உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by மாணிக்கம் நடேசன் Today at 10:18 am

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» நீ . . .நீயாக இரு !
by ayyasamy ram Today at 6:45 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by ayyasamy ram Today at 6:08 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:41 am

» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger
by velang Yesterday at 8:08 am

» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்? தொல்லியல் துறையினர் ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:41 am

» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
by ayyasamy ram Yesterday at 6:35 am

» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
by ayyasamy ram Yesterday at 6:27 am

» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:50 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:31 pm

Admins Online

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by ரா.ரா3275 on Tue Feb 14, 2012 11:36 am

வணக்கம் உறவுகளே...

இங்கே கொஞ்சம் விவகாரமான விஷயத்தைப் பேசலாம் என்றுதான் இந்த மடலை
உங்கள் முன் வி(வ)ரிக்கிறேன்...
இந்த விவகாரம் இன்று நேற்றல்ல பல்லாண்டுகளாகத் துருத்திக்கொண்டே தொடர்கிறது.

கவிதை எது?-கவிஞன் யார்?
இந்தக் கேள்விகள் இன்றும் எழுப்பப்படுகின்றன.

தமிழ்த் துறையில் பயின்று தமிழ் இலக்கியத்தில் பட்டங்கள் பெற்றவர்களே இந்தக் கேள்விகளை எழுப்புவதில்
என்றைக்கும் முன்னிலையில் இருப்பவர்கள்.
அதிலும் குறிப்பாக மனனம் செய்தவற்றைத் தவிர மனசில் வேறு எதையும் தேக்காதவர்கள்-தேக்க இயலாதவர்கள்
இந்தக் கட்சியின் தீவிர உறுப்பினர்கள் என்பது வெயிலின் தகிப்பைப் போன்ற வெள்ளை உண்மை.

இவர்களில்-ஏன் நம்மிலும் பெரும்பாலானோருக்கு எவனையும் இறந்தப் பிறகே சிறந்தவன் என்று தூக்கி வைத்துக் கொண்டாடித் துதி பாடுவதே தூய-துயர இயல்பாகிப் போய்விட்டது.
இந்த உண்மை சற்று வலியானதுதான்.ஆனால் வலிமையானது.

உயிரோடு இருக்கும் ஒருவன் கவிஞனாகப் புகழ்ப் பெற்றால்-புகழப் பெற்றால் இந்தத் தமிழ்த் தெய்வங்களுக்கு
எழுந்து வரும் கோபம் இமயத்தையும் குள்ளமாக்கும்.
அவனுக்கு எதுகை-மோனை மட்டுமே வருகிறது.சந்தத்தில் சத்தம் போடுகிறான்.சங்கப் புலவர் குப்பைக் கோழியாரை விட இவன் உயரம் குறைந்தவன் என்றெல்லாம் இழித்தும்-பழித்தும் அவன் மீதுக் குப்பையைக் கொட்டிக் குதூகலிப்பர்.குதர்க்கத்திலேயே வாழ்வைக் கழிப்பர்.

இது போன்ற வெற்றுக் கூச்சலும்-வேதாள வேஷமும் தமிழிலக்கியத்தில் பட்டம் பெற்றுக் கவிஞானவனுக்கு எதிராகவே போடப்படுகிறது என்றால் வெகு சாதாரணனுக்கு நடப்பதில் வியப்பொன்றுமில்லை.

அது சரி...இப்படியெல்லாம் வக்காலத்து வாங்குகிறாயே...தமிழை முறைப்படிப் படித்துவிட்டுத்தான் கவிதை எழுதுகின்றார்களா?.இப்படியும் சிலர் கேட்பதும் காதில் விழுகிறது.

உங்கள் கேள்வியில் உயிரும் உண்மையும் உள்ளது.ஒப்புக்கொள்கிறேன்.

உரைநடையோ-கவிநடையோ எதுவாயினும் உயரிலக்கணம் படிக்காவிடினும் ஓரளவிற்கு அடிப்படை இலக்கணமேனும் அறிந்து-தெளிந்து அதன்பிறகே எழுதத் தொடங்க வேண்டும் என்கிறக் கட்சிதான் நானும்.
அப்பொழுதுதான் ஓரளவேணும் எழுத்து-பொருட்பிழையைத் தவிர்க்க இயலும்.

எல்லாவற்றிற்கும் மேலாக,எழுத நினைக்கும் முன்,அது உரைநடை-கவிதை எதுவாயினும் சிலகாலத் தொடர் வாசிப்பிற்குப் பின் தொடங்கினால் சற்றேத் தூக்கலாக இருக்கும் நம் நடையும் எழுத்தும்.ஏன்?. கருத்தும் கூட.

வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்,'நம்மவர்கள் எழுத்தாளர்களாக இருப்பதை விட எடுத்தாளர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை' என்று அடிக்கடி சாட்டையால் அடிப்பார்.

ஆரம்பத்தில் எடுத்தாளர்களாகத்தான் எழுதத் தொடங்குவர்.பின்னர் தொடர் வாசிப்பிற்குப் பின் தனக்கென்று ஒரு பாணியை எற்படுத்திக்கொண்டு எழுத்தாளர்கள் ஆகிவிடுவர்.இதை நாம் நிறைய ஜாம்பவான்களிடம் காணலாம்.
ஆரம்பத்தில் நம் ஆதர்ஷக் கர்த்தாக்களே நம் எழுத்தின் தொடக்கக் காலத்தில் நம்மை ஆக்கிரமிப்பர்.அதன்பின் மெல்ல தவழ்ந்து-எழுந்து-விழுந்து-நடந்து-வளர்ந்து-ஓடி-தேடி-உயர்ந்து நிற்கும் மனித வளர்ச்சிப் பரிமாணம் எழுத்துத் தொழிலும் ஏற்படும்.அது கவிதை-உரைநடை எந்த வடிவாயினும்.

எல்லாம் சரி...எது கவிதை? என்று கேட்கிறீர்கள்..புரிகிறது...

"வார்த்தைகள் நடமாடினால் அது உரைநடை.நடனமாடினால் அது கவிதை."-இது நம்மைப் போன்றோர் தமிழைத் தைரியமாகத் தூக்கிப் பிடிக்க ஒரு தும்பிக்கையைப் போல நம்பிக்கைத் தந்த பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா சொன்னது.

இன்னும் எளிமையாக ஒருவர் சொல்லியிருக்கிறார்.
இதோ:
புதுக்கவிதை என்றும் புகழ்மரபு என்றும்
குதிக்கிறதே இங்குரெண்டு கூட்டம்-எதுகவிதை?
வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா
சூழும் பகைவர்க்குச் சொல்.

இத்துணை எளிமையாக மண்டையில் அடிப்பது போலச் சொன்னவர் கள்ளிக்காட்டுக் கம்பன் வைரமுத்துதான்.

உரைநடையோ -கவிதையோ எதுவாகினும் உயிரும்-உணர்வும்-உணச்சியும் மிதந்து மிதந்து மேலே வந்து மெல்ல
நம் கைப் பிடித்து மேலேறி-தோளேறி மண்டையை ஊடுருவி மூளை-மனசு இரண்டிற்குள்ளும் பரவி-விரவி வேர்ப் பிடித்து ஆழமாய் ஆக்கிரமித்தால் அதுவே சிறந்த எழுத்து-சிறந்த கவிதை.

இதுவே என் சிரம் தாழ்ந்த(நிமிர்ந்தும் என்று கொள்ளலாம்) கருத்து.

நன்றி உறவுகளே.


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by ரா.ரா3275 on Tue Feb 14, 2012 12:47 pm

இது யாருக்கும் எதிரானதன்று...எடுத்து வைக்கத் தோன்றிய வாதம் இது...அவ்வளவே...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by ஜாஹீதாபானு on Tue Feb 14, 2012 1:12 pm

யாருமே கவனிக்கல போல சோகம்

எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது கவிதை படிக்க பிடிக்கும் அவ்வளவே :வணக்கம்:
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30933
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7360

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by ரா.ரா3275 on Tue Feb 14, 2012 1:15 pm

[You must be registered and logged in to see this link.] wrote:யாருமே கவனிக்கல போல சோகம்

இதுபோன்ற கட்டுரைகளுக்குக் கவனிப்பு எப்போதுமே குறைவுதான்...
இருந்தும் தெரிந்தே பதிவேற்றினேன்...
அதுதான் மிகப்பெரிய சோகம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by ரா.ரா3275 on Tue Feb 14, 2012 1:16 pm

[You must be registered and logged in to see this link.] wrote:

எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது கவிதை படிக்க பிடிக்கும் அவ்வளவே :வணக்கம்:

எனக்கு மட்டும் என்னவாம்?...
நானும் உங்களைப்போலத்தான்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by ஜாஹீதாபானு on Tue Feb 14, 2012 1:18 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:

எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது கவிதை படிக்க பிடிக்கும் அவ்வளவே :வணக்கம்:

எனக்கு மட்டும் என்னவாம்?...
நானும் உங்களைப்போலத்தான்...
இதெல்லாம் ஓவரு .................... என்ன கொடுமை சார் இது
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30933
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7360

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by ரா.ரா3275 on Tue Feb 14, 2012 1:22 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:

எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது கவிதை படிக்க பிடிக்கும் அவ்வளவே :வணக்கம்:

எனக்கு மட்டும் என்னவாம்?...
நானும் உங்களைப்போலத்தான்...
இதெல்லாம் ஓவரு .................... என்ன கொடுமை சார் இது

ஓவரு இல்ல...கொஞ்சம் ஃபேவரு... ரிலாக்ஸ்


Last edited by ரா.ரா3275 on Tue Feb 14, 2012 1:23 pm; edited 1 time in total
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by பாலாஜி on Tue Feb 14, 2012 1:22 pm


இவர்களில்-ஏன் நம்மிலும் பெரும்பாலானோருக்கு எவனையும் இறந்தப் பிறகே சிறந்தவன் என்று தூக்கி வைத்துக் கொண்டாடித் துதி பாடுவதே தூய-துயர இயல்பாகிப் போய்விட்டது.
இந்த உண்மை சற்று வலியானதுதான்.ஆனால் வலிமையானது.


இது முற்றிலும் உண்மை ... எனக்கும் கவிதை படிக்க மட்டுமே தெரியும் . ஆகவே ....
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by ரா.ரா3275 on Tue Feb 14, 2012 1:24 pm

வை.பாலாஜி wrote:
இவர்களில்-ஏன் நம்மிலும் பெரும்பாலானோருக்கு எவனையும் இறந்தப் பிறகே சிறந்தவன் என்று தூக்கி வைத்துக் கொண்டாடித் துதி பாடுவதே தூய-துயர இயல்பாகிப் போய்விட்டது.
இந்த உண்மை சற்று வலியானதுதான்.ஆனால் வலிமையானது.


இது முற்றிலும் உண்மை ... எனக்கும் கவிதை படிக்க மட்டுமே தெரியும் . ஆகவே ....

நன்றி பாலாஜி...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Feb 21, 2012 8:35 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:யாருமே கவனிக்கல போல சோகம்

இதுபோன்ற கட்டுரைகளுக்குக் கவனிப்பு எப்போதுமே குறைவுதான்...
இருந்தும் தெரிந்தே பதிவேற்றினேன்...
அதுதான் மிகப்பெரிய சோகம்
அப்படி நினைக்க வேண்டாம் தம்பி ரா.ரா. எனக்குத் தெரிந்த, முடிந்த நல்லதோர் விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று ஆசைதான். ஆயினும் அதிக வேலைப்பளு உள்ளதால், பதிலை ஆரம்பித்தால் முடிக்க முடியாமல் போய்விடுமே என்ற அச்சம் காரணமாக தொடங்கப் பயப்படுகிறேன். மார்ச் மாதம் முடிவதற்க்குள் முடிக்க வேண்டிய வேலை அதிகமாக உள்ளது. மேலும், மார்ச்சில் பத்து நாட்கள் நாகபூரி வேறு செல்ல வேண்டும்.
இன்னும் எளிமையாக ஒருவர் சொல்லியிருக்கிறார்.
இதோ:

புதுக்கவிதை என்றும் புகழ்மரபு என்றும்
குதிக்கிறதே இங்குரெண்டு கூட்டம்-எதுகவிதை?
வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா
சூழும் பகைவர்க்குச் சொல்.

இத்துணை எளிமையாக மண்டையில் அடிப்பது போலச் சொன்னவர் கள்ளிக்காட்டுக் கம்பன் வைரமுத்துதான்.

இப்படி ஒரு மேற்க்கோளை கொடுத்துள்ளீர்கள். எளிமையாக மண்டையில் அடிப்பதுபோல் வைரமுத்து சொல்லியிருக்கிறார் என்றீர்கள். எதுகை, மோனை மாறாமல் எழுதியுள்ளார். மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர் விரவி வருகிறது இவரின் நாலுவரிக் கவிதையில். எட்டு வெண்சீர் வெண்டளையும், ஆறு இயர்ச்சீர் வெண்டளையும் வருகிறது. கடைசிச் சீர் ஓரசைச் சீராக 'நாள்' எனும் வாய்பாட்டில் முடிகிறது. ஆக, இது தொல்காப்பியர் கொடுத்த யாப்பிலக்கணம் முற்றிலும் மாறாமல் எழுதப்பட்ட ''நேரிசை வெண்பா''வாகும். இவை எல்லாம் செய்தவர் 'வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா' என்று நீங்கள் சொன்னதப்போல் மண்டையில் அடிக்கிறார். 'குதிக்கிறதே
இங்குரெண்டு கூட்டம்'' என்கிறார். அந்த இரண்டு கூட்டத்தில் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவராம் இவர்? வைரமுத்து மிகப் பெரிய மனிதர்...அவர் முன்பு நானெல்லாம் ஒரு சிறு தூசுத்தான். ஆயினும் நான் சொல்வேன்...இவர் இரண்டு பக்கமும் சிண்டு முடிக்கின்ற வேலையை அல்லவா செய்கின்றார்?

வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா---என்றால், கம்ப ராமாயணம், சிலம்பு, அகம், புறம், பக்தி இலக்கியங்கள் எல்லாம் என்ன வாழும் கவிதைகள் இல்லையா? அவ்வளவு ஏன், புலவர் குழந்தை எழுதிய கீமாயணம், குழந்தைக்கவிஞர் அழா. வள்ளியப்பன் எழுதிய குழந்தைப் பாடல்கள் கூட வடிவத்தில் இல்லாமலா போய்விட்டது. அவை வாழாமல் அழிந்து விட்டதா.

எது கவிதை என்பதற்கு எண்ணற்ற விளக்கங்கள் உள்ளன. அதை ஆரம்பித்தால் வெகு நாட்கள் தொடரும். வெறும், கூகுள் செய்து பாருங்கள், புரியும். வேலை பளுவின் காரணமாக இப்போது இத்துடன் முடித்துக்கொள்கிறேன். பின்பு தொடர்வேன் (மார்ச் மாதம் முடிந்த பின்பு)
ஒன்று மட்டும் உண்மை ரா.ரா.
"கண்டவன் எல்லாம் கவிதை எழுத முடியாது.
கண்டபடி எழுதினால் கவிதை ஆகி விடாது."
அறிஞர் அண்ணா சொன்ன அந்த விளக்கம் மிகவும் சரியானதாகும். கதை எழுதுபவன் கதை எழுதட்டும். யார் வேண்டாம் என்று சொல்வார்கள். கதை எழுதுபவன் நான்காக, ஐந்தாக மடித்து, ஒடித்து எழுதிவிட்டு இதோ என் கவிதை என்று சொல்வது திறந்த வீட்டில் நாய் நுளைவதற்க்குச் சமம். தமிழ் கவிதைக்கு, சாதாரண வேலி மட்டும் இல்லை. யாப்பு என்கிற வலுவான கோட்டை கொத்தளத்தோடு உள்ளது.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by ரா.ரா3275 on Tue Feb 21, 2012 11:05 am

/// கதை எழுதுபவன் கதை எழுதட்டும். யார் வேண்டாம் என்று சொல்வார்கள். கதை எழுதுபவன் நான்காக, ஐந்தாக மடித்து, ஒடித்து எழுதிவிட்டு இதோ என் கவிதை என்று சொல்வது திறந்த வீட்டில் நாய் நுளைவதற்க்குச் சமம். தமிழ் கவிதைக்கு, சாதாரண வேலி மட்டும் இல்லை. யாப்பு என்கிற வலுவான கோட்டை கொத்தளத்தோடு உள்ளது.////

உங்கள் கூற்று உண்மைதான் அய்யா...இன்றைக்கு நிறைய பேர் -நான் உட்பட-உடைத்துப் போட்ட வார்த்தைகளையே கவிதை என்று பிதற்றுகிறார்கள்...
ஆனால் இன்னொன்றையும் ஒப்புக்கொள்ள வேண்டும் மரபு என்ற பெயரில் வெறும் தளையும் சீறும் மட்டுமே இருந்துவிட்டால் அது கவிதை என்று கதறுகின்றோரும் இருக்கின்றனர்...

உங்களைப்போல் வெகுசிலரே நிஜ மொழியடர்த்தியோடு எழுதுகின்றனர் என்பதும் அப்பட்டமான உண்மை...

மற்றபடி உங்கள் நேரத்தை இதைப் படித்துப் பின்னூட்டமிடவும் செலவிட்டதற்கு நன்றிகள் அய்யா...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by ரா.ரா3275 on Tue Feb 21, 2012 11:10 am

///வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா---என்றால், கம்ப ராமாயணம், சிலம்பு, அகம், புறம், பக்தி இலக்கியங்கள் எல்லாம் என்ன வாழும் கவிதைகள் இல்லையா? அவ்வளவு ஏன், புலவர் குழந்தை எழுதிய கீமாயணம், குழந்தைக்கவிஞர் அழா. வள்ளியப்பன் எழுதிய குழந்தைப் பாடல்கள் கூட வடிவத்தில் இல்லாமலா போய்விட்டது. அவை வாழாமல் அழிந்து விட்டதா.///

அய்யா...அவர் சொன்னதை நாம் ஏன் இப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்...எந்தக் கவிதையாக இருந்தாலும் உணர்வும் அடர்வும் இருந்தால் அது வாழும் என்று அர்த்தம் கொள்ளலாமே?...

அவர் பிரபலம்-விளம்பர வெளிச்சம் பாய்ச்சப் பெற்றவர் என்பதால் அவருக்கு நீங்கள் தூசு என்றெல்லாம் கொள்ள முடியாது...
உங்கள் அளவில் நீங்கள் ஓர் உயரத்தில் இருப்பவர் என்பதில் அய்யம் இல்லை அய்யா...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by யினியவன் on Tue Feb 21, 2012 11:21 am

ராரா நான் முறையாக தமிழ் படிக்காதவன் -
அதில் எனக்கு வருத்தமும் வேதனையும் உள்ளது.
ஆனால் எழுதப் படிக்க பேச அறிவேன்.

இலக்கணம், இலக்கியம் இது பற்றி நானறியேன்.
நல்ல அர்த்தங்களும், வார்த்தை ஜாலங்களும்,
எளிதாக புரியும் வரிகளை மட்டுமே எனக்கு புரியும், பிடிக்கும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by dhilipdsp on Tue Feb 21, 2012 11:29 am

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
மதிப்பீடுகள் : 274

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by ரா.ரா3275 on Tue Feb 21, 2012 11:35 am

கொலவெறி wrote:ராரா நான் முறையாக தமிழ் படிக்காதவன் -
அதில் எனக்கு வருத்தமும் வேதனையும் உள்ளது.
ஆனால் எழுதப் படிக்க பேச அறிவேன்.

இலக்கணம், இலக்கியம் இது பற்றி நானறியேன்.
நல்ல அர்த்தங்களும், வார்த்தை ஜாலங்களும்,
எளிதாக புரியும் வரிகளை மட்டுமே எனக்கு புரியும், பிடிக்கும்.

நானும் உங்கள் கட்சிதான்...
நுணுக்கமான மொழியறிவு(ம்) எனக்கு(ம்) இல்லைதான்...
ஆனால் ரசிக்கத் தெரிந்தால் போதுமே?...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை Empty Re: எது கவிதை?-சர்ச்சை சிகிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை