ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எனது ராமநாதபுரம் மாவட்ட பயணம் !!---பாகம் II

View previous topic View next topic Go down

எனது ராமநாதபுரம் மாவட்ட பயணம் !!---பாகம் II

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sun Apr 15, 2012 7:10 pm

சேதுக்கரை என்பது திருப்புல்லாணியிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரை ஆகும் ! சேது என்றால் சமஸ்கிரதத்தில் பாலம் என்பது பொருள் !இரண்டு பகுதிகளை சேர்ப்பதால் ``சேது `` எனப்படுகிறது!


சேது அல்லது ஆடம் ப்ரிட்ஜு

மனிதனுடன் கடவுள் பேசிய முதல் மொழி ``தேவநாகரி `` !அதிலிருந்து மொழி மறுவியதால் பிரகிருதம் எனப்பட்டது !அந்த பிரகிருதங்களில் மூலமானது தமிழாகவும் வடபகுதியிலே பலகிருதங்களை சமப்படுத்திய சமஸ்கிரதமாகவும் மூல மொழிகளாகின !தமிழிலிருந்து மருவிய ஐந்து மொழிகளான தென்னிந்திய மொழிகளை மட்டும் திராவிடம் எனவும் சமஸ்கிரத அடிப்படையிலான வாட இந்திய மொழிகளை ஆரியம் எனவும் தவறான விளக்கம் கொடுத்து அரசியலும் நடத்தி பிழைத்தும் விட்டனர் !ஆனால் தமிழ் ,சமஸ்கிரதம் இரண்டும் திராவிட மொழிகள் என்பது உண்மை !!

ஆதி மனிதர்களான தமிழர்கள் லெமூரியா கண்டத்தில் வளர்ந்து இந்தியா முழுவதும் பரவி சென்றார்கள் ! அப்போது உலகின் வேறு பகுதிகளில் மனிதர்களே இல்லை!!! உலகின் வேதங்கள் என பரவலான மக்களிடம் புழக்கத்தில் உள்ளவை :

1) இந்தியாவின் கீதை ! --இறைதூதர் கிரிஷ்ணரால் கொணரப்பட்டது

2)யூதர்களின் தவ்ராத்(பழைய ஏற்பாடு )--இறைதூதர் மோசே கொணர்ந்தது !! ;அதனுடன் ஒட்டி வைத்த புதிய ஏற்பாடு சேர்த்து பைபிள்!!

3)அரபியர்களின் குரான் !!! --இறைதூதர் முகமது கொணர்ந்தது !!!

இம்மூண்று வேதங்களும் கடவுளிடம் கேட்டு எழுதப்பட்டவை !உலக மக்களின் வாழ்க்கை நெறியை வடிவமைத்தவை !உணர்ந்தோ உணராமலேயே மனிதர்களால் தங்கள் வேதம் என சொல்லி கொள்ளபடுபவை !

கீதை முதல் மனிதன் மணு அதாவது மண்ணு என சொல்லுகிறது ! மனுவுக்கு ஆதியிலேயே இந்த பூமியின் யுக புருஷன் மூலமாக கீதை உபதேசிக்க பட்டதாக கிருஷ்ணர் குறிப்பிடுகிறார் !! பைபிளும் குரானும் முதல் மனிதன் ஆதாம் என சொன்னாலும் அவன் மண்ணிலிருந்து உண்டாக்க பட்ட படியால் ஆதாம் எனப்பட்டான் என சொல்லுகிறது !ஆக எபிரேய பாஷையில் மண்ணு என பொருள்வரும் சொல்லே ஆதாம் என முதல்மனிதனை குறிக்க பயன்படுத்த பட்டுள்ளது !!

ஆக மண்ணு/ஆதாம்/மணு சொர்க்கத்தில் படைக்கபட்டார் !தேவதூதர்கள் அனைவரும் அவருக்கு பணிவிடை செய்யும் படியாக கடவுள் மனிதனை மகிமையுள்ளவனாக்கினார் !!களிமண்ணிலிருந்து உண்டாக்கப்பட்ட மனுவை விட நெருப்பிலிருந்து உண்டாக்க பட்ட நான் பெரியவன் ;எனவே மனுவை பணிந்து கொள்ளமுடியாது என ``இப்ளீஸ் `` என்னும் தேவதூதணும் அவனோடு ஒரூ கூட்டமும் கடவுளை பகைத்து பிரிந்தனர் !இந்த கூட்டமே ``அசுரர்கள் `` எனப்படுபவர் !! தேவதூதர்களாய் கடவுளோடு ஒப்புரவாய் இருந்தவர்கள் மனிதனை தனக்கு எஜமானனாய் ஏற்றுகொள்ள மறுத்ததாலேயே அசுரர்களாய் மாறினார்கள் !கடவுளை பகைத்தனர் !கடவுளால் படைக்க பட்ட மனிதன் தீயவன் தகுதியில்லாதவன் என நிருபிப்பதாகவும் வீம்பு பேசினார்கள் !அப்போது நியாயத்தீர்ப்பு நாள் வரை மனிதனுக்கும் அசுரர்களுக்கும் அவகாசம் பெற்றுக்கொண்டார்கள் !

கலகம் செய்து பிரிந்த அசுரர்களால் பரலோகத்தில் ஒரு வெற்றிடம் உண்டாகியுள்ளது !அதற்கு தகுதியுள்ள மனிதர்கள் தேறினால் நியாயத்தீர்ப்பும் தங்களுக்கு அழிவும் நிச்சயம் என்பது அசுரர்களுக்கு நன்றாக தெறியும்!அதனாலேயே எப்படியெல்லாம் வகைவகையாக மாயைகளை கொண்டுவந்து மனிதனை தேறாதவனாக வைப்பதற்கு அசுரர்கள் கடும் முயற்சி செய்கிறார்கள் !எல்லா தீய சிந்தனைகளையும் மனிதனுக்கு அழகாக்கி காட்டுவதும் தூண்டிவிடுவதும் ஆவிமண்டல அசுரர்களே !!இந்த அசுரர்களுக்கு தலைவன் இப்லீஸ் /சாத்தான் /பிசாசு /அலகை என அழைக்க படுகிறான் !

சொர்க்கத்தில் கடவுளுக்கு அடுத்த மகிமையுடன் படைக்க பட்ட மனு --அவரிலிருந்து வேறு பிரிக்க பட்ட பெண்ணாகிய அவர் மனைவி --பாதியாள்--பின்னாளில் மருவி பாரியாள் என அழைக்கபடுகிறது ! இருவரும் ``நன்மைதீமை அறிகிற அறிவை தரும் மரத்தின் கனியை ``தவிர எல்லாவற்றையும் அனுபவிக்கலாம் ; அனுதினமும் கடவுளோடு உறவாடி அவரிடம் வேண்டியதை பெற்றுக்கொள்ளலாம் ;தேவதூதர்கள் சேவையுமுண்டு என சகல வசதிகளுடன் வாழ அனுமதிக்க பட்டனர் !இவ்வளவு வசதிகள் செய்த கடவுள் கேவலம் ஒரு பழம் விசயமாகவா மனிதனை சபித்தார் ;சொர்க்கத்திலிருந்து துரத்தினார் என மேலோட்டமாக கேட்க தோன்றும் !மனிதன் சகல வல்லமையோடும் திறமையோடும் இருந்தாலும் கடவுளை முன்னிலை படுத்தி அவரின் சித்தம் மட்டும் செய்கிறவனாய் இருப்பதா அல்லது தானே தனது சுய சித்தம் செய்கிறவனாக இருப்பதா என்கிற பிரதானமான கேள்வி அது !ஆன்மீக ரீதியாக தவம் தியானம் தற்சோதனை தன்னயுனர்தல் பக்தி இவையெல்லாம் மனிதன் தன்னை வெறுமையாக்கி கடவுளிடம் முழு சரணாகதி அடைவதை பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றன !கீதையும் கர்மயோகம் ,ஞான கர்ம சன்யாச யோகம் ,பக்தி யோகம் இன்னும் பல யோகங்களில் திரும்ப திரும்ப ``விருப்பு வெறுப்புகளை களைந்து பலனில் பற்று வைக்காமல் கர்மத்திர்க்காக கர்மத்தை கடவுளுக்கு அர்ப்பணம் ``என்று செய்துவருவாயக என வற்புறுத்துகிறது !மனிதன் தனது மேலே சுமத்தப்படும் கர்மத்தில் முழு ஈடுபாடோடு காரியமாற்ற கடமை பட்டவன் --அது கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்ட வேலை அதை நிறைவேற்றுவது நமது கடமை என்கிற அளவில் மனிதன் வினையாற்ற வேண்டுமே ஒழிய அக்காரியம் வெற்றியா தோல்வியா அதில் பலன் நமக்கு மட்டும் கிடைகிறதா என்றெல்லாம் சிந்திப்பது கர்மயோகம் ஆகாது !சாமான்ய மனிதர்கள் சுய லாபம் கருதி எந்த வினையையும் ஆற்றி வரும் போது யோகத்தில் பக்தியில் முன்னேற்றம் அடையும் போது பலனில் பற்றுவைக்காது கர்மம் செய்யும் நிலை சித்திக்கும் !தன்னை அறிதல் என்கிற வார்த்தையின் உண்மையான அர்த்தம் எனக்குள்ளே கடவுள் இருக்கிறார் என நுனிநாக்கில் அலட்டிகொண்டிருப்பதல்ல ;மாறாக தனது சுய சித்தம் எது செய்தாலும் முடிவில் அனர்த்தம் -துன்பம் தான் உண்டாகிறது ;தன்னை வெறுமையாக்கி கடவுளின் சித்தம் எதுவோ அதனை மட்டும் செய்து கொண்டிருப்பது என யார் உணரத்தொடங்கி கடவுளின் வழிகாட்டல் என்ன என ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்த்து பிரார்த்தித்து ஒத்திசைவாய் வாழ முயற்சித்தல் --தன்னை உணர்தலாகும் !அவன் தன்னை சுற்றிய ஒவ்வொரு செயல்பாடுகளிளிருந்தும் கடவுள் நமக்கு உணர்த்துகிற பாடம் என்ன என கற்றுக்கொள்ள முயற்சித்து கொண்டே இருப்பான் !தான் ஜீவாத்துமா தன்னை சுற்றி சூழ்ந்த பராத்துமாவின் செயல்பாடுகளில் சுயத்தால் பிசிறடித்து கெடுக்காமல் பரமாத்துமாவின் செயல்பாடுகளில் ஒத்திசைவாக காரியமாற்றுவது ஒன்றே சகல ஆசிர்வாதத்தையும் சாந்தியையும் சமாதானத்தையும் உண்டாக்கும் என்பதை உணர்ந்திருப்பான் !இத்தகையவன் ஜீவன்முக்தன் என கீதை சொல்லுகிறது !அவன் நிலைத்த அறிவுடையவன் -எதனாலும் அசைக்க படாதவனும் கூட --இந்த யோகநிலையை அடைவது என்பது சுய அறிவை அடக்கி கடவுளின் சித்தத்தோடு ஒருமித்து வாழும் நிலை !

இதற்கு மாறுபாடாய் தனது சுயசித்தத்தின் மூலம் அறிவு ஆற்றலை பெருக்கி யோகத்தின் மூலமாய் பல சித்துக்களை கைவரப்பெற்று அவற்றை பயன்படுத்தி தனது அதிகாரத்தை ஆழுமையை பிறர்மீது பயன்படுத்தி மனித இனத்தை அடக்கயொடுக்கும் நிலைக்கி உயர்வது --தனக்கென அதிகாரம் பட்டம் பதவி அரசு செல்வம் என ஏற்படுத்திக்கொண்டு காயகல்பம் சித்துக்கள் மூலம் மரணமற்ற பெருவாழ்வு வாழ்ந்து விடலாம் தானும் கடவுளை போல ஆகிவிடலாம் என முயற்சியும் செய்தவர்களே மனிதர்களில் ``அரக்கர்கள்`` எனப்பட்டவர்கள் !!

முதல் மனிதனையும் மனுஷியையும் சாத்தான் பாம்பு ரூபம் கொண்டு ஏமாற்றி பாவத்தில் வீழ்த்திய போது ஓதிய விஷயம் :``இந்த பழத்தை நீங்கள் சாப்பிட்டால் நன்மைதீமை அறிகிற அறிவுண்டாகி நீங்களும் கடவுளாக ஆகிவிடுவீர்கள் என்பதை கடவுள் அறிவார் ;அதனால்தான் இக்கனியை உண்ணவேண்டாம் என தடுத்திருக்கிறார் ``என்பதே ! இந்த இடத்தில் ஆதிமனிதன் தானும் கடவுள் ஆகவேண்டும் என்பதற்காகவே அக்கனியை உண்டான் !!தான் கடவுள் ஆகி கடவுளின் ஆழுமையில்லாமல் சுயமாய் வாழலாம் அல்லது கடவுளை போலாகி சர்வ அதிகாரம் உள்ளவனாக வேண்டும் என்பதுதான் !!

யோகத்தின் மூலம் தன்னை வெறுமையாக்கி தனது சுய சித்தத்தை அடக்கி கடவுளின் சித்தம் மட்டும் செய்வது ஜீவன்முக்தன் ஆவது !! அதே யோகத்தின் மூலம் தன் சுய சித்தத்தை திறனுள்ளதாக்கி சித்துக்கள் கைவசமாக்கி அதிகாரத்தை பெருக்கி கடவுளுக்கு இணையானவனாக தன்னை உயர்த்துதல் அரக்கனாகுவது !!இத்தகையோர் பதவி பெற்றதும் எளியோரை வாட்டி வதக்கி ஆணவமாய் நடக்க தொடங்கி பாவத்தின் மேல் பாவம் செய்ய தொடங்கி விடுவர் !!ஆரம்பிக்கு போது மனித சமுதாயம் உயர்வு பெற பாடுபடுகிறேன் என ஆரம்பித்து நான் சொல்லுவதை செய்வதுதான் எல்லோருக்கும் நல்லது என்பதாக சர்வாதிகாரிகளாக மாறிவிடுவர் !!

நன்மைதீமை அறிகிற அறிவு ;பகுத்தறிவு கோஷங்களெல்லாம் குடும்ப நலனுக்கும் அரசியல் ஆதிக்கத்துக்கும் பலரை பகடைகாய் ஆக்கி விட்டது என்பதை சமீபத்திய உதாரணங்களே போதுமானவை !! தானக்குள்ளாக கடவுளை தேடுகிறேன் என்னும் நுட்பமான மாயை ஒருவகையில் சுயத்தை உயர்த்துவதே !!ஒவ்வொருவரும் தனக்குள்ளாக இருக்கிற கடவுளின் பேரால் பிறரை தனக்கு அடியவராய் ஆகும்படியாக அழைக்கும் சுய பெருமையில் ஆணவத்தில் போய் அது முடியும் !எல்லாருக்குள்ளும் இருக்கிற கடவுள் தன்னையும் தாண்டி இருக்கிற கடவுளை அறிவது என்பது பக்தியிலும் அடக்கத்திலும் போய் முடியும் !நாமும் கடவுளாகலாம் என்கிற சாத்தானின் சரக்காகிய மகாமாயையிளிருந்து தப்பிக்க முடியும் !

அந்தோ பாவம் !!ஆதிமனிதன் தானும் கடவுளாகிறேன் என ஆசைப்பட்டு அந்த கனியை உண்டு சாபத்துக்கு உள்ளாகி கடவுளின் சமூகத்திலிருந்து பூமிக்கு அனுப்பபட்டான் !அப்படி அவன் பூமியில் முதலில் வந்த இடம் இலங்கையில் உள்ள ஸ்ரீபாதமலை !!

ஸ்ரீ பாதமலை அல்லது மகேந்திர மலை அல்லது குமரிமலையின் பகுதி !!

அங்கு ஆதிமனிதன் ஒற்றை காலில் நின்று மன்னிப்பு கோரியதால் கடவுளுக்கும் அவனுக்கும் சிறு சமாதானம் உண்டாயிற்று !கடவுள் யுக புருஷன் மூலமாக கீதையை உபதேசித்தார் !அதுவே ``மனுதர்மம் `` எனப்படும் ``ஆதி இந்து மதத்தின் ``மூல உபதேசமாகும் !ஆதிமனிதனுக்கு ஏற்கனவே தேவதூதர்கள் பணி செய்ய கடவுளால் கட்டளை இருந்ததை நினைவு கூறவும் !அத்தோடு அவனுக்கு துருபதேசம் செய்து அவனை கடவுளுக்கு இணை ஆக்கி கடவுளின் அவசியம் இல்லாமலேயே மனித குலம் சிறப்பாய் வாழ்வதாக கடவுளுக்கு சவால் விடுவது --அசுர கணங்களின் லட்சியமாகும் !இந்த இரண்டு ஆவிமண்டல கூட்டத்திற்கும் இடம் கொடுத்தவனாய் ஆதிமனிதன் 900 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தான் ! அவர்களது சந்ததி லெமூரிய கண்டம் அல்லது குமரி கண்டம்முழுவதும் இலங்கையிலிருந்து பரம்பிற்று !!

லெமூரியா கண்டம் அல்லது குமரிகண்டம் !!

குமரி மலை ;மகேந்திர மலை ;ஸ்ரீபாதமலை ஒன்றாகவே இருந்திருக்க வாய்ப்பு உள்ளது !இதுவே கைலாய மலையாக--மேருமலையாகவும் குறிக்க படுவது !திரேதா யுகத்தில் இலங்கையும் இந்தியாவும் குறுகிய நீரோட்டாத்தால் மட்டுமே பிரிக்க பட்டிருக்க வேண்டும் !இன்றளவும் மணல் திட்டுகள் நிறைய உள்ளன !இதில் ஆதி மனிதர்கள் கட்டிய பாலமே ``சேதுவாகும் `` இது இயற்கையான கடல் பாலமாக கூட இருந்திருக்கலாம் !!ஆனால் அதை ஆதி தமிழர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் !எனவே இன்றளவும் அந்த பாலம் ``ஆதாம் பிரிட்ஜு``என்றே அழைக்க படுகிறது !!நான் தியானத்தால் உணர்த்தபட்டதை எழுதுகிறேன் !நம்புவது நம்பாதது உங்களிஷ்டம் ;அனால் உண்மை நியாயதீர்ப்பு நாளில் நாம் அனைவரும் அறிவோம் !

ஆதிமனிதர்கலான ஆதாமும் எவாலுமே சிவனாகவும் பார்வதியாகவும் பின்னாளில் கடவுளுக்கு இணை வைக்க பட்டிருக்க வேண்டும் !இவர்கள் 1000 ஆண்டுகள் வரை வாழ்ந்துள்ளனர் !அசுர கணங்கள் இவர்களுக்கு பக்க பலமாக இருந்துள்ளது !திருப்புல்லானிக்கு வடக்கே ``உத்திரகோசமங்கை ``என்றொரு ஸ்தலம் உள்ளது ! இங்கு ஆருத்திரா தரிசனம் என்பது புகழ் பெற்றது !இங்கும் நான் சென்றிருந்தேன் !அந்த சிவன் கோவிலில் ஒரு வயதான பெரியவருடன் நான் பேச்சு கொடுத்த போது அவர் சொன்ன முக்கியமான விஷயங்கள் :

ருத்திரன் +கோசம் +மங்கை

1 )உலகிலேயே முதல் சிவன் கோவில் உத்திரகோசமங்கை கோவில் !ஆதி காலத்தில் நவ கிரகங்கள் அறியப்படாத காலத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது என்பதிலிருந்து இக்கோவில் கட்டப்பட்ட காலம் பழமையானது என்பதை அறியலாம் !

2 )சிவன் பார்வதிக்கு உபதேசம் செய்த இடம் இது !உத்திரன் +கோசம் +மங்கை =மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம் !``குருகீதை `` என்பது சிவன் பார்வதிக்கு குருவின் மகத்துவத்தை பற்றி உபதேசித்தது (இது தற்போது சமஸ்கிரத பாடலாக உள்ளது -இதனை தமிழ் படுத்தி திரிபுகளை நீக்கி விரிவுரை கடவுள் சித்தத்தால் செய்வேன் )கடவுளை அடைய பக்தன் குருவை நாடி அடைவது பற்றி அற்புதமாக சிவனால் பார்வதிக்கு உபதேசிக்க பட்டுள்ளது !இது அவர்கள் ஆதிமனிதர்கள் என்பதையும் பின்னாளில் மனிதர்கள் தங்கள் குல தெய்வ வழிபாட்டின் படி இவர்களை கடவுளுக்கு இணை வைத்திருக்க வேண்டும் என்கிற சந்தேகத்தை உறுதிபடுத்துகிறது !

ஆதிமனிதர்கள் --தமிழர்களிடம் ஒரு பரவலான பழக்கம் !ஆங்காங்கே குடி பெயர்ந்து சென்று அங்கே நிலைத்து பேருக்கும் போது பேர்சொல்லும் படி வாழ்ந்த தங்கள் மூதாதைக்கு அவ்விடத்திலே குலதெய்வ வழிபாடு செய்வார்கள் !அதை மைய படுத்தி தங்களை ஒரு புதிய குலமாகவும் அறிவித்து கொள்வார்கள் !ஒரு சாதனையாளர் அல்லது ஞானி ,முனிவர் ,சித்தர் அடங்கினால் அந்த சமாதியின் மேல் ஒரு லிங்கம் வைத்து அவர் பெயரோடு ``ஈஸ்வரன் `` என சேர்த்து அதை கோவிலாக்கி வழிபடுவார்கள் !அதன் அர்த்தம் இவரும் கடவுளுக்கு இணை ஆகிவிட்டார் என்பதுதான் !!அகத்தியர் அடங்கிய இடம் அகத்தீஸ்வரம் ;திருவார் சித்தர் அடங்கிய இடம் திருவாரீச்வரம் ;கும்ப முனி அடங்கிய இடம் கும்பரீர்ச்வரம் இப்படி தமிழகத்தில் பல கோவில் ஸ்தல வரலாறுகள் உள்ளன !அப்படி ஆதாமும் ஏவாளும் அடங்கிய இடம் முதல் சிவாலாயமாக உத்திர கோச மங்கையில் அமைந்திருக்க வேண்டும் !

ராவணேஸ்வரன் மணைவி மண்டோதரி நீண்ட நாள் திருமணம் இல்லாத போது உத்திரகோசமங்கையில் இக்கோவிலில் வேண்டுதல் செய்து அதன் பலனாக ராவணனுக்கும் மண்டோதரிக்கும் இங்கு தான் திருமணம் நடந்ததால் மங்களநாதர் சன்னதி என பெயர் வைக்க பட்டுள்ளது !ஆக இயற்கையாய் அமைந்த கடல் பாலத்தின் மூலம் ஆதிமனிதர்கள் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் போக்கும் வரத்துமாய் இருந்திருக்க வேண்டும் !அந்நாளில் கடல் மட்டம் அதிகம் இல்லாமலும் இருந்திருக்கும் !

அத்தோடு திரேதா யுகத்தில் அசுரர்கள் மனித பெண்களை திருமணம் முடிப்பது தடை செய்ய படாததால் இவர்களால் ``அரக்கர்கள் `` --மிக பலம்வாய்ந்த மனிதர்கள் உருவானதாக யூதர்களின் வேதத்தில் குறிப்பிட பட்டுள்ளது !நமது புராணங்களிலும் தவம் இருந்து வரம் வாங்கி அனேக அசுரர்கள் பிறந்து பூமியை ஆண்டு கொடுமை படுத்திய வரலாறுகள் உள்ளன !

இப்படி உருவான அரக்கர்கள் குலம் இலங்கையில் இருந்திருக்க வேண்டும் !கலியுகத்தில் கலிங்கத்திலிருந்து நாடுகடத்தப்ட்டு வந்த விஜயன் இந்த அரக்கர் குல பெண்மனியோருவருடன் சேர்ந்தே சிங்களவர்கள் உண்டானார்கள் ! இப்படி தவம் செய்து வரம் பெற்று தங்களை கடவுளுக்கு இணையாய் அறிவித்து கொண்டவர்களும் தங்கள் பெயருடன் ஈஸ்வரன் என சேர்த்து கொள்ளும் வழக்கின் படி ராவணனும் இலங்கையில் ஒரு பலம் வாய்ந்த பேரரசை நிறுவி தன்னை ராவணேஸ்வரன் என அழைத்து கொண்டிருக்க வேண்டும் !

அந்நாளில் குமரிமளையிலிருந்து குமரியாறு ,பகுருளியாறு என வற்றாத ஜீவநதிகள் ஓடியதாக அறிகிறோம் !இந்த நதிக்கரை ஒன்றிலேயே இறைதூதர் ராமர் பிறந்திருக்க வேண்டும் !ராவணனை அழிக்கும் வரத்தோடு ராவணனுக்கு சீதை மகளாக பிறந்து அதை அறிந்த ராவனணன் சீதையை ஒரு பேழைக்குள் வைத்து ஆற்றில் விட்டதை ஜனகர் எடுத்து வளர்த்தார் என்பது வரலாறு !இலங்கைக்கும் வடஇந்தியாவில் ஓடும் கங்கைக்கும் சம்மந்தமே இல்லை !மேலும் ராமரின் வணவாசத்திலிருந்து சீதையை ராவணன் தூக்கி கொண்டு வரும் போது இடை மறித்து சமர் செய்து ஜடாயுசபரி இறந்த இடம் கேரளாவில் உள்ள சபரிமலை ! சபரி இறந்ததால் அது சபரிமலை !இலங்கை --திருப்புல்லாணி --சபரிமலை -நேர்கோட்டில் இன்றைய கேரளாவிற்கு மேற்கில் லேமூரியாகண்டத்தில் ராமர் வாழ்ந்த அயோத்தி இருந்திருக்க வேண்டும் !!

பின்னாளில் மனிதர்கள் அதன் நினைவாக இன்றைய அயோத்தியை கங்கை கரையில் அமைத்திருக்க வேண்டும் !கேரளா என்பது மலைநாடு அதில் திரேதா யுகத்தில் வால் உள்ள பேசத்தெரிந்த குரங்கு இனம் இருந்திருக்க வேண்டும் !இந்த இனமே பொதுவாக ``வாலி ``எனப்படுகிறது ! இந்த இனம் தற்போது இல்லாமல் போய் விட்டது !ஆனாலும் அதனை ஒத்த கருங்குரங்கு உள்ளது !இதன் சுபாவம் குரங்குகளை விட அதிகம் முன்னேறியது ! 10 வருடங்களுக்கு முன்பு தேனிமாவட்டத்தில் புதிய பிரதேசமான வருசநாடு கடமலைக்குண்டு ஏரியாக்கள் மனிதர்கள் போக்குவரவு தொடர்பு இல்லாமல் இருந்தது !அப்படியானால் திரேதா யுகத்தில் இலங்கைக்கும் வட இந்தியாவிலுள்ள கங்கைக்கும் தொடர்பு இருந்திருக்க வாய்ப்பு இல்லை !அகத்தியர் ,வசிஷ்டர் ,விசுவாமித்திரர் போன்ற சமகால முனிவர்களின் ஏட்டுநூல் சுவடிகள் தமிழகத்தில் உள்ளன !இவர்கள் அனைவரும் லேமூரியாகண்ட தமிழர்களாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது !இவர்கள் குருகுலம் அமைத்து கடவுளை அடைய இல்லறத்தில் துறவற பாதையை கற்பித்த ஞானிகள் !இவர்களது முயற்சிக்கு பக்கத்தில் உள்ள இலங்கையிலிருந்த அரக்கர் இனத்தை சேர்ந்தவர்கள் அடிக்கடி தொல்லைகள் கொடுத்ததன் விளைவாகவே ராமர் கடவுளால் இறைதூதராக அரக்கர்களை அழிப்பதற்கென்றே அனுப்பபட்டார் !அருகில் உள்ள பகுதியாதலால் மட்டுமே அடிக்கடி அரக்கர்கள் இப்பகுதிக்கு வந்துசெல்ல முடிந்தது !---தொடரும்


Last edited by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sun Jul 01, 2012 1:25 am; edited 1 time in total
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: எனது ராமநாதபுரம் மாவட்ட பயணம் !!---பாகம் II

Post by தர்மா on Sun Apr 15, 2012 10:11 pm

ஸ்தல வரலாறு எவ்வளவு முக்கியம் என்பது இக்கட்டுரையில் தெரிகிறது பகிர்வுக்கு நன்றி

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: எனது ராமநாதபுரம் மாவட்ட பயணம் !!---பாகம் II

Post by கே. பாலா on Sun Apr 15, 2012 10:36 pm

சூப்பருங்க சூப்பருங்க நன்றி


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: எனது ராமநாதபுரம் மாவட்ட பயணம் !!---பாகம் II

Post by பது on Mon Apr 16, 2012 8:00 am

ரொம்ப பெருசாயிருக்கு அறைவாசிதான் பாத்தான் சூப்பருங்க

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: எனது ராமநாதபுரம் மாவட்ட பயணம் !!---பாகம் II

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Tue Jul 03, 2012 11:37 pm

இப்படி ஆதி நாட்களிலிருந்தே இலங்கை அசுரர்கள் மற்றும் அசுர ஆவிகளின் ஆழுமைக்கு உள்ளேயே இருந்திருக்கிறது ! எனவே தான் அதன் தொடர்பிலேயே இனத்தின் பெயரால் ஒரு இனத்தை அடக்கவும் சித்திரவதை செய்யவுமான செயல்பாடுகள் அங்கு தொடர்ந்து கொண்டே உள்ளன ! சிங்களவர்கள் என்ற இனம் அங்கு வாழ்ந்த அரக்க இனப்பெண்ணுக்கும் அங்கு ராஜதுரோக குற்றத்தினிமித்தம் நாடுகடத்தப்பட்டு வந்த வங்காளிக்கும் உண்டான தொடர்பில் உண்டான இனம் ! அதற்கு முன்பே அங்கு வாழ்ந்த தமிழ் இனத்தை சகோதரத்துவத்துடன் ;சம மரியாதை செலுத்த இதயம் இல்லாத அரக்க சிந்தனை அசுர ஆவிகளால் மட்டுமே விதைக்க பட்டு வளர்க்க பட்டு வருகிறது !

தீராத வியாதி நீடிக்குமானால் `` நோய்க்கும் பாரு ; பேய்க்கும் பாரு `` என்பது பழமொழி ! வீரம் , துடிப்பு , ரத்தம் சிந்திய போராட்டம் இவைகளெல்லாம் நோய்க்கு பார்ப்பது போல ! அதை அநேகர் செய்கிறார்கள் !எவ்வளவோ முயற்சிக்கும் போராட்டத்திற்கும் பிறகும் தோல்விகள் உண்டாகும் பொது ; பேய்க்கும் பாரு என்பதை சிந்தித்தாக வேண்டும் ! அது ஆவிமண்டல சக்திக்குள் அசுர சக்திகளை பலவீன படுத்தியாக வேண்டும் ! இலங்கையில் சமாதானத்தை உண்டாக்கும் படி கடவுளிடம் தொடர்ந்து வேண்டுவதுவே அது ! உள்ளார்ந்த பாரம் உள்ளவர்கள் இலங்கையின் சமாதான வாழ்வுக்காக வேண்டும் போது ஆவிமண்டல மாறுதல்கள் உண்டாகி அது பூமியிலும் பிரதிபலிக்கும் !

அத்தகைய பிரார்த்தனை பயிற்சி ; முயற்சி உள்ளவர்கள் அந்த பிரார்த்தனையை ராமரின் சேனை கட்டிய அல்லது ஒழுங்கமைத்த சேது துவங்கும் ``சேதுக்கரை `` யில் நின்று மனமுருகி கடவுளிடம் பிரார்த்தியுங்கள் ! அது விரைவில் பலனளிக்கும் !! ஏனென்றால் அதர்மத்தை அழிக்க இவ்விடமே திறப்பின் வாசலாக திரேதா யுகத்தில் இருந்திருக்கிறது ! அந்த திறப்பின் வாசலாகிய சேதுக்கரை இலங்கையின் உபத்திரவத்தை தீர்க்கும் பிரார்த்தனைக்குரிய சரியான இடமாகும் !!

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் இம்முயற்சியில் இடுபடுவோர் மீது அபிரிதமாய் பெருகுவதாக !!

http://www.godsprophetcenter.com/rich_text_48.html
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: எனது ராமநாதபுரம் மாவட்ட பயணம் !!---பாகம் II

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum