புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Poll_c10குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Poll_m10குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Poll_c10 
21 Posts - 66%
heezulia
குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Poll_c10குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Poll_m10குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Poll_c10குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Poll_m10குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Poll_c10 
63 Posts - 64%
heezulia
குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Poll_c10குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Poll_m10குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Poll_c10குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Poll_m10குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Poll_c10குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Poll_m10குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Feb 09, 2012 5:53 pm



குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.










குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Resize_20110104104620கடலூர்
மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அரசு மாணவியர் விடுதி ஒன்றில் ஒன்பதாம்
வகுப்பு படிக்கும் மாணவிக்கு குழந்தை பிறந்தது. தங்கள் கண்முன்னே
தோழிக்கு குழந்தை பிறந்ததைப் பார்த்த விடுதி மாணவிகள் சிலர் மனநிலை
பாதிக்கப்பட்டுள்ளனர்...’

இந்தச் செய்தியை கேள்விப்பட்டதும்
‘சுளீர்’ என்று இதயத்தைத் தைத்தது போன்ற உணர்வு. என்ன கொடுமை இது...? இதனை
விசாரிக்க களத்தில் இறங்கியபோது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...

தலித்
மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட மேல்நிலைப்பள்ளி ஒன்றின்
வளாகத்திற்குள்தான் இந்த அரசு மாணவியர் விடுதி இருக்கிறது. ஆறாம்
வகுப்பிலிருந்து பிளஸ் டூ வரை படிக்கும் மாணவிகள் சுமார் 740 பேர் இந்த
விடுதியில் தங்கிப் படிக்கின்றனர்.

விடுதியில் மாணவிகளுக்கான
பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்ற குற்றச்சாட்டுகள்
தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த சூழலில்தான், இப்படியொரு ‘கொடுமை’
அரங்கேறியிருக்கிறது.

குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Resize_20110104104653“மயிலாடுதுறை
அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரியும், ராதிகாவும் (பெயர்
மாற்றப்பட்டுள்ளது) விடுதியில் தங்கி இதே பள்ளியில் படித்து வந்தி
ருக்கின்றனர். அக்காள், தங்கையான இந்த இருவரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்
தங்கை மகேஸ்வரிக்குத்தான் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 13
வயதுகூட நிரம்பாத அந்தக் குழந்தைக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்திருக்கிறது.

கடந்த
24-ம் தேதி விடுதியில் உள்ள ஒரு அறையிலிருந்து அதிகாலை 3 மணியளவில் பயங்கர
அலறல் சத்தம் கேட்டபோது, ஒட்டுமொத்த விடுதி மாணவிகளும் என்னவோ, ஏதோ என்று
பதறியபடி விழித்துக்கொண்டனர். அத்துடன் அலறல் சத்தம் வந்த அறையை நோக்கி
அனைவரும் சென்றிருக்கின்றனர்.

அங்கே அந்த அறை மாணவிகளும்
கூடியிருக்க, மகேஸ்வரி மட்டும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு வலியால்
கதறியிருக்கிறாள். விவரம் புரியாத சக மாணவிகள் சாதாரண வயிற்றுவலியால்தான்
துடிக்கிறாள் என்று நினைத்தனர். விடுதியில் இருந்த பெண் காவலாளியும்,
‘வயித்துவலிக்குப்போயி இந்த நேரத்துல ஏன் ஊரைக் கூட்டுற’ என்று சத்தம்
போட்டிருக்கிறார்.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மகேஸ்வரிக்கு
ஏகப்பட்ட ரத்தப்போக்கு ஏற்பட, குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது.
மகேஸ்வரியின் அலறல் சத்தத்தோடு புதிதாய்ப் பிறந்த சிசுவின் அழுகை சத்தமும்
சேர்ந்துகொள்ள, இந்தக் காட்சியைக் கண்ட ஒட்டுமொத்த மாணவிகளும்
அதிர்ச்சியின் உச்சத்திற்குச் சென்றிருக்கின்றனர்.

தொப்புள்கொடி
அறுபடாத நிலையில் மகேஸ்வரி துடிக்க... ஒரு ப்ளஸ் டூ மாணவி இந்தக்
காட்சியைக் காண சகிக்காமல் ஓடிப்போய் ஒரு ‘பிளேடை’ எடுத் துவந்து
தொப்புள்கொடியை அறுத்துவிட்டதுதான் உச்சகட்ட கொடூரம்.

இதனால்
ரத்தப்போக்கு இன்னும் அதிகமாகி, மகேஸ்வரியின் உயிருக்கே ஆபத்து என்ற சூழல்
ஏற்பட்டபோதுதான் பெண் விடுதிக்காப்பாளர் வீட்டிற்குத் தகவல்
போயிருக்கிறது. அவரும் ஓடிவந்து ஆட்டோ ஒன்றில் தாயையும், சேயையும்
தூக்கிச்சென்று தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்திருக்கிறார்.

இந்தத்
தகவல் கேட்டு மகேஸ்வரியின் தாயும், அவரது உறவினர்களும், வாயிலும்,
வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறியபடி மருத்துவமனைக்கு ஓடிவந்தனர்.
அவர்களிடம் மகேஸ்வரியையும், குழந்தையையும் ஒப்படைத்தார் விடுதிக்
காப்பாளர். ‘இது பற்றி யாரிடமாவது சொன்னால்... விடுதியைவிட்டு
வெளியேற்றிவி டுவோம்’ என மற்ற மாணவிகளுக்கும் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

ஏதும்
அறியாத வயதில்... அந்த பயங்கரக் காட்சியை கண்முன்னே பார்த்த மாணவிகள்
இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. பலருக்கு காய்ச்சல் வந்து
வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். சில மாணவிகள் நடுங்கிக்கொண்டே
இருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் குறித்து விடுதி மற்றும் பள்ளி வட்டாரத்தில் விசாரித்தபோது அதிர வைக்கும் பல்வேறு தகவல்களும் கிடைத்தன.

விடுதியில்
மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருந்துவருகிறது. விடுதியைவிட்டு வெளியே
சென்று திரும்பும் மாணவிகள் குறித்து தீவிர கண் காணிப்புகளும் இல்லை. 13
வயதுச் சிறுமி கர்ப்பிணியாக விடுதியில் வலம் வந்து குழந்தைப்பேறு நிகழும்
வரை எப்படி யாருக்கும் தெரியாமல் போனது? வயிறுகூட
காட்டிக்கொடுக்கவில்லையா? என்ற கேள்விகளுக்கும் பதில் இல்லை.

மகேஸ்வரியின்
அறையில் தங்கியிருக்கும் மாணவிகள் அவளது வயிறு பெரிதாக இருக்கிறது என்று
விடுதிக்காப்பாளரிடம் சொல்ல, ‘அடச்சீ போங்கடி... அது தொப்பையாக இருக்கும்’
என்று அவர் அலட்சியப்படுத்தியிருக்கிறார்.

அந்தப் பெண் ஐந்து
மாதத்திற்கு முன்புதான் விடுதியில் சேர்ந்ததாகவும், விடுதியில் சேர்ந்த
பிறகு கர்ப்பமாகவில்லை என்று போலியாக ‘ரெக்கார்டுகள்’ தயாரி
த்துவிட்டார்களாம்.

கடைசியில், பள்ளி மற்றும் விடுதி தரப்பின் விளக்கம் அறிய நேரில் சென்றோம்.

பள்ளித்
தலைமையாசிரியரோ, “நீங்க சொல்ற மாதிரி எந்தச் சம்பவமும் இங்கே நடக்கலை.
சாயந்திரம் ஆறுமணிக்குமேல நானே ஹாஸ்டல் பக்கம் போகமாட்டேன். நீங்க இது
சம்பந்தமாக விடுதிக் காப்பாளர்கிட்ட கேட்டுக்கங்க.’’ என்றார்.

பெண் விடுதிக்காப்பாளரைச் சந்தித்தோம்.






“இங்கே
ஹாஸ்டலில் ‘டெலிவரி’ நடந்ததுன்னு சொல்றது பொய். ஆண் குழந்தைன்னுகூட
கேள்விப்பட்டேன். இங்கே 740 மாணவிகள் தங்கியிருக்காங்க. இவங்க
ஒவ்வொருத்தரின் வயித்தைப் பார்த்துக்கிட்டு இருப்பதுதான் என் வேலையா?’’
என்றார் சாதாரணமாக.

விடுதியின் துறையைச் சார்ந்த மாவட்ட
உயரதிகாரியிடம் இந்தச் சம்பவம் குறித்து கேட்டபோது, “கடந்த ஆகஸ்ட்
மாதம்தான் அந்தப் பொண்ணு அட்மிஷனே ஆகியிருக்கு. ரொம்ப சின்ன பொண்ணு.
அதிகாலை ஹாஸ்டலிலேயே அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்ததாகச் சொன்னாங்க. இனி
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் ஜாக்கிரதையாக இருங்கன்னு அனைவரையும்
எச்சரித்திருக்கிறேன்’’ என்றார்
http://thedipaar.com/news/news.php?id=22784



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 09, 2012 6:00 pm

ஐயையோ படிக்கும்போதே மனசு பதறுது.பெத்தவங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்.இந்த பெண்ணை சீரழித்தவனை கண்டுபிடித்து கடுமையான தண்டனை தரணும்



குழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Uகுழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Dகுழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Aகுழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Yகுழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Aகுழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Sகுழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Uகுழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Dகுழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  Hகுழந்தை பெற்ற 13 வயது மாணவியின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்த சக மாணவி.  A
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Thu Feb 09, 2012 6:07 pm

என்ன சொல்ல.....
கலி காலம்....
அந்த சிறுமியின் அறியாமையை சொல்வதா...
அதற்க்கு காரணமானவனின் வக்கிர எண்ணத்தை சொல்வதா....
இல்லை பெற்றோரின் ,நிர்வாகத்தின் பொறுபிண்மையை சொல்வதா......
யாரை சாடுவது ....



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக