ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 M.Jagadeesan

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

என்ன ஆயிற்று ?
 ராஜா

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Apr 07, 2012 7:48 pm

நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி

தமிழில் இருக்கும் அறநூல்களில் பதினெண் கீழ் கணக்கு நூல்களில் வராத நூல்களில் மேலும் ஒரு சிறப்பான நூல் நன்னேறி. இதை எழுதியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி தேசிகருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். தாமிரவர்ணிக் கரையிலுள்ள சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றார்.

இவர் நால்வர் நான்மணிமாலை, சோண சைல மாலை, கூவப் புராணம், பழமலை அந்தாதி, பிட்சாடன் நவமணிமாலை, பெரியநாயகியம்மை விருத்தம், பெரிய நாயகியம்மைக் கட்டளைக் கலித்துறை, பிரபுலிங்க லீலைக்கு விருத்தியுரை, வேதாந்த சூடாமணி, நெஞ்சு விடு தூது, சிவஞான பாலைய தேசிகர் தாலாட்டு, தர்க்க பரிபாஷை சதமணிமாலை, சிவப்பிரகாச விகாசம், திருவெங்கை அலங்காரம், திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கைக் கோவை, திருச்செந்தூர் நீரோட்டகயமக அந்தாதி, ஏசுமத நிராகரணம் முதலான பல நூல்களை இயற்றியுள்ளார்.

இவருடைய காலம் பதினேழாம் நூற்றாண்டு. இவர் தம்முடைய முப்பத்திரண்டாம் வயதில் சிவபதம் அடைந்தார்.

மூதுரை, நல்வழி போல் சொல்ல வந்த கருத்தும் அதை புரிய அழகான ஒரு உதாரணத்துடன் கூடிய அழகிய வெண்பாவானால் ஆனது நன்னேறி. ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலும், 40 நேரிசை வெண்பா பாடல்களும் உடையது இந்நூல். நன்னெறி என்றால் நன்மை நெறி என்று பொருள்படும்.

நல்ல தமிழ் தொடர் பதிவில் இந்த அறிய நன்னெறிப் பாடல்களைக் காண்போம்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Apr 07, 2012 8:07 pm

கடவுள் வாழ்த்து
மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.

பொருள் விளக்கம்
மின்னும் சடா முடி உடைய விநாயகன் திருப்பாதங்களைத் தொழுது எழ, நன்னெறிப் வெண்பா பாடல்கள் நாற்பதும் இனிதாக வரும்.

நூல்
1 . உபசாரம் கருதாமல் உதவுக

என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்
சென்று பொருள்கொடுப்போர் தீதற்றோர் - துன்றுசுவை
பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ
நாவிற் குதவும் நயந்து?

பொருள் விளக்கம்

அழகான பூ அணிந்த மணமான கூந்தல் உடையவளே, தினந்தோறும் உணவின் சுவை அறியாத கை உணவை எடுத்துக் நாவிற்கு கொடுப்பது புகழுக்காகவா !! அது போல் நமக்கு அறிமுகம் ஆகாமல், நன்கு முகமன் கூறாதவருக்கும் நல்ல குணம் படைத்தவர்கள் உதவுவார்கள்.

2 . வன்சொல்லும் இனிமையாகும்
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஓண்கரும்பு
வில்லோன் மலரோ விருப்பு.

பொருள் விளக்கம்

குற்றம் இல்லாதவர், நம் மேல் அன்பு வைப்பவர் நம்முடைய நலம் பொருட்டு கூறும் கடினமான சொல்லும் நமக்கு நன்மைப் பயக்கும். ஒன்றுக்கும் உதவாமல் இனிதாக பேசுபவர் பிறர் சொல் இதற்கு மாறாக இருக்கும். பக்தியுடன் தொண்டர் ஒருவர் இட்ட கல்லும் அழகான மலராக மாறியது. ஆனால் கரும்பு வில் உடைய மன்மதன் எறிந்த பூ கணைகளும் சிவபெருமானுக் கோபம் ஊட்டி மன்மதை எரிக்கச் செய்தது.

தொடரும்


Last edited by சதாசிவம் on Sat Apr 07, 2012 8:30 pm; edited 1 time in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by ரா.ரா3275 on Sat Apr 07, 2012 8:21 pm

///குற்றம் இல்லாதவர், நம் மேல் அன்பு வைப்பவர் நம்முடைய நலம் பொருட்டு கூறும் கடினமான சொல்லும் நமககு நன்மைப் பயக்கும். ஒன்றுக்கும் உதவாமல் இனிதாக பேசுபவர் பிறர் சொல் இதற்கு மாறாக இருக்கும்.///

அற்புதம் சதாசிவம் அவர்களே...பகிர்விற்கு நன்றி...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by அதி on Sat Apr 07, 2012 8:25 pm

இரு பாடல்களுக்குமான விளக்கமும் அருமையாக இருந்தது அருமையிருக்கு
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by கேசவன் on Sat Apr 07, 2012 8:39 pm

அருமை அருமை அருமை தொடருகள்
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Apr 08, 2012 9:57 am

நன்றி ரா ரா, நன்றி அதி, நன்றி கேசவன்... நன்றி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Apr 08, 2012 10:22 am

3 . இனிய வழியறிந்து ஒருபொருளை அடைக.
தங்கட்கு உதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர்
தங்கட்கு உரியவரால் தாங்கொள்க - தங்கநெடுங்
குன்றினால் செய்தனைய கொங்காய் ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து.

பொருள் விளக்கம்

தங்கக் குன்று போல் அழகான தனங்களை உடைய பெண்ணே, பசுவிடம் பால் கறக்க விரும்புபவர் அதன் கன்றை காட்டி பால் கரப்பதை போல். நமக்கு உதவி செய்ய நினைக்காத ஒருவரிடன் இருந்து உதவி தேவையெனின், அவருடன் இணங்கி இருப்பவர் ஒருவர் மூலமாக அந்த உதவியை பெற வேண்டும் என்பதை உணர்ந்து கொள்.

4 . செல்வம் பயன்படுத்துவார்க்கே உரியதாம்
பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.

பொருள் விளக்கம்

ஒருவருக்கு உதவாத உப்புக் கடல் நீர் மேகங்களால் கவரப்பட்டு மழை நீராக மக்களுக்கு பயன்படுவது போல் ஒருவருக்கும் உதவி செய்யாத ஒருவருடைய செல்வம் இறைவனின் திருவருளால் உதவி செய்பவருடைய கைகளில் சென்று விடும்.

5 . நட்பிற்பிரியலாகாது
நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம்.

பொருள் விளக்கம்

பூங்குழல்களை உடைய பெண்ணே, நெல் உமியுடன் சேர்ந்து இருக்கும் வரை தான் அது விதை நெல்லாக இருக்கும். அந்த உமி நெல்லில் இருந்து விலகியவுடன் மீண்டும் இணைத்தாலும் அது விதை நெல்லாக வளரும் பலம் பெறாது. அது போல் நன்கு பழகி விலகிய நண்பர்கள் மீண்டும் இணைந்தாலும், அந்த நட்பில் முன்பு இருந்தது போல் நட்பு இருக்காது. ஆதலால் நண்பர்களிடம் குற்றம் கண்டு விலகுதல் கூடாது.

தொடரும் ...
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by அதி on Sun Apr 08, 2012 1:41 pm

நன்கு பழகி விலகிய நண்பர்கள் மீண்டும் இணைந்தாலும், அந்த நட்பில் முன்பு இருந்தது போல் நட்பு இருக்காது. ஆதலால் நண்பர்களிடம் குற்றம் கண்டு விலகுதல் கூடாது.

கருத்துகள் அத்தனைக்கும் நன்றிகள் அருமையிருக்கு
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Apr 09, 2012 5:15 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நன்கு பழகி விலகிய நண்பர்கள் மீண்டும் இணைந்தாலும், அந்த நட்பில் முன்பு இருந்தது போல் நட்பு இருக்காது. ஆதலால் நண்பர்களிடம் குற்றம் கண்டு விலகுதல் கூடாது.

கருத்துகள் அத்தனைக்கும் நன்றிகள் அருமையிருக்கு

நன்றி அதி :நல்வரவு:
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Apr 09, 2012 5:49 pm

6 . தம்பதிகள் ஒற்றுமை
காதல் மனையாளும் காதலும் மாறின்றித்
தீதில் ஓருகருமம் செய்பவே - ஓதுகலை
எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்கல்தான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண்.

பொருள் விளக்கம்

பதினாறு கலைகள் நிரம்பிய முழு மதி போல் முகத்தை உடையவளே, ஒரு விஷயத்தை இரண்டு கண்களும் தான் நோக்குகின்றது, ஆனால் பார்வை ஒன்று தான். அது போல் கணவனும், அன்பு மனைவியும் இரண்டு நபர்கள் ஆனாலும் சிந்தனையில், செயலில் ஒத்து இருந்தால் சிறந்த பலன்கள் பெறுவார்கள்.

7 . கல்விச் செருக்குக் கூடாது
கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்
அடலேறு அனையசெக்கு ஆழ்த்தி - விடலே
முனிக்கரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும்.

பொருள் விளக்கம்

ஒருவருக்கு கடல் அளவு அறிவு பெற்று இருந்தாலும், சீறும் சிங்கம் போல் கர்வத்துடன் இருக்கக்கூடாது. முனிவர்களுக்கு அரசரான குறு முனி அகத்தியர் ஏழு கடலையும் குடித்து விட்டது போல், நம் ஆனவத்தை அடக்க வேறு ஒருவரும் உள்ளனர் என்பதை உணர வேண்டும்.

8 . ஆறுவது சினம்
உள்ளம் கவர்ந்தெழுந்து ஓங்குசினம் காத்துக்
கொள்ளும் குணமே குணமென்க - வெள்ளம்
தடுத்தல் அரிதோ தடடங்கரைதான் பேர்த்து
விடுத்த லரிதோ விளம்பு.

பொருள் விளக்கம்

நீரின் அளவு பெருகி இருக்கும் போது அணையை காப்பதற்கு அவசரப்பட்டு அணையை உடைத்து சேதத்தை விளைவிப்பதை விட, நீரை கால்வாய் வழியே மென்மையாக ஆக்கபூர்வமாக வெளிப்படுத்துவதே சிறந்தது. அதைப் போல் மனம் கொதித்து கோபம் வரும் போதும் அதை அடக்கி ஆளுவதே சிறந்த குணம். அதுவே சிறந்த மனிதனின் குணமென்க.

தொடரும்...


Last edited by சதாசிவம் on Sun Aug 19, 2012 4:47 pm; edited 1 time in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by இளமாறன் on Mon Apr 09, 2012 6:10 pm

நல்ல விளக்கம் சதாசிவம் மகிழ்ச்சி மகிழ்ச்சி கடை பிடிப்பது தான் கடினம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Thu Apr 12, 2012 6:00 pm

[You must be registered and logged in to see this link.] wrote: நல்ல விளக்கம் சதாசிவம் மகிழ்ச்சி மகிழ்ச்சி கடை பிடிப்பது தான் கடினம்

நன்றி இளமாறன், நீங்கள் கூறுவது உண்மை தான், குறைந்த பட்சம் இவைகளை அடிக்கடி நினைவு படுத்தி கொண்டு இருப்போம். இயன்ற வரை செயல்படுத்த முயல்வோம்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Thu Apr 12, 2012 6:24 pm

9 . துணையுடையார் வலிமையுடையார்
மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தம்மைத்தான் மருவின் - பலியேல்
கடவுள் அவிர்சடைமேல் கட்செவி யஞ்சாதே
படர்சிறைய புள்ளரசைப் பார்த்து.

பொருள் விளக்கம்
வலிமை குறைந்தவர் வலிமை நிறைந்தவரை கண்டு பயன்படத் தேவையில்லை அவர்கள் வேறு ஒரு வலிமையுடையவருடன் சேரும் போது. பரமசிவன் காதுகளில், கழுத்தில் ஆபரணமாக இருக்கும் பாம்பு, பறவைகளின் அரசரான கருடனைக் கண்டு அஞ்சாமல் இருப்பது போல். யாருக்கும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே. ஆகையால் நம்முடைய வலிமைக்கு தகுந்து அதனினும் வலிமையுடையவருடன் நட்பு ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

10. தன்னலம் கருதலாகாது
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதாது உலகின்
நிறையிருளை நீக்குமேல் நின்று.

பொருள் விளக்கம்
சிறந்த மனிதர்கள் வறுமை உற்ற காலத்திலும் அவர்களை விட வறுமையில் இருப்பவரை கண்டால், தங்களுக்கு என்று வைத்து இருக்கும் பொருளையும் கொடுத்து உதவுவார்கள். நிலவு தன் பின்புறம் இருட்டு இருந்தாலும் அதை நீக்காமல் , இருளாக இருக்கும் இந்த உலகத்துக்கு வெளிச்சம் கொடுத்து உதவுவதைப் போல்.


11. அறிஞர் ஐம்புலன்கட்கு அடிமையாகார்

பொய்ப்புலன்கள் ஐந்துநோய் புல்லியர் பாலன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பிற்
சுழன்றுகொல் கல்தூணைச் சூறா வளிபோய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு.

பொருள் விளக்கம்
நிலையற்ற இன்பத்தை அளிக்கும் பொய்யான இந்த மெய்யில் இருக்கும் ஐந்து புலன்களும் மன உறுதி அற்றவரைத் தான் தாக்கி துன்பத்தில் ஆழ்த்தும் மன உறுதியுடன் இருப்பவரை ஒன்றும் செய்ய இயலாது. வெகு வேகமாக அடிக்கும் சூறாவளிக் காற்று பெரிய கல் தூணைப் புரட்டிப் போடாமல், சிறு துரும்பை பந்தாடுவதைப் போல்

12. உடம்பில் உயிர் அமைந்த வியப்பு.
வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை - தீருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு.

பொருள் விளக்கம்
அழகு நிறைந்தவளே, ஓட்டை பானையில் நீர் சிந்துவது ஒன்றும் புதுமையில்லை, நம்மை வருத்தம் செய்யும் உயிர் உடலில் ஒன்பது துளை இருந்தும் இறைவன் விதிக்கும் வேலை வரும் வரை வெளியேராமல் தங்குவதே புதுமை.

தொடரும்...
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Apr 14, 2012 10:40 am

13. அன்பொடு உதவுக
பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் - சுரக்கும்
மலையளவு நின்றமுலை மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர்.

பொருள் விளக்கம்
அமுதம் சுரக்கும் மலை போன்ற தனங்களை உடைய பெண்ணே, நிலவு தன் பிறை அளவு மாறுதலுக்கு ஏற்ப ஒளி வீசுவது போல். உயர்ந்த குணம் உடையவர்கள் தங்கள் வருமானத்தைப் பொறுத்து விருப்புடன் வறுமையுடன் இருப்பவருக்கு உதவுவார்கள்.

14. செல்வச் செருக்குக் கூடாது
தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோ மென்று
கலையா யாவர் செருக்குச் சார்தல் - இலையால்
இரைக்கும்வண்டு ஊதுமலர் ஈர்ங்கோதாய் மேரு
வரைக்கும்வந் தன்று வளைவு.

பொருள் விளக்கம்
வண்டுகள் மொய்க்கும் மலர் மணக்கும் கூந்தல் உடையே பெண்ணே, மேரு மலையும் ஒரு நாள் கடலில் மூழ்கியது, அதைப் போல் தன்னிடம் இருக்கும் செல்வம் நிலையில்லாதது, ஓரிடம் தங்காமல் சென்று விடும் என்பதை உணர்ந்து அறிவு உடையவர்கள் செல்வம் வரும் போது செருக்கு கொள்ளக் கூடாது.

15. அன்பற்ற செல்வம் பயனற்றது
இல்லானுக்கு அன்பிங்கு இடம்பொருள் ஏவல்மற்று
எல்லாம் யிருந்துமவர்க் கென்செய்யும் - நல்லாய்
மொழியிலார்க் கேது முதுநூல் தெரியும்
விழிலார்க்கு ஏது விளக்கு

பொருள் விளக்கம்
எழுதப் படிக்க தெரியாத கல்வி அறிவு இல்லாதவருக்கு பழமையான அரிய நூல்கள் இருப்பதால் ஒரு பயனும் இல்லை. கண் தெரியாத குருடனுக்கு விளக்கு இருந்து என்ன பயன் ? அதைப் போல் மனிதர்களின் மேல் அன்பு இல்லாதவர்களுக்கு இடம், பொருள், வேலைக்காரர்கள், சொத்து, சுகம் இருந்து என்ன பயன் ?

தொடரும்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by ஹர்ஷித் on Sat Apr 14, 2012 10:49 am

[You must be registered and logged in to see this link.] wrote:15. அன்பற்ற செல்வம் பயனற்றது
இல்லானுக்கு அன்பிங்கு இடம்பொருள் ஏவல்மற்று
எல்லாம் யிருந்துமவர்க் கென்செய்யும் - நல்லாய்
மொழியிலார்க் கேது முதுநூல் தெரியும்
விழிலார்க்கு ஏது விளக்கு

பொருள் விளக்கம்
எழுதப் படிக்க தெரியாத கல்வி அறிவு இல்லாதவருக்கு பழமையான அரிய நூல்கள் இருப்பதால் ஒரு பயனும் இல்லை. கண் தெரியாத குருடனுக்கு விளக்கு இருந்து என்ன பயன் ? அதைப் போல் மனிதர்களின் மேல் அன்பு இல்லாதவர்களுக்கு இடம், பொருள், வேலைக்காரர்கள், சொத்து, சுகம் இருந்து என்ன பயன் ?
நன்றி
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Apr 21, 2012 5:29 pm

16. மேலோர் இழிந்தோர்க்கும் உதவுவார்
தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துயர்ந்தோர்
தம்மை மதியார் தமையடைந்தோர் - தம்மின்
இழியினும் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு
கழியினும் செல்லாதோ கடல்.

பொருள் விளக்கம்

மிகப்பெரிய கடலும் உப்பக்கழிக்குள் வந்து நீரை நிறைக்கும் பிறருக்கு உப்பு வழங்குவதற்காக, அதைப் போல்தான் உயர்ந்த நிலையில் இருந்தாலும், தலைமைப் பதவி வகித்தாலும் தன் நிலையிலும் கீழே உள்ளவருக்கும் உதவி புரிவர் உயர்ந்த குணம் உடைய மேலோர்.

17. வள்ளல்கள் வறுமையிலும் உதவிபுரிவார்கள்
எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன்
மைந்தர்தம் ஈகைமறுப்பரோ - பைந்தொடிஇ
நின்று பயனுதவில்லா அரம்பையின் கீழ்க்
மன்றும் உதவும் கனி.

பொருள் விளக்கம்

அழகான மென்னிடையை உடைய பெண்ணே, வாழை மரம் கனி ஈன்றியவுடன் வெட்டப்பட்டாலும், அதன் கன்று மீண்டும் வளர்த்து கனி கொடுக்கும். அது போல் வள்ளற் குணம் படைத்த பெரியவர்கள் கொடுத்து கொடுத்து வறுமை நிலை வந்தாலும், அவரின் மகன் அடுத்தவருக்கு கொடுத்துதவ மறுக்க மாட்டார்.

18. இன்சொல்லையே உலகம் விரும்பும்
இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய்
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் தண்ணென்
கதிர்வரவால் பொங்குங் கடல்.

பொருள் விளக்கம்

பொன் போன்ற கதிர்களை உடைய கொதிக்கும் சூரியன் கதிர்களைக் கண்டு கடல் பொங்குவதில்லை, ஆனால் குளிர்ந்த ஒளியை உண்டாக்கும் நிலவின் ஒளியை கண்டு தான் கடல் பொங்கும். அது போல் வன் சொல்லை கண்டு இந்த நீர் சூழ்ந்த உலகத்தின் மக்கள் மகிழ்ச்சி அடைவதில்லை, மாறாக இன்சொல்லால் தான் மகிழ்கின்றனர். ஆதலால் இன்சொல் பேசுங்கள்.

தொடரும்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Apr 29, 2012 5:07 pm

19. நல்லார் வரவு இன்பம் பயக்கும்
நல்லோர் வரவால் நகைமுகங்கொண் டின்புறீஇ
அல்லோர் வரவால் அழுங்குவார் - வல்லோர்
திருந்தும் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா
வருந்துங் கழற்கால் வர.

பொருள் விளக்கம்

வசந்த காலத்தில் வரும் குளிர்ந்த தென்றலைக் கண்டு மாமரம் மகிழ்ந்து பூ பூக்கும். ஆனால் வேனிர் காலத்தில் வரும் வெப்பக் காற்றில் மலரும் பூக்களும் காய்ந்து உதிரும். அது போல் நல்ல குணம் உடையவர் விருந்தினராக வரும் போது இல்லத்தில் இருப்பவர்கள் இன்முகத்துடன் வரவேற்று மகிழ்வர், அதற்கு மாறாக உள்ளவர் உள் நுழையும் போது தவித்து வருத்தப்படுவர்.

20. பெரியோர் பிறர் துன்பம் கண்டிரங்குவார்
பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண் டுள்ளம்
எரியின் இழுதாவார் என்க - தெரியிழாய்
மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக்
கண்டு கழலுமே கண்.

பொருள் விளக்கம்

பிற உறுப்புகள் துன்பப்படும் போது, கண்கள் தனக்கு துன்பம் வந்தது போல் நீர் கசியும். அது போல் மேன்மை குணம் பொருந்திய பெரியவர்கள் பிறருடைய துன்பத்தைக் கண்டு தன் துன்பமாய் கருதி நெருப்பில் இட்ட மெழுகாய் வருந்தி அவர் துன்பம் போக்க வழி செய்வர்.

21. இலக்கணம் கல்லார் அறிவு கற்றார் அறிவுக்குமன் செல்லாது
எழுத்தறியார் கல்விப்பெருக்கம் அனைத்தும்
எழுத்தறிவார்க் காணின் இலையாம் - எழுத்தறிவார்
ஆயும் கடவுள் அவிர்சடைமுடி கண்டளவில்
வீயும் சுரநீர் மிகை.

பொருள் விளக்கம்

பொங்கி வழிந்து பெருமிதப்படும் கங்கை, சிவபெருமானின் தலையில் சென்றவுடன் அமைதியாய் யாருக்கும் தெரியாமல் அடங்கி மறைந்து இருக்கும். அது போல் முறையாகக் கல்வியின் இலக்கணம் கற்காமல், கேட்டதை வைத்து பாவனையாகப் பேசும் கல்லா ஒருவன் சொல்லும் வார்த்தை கற்றறிந்த அறிஞர்கள் இருக்கும் சபையில் எடுபடாது.

22. அறிவுடையோர் உயர்குலத்தவர் அறிவிலார் இழிகுலத்தவர்
ஆக்கும் அறிவான் அல்லது பிறப்பினால்
மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க - நீக்க
பவர்ஆர் அரவின் பருமணிகண்டு என்றும்
கவரார் கடலின் கடு.

பொருள் விளக்கம்
பாம்பிடம் இருந்தாலும் ரத்தினத்தின் மதிப்பு குறைந்து விடாது, ஆழமாக அகலமாக இருந்தாலும் கடல் நீர் குடிக்கப் பயன் படாது. அதுபோல் உயர் குலத்தில் பிறந்தவன் என்பதால் ஒருவன் பெருமை மிக்கவனாக மாட்டான், தாழ் குலத்தில் பிறந்ததால் ஒருவன் சிறுமை படைத்தவனாக மாட்டான். ஒருவனின் பெருமை அவரவரின் அறிவைப் பொருத்துக் கொண்டாடப்படும்.

தொடரும்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by பத்மநாபன் on Sun Apr 29, 2012 8:04 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நல்லார் வரவு இன்பம் பயக்கும்

இன்பம் பயக்கும் நன்னெறி . நன்றி
avatar
பத்மநாபன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 115
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Tue May 01, 2012 5:49 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நல்லார் வரவு இன்பம் பயக்கும்

இன்பம் பயக்கும் நன்னெறி . நன்றி

நன்றி பத்மநாபன் நன்றி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by ஆரூரன் on Mon May 07, 2012 2:35 pm

[You must be registered and logged in to see this link.] wrote: ஒருவனின் பெருமை அவரவரின் அறிவைப் பொருத்துக் கொண்டாடப்படும்.

நூறு சதவிகிதம் உண்மை ஐயா
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat May 12, 2012 6:12 pm

23. மனவுறுதி விடலாகாது
பகர்ச்சி மடவார் பயிலநொன்பு ஆற்றல்
திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி
பெறும்பூரிக் கின்றமுலை பேதாய் பலகால்
எறும்பூரக் கல்குழியுமே.

பொருள் விளக்கம்

எறும்புகள் ஊர்ந்து நடந்து சென்று சென்று கல்லும் தேய்ந்து வழித்தடம் ஆகும். அதுபோல் அழகிய தனங்களை உடைய பெண்களுடன் இருந்து பிரம்மச்சரியம் நோற்பது அவ்வளவு எளிதல்ல. பெரிய ஞானிகளும் மனத்திட்பம் இழப்பர். ஆகையால் நம் நோக்கத்திற்கு எதிராக இருக்கும் விசயங்களில் இருந்து விலகி மனஉறுதியுடன் இருந்தால் நினைப்பதை அடையலாம்.

24. ஓருவர்தம் நற்குணத்தையே பேசுதல் வேண்டும்
உண்டு குணமிங்கு ஒருவர்க்கு எனினும்கீழ்
கொண்டு புகல்வதவர் குற்றமே - வண்டுமலர்ச்
சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பன்றோ
காக்கை விரும்பும் கனி.

பொருள் விளக்கம்

அனைவருக்கும் நல்ல குணம் தீய குணம் என்று இரண்டு குணங்களும் இருக்கும். இவற்றின் அளவுகளைப் பொறுத்துத் தான் நாம் இவர் நல்லவர் என்றும், தீயவர் என்றும் முடிவு செய்கிறோம். தேனீக்கள் வேப்பம் பூவில் உள்ள தேனை அருந்தும், ஆனால் காக்கையோ கசப்பான வேப்பம் பழத்தை தேடி உண்ணும். அது போல் கீழ்குணம் உடைய மக்கள் ஒருவரின் குற்றத்தை பார்ப்பார், மேல் குணம் உடைய மேலோர் ஒருவரின் நல்ல குணத்தை பார்த்து அதை உணர்ந்து பாராட்டுவர்.


25. மூடர் நட்புக் கூடாது
கல்லா அறிவின் கயவர்பால் கற்றுணர்ந்த
நல்லார் தமது கனம் நண்ணாரே - வில்லார்
கணையிற் பொலியுங் கருங்கண்ணாய் நொய்தாம்
புணையில் புகுமொண் பொருள்.

பொருள் விளக்கம்

அதிக கணம் உள்ள கல் தெப்பத்தில் இருக்கும் போது எடையில்லாதது போல் மிதக்கும். அதுபோல் அறிவுள்ளவர்கள் கல்லாத அறிவில்லாத மூடர்களுடன் சேரும் போது மூடர்களாக கருதப்படுவர்.

26. உருவத்தால் சிறியவரும் அறிவினால் பெறியவராவார்
உடலின் சிறுமைகண்டு ஒண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் - மடவரால்
கண்ணளவாய் நின்றதோ காணும் கதிரோளிதான்
விண்ணள வாயிற்றோ விளம்பு.

பொருள் விளக்கம்

பூமியில் விழும் சூரியனின் ஒளியை வைத்து சூரியன் வெளிச்சமும், வெப்பமும் இவ்வளவு தான் என்று எடை போட முடியாது. அதுபோல் ஒருவரின் உருவத்தையும், எளிமையும் வைத்து அவர் படித்த கல்வியின் கடலை எடைபோட முடியாது. உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக் கூடாது.

தொடரும்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by venugobal on Fri Jun 22, 2012 7:49 pm

பிற நீதி இலக்கியங்களோடு திருக்குறளை ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் அதன் சிறப்பு வெளிப்படுகிறது. சினங்காத்தல் குறித்து வள்ளுவனாரின் கருத்து எத்தகையது; "தன்னைத்தான் காக்கின் சினம் காக்க, காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்' 'சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி'; 'செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான், அல்லிடத்த்க் காக்கின்என் காவாக்கா.'
பொது மறையைப் போற்றுவோம் வாரீர்!!
avatar
venugobal
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by venugobal on Fri Jun 22, 2012 8:03 pm

ஒருவருக்குப் பெருமை சேர்ப்பது அறிவா? பண்பா? 'அரம்போலும் கூர்மையரேனும் மரம் போல்வர், மக்கட்பண்பி லாதவர்.' கருதிப் பாருங்கள்.
avatar
venugobal
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Jul 22, 2012 4:39 pm

உண்மை வேணுகோபால் திருக்குறள் ஒப்புயர்வற்றது. எனினும் தமிழில் உள்ள பிற நீதிநூல்களும் அறிய செய்திகளை கூறுகிறது.

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.
:நல்வரவு:
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Jul 22, 2012 5:01 pm

26. கைமாறு கருதாமல் உதவு
கைம்மாறு உகவாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தித்
தம்மால் இயலுதவி தாம்செய்வர் – அம்மா
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியனதாம் மென்று

பொருள் விளக்கம்

பெண்ணே, உணவை சிரமப்பட்டு மெல்வது பற்கள், ஆனால் சுவையை உணர்வது நாக்கு. எந்த ஒரு உதவியும் எதிபார்க்காமல் பற்கள் நாவிற்கு உதவி செய்கிறது. அது போல் நல்ல குணமுடைய கற்றறிந்த பெரியவர்கள், பதிலுதவி எதிர்ப்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்வர்.

28. எட்டிப்பழுத்தால் இனிக்குமா ?
முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளக்
கனிவினும் நல்கார் கயவர் – நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டிபழுத்து
ஆயினும் ஆமோ அறை

பொருள் விளக்கம்

வாழைப்பழம் பழுக்கவில்லையென்றாலும் வாழைக்காய் சமையலில் உணவாகப் பயன்படும். ஆனால் எட்டிப் பழம் பழுத்தாலும் அதில் உள்ள கசப்பு போகாது, ஒருவருக்கும் பயன்படாது. அதுபோல் ஒருவருக்கொருவர் கோபப்பட்டு வருத்தமாக இருந்தாலும், நன்கு கற்ற மூதறிஞ்சர் ஒருவருக்கு உதவி தேவையெனின் மற்றொருவர் உடனே உதவி செய்வார். ஆனால் உள்ளத்தில் கள்ளத்தனம் உடைய கயவர்கள்
நன்கு இனிப்பாக பழகி நம்முடன் உறவாடினாலும் ஒருவருக்கு உதவி தேவையெனின் மற்றொருவர் உதவி செய்யமாட்டார்.

29 இறைவனை அணுகியவருக்கு ஒருநாளும் துன்பமில்லை
உடற்கு வருமிடர் நெஞ்சோங்கு பரத்துற்றோர்
அடுக்கும் ஒருகோடியாக – நடுக்கமுறார்
பண்ணின் புகலும் பணி மொழியாய் அஞ்சுமோ
மண்ணில் புலியைமதி மான்.

பொருள் விளக்கம்

அழகாக பாடலில் ஓசை போல் அடுத்தவர் மனம் குளிரும்படி இனிதாக பேசும் பெண்ணே, சிவனின் தலையில் இருக்கும் மூன்றாம் பிறைச்சந்திரனுக்கு அருகில் இருக்கும் மான், பூமியில் உலவும் புலியைப் பார்த்து அச்சப்படாது. அதுபோல் இறைவனை முழுதும் நம்பி அவரை இதயத்தில் இருத்தியவர் உடலில் வரும் துன்பத்தை கண்டு அஞ்சமாட்டார்.

தொடரும்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum