ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நந்தன வருட ராசி பலன்கள்

View previous topic View next topic Go down

நந்தன வருட ராசி பலன்கள்

Post by சிவா on Wed Apr 11, 2012 6:58 amகணித்தவர் : `ஜோதிடக் கலைமணி' சிவல்புரி சிங்காரம்

Last edited by சிவா on Wed Apr 11, 2012 7:33 am; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நந்தன வருட ராசி பலன்கள்

Post by சிவா on Wed Apr 11, 2012 7:01 am

மேஷம்
அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)


குரு பெயர்ச்சிக்கு பிறகு கூடுதல் லாபம் தேடி வரும்!

மற்றவர்களின் மனம் அறிந்தும், குணம் அறிந்தும் பேசுவதில் வல்லவர்களாக விளங்கும் மேஷ ராசி நேயர்களே!

`கர' வருடம் முடிந்து `நந்தன' வருடம் தொடங்குகிறது. வரப்போகும் நந்தன வருடம் வாழ்க்கையை வசந்தமாக்குமா? சிந்தித்ததெல்லாம் செயல்படுத்த முடியுமா? என்ற எண்ணம், வருடம் பிறக்கும் முன்பே உங்கள் மனதில் பிறந்து விடும்.

குரு பெயர்ச்சிக்கு பிறகு நீங்கள் கொடி கட்டி பறக்க போகிறீர்கள். ராசிநாதன் செவ்வாயும், சனியும் கூடும் நேரத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. அதேபோல், ஜென்ம ராசியில் கேது சஞ்சரிக்கும் போதும், சாதனை நிகழ்த்தி வந்த நீங்கள் சில தடைகளை சந்திக்கலாம்.

நந்தன ஆண்டு மட்டுமல்லாமல், எந்த ஆண்டும் இனிய ஆண்டாக அமையவும், தடைகள் அகன்று தன லாபம் குவியவும், உங்கள் சுய ஜாதகத்தில் பாக்யாதிபதியின் பாதசார பலமறிந்து, அதன் நவாம்ச நிலை அறிந்து யோக பலம் பெற்ற நாளில், யோகம் தரும் கிரகத்திற்குரிய தெய்வங்களை தேர்ந்தெடுத்து, சிறப்பு வழிபாடுகளையும், பரிகாரங்களை யும் மேற்கொண்டால், நினைத்த காரியம் நினைத்த படியே நிறைவேறும்.

சுக்ர பலத்தை பொறுத்தே வாழ்க்கை துணை!

நினைத்ததை முடிக்க வேண்டுமென்று உறுதியான மனம் பெற்றவர்கள் நீங்கள். தன்னம்பிக்கை உங்களுக்கு அதிகமாக இருப்பதால், எது நடந்தாலும் நடக்கட்டும் பார்த்து கொள்ளலாம் என்று சொல்வீர்கள்.

உங்கள் சுய ஜாதகத்தில் சுக்ர பலத்தை பொறுத்தே வாழ்க்கை துணையும் அமையும், வருமானமும் கிடைக்கும். சனியின் பலத்தை பொறுத்தே தொழில் வளம் அமையும்.

உங்களுக்கு இந்த நந்தன வருடம் சித்திரை முதல் பங்குனி வரை செயல்பாடுகளில் கிரக நிலைகள் சாதகமான சூழ்நிலையை கொடுக்குமா? என்பதை பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கம் முதல் வைகாசி 3 வரை!

ஆண்டின் தொடக்கம் தனுசு ராசியில் நிகழ்கிறது. உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சந்திரன் உலா வந்து ஆண்டு தொடங்குவதால், பொன், பொருட்கள் சேரும் விதத்தில் நந்தன வருடம் உங்களுக்கு நற்பலன்களை கொடுக்க போகிறது. ராசிநாதன் செவ்வாய் பஞ்சம ஸ்தானத்தில் இருந்தபடி குருவின் பார்வையை பெற்று கொள்வதால், குரு-மங்கள யோகம் செயல்பட போகிறது.

சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சிக்கு சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சித்திரை 17-ம் தேதி மேஷத்தில் புதன் சஞ்சரிக்க போகிறார். 3, 6-க்கு அதிபதி ராசியில் சஞ்சரிக்கும் போது, உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஜென்ம குரு தடைகளை அகற்றவும், தனவரவை கொடுக்கவும், வியாழன் தோறும் தென்முக கடவுள் வழிபாட்டினை மேற்கொள்ளுங்கள்.

குரு பெயர்ச்சி நன்மை தருமா?

நவ கிரகங்களில் சுப கிரகம் என்று வர்ணிக்கப்படுவது குரு ஒன்றுதான். அந்த குரு பார்த்தால் கோடி நன்மை. அந்த குருவோடு பகை கிரகங்கள் சேர்ந்திருந்தால் கூட தோஷம் நிவர்த்தியாகி விடுகின்றன.

எல்லா வருடங்களிலும் பெயர்ச்சியாகும் குருவை காட்டிலும், இப்போது வரும் குரு பெயர்ச்சி கொஞ்சம் வித்தியாசமானதாகவும், திடீர், திடீரென பலருக்கும் மாற்றங்களை கொடுக்க கூடியதாகவும் அமைகிறது.

காரணம், தேவ குருவான வியாழ பகவான், அசுர குருவான சுக்ரன் வீட்டில் அல்லவா சஞ்சரிக்க போகிறார். பகை கிரகத்தின் வீட்டில் குரு சஞ்சரிக்க போவதால், நமக்கு வரும் பலன்கள் நல்லதாக அமைய, குரு வழிபாட்டை முறையாக செய்வது நல்லது.

உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிந்து, அந்த இடத்து ஆதி பத்தியங்களை துரிதமாக நடை பெற வைக்க போகிறது. `இரண்டில் குரு வந்தால் இல்லத்தில் மகிழ்ச்சி வரும். திரண்ட செல்வமுடன் தேனான வாழ்வும் வரும்' என்பார்கள்.

குருவின் பார்வை பலத்தால் எதிர்ப்பு, வியாதி, கடன், இழப்பு, வழக்கு, உடல்நிலை, இட மாற்றம், தொழில் மாற்றம் போன்ற அனைத்திலும் நல்ல மாற்றங்களை கொடுக்க போகி றார். பட்ட கடன் தீரும். பரிதவிப்பு மாறும். கெட்டவர்களின் சகவாசம் மாறும்.

ஆதாயம் தரும் காரியங்கள் ஏராளமாக நடைபெறும். போதுமான அளவு பொருளாதாரம் வந்து சேரும். பாயில் படுத்தவரின் நோய்கள் அகலும். மாற்று மருத்துவம் மகத்தான பலன் தரும். கிளை தொழில்கள் செய்யவும் வாய்ப்புகள் கைகூடி வரும். கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும்.

துயரங்களை போக்குமா துலாம் ராசி சனி!

இந்த வருடம் தொடக்கத்தில் கன்னி ராசிக்குள் சஞ்சரித்த சனி, துலாம் ராசிக்குள் ஆவணி 27-ந் தேதி வருகிறார். இதன் விளைவாக, உடல் ஆரோக்கியத்திற்கு என்று ஒரு தொகையை செலவழிக்கும் சூழ்நிலை உருவாகலாம். உத்யோகம், தொழிலில் பற்றாக்குறை பட்ஜெட் ஏற்படலாம்.

கல்யாண வாய்ப்புகள் திடீரென மாறிப்போய் கவலையை உருவாக்கலாம். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லாவிட்டால், குழப்பங்களையே அதிகரிக்க செய்யும்.

வக்ர குரு என்ன செய்யும்?

புரட்டாசி 26-ந் தேதி முதல் தை 24 வரை குரு வக்ரமாக ரிஷப ராசிக்குள் சஞ்சரிக் கிறார். உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதியாக விளங்கும் குரு வக்ரம் பெறும்போது, தந்தை வழியில் தனலாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

சொத்துக்கள் வாங்கி சேர்க்கும் ஆர்வமும், சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பும் இந்த காலத்தில் ஏற்படலாம். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள், வீட்டுக்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களையும் ஒவ்வொன்றாக வாங்கி சேர்ப்பீர்கள்.

மகர செவ்வாய் தரும் மகத்துவம்!

வரும் நந்தன வருடத்தில் கார்த்திகை 30 முதல் தை 9 வரை மகரத்தில் செவ்வாய் உச்சம் பெறுகிறார். இந்த காலம் ஒரு பொற்காலமாகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். வீடு கட்டும் அமைப்போ அல்லது வாங்கும் அமைப்போ உருவாகும்.

பாம்பு கிரக பெயர்ச்சி பக்க பலமாக இருக்குமா?

கார்த்திகை 17-ந் தேதி துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்க போகிறார்கள். மேஷத்தில் சர்ப்ப கிரகம் சஞ்சரிக்கும் போது, மேன்மைகள் உருவாகும் என்பர். பொருளாதார நிலை உயரும்.

புண்ணிய நதிகளில் தீர்த்தமாட செல்வீர்கள். குழந்தைகளின் கல்வி நலன் கருதியும், கல்யாண முயற்சி கருதியும் செய்த செயல்பாடுகள் வெற்றி தரும். நாடு மாற்றங்கள் ஒரு சிலருக்கு நன்மையை தரும்.

கூட்டு தொழில் தனித்தொழிலாக மாறலாம். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் ஒவ்வொன்றாக வெற்றி பெறும். வாழ்க்கை தேவைகளை ராகு, கேது பெயர்ச்சி பூர்த்தி செய்தாலும், உடல் ஆரோக்கியத்தில் சிறு, சிறு தொல்லைகளை கொடுக் கலாம். சர்ப்ப சாந்திகளை முறையாக செய்தால் சகல பாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும்.

வக்ர சனியால் வளர்ச்சி ஏற்படுமா?

சித்திரை 1-ந் தேதி முதல் ஆனி 6-ந் தேதி வரை சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதன் பிறகு மாசி 4-ம் தேதி முதல் பங்குனி 31-ம் தேதி வரை மீண்டும் வக்ரத்தில் சஞ்சரிக்கிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு தொழில் ரீதியான மாற்றங்களை கொடுக்கலாம். 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்கும் சனிபகவான், தொழில் மற்றும் லாப ஸ்தானத்தை ஆதிபத்யமாக கொண்டிருப்பதால், தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.

எதிரிகளால் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடலாம். உதிரி வருமானம் குறையலாம். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே வந்து சேரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய்நாட்டை நோக்கி வரலாம். தாய் நாட்டில் இருப்பவர்கள் வெளிநாட்டை நோக்கி செல்லலாம். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. அனுமன் வழிபாட்டில் ஆர்வம் காட்டினால் அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும்.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!

செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று முருக பெருமானை வழிபட்டு வாருங்கள். சிறப்பு வழிபாடாக, சிவகங்கை மாவட்டம் கீழச்சீவல்பட்டிக்கு அருகில் உள்ள பில்லமங்களத்தில் மகிஷாசுரமர்த்தினியின் அவதாரமாக விளங்கும் பொன்னழகி அம்மனை வழிபட்டு, பொன்னான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள்.

மங்கையர்களுக்கான மகத்தான பலன்கள்!

நந்தன வருடத்தில் மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு வைகாசி மாதத்திற்கு மேல் வளர்ச்சி கூடும். வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும். வாரிசுகள் இல்லையே என்ற கவலை தீரும். சனியின் வக்ர காலத்தில் உத்யோக துறையில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், அதிகாரிகளின் அனுகூலமும் கிடைக்கும். ராகு-கேது பெயர்ச்சிக்கு பின்னால் பிள்ளைகளின் சுபகாரிய பேச்சுக்கள் திடீரென முடிவுக்கு வரலாம். கணவன்-மனைவிக் குள் ஒற்றுமை கூடும். குருவின் வக்ர இயக்க காலத்தில் சொத்துக்கள் உங்கள் பெயரி லேயே வாங்கும் சூழ்நிலை உருவாகும். ஆனி 9 முதல் ஆடி 29 வரை செவ்வாய், சனி சேர்க்கை காலத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும். அப்போதுதான் விரயங்களில் இருந்து விடுபட இயலும்.

கார்த்திகை 30 முதல் தை 9 வரை மகர செவ்வாயின் ஆதிக்க காலத்தில் நீங்கள் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். சுய ஜாதகத்தில் யோகம் தரும் கிரகத்திற்குரிய தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால், யோக வாய்ப்புகள் வந்து சேரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நந்தன வருட ராசி பலன்கள்

Post by சிவா on Wed Apr 11, 2012 7:04 am


ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீர்ஷம் 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)


ஜென்ம கேது மாறியதும் செல்வ வளர்ச்சி அதிகரிக்கும்!

நம்பியவர்களுக்கு நாளும் கைகொடுத்து உதவும் ரிஷப ராசி நேயர்களே!

`கர' வருடம் முடிந்து `நந்தன' வருடம் தொடங்க போகிறது. வரும் புதிய ஆண்டு நமக்கு வளர்ச்சி தருமா? வருமானம் திருப்தியாக இருக்குமா? என்றெல்லாம் உங்கள் சிந்தனை அலைபாயும். உங்களைப் பொறுத்தவரை இந்த புத்தாண்டு, பொருளாதாரத்தின் உச்சநிலையை அடையும் ஆண்டு என்றே சொல்லலாம்.

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன், உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அஷ்டம லாபாதிபதி குரு பனிரெண்டில் சஞ்சரிக்கிறார். எட்டுக்கு அதிபதி பனிரெண்டில் சஞ்சரிக்கும் பொழுது, `கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திடீர் திடீரென நல்ல மாற்றங்கள் உருவாகும்.

ஜென்ம ராசியிலுள்ள கேதுவும், ஏழில் உள்ள ராகுவும் விலகிய பின்னால், நீங்கள் கேட்ட இடத்தில் எல்லாம் உதவிகள் கிடைக்கும், வளர்ச்சி கூடும். சப்தமாதிபதியும், விரயாதி பதியுமான செவ்வாய், சனியோடு இணைந்து ஐந்தில் சஞ்சரிக்கும் ஒருசில மாதங்களில் பிள்ளைகள் வழியில் பிரச்சினைகள் உருவாகாமல் பார்த்து கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் உங்கள் அணுகு முறை அன்போடு கூடியதாக இருந்தால் வெற்றி உங்கள் பக்கமே வரும்.

நன்றி மறக்காத நல்ல குணம் உள்ளவர்கள்!

உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நீங்கள். உலகச்செய்திகளை எல்லாம் அறிந்து கொள்ள ஆசைப்படுவீர்கள். நன்றி மறக்காத தன்மை உங்களிடம் இருப்பதால் தான், நட்பு வட்டம் உங்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கிறது.

இந்த புத்தாண்டு நந்தன வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கம் முதல் வைகாசி 3 வரை!

ஆண்டின் தொடக்க நாளில் அஷ்டமத்தில் சந்திரன் உலா வந்தாலும், சுக்ரபலம் கூடுதலாக இருப்பதால், செலவிற்கேற்ற வரவு வந்து கொண்டேயிருக்கும். பொன், பொருள் சேர்க் கைக்கு அஸ்திவாரம் இடும் விதத்திலும், வீடு கட்டி குடியேற இடம் வாங்கும் விதத்திலும் விரய குருவின் பார்வை பலம் தருகிறது. சித்திரை 17-க்கு மேல் மேஷ புதனின் சஞ் சாரத்தில் ஒருசிலருக்கு வீடுமாற்றங்கள், பிள்ளைகளின் உத்யோக வாய்ப்புகள் அரங்கேறலாம்.

ஜென்ம கேது ஆன்மிக நாட்டத்தை அதிகரிக்கச் செய்யும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வக்ரச் சனியின் இயக்கத்தால் தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு ஓரளவு குறையலாம். எனவே, வேலைப்பளு அதிகரிக்கும்.

குருப்பெயர்ச்சி தரும் மாற்றங்கள்

நவகிரகங்களில் சுபகிரகமான குரு பகவான் தற்சமயம் உங்கள் ராசிக்கும் பனிரெண்டாமிடத்தில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார். இனி வைகாசி 4-ல் உங்கள் ராசிக்குள் அடியெடுத்து வைக்கப்போகிறார். உங்கள் ராசிநாதனோ சுக்ரன், அவருக்கு பகைவனான குருபகவான் உங்கள் ராசிக்கு வரும் பொழுது, எப்படி நன்மை செய்வார்? என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

குரு பார்த்தாலும், குரு சேர்ந்தாலும் கோடி நன்மை அல்லவா? எனவே, கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிளந்து கொண்டு கொடுக்கும் என்பதைப் போல, தேடி வந்த குரு உங்களை கோடீஸ்வரராகவும் ஆக்கலாம். கொடி கட்டிப் பறக்கும் வாழ்க்கையையும் அமைத்து கொடுக்கலாம்.

இல்லம் தேடி வரும் குருவை வருவதற்கு முன்னதாகவே, நாம் தேடிச் சென்று வழி படுவதும், வரும் நாளில் வரவேற்று கொண்டாடுவதும் நந்தன வருடத்தை நல்ல வருடமாக உங்களுக்கு மாற்றி அமைத்து கொடுக்கும். `வானவர்க்கு அரசனான வளம்தரும் குருவே' என்ற குரு கவசப் பாடலை தினமும் ஒரு முறையும், வியாழன் தோறும் மூன்று முறையும் குரு முன்னிலையில் நீங்கள் படித்து வழிபட்டால், அதன் அருட்பார்வையால் உங்களுக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவதால் அந்த இடத்து ஆதிபத்யங்கள் எல்லாம் உடனுக்குடன் நடைபெற்று உற்சாகத்தை வர வழைத்துக் கொடுக்கும்.

`ஜென்மத்தில் குரு வந்தால் செலவுகளே அதிகரிக்கும்!' என்றாலும், சுபச் செலவுகளே உங்களுக்கு உருவாகும்.

இடம் வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். வாரிசுகளுக்கு வெளிநாட்டு வாய்ப்புகளை உபயேகப்படுத்திக் கொடுப்பீர்கள்.

அந்நிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் இதுவரை இருந்த இழுபறியான பஞ்சாயத்துக்கள் இனிநல்ல முடிவுக்கு வரலாம். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் உருவாகும்.

செவ்வாய்-சனி சேர்க்கை காலம்!

செவ்வாய், சனி சேர்க்கை ஏற்படும் பொழுது, உலகில் பல பிரச்சினைகள் உருவாகின்றன. உங்கள் ராசியைப் பொறுத்தவரை ஐந்தாமிடத்தில் அதன் சேர்க்கை இருப்பதால், பிள்ளை கள் வழியில் கொஞ்சம் முன்னெச்சரிக்கை தேவை. அவர்கள் உங்களை கேட்காமலேயே தன்னிச்சையாக ஒருசில முடிவுகளை எடுக்கலாம்.

பூர்வீக சொத்து பிரச்சினை மீண்டும் தலைதூக்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது யோசித்து செய்வது நல்லது. ஆனி 9 முதல் ஆடி 29 வரை கூடுதல் கவனம் தேவை.

துயரங்களைப் போக்குமா துலாம் ராசிச்சனி!

வருடத் தொடக்கத்தில் கன்னி ராசிக்குள் சஞ்சரித்த சனி துலாம் ராசிக்குள் ஆவணி 27-ம் தேதி வருகிறார். உச்ச சனி அச்சமில்லாத வாழ்க்கைக்கு அடித்தளமிடும். 6-ல் சனி உலாவரும் பொழுது, சீரும், சிறப்பும், செல்வாக்கும் மேலோங்கும். பேரும், புகழும் வந்து சேரும். எதிரிகள் விலகுவர். உதிரி வருமானங்கள் மலைபோல் குவியும். வழக்குகள் ஓயும். வாய்ப்புகள் வாசற்கதவைத் தட்டும்.

வக்ர குரு தரும் பலன்கள் என்ன?

புரட்டாசி 26-ம் தேதி முதல் தை 24-ம் தேதி வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு வக்ரமடையப்போகிறார். அஷ்டமாதிபதி வக்ரம் பெறும் பொழுது, ஆச்சரியப்படத்தக்க வகையில் நல்ல பலன்களையும் நீங்கள் சந்திக்க நேரிடும். அரசு வழியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். ஆயினும், ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கி சங்கிலித் தொடர் போல, கடன்களை வரவழைத்து கொள்வீர்கள்.

பதினோராமிடத்திற்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால், கடல் பயண வாய்ப்புகளில் மாற்றம் உருவாகும். மூத்த சகோதரர் உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடலாம். குருவுக்கு ப்ரீதி செய்வதன் மூலம் உங்கள் குழப்பங்கள் அகலும்.

பாம்பு-கிரக பெயர்ச்சி பக்கபலமாக இருக்குமா?

கார்த்திகை 17-ம் தேதி துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இந்த பெயர்ச்சி உங்களுக்கு யோகம் தரும் விதத்திலேயே அமைகிறது.

கடந்த சில மாதங்களாக கேதுவின் ஆதிக்கத்தால் நிறைய காரிய தடைகளைச் சந்தித்து வந்திருக்கலாம். கேது பெயர்ச்சிக்குப் பிறகு தாமதப்பட்ட காரியங்கள் அனைத்தும் தானாகவே தடையின்றி நடந்து வரும்.

ஆறாமிடத்து ராகுவும், ஜென்ம குருவும் முறையாக சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் அஷ்டலட்சுமி யோகம் செயல்படப்போகிறது. எனவே, காலாவதியான கடன்கள் கூட உங்கள் கைக்கு வந்து சேரலாம். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் உருவாகும்.

சர்ப்ப சாந்தியை முறையாகச் செய்தால், சகல பாக்யங்களும் ராகு-கேதுக் களின் ஆதிக்கத்தால் வந்து சேரும்.

வக்ர சனியால் வளர்ச்சி ஏற்படுமா?

சித்திரை 1-ம் தேதி முதல் ஆனி 6-ம் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ம் தேதி முதல் பங்குனி 31-ம் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் 9, 10-க்கு அதிபதியாக விளங்குபவர் சனி பகவான். இக்காலத்தில் முன்னோர் சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஒருசிலருக்கு உருவாகலாம். உடன்பிறப்புகளை அனுசரித்து செல்வதன் மூலமே ஆதாயத்தைப் பெற முடியும்.

தொழில் கூட்டாளிகள் தொகைகளை ஒழுங்காக கொண்டு வந்து சேர்ப்பார்களா? என்பது சந்தேகம்தான். ஆதாயம் ஏட்டில் இருக்குமே தவிர, எதிரில் இருக்காது. சிலவாய்ப்புகள் கைகூடுவதுபோல தோன்றி, நழுவிச் செல்லலாம். எனவே, இக்காலத்தில் சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி, வழிபாடு செய்வதோடு `கருநிறக்காகம் ஏறி, காசினி தன்னைக் காக்கும்' என்ற சனி கவசத்தைப் பாடி காக வாகனத்தானை கைகூப்பி வழிபடுவதன் மூலம் கவலைகளிலிருந்து விடுபடலாம்.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!

வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சிறப்பு வழிபாடாக, பிரதோஷ நாளில் நந்தியை வழிபட்டு வாருங்கள்.

நினைத்ததை நிறைவேற்றும் நெய் நந்தீஸ்வரரை புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன் பட்டிக்குச் சென்று வழிபட்டு வந்தால் புதிய வாழ்க்கை மலரும்.

மங்கையர்களுக்கான மகத்தான பலன்கள்!


நந்தன வருடத்தில் ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு, குருப்பெயர்ச்சிக்கு பிறகு இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டு. குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சிகள் ஒவ்வொன்றாக வெற்றி பெறும். சுக்ர பலத்தோடு ஆண்டு தொடங்குவதால் ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். கணவன் -மனைவிக்குள் கனிவு கூடும். உங்கள் பெயரிலேயே ஒரு புதிய தொழில் தொடங்க, குடும்ப உறுப்பினர்கள் முன் வருவர். ராகு-கேது பெயர்ச்சிக்கு பின்னால் பயணங்கள் அதிகரிக்கும். கடல் கடந்து வரும் செய்தி காதினிக்க வைக்கும். ஆனி 9 முதல் 29 வரை செவ்வாய்-சனி சேர்க்கை காலத்தில் பிள்ளைகள் வழியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சுய ஜாதக அடிப்படை மேற்கொண்டால், மனநிம்மதியும், மகிழ்ச்சியும் குடிகொள்ளும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நந்தன வருட ராசி பலன்கள்

Post by சிவா on Wed Apr 11, 2012 7:06 am


மிதுனம்

மிருக சீர்ஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள் : க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)


வக்ரச் சனி மாறியதும் வளர்ச்சி அதிகரிக்கும்!

சவால்களை சமாளிப்பதிலும், சாமர்த்தியமாக பேசுவதிலும் முன்னிலை வகிக்கும் மிதுன ராசி நேயர்களே!

`கர' வருடம் முடிந்து `நந்தன' வருடம் தொடங்குகிறது. உங்களைப் பொறுத்தவரை தனாதிபதி சந்திரனின் பார்வை பூரணமாக மிதுனத்தில் பதிந்து ஆண்டு தொடங்குவதால் பண வரவு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும்.

பற்றாக்குறை என்ற பேச்சிற்கே இடமில்லை என்று சொல்லும் அளவிற்கு கிரக நிலைகள் சாதகமாக உலா வருகின்றன.

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் நீச்சம் பெறுகிறார். அதை வக்ரம் பெற்ற சனி பார்க்கிறார். குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து, உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே, சகோதர ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நிறைவேற்றுவீர்கள்.

12-ம் இடத்தில் இருக்கும் கேது பயணங்களை அதிகரிக்க வைக்கும். செவ்வாயும் -சனியும் இணையும் நேரத்தில் மட்டும் கவனத்தோடு செயல்பட வேண்டும். வீண்பழிகள், வாங்கல், கொடுக்கல்களில் சிக்கல், வாகனத்தால் தொல்லை வரலாம்.

உங்களுக்கு இந்த நந்தன வருடம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கம் முதல் வைகாசி 3 வரை

ஆண்டின் தொடக்கத்தில் சந்திர பலம் நன்றாக இருக்கிறது. சனியின் வக்ர இயக்கமும், நினைக்க இயலாத ராஜயோகத்தைக் கொடுக்கும். விரய கேது, ஆறாமிடத்து ராகு காரணமாக பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்ப வழிவகுக்கும்.

சித்திரை 17-க்கு மேல் மேஷ புதனின் சஞ்சாரத்தால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சூரிய பலம் கூடுவதால் அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைத்து ஆனந்தப் படுவீர்கள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரிய வெற்றிக்கு கைகொடுத்து உதவுவர்.

என்ன இருந்தாலும் அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் இறைவனைப் பூஜித் தும், இணைந்து செயல்படுபவர்களை நேசித்தும், எதையும் தொடங்கும் முன் யோசித்தும் செய்தால் வெற்றி கிட்டும்.

நவக்கிரகங்களில் நல்லவர் என்று வர்ணிக்கப்படுபவர் குரு. உங்கள் ராசிக்கு 7, 10-க்கு அதிபதியாக குரு விளங்குவதால், 12-ல் சஞ்சரிக்கும் பொழுது, பக்கபலமாக இருப்பார். பணத் தேவைகளைப் பூர்த்தி செய்வார். சிக்கல்களை விலக்குவார்.

12-ல் சஞ்சரிக்கும் விரய ஸ்தான குரு, விரயத்தை அளவிற்கு அதிகமாகச் செய்வாரோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அவரோடு கேதுவும், சுக்ரனும் இணைந்திருப்பதால் ஆலயத்திற்காகவும், ஆன்மிகத்திற்காகவும் ஒரு தொகையைச் செலவு செய்வீர்கள். வீட்டிற்குத் தேவையானவற்றைப் பட்டியல் போட்டு வாங்கி, பணத்தை நல்ல வழியில் விரயம் செய்யும் சூழ்நிலை உருவாகும்.

வியாழக்கிழமையன்று குரு தட்சிணாமூர்த்திக்கு முல்லைப் பூ மாலை அணிவித்து, அர்ச்சித்து வழிபட்டு வந்தால் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவதால், அந்த இடத்து ஆதிபத்யங்கள் எல்லாம் உடனுக்குடன் நடைபெற்று உற் சாகத்தை வரவழைத்துக் கொடுக்கும். கடன் சுமை குறையவும், கடமைகளை நிறை வேற்றவும், பெயர்ச்சியாகும் குருவின் பார்வை பலன் கொடுக்கும்.

வீடு வாங்கலாமா, இடம் வாங்கலாமா என்று மனதில் நடத்திய பட்டிமன்றத்திற்கு தீர்ப்பு கிடைக்கும். வெள்ளை உள்ளம் படைத்தவர்கள் இல்லம் தேடி வந்து உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். வழக்குகள் சாதகமாக முடியும்.

செவ்வாய் சனி சேர்க்கைக் காலம்

கன்னி ராசியில் செவ்வாயும், சனியும் சேரும் நாட்கள் மட்டும் நீங்கள் மிக மிக கவனத்துடன் நடந்து கொள்ளவேண்டும். நல்லதையே செய்தாலும் மற்றவர்கள் உங்கள் மீது பழி சுமத்துவர்.

வாங்கிய வீட்டை விற்கும் நிலை வந்ததே என வாடலாம். வளர்ச்சியை கருதி ஏற்படுத்திய தொழிலை பங்குதாரர்களே எடுத்துக் கொள்ளலாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

ஆனி 9 முதல் ஆடி 29 வரை தேனினும் இனிய வாழ்க்கை அமைய தெய்வ தரிசனங்கள்தான் தேவை.

துயரங்களைப் போக்குமா துலாம் ராசிச்சனி?

ஆவணி 27-ம் தேதி முதல் துலாம் ராசிக்குள் உச்சம் பெறும் சனி யோகத்தை அள்ளி வழங்குவார். பிள்ளைகளின் கடன், கடமைகளை முடித்து நிம்மதி பெறுவீர்கள். உறவினர் பகை அகலும். உயரிய பொறுப்புகளும், பதவிகளும் ஒரு சிலருக்கு வந்து சேரும்.

வக்ர குரு வரவைக் கொடுக்குமா? செலவை கொடுக்குமா?


புரட்டாசி 26-ம் தேதி முதல் தை 24-ம் தேதி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். 7,10-க்கு அதிபதியான குரு வக்ரம் பெறும் பொழுது, நன்மைகளையே வழங்கும். விலகிச் சென்ற வரனை மீண்டும் வரவழைத்து கொடுக்கும். கைவிட்டுப்போன தொழில் மீண்டும் உங்களுக்கே வந்து சேரலாம்.

புதிய ஒப்பந்தங்கள் மகிழ்ச்சி தரும் விதத்தில் அமையும். பிற இனத்தாரின் ஒத்துழைப்போடு கடன் சுமையில் இருந்து விடுபடுவீர்கள். செலவு வரும் முன்னதாகவே வரவு வந்து கைகொடுக்கும்.

பொதுவாக, இக்காலத்தில் குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது.

பாம்பு கிரக பெயர்ச்சி பக்கபலமாக இருக்குமா?

கார்த்திகை 17-ம் தேதி துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இந்த கிரகப் பெயர்ச்சி உங்களுக்கு யோகம் தரும் விதத்திலேயே அமைகிறது. அந்நியதேச அனுகூலம் எண்ணியபடியே கிடைக்கும். கூட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். அதன் கல்வி நலன் கருதியும், கல்யாண வாய்ப்புக் கருதியும், ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.

கேதுவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் அச்சு றுத்தல் ஏற்பட்டு அகலும். நோய்க்கான அறிகுறி தோன்றும்பொழுதே மருத்துவ ஆலோ சனை பெறுவது நல்லது.

யோக பலம் பெற்ற நாளில் சர்ப்பசாந்தியை முறையாகச் செய்தால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மார்கழி மாதம் செவ்வாய்-சனி இரண்டின் பார்வையும் கேதுவின் மீது பதிவதால் வாங்கிய சொத்தை விற்கவும், மீண்டும் புதிய சொத்துக்கள் வாங்கவும் வாய்ப்புகள் உருவாகும்.

வக்ர சனியால் வளர்ச்சி ஏற்படுமா?

சித்திரை 1-ம் தேதி முதல் ஆனி 6-ம் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ம் தேதி முதல் பங்குனி 31-ம் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்கும் சனி பகவான் வக்ரம் பெறும்பொழுது, பூர்வீக சொத்துக்களைக் கைப்பற்றிக் கொள்வதில் தாமதம் ஏற்படும். பார்வைக்கு மிடுக்காக நீங்கள் தோன்றினாலும், மனதுக்குள் கவலை குடிகொண்டிருக்கும். மாற்று மருத்துவத்தின் மூலம் உடல்நலத்தை சீராக்கிக் கொள்ளலாம்.

தொழில் கூட்டாளிகள் நம்பிக்கை மாறி, உங்கள் விழிப்புணர்ச்சியையும் மீறி சில தவறுகளைச் செய்ய நேரிடலாம். வராத பாக்கிகள் வந்து மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், வரவேண்டிய தொகை வருவதில் தாமதம் ஏற்படும். நழுவிச் சென்ற வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள சனி பகவானைத் தான் சரணடைய வேண்டும். சனிக்கிழமை விடிந்ததும் காகத்திற்கு சோறு வையுங்கள். சனியின் சந்நிதியில் `கருநிறக் காகம் ஏறிக் காசினி தன்னைக் காக்கும்' என்ற சனி கவசத்தைப் பாடி எள்தீபம் ஏற்றுங்கள். பணியில் ஏற்பட்ட தொய்வுகள் அகலும்.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!

புதன்கிழமை தோறும் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று விஷ்ணுவை வழிபடலாம். `எட்டு வகை லட்சுமியால்' என்ற `அஷ்டலெட்சுமி' கவசப் பாடலை தினமும் படித்து வழிபட்டால் செல்வநிலை உயரும்.

சிறப்பு வழிபாடாக காரைக்குடி அருகில் உள்ள அரியக்குடிக்குச் சென்று அங்குள்ள காக்கும் கடவுள் விஷ்ணுவையும், லட்சுமியையும் வழிபட்டு வாருங்கள். இறைவனை கைகூப்பித் தொழுதால் பை நிறையப் பணம் சேரும்.

மங்கையர்களுக்கான மகத்தான பலன்கள்!

மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்த நந்தன ஆண்டில் குரு பெயர்ச்சிக்குப் பின்னால் குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான சூழ்நிலை உருவாகும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட்டாலும், மூன் றாம் நபரால் மனநிம்மதிக் குறைவு ஏற்படலாம்.

கன்னி ராசியில் செவ்வாய், சனி கூடும் நேரத்தில் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களைக் கையாளும் பொழுது கவனம் தேவை. ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னால் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். தாய்வழியில் எதிர்பார்த்தபடி தனலாபம் வந்து சேரும்.

துலாத்தில் சனி உச்சம் பெறும்பொழுது பிள்ளைகளால் பெருமைக்குரிய சம்பவங்கள் நடைபெறும். சொத்துக்களை வாங்கிச் சொந்தபந்தங்கள் வியக்கும் அளவு வீடு கட்டிக் குடியேறுவீர்கள். சனிக்கிழமை சனீஸ்வர வழிபாட்டை மேற்கொள்வதோட சுய ஜாதக ரீதியாகவும் பரிகாரங்கள் செய்தால் உடனடியாக பலன்களைக் காண இயலும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நந்தன வருட ராசி பலன்கள்

Post by சிவா on Wed Apr 11, 2012 7:09 am


கடகம்

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)


வாழ்க்கையில் திருப்பம் தரும் குருப்பெயர்ச்சி!

யாரை அணுகினால் காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பதை அறிந்து வைத்திருக்கும்கடக ராசி நேயர்களே!

உங்களை பொறுத்தவரை, உங்கள் ராசிநாதன் சந்திரனை குரு பார்த்து ஆண்டின் தொடக்க நாள் அமைகிறது. விரயாதிபதி நீச்சம் பெற, அஷ்டமாதிபதி வக்ரம் பெற தொடங்கும் இந்த ஆண்டு உண்மையிலேயே உன்னதமான ஆண்டாகவே அமையப் போகிறது.

என்றாலும், சில மாதங்கள் கழித்து சனி மீண்டும் 4-ல் சஞ்சரிக்க போகிறார். அர்த் தாஷ்டம சனியின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்க போகின்றது. அந்த நேரத்தில் தேவையில்லாத வீண் குழப்பங்களும், மனச்சஞ்சலங்களும் தேடி வந்து கொண்டே இருக்கும்.

அந்த நேரத்தில் வரும் இனம்புரியாத கவலைகளை நீக்க இறைவழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

கேதுவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் குடும்ப பொறுப்பை வாழ்க்கை துணையிடம் ஒப்படைக்க முன் வருவீர்கள். தேக நலன் கருதி புதிய மருத்துவ சிகிச்சைகளை நாடுவீர்கள். குருப்பெயர்ச்சிக்கு பின்னால் உங்கள் ராசிக்கு 5-ல் குருவின் பார்வை பதிவதால் அதன் பின்னரே சகல வழிகளிலும் நன்மைகள் அதிகம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

சிறிய விஷயத்தை பெரிதாக்கி பார்ப்பீர்கள்!

எதையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுபவர்கள் நீங்கள். உங்கள் மனதில் புதுப்புது கருத்துகள் தோன்றி கொண்டே இருக்கும். மனோசக்தி மிக்க நீங்கள் தன்னம்பிக்கையை மட்டும் கூட்டிக்கொண்டால் தரணியில் புகழ் பெற்ற மனிதர்களில் முதலிடம் பிடிப்பீர்கள்.

பெரிய விஷயங்களை பற்றி பேசாமல் விட்டு விடுவீர்கள். சிறிய விஷயங்களை பெரி தாக்கி பார்த்து பேசுவீர்கள். உங்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்? என்பதை பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கம் முதல் வைகாசி மூன்று வரை!

ஆண்டின் தொடக்கத்தில் குருச்சந்திர யோகமும், குரு மங்கள யோகமும் இருக்கிறது. ஆயினும், குரு பத்தில் அல்லவா சஞ்சரிக்கிறார், எனவே பொறுப்புகள் மாறுவதும், இருப்புகள் கரைவதும், விருப்பங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படுவதும் இயல்பான தாகவே அமையும்.

மூன்றில் சனி வக்ரம் பெறுவதால் சகோதரர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். தொழில் வளர்ச்சிக்கு கை கொடுக்க புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியும் வந்து சேரலாம். ஆச்சரியப்படக்கூடிய செய்தியும் வந்து சேரலாம்.

குருபெயர்ச்சி தரும் பலன்கள்?

நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று சொல்லப்படும் குரு உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியாகிறார். அவர் இதுவரை 10-ல் சஞ்சரித்து பதவிகளில் சில மாற்றங்களை கொடுத்திருக்கலாம். இனி பதினோராமிடத்தில் சஞ்சரித்து, நீங்கள் மதி நுட்பத்தால் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் மகத்தான அளவில் வெற்றிகளை பெற வைக்க போகிறார்.

பதினோராமிடத்தில் சஞ்சரிக்கும் குரு லாப ஸ்தான குரு என்று அழைக்கப்படுகிறார். எனவே, வரவு வந்து கொண்டே இருக்கும். வளர்ச்சி பாதைக்கு வள்ளல்களின் ஒத்துழைப் பும், வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக நிறைவேறும். உதிரி வருமானங்களை உள்ளம் மகிழ கொண்டு வந்து சேர்க்கும் குருவை பெயர்ச்சிக்கு முன்னதாகவே பார்த்து வழிபட்டு வந்தால், பெருமைக்குரிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும்.

உங்கள் ராசிக்கு பதினொன்றில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே, அந்த இடத்து ஆதிபத்தியங்கள் எல்லாம் அற்புதமாக நடைபெற வைத்து விடும். குறிப்பாக, சகோதர சகாய ஸ்தானம், புத்திர ஸ்தானம், களத்திர ஸ்தானம் ஆகியவை புனிதமடைய போகின்றன. இதன் விளைவாக, நல்ல மாற்றங்களை நீங்கள் சந்திக்க போகிறீர்கள்.

சகோதர ஒத்துழைப்பு கிடைத்து தக்க விதத்தில் வாழ்க்கை பாதையை அமைத்து கொள்ள போகிறீர்கள்.

செவ்வாய், சனி சேர்க்கை காலம்!

கன்னி ராசியில் செவ்வாயும், சனியும் சேரும் நாட்கள் மட்டும் நீங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். அந்த நிகழ்வு ஆனி 9 முதல் ஆடி 29 வரை இருக் கிறது. சகோதர ஸ்தானத்தில் ஒன்று கூடும் இந்த கிரகங்களால், பொருள் இழப்புகளும், விரயங்களும் உருவாகலாம்.

பொல்லாதவர்களின் சிநேகத்தால் இல்லத்தில் குழப்பங்கள் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி ஆபரணங்கள் வாங்கி சேர்க்கும் எண்ணம் மோலோங்கும். எதை சொன்னாலும் யோசித்து சொல்வது நல்லது.

துயரங்களை போக்குமா துலாம் ராசி சனி!

ஆவணி 27-ந் தேதி முதல் துலாம் ராசிக்குள் உச்சம் பெறும் சனி உங்களுக்கு நன்மை, தீமைகளை கலந்தே வழங்குவார். சொத்துக்களை வாங்கும் சூழ்நிலையும் உருவாகும். விற்கும் சூழ்நிலையும் உருவாகும்.

சொந்தங்களை பகை பாராட்டாமல் நடந்து கொள்வது நல்லது. வாகனங் கள் வைத்து இருப்பவர்கள் கவனமுடன் ஓட்டி செல்வதோடு, வாகன மாற்றமும் செய்ய முன்வர முயற்சிப்பர். தாய் வழி தொல்லைகளை சந்திக்க நேரிடும்.

வக்ர குரு வரவை கொடுக்குமா, செலவை கொடுக்குமா?


புரட்டாசி 26-ந் தேதி முதல் தை 24-ந் தேதி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியை பொறுத்தவரை 6, 9-க்கு அதிபதியாக குரு விளங்குவதால், வராத கடன்கள் வசூலாகும். எதிரிகள் விலகுவர். உடல் ஆரோக்கியத்திற்கு ரண சிகிச்சை செய்வதுதான் நல்லது என்று சொன்ன மருத்துவர்கள் இனி சாதாரண சிகிச்சையிலேயே நோய் குணமாகி விடும் என்று ஒரு ஆச்சரியப்படத்தக்க செய்தியை தருவர்.

பங்காளி பகைகள் உருவாவதை தவிர்க்க முடியாது. தந்தை வழி விரோதங்களும், விற்ற சொத்துக்களால் பிரச்சினைகளும் உருவாகலாம். சிறப்பு ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவதன் மூலம் சிக்கல்களிலிருந்து விடுபட இயலும். அரசியலில் ஈடுபட்டு இருப்பவர் களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.

பாம்பு கிரக பெயர்ச்சி பக்க பலமாக இருக்குமா?

கார்த்திகை 17-ந் தேதி துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்க போகிறார்கள். இந்த கிரக பெயர்ச்சி உங்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை கொடுக்க போகிறது. உத்யோகத்தில் இருப்பவர்கள் வி.ஆர்.எஸ். வாங்கி கொண்டு புதிய கூட்டாளி களுடன் இணைந்து தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

நான்காமிடத்தில் சஞ்சரிக்க போகும் ராகு தாயின் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அகற்றுவார். பயணங்கள் அதிகரிக்கும். வீடு மாற்ற சிந்தனைகள் மேலோங்கும்.

துலாம் ராகு தொட்ட காரியத்தில் வெற்றியடைய வைக்க முறையான ராகு ப்ரீதிகளை செய்வது நல்லது.

அர்த்தாஷ்டம ராகு என்பதால், சர்ப்ப சாந்தியை யோக பலம் பெற்ற நாளில் செய்தால், செல்வத்தை அது அள்ளி கொடுக்கும். பழைய வாகனங்களை கொடுத்து, புதிய வாகனங்களை வாங்கி மகிழ உகந்த நேரமிது.

வக்ர சனியால் வளர்ச்சி ஏற்படுமா?

சித்திரை 1-ந் தேதி முதல் ஆனி 6-ந் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ந் தேதி முதல் பங்குனி 31-ந்தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் சனி 7, 8-க்கு அதிபதியாவார். அஷ்டமாதிபதி வக்ரம் பெற்றால் யோகம் தான் என்றாலும், சப்தமாதிபதியாகவும் அல்லவா சனி சஞ்சரிக்கிறார். எனவே, வந்த வரன்கள் வாயிலோடு திரும்பி விடலாம். எந்த நேரத்திலும் வாழ்க்கை துணையோடு மோதல் உருவாகலாம். ஆகவே, அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்லவேண்டிய நேரமிது. சேமிக்க தான் முடியாதே தவிர செலவிற்கு பணம் வந்து கொண்டே இருக்கும்.

சனிக்குரிய சிறப்பு ஸ்தலங்களில் முதல் சுற்று நடப்பவர்கள் அதற்குரிய கோவிலுக்கும், இரண்டாவது சுற்று அர்த்தாஷ்டம சனி நடப்பவர்கள் அதற்குரிய கோவிலுக்கும், மூன்றாவது சுற்று அர்த்தாஷ்டம சனி நடப்பவர்கள் அதற்குரிய சிறப்பு வழிபாட்டையும் மேற்கொண்டால் தான் தோல்வியில் துவளாமல், வெற்றியில் ஒட்டிக்கொள்ள இயலும்.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!

திங்கட்கிழமை தோறும் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று மங்கலம் தரும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சனிக்கிழமையன்று விநாயகர் சன்னிதியில் விநாயகர் கவசமும், அனுமன் சன்னிதியில் அனுமன் கவசமும், சனீஸ்வரர் சன்னிதியில் சனீஸ்வரர் கவசமும் பாடி வழிபட்டு வாருங்கள். மதுரை நன்மை தருவார் கோவில் சென்று நந்தீஸ்வரரையும், உமா மகேஸ்வரரையும் வழிபட்டால் நலமும், வளமும் கிடைக்கும்.

மங்கையர்களுக்கான மகத்தான பலன்கள்!

கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்த நந்தன வருடத்தில் பணப்புழக்கம் சீராக இருக்கும். பக்கத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். வேலைப்பளு அதிகரிக்கும். வியாழனின் பெயர்ச்சிக்கு பின்னால், விரும்பிய பொருட்களை விரும்பிய நேரத்தில் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மாறும். தாய் வீட்டோடு இருந்த போராட்டம் அகன்று, தானாகவே அவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். செவ்வாய், சனி சேர்க்கை காலத்தில் மட்டும் சகோதரர்களை அனுசரித்து செல்வது நல்லது. இந்த ஆண்டு சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கம் உங்களுக்கு அதிகமாக இருப்பதால் பெண் குழந்தைகளின் குணத்தில் மாறுபாடுகள் தோன்றலாம். குழந்தை வளர்ப்பில் கூடுதல் கவனம் தேவை. சர்ப்ப சாந்தி செய்வதும், நந்தி வழிபாட்டை மேற்கொள்வதும் சந்தோஷத்தை வழங்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நந்தன வருட ராசி பலன்கள்

Post by சிவா on Wed Apr 11, 2012 7:13 am


சிம்மம்

மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)


கன்னிச் சனி விலகியதும் காரிய வெற்றி தேடி வரும்!

விடாமுயற்சியால் வெற்றி தேவதையை வரவழைத்துக் கொள்ளும் சிம்ம ராசி நேயர்களே!

`கர' வருடம் முடிந்து `நந்தன' புத்தாண்டு தொடங்குகிறது. வருடத்தொடக்கத்தில் உங்கள் ராசியைப் பார்க்கும் குரு வைகாசிக்கு மேல் பத்தாமிடத்தில் அல்லவா சஞ்சரிக்கப் போகிறார். எனவே, வந்த குரு எந்த அளவிற்கு நன்மைகளை வழங்கும்? வருடத் தொடக்கத்தில் வரும் மகிழ்ச்சி வருட கடைசி வரை இருக்குமா? என்றெல்லாம் உங்கள் மனதில் எண்ணங்கள் மலர்ந்து கொண்டே இருக்கும்.

உங்கள் ராசியைப் பொறுத்தவரை உத்ராடம் நட்சத்திரத்தில் சூரியன் காலில் பிறக்கும் இந்த ஆண்டு சுபிட்சத்தை அள்ளி வழங்கப்போகிறது.

வருடத் தொடக்கத்தில் யோககாரகன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். 2-ல் சனியும், 10-ல் கேதுவும் `பிரபுத்துவ' யோகத்தை வழங்கும். அரசியல் அனுகூலமும், அடுத்தவர்களின் ஒத்துழைப்பும் குறைவின்றி இருப்பதால், புகழ் ஏணியின் உச்சிக்குச் செல்லும் வாய்ப்பும், புதிய பொறுப்புகள் வந்து சேரும் அமைப்பும் உருவாகும்.

செவ்வாய், சனி சேர்க்கை காலத்தில் மட்டும் எதையும் நிதானித்துச் செய்வது நல்லது. உறவினர் பகை உருவாகாமல் இருக்க, விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். சிலருக்கு உதவி செய்யப்போய் அது உபத்திரவத்தில் முடியலாம். கூட்டணிகள் விலக நேரிடும்.

இருப்பினும், தன்னம்பிக்கையும், தைரியமும் மிக்க நீங்கள் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கும் பொழுதெல்லாம் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

உங்களுக்கு இந்த நந்தன புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கம் முதல் வைகாசி 3 வரை!

ஆண்டின் தொடக்கத்தில் குருமங்கல யோகமும், குருச்சந்திர யோகமும் ஏற்படுகிறது. விலகிய ஏழரைச்சனி மீண்டும் வக்ர இயக்கத்தில் குடும்பச்சனியாக சஞ்சரிக்கிறது. பத்தில் கேது, சுக்ரனுடன் கூடிபலம் பெறுகிறார்.

எனவே, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொகை வரவில் இருந்த குழப்பங்கள் அகலும். ஆரோக்கியத்திற்காக சிறிது தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகலாம்.

வீடுகட்டும் முயற்சியில் அல்லது வீடு வாங்கும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். தன்னம்பிக்கையும், உற்சாகமும் குடிகொள்ள தானாகவே பதவிகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

பதவி மாற்றம் தருமா குருப்பெயர்ச்சி?

நவக்கிரகங்களில் நற்பலன்களை பார்வையாலேயே வழங்கும் கிரகம் குரு. அந்த குரு அசுர குரு வீட்டில் சஞ்சரித்து, அதன் ஆற்றல்மிக்க பார்வையை உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களில் செலுத்துகிறது. பார்வை படும் இடமெல்லாம் பலன்கள் அபரிமிதமாக நடைபெறும்.

பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பதவி மாற்றங்களைக் கொடுக்குமா? என்று நீங்கள் நினைக்கலாம். பொதுவாக, 5, 8-க்கு அதிபதியான குரு 10ல் சஞ்சரிக்கும் பொழுது, தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கும் பொழுது, யோசித்து செய்வது நல்லது. இட மாற்றம், ஊர் மாற்றம், இலாகா மாற்றம் போன்று ஏதேனும் ஒருமாற்றம் வந்து சேரலாம்.

அதுமட்டுமல்லாமல், பத்தாமிடத்து குருவிற்கு பரிகாரம் அவசியம் செய்ய வேண்டும். முத்தான குரு புத்தாண்டில் பலன் தர குரு கவசம் பாடி குருவை வழிபாடு செய்யுங்கள்.

உங்கள் ராசிக்கு 10 ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே, அந்த இடத்து ஆதிபத்யங்கள் எல்லாம் படிப்படியாக நடைபெறப் போகிறது. வாக்கு, தனம், குடும்பம், தாய், எதிர்ப்பு, வாகனம், வழக்கு, கடன் சுமை ஆகியவற்றைப் பற்றிய சிந்தனைகளில் எல்லாம் நீங்கள் நினைத்தது போலவே நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது.

குடும்பத்தில் ஒற்றுமை கூடும். தாயின் உடல் நலம் சீராகும். இடம், பூமி வாங்கும் யோகம் ஏற்படும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். கடிதம் கனிந்த தகவலைத்தரும். எதிரிகள் சரணடைவர். எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும். கடன்சுமை குறைந்து, கவலைகள் தீர்ந்தது என்று சொல்லி மகிழ்வீர்கள்.

செவ்வாய், சனி சேர்க்கை காலம்!

ஆனி 9 முதல் ஆடி 29 வரை கன்னி ராசியில் செவ்வாயும், சனியும் சேருகின்றன. வாக்கு ஸ்தானத்தில் இவை கூடுவதால் எதையும் யோசித்து சொல்வது நல்லது. கோபத் தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

விரயங்கள் அதிகரிக்கும். வாகன மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றங்கள் திடீர் மாற்றங் களாக வந்து சேரும். அங்காரக வழிபாடும், அனுசரிக்கும் தன்மையுமே இக்காலத்தை பொற் காலமாக்கும்.

துயரங்களைப் போக்குமா துலாம் ராசிச்சனி?

ஆவணி 27-ம் தேதி முதல் துலாம் ராசிக்குள் உச்சம் பெறும் சனி உங்களுக்கு மிகுந்த நன்மைகளை வழங்கும். ஏழரைச்சனியின் பிடியில் இருந்து நீங்கள் முழுமையாக விலகப்போகிறீர்கள். எனவே, தொட்டகாரியங்கள் வெற்றி பெறும்.

துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். வெற்றிச் செய்திகள் அடுக்கடுக் காக வந்து சேரும். வீடு வாங்கும் யோகம் முதல் வியக்கும் விதத்தில் பதவிகள் அமையும் யோகம் வரை ஒவ்வொன்றாக செயல்படும்.

வக்ரகுரு வரவைக் கொடுக்குமா? செலவைத்தருமா?

புரட்டாசி 26-ம் தேதி முதல் தை 24-ம் தேதி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 5, 8-க்கு அதிபதியாக குரு விளங்குவதால் நன்மை, தீமைகள் இரண்டும் கலந்தே நடக்கும்.

எட்டுக்கு அதிபதி வக்ரம் பெறுவதால், இழப்புகளை ஈடுசெய்யும் வாய்ப்பு கிட்டும். அதே நேரத்தில் 5-க்கு அதிபதி வக்ரம் பெறுவதால், பிள்ளைகள் வழியில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் இழுபறி நிலையி லேயே இருக்கும். பொதுவாக, குரு வழிபாட்டில் முறையாக ஆர்வம் காட்டினால், குழப்பங் களில் இருந்து விடுபட இயலும்.

பாம்பு கிரகப்பெயர்ச்சி பக்கபலமாக இருக்குமா?

கார்த்திகை 17-ம் தேதி துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இந்த கிரகப்பெயர்ச்சி உங்களுக்கு யோகம் தரும் பெயர்ச்சிதான். உங்கள் ராசிக்கு மூன்றில் ராகுவும், ஒன்பதில் கேதுவும் சஞ்சரிக்கப்போகிறார்கள். மூன்றாமிடத்து ராகு வெற்றியைக் கொடுக்கும். முக்கிய புள்ளிகளைச் சந்தித்து எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றையும் செயல்படுத்தி பார்ப்பீர்கள்.

ஒன்பதாமிடத்தில் கேது சஞ்சரிக்கப் போவதால், ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கோவில் திருப்பணிகள் செய்யும் சூழ்நிலை உருவாகும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறை வேற்றிக் கொள்வீர்கள். பிரியங்கள் குறையாமல் பார்த்து கொள்வது நல்லது. உற்றார், உறவினர்களின் அனுசரிப்பும் இக்காலத்தில் தேவை.

உங்களுக்கு அனுகூலம் தரும் சர்ப்ப ஸ்தலங்களில் முறையாக சர்ப்பசாந்திகளைச் செய்தால், முன்னேற்றங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும்.

வக்ர சனியால் வளர்ச்சி ஏற்படுமா?

சித்திரை 1-ம் தேதி முதல் ஆனி 6-ம் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ம் தேதி முதல் பங்குனி 31-ம் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் சனி 6, 7-க்கு அதிபதியாக விளங்குகிறார். 6-க்கு அதிபதி வக்ரம் பெறு வது யோகம்தான். `கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்' என்பதற்கேற்ப எதிர் பாராத விதத்தில் சில நன்மைகள் ஏற்படும். எதிரிகள் விலகுவர். உதிரி வருமானங்கள் பெருகும். உத்யோகம், தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் கிடைத்து, ஊதிய உயர்வும், சலுகையும் பெறுவீர்கள். ஆரோக்யம் சீராகும். மருத்துவச் செலவு குறையும்.

ஏழுக்கு அதிபதியாகவும் சனி விளங்குவதால், குடும்பத்தில் சில குழப்பங்கள் உருவாக லாம். மூன்றாம் நபரின் பேச்சை கேட்டு, குடும்ப பிரச்சினைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதன் மூலமும் சில பிரச்சி னைகள் உருவாகலாம். எனவே வீடு சம்பந்தப்பட்ட காரியங்களில் முடிவெடுக்கும் போது, குடும்ப பெரியவர்களை கலந்தாலோசித்து செய்வதோடு, சனிக்குரிய சிறப்பு வழிபாட்டை யும் மேற்கொள்வது நல்லது.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!

ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று சூரிய பகவானை வழிபட்டு வருவது நல்லது. புகழ், கீர்த்தி மேலோங்கும். சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் வழிபாட்டையும், அதனருகில் உள்ள வைரவன்பட்டி வளரொளி நாதர், வடிவுடையம்மன், வைரவன் வழிபாட்டையும், அடுத்துள்ள கீழ்ச்சீவல்பட்டியில் உள்ள அருள் வழங்கும் பாடுவார் முத்தப்பர் வழிபாட்டையும் யோகபலம் பெற்ற நாளில் மேற்கொண்டால், யோகங்கள் அனைத்தும் வந்து சேரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நந்தன வருட ராசி பலன்கள்

Post by சிவா on Wed Apr 11, 2012 7:14 am


கன்னி

உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)


குருவின் பார்வை வந்தவுடன் கொடுக்கும் சுகங்கள் ஏராளம்!

உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உன்னத வாழ்வை அமைத்து கொள்ளும் கன்னி ராசி நேயர்களே!

வரப்போகும் நந்தன வருடம் வளர்ச்சியினை கூட்டுமா? தரப்போகும் யோகங்களை தடையின்றி தந்திடுமா? என்று சிந்தித்து கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ஆண்டு, குருப்பெயர்ச்சிக்கு பின்னால் கூடுதலான நற் பலன்களை வழங்கும் என்றே சொல்ல வேண்டும்.

புத்தாண்டு தொடங்கும் போது, எட்டிலே குரு சஞ்சரித்தாலும் 34 நாட்கள் கழித்த பின்னால், முன்னேற்றத்தின் முதல் படிக்கு செல்ல போகிறீர்கள்.

வருட தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் நீச்சம் பெற்றாலும், கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் என்பதால், நீச்ச புதன் நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைக்கும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தை கண்டு ஆச்சரியப்பட போகிறார்கள்.

ஜென்ம சனியின் ஆதிக்கம் இருப்பதால், எப்பொழுதும் மனக்குழப்பம் மட்டும் இருக்குமே தவிர, பணப் புழக்கத்திற்கு குறைவிருக்காது.

மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களின் இல்ல விழாக் களை முன் நின்று நடத்தி வைப்பீர்கள்.

செவ்வாய், சனி சேர்க்கை காலத்தில் சிறப்பு பரிகாரம் தேவை. மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமிது. வாகன மாற்றம், இடமாற்றங்கள், எதிரிகளின் தொல்லை களை எல்லாம் சந்திக்க நேரிடலாம். அந்த நேரத்தில் கை கொடுப்பதெல்லாம் ஆலய வழிபாடு ஒன்றுதான்.

உங்களுக்கு இந்த நந்தன ஆண்டு எப்படியிருக்கும் என்பதை பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கம் முதல் வைகாசி 3 வரை

லாபாதிபதி சந்திரனை குரு பார்த்து இந்த ஆண்டு தொடங்குகிறது. அது மட்டுமல்ல, 3, 8-க்கு அதிபதியான செவ்வாயையும் குரு பார்க்கிறது. எனவே, சிக்கல்கள் தீரும், சிரமங்கள் குறையும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பர். முக்கிய புள்ளிகளை சந்தித்து, முன்னேற்றங்களை வரவழைத்து கொள்வீர்கள்.

ஜென்ம சனி வக்ரம் பெறுவதால், திருநள்ளாறு வழிபாடும், சனிக்கவசப் பாராயணமும் தித்திக்கும் விதத்தில் உங்கள் வாழ்க்கையை அமைத்து கொடுக்கும்.

ஒளிமயமான எதிர்காலம் தரும் குருப்பெயர்ச்சி

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்று வர்ணிக்கப்படும் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்க போகிறார். அசுர குரு வீட்டில் தேவ குரு சஞ்சரித்தாலும், அதன் பார்வை உங்கள் ராசியில் முழுமையாக பதிவதால், உடல் நலமும் சீராகும். அது மட்டுமல்லாமல், 1, 3, 5 ஆகிய இடங் களிலும் பதிவாகிறது.

ஒன்பதில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 4, 7-க்கு அதிபதியாக விளங்குகிறார். தொழில் தொடங்க மூலதனம் பெற்றோர் வழியிலும், உற்றார், உறவினர்கள் வழியிலும் வந்து சேரும். எதை தொட்டாலும் தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டிருக்கிறதே என்ற கவலை இனி ஓயும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல் அகலும்.

குருவின் பார்வை சகோதர ஸ்தானத்தில் பதிவதால், உடன்பிறப்புகள் உற்சாகத்தோடு வந்திணைந்து, உதவிக்கரம் நீட்டுவர். எதையோ மனதில் நினைத்து கொண்டு, சரியாக பேசவில்லையே என்று நினைத்த சகோதரர்கள் எல்லாம், தானாகவே வந்து பேசி, தக்க ஆலோசனைகளையும் கூறுவர். பகைகளை உறவாக்கும் இந்த நேரத்தில் வழக்கு போட்டவர்கள் கூட வாபஸ் பெறுவர்.

குருவின் பார்வையால் புத்திர ஸ்தானம், பூர்வ-புண்ணிய ஸ்தானம் எல்லாம் புனிதமடை கின்றது என்பதால், சொத்து வாங்கும் யோகம் முதல் சுகபோகமான வாழ்க்கை நடத்த வீடு கட்டி குடியேறுவது முதல் ஒவ்வொன்றாக நடைபெறுவது கண்டு ஆச்சரியப் படுவீர்கள்.

ஆயினும், ஜென்மச்சனியின் ஆதிக்கம் உங்கள் ராசியில் அதிகமாகவே இருக்கிறது. எனவே, ஒரு சில காரியங்களை ஒரு முறைக்கு இரு முறை செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்.

செவ்வாய், சனி சேர்க்கை காலம்!

ஆனி 9-ந் தேதி முதல் ஆடி 29-ந் தேதி வரை உங்கள் ராசியிலேயே செவ்வாயும், சனியும் ஒன்று கூடுகிறார்கள். இந்த காலம் தான் உங்களுக்கு எச்சரிக்கை அதிகம் தேவைப்படும் காலமாகும். உடலாலும் தொல்லை, உள்ளத்தாலும் தொல்லை, உடன் இருப்பவர்களாலும் தொல்லை என்று ஒவ்வொரு நாளும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.

வாகனத்தில் செல்லும்போது கவனம் அதிகம் தேவை. பழைய வாகனத்தை மாற்ற நினைப்பவர்கள் மாற்றி கொள்வது நல்லது. மாற்ற இயலாதவர்கள் அதற்குரிய பரிகாரங்களை செய்து விட்டு, தொடர்ந்து வாகனங்களை வைத்து கொள்ளலாம்.

துயரங்களை போக்குமா துலாம் ராசி சனி!

ஆவணி 27-ந் தேதி முதல் துலாம் ராசிக்குள் உச்சம் பெறும் சனி உங்களுக்கு இரண்டாமிடத்தில் உச்சம் பெறுவதால், குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளிலும் ஆதாயம் கிடைக்கும். மாற்றினத்தவர்களும் கைகொடுத்து உதவுவர்.

வக்ர குரு வளர்ச்சியை கொடுக்குமா?

புரட்டாசி 26-ந் தேதி முதல் தை 24-ந் தேதி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியை பொறுத்தவரை 4, 7-க்கு அதிபதியாக குரு விளங்குவதால், வக்ர காலம் வளர்ச்சிக்குரிய காலமாக இருக்குமென்றே கருதலாம்.

குடும்ப பிரச்சினைகள் ஒவ்வொன்றாக நல்ல முடிவிற்கு வரும். கொடுக்கல்-வாங் கல்களில் லாபம் கிடைக்கும். அஞ்சல் வழி அனுகூலமும், அன்னிய தேச தொடர்பும் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். வாழ்க்கை துணை வழியே வரவு வந்து சேரும். இந்த காலத்தில் திசை மாறிய தென்முக கடவுள் வழிபாடு தித்திக்கும் விதத்தில் வாழ்க்கை பாதையை அமைத்து கொடுக்கும்.

பாம்பு கிரக பெயர்ச்சி பக்கபலமாக இருக்குமா?

கார்த்திகை 17-ந் தேதி துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்க போகிறார்கள். உங்கள் ராசியை பொறுத்த வரை இரண்டில் ராகுவும், எட்டில் கேதுவும் சஞ்சரிக் கிறார்கள்.

தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, தன வரவை தாராளமாக அள்ளிக் கொடுக்கும்.

அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் பலத்தால் ஆரோக்கியத்திற்கென்று ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலையை உருவாக்கலாம். தொழில் கூட்டாளிகளில் சில மாற்றங்களை செய்ய நேரிடும்.

தொல்லை தந்த எதிரிகளின் பலம் கூடும் இந்த நேரத்தில் நல்லவர்கள் யார்? பொல்லாத வர்கள் யார்? என்பதையும் இனம் கண்டு கொண்டு செயல்படுவது நல்லது. கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

உங்களுக்கு அனுகூலம் தரும் சர்ப்ப ஸ்தலத்தை தேர்ந்தெடுத்து, சர்ப்ப சாந்தியை முறையாக செய்தால் அற்புதமான வாழ்க்கை அமையும்.

வக்ர சனியால் வளர்ச்சி ஏற்படுமா?

சித்திரை 1-ந் தேதி முதல் ஆனி 6-ந் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ந் தேதி முதல் பங்குனி 31-ந் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் சனி 5, 6-க்கு அதிபதியாக விளங்குகிறார். எனவே, பூர்வீக சொத்துக்கள் விற்பனையில் திடீர் மாற்றங்கள் வந்து சேரலாம். பிள்ளைகளின் கல்யாண முயற்சிகள் கை நழுவி செல்லலாம். பங்காளி பகைகளை வளர்த்து கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது. பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, கடல் தாண்டும் முயற்சிக்காகவோ, நீங்கள் நிறைய தொகையை செலவிட்டும் காரியம் கை கூடாமல் தாமதத்தின் பிடியில் சிக்கி தவிக்கலாம்.

அதே நேரத்தில் ஆறுக்கு அதிபதியாகவும் சனி விளங்குவதால், உத்யோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் வந்து சேரலாம். விருப்ப ஓய்வு பெற நினைப்பவர்களுக்கு கணிசமான தொகை கைக்கு வந்து சேரும். இந்த காலத்தில் சனி ப்ரீதி செய்வது நல்லது.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!

புதன்கிழமை தோறும் விஷ்ணுவையும், இலக்குமியையும் வழிபட்டு வாருங்கள். அஷ்ட லெட்சுமி கவசத்தை வெள்ளிக்கிழமை தோறும் இல்லத்தில் படித்து, பஞ்சமுக விளக்கேற்றி, வழிபாடு செய்தால் செல்வநிலை உயரும். சிறப்பு வழிபாடாக, சிவகங்கை மாவட்டம் கீழச்சீவல்பட்டியில் உள்ள கூடல் அழகிய சுந்தரராஜ பெருமாளையும், தாயாரையும் அங்குள்ள ராமபிரான், சீதாப்பிராட்டியையும், ஜெயஅனுமானையும் யோக பலம் பெற்ற நாளில் வழிபட்டு, யோகங்களை வரவழைத்து கொள்ளுங்கள்.

மங்கையர்களுக்கான மகத்தான பலன்கள்!

நந்தன வருடம் கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு குடும்ப சுமை கூடும். கொடுக்கல்-வாங்கல்களில் ஏமாற்றங்களை சந்திக்காதிருக்க விழிப்புணர்ச்சி தேவை. ஜென்ம சனியின் ஆதிக்கம் இருப்பதால், எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வதுதான் நல்லது. உங்கள் ராசியில் சனியும், செவ்வாயும் கூடும் நேரத்தில், அதாவது ஆனி 9 முதல் ஆடி 29 வரை மிக மிக விழிப்புணர்ச்சி தேவை. ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்படலாம். அடுத்தவர்களாலும் பிரச்சினைகள் உருவாகும். உறவினர் பகை அகலவும், உடனிருப்பவர்களால் ஒத்துழைப்பு கிடைக்கவும் சுய ஜாதக ரீதியான பரிகாரங் களை தேர்ந்தெடுத்து செய்வதுதான் நல்லது. ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு பெண் குழந்தைகளின் பூப்புனித நீராட்டு விழாக்களும், உடன் பிறப்புகள் வழியில் விவாக பேச்சுக்களும் வந்து சேரலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நந்தன வருட ராசி பலன்கள்

Post by சிவா on Wed Apr 11, 2012 7:17 am


துலாம்

சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)


விரயச்சனியின் ஆதிக்கம் வீடு மனைகளை சேர வைக்கும்!

அறிமுகப்படுத்தாமலேயே மற்றவர்களிடம் தாங்களாகவே அறிமுகம் செய்து கொண்டு, அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் துலாம் ராசி நேயர்களே!

`கர' வருடம் முடிந்து `நந்தன' வருடம் தொடங்க போகிறது. குருவின் பார்வையோடும், தனாதிபதியின் லாப ஸ்தான சஞ்சாரத்தோடும், விரயச்சனியின் வக்ரத்தோடும், அஷ்டமத்து கேதுவின் பலத்தோடும் ஆண்டு தொடங்குவது நன்மையை கொடுக்குமா? அல்லது நினைத்தது ஒன்று, நடப்பது ஒன்றாக மாறுமா? உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்? உற்சாகத்தோடு பணிபுரிய இயலுமா? என்பதை பற்றி எல்லாம் உங்கள் சிந்தனையோட்டம் ஓடிக்கொண்டு இருக்கும்.

ஏழரை சனியில் விரயச்சனி விலகியது என்று நினைத்த உங்களுக்கு, அது வருட தொடக்கத்தில் மீண்டும் வந்து விட்டது. எனவே, எச்சரிக்கையோடு செயல்படுவதன் மூலமே எதிர்கால சேமிப்பை காப்பாற்றி வைத்துக்கொள்ள இயலும்.

என்ன இருந்தாலும், விரயச்சனியின் ஆதிக்கம் நடைபெறும் போது, அதுவும் வக்ர நிலையில் இருக்கும் போது, மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல் ஆரோக்கியத்தில் தொல்லைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கலாம்.

ஒரு சிலருக்கு கடன் சுமையும் கூடலாம். திடீர் இடமாற்றங்கள், ஊர் மாற்றம், இலாகா மாற்றம் வருவது தவிர்க்க முடியாததாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும் இந்த நேரத்தில் இதை செய்வோமா? அதை செய்வோமா? என்ற இரட்டித்த சிந்தனை உருவாகும்.

இது போன்ற நேரங்களில் சான்றோர்களின் முறையான ஆலோசனையும், சனி பகவான் வழிபாடும் உங்களுக்கு கைகொடுக்கும். சனி, செவ்வாய் சேர்க்கை ஏற்படும் 51 நாட்களும் மிகவும் கவனமுடன் செயல்பட்டால் தான், அன்றாட வாழ்க்கையை நன்றாக அமைத்து கொள்ள இயலும்.

உங்களுக்கு இந்த நந்தன புத்தாண்டு எப்படி இருக்கும்? என்பதை பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கம் முதல் வைகாசி 3 வரை!

உங்கள் ராசிநாதன் சுக்ரன் எட்டில் மறைந்து இருக்கும் நிலையில் ஆண்டு தொடங்கு கிறது. அதோடு கேதுவும், இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே, எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது. உடன்பிறப்புகளின் அலட்சியம் உங்கள் மனதை நோகடிக்கும்.

விரயச்சனியின் சஞ்சாரத்தால் விரயங்கள் கட்டுக்கடங்காமல் போகலாம். இடமாற்றம், ஊர் மாற்றம் போன்றவைகள் இதயம் மகிழும் விதத்தில் வந்து சேரும்.

குருப்பெயர்ச்சியில் கவனம் தேவை

நவக்கிரகங்களில் நற்பலன்களை பார்வை பலத்தால் கொடுப்பவர் குரு என்றாலும், உங்கள் ராசியை பொறுத்தவரை ராசிநாதன் சுக்ரனுக்கு அவர் பகைவன் அல்லவா? எனவே, இருக்குமிடத்திற்கு ஓரளவு மட்டுமே பலன் கொடுப்பார். பார்க்குமிடத்திற்கு கொஞ்சம் கூடுதலான பலனை கொடுப்பார்.

எட்டில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே, பதியும் இடங்கள் பலன் கொடுத்தாலும் இருக்குமிடத்திற்கும் பலன் பார்க்க வேண்டு மல்லவா? உங்கள் ராசிக்கு 3, 6-க்கு அதிபதி குருபகவான்.

எட்டில் குரு வந்தால், இடமாற்றம் வந்து சேரும். திட்டங்கள் மாறி விடும். திருப்பங்கள் பலவும் வரும் என்று சொல்வார்கள். எனவே, நீங்கள் தீட்டிய திட்டங்கள் எல்லாம் திசைமாறி செல்லலாம். சான்றோர்களும், குடும்ப பெரியவர்களும் காட்டிய வழியில் செல்லாவிட்டால், கவலைகள் வந்து சேரும்.

அஷ்டமத்து குருவிற்கு பரிகாரமாக வியாழன்தோறும் விரதமிருந்து, குரு ஷேத்திரங் களுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது. சுய ஜாதகத்தில் வியாழ திசை, வியாழ புத்தி நடப்பவர்கள், வியாழக்கிழமை பிறந்தவர்கள் ஆகியோர் இந்த நந்தன ஆண்டு நலம் பெற சிறப்பு பரிகாரங்களை தேர்ந் தெடுத்து செய்வதுதான் நல்லது.

குருவின் பார்வை பதியும் 2, 4, 12 ஆகிய இடங்களின் அடிப்படையில் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும்.

வீடு, இடம் விற்பதன் மூலம் வரும் தொகையால் புதிய வீடுகள் வாங்கும் வாய்ப்புகள் கிட்டும். தாய் வழி ஆதரவு கூடும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை யும் வாங்கி மகிழ்வீர்கள்.

செவ்வாய்-சனி சேர்க்கை காலம்

ஆனி 9-ந் தேதி முதல் ஆடி 29-ந் தேதி வரை உங்கள் ராசிக்கு 12-ல் செவ்வாயும், சனியும் ஒன்று கூடுகிறார்கள். விரய ஸ்தானத்தில் தனாதிபதி சனியோடு இணையும் போது வீண் விரயங்கள் அதிகரிக்கும். குடும்ப செலவுகள் கூடும். நண்பர்களை நம்பி கொடுத்த தொகை வந்து சேருமா என்பது சந்தேகம் தான். வாகனத்தால் தொல்லைகள் உருவாகலாம். தேக நலன் கருதி ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உருவாகும்.

எள் தீபம் ஏற்றி காக வாகனத்தானை வழிபடுவதோடு, அன்னதான வைபவங்களிலும் கலந்து கொண்டால் எண்ணங்களில் குழப்பங்கள் ஏற்படாது.

துயரங்களை போக்குமா துலாம் ரசி சனி!

ஆவணி 27-ந் தேதி உங்கள் ராசியிலேயே சனி உச்சம் பெற போகிறார். விரயச்சனியை காட்டிலும், ஜென்மச் சனியின் ஆதிக்கம் ஓரளவு நன்மையை தரும்.

ஆவணி 27-ந் தேதிக்கு மேல் பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்குவீர்கள். உறவினர் பகை மாறும். உங்களை விட்டு விலகியவர்கள் மீண்டும் வந்து சேரலாம்.

வக்ர குரு வளர்ச்சியை கொடுக்குமா?

புரட்டாசி 26-ந் தேதி முதல் தை 24-ந் தேதி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியை பொறுத்தவரை 3, 6-க்கு அதிபதியான குருபகவான் வக்ரம் பெறும்போது நன்மையையே கொடுப்பார். 6-க்கு அதிபதி வக்ரம் பெற்றால் `கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

திடீர், திடீரென நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். கடமைகளை சரிவர செய்யும் சூழ்நிலை உருவாகும் என்றாலும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் இடமாற்றங் கள் ஏற்படலாம். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகளும், பொறுப்புகளும் வந்து சேரும்.

பாம்பு கிரக பெயர்ச்சி பக்கபலமாக இருக்குமா?

கார்த்திகை 17-ந் தேதி ஜென்ம ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்க போகிறார்கள். உங்கள் ராசியை பொறுத்தவரை ஜென்ம ராகு பயணங்களை அதிகரித் தாலும், பொருளாதாரத்தில் நிறைவை கொடுப்பார். இதுவரை நடைபெறாத காரியங்கள் துரிதமாக நடக்கும்.

ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியிலும் ஆதாயம் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

சப்தம ஸ்தானத்தில் கேது பலம் பெறுவதால் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்களை ஒரு சிலர் ஏற்க நேரிடலாம். பழைய சொத்துக்களை விற்று விட்டு புதிய சொத்துக்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

இந்த காலத்தில் சர்ப்ப சாந்திகளை முறையாக செய்வது நல்லது.

வக்ர சனியால் வளர்ச்சி ஏற்படுமா?


சித்திரை 1-ந் தேதி முதல் ஆனி 6-ந் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ந் தேதி முதல் பங்குனி 31-ந் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் சனி 4, 5-க்கு அதிபதியாக விளங்குகிறார். எனவே, அதன் வக்ரம் பலவித மாற்றங்களை உங்களுக்கு கொடுக்க போகிறது. குறிப்பாக குடும்ப ஸ்தானம், புத்திர ஸ்தானம் ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்கும் கிரகம் வக்ரமாகும் போது திருப்தி யான பலனை கொடுக்காது. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலை தொல்லைகளை கொடுக்கலாம். பிள்ளைகள் வழியில் வந்த திருமண பேச்சுகள் விட்டு போகலாம்.

இந்த வக்ர காலத்தில் பிள்ளைகளின் திருமண பேச்சுகள் முடிவானாலும், அவை ஒற்றுமை குறைச்சலை உருவாக்கி விடலாம். எனவே வீடு கட்டுவது முதல் விவாக பேச்சுகள் வரை வக்ர இயக்கம் முடிந்த பிறகு முடிவெடுப்பதே நல்லது. ஆவணிக்கு மேல் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். ஒற்றுமை பலப்படவும், உள்ளத்தில் அமைதி ஏற்படவும் சனி ப்ரீதி செய்வது நல்லது.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!

வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். யோக பலம் பெற்ற நாளில் காரைக்குடி அருகில் உள்ள மாத்தூருக்கு சென்று, அங்குள்ள ஐநூற்றீஸ்வரர், பெரிய நாயகி அம்மன், மாப்பிள்ளை நந்தி மற்றும் மகிழ மரத்தடி முனீஸ்வரரையும் வழிபட்டு வாருங்கள். ஆலய வழிபாட்டின் மூலம் ஆனந்தத்தை வரவழைத்து கொள்ளலாம்.

மங்கையர்களுக்கான மகத்தான பலன்கள்!

நந்தன வருடம் துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு தொடக்கத்திலேயே விரயச்சனியின் வக்ரமும், வைகாசிக்கு மேல் அஷ்டமத்து குருவும் ஆதிக்கம் செலுத்துவதால், கொஞ்சம் பொறுமையோடு செயல்படுவது நல்லது. முன்கோபம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை யாக இருக்கும். ஆவணி 27-க்கு மேல் இல்லத்தில் சுபகாரிய பேச்சுகள் கைகூடி வரு வதற்கான அறிகுறிகள் தோன்றும். இனம்புரியாத மனக்குழப்பம் அகல இறை வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுங்கள்.

சான்றோர்களின் ஆலோசனையும், தக்க விதத்தில் செய்யும் பரிகாரமும், காண்பவர்கள் வியக்கும் விதத்தில் உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். சனி, செவ்வாய் சேர்க்கை காலத்தில் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு அகலும். வாங்கிய சொத்தை வைத்து கொள்வதா, விற்பதா என்ற போராட்டம் ஏற்படும். கோச்சாரத்து கிரகங்கள் வித்தியாசமாக சஞ்சரிப்பதால் சுயஜாதக ரீதியாக ஆராய்ந்து பார்த்து எதற்கும் முடிவெடுப்பது நல்லது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நந்தன வருட ராசி பலன்கள்

Post by சிவா on Wed Apr 11, 2012 7:19 am


விருச்சிகம்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)


ரிஷப குருவின் பார்வையினால் நினைத்தது எல்லாம் நிறைவேறும்!

பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டும் விதத்தில், வார்த்தைகளை வீசி, வருபவர்களை எல்லாம் வசமாக்கும் விருச்சிக ராசி நேயர்களே!

`கர' வருடம் முடிந்து `நந்தன' ஆண்டு தொடங்குகிறது. உங்கள் சிந்தனைகள் அனைத்தும் செயலாகும் விதத்தில் வருடத் தொடக்கமே வசந்தமாக இருக்கிறது. ஒன்பதுக்கு அதிபதி சந்திரன் 2-ல் உலா வர, அதைத் தன பஞ்சமாதிபதி குரு பார்ப்பதால் குருச்சந்திர யோகம் செயல்பட்டு ஆண்டு தொடங்குகிறது. எனவே, பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும்.

வருடத் தொடக்கத்தில் லாப ஸ்தானத்தில் ராசிநாதன் செவ்வாய், சப்தம ஸ்தானத்தில் சுக்ரன், இப்படி அற்புதமான கிரக அமைப்புகளின் ஆதிக்கம் இருப்பதால் வாகன யோகம் முதல் வளம் தரும் யோகம் வரை அனைத்தும் கிட்டும். தொழிலில் லாபம் குவியும்.

உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உன்னத முன்னேற்றமும், அதிகாரி களால் அனுகூலமும் கிடைக்கும். ஒரு சிலர் உத்யோகத்தில் இருந்தபடியே மனைவி, மக்கள் பெயரில் தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் உருவாகும்.

புகழ், கீர்த்தி, செல்வாக்கு, பட்டம், பதவி ஆகியவை தானாகவே வந்து சேரும். சனி, செவ்வாய் சேர்க்கை காலத்தில் மட்டும் விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது.

உங்கள் சுய ஜாதகத்தில் பாக்யாதிபதியின் பாதசார பலம் அறிந்து, நவாம்ச நிலையும் அறிந்து யோக பலம் பெற்ற நாளில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டால் வளர்ச்சி மீது வளர்ச்சி ஏற்படும்.

உங்களுக்கு இந்த நந்தன புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கம் முதல் வைகாசி 3 வரை!

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் செயல் ஸ்தானத்தில் சஞ்சரிக் கிறார். எனவே, எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். இல்லம் தேடி இனிய செய்தி வந்து கொண்டேயிருக்கும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள்.

ஏழரைச் சனி மாறி, லாப ஸ்தானம் பலப்படுகிறது. எனவே, பொருளாதார நிலை உயரும். புகழ் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைப்பார்கள்.

தேவைகளைப் பூர்த்தி செய்யும் குருப்பெயர்ச்சி

நவக்கிரகங்களில் `சுபகிரகம்' என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். உங்கள் ராசியைப் பொறுத்தவரை அவர் தனாதிபதியாகவும், பஞ்சமாதிபதியாகவும் விளங்குகிறார். அவர் உங்கள் ராசியை நேர்பார்வையாகப் பார்க்கும்பொழுது, நிகழ்காலத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.

இமயம் போல் புகழ் பெறவும், இதயம் மகிழும் விதம் வாழ்க்கை நடத்தவும், வருமானத்தை குவிக்கவும், வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கவும் ஏழில் சஞ்சரிக்கும் குருபகவான் இனிய வாய்ப்புகளை வழங்கப்போகிறார். குடும்ப ஒற்றுமை கூடும். எதிரிகள் மனம் மாறி உங்கள் இனிய பணிக்கு ஒத்துழைப்புச் செய்வர்.

உறவினர்களின் ஆதரவோடு உயர்ந்த நிலையை அடையப்போகிறீர்கள். பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதோடு, 3, 11 ஆகிய இடங்களிலும் பதிவாகிறது. குருவின் பார்வை 1, 3, 11 ஆகிய இடங்களில் பதியும் பொழுது, தேக ஆரோக்கியம் சீராகும்.

வழக்குகளில் வெற்றி கிட்டும். வாரிசுகள் பிறக்கவில்லையே என்ற கவலை அகலும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடை பெறும். லாப ஸ்தானம் பலப்படுவதால் தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் லாபம் இருமடங்காக வந்து சேரும். பூமி விற்பனையால் ஆதாயம் கிட்டும். சாமி துணையோடு சகல காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள்.

இக்காலத்தில் குரு கவசம் பாடி, குரு வழிபாடு செய்வதோடு, சனிக்கவசம் பாடி லாப ஸ்தான சனியையும் பலப்படுத்தும் விதத்தில் சனீஸ்வர வழிபாட்டையும் மேற்கொண்டால், சகல யோகங்களும் வந்து சேரும். அந்நிய தேச வாய்ப்புகளும் எண்ணியபடியே உருவாகும்.

செவ்வாய், சனி சேர்க்கை காலம்!

ஆனி 9-ம் தேதி முதல் ஆடி 29-ம் தேதி வரை உங்கள் ராசிக்கு 11-மிடத்தில் செவ்வாயும், சனியும் ஒன்று கூடுகிறார்கள். ராசிநாதனும், சகாய ஸ்தானாதிபதியும் லாப ஸ்தானத்தில் ஒன்று சேருவதால், வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வங்கிச் சேமிப்பு உயரும். அலைபாயும் மனதிற்கு அமைதி கிடைக்கும் விதத்தில் உல்லாசப் பயணங்களை மேற்கொள்வீர்கள். ஊர்மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். குடும்பச் செலவு கூடும் இந்த நேரத்தில் அன்ன தானத்திற்கும், ஆன்மிகப் பணிக்கும் செலவிடுவது நல்லது.

தொடர்புகளை பலப்படுத்துமா? துலாம் ராசிச்சனி!

ஆவணி 27-ம் தேதி உங்கள் ராசிக்கு 12-மிடத்தில் சனி உச்சம் பெறப்போகிறார். எனவே, வரவைக் காட்டிலும், செலவு கூடும். வருமானம் அதிகரிக்க என்ன வழி என்று யோசிப்பீர்கள்.

பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்கவும், பெரிய தொழில் கள் செய்ய அரசு வழியில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கவும், அந்த உச்ச சனி வழிவகுத்துக் கொடுக்கும். நீண்டதூரப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்து, நீடித்த நாட்கள் ஆகியதே என்று கவலைப்பட்டவர்களுக்கு கடல் பயணவாய்ப்புகள் கைகூடும்.

வக்ர குரு கொடுக்கும் பலன் என்ன?

புரட்டாசி 26-ம் தேதி முதல் தை 24-ம் தேதி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறப்போகிறார். உங்கள் ராசியைப் பொறுத்த வரை 2, 5-க்கு அதிபதியான குரு பகவான் வக்ரம் பெறும் பொழுது, தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. தொழிலில் உள்ள கூட்டாளிகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்.

கோபம், படபடப்பு ஆகியவற்றை குறைத்துக் கொண்டு அன்பு மேலோங்கி மற்றவர்களோடு பேசுவதன் மூலம் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் வளர்ப்பில் கொஞ்சம் கவனம் தேவை. அவர்கள் உங்கள் சொற்படி கேட்டு நடக்கும் விதத்தில், அறிவுரை கூறுவது நல்லது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.

பாம்புக் கிரகப் பெயர்ச்சி பக்கபலமாக இருக்குமா?

கார்த்திகை 17-ம் தேதி துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை பனிரெண்டாமிடத்து ராகுவும், ஆறாமிடத் தில் சஞ்சரிக்கும் கேதுவும் மிகுந்த நன்மைகளை வழங்கப் போகிறார்கள்.

பாம்பு கிரகங்கள் மறைவிடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, நிறைவான பலன்களை வழங்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.

ஆறில் கேது சஞ்சரிப்பதால், உத்தியோகத்தில் இருப்பவர்கள் வி.ஆர்.எஸ். பெற்றுக் கொண்டு, விரும்பிய தொழிலைச் செய்ய முன் வருவர். கூட்டாளிகள் தானாகவே வந்திணைவர். கடன் சுமை குறையும். அண்டை, அயலாருடன் ஏற்பட்ட பிரச்சினைகள், நல்ல முடிவிற்கு வரும்.

இக்காலத்தில் சர்ப்ப சாந்திகளை முறையாகச் செய்து சந்தோஷங்களை வரவழைத்துக் கொள்ளுங்கள்.

வக்ர சனியால் வளர்ச்சி ஏற்படுமா?

சித்திரை 1-ம் தேதி முதல் ஆணி 6-ம் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ம் தேதி முதல் பங்குனி 31-ம் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் 3, 4-க்கு அதிபதியாக விளங்குகிறார். எனவே, அதன் வக்ரம் நன்மையÛச் செய்யும் என்றே சொல்லலாம். மூன்றுக்கு அதிபதி வக்ரம் பெறும் பொழுது, முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முடிவு எடுத்த சில காரியங்களில் மாற்றம் செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.

நான்காமிடத்திற்கு அதிபதியாகவும் சனி விளங்குவதால், தாய்வழி உறவினர்களை அனுசரித்து செல்வது தகுந்த பலனைக் கொடுக்கும். வீடு கட்டும் முயற்சி அல்லது பழுது பார்க்கும் முயற்சிக்காக செலவிடுவீர்கள். ஒரு சொத்தை விற்கும் பொழுது, மற்றொரு சொத்தை உடனடியாக வாங்கி விடுவதுதான் நல்லது.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!

செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று, முருகப் பெருமானை வழிபட்டு வருவது நல்லது. சிறப்பு வழிபாடாக, சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டிக்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று, அங்குள்ள வைரவர், வளரொளிநாதர், வடிவுடை அம்மனை வழிபட்டு, வருங்காலத்தை நலமாக்கிக் கொள்ளுங்கள். பவுர்ணமி கிரிவலத்தில் கலந்து கொள்வதன் மூலமும், பல மடங்கு பலன்களை நீங்கள் வரவழைத்துக் கொள்ளலாம்.

மங்கையர்களுக்கான மகத்தான பலன்கள்!

நந்தன வருடம் விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு, தனவரவு தாராளமாக வந்து சேரும். பணப்புழக்கம் அதிகரிப்பதால், ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். முன்பு உங்கள் பெயரில் வாங்கிய இடங்களில், இப்பொழுது கடைகளும், காம்ப்ளக்ஸ்களும் கட்டி வாடகைக்கு விடலாமா? என்று சிந்திப்பீர்கள். குருப்பெயர்ச்சிக்கு பின்னால், குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பெண் குழந்தைகளின் சுபச் சடங்குகள் முதல் பெற்றோர்களின் மணிவிழாக்கள் வரை நடத்திப் பார்க்க முன்வருவீர்கள். சனி, செவ்வாய் இணையும் நேரத்தில் மட்டும் குடும்பச் சுமை கூடும். ராகு, கேது பெயர்ச்சிக்கு பின்னால், நல்ல வாய்ப்புகளும், அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் வந்து சேரும். சுய ஜாதக ரீதியாக தெசாபுத்திக் கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நந்தன வருட ராசி பலன்கள்

Post by சிவா on Wed Apr 11, 2012 7:21 am


தனுசு

மூலம், பூராடம், உத்ராடம், 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்:

யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே உள்ளவர்களுக்கும்)


பாம்பு கிரக பெயர்ச்சிக்குப் பிறகு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும்!

வாதம் செய்வதில் திறமைசாலிகளாக இருந்தாலும், வாய்ப்புகள் வரும் பொழுது, சாமர்த்தியமாக அதை உபயோகப்படுத்திக் கொள்ளும் தனுசு ராசி நேயர்களே!

`கர' வருடம் முடிந்து `நந்தன' வருடம் தொடங்குகிறது. வருடத் தொடக்கமே உங்கள் ராசியில்தான் தொடங்குகிறது. அதுமட்டுமல்ல, குரு உங்கள் ராசியைப் பார்த்து, தொடங் கும் இந்தாண்டு, குதூகுலம் தரும் ஆண்டாகவே அமையப்போகிறது.

சனி பத்தில் சஞ்சரித்து, தொழில் வளர்ச்சியை மேலோங்கச் செய்யப் போகிறார். தொழில் மாற்றச்சிந்தனைகள் அதிகரிக்கும்.

சனி, செவ்வாய் சேர்க்கை காலத்தில் மட்டும் எதிரிகளிடம் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. வீண் பழிகளையும், வேற்று மனிதர் களால் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடலாம்.

இருப்பினும், குரு பலம் உங்களுக்கு கூடுதலாக இருப்பதால், தெய்வ தரிசனங்களும், சிறப்பு பரிகாரங்களும் வையகத்தில் வரும் துயரங்களைப் போக்கும். மனக்கவலையை மாற்றும்.

சர்ப்ப சாந்திப் பரிகாரங்களும், சண்முகநாதர் வழிபாடும், வைரவர் வழிபாடும், நந்தீஸ்வரர் வழிபாடும் உங்களுக்கு நல்ல பலன்களை வரவழைத்துக் கொடுக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் எதிரிகள் விலகுவர். மறைமுக எதிர்ப்புகளுக்குப் பரிகாரமாக திசைமாறிய தென்முகக்கடவுளை வழிபாடு செய்யுங்கள்.

தெய்வ பக்தியும், தேச பக்தியும் மிக்கவர்கள் நீங்கள்!

நாணயம், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக விளங்குவீர்கள். ஆலோசனை சொல்வ தில் கைதேர்ந்தவர்களாக இருப்பீர்கள். சகல கலைகளையும் அறிந்திருந்தாலும் பார்ப்பதற்கு சாந்த சொரூபியாகத் தோற்றமளிப்பீர்கள்.

தேசபக்தியும் உங்களிடம் உண்டு. தெய்வபக்தியும் உங்களிடம் உண்டு. ஆசைப்பட்டதை அடையாவிட்டால் கோபம் உடனே வந்துவிடும். ரகசியங்களைக் காப்பாற்றுவதில் வல்லவர்களாக விளங்குவீர்கள்.

உங்களுக்கு இந்த நந்தனப் புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கம் முதல் வைகாசி 3 வரை

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே குருச்சந்திர யோகம் செயல்படுகிறது. வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வளர்ச்சி கூடும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். பூமி சேர்க்கை அதிகரிக்கும்.

பாம்பு கிரகங்களின் ஆதிக்கத்தின்படி பயணங்கள் அதிகமாகும். பொதுவாக நண்பர்களின் நல் ஆதரவோடு முன்னேற்றம் காணும் நேரமிது.

சகட யோகம் தரும் குருப்பெயர்ச்சி

நவக்கிரகங்களில் நல்ல பலனைக் கொடுப்பவர் குரு என்று சொல்வார்கள். அவர் உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதனாகவும், 4-க்கு அதிபதியாகவும் விளங்கு கிறார். அவர் வைகாசி மாதம் 6-ம் தேதி பெயர்ச்சியாகி சகடயோகத்தை வழங்கப் போகிறார்.

எனவே ஒரு தொகை செலவழிந்த பிறகு அடுத்த தொகை வந்து சேரும். ராசிநாதன் 6-ல் சஞ்சரிக்கும் பொழுது இடமாற்றம், ஊர் மாற்றம், பதவி வாய்ப்புகள், புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.

`தேவ குரு 6-ல் வந்தால் தேவைகள் பூர்த்தியாகும்' என்பார்கள். ஆவல்கள் தீரவேண்டின் அனுசரிப்பும் உங்களுக்குத்தேவை. 4-க்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால் பெற்றோர் வழிப் பகைகளும் உருவாகலாம். சொத்துக்கள் வாங்க, விற்க உகந்த நேரமாக இது அமையும்.

6-ல் சஞ்சரிக்கும் குருவிற்கு பரிகாரமாக வியாழன் தோறும் குரு வழிபாட்டை மேற்கொள்வதோடு, இல்லத்திலும் குரு கவசம்பாடி, குரு வழிபாடு செய்யலாம். சுய ஜாதகத்தில் வியாழ திசை, வியாழ புத்தி நடப்பவர்கள், ரிஷபம் அல்லது துலாம் ராசியில் குரு இருப்பவர்கள் திசை மாறிய தென்முகக் கடவுளை வழிபடுவது நல்லது. குருவின் அருட்பார்வை உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது.

அதன் பார்வை பலத்தால் குடும்ப ஸ்தானம் பலப்படுகிறது. எனவே திருமணத்தடை அகலும். தித்திக்கும் வாழ்க்கை அமையும். வருமானப் பெருக்கம் ஏற்படும். வசதி வாய்ப்புகள் பெருகும். தொழில் ஸ்தானம் புனித மடைவதால், தொழில்வளம் மேலோங்கும். குருவின் பார்வை சாதாரண மனிதர்களைக் கூட சக்கரவர்த்தியாக மாற்றிவிடும். அரி யணை ஏறும் யோகம் முதல் அன்றாட வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொள்ளும் யோகம் வரை அனைத்தையும் கொடுப்பது குருவின் கையில்தான் இருக்கிறது. எனவே உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் பயணங்களால் பலன் களும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

செவ்வாய்-சனி சேர்க்கை காலம்!

ஆனி 9-ம் தேதி முதல் ஆடி 29-ம் தேதி வரை உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் செவ்வாயும் சனியும் ஒன்று கூடுகிறார்கள். இக்காலத்தில் திடீர் திருப்பங்கள் பலவும் ஏற்படும். தொழிலில் இருப்பவர்களுக்குத் தொழில் மாற்றம், உத்யோகத்தில் இருப்பவர் களுக்கு உத்யோக மாற்றம், பதவியில் இருப்பவர்களுக்குப் பதவி மாற்றம் ஆகியவை ஏற்படலாம்.

பிள்ளைகளால் பிரச்சினைகளைச் சந்திக்கின்ற நேரமிது. மனக்குழப்பங்கள் ஏற்படும் பொழுதெல்லாம் அருகில் இருக்கும் ஆன்மிகப் பெரியவர் கள், சான்றோர்களின் ஆலோசனை களைக் கேட்டு நடப்பது நல்லது.

துயரங்களைப் போக்குமா துலாம் ராசிச்சனி!

ஆவணி 27-ம் தேதி உங்கள் ராசிக்கு பதினோராமிடமான லாப ஸ்தானத்தில் சனி உச்சம் பெறப் போகிறார். இது மிகுந்த யோகம் தரும் நேரமாகும். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும்.

குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிட்டும்.

வக்ர குரு வளர்ச்சியைக் கொடுக்குமா?

புரட்டாசி 26-ம் தேதி முதல் தை 24-ம் தேதி வரை ரிஷபத்தில் குரு வக்ரம் பெறுகிறார். இக்காலம் உங்களுக்கு ஓர் பொற்காலமாகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். விழிப்புணர்ச்சி இல்லாமல் செயல்பட்டால் கூட விரும்பும் நல்ல தகவல்கள் வந்து கொண்டேயிருக்கும். அரசியல் துறையில் ஈடுபட்டவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். எதிரிகள் விலகி சரணடைவர்.

உத்யோகத்தில் இருப்பவர்கள் ஊதிய உயர்வோடு இடமாற்றம் காண்பர். மஞ்சள் ஆடை அணிவித்து, முல்லைப்பூமாலை சூட்டி குரு பகவானை வழிபட்டால் எல்லையில்லாத நற்பலன்கள் கிட்டும்.

பாம்புக் கிரகப் பெயர்ச்சி பக்கபலமாக இருக்குமா?

கார்த்திகை 17-ம் தேதி 11-ம் இடத்தில் ராகுவும், 5-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ராகு பலத்தால் பொருளாதார நிலை உயரும். போற்றுகிற செல்வாக்கு மேலோங்கும். வீடு கட்டும் வாய்ப்பு முதல், நாடு விட்டு நாடு செல்லும் வாய்ப்பு வரைநடைபெறும்.

5-ல் சஞ்சரிக்கும் கேது, பிள்ளைகள் வழியில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். அவர்களின் கல்வி நலன் கருதி எடுத்த செயல் வெற்றி பெறும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.

இக்காலத்தில் சர்ப்ப சாந்திகளை முறையாகச் செய்தால் சந்தோஷங்களைச் சந்திக்கலாம்.

வக்ர சனியால் வளர்ச்சி ஏற்படுமா?

சித்திரை 1-ம் தேதி ஆனி 6-ம் தேதி வரையிலும் பிறகு மாசி 4-ம் தேதி முதல் பங்குனி 31-ம் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் சனி 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்குவதால் அதன் வக்ர இயக்க காலத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவைப்படும். பணப்பற்றாக்குறை அதிகரிக்கலாம். எப்படி, எப்படியெல்லாம் தொழிலைப் பெருக்கினால் தொகை வந்து சேரும் என்று சிந்திப்பீர்கள். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்குத் தொல்லைகள் உருவாகலாம். வந்த வரன்கள் வாயிலோடு நின்றுவிடலாம்.

சனி மூன்றாமிடத்திற்கு அதிபதி என்பதால் தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக் கும். உடன் பிறப்புகள் உங்களை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும் என்பது சந்தேகம்தான். ஆவணி மாதத்திற்கு மேல்தான் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். அந்த நேரத்தில் திருநள்ளாறு, பெருச்சிக் கோவில், திருக்கொள்ளிக்காடு போன்ற சிறப்பு ஸ்தலங் களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!

வியாழக்கிழமை தோறும் குரு தெட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாற சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள இரணியூர் ஆட்கொண்டநாதர்- சிவபுரத்தேவியை வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.

மங்கையர்களுக்கான மகத்தான பலன்கள்!

நந்தன வருடம் தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும் விதத் திலேயே கிரகங்களின் சஞ்சாரம் இருக்கிறது. கணவன்-மனைவிக்குள் உறவு அதிகரிக் கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வைகாசிக்கு மேல் தங்கம், வெள்ளி ஆகியவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்.

சனி, செவ்வாய் சேர்க்கைக் காலத்தில் குழந்தைகள் வழியில் விரயங்கள் ஏற்படலாம். அதன் குணங்களில் மாறுபாடு ஏற்படும் பொழுதெல்லாம், அன்பு செலுத்தித் திருத்துவது நல்லது. வருடக் கடைசியில் வளர்ச்சி அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே தொழில் அமைக்க குடும்ப உறுப்பினர்கள் முடிவெடுப்பர்.உத்தியோகத்திலிருக்கும் பெண் களுக்கு பதவி உயர்வு கிட்டும். ஊதிய உயர்வும், உடன் பிறப்புகளின் உத்துழைப்பும் கிட்டும். நந்தன வருடம் நன்மைகளை மேலும் வழங்க குருவின் பாதசார பலமறிந்து, சுயஜாதக ரீதியான பரிகாரங்களை மேற்கொள்வதே நல்லது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நந்தன வருட ராசி பலன்கள்

Post by சிவா on Wed Apr 11, 2012 7:23 am


மகரம்

உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)


ஐந்தாமிடத்து குருபார்வை அமைத்து கொடுக்கும் புதுவாழ்க்கை!

மற்றவர்களின் கருத்தை ஒரு போதும் ஏற்காமல், தன் மனம் கூறும் திட்டப்படியே செயல்பட விரும்பும் மகர ராசி நேயர்களே!

`கர' வருடம் முடிந்து `நந்தன' வருடம் தொடங்குகிறது. வருடம் தொடங்கும் போது ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். சுக ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சூரியன் சஞ்சரிக்கிறார். இங்ஙனம் கிரகங்கள் உலா வரும் நிலையில் பிறக்கும் இந்த புத்தாண்டு பிரச்சினைகளை தீர்த்து வைக்குமா? பிறர் போற்றும் அளவிற்கு வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொடுக்குமா? என்றெல்லாம் நீங்கள் நினைக்கலாம்.

ஆவணி 27-க்கு மேல் உங்கள் எண்ணங்கள் எல்லாம் பூர்த்தியாகும் விதத்தில் கிரகங் களின் சஞ்சாரம் அமைந்து இருக்கிறது. அதுவரை சற்று பொறுமையையும், அமைதி யையும் கடைப் பிடிக்கும் சூழ்நிலை உருவாகிறது.

என்ன இருந்தாலும் ராசிநாதனாக சனி அமைந்து வக்ர இயக்கத்தில் இருக்கும்போது, எதிலும் முன்யோசனையுடன் ஈடுபடுவதே நல்லது.

அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், சில மாதங்களில் செவ்வாயும்-சனியும் ஒன்று கூடுவதாலும் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. செவ்வாயின் துலாம் ராசி சஞ்சாரத்திற்கு பிறகே ஒவ்வொரு காரியங்களும் தடையின்றி நடைபெறும்.

கடமைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நீங்கள்!

உங்கள் ராசிநாதன் சனியை `மந்தன்' என்று அழைப்பது வழக்கம். `மந்த கதி'யில் இயங்குவதால் `மந்தன்' என்று சொல்வார்கள். எனவே அதன் குணத்தை போல நீங்களும் எதையும் நிதானமாக செய்து முடிவில் வெற்றி பெறுவீர்கள். பழகுவதில் இனிமையாக இருந்தாலும் பேச்சில் கடுமை உண்டு.

கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்து உரிமைக்கு போராடுவீர்கள். திறமை உங்களுக்கு பளிச்சிடுவது நடுப்பங்கு வயதில் தான்.

உங்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கம் முதல் வைகாசி 3 வரை!

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே, ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லைகள் ஏற்பட்டு அகலும். செவ்வாயும் நீண்ட நாட்களுக்கு அஷ்டமத்திலேயே சஞ்சாரம் செய்கிறார்.

செவ்வாயின் ஆதிக்கம் துலாம் ராசிக்கு வரும் வரை சற்று பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. அதுவரை காரியங்களில் தாமதங்களும், கடமைகளை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். துர்க்கை வழிபாடு துயரங்களை தீர்க்கும்.

குருப்பெயர்ச்சி விரயங்களை ஏற்படுத்துமா?

நவக்கிரகங்களில் சுப கிரகமாக விளங்குவது குருவாகும். அந்த குரு உங்கள் ராசியை பொறுத்தவரை 3, 12-க்கு அதிபதியாக விளங்குகிறார். சகாய ஸ்தானத்திற்கும், விரய ஸ்தானத்திற்கும் அதிபதியாக விளங்கும் குரு பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, சொத்து விற்பனையால் லாபத்தை கிடைக்க செய்வார். சொந்த-பந்தங்களின் கருத்து வேறுபாடுகள் அகலும்.

வரவு-செலவுகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வாரிசுகளுக்கு திருமணம் நடத்தி பார்க்கும் சூழ்நிலை உருவாகும். குருவின் ஆதிக்கம் சிறப்பாக செயல்பட குரு பகவான் கோவில் களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது. விரயாதிபதியாக குரு விளங்குவதால், இந்த காலத்தில் கூடுதல் விரயங்களை கொடுக்க நேரிடலாம்.

வியாழ திசை, வியாழ புத்தி நடப்பவர்களும், வியாழக்கிழமை பிறந்தவர்களும் குரு ப்ரீதி செய்து கொள்வது நல்லது. அதோடு, ராகுவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிவதால் சர்ப்ப சாந்தியையும், குரு வாரத்தில் யோகம் தரும் நட்சத்திர நாளில் செய்தால் குழப்பங்களில் இருந்து விடுபட இயலும்.

குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதோடு, 9, 11 ஆகிய இடங்களிலும் பதிவாகிறது. குருவின் பார்வை 1, 9, 11 ஆகிய இடங்களில் பதியும்போது, உடல் ஆரோக்கியத்தில் உள்ள குறைபாடுகள் அகல, மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. வெற்றிக் கனியை எட்டி பிடிக்க சில வாய்ப்புகள் வந்து அலைமோதும். கன்னி ராசியில் செவ்வாயும், உங்கள் ராசிநாதன் சனியும் இணையும் நேரத்தில் குருவின் பார்வை இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.

சொத்து பிரச்சினைகள் சுமூகமாக முடியும். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல்கள் அகலும். பகை பாராட்டாமல், கோபப்படாமல் பக்குவமாக நடந்து கொள்வதன் மூலம், பல காரியங்களை நீங்கள் முடித்து கொள்ள இயலும். குருவின் பார்வை பதினோராமிடத்தில் பதிவதால், பொருளாதார நிலை உயரும்.

செவ்வாய்-சனி சேர்க்கை காலம்!

வரும் நந்தன ஆண்டில் செவ்வாய், சனி சேர்க்கை காலம் தான் மிகவும் யோசித்து, அருகில் உள்ளவர்களிடமும், ஆன்மிக பெரியவர்களிடமும் ஆலோசனைகளை கேட்டு பக்குவமாக நடந்து கொள்ளவேண்டிய நேரமாகும்.

இரண்டு பகை கிரகங்கள் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடமான பூர்வ-புண்ணிய ஸ்தானத் தில் அல்லவா ஒன்று சேருகிறார்கள்.

எனவே, மனக்குழப்பம் அதிகரிக்கும். இருந்தாலும், குருவின் பார்வை இந்த கூட்டுகிரகத் தின் மீது பதிவதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.

துயரங்களை போக்குமா துலாம் ராசி சனி!

உண்மையிலேயே துலாம் ராசியில் சனி சஞ்சரிக்கும் போது, துயரங்களை போக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி பெற வைக்கும். ஆவணி 27-ந் தேதி முதல் அற்புத பலன்கள் உங்களை தேடி வரப்போகின்றது. சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். அனுமன் வழிபாடு உங்களுக்கு ஆனந்தம் வழங்கும்.

வக்ர குரு வளர்ச்சியை கொடுக்குமா?

புரட்டாசி 26-ந் தேதி முதல் தை 24-ந் தேதி வரை ரிஷப ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். இந்த காலம் உங்களுக்கு நற்பலன்களை வழங்கும் காலம் என்றே சொல்ல லாம். காரணம் 3, 12-க்கு அதிபதியான குருபகவான் வக்ரம் பெறுகிறார். 12-க்கு அதிபதி வக்ரம் பெறும்போது, `கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற் கேற்ப தொட்ட காரியங்களில், திட்டமிடாது செய்தால் வெற்றி கிடைக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஓரளவே வெற்றி கிட்டும், சகோதர வழியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு நல்ல முடிவிற்கு வரும்.

பாம்பு கிரக பெயர்ச்சி பக்கபலமாக இருக்குமா?

கார்த்திகை 17-ந் தேதி துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்க போகிறார்கள். உங்கள் ராசியை பொறுத்தவரை 4, 9 ஆகிய இடங்களில் அரவு கிரகங்கள் சஞ்சரிக்கும் போது சில நல்ல மாற்றங்களை கொடுக்கும் என்றாலும் சுகக்கேடு களையும் கொடுக்கும்.

விலங்குகளாலும், விஷ ஜந்துக் களாலும் ஆபத்துக்கள் ஏற்பட்டு அகலும். கடன் சுமையால் சில சொத்துக்களை விற்க நேரிடலாம்.

குறிப்பிட்ட ஸ்தலங்களில் சர்ப்ப சாந்திகளை முறையாக செய்து, ராகு- கேதுக்களை திருப்திப்படுத்தினால் தான் செயல்பாடுகளில் இருந்த தாமதம் அகலும். திடீர் தாக்குதல்களில் இருந்து விடுபடுவீர்கள்.

வக்ர சனியால் வளர்ச்சி ஏற்படுமா?

சித்திரை 1-ந் தேதி முதல் ஆனி 6-ந் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ந் தேதி முதல் பங்குனி 31-ந் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் ராசிநாதனாகவும், தனாதிபதியாகவும் சனி விளங்குகிறார். எனவே, எதை யும் யோசித்தும், பூஜித்தும் செய்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மீண்டும் பழைய பிரச்சினை தலைதூக்கலாம். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். கொள்கை பிடிப் போடு செயல்பட இயலாது. கடுமையாக முயற்சித்தும் கடைசி நேரத்தில் சில காரியங்கள் கைநழுவி போகலாம்.

இதுபோன்ற வக்ர காலத்தில் வள்ளல்களின் உதவியாலோ, வங்கிகளின் உதவியாலோ கடன் பெற்று வீடு கட்டுதல் போன்ற சுபச்செலவுகளை மேற்கொள்ளலாம். உறவினர் பகை ஏற்படாமல் பார்த்து கொள்வது நல்லது. எள் தீபம் ஏற்றி, இரு கரம் கூப்பி சனிபகவானை வழிபடுவதுதான் சாலச்சிறந்தது.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!

சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று சனிபகவானை வழிபட்டு வருவதோடு, யோக பலம் பெற்ற நாளில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கும் சென்று வயதிற்கேற்ற மாலை அணிவித்து வழிபாடு செய்து வாருங்கள். சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் உள்ள சொற்கோட்ட விநாயகரையும் வழிபட்டு சொல்லை செயலாக்கி காட்டுங்கள்.

மங்கையர்களுக்கான மகத்தான பலன்கள்!

நந்தன வருடம் மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு வருட தொடக்கத்திலேயே ராசிநாதன் சனி வக்ரம் பெறுவதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதையும் குடும்ப பெரியவர்களை கலந்து ஆலோசித்து செய்வதுதான் நல்லது. கோபத்தை குறைத்து கொள்ளுங்கள். விரயங்கள் அதிகரிக்கும் வருடமாகவே இந்த வருடம் இருக்கிறது. ஆவணி மாதம் வரை செவ்வாயின் ஆதிக்கமும், சனியின் ஆதிக்க மும் சிறப்பான நிலையில் இல்லை. எனவே பொறுமையை கடைப்பிடித்து பெருமையை காண்பது நல்லது. ஆவணிக்கு பிறகு உங்கள் எண்ணங்கள் ஈடேறும். எதிர்பாராத திருப் பங்கள் உருவாகும். பொன்னான வரன்கள் வந்து சேர்ந்து புதிய வாழ்க்கை மலரும். உத்தியோகஸ்தர்களுக்கு உன்னத பதவி வாய்க்கும். அத்தியாவசிய பொருட்களையும், ஆடம்பர பொருட்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். அடுத்தவர்களுக்காக வாங்கி கொடுத்த தொகையும் வந்து சேரும். சர்ப்ப ப்ரீதிகளை முறையாக மேற்கொண்டால் தகுந்த வாழ்க்கை பாதை உருவாகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நந்தன வருட ராசி பலன்கள்

Post by சிவா on Wed Apr 11, 2012 7:26 am


கும்பம்

அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)


சூரிய புதல்வன் மாறிவிட்டால் சுகங்கள் எல்லாம் தேடி வரும்!

`மக்கள் சக்தியே மகத்தான சக்தி' என்று நட்பு வட்டத்தை பெருக்கி கொள்ள பிரியப்படும் கும்ப ராசி நேயர்களே!

`கர' வருடம் முடிந்து `நந்தன' வருடம் தொடங்குகிறது. ஆண்டின் தொடக்கத்தில் அஷ்டமத்தில் சனி வக்ரம் பெறுகிறார். 6 க்கு அதிபதி சந்திரன் 11-ல் சஞ்சரிக்கிறார். பஞ்சம ஸ்தானாதிபதி புதன் நீச்சம் பெறுகிறார். சுக ஸ்தானாதிபதி சுக்ரன் மட்டும் சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார்.

எனவே சுகமும், சந்தோஷமும் வந்து சேரும். துடிப்போடு செயல்பட முற்படுவீர்கள். அஷ்டமத்து சனியின் வக்ர இயக்கம் உங்கள் செயல்பாடுகளில் தாமதத்தை உருவாக்கலாம்.

சனி வக்ரம் பெறுவது உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகளை கொடுக்கத் தான் செய்யும். மருந்து, மாத்திரைகளை அதிகம் உட்கொண்டு உடம்பை கெடுத்து கொள்ளாமல் தகுந்த மருத்துவ ஆலோசனைகளை கேட்டு குணப்படுத்தி கொள்வதே நல்லது. செவ்வாய் உங்கள் ராசியை பார்ப்பதால் சகோதர ஒற்றுமை பலப்படும். புதிய திருப்பங்கள் ஏற்பட்டாலும், வாகன மாற்றமும், இடமாற்றம், ஊர்மாற்றம், வீடு மாற்றங்கள் போன்றவை வாயில் தேடி வருவதற்கான சூழ்நிலை உண்டு.

அஷ்டமத்து சனிக்கு பரிகாரமாக திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, பெரிச்சிக்கோவில் போன்ற ஸ்தலங்களுக்கும் சென்று முறையாக அன்னதானம், வஸ்திர தானம், சொர்ண தானம் ஆகியவற்றை கொடுத்து, சனி சந்நிதியில் கவசம் பாடி முறையாக வழிபட்டு வந்தால் முன்னேற்றங்கள் சிறப்பாக அமையும்.

ராகு-கேதுக்களுக்கும் ப்ரீதி செய்து, சர்ப்ப சாந்தி செய்வது நட்பை பலப்படுத்தும்.

சமூக சேவை செய்வதை லட்சியமாக கொண்டவர்கள்

சுறுசுறுப்பாக பணிபுரிபவர்கள் நீங்கள். எதையும் மாறுபட்ட குணத்தில் சிந்திப்பீர்கள். உங்கள் லட்சியம் உயர்வாக இருந்தாலும், பாதி வாழ்க்கைக்கு மேல்தான் பலன் கிடைக்கும். காரணம், உங்கள் ராசிநாதன் சனி ஆவார். பொது வாழ்வில் ஈடுபட்டு, பொறுப்புகளை ஏற்று, சமூக சேவை செய்யும் எண்ணம் உங்களுக்கு இயற்கையிலேயே இருக்கும்.

சாமர்த்தியசாலிகளாக நீங்கள் விளங்கினாலும், சனியின் ஆதிக்கம் அதிகரிக்கும் போது, ஏமாற்றத்தையும் சந்திக்க நேரிடலாம். சொந்த, பந்தங்களின் உறவை ஓரளவோடு வைத்து கொள்வீர்கள்.

குடும்ப ஸ்தானாதிபதியாக குருவும், சுகாதிபதியாக சுக்ரனும் இருப்பதால் இவை இரண்டின் அமைப்பை பொறுத்தே உங்களுக்கு வாழ்க்கை துணை அமையும். குரு, சுக்ர ஆதிக்கம் பார்த்து வரனை தேர்ந்தெடுத்தால் தான், வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்? என்பதை பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கம் முதல் வைகாசி மூன்று வரை!

ஆண்டின் தொடக்கத்தில் அஷ்டமத்தில் சனி சஞ்சரிக்கிறார். சுகஸ்தானத்தில் கேது. எனவே ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. நீங்கள் நன்மை செய்வதாக நினைத்து செய்த காரியம் வேறுவிதமாக மாறலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திடீர் விரயங்கள் திக்கு முக்காட செய்யும். குடும்ப பெரியவர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்துங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சநேயரையும், சனிபகவானையும் வழிபடுவதோடு பவுர்ணமி கிரிவலத்திலும் கலந்து கொள்ளுங்கள்.

வாகன யோகம் தரும் குருப்பெயர்ச்சி

நவக்கிரகங்களில் நல்லவர் என்று அழைக்கப்படுவர் குருபகவான். அவர் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சரித்து அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக, பழைய வாகனங்களை பழுது பார்க்கும் சூழ்நிலையோ, புதிய வாகனங்கள் வாங்கி மகிழும் வாய்ப்போ கிடைக்கும். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை.

2, 11-க்கு அதிபதியாக குரு விளங்குவதால், தனவரவில் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். பழகிய கூட்டாளிகளே ஏமாற்றி விட்டார்களே என்று கவலைப்படுவீர்கள். இந்த காலத்தில் குரு திசை, குரு புத்தி நடப்பவர்கள், வியாழக்கிழமை பிறந்தவர்கள், அர்த்தாஷ் டம குருவிற்கு உரிய பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.

குரு, கேதுவுடன் கூடியிருப்பதால் சர்ப்ப தோஷ பரிகாரங்களும், ராகு-கேது ப்ரீதியும் செய்வதன் மூலமே நீங்கள் தொல்லைகளில் இருந்து அகல முடியும்.

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. இதன் விளைவாக, சென்ற வருடத்தில் ஏற்பட்ட தொழில் இழப்புகளை ஈடுகட்ட புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வி.ஆர்.எஸ். பெற்றுக்கொண்டு, விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து, முன்னேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர்.

செவ்வாய்-சனி சேர்க்கை காலம்!

ஆனி 9-ந் தேதி முதல் ஆடி 29-ந் தேதி வரை உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் செவ்வாயும், சனியும் இணைகிறார்கள். இது அவ்வளவு நல்லதல்ல. இதுபோன்ற காலங்களில் எதையும் பலமுறை யோசித்து செய்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு தொல்லை வரலாம். பெற்றோர் வழியில் மனக்கசப்பு தரும் செய்திகள் வரலாம்.

அங்காரக வழிபாடும், காக வாகனத்தான் வழிபாடும் அன்றாட வாழ்க்கையை நன்றாக அமைத்து கொடுக்கும்.

துயரங்களை போக்குமா துலாம் ராசி சனி!

ஒன்பதில் சஞ்சரிக்கும் சனி ஒளிமயமான எதிர்காலத்திற்கு வித்திடப்போகிறார். பொன், பொருள்கள் உங்களுக்கு சேரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாகும். அத்தனைக்கும் மேலாக, பொருளாதார நிலை ஒரு படி உயர்ந்து உன்னத நிலையை கொடுக்கும். அந்த நிகழ்வு ஆவணி 27-ல் நிகழவிருக்கிறது.

வக்ர குரு வளர்ச்சியை கூட்டுமா?

புரட்டாசி 26-ந் தேதி முதல் தை 24-ந் தேதி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியை பொறுத்தவரை வக்ரம் பெறுவது நல்லதல்ல. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். தன லாபம் வருவதில் தடைகள் உருவாகலாம்.

பயணங்களை திடீர் திடீரென மாற்றி அமைப்பீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் இட மாற்றம், ஊர் மாற்றங்கள் வரலாம். இல்லம் கட்டி குடியேறுவதிலும் தாமதம் ஏற்படும்.

பாம்பு கிரகங்களின் பெயர்ச்சி பக்கபலமாக இருக்குமா?

கார்த்திகை 17-ந் தேதி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் கேதுவும், ஒன்பதாமிடத்தில் ராகுவும் சஞ்சரிக்க போகிறார்கள். இதன் விளைவாக, பூர்வீக சொத்துக்களில் லாபம் கிடைக்கும்.

மூன்றில் சஞ்சரிக்கும் கேது முன்னேற்றத்தில் சில முட்டுக்கட்டைகளை கொடுக்கலாம். குறிப்பாக, சகோதரர்கள் சச்சரவுகளை கொடுக்கலாம். பஞ்சாயத்துக்கள் பாதியிலேயே நிற்கலாம். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் வரும். கோவில் காரியங்களில் ஈடுபாடு செலுத்துவீர்கள்.

புற்று கோவில்களுக்கும், புராதன கோவில்களுக்கும் சென்று சர்ப்ப சாந்தியை செய்தால் அற்புதமான வாழ்க்கை அமையும்.

வக்ர சனியால் வளர்ச்சி ஏற்படுமா?

சித்திரை 1-ந் தேதி முதல் ஆனி 6-ந் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ந் தேதி முதல் பங்குனி 31-ந் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் ராசிநாதனாகவும், பனிரெண்டுக்கு அதிபதியாகவும் சனி விளங்குகிறார். பனிரெண்டுக்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மை தான். `கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்' என்பதற்கேற்ப, திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திறமை மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர். `வெற்றி' என்ற மூன்றெழுத்தை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும்.

அதே நேரத்தில் ராசிநாதனாகவும் சனி விளங்குவதால், திடீரென உடலில் நோய்கள் தோன்றலாம். எனவே மருத்துவ ஆலோசனைகளை பெற ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உருவாகும். இந்த காலத்தில் திருநள்ளாறு, பெரிச்சிக்கோவில் போன்ற ஸ்தலங்களுக்கு சென்று சனிபகவானை வழிபடுவதோடு, வார வழிபாடாக அனுமன் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!

சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று சனீஸ்வர வழிபாட்டையும், அனுமன் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். சிறப்பு வழிபாடாக கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோவிலுக்கு சென்று அங்குள்ள விஷ்ணுவையும், இலக்குமியையும், மாருதியையும் வழிபட்டு வாருங்கள், வளர்ச்சி கூடும்.

மங்கையர்களுக்கான மகத்தான பலன்கள்!

நந்தன வருடம் கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு, வருட தொடக்கத்தில் அஷ்டமத்து சனியின் ஆதிக்கம் இருப்பதால், எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர், திடீரென குணங்கள் மாறலாம். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் பாதியிலேயே நின்று போகலாம். பெரியவர்களின் ஆலோசனைகளை அங்கீகரித்து கொள்வது நல்லது. மக்கட் செல்வங்களால் மனக்கவலை அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்து செல்வ தன் மூலமே ஒற்றுமை பலப்படும். குரு பெயர்ச்சிக்கு பின்னால் தாய் வழி பகைகள் உருவாகலாம். ராகு, கேது பெயர்ச்சிக்கு பிறகு நல்ல காரியங்கள் இல்லத்தில் நடை பெறுவதற்கான அறிகுறி தோன்றும். சனி மற்றும் புதன் திசை, புத்தி நடப்பவர்கள் தக்க பரிகாரத்தை செய்து கொண்டால், வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நந்தன வருட ராசி பலன்கள்

Post by சிவா on Wed Apr 11, 2012 7:28 am


மீனம்

பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)


வழிபாட்டால் வளர்ச்சி வரும் வரவும்- செலவும் சமமாகும்!

வெற்றிக்குரிய வழியை கையாள, மற்றவர்கள் மனதைப் புண்படுத்தாமல் பேசும் மீன ராசி நேயர்களே!

`கர' வருடம் முடிந்து `நந்தன' வருடம் தொடங்குகிறது. பிறக்கும் நந்தன சனியின் பார்வையோடும், ஆறாமிடத்துச் செவ்வாயின் ஆதிக்கத்தோடும் பிறக்கிறது. பார்க்கும் சனியினால் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்குமா? வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகுமா? என்றெல்லாம் வருடம் பிறக்கும் முன்னதாகவே உங்கள் மனதில் எண்ணங்கள் பிறந்து விடும்.

இந்த ஆண்டு ராகு- கேது பெயர்ச்சிக்கு பின்னால், ஓரளவு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. வந்த அஷ்டமத்துச் சனி மீண்டும் கண்டகச் சனியாகி மீண்டும் அஷ்டமத்துச் சனியாகி ஆண்டு முழுவதும் சஞ்சரிக்கப்போகிறார். எனவே, வருமானத்தை விட இரு மடங்குச் செலவு, வாழ்க்கைத் துணையோடு சச்சரவு, இருமணம் இணையும் திருமணத் தில் தாமதம், என்ற நிலை உருவாக வாய்ப்பு உண்டு.

இருப்பினும், எந்தக் கிரகத்தையும் நாம் துதிப்பாடல்கள் பாடி, வழிபாடுகளைச் செய்தால் அதன் மந்த நிலை மாறும். சனிக்கிழமையன்று ஓரிருவருக்காவது அன்ன தானம் செய்வது நல்லது.

உங்கள் ராசி நாதன் குருவும் இந்த ஆண்டு வக்ரம் பெறுகிறார். எனவே, அந்த வக்ர இயக்கம் வளமாக அமைய, திசை மாறிய தென்முகக் கடவுள் இருக்கும் ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வையுங்கள். வசைப்பாடுபவர்களைக் கண்டால், விலகிச் செல்லுங் கள். வார்த்தைகளை அளந்து பேசுவதும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வதும் உங்கள் புத்திசாலித்தனமாகும்.

மதியுகத்தால் மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்பவர்கள்

விருந்தினர்களை உபசரிப்பதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை. சான்றோர்களையும், ஆன்றோர்களையும் அதிகம் பழகி வைத்திருப்பீர்கள். திடீர் கோபமும் உங்களுக்கு வரும். தித்திக்கப் பேசும் நல்ல குணமும் உங்களுக்கு உண்டு.

தர்ம சிந்தனை மிக்க உங்களுக்கு குடும்ப ஸ்தானாதிபதியாக செவ்வாயும், களத்திர ஸ்தானாதிபதியாக புதனும் இருக்கிறார்கள். இந்த இரு கிரகங்களின் அமைப்பைப் பொறுத்தும் தான் உங்களுக்கு வாழ்க்கைத் துணை அமைகிறது.

உங்களுக்கு இந்தப் புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கம் முதல் வைகாசி 3 வரை

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியை வக்ரச் சனி பார்க்கிறார். செவ்வாய், சூரியன் பரிவர்த்தனையில் இருக்கிறார்கள். எனவே காரியங்கள் கடைசி நேரத்திலேயே கைகூடக் கூடிய வாய்ப்பு உண்டு. பொருளாதாரம் போதுமானதாக இருந்தாலும், விரயங்கள் அதிகரிக் கும். இன்று ஒரு ஊர், நாளை ஒரு ஊர் என்று பயணித்துக் கொண்டேயிருப்பீர்கள். கேது பலத்தால் சகோதர சச்சரவுகள் மேலோங்கும். பொதுவாகவே இந்த ஆண்டில் மீண்டும் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் வரப்போவதால், கூடுதல் கவனம் தேவை.

வெற்றிகள் தரும் குருப்பெயர்ச்சி

நவக்கிரகங்களின் நல்ல பலனைக் கொடுப்பவர் குரு பகவான். அவர் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். மூன்றாமிடம் சகாய ஸ்தானமாகும் ராசி நாதனாகவும், பத்துக்கு அதிபதியாகவும் விளங்கும் குரு பகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, நல்ல பலன்களை அள்ளி வழங்குவார். குறிப்பாக, தொழில் வளர்ச்சி மேலோங்கும்.

`மன்னவன் மூன்றில் நிற்க, மாபெரும் மாற்றம் தோன்றும், எண்ணிய காரியங்கள், எல்லாமே வெற்றி பெறும்' என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றிக்குரியதாக இருக்கும். உதாசீனப்படுத்தியவர் கள் உங்களோடு வந்திணைவர். சகோதர வழி சச்சரவுகள் மாறும். இருப்பினும், குரு ப்ரீதியும், திசை மாறிய தென்முகக் கடவுள் வழிபாடும் உங்கள் வாழ்க்கையை முன் நோக்கிச் செல்ல வைக்கும்.

மூன்றில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிவாகிறது. அதன் பார்வை பதியும் இடமெல்லாம் புனிதமாகின்றன. எனவே, உங்கள் கல்யாண கனவுகள் நனவாகும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

தந்தை வழி உறவில் வைத்த பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். தானே முன்நின்று சில விழாக்களை நடத்திப் பார்ப்பீர்கள். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர்.

லாப ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால், நீங்கள் என்ன தொழில் செய்தாலும் அதில் ஏற்றம் கிட்டும். அரசு வழிச் சலுகைகள் கிடைக்கும். வருடக் கடைசியில் சேமிப்பும் உயர்ந்து செல்வந்தர்களின் பட்டியலில் இடம் பெறும் வாய்ப்பும் உருவாகலாம். பிள்ளைகளுக்காக தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கிச் சேர்க்க முன் வருவீர்கள்.

செவ்வாய்- சனி சேர்க்கை காலம்

ஆனி 9-ம் தேதி முதல் ஆடி 29-ம் தேதி வைர உங்கள் ராசிக்கு 12-ல் செவ்வாயும், சனியும் ஒன்று கூடுகிறார்கள். இது அவ்வளவு நல்லதல்ல. குடும்பப் பிரச்சினைகள் தலைதூக்கலாம். கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. நோயில் இருந்து விடுதலை கிடைத்தாலும் பழைய உடல்நிலையை பெற இயலாது. யோசித்துக் கையெழுத்திடுவது நல்லது. மனக்குழப்பம் அதிகரிக்கும்.

இக்காலம் பொற்காலமாக இருபத்து நான்கு மணி நேரத்தில் ஏதாவது ஒரு அரை மணி நேரமாவது வழிபாட்டிற்கென்று ஒதுக்க வேண்டும். கந்தன் வழிபாடும் மந்தன் வழிபாடும் உங்கள் துயரங்களைப் போக்கும்.

துயரங்களைப் போக்குமா துலாம் ராசிச்சனி

ஆவணி 27-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 8-ல் சனி உலா வரப்போகிறார். அஷ்டமத்துச் சனி கஷ்டப்படுத்துமே என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அடுக்கடுக் காகச் சுப காரியங்களைச் செய்ய வைக்கும். அந்நிய தேசப்பயணங்கள் எண்ணியபடி கைகூடும்.

மாற்று இனத்தவர்கள் உங்கள் மகத்தான பணிக்கு ஒத்துழைப்புச் செய்ய முன் வருவர். கரைந்த சேமிப்புகளை மீண்டும் ஈடு செய்வீர்கள். அலுவலகப் பணியில் இருப்பவர் களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பொறுப்புகள் மாறும்.

வக்ர குரு வளர்ச்சியைக் கொடுக்குமா?

புரட்டாசி 26-ம் தேதி முதல் தை 24-ம் தேதி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியைப் பொறுத்த வரை ராசிநாதனாகவும், 10-க்கு அதிபதியாகவும் விளங்கும் குரு வக்ரம் பெறுவது ஒருவழிக்கு நன்மை தான் என்றாலும், ராசி நாதன் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்படும்.

மேலதிகாரிகளின் அனுசரிப்புக் குறையும். திடீர் இடமாற்றம், இலாகா மாற்றம் திகைக்க வைக்கும். வாயில் தேடி வந்த வரன்கள் விட்டுப் போகலாம். எனவே இக்காலத்தில் குரு வழிபாட்டை முறையாகச் செய்வதோடு, யோகபலம் பெற்ற நாளில் வைரவர் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

பாம்புக் கிரகப் பெயர்ச்சி பக்கபலமாக இருக்குமா?

கார்த்திகை 17-ம் தேதி 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இந்த அஷ்டமத்து ராசி அலைச்சலைக் கொடுத்தாலும் ஆதாயத்தையும் சேர்த்து கொடுக்கும். பிற இனத்தாரின் ஒத்துழைப்போடு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். 2-ல் கேது இருப்பதால் யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஒரு கனம் யோசிப்பது நல்லது.

சர்ப்ப சாந்தி ஹோமங்களைச் செய்தால் அரவு கிரகங்கள் அற்புதப் பலன் தரும்.

வக்ர சனியால் வளர்ச்சி ஏற்படுமா?

சித்திரை 1-ம் தேதி முதல் ஆனி 6-ம் தேதி வரை பிறகு மாசி 4-ம் தேதி முதல் பங்குனி 31-ம் தேதி வரை சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் 11, 12 ஆகிய இடங்களுக்கு சனி அதிபதியாக விளங்குகிறார். 12-க்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். `கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜ யோகம்' என்பதற்கேற்ப நல்ல பலன்கள் நடைபெறும். பதவி உயர்வு, இடமாற்றம், எதிர்பார்த்தபடி வந்து சேரும். அதிகாரிகளின் அன்பும், அரவணைப்பும் கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

வங்கிக் கடன்களைக் கொடுத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். லாபாதிபதியாகவும் சனி விளங்குவதால், அதன் வக்ர காலத்தில் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வட்டி கட்டும் சூழ்நிலையை உருவாக்கி விடும். கமிஷன் அடிப்படைத் தொழில் புரிவோர் உடனுக்குடன் வரவு செலவுகளைப் பார்த்துக் கொள்வது நல்லது.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!

வியாழக்கிழமை தோறும் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று தென்முகக் கடவுளை இன்முகத்தோடு வழிபட்டு வருவது நல்லது. தஞ்சை மாவட்டம் திருக்கடையூருக்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று கள்ள வாரணப் பிள்ளையார், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மனையும் வழிபட்டு வந்தால் எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையும்.

மங்கையர்களுக்கான மகத்தான பலன்கள்!

நந்தன வருடம் மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு குடும்ப பொறுப்புகள் கூடும். கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. சனியின் பார்வையில் சில வாய்ப்புகள் கைநழுவிப் போகலாம். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியமாகும். நினைத்த போது விரும்பிய பொருளை வாங்கி மகிழும் வாய்ப்பு ராகு - கேது பெயர்ச்சிக்குப் பின்னால் உருவாகும். எந்த செயலையும் நிதானத்தோடு செய்யுங்கள். குல தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு செலுத்துங்கள். தோழியர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே வந்து சேரலாம். பொறுமையைக் கடைப்பிடிப்பதோடு, குடும்ப உறுப்பினர்களையும் அனுசரித்துச் சென்றால்தான் நந்தன ஆண்டு நல்ல ஆண்டாக அமையும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நந்தன வருட ராசி பலன்கள்

Post by பாலாஜி on Wed Apr 11, 2012 11:09 am

பகிர்வுக்கு மிக்க நன்றி தல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நந்தன வருட ராசி பலன்கள்

Post by ந.கார்த்தி on Wed Apr 11, 2012 11:20 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: நந்தன வருட ராசி பலன்கள்

Post by பிரசன்னா on Wed Apr 11, 2012 11:24 am

பகிர்விற்கு நன்றி .... சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி

கும்ப ராசிக்கு எப்படி இருக்கு ஜோசியரே...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: நந்தன வருட ராசி பலன்கள்

Post by பிளேடு பக்கிரி on Wed Apr 11, 2012 11:26 am

நன்றி தல மகிழ்ச்சிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நந்தன வருட ராசி பலன்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum