந்து உபரி பணவரவு பெறுவர்.

விவசாயிகள்: விவசாய பணிகள் சிறந்து நல்ல மகசூல் தரும். பயிர்களுக்கு எதிர்பார்ப்பைவிட கூடுதல் விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் உண்டு. நில விவகாரங்களில் சாதகமான தீர்வு ஏற்படும்.

பரிகாரம்: லட்சுமி தாயாரை வழிபடுவதால் வாழ்வில் சகலவளமும் ஏற்படும்.

செல்ல வேண்டிய தலம்: சென்னை அஷ்டலட்சுமி கோயில்

பரிகாரப்பாடல்: உலகளந்த திருமாலின் வலமார்பில் உறைபவளே!
உலகமெல்லாம் காத்துநிற்கும் தேவி மகாலட்சுமியே!
உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்டலட்சுமியே!
உன் பாதம் சரணடைந்தோம் நலம் தருவாய் அம்மா!

வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவானுக்கு சம அந்தஸ்து உள்ள கிரகமான குரு, சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் வக்ரகதி பெறுகிறார். இதனால் நடை, உடை பாவனையில் வசீகர மாற்றம் ஏற்படும். வெகுநாள் திட்டமிட்ட செயல்களை உரிய வகையில் பூர்த்தி செய்வீர்கள். பணவரவு அதிகரித்து குடும்பத்தின் முக்கிய தேவை பெருமளவில் நிறைவேறும். சமூகத்தின் மீதான நம்பிக்கையை வளர்த்துக் கொள்வீர்கள். வீடு, வாகனத்தில் தேவையான வளர்ச்சி மாற்றம் செய்வீர்கள். புத்திரர்கள் படிப்பு, செயல் திறனில் முன்னேற தேவையான உதவி வழங்குவீர்கள். எதிரியின் கெடுசெயலை மன்னித்து சமரச போக்கை பின்பற்றுவீர்கள். தம்பதியர் பாசத்துடன் நடந்து குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவர். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டு. பணியில் உள்ளவர்கள் கூடுதல் அந்தஸ்து பெறுவர். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)

Post by krishnaamma on Tue May 08, 2012 7:54 pmகனவு நிறைவேறும் வருமானம் தடுமாறும் 55/100

உறவினர், நண்பரை உபசரித்து மகிழும் கும்பராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு நான்காம் இடமான ரிஷபத்தில் குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். குருவின் நான்காம் இட அமர்வு (அர்த்தாஷ்டம குரு) வாழ்வில் சில சிரம பலன்களை அனுபவிக்க வைக்கும். இருப்பினும் குருபகவானின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக சில நல்ல பலன்களையும் பெறலாம். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு எட்டாம் இடமான ஆயுள், பத்தாம் இடமான தொழில், பன்னிரெண்டாம் இடமான விரயம் ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். மனதில் சஞ்சலம் தோன்றும். குடும்பப் பொறுப்புக்களை தைரியத்துடன் எதிர்கொள்வது நன்மை தரும். எவரிடமும் அளவுடன் பேசுங்கள். தம்பி, தங்கைகளின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய தாமதம் ஆகுமென்பதால், அவர்களின் அதிருப்தியை சம்பாதிப்பீர்கள். சிலருக்கு உடன்பிறந்தவர்களாலும் உறவினர்களாலும் தொல்லை வந்துவிலகும். பணவரவு சுமாராகவே இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பயணங்களில் நிதான வேகத்துடன் செயல்படுவதால் விபத்து அணுகாமல் தவிர்க்கலாம். தாயின் தேவையை நிறைவேற்ற நினைத்தாலும் பணிச்சுமையால் அது தாமதமாகும். புத்திரர்கள் சுயதேவைகளை நிறைவேற்ற பிடிவாத குணத்துடன் நடந்துகொள்வர். உடல்நல பாதிப்பு ஏற்படும் போது அலட்சியம் செய்யாமல், உடனடி சிகிச்சை எடுத்து விடுங்கள். கணவன், மனைவி குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து ஒன்றுபட்ட மனதுடன் செயல்படுவர். வாழ்வின் நெடுநாளைய கனவு ஒன்று நிறைவேறும். கஷ்டமான சூழ்நிலையிலும் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சுபசெலவுகள் அதிகரிப்பதால் சேமிப்பு பணம் செலவாவதும் சிறு அளவில் கடன் பெறுவதுமான நிலைமை உண்டு.

தொழிலதிபர்கள்: கல்வி, நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட், மருத்துவமனை, லாட்ஜ், ஓட்டல், இரும்பு, டிராவல்ஸ் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், காகிதம், தோல், மினரல் வாட்டர், கட்டுமானப்பொருள், மின்சார மின்னணு பொருள் உற்பத்தி செய்வோர் அதிக மூலதனத்தேவைக்கு உட்படுவர். புதிய ஒப்பந்தங்கள் எதிர்பாராத வகையில் கிடைக்கும். பிற தொழில் செய்வோர் உற்பத்தியை உயர்த்த தரமான பணியாளர்களை பணியமர்த்துவதும், அதனால் அதிக செலவாவதுமான சூழ்நிலை இருக்கும். புதியதொழில்நுட்பங்களை பயன்படுத்ததேவையான இயந்திரம் வாங்குவீர்கள். லாபம் சுமாராக இருக்கும். புதிய தொழில் துவங்க விரும்புபவர்கள் அளவான மூலதனத்தில் திட்டங்களை நிறைவேற்றலாம்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, கட்டுமானப் பொருள், ஆட்டோமொபைல் உதிரிபாகம், விவசாயக் கருவிகள், இடுபொருட்கள், மருந்து, பூஜைப்பொருள், எண்ணெய், பேக்கரி பொருட்களை வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபார அபிவிருத்தியும் எதிர்பார்த்த லாபவிகிதமும் கிடைக்கும். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களை விட குறைந்த லாபம் கிடைக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியை விரைந்து முடிக்க ஆர்வம் கொள்வர். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு தடையின்றி கிடைக்கும். பணிச்சிறப்பை பாராட்டி கூடுதல் பணவரவு, சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்களுக்கு கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறை பின்பற்ற வேண்டும். எதிரிகளிடம் இருந்து விலகுவது நன்மை தரும். இயந்திரங்களை கையாளுபவர்கள் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றவும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணிகளை அறிந்து நிறைவேற்றுவர். அன்றாடப்பணி சிறந்து நன்மதிப்பை பெற்றுத்தரும். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் குடும்பநலம் பாதுகாப்பதில் கவனத்துடன் செயல்படுவர். உறவினர்கள் கருத்து வேறுபாடு கொள்வர். குடும்பச்செலவிற்கு போதுமான பணம் இராது. சிக்கனம் பின்பற்றுவீர்கள். நகை இரவல் கொடுக்க, வாங்கக்கூடாது.சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தியை உயர்த்துவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், ஆசிரியர் பயிற்சி, மேனேஜ்மென்ட், கலை, வணிகம், அறிவியல் துறை மாணவர்கள் படிப்பில் சிறக்க ஆசிரியர்கள் தகுந்த உதவிபுரிவர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். ஆரம்ப, மேல்நிலை மாணவர்கள் நன்றாகப் படிப்பர். படிப்புக்கான செலவில் சிக்கனம் நல்லது. படித்து முடித்து வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு திருப்திகரமான பணி கிடைக்கும். பெற்றோரை மதித்து செயல்படுவது அவசியம்.

அரசியல்வாதிகள்: அரசியல் பணி சிறக்க புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவீர்கள். ஆதரவாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகள் உதவிகரமாக செயல்படுவர். பதவி பொறுப்பை தக்கவைத்துக்கொள்வதில் சிறு குறுக்கீடுகள் வந்து பின்னர் சரியாகும். எதிரிகளிடம் எந்த வகையிலும் பிடிகொடுக்காத வகையில் சிரமம் தவிர்க்கலாம். புத்திரர்கள் அரசியல்பணிக்கு உதவமாட்டார்கள்.

விவசாயிகள்: விவசாயப்பணிகளை நிறைவேற்ற கூடுதல் பணியாட்களை நியமித்து அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனாலும், தாராள மகசூல் கிடைத்து உபரி வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் முன்னேற்றம் உண்டு. நில விவகாரங்களில் அனுசரித்து நடந்து கொண்டால் சிரமம் தவிர்க்கலாம்.

பரிகாரம்: நடராஜரை வழிபடுவதால் தொழில் சிறந்து எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

செல்ல வேண்டிய தலம்: சிதம்பரம் நடராஜர் கோயில்.

பரிகாரப்பாடல்: ஆடியபாதம் மன்றாடிய பாதம்
ஆடியபாதம் நின்றாடிய பாதம்
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பக்திசெய் பக்தருக்கு தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர் தேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம்.

வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவானுக்கு பகை கிரகமான சந்திரனின் சாரத்தில், குரு வக்ரகதி பெறுகிறார். உங்களைச் சார்ந்தவர்களின் தகுதி, குணம் அறிந்து பழக வேண்டிய நேரம் இது. குடும்பத் தேவைகளை நிறைவேற்ற சேமிப்பு பணத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். உடன் பிறந்தவர்களின் செயல் உங்கள் மனதை சஞ்சலப்படுத்தும். பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது அவசியம். இதனால் விபத்து, துன்பம் வராமல் தவிர்க்கலாம். புத்திரர்களின் கவனக்குறைவான செயல்களை அளவுடன் கண்டிப்பது மட்டுமே நற்பலன் பெற உதவும். உடல்நிலை சிறிது பாதிக்கும். வழக்கு விவகாரங்களில் சாதக தீர்வு பெற தாமதம் ஏற்படும். தம்பதியர் குடும்ப நலன் சிறக்க தேவையான நற்குணங்களைப் பின்பற்றுவர். தொழில், வியாபார வளர்ச்சி திட்டமிட்டபடி அதிகரிக்கும். பணியில் உள்ளவர்கள், தமக்குரிய பொறுப்பை திறம்பட நிறைவேற்றி நற்பெயர் பெறுவர்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)

Post by krishnaamma on Tue May 08, 2012 7:56 pmபொறுமையா இருங்க சாமி! 60/100

அன்பும் கருணையும் நிறைந்த மீனராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் அனுகூலக் குறைவாக, குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். போதாக்குறைக்கு அஷ்டமச் சனி காலம் வேறு. கடந்த வருடங்களில் குருவின் அமர்வினால் கிடைத்த பணவரவு கரைய ஆரம்பிக்கும். அதேநேரம், குடும்பச் செலவுகளுக்கு கைகொடுப்பதாக இருக்கும். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 பார்வைகளால் முறையே ராசிக்கு ஏழாம் இடமான களத்திரம், நட்பு, ஒன்பதாம் இடமான பிதா, பாக்யம், பதினொன்றாம் இடமான ஆதாயம் ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். உங்களிடம் நன்றாகப் பேசி பழகுபவர்களிடமிருந்து கூட விலகிப்போகிற எண்ணம் மேலிடும். பேச்சு, செயலில் இருந்த ஆர்வம் குறையும். தம்பி, தங்கைகள் சொல்லும் நல்ல ஆலோசனைகள் கூட உங்களுக்கு எதிர்மறையாக தோன்றும். இதனால், அவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். சிலர் குடியிருக்கும் வீட்டை மாற்றுவர். புத்திரர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்புரிந்து படிப்பில் தேர்ச்சியும் கலைகளில் ஆர்வமும் வளர்ப்பர். பூர்வ புண்ணிய பலன் தாமதமாக வந்து உதவுகிற கிரகநிலை உள்ளது. பூர்வ சொத்திலும், பிற வருமானங்களும் குறையும். ஆடம்பரச் செலவு செய்யும் எண்ணம் மேலோங்கும். இதனால் கடன்பட நேரிடும். எதிரிகள் உங்களை அவமானப்படுத்துகிற செயல்களைச் செய்வர். பொறுமை தேவை. உடல்நிலை பலவிதத்திலும் சிரமம் தரலாம். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். குடும்பப் பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றி உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவர். நண்பர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு சரியாகும். புதியவர்கள் அறிமுகமாகி நண்பராவர். வாழ்வில் சிரமங்களை எதிர்கொண்டாலும் குருவின் அருள்பார்வையால் குடும்பத்தின் முக்கியத் தேவை நிறைவேறும். தொழில் சார்ந்த வகையில் குளறுபடி ஏற்படும். பொறுப்புடன் செயல்படுவதால் மட்டுமே பணி வாய்ப்புக்களை தக்கவைக்க இயலும். வெகுநாட்களாக தாமதமான நிலுவைப்பணம் அதிர்ஷ்டவசமாக வந்துசேரும். விலைமதிப்புள்ள பொருள் இரவல் கொடுக்க, வாங்கக்கூடாது.

தொழிலதிபர்கள்: கல்வி, நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட், டிராவல்ஸ், லாட்ஜ், ஓட்டல், பால்பண்ணை, மாவுமில், அச்சகம் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், தோல், இரும்பு, காகிதம், மின்சார, மின்னணு சாதனங்கள், மினரல் வாட்டர் உற்பத்திசெய்யும் தொழிலதிபர்கள் தகுதியான பணியாளர் கிடைப்பதிலும் உற்பத்தி, தரத்தை உயர்த்துவதிலும் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திப்பர். நண்பர்களின் உதவியால் நிலைமையை ஓரளவு சமாளிக்கலாம். கிடைக்கிற லாபம் போதுமென்ற நிலை இருக்கும்.புதிதாக தொழில் துவங்க முயற்சிப்பவர்களுக்கு இது உகந்த காலம் அல்ல.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, ஸ்டேஷனரி, அழகுசாதனம், மீன், பால்பொருள், கட்டுமானப்பொருள், மின்சார மின்னணு சாதனம், பேக்கரி, மருந்து வியாபாரிகள் கடும் போட்டியைச் சந்திப்பர். மற்ற வியாபாரிகளுக்கு சுமாரான விற்பனை, அளவான லாபம் உண்டு. வாடிக்கையாளர்களை அனுசரித்து பேச வேண்டும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள் குளறுபடிகளால் பணிகளை விரைந்து முடிப்பதில் தாமதமடைவர். சிலர் ஒழுங்கு நடவடிக்கை, பதவி நீக்கம் போன்ற எதிர்மறை பலன்களைச் சந்திக்க நேரும். சக பணியாளர்கள் உதவுகிற மனப்பாங்குடன் நடந்துகொள்வர். வீடு, வாகனம், பணியிட வகையில் மாற்றம் இருக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணி இலக்கை நிறைவேற்றவதில் சில குளறுபடிகளைச் சந்திப்பர். நிர்வாகத்தின் கண்டிப்பு, ஒழுங்கு நடவடிக்கையால் மனதில் சஞ்சலம் ஏற்படும். கூடுதல் பயிற்சி பணித்தரத்தை உயர்த்தும். சலுகைகள் பெறுவதில் தாமதம் உண்டு. குடும்பப் பெண்கள் சுயகவுரவ சிந்தனை, செயல்பாடுகளால் உறவினர்களிடம் அதிருப்தி அடைவர். கணவரின் பாசம் ஆறுதல் தரும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனமிட்டால் போதும். கடும் உழைப்பினால் தான் தொழில் வியாபாரத்தை தக்கவைக்கலாம்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், கம்ப்யூட்டர், ஆசிரியர் பயிற்சி, இதழியல், தொழில்நுட்பம், வணிகவியல், கலைத்துறை மாணவர்கள் வெளிவட்டார பழக்கத்தால் படிப்பில் கவனம் குறைய வாய்ப்புண்டு. டிவியில் பொழுது போக்குவதை அறவே தவிர்க்கவும். ஆசிரியரின்அதிருப்திக்குஉள்ளாகும்சூழல் உள்ளது. கவனம். படிப்புக்கான பணவசதி பெறுவதில் தாமதம் இருக்கும். படிப்பை முடித்தவர்களுக்கு பிற துறை சார்ந்த பணி கிடைத்து திருப்தியின்றிஇருக்கும்.

அரசியல்வாதிகள்: கவனக்குறைவான செயல்களால் சிலரது அதிருப்தியை சந்திக்க நேரிடும். ஆதரவாளர்களின் நம்பிக்கை குறையும். பதவி, பொறுப்பில் இருந்து சிலர் விலக நேரலாம். எதிரிகளின் கெடுசெயல்களை சமாளிக்க நிறைய செலவழிக்க வேண்டியிருக்கும். அரசியல்பணிக்கு புத்திரர்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

விவசாயிகள்: விவசாயப்பணிகளை நிறைவேற்ற அதிக செலவு, தாமதம் ஆகிய நிலைமை இருக்கும். அளவான பயிர் மகசூல் அமைந்து அதற்கேற்ற பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் சுமாரான பணவரவு உண்டு. நிலம் தொடர்பான விவகாரங்களில் தீர்வுபெற இன்னும் சில காலம் தேவைப்படும்.

பரிகாரம்: வெங்கடாஜலபதியை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு சீராகும்.

செல்ல வேண்டிய தலம்: திருப்பதி ஏழுமலையான் கோயில்

பரிகாரப்பாடல்: செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே வேங்கடவா நின்கோயில் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய்க் காண்பேனே!

வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை உங்கள் ராசிநாதன் குருவுக்கு நட்பு கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குரு வக்ரகதி பெறுகிறார். இதனால் பலகாலம் பாதுகாத்த முக்கிய பொருள்களை விற்க வேண்டியும், கடைப்பிடித்த சில கொள்கைகளை விட்டுக் கொடுக்கிற நிலையும் உருவாகும். உடன் பிறந்தவர்கள் சொல்கிற நல்ல ஆலோசனை கூட எதிராகத் தோன்றும். வீடு, வாகன வகையில் சுமாரான நிலையே இருக்கும். புத்திரர்கள் ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் சாதனை நிகழ்த்துவர். எதிரிகளின் தரம் குறைந்த பேச்சுக்களை சகிப்புத்தன்மையுடன் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உடல்நலம் குறைவதால் மனதில் நம்பிக்கையும் குறையும். அதே நேரம் நண்பர்களின் ஆதரவு கிடைத்து தெம்பை உருவாக்கும். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பர். தொழில் வளம் சிறக்க கூடுதல் அக்கறையுடன் பணிபுரிய வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கணிசமான தொகை ஒரு சிலருக்கு அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

பரிகாரம் செய்ய செல்ல வேண்டிய கோயில்கள்!

Post by krishnaamma on Tue May 08, 2012 7:57 pmகுரு பெயர்ச்சியாகும் வேளையில் பிரசித்தி பெற்ற சில குரு தலங்கள் குறித்த தகவல்கள் தந்துள்ளோம். பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், இத்தலங்களுக்குச் சென்று வருவது நன்மை தரும்.

சென்னை

திருவலிதாயம் குரு : சென்னை அருகில் பாடியில் (திருவலிதாயம்) உள்ள, வலிதாயநாதர் கோயில் குருபகவான் வழிபட்ட தலமாகும். வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால் தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனைப்படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சன்னதி உள்ளது. இவர் சிவனை வணங்கும்விதமாக மேற்கு நோக்கியிருப்பது சிறப்பான அமைப்பு. குரு தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். ஜோதிட ரீதியாக, குருவின் பார்வை வரும் வேளையில்தான் திருமணம் நிச்சயமாகும். நல்ல வரன் அமைய வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுகிறார்கள். குரு பெயர்ச்சியை ஒட்டி இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். போன்: 04426 - 560 706.

சென்னை ரெட்ஹில்ஸ் பெரியபாளையம் சாலையில் அமைந்திருக்கும் திருக்கண்டலத்தில், திருகன்னீஸ்வரர் கோயிலில் பிருகு முனிவரின் பூஜையில் மகிழ்ந்து, இங்குள்ள ஈசன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அன்னை உமையைத் தன் மடியில் தாங்கி அருள்பாலிக்கிறார்.

சென்னையிலிருந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் வழியில் 56 கி.மீ., தூரத்தில் ஆந்திரா சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயில் உள்ளது. தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார்.

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரிலிருந்து 20 கி.மீ.தொலைவில் கோவில் பாளையம் காலகாலேஸ்வரர் திருக்கோயிலில் மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.

கோயம்புத்தூரிலிருந்து 30 கி.மீ.தொலைவில் உள்ள ஆணைகட்டி ஆர்ஷ வித்யா ஆசிரமத்தில் தனிக்கோயில் கொண்டுள்ளார் மேதா தட்சிணாமூர்த்தி.

மதுரை: குருவித்துறை குரு : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சன்னதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். அசுரகுருவான சுக்கிராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மிருத சஞ்சீவினி மந்திரம் கற்றிருந்தார். இதனால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்கிராச்சாரியாரிடம் அனுப்ப முடிவு செய்தனர். தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவதாகச் சொன்னான். அதன்படி சுக்கிராச்சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்கிராச்சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர். கசனைக் காணாத தேவயானி, தந்தையிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்கிராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக்காணாத குருபகவான், அவனை அசுரலோகத்தில் இருந்து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார்.
போன்: 99656 70975, 97902 95795.

காண்பதற்கரிய தெட்சிணாமூர்த்தி : வழக்கமாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்களுடன்தான் தெட்சிணாமூர்த்தி காட்சி தருவார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள திடியன் கைலாசநாதர் கோயிலில் இவர் 14 சீடர்களுடன் காட்சி தருகிறார். சிவனின் குரு வடிவமான தெட்சிணாமூர்த்தியிடம் ஆங்கீரசர், அத்திரி, காஷ்யபர், பிருகு, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், புலஸ்தியர், மரீசி, ஜமதக்னி, வசிஷ்டர், பார்கவர், மார்க்கண்டேயர், நாரதர் ஆகியோர் உபதேசம் பெற்றனர். இவர்கள் பதினான்கு பேரும் அவரிடம் உபதேசம் பெற்ற கோலத்தில் உள்ளனர். இத்தகைய அமைப்பில் தெட்சிணாமூர்த்தியின் அமைப்பை காண்பது மிகவும் அரிது. மலையடிவாரத்தில் அமைந்த இக்கோயிலில், தெட்சிணாமூர்த்தி நந்தி மீது அமர்ந்திருப்பது மற்றொரு சிறப்பு. இவரிடம் வேண்டிக்கொள்ள கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. இக்கோயிலுக்கு அருகிலேயே ருக்மணி, சத்யபாமாவுடன் கிருஷ்ணர் கோயிலும், மலைக்கு மேலே தங்கமலை ராமர் கோயிலும் உள்ளது. போன்: 97919 94805

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிவன் சன்னதிக்கு பின்புற பிரகாரத்தில் காசிவிஸ்வநாதருக்கு அருகில் மேதா தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இதுதவிர எங்கெல்லாம் காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளதோ அங்கிருக்கும் தட்சிணாமூர்த்தி மேதா தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பது வழக்கம்.

மதுரை பழங்காநத்தம் பஸ்ஸ்டாண்ட் அருகே காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவதட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்து அருள் பாலிக்கிறார். புலித்தோலை ஆடையாக அணிந்து, சப்தரிஷிகள் கீழே நிற்க முடிந்த தலையில் கங்கையுடன், வலது கை அபயமுத்திரையுடன் ஜபமாலை, இடது கையில் ஏடு, வலது மேல்கையில் நாகம், இடது மேல்கையில் அக்னி என சிவனே தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

மதுரை ஆரப்பாளையம் புட்டுசொக்கநாதர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி யோகாசன தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திருச்சி: சப்த குரு தரிசனம் : குருவைப் பற்றிய ஸ்ரீகாண்டேயா என்ற ஸ்லோகம், தேவகுரு பிரகஸ்பதி, அசுரகுரு சுக்கிராச்சாரியார், ஞானகுரு சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு பிரம்மா, விஷ்ணு குரு வரதராஜர், சக்தி குரு சவுந்தர்யநாயகி, சிவகுரு தெட்சிணாமூர்த்தி என ஏழு குருக்கள் (சப்தகுரு) உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இந்த ஏழு குருக்களையும், திருச்சி மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள உத்தமர்கோயிலில் தரிசிக்கலாம். ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசமான இக்கோயிலில், பிரம்மாவிற்கு சன்னதி உள்ளது. நவக்கிரக குருபகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குரு பகவானால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்கும். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் காட்சி தரும் அற்புதத்தலம் இது. போன்: 0431- 259 1466.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி, தர்ப்பாசனத்தில் அமர்ந்து, சனகர், சனந்தகர், சனாதனர், சனத்குமாரர், சிவயோகமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், திருமூலர் என எட்டு முனிவர்களுக்கும் அருள்புரியும் கோலம் மிகச் சிறப்பான ஒன்றாகும்.

திருச்சிக்கு அருகேயுள்ள லால்குடியில் அமைந்துள்ள சிவன் கோயிலிலும், காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலிலும் தட்சிணாமூர்த்தி வீணை ஏந்திய நிலையில் வீணா தட்சிணாமூர்த்தியாக இருக்கின்றார்.

திருவாரூர்: ஆலங்குடி ஞானகுரு : நவக்கிரக தலங்களில் குருவுக்குரியதாக போற்றப்படுவது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில். இது திருவாரூரிலிருந்து 30கி.மீ., தூரத்தில் உள்ளது. இங்கு குரு பகவான் சிவபெருமானை வழிபட்டுள்ளார். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி, ஞானம் தரும் குருவாக அருள்பாலிக்கிறார். திருத்தல யாத்திரை மேற்கொண்ட சுந்தரர், இத்தலத்திற்கு வந்தார். அப்போது, அருகிலுள்ள வெட்டாற்றில் சிவன், வெள்ளப்பெருக்கு ஏற்படும்படி செய்தார். சுந்தரர் ஆற்றின் மறுகரையில் நின்றார். அங்கு வந்த ஓடக்காரர் ஒருவர், தான் அவரை கோயிலுக்கு அழைத்து வருவதாகச் சென்றார். பாதி வழியில் ஓடம் கவிழும் நிலையை உருவாக்கினார். கலங்கிய சுந்தரர் சிவனை வேண்டினார். அப்போது, அவருக்கு காட்சி தந்த சிவன், தானே ஓடக்காரனாக வந்ததை உணர்த்தினார். பின், கோயிலுக்கு வந்த சுந்தரருக்கு சிவன், குருவாக இருந்து ஞானஉபதேசம் செய்தார். இதனால், இவருக்கு ஞான தெட்சிணாமூர்த்தி என்று பெயர் வந்தது. குரு பெயர்ச்சி விழா இங்கு விசேஷமாக நடக்கும். போன்: 0437 - 4269 407

மன்னார்குடி பெருகவாழ்ந்தான் வழியில் 15 கி.மீ. தொலைவிலுள்ள கழுகத்தூர் சௌந்தரநாயகி சமேத ஜடாயுபுரீஸ்வரர் கோயிலின் பிராகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால் 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.

தஞ்சாவூர்: மேற்கு நோக்கிய தெட்சிணாமூர்த்தி : தெட்சிணாமூர்த்தி, சிவன் சன்னதி கோஷ்டத்தில் தெற்கு திசை நோக்கி இருப்பார். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள திருநறையூர் (நாச்சியார்கோயில்) சித்தநாதேஸ்வரர் கோயிலில் இவரை மேற்கு நோக்கிய கோலத்தில் தரிசிக்கலாம். இத்தலத்தில் மூலவர் சித்தநாதேஸ்வரரும், மேற்கு நோக்கியிருப்பது சிறப்பு. இந்த தெட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது. ஜாதக ரீதியாக தோஷம் உள்ளவர்கள் தெட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரக சன்னதியிலுள்ள குரு பகவானுக்கும் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி ராஜ அலங்காரத்தில் சிம்மாசனத்தில் மனைவியுடன் அருள்பாலிக்கிறார்.

தஞ்சை பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி அம்பிகை சமேதராக அருள்பாலிக்கிறார்.

திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் கபாலமும் சூலமும் ஏந்தியவராகக் காட்சியளிக்கிறார். இவர் காலடியின்கீழ் ஆமை போன்ற உருவம் காணப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை வேறெந்த கோயிலிலும் காணமுடியாது.

தஞ்சை பாபநாசம் அருகிலுள்ள நல்லூர் கல்யாணசுந்த ரேஸ்வரர் திருக்கோயிலில் இரட்டை தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்.

தஞ்சாவூர் திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயிலில் இத்தலத்தில்தான் வேறுஎங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

தஞ்சாவூர் மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கையில் வீணையுடன் வீணா தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

எல்லாக் கோயில்களிலும் அபயமுத்திரையுடன் காட்சியளிக்கும் குரு பகவான், தஞ்சாவூர் திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள திருலோக்கியில் அஞ்சலி முத்திரையில், கும்பிட்ட பெருமானாகக் காட்சி தருகிறார்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

பரிகாரம் செய்ய செல்ல வேண்டிய கோயில்கள்!...தொடர்ச்சி

Post by krishnaamma on Tue May 08, 2012 8:00 pm

கடலூர்: சாப்பிட்ட கோலத்தில் தெட்சிணாமூர்த்தி : அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, கடலூர் அருகிலுள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் இரண்டு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு கீழே முயலகன் இல்லை. நான்கு சீடர்கள் மட்டும் இருக்கின்றனர். விவசாய தம்பதியருக்கு அருள் செய்வதற்காக, முதியவர் வேடத்தில் வந்த சிவன் அவர்கள் படைத்த உணவை வயலில் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்து சாப்பிட்டுச் சென்றார். இதன் அடிப்படையில் இக்கோயிலில் தெட்சிணாமூர்த்தி இக்கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். இவரை தவ தெட்சிணாமூர்த்தி என்று அழைக்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொண்டால் உணவிற்கு பஞ்சம் இல்லாத நிலை ஏற்படும், விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

கடலூர் ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் தெட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார். உமாதேவியாருக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை சிவன் தெட்சிணாமூர்த்தியாக இருந்து உபதேசித்ததால் இது குருமூர்த்தி ஸ்தலமாக கருதப்படுகிறது. குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது. இப்படிப்பட்ட அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை. குரு ஸ்தலங்களில் தலைசிறந்ததாக கருதப்படுவதற்கு இதுவே காரணம்.

சில தலங்களில் கையில் வீணை ஏந்தியபடி இசைக்கு அதிபதியாக காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, கடலூர் திருச்சோபுரம் சோபுரநாதர் கோயிலில் இசையின் வடிவமாகவே அருளுகிறார். இவரது சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தெட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இடது கையில் நாகம், வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார்.

சிதம்பரத்துக்குத் தென்கிழக்கில் 3 கி.மீ. தொலைவிலுள்ள சிவபுரி எனும் திருநெல்வாயை அடுத்துள்ள மேலை திருக்கழிப்பாலை திருத்தலத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி, காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட பளிங்குக்கல்லால் உருவானவர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வடதிசையில் உள்ள ஆத்மநாதசுவாமி கோயிலில் தட்சிணாமூர்த்தி யோகநிலையில் அருள்பாலிக்கிறார்.

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி பூம்புகார் வழியில் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலமாகும். இங்கு உள்ள தட்சிணாமூர்த்திக்கு கீழ் சனகாதி முனிவர்களுக்கு பதில் பிரம்மா அமர்ந்த கோலத்தில் உள்ளார். பிரம்மனுக்கு உபதேசம் செய்த இந்த தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.

மயிலாடுதுறை காவிரிக்கரை வள்ளலார் கோயிலில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி. நந்திமீது அமர்ந்தவாறு அருள்பாலிக்கிறார்.

மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது குறுக்கை. இங்கு யோக தட்சிணாமூர்த்தி ஆலயம் உள்ளது. இவர் கிரகங்களுக்கே அதிபதியாவார். இவர் யோக நிலையில் காணப்படுவதால் பெரும்பலம் பொருந்தியவர்.

நாகை திருக்குரக்கா குந்தளேஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சற்று வலதுபுறமாக திரும்பிய நிலையில் அருள்பாலிக்கிறார்.

சிவகங்கை : கிழக்கு நோக்கிய குரு : கிழக்கு நோக்கிய அனுக்கிரஹ தட்சிணாமூர்த்தி சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் அருளுகிறார். இவரது சன்னதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆலமரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னதி அமைந்துள்ளது. இவரது சன்னதி முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தெட்சிணாமூர்த்தி பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக்கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 - 2 மணி) இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். மதுரையில் இருந்து 65 கி.மீ., திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக 90 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர். இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில் பட்டமங்கலம். போன்: 98424 80769

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஆதிரத்தினேஸ்வரர் கோயிலிலும், சென்னை திரிசூலம் கோயிலிலும், தட்சிணாமூர்த்தி வீராசன நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.

தேனி: தேனி வேதபுரி தெட்சிணாமூர்த்தி கோயிலில் ஞானக் கடவுள் தெட்சிணாமூர்த்திக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது. இத்தலம் பல சிறப்புகளைக் கொண் டுள்ளது. மூலவர் பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங் கள் அஸ்திவாரத்தின் கீழ் முறைப்படி வைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தில் நமசிவாய பஞ்சாட்சர மந்திரத்தை குறிக்கும் வகையில் 5 கலசங்கள் வைக்கப் பட்டுள்ளன.

தேனி உத்தமபாளையம் முத்துக்கருப்பண்ணசுவாமி கோயிலில், தெட்சிணாமூர்த்தி, கல்லால மரம், முயலகன், சீடர்கள், கைகளில் உடுக்கை, அக்னி என எதுவும் இல்லாமல் காட்சி தருகிறார். இடது காலை மடக்கி யோகப்பட்டை அணிந்து, சின்முத்திரை காட்டும் இவர், மேல் இரு கரங்களில் மலர் வைத்திருக்கிறார். குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், இவரை வழிபட குருவின் நல்லாசி கிடைக்கும்.

தேனி மாவட்டம் கம்பம் காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி வலதுகாலை தொங்கவிட்டு, இடதுகால் குத்துக்காலிட்ட நிலையில் கையில் கமண்டலத்துடன் காட்சியளிக்கிறார்.

திருவள்ளூர்: திருவொற்றியூர் தெட்சிணாமூர்த்தி : கோயில்களில் தெற்கு நோக்கி காட்சி தரும் தெட்சிணாமூர்த்தியை, திருவொற்றியூரில் வடக்கு பார்த்த கோலத்தில் தரிசிக்கலாம். பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயிலுக்கு மிக அருகில் அமைந்த தலம் இது. இங்கு மூலவராக தெட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். வழக்கமாக சுவாமி பீடத்தில் நான்கு சனகாதி முனிவர்கள் மட்டுமே இருப்பர். ஆனால், இவரது பீடத்தின் கீழ் 18 மகரிஷிகள் உள்ளனர். இவருக்கு இங்கு உற்சவர் வடிவமும் உள்ளது. இச்சிலையின் கீழ் ஒரு யானை வடிவமும் உள்ளது. குரு பெயர்ச்சிக்கு இங்கு விசேஷ பூஜைகளும், ஹோமங்களும் நடக்கும். பரிகார ராசியினர் இவரது சன்னதியில் அதிகளவில் நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் கேசரி, பூந்தி போன்ற இனிப்பு பதார்த்தங்கள் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

காஞ்சிபுரம்: மூலஸ்தானத்தில் குரு : மகாவிஷ்ணு, ஒரு சந்தர்ப்பத்தில் தனது சக்கராயுதத்தை ததீசி என்ற முனிவர் மீது எய்து விட்டார். இதனால், அவரது சக்கரம் பலமிழந்தது. சக்கரம் வலிமை பெற சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், குருவாக இருந்து அருள் செய்தார். காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி செல்லும் வழியில், 18 கி.மீ., தூரத்தில் இத்தலம் கோவிந்தவாடி என்று பெயர் பெற்றது. மூலஸ்தானத்தில் தெட்சிணாமூர்த்தி, தெற்கு நோக்கி இருக்கிறார். இவருக்குப் பின்புறம் கைலாசநாதர் லிங்கம் இருக்கிறது. ஒரே விமானத்தின் கீழ் சிவனும், தெட்சிணாமூர்த்தியுமாக அமைந்த கோயில் இது. இங்கு பஞ்சாசனத்தின் கீழ் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி நெற்றியில் கங்கை, பிறைச்சந்திரன் சூடி, நெற்றியில் மூன்றாம் கண்ணுடன் இருப்பது சிறப்பு. போன்: 044 - 2729 4200

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கையில் வீணையுடன் வீணா தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

விழுப்புரம்: விழுப்புரம் அருகிலுள்ள கோலியனூர் வாலீஸ்வரர் கோயிலில், சப்தகன்னியருடன் காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி.

வேலூர்: வேலூர் மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில் கோயிலின் கொடிமரத்தில் தென்திசையைப் பார்த்தவாறு அமர்ந்து அருட்காட்சி தருகிறார்.

அரக்கோணத்துக்கு 16 கி.மீ. தொலைவிலிருக்கும் தக்கோலம் திருத்தலத்தில் இருக்கும் சாந்த தட்சிணாமூர்த்தி வலக்காலை தொங்கவிட்டுக்கொண்டும், இடக்காலை மேலே வைத்துக்கொண்டு உத்கடி ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

ஈரோடு: ஈரோடு சத்தியமங்கலம் கெம்பநாயக்கன்பாளையம் பாலதண்டாயுதபாணி கோயிலில் ஆலமரத்தின் கீழ் தன் துணைவியை மடியில் அமர்த்தியபடி தெற்கு பார்த்து காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி வலது கால் மடித்து, இடதுகால் தொங்கவிட்ட நிலையில் கால்மாறிய தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திருநெல்வேலி: திருநெல்வேலிக்கு அருகிலுள்ள தென்திருபுவனம் புஷ்பவனநாதர் திருக்கோயிலில், வழக்கத்துக்கு மாறாக வலக்காலை மடித்து இடது தொடைமேல் வைத்த நிலையில் அருள்பாலிக்கிறார்.

பெரும்பாலும் சிவாலயங்களில் மட்டுமே இருக்கும் தட்சிணாமூர்த்தி, திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி மன்னார்கோயிலில் உள்ள வேதநாராயணர் கோயில் விமானத்தில் அருள்பாலிக்கிறார்.

தூத்துக்குடி: நவகைலாய குரு கோயில் : தாமிரபரணி நதிக்கரையில் உரோமசர் வழிபட்ட ஒன்பது சிவாலயங்கள், நவகைலாய தலங்கள் எனப்படுகின்றன. இதில், திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில், 17 கி.மீ., தூரத்திலுள்ள முறப்பநாட்டில் உள்ள கைலாசநாதர், வியாழ பகவானுக்குரிய அதிபதியாக அருளுகிறார். தன்னைத் தரிசித்த உரோமசருக்கு, சிவன் குரு அம்சமாக இருந்து காட்சி கொடுத்ததால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது. சிவனுக்கு, மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலைஅணிவித்து வழிபடும் வழக்கமும் இருக்கிறது. கோயில் அருகில் ஓடும் தாமிரபரணி நதி, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகிறது. இதற்கு தட்சிண கங்கை என்று பெயர். நவகைலாய தலங்களில், நடுநாயகமாக இருப்பதால் இதற்கு, நடு கைலாயம் என்றும் பெயருண்டு. போன்: 98425 16789

பிரதான குரு தலம் : குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் ஆகும். தேவர்களைக் காக்க முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள மேதா தெட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தெட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

குரு சிஷ்யன் : 108 திருப்பதிகளுள் ஒன்றான ஆழ்வார்திருநகரி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும். பொதுவாக ஆழ்வார்கள் பெருமாளையே மங்களாசாசனம் செய்துள்ளனர். ஆனால், இத்தலத்தில் சிஷ்யனான மதுரகவியாழ்வார் தன் குருவான நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்துள்ளார். நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார்.

தூத்துக்குடி கழுகாசலமூர்த்தி கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கையில் வீணையுடன் வீணா தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அரியலூர்: கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் ஒரே இடத்தில் அமர்ந்துள்ள மூன்று தட்சிணாமூர்த்திகளையும் வழிபடுவது சிறப்பு.

திண்டுக்கல்: மானூர் பெரியாவுடையார் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மேதா தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

கரூர்: குளித்தலை புஷ்பவனேஸ்வரர் கோயிலில் கோஷ்டத்தில் சிம்மம் தாங்கும் குரு மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.

கிருஷ்ணகிரி: ஓசூர் ஐராவதேஸ்வரர் திருக்கோயில் உள்ள தெட்சிணாமூர்த்தி அகங்காரத்தை சம்ஹாரம் செய்து ஞானத்தை வழங்குகிறார். எனவே இவர் சம்ஹார தெட்சிணாமூர்த்தி எனப்படுகிறார்.

நீலகிரி: ஊட்டி காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மற்ற சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி போல் அல்லாமல் சின் முத்திரையோடு காட்சி தருகிறார். சின் முத்திரை அமைப்பின்படி மற்ற மூன்று விரல்களுடன் சேராமல் ஆள் காட்டி விரல், பெருவிரலுடன் இணைந்து இருக்கும். ஆணவம் கண்மம், மாயை ஆகிய தருவதைக் குறிக்கும். சந்நியாசம் வாங்க, உபதேசம், ஞானம் ஆகியவற்றை பெற இந்த யோக தட்சிணாமூர்த்தியை வணங்குவது நலம்.

புதுக்கோட்டை: திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோயில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகப்பெரிய தட்சிணாமூர்த்தியாக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

திருவேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி ஒரு பாதி ஆண் தன்மையும், மறுபாதி பெண் தன்மையும் கொண்டு, அர்த்தநாரீஸ்வர தெட்சிணாமூர்த்தியாக விளங்குகிறார்.

திருவரங்குளம் அரங்குளநாதர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கையில் வீணையுடன் வீணாதர தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

விருதுநகர்: சிவகாசி காசிவிஸ்வநாதர் கோயிலில் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் போன்ற சனகாதி முனிவர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்கிய நிலையில் அருள்பாலிக்கின்றனர்.

திருவண்ணாமலை: பனங்காட்டூர் தாளபுரீஸ்வரர் கோயிலில் கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி தன் இடக்காலை மடக்கி வைத்தபடி வித்தியாசமாக காட்சி தருகிறார்.

சேலம்: சேலம் காயநிர்மாலேஸ்வரர் கோயிலில் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுடன் அருளும் தெட்சிணாமூர்த்தி, இக்கோயிலில் ஆறு சீடர்களுடன் காட்சி தருகிறார். இவர் கோஷ்டத்தில் தனிச் சன்னதியில் இருக்கிறார். தனி விமானமும் உள்ளது. நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவருக்கு அருகே இந்த 6 சீடர்களும் உபதேசம் பெறும் கோலத்தில் அமர்ந்திருக்கின்றனர். இவர்களில் 3 பேர் அமைதியாகவும், மற்ற 3 பேர் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்கு விளக்கம் பெறும் விதமாகவும் இருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தியின் இக்கோலம் மிகவும் விசேஷமானதாகும்.

நவகிரக சன்னதிகள் பெரும்பாலும் சிவன் கோயில்களில் தான் இருக்கும். மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் போன்ற மிக முக்கிய பெருமாள் தலங்களில் மட்டுமே நவகிரக சன்னதி இருக்கும். ஆனாலும் மதுரை மாவட்டம் சோழவந்தான் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி ஆதிநாத பெருமாள் போன்ற பெருமாள் தலங்கள் சிறந்த குரு ஸ்தலமாக விளங்குவது சிறப்பு.

புதுச்சேரி: காரைக்கால் யாழ்மூரிநாதர் கோயிலில் சிவன் யாழ் இசைத்தபோது, அவரது அம்சமான தெட்சிணாமூர்த்தி இசையை விரும்பி கேட்டார். இசையில் மகிழ்ந்த அவர் தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம். இதனை உணர்த்தும்விதமாக இங்குள்ள தெட்சிணாமூர்த்தி பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார். பொதுவாக மஞ்சள் நிற வஸ்திரம்தான் தெட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள். ஆனால், இங்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். தெட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை காண்பது அபூர்வம். மணம் முடிக்காமல், குரு அம்சமாக இருப்பதால் காவி ஆடை அணிவிப்பதாக சொல்கிறார்கள். இங்கு சிவன் தன் கையில் யாழ் இசைத்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு வலப்புறம் சம்பந்தரும், இடப்புறத்தில் யாழ்ப்பாண நாயனாரும் இருக்கின்றனர்.

கேரளா: மூலவர் தட்சிணாமூர்த்தி : தட்சிணாமூர்த்தியை மூலவராக கொண்ட கோயில், கேரள மாநிலம் ஆலப்புழை அருகேயுள்ள சுகபுரத்தில் இருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயிலில் உள்ள மூலவரின் மீது தான், ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி அஷ்டகம் இயற்றினார். சுகப்பிரம்ம மகரிஷிக்கு தட்சிணாமூர்த்தி ஞானஉபதேசம் செய்தது இந்த இடத்தில் தான் என தல புராணம் கூறுகிறது. தமிழகத்தில் சென்னை திருவான்மியூரில் தெட்சிணாமூர்த்தியை மூலவராகக் கொண்ட தனிக்கோயில் இருக்கிறது. இந்த தெட்சிணாமூர்த்தியே தமிழகத்தில் மிக உயரமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா: அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள ஹேமாவதியில் ஐயப்பன் போல் ஆசனமிட்டு, யோக மூர்த்தியாகத் திருக்காட்சி தருகிறார். கேரளா மாநிலம் சுகபுரத்தில், தட்சிணாமூர்த்திக்கென்றே ஒரு தனி ஆலயம் அமைந்துள்ளது. ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தை இயற்றியது இங்குதானாம்.

கர்நாடகா: நஞ்ன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் உள்ள யோக தெட்சிணாமூர்த்தி, 14 சீடர்களுடன் காட்சி தருவது விசேஷம்.

நன்றி : தினமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by பாலாஜி on Tue May 08, 2012 10:09 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா ..

சுமாரான பலன் பெறும் ராசி என்று சொல்லிவிட்டீர்கள் , பலன்களும் அதுபோலதான் உள்ளது ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by krishnaamma on Tue May 08, 2012 10:11 pm

வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா ..

சுமாரான பலன் பெறும் ராசி என்று சொல்லிவிட்டீர்கள் , பலன்களும் அதுபோலதான் உள்ளது ..

எனக்கும் சுமார்தான் பாலாஜி சோகம் என்றாலும் குருவை பொறுத்தவரை அவர் யாரையும் கெடுக்க மாட்டார். புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by பாலாஜி on Tue May 08, 2012 10:13 pm

@krishnaamma wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா ..

சுமாரான பலன் பெறும் ராசி என்று சொல்லிவிட்டீர்கள் , பலன்களும் அதுபோலதான் உள்ளது ..

எனக்கும் சுமார்தான் பாலாஜி சோகம் என்றாலும் குருவை பொறுத்தவரை அவர் யாரையும் கெடுக்க மாட்டார். புன்னகை

ஆனா எனக்கு 60 /100 மதிப்பெண்கள்தான் கிடைத்துள்ளது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by krishnaamma on Tue May 08, 2012 10:15 pm

வை.பாலாஜி wrote:
@krishnaamma wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா ..

சுமாரான பலன் பெறும் ராசி என்று சொல்லிவிட்டீர்கள் , பலன்களும் அதுபோலதான் உள்ளது ..

எனக்கும் சுமார்தான் பாலாஜி சோகம் என்றாலும் குருவை பொறுத்தவரை அவர் யாரையும் கெடுக்க மாட்டார். புன்னகை

ஆனா எனக்கு 60 /100 மதிப்பெண்கள்தான் கிடைத்துள்ளது

நான் மீனம் எனக்கும் அதே மதிப்பெண்கள் தான் புன்னகை நிங்களும் மீனமா பாலாஜி ?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by மகா பிரபு on Tue May 08, 2012 10:17 pm

திருமண வயதினருக்கு வியாழ நோக்கம் அமைவதால் திருமணம் விரைவில் கைகூடும்.
சூப்பருங்க
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by பாலாஜி on Tue May 08, 2012 10:18 pm

@krishnaamma wrote:
நான் மீனம் எனக்கும் அதே மதிப்பெண்கள் தான் புன்னகை நிங்களும் மீனமா பாலாஜி ?

நானும் மீனம்தான் ஜாலி ஜாலி ஜாலி , அப்படியே மந்திரகளையும் சொல்லி நீங்க வேண்டும் போது எனக்காக கொஞ்சம் வேண்டிங்கா ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by யினியவன் on Tue May 08, 2012 10:18 pm

குரு உச்சத்தில இருக்காருன்னா நானு டெரஸ்ல இருக்க
குடித்தனக் காரருன்னு நெனச்சுப்பேன் - நமக்கு அவ்ளோதான் தெரியும்ப்பா.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by முரளிராஜா on Tue May 08, 2012 10:19 pm

வை.பாலாஜி wrote:
ஆனா எனக்கு 60 /100 மதிப்பெண்கள்தான் கிடைத்துள்ளது
நீங்க தேர்வில்கூட இவ்வளவு மதிப்பெண் எடுத்ததில்லையே தல சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by பாலாஜி on Tue May 08, 2012 10:21 pm

@முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:
ஆனா எனக்கு 60 /100 மதிப்பெண்கள்தான் கிடைத்துள்ளது
நீங்க தேர்வில்கூட இவ்வளவு மதிப்பெண் எடுத்ததில்லையே தல சிரி

இதிலையும் 60க்கு மேல் வரலையே என்பதுதான் எனது வருத்தமும் ... சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by krishnaamma on Tue May 08, 2012 10:26 pm

@மகா பிரபு wrote:
திருமண வயதினருக்கு வியாழ நோக்கம் அமைவதால் திருமணம் விரைவில் கைகூடும்.
சூப்பருங்க

ஒ... அப்படியா சங்கதி? புன்னகை "Q" வில் இருக்கேளா? வாழ்த்துகள் புன்னகை அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum