ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தெப்பத் திருவிழா - தெப்பம்

View previous topic View next topic Go down

தெப்பத் திருவிழா - தெப்பம்

Post by பிரசன்னா on Sun Feb 26, 2012 2:16 pmவேடிக்கையும் வினோதமுமாகப் பொழுதைக் கழிக்க யாருக்குத்தான் விருப்பமில்லை? தன் மக்களின் இயல்பை அறிந்த இறைவன், தானும் அத்தகைய விளையாட்டுகளில் ஈடுபடுபவனாகக் காட்டிக் கொள்கிறான்.

நாம் ஓடமும் பரிசிலும் ஏறி, ஆற்றிலும் ஏரியிலும் போய் மகிழ்கிறோம். கடவுளும் இத்தகைய ஆடல்களைச் செய்கிறான். அல்லது, மனிதன் தன்னுடைய கேளிக்கைகளில் இறைவனையும் பங்குபெறச் செய்து மகிழ்ச்சியடைகிறான். அதற்கென பல விழாக்கள்!

அவற்றும் ஒன்று, தெப்பத்திருவிழா.

பெரிய ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு முறை தெப்பத் திருவிழா நடைபெறும். இதற்கெனவே பெரிய தெப்பக்குளம் அமைக்கப்பட்டிருக்கும். மதுரையில் உள்ள வண்டியூர் தெப்பக்குளமும், திருவாரூர் கமலாலயமும், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி தெப்பக்குளமும் மிகப்பெரியவை; பிரமாண்டமானவை.
இத்தகைய தெப்பக்குளங்களின் நடுவில் நீராழி மண்டபம் உண்டு.

பிறவி என்னும் கடலில் விழுந்தவர்களைத் தன் கருணை என்னும் தெப்பத்தில் ஏற்றி முத்தி என்னும் கரையில் சேர்ப்பவன் இறைவன் என்பதைத் தெப்பத் திருவிழா காட்டுவதாக ஐதிகம். “யாது நிலையற்றலையும் ஏழு பிறவிக்கடலை ஏறவிடும் நற்கருணை ஓடக்காரனும்’ என்று அருணகிரிநாதர் பாடுகிறார்.

தெப்பத்தை மிதக்க விடுவதற்கு முன்னே அதை அமைப்பதே ஒரு கலை. மிதப்பதற்கு வேண்டிய அடிப்பகுதியைத் தயார் செய்த பிறகு, மேலே மண்டபம் போல அமைத்து அதை அலங்காரம் செய்கிறார்கள்.
கீழே பீப்பாய்களை வரிசையாக இணைத்து அவற்றின் மேலே மூங்கில்களையும் மரங்களையும் கட்டிப் பரப்பினால் தெப்பத்தின் அடிப்பரப்புத் தயாராகி விடுகிறது. அதற்கு மேல் கம்பங்களைக் கட்டி அணி செய்கிறார்கள்.

சித்திரத் தட்டிகளைச் சுற்றிலும் கட்டி, அலங்காரச் சிறிய மண்டபம் ஒன்று மிதப்பது போன்ற தோற்றம் அளிக்கும்படி செய்து விடுகிறார்கள். மின்விளக்கு வரிசைகளையும் இணைக்கிறார்கள்.
கனம் குறைவான ஒட்டுப்பலகைகள் கொண்டு தெப்பத்தின் தூண்கள், மேல்தளம் போன்றவை அமைக்கப்படுகின்றன. காரணம், பாரம் குறைவான பொருட்களால் தெப்பம் கட்டப்பட்டால்தான். அது நீரில் மிதக்கவும், எளிதாக செலுத்தப்படவும் முடியும்.

இப்போது தெப்பம் காண்போர் பிரமிக்கும்படி அற்புத வடிவெடுத்து விட்டது.
இதன்மேல், உயரமாக அமைத்த பீடத்தில் உற்சவமூர்த்திகளை எழுந்தருளச் செய்கிறார்கள்.
இறைவன் தெப்பத்தில் எழுந்தருளியதும், தெப்பத்தைக் கோல் கொண்டு நெம்புகோல் போல் ஊன்றித்தள்ளி, நீரில் செலுத்துகிறார்கள்.

இறைவன் பவனி வரும்போது தெப்பத்தில் வாத்தியக்காரர்களும் அமர்ந்து நாதஸ்வர மங்கள வாத்தியம் இசைத்தபடியே வருவார்கள். தெப்பத்தில் அமர்ந்தபடியே ஓதுவார்கள் தேவார பாராயணம் செய்வதுண்டு.
இரவிலே இந்தத் தெப்பம் நீரில் மெதுவே நகரும் காட்சி பக்தர்களுக்குப் பரவசமூட்டுகிறது. அலங்கார விளக்குகள் தக தகவென ஒளிர்கின்றன. இதனால் தெப்பத்தின் பிரதி பிம்பம் நீரில் விழுந்து அழகு மிளிர்கிறது.
குளத்தின் ஒவ்வொரு திசையில் உள்ள ஒவ்வொரு படித்துறை அருகிலும் தெப்பம் வந்து நிற்கும். அப்போது பக்தர்கள் தெப்பத்திற்குள் சென்று இறைவனை வழிபட அனுமதிக்கப்படுவர். பெரும்பாலும் சிறுவர்களை அனுமதிப்பதில்லை - அவர்கள் கவனக்குறைவாக தண்ணீரில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக!
ஒவ்வொரு பெரிய ஆலயத்திற்கும் தலவிருட்சம் இருப்பதுபோல், தீர்த்தமும் உண்டு. அந்த தீர்த்தத்தின் இறைத் தன்மையைப் போற்றவே தெப்பவிழா நடத்தப்படுகிறது.

தெப்பத் திருவிழாக் காட்சி குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்! குழந்தைகளைக் கண்டதும் மிட்டாய், பலூன் வியாபாரிகளுக்கும் கொண்டாட்டம். தெப்பம் பக்தர்களுக்குப் பரவசம்; சிறுவர்களுக்கு வினோதம்; ஊரார்க்கு உற்சாகம்!

- அனிதா கார்த்திக்

குமுதம் பக்தி
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum